Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

tamil news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - சாம்பிராணித் தூபம் (Incense)


நன்றி கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941




தேவ ஆராதனை முயற்சிகள் ஆடம்பரச் சிறப்புடன் நடைபெறுவதற்கு அல்லாமல்  செய்பவர்களும், அம்முயற்சிகளில் பங்கடைகிற  சகலரும் பக்தி பற்றுதலில் அதிகரிக்கும்படியாக சடங்குமுறை ஆசாரங்கள் மிகுந்த பிரயோசனமுள்ளவைகள் என்று திருச்சபை எப்போதும் அங்கிகரித்திருக்கிறது.

யாதாமொரு வேத ஆசாரமுறை அல்லது சடங்கு ஆரம்பத்தில் அஞ்ஞானிகளால் அல்லது யூதரால் அனுசரிக்கப்பட்டது என்கிற ஒரே காரணத்தின்பொருட்டு, அந்த ஆசாரம் அல்லது சடங்குமுறை நாம் அநுசரிக்கத் தக்கதல்லவென்று திருச்சபை விலக்கிவிடுகிறதில்லை. திருச்சபையில் இப்போது வழங்கி வருகிற ஆராதனை ஆசார முயற்சிகளிற் சில மோயிசன் சட்டத்தில் உள்ளவைகள். வேறு சில அஞ்ஞானிகள் அநுசரித்தவைகள். இதனிமித்தம், திருச்சபை விரோதிகள் சிலர் கத்தோலிக்க வேதம் கிறீஸ்தவ அஞ்ஞானம் என்று குறைகூறத் தலைப்பட்டார்கள். இது முழுவதும் தப்பறையானது. ஏனெனில் மனிதன் கடவுளை ஆராதிக்கிற வழிமுறைகளில் அநேக அநுஷ்டானங்கள். கடவுள் மட்டில் மனிதனுக்குள்ள பக்தி பற்றுதலை வெளியரங்கமாய்க் காட்டுபவைகள் என்கிற அளவில், அவைகள் குற்றமற்றவைகள் என்று திருச்சபை  அறிந்து, அவைகளில் சிறந்த சில அநுஷ்டானங்களைத் தனது ஆசாரமுறையில் ஏற்றுக்கொண்டது. அவ்வாறே, தீர்த்தப் பிரயோகம், சுருபங்கள் அணிவது. சாம்பிராணித் தூபம் ஆராதனையில் உபயோகிப்பது. இவை யாவும் ஏற்கனவே யூதர் அல்லது அஞ்ஞானிகள் அனுசரித்தவைகள்தான். இவைகளெல்லாம் பக்திப் பற்றுதலை மூட்டுவதற்குச் சிறந்த சாதனங்கள். இவைகளை உபயோகிப்பதில் அஞ்ஞானம் ஒன்றுமில்லை. ஞானமே முழுவதும் பொருந்தியிருக்கிறது.


சாம்பிராணி, ஆசியாவின் சில பாகங்களில் சாம்பிராணி ஜாதி மரங்களில் உண்டாகும் பிசின். இதைப் பொடித்து நெருப்புக் கங்குகளின் மேல் தூவினால், சுகந்தம் வீசும் வெள்ளை நிறமான புகை கிளம்புகிறது. இந்தப் புகைக்குத் தான் தூபம் என்று பெயர்.

பழைய ஆகமங்களில் இதன் பிரயோகத்தைப்பற்றிய குறிப்புகள் அநேகம் உண்டு. தேவ கூடார ஆலயத்தில், காலை மாலை சாம்பிராணி புகைப்பதற்கென்று ஒரு பீடம் ஏற்பட்டிருந்தது. யாத்திராகமத்தில் அதைக் குறித்துச் சொல்லியிருப்பதாவது: சுகந்த வர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும். எடுத்துப் பொடித்துத் தூளாக்கிக் கூடாரத்துக்கு முன்பாக வைப்பாயாக, இத்தர் சாம்பிராணித் தூபம் மகா பரிசுத்தமானதென்று உணரக்கடவாய். சங்கீதங்களிலும், இசாயாஸ், ஜெரேமியாஸ். மலக்கியாஸ் தீர்க்கத் தரிசனங்களிலும், அர்ச். ஸ்நாபக அருளப்பரின் தந்தையாகிய சக்கரியாஸ் கண்ட காட்சியை எடுத்துரைக்கிற சுவிசேஷ பாகத்திலும் சாம்பிராணித் தூபத்தைப்பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

அஞ்ஞானிகள் தங்கள் ஆராதனையில் அதை உபயோகித்தார்கள் என்பதற்கு ஒளிட், வீர்ஜில் என்னும் புலவர்கள் அத்தாட்சி கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது உரோமானருடைய ஆராதனையைப்பற்றி, அந்த வழக்கம் நமது நாட்டிலிருந்துதன் உரோமானருக்குள் பரவிவது என்று சொல்ல நியாயமுண்டு. சூடம், கற்பூரம், இவைகளின் உபயோகம் இக்காலத்திலும் இந்துமத ஆலயங்களில் வெகு சாதாரணம் என்பது நாமே அறிந்த விஷயம். எஜிப்து தேசத்து ஆலயங்களிலும் கல்லறைகளிலும் உள்ள சித்திரங்கள், இப்போது நாம். உபயோகிக்கிற தூபக் கலசங்களைப் போன்ற பாத்திரங்களில் சாம்பிராணியைப் புகைத்து அரசருக்குந் தேவர்களுக்குத் தூபங்காட்டி ஆராதனை செலுத்துவதைக் காட்டுகின்றன.

கத்தோலிக்கத் திருச்சபையில் தூபப்பிரயோகம்

எக்காலத்தில் ஏற்பாடாயிற்று என்று திட்டமாய்ச் சொல்ல முடியாது. ஐந்தாம் நூற்றாண்டுக்குமுன் அது பிரயோகிக்கப்பட்டதாகச் சொல்வதற்குக் தீட்டமான அத்தாட்சி இல்லை. ஆயினும் பழைய ஆகமங்களில் அதன் பிரயோகம் வெகு சாதாரணமாய் இருந்ததுபற்றி, கத்தோலிக்கத் திருச்சபையிலும் அது பூர்வீக காலந்தொட்டே வழங்கி வந்திருக்கும் என்று சொல்ல நியாய முண்டு, இது உரோமையிலும் ஐரோப்பாவின் மேற்பாகங்களிலும் ஆரம்பிக்கும் முன்னரே, ரஷ்யாவிலும் கீழ்திசை நாடுகளிலும் வழங்கி வந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. துவக்கத்தில், பூசையில் சுவிசேஷம் வாசிக்கையில் மாத்திரம் தூபம் பிரயோகித்தார்கள். நாளடைவில், பூசையின் வேறு  பாகங்களிலும் இதர ஆராதனை முயற்சிகளிலும் உபயோகிக்க லானார்கள்.

இக்காலத்தில், திருச்சபையின் ஆடம்பர ஆராதனை முயற்சிகளில் தூபம் காட்டுவது முக்கியமான அம்சங்களில் ஒன்றாய் விளங்குகிறது. இலத்தின் ரீதிப்பிரகாரம் தனிப்பூசையில் தூபம் உபயோகிப்பதில்லை. ஆடம்பர அல்லது பெரிய பாட்டுப்பூசையில், பிரவேச கீதத்துக்கு (Introit) முன்னும், சுவிசேஷ ஆரம்பத்திலும், பாத்திரம் ஒப்புக்கொடுத்த பின்னும், எழுந்தேற்ற சமயத்திலும் உபயோகிக்கப்படுகிறது. மரித்தவர்களுக்காகச் செய்யும் பாட்டுப்பூசையில், மேலே கூறின சமயங்களுள் முதல் இரண்டு வேளைகளிலும் உபயோகிப்பதில்லை பலி ஒப்புக்கொடுக்கிற குருவானவருக்கும் பணிவிடை செய்கிற உதவிக் குருக்களுக்கும் மரியாதையின் அடையாளமாகத் தூபங்காட்டுவது பாட்டுப்பூசைச் சடங்கில் ஏற்பட்டது. பூசையிலுமின்றி, சுற்றுப்பிரகாரங்கள், ஆசீர்வாதம், மரித்தோர் அடக்கச் சடங்கு முதலியவைகளிலும் தூபம் உபயோகிக்கிறார்கள். ஆட்களுக்கு மாத்திரமல்ல, அருளிக்கங்கள், சுரூபங்கள், படங்கள் முதலியவைகளுக்கும் தூபம் காட்டுவது உண்டு. சில பொருட்களை மந்திரிக்கையிலும் தூபம் உபயோகப்படுகிறது.

தூபங்காட்டுவதின் கருத்து என்ன? இது எளிதில் கண்டுபிடிக்கக்கூடியதே. சாம்பிராணி எரிவது. விசுவாசிகளிடம் இருக்கவேண்டிய பற்றுதலுக்கும், அதிலிருந்து கிளம்பும் சுகந்த வாசனை கிறீஸ்தவ புண்ணியத்தின் நறுமணத்திற்கும், மேலே எழும்பும் புகையானது. சர்வேசுரனுடைய சந்நிதானத்துக்கு ஏறிச் செல்லுகிற நமது ஜெபத்துக்கும் அடையாளமாம். அர்ச். அருளப்பர் காட்சியாகமத்தில் சொல்லியிருப்பது போல்,அர்ச்சியசிஷ்டவர்களின் ஜெபமாகிய தூபப்புகை சம்மனசுவின் கரத்திலிருந்து சர்வேசுரனுக்கு முன்பாக ஏறிச் சென்றது. தூபங்காட்டுவது மரியாதை வணக்கத்தின் அறிகுறி என்பதே பொதுக்கருத்து. ஆகையால் வெளிர் சிறப்புக்கும் பக்தி பற்றுதலை எழுப்புவதற்கும் சாம்பிராணித் தூபம் சிறந்த சாதனம் என்பதற்குச் சந்தேகமில்லை.

ஆண்டவரே என் விண்ணப்பம் தீபத்தூபமாகவும், என் கைகளை ஏந்துதல் அந்திப் பலியாகவும் உமது சமூகத்தில் ஏறக்கடவது (சங். 140:2)

அன்னையின் ஆரோபணத் திருநாள்(Assumption of Our Lady)

 

-சங் J.M. நிக்கொலாஸ் சுவாமி

சின்ன  ஆசியாவிலுள்ள கால்சிதன் என்னும் இடத்தில் கி.பி. 451 ம் ஆண்டில் திருச்சபையின் பேர்பெற்ற பொது சங்கம் ஒன்று நடைபெற்றது. திருச்சபையின் பிதாக்கள் திரளான பேர் அங்கு கூடியிருந்தனர். உரோமைச் சக்கரவர்த்தி மார்ஸியன் கூட்டத்தினுள் நுழைந்தார். பிதாக்களிடம் அவர் ஒரு காரியம் கேட்டார். "கடவுளுடைய மாதாவின் உடலை எப்படியாவது கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள். அத்திரு உடலுக்கென்று ஓர் அழகிய ஆலயம் அமைக்கத் தீர்மானித்திருக்கிறேன். அந்த மாசற்ற உடலே உலகில் மிக விலையேறப்பெற்ற அர்ச்சியசிஷ்ட பண்டம். ஆதலின் ஒரு மகா தேவாலயம் அதற்குத் நேசத்திரமாக எழுப்பப்படல் நியாயமே மரியாயின் மாசற்ற உடலை நீங்கள் கண்டுபிடித்துக் கொடுப்பீர்களானால், நான் அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து முத்திரையீட்டு, விலையேறுப்பெற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் கீழ் அதை வைப்பேன். வணக்கத்துக்குரிய பிதாக்களே, நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: ஒரு காலத்தில் மாமிசமான கடவுளின் வார்த்தையானவருடைய உறைவிடமாயிருந்த அந்த சரீரத்தைக் கண்டுபிடியுங்கள்" என சக்கரவர்த்தி மன்றாடினார். கூட்டத்திலிருந்தவர்கள் திகைத்தார்கள். இராயப்பர். சின்னப்பர் இவர்களுடைய உடல்கள் எங்கிருந்தன என அவர்கள் அறிவார்கள். கொன்ஸ்தாந்தின் சக்கரவர்த்தியின் தாயான ஹெவேனா கண்டுபிடித்த கிறீஸ்துநாதருடைய சிலுவை இருந்த இடம் அவர்களுக்குத் தெரியும். கிறிஸ்தவ மறையின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட வேதசாட்சிகள். கன்னியர் இவர்களுடைய எலும்புகள் அழகிய பெட்டிகளிலும் ஆயிரக்கணக்கான பீடங்களிலும் இருந்தன. ஆனால் எந்தப் பட்டணமாவது; எந்த மேற்றிராசனக் கோவிலாவது, திருச் சேத்திரமாவது தேவதாயின் உடல் தன்னிடம் இருந்ததாகப் பாராட்டவில்லை. 

ஜெருசலேம் நகர் மேற்றிராணியாரான (அர்ச்) யுவெனால் கூட்டத்தின் மத்தியில் எழுத்து நின்றார்.

மரியம்மாளின் மரணத்திற்குப்பின் நிகழ்ந்ததை, ஜெருசலேம் கிறீஸ்தவர்கள் தலைமுறை தலைமுறையாய் அறிந்து வந்ததை யுவெனால் எடுத்துரைத்தார். அந்தச் சபையிலிருந்த பிதாக்களுக்கு அந்த வரலாறு ஏற்கனவே தெரியும்: ஆனால் சக்கரவர்த்தி ஆவலுடன் வரலாற்றுக்குச் செவிசாய்த்தார்.

ஆதாமுடைய பிள்ளைகள் யாவரும் சாகவேண்டும். அந்த நேரம் தேவதாய்க்கு அணுகி வந்தது. அவர்களுடைய மகன் இறந்தார். இப்பொழுது மரியம்மாள் அந்த நேரத்தை சுஎதிர்பார்த்து படுக்கையில் இருந்தார்கள். பாவமே மனிதனை உருக்குலைத்து சீரழிப்பது. தேவதாயோ தன் வாழ்வின் இறுகிக் கட்டக்கிலும் வெகு அழகுடனிருந்தார்கள். 

வேதம் போதிப்பதற்காக உலகின் பல திசைகளுக்கும் சென்றிருந்த அப்போஸ்தலர்கள் இஸ்பிரித்துசாந்துவின் ஏவுதால் தங்கள் அரசியின் மரணப் படுக்கையண்டை வந்து சேர்ந்தனர். கிறீஸ்துநாதருடைய மரணத்திற்குப்பின் அவர்களை விடாது பின்சென்ற அப்போஸ்தலர்கள். இஸ்பிரித்துசாத்துவின் வருகைக்குப்பின், அவர்களை அருளப்பருடைய பராமரிப்பில் விட்டுப் பிரிந்தனர். ஆனால் எப்பொழுதுமே அவர்கள் அப்போஸ்தலர்களுடைய தாய், அரசி, துயரத்தில் அவர்களது திடம்.

கிறிஸ்துநாதருடைய தூதர்களான அப்போஸ்தலர்கள் கிறிஸ்துநாதருடைய மாதா தன் மகனிடம் போகுமுன் அவர்களைப் பார்க்கவேண்டுமென்று வந்தார்கள். சேசுவுக்கு எத்தனையோ செய்திகள் சொல்லி அனுப்பினார்கள்.

அமைதியாய் யாதொரு அவஸ்தையுமின்றி அன்னை உயிர் வீட்டார்கள். கிறிஸ்துநாதருடைய முப்பத்துமூன்று வருட மறைந்த வாழ்க்கையைப்பற்றி இனி அவர்கள் வாயிலிருந்து ஒன்றும் கேட்க முடியாது. உலகத்தை அவரிடம் கொண்டு சேர்ப்பதில் அவளிடம் ஆலோசனைக் கேட்க முடியாது. இது அவர்களுக்கு விசனத்தைக் கொடுத்தது.

கிறீஸ்துநாதரின்றி மரியன்னைக்கு உலகம் வெறுமனாகக் காணப்பட்டதென அப்போஸ்தலர்கள் அறிவார்கள். சற்பிரசாதத்தில் அவர் இருந்தபோதிலும் நேரில் பாரப்பதற்குச் சமானமாகுமா? அவர் பரலோகத்திற்கு எழுந்த பிற்பாடு, அவருடன் தான் ஒன்று சேர அவர் எப்பொழுது அழைப்பார் என அவர்கள் பொறுமையாய்க் காத்திருந்தார்கள். வாழ்நாள் முழுவதுமே அவர்கள் அவரது அழைப்புக்கும் விருப்பங்களுக்கும் இணங்கி வந்தவர்களல்லவா? இப்பொழுதும் அவருடைய அழைப்பை, மரணத்தை, பொறுமையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

கடைசியாக அது வந்தது. அச்சத்துடன் நோக்கப்படும் வெற்றியாளனைப்போலல்ல. ஆனால் விடுதலை செய்பவனை போல் அது வந்தது. தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் அப்போஸ்தலர்கள் ஒருவிதத்தில் மகிழ்த்தனர். அவர்களை அழைத்துச்செல்ல வந்த தன் மகனுடன் மாமரி இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார்கள்.

அந்த நாட்டில் இறப்பவர்களது சடலங்களை நெடு நேரம் வைத்திருப்பதில்லை. அப்போஸ்தலர்கள் தங்கள் அன்னையின் சரீரத்தைத் தூக்கீச் சென்று கல்லறையில் வைத்தனர். அடக்கச் சடங்கின்போது, அவர்கள் நாங்கள் பங்கு பற்றாத இன்னொரு அடக்கத்தைப்பற்றி நினைத்தனர். கல்வாரியிலிருந்து அரிமத்தியா குசையின் கல்லறைக்குச் சென்ற அந்த சுற்றுப்பிரகாரத்தைப்பற்றி அன்னை அவர்களுக்குப் பலமுறை சொல்லியிருந்தார்கள். அந்நியரால் அவர் அடக்கம் செய்யப்படுகையில் தாங்கள் மறைந்திருந்ததைப்பற்றி அப்போஸ்தலர்கள் வெட்டு துக்கித்தனர். பெரிய வெள்ளிக் கிழமையன்று செய்த அந்த தவறுக்குப் பரிகாரமாயிருக்கும்படி. அவரது தாயாரை பரிவுடன் அடக்கம் செய்தனர்.

வழக்கம்போல் தோமையார் பிந்தி வந்தார். முக்கியமாக சம்பவங்களுக்கெல்லாம் அவர் பிந்திதான் வருவார் போலும். ஆனால் அவர் பிந்தியது நமக்கு நல்லதாயிற்று. உயிர்த்தெழுந்த கிறீஸ்துவை அப்போஸ்தலர்கள் முதன்முறை சந்தித்தபோது தோமையார் அங்கு இல்லை. கிறீஸ்துநாதர் உயிர்த்தெழுந்தார் என்பதை முதலில் சந்தேகித்தார். பின் அதை நாம் உண்மை என ஏற்றுக் கொள்ளுவதற்கான நிபந்தனைகளை விதித்தனர். கடைசியாக தம் விரல்களை கிறீஸ்துநாகருடைய காயங்களிலும், கரத்தை அவரது விலாவிலும் வைத்தார். சேசு உயிர்த்தெழுத்தார் என்பதற்கு நல்ல அத்தாட்சி தந்ததற்காக நாம் தோமையாருக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

மாமரி இறந்தபோதும் அவர் பிந்திப் போனார். அடக்கத்துக்கு முன் அவர் வந்திருப்பாரானால் அன்னை கல்லறையிலிருந்து மோட்சத்திற்கு எடுக்கப்பட்டதை நாம் அறியாதிருக்கலாம்.

"அன்னையின் அந்திய காலத்தில் நான் இங்கு வரமுடியவில்லை. அவர்களது திரு முகத்தையாவது நான் பார்க்க வேண்டும். எல்லோரும் என்னுடன் வாருங்கள். கல்லைப் புரட்டிப் பார்த்துவிட்டு வருவோம்" என வற்புறுத்தினார். அந்த இனிய முகத்தை இன்னொரு முறை பார்க்க அப்போஸ்தலர்களுக்கு பெரும் ஆவல். தோமையாருடன் போய். கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டினார்கள். உடலைக் காணோம். எவரும் அதைத் திருடியிருக்க மாட்டார்கள். அது நிச்சயம். தன் மகனைப் போலவே, தாயும் சரீரத்துடன் மோட்சம் சேர்ந்தார்கள் என தீர்மானித்தனர்.

கல்லறை வெறுமையாயிருத்து. அவர்களது சடலம் இருந்த இடத்தில் அழகிய மலர்கள் காணப்பட்டன. மரண நாற்றம் அங்கு இல்லை. மலர்களின் மணமும் பரலோக வாசனையுமே வீசின.

உயிர்த்த சேசு தம் மாதாவையும் தம்முடன் இருக்கும்படி எடுத்துக்கொண்டார். கிறீஸ்துநாதருடைய உடல்மீது சாவு பெற்ற வெற்றி குறுகியது. கிறீஸ்துநாதருடைய உடலைச் சுமந்தவர்களுடைய உடல்மீது சாவு பெற்ற வெற்றி நீடிக்க முடியாத வெற்றி மாமரி பூமியிலிருந்து பரகதிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.

வெறுமையாயிருந்த கல்லறையருகில் அப்போஸ்தலர்கள் முழந்தாளிட்டு, தாயையும் மகனையும் ஒருங்கே கொண்டிருந்த மோட்சத்தை நோக்கினார்கள். பின் மன மகிழ்வுடன் வீடு திரும்பினர்.

அன்றிலிருந்து கிறீஸ்தவ உலகம் மரியாயின் உடலுக்காக தேடி அலைந்ததில்லை. அது தன் தூய ஆத்துமத்துடன் ஒன்றித்து கடவுளருகில் இருந்தது என அவர்கள் அறிந்திருந்தார்கள்.

அர்ச். யுவெனால், சக்கரவர்த்தி மார்ஸியனுக்கும் அவரது அழகிய மனைவி புல்க்கேரியாவுக்கும் கால்ஸிதளில் கூடிய பொதுச் சங்கத்தில் இருந்த திருச்சபையின் பிதாக்களுக்கும் காடுத்துரைத்த வரலாறு இதுதான். யாவகும் முழுத் திருப்தியுடன் தலைகுனிந்து தங்கள் அங்கீகாரத்தை வெளியிட்டனர்.

மரியாயி மோட்சத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட திருநாள்

(ஆகஸ்ட் 15)

பரிசுத்த கன்னிகையின் பாக்கியமான மரணம்

மரியாயி இறந்தது நோயினாலல்ல, முதிர்பீராயத்தால் அல்ல, பாவத்தின் தண்டனையாகவுமல்ல. ஏனெனில் அவர்கள் ஒருபோதுமே பாவம் செய்தவளல்ல. நேசத்தால் அவள் உயிர்விட்டாள். அவளுடைய நேச மகன் பரலோகத்துக்கு ஆரோகணமானதிலிருந்து நேசத்தால் அவரை நோக்கியே ஏங்கிக் கொண்டிருந்தார்கள். நன் நேச மகன் ஒன்றிக்கும். நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றார்கள். அவரைப் பிரிந்து வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கு வேதனையாயிருந்தது. அவரது ஆத்துமத்தை உடலுடன் பிணைத்திருந்த கட்டுகளை நேசமானது இறுதியாக அறுத்தது. அவர்களது தூய ஆத்துமம் பரலோகத்திற்கு பறந்து சென்றது. உலகப்பொருட்கள் மேல் பற்றின்றி வாழ்கிறவர்கள் பாக்கியவான்கள்; கடவுளைப் பார்த்து நித்தியத்திற்கும் அவரைக் கொண்டிருக்கும்படி அவர்கள் உயிர் ஆசையாயிருக்கிறார்கள்.

 பிதாப்பிதாக்களும் இவ்வித ஆசையுடன் இருந்தார்கள். அவர்களது கண்கள் எப்பொழுதும் தங்களது பரலோக வீட்டையே நோக்கி நின்றன. தாவீது அரசர் இப்பூமியில் தம்மை பரதேச வாசியாக மதித்து பரகதியை நாடினார். எனது தேகக்கட்டு அவிழ்ந்து, என் ஆத்துமம் தன் சிறையைவிட்டு வெளியேறி சேசுவுடன் ஒன்றிக்க வேண்டும் என அர்ச் சின்னப்பர் ஆசிந்தார்.  கிறீஸ்துவை அனுபவிப்பதே நமது ஏக ஆசை என் வேதசாட்சியான அர்ச். இஞ்ஞாசியார் மொழிந்தார். இப்பூமியின் பிரயாணி போல் எங்காதவன் மோட்சத்தில் பிரஜைபோல் வாழ மாட்டான் என அர்ச். அகுஸ்தீன் சொல்கிறார். அசிசி அர்ச். பிரான்சிஸ் எப்பொழுதும் பரகதியையே நோக்கி நின்றார் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் இரவு நேரத்தில் அழகிய வானத்தை நோக்கிக்கொண்டிருப்பார்: “பரலோகத்தை நோக்கும் பொழுது பூமி எத்தனை நிர்ப்பாக்கியமாகத் தோன்றுகிறது" என்பார். மோட்சத்தை நினைத்து ஆசைப் படாதவன் கிறீஸ்தவனல்ல.

பரிசுத்த கன்னியின் உத்தானம்.

கடவுள் மீது மரியாய் கொண்டிருந்த நேசமானது. உடலினின்று அவர்களது ஆத்துமத்தை அகற்றியது. அவர்களது தூய்மையானது. அழியாமை என்னும் அரச ஆடையால் அவர்களைப் போர்த்தியது. இத்தனை பரிசுத்தமான உடல் கல்லறையில் அழிவது தகுதியல்ல, பாவத்தின் தண்டனையே இந்த அழிவு, கன்னிமாமரி பாவம் செய்தவர்களல்ல. இவ்விதம் சேசு தம்முடைய மாதாவை நித்திய மகிமைக்கு உயர்த்தினார், கற்பு குன்றா உடல்கள் மேலும் இருதயங்கள் மேலும் கடவுளுக்குள்ள நேசத்தைக் கண்டு நாம் அதிசயிப்போமாக. இனிமேலாக நாம் நமது உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருப்போமாக. அற்ப இன்ப சுகத்திற்காக அதை நரகத்திற்கு உள்ளாக்க மாட்டோம். மோட்ச மகிமையை இழக்க மாட்டோம். ஓ பரிசுத்த கற்பே, மரியாயின் உடலை நீ எவ்வளவு அழகுபடுத்தி யிருக்கிறாய்! எங்கள் மதிப்புக்கும் நேசத்திற்கும் நீ எவ்வளவோ உரிமை பெறுகிறாய்? மிக விலையுயர்ந்த திரவியமாக உன்னை நாங்கள் மதித்துக் காப்பாற்றி வரவேண்டும்.

மரியாயி மோட்ச அரசி

பூமியில் நாம் நம்மைத் தாழ்ந்தும் அளவு பரகதியில் நாம் உயர்த்தப்படுவோம். இது கடவுளது சட்டம் (லூக் 14:17). மரியாயி தன்னை எல்லா சிருஷ்டிகளுக்கும் கீழாகத் தாழ்த்தினார்கள். சுடவுளுடைய தாய் என்ற மட்டில் அரசியான அவர்கள் தன்னை ஓர் அடிமை என்றார்கள். சம்மனசுகளைவிடக் தூய்மை வாய்ந்த அவர்கள், சுத்திகர நாளன்று தேவாலயத்தில் சாதாரண பெண்களைப்போல் போய் நின்றார்கள். அரசர்களின் குமாரத்தியான அவர்கள், சாதாரண பெண்ணைப்போல் தன்னைத் தாழ்த்தி, உழைத்து வந்தார்கள். எல்லோருக்கும் கீழாக அவர்கள் தன்னைத் தாழ்த்தியமையால் எல்லா சிருஷ்டிகளுக்கும் மேலாக அவர்கள் உயர்த்தப்பட உரிமை பெற்றார்கள். இதை அவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளில் கடவுள் செய்தார். மகிமையுடன் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அவர்கள், மேகங்களுக்கு மேல் வெற்றி வீரப்பெண்போல் எழும்புகிறார்கள். சம்மனசுக்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். "வனாந்தரத்திலிருந்து எழும்பி வருகிற இவள் யாரோ?" (உத், சங். 8:8) என்று அவர்களுடைய மகிமையைப் பாடுகிறார்கள். அவர்கள் மோட்சத்தில் நுழைந்ததும் தீர்க்கதரிசிகளும் பிதாப்பிதாக்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். மோயீசன், யாக்கோபின் நட்சத்திரம் என தாம் முன்னறிவித்தவளை வரவேற்கிறார். இசையாஸ், கன்னித் தாய் என தாம் முன்னறிவித்தவளை, எசேக்கியேல், கீழ்த் திசையின் வாசல் எனத் தாம் கூறியவளை, தாவீது மன்னன். அரசரின் வலது பக்கத்தில் நிற்கும் அரசி எனத் தாம் சொன்னவளை, குதூகலத்துடன் வரவேற்கின்றனர். இந்த மகிழ்ச்சிக் கீதங்களின் மத்தியில் மரியாயி தன் தேவகீதத்தை இசைத்து, "என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப் படுத்துகின்றது" என்கிறார்கள். இது தொடக்கமே. மரியாயிக்கென தயாரிக்கப்பட்டிருந்த சிம்மாசனத்தில் கடவுள் மரியாயை வைத்து, அவளது சிரசில் அரச கிரீடத்தைச் சூட்டி, அவள் பரலோக பூலோக அரசி என சம்மனசுக்களுக்கும் மனிதருக்கும் காட்டுகிறார். ஓ என் மாதாவே. ஓ என் அரசியே. ஓ என் ஆண்டவளே, மகிமையில் வீற்றிருக்கும் உம்மை நான் வணங்குகிறேன். என்னை முழுவதும் உமக்கு அர்ப்பணம் செய்து, உமது சிநேக ஆட்சியின் கீழ் என்னை வைத்து விடுகிறேன். நீர் உண்மையாகவே என்னுடைய பாதுகாவலியாகவும், அன்னையாகவும் இருப்பீராக. சமாதானமும் கத்தோலிக்க மறையும், கடவுள்மீது அன்பும், திருச்சபைமீது நேசமும் உமது மன்றாட்டால் எங்கும் அரசுபுரியச் செய்யும். ஆமென்.



Source: Sancta Maria 2012 - July August

புதன், 20 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - கோவில் மணிகள் (Church Bells)

 கோவில் மணிகள்

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941




பற்பல பொது நிகழ்வுகளுக்கும் வேத நிகழ்வுகளுக்கும் மணி அடிக்கிற வழக்கம் தொன்மையானது. எஜிப்தியர் ஓசரிஸ் என்னும் தெய்வத்தை வழிபடுவதற்கு மணி உபயோகித்தார்கள் என்று தெரியவருகிறது. ஆனால் அந்த மணிகள் வெகு சிறியவையாகவும், தட்டை வடிவமான சேமக்கல் உருவமாகவும் இருந்தன. மோயீசன் எஜிப்து தேசத்துக்குக் குருக்களுடைய பழக்க வழக்கத்தை யூதருடைய ஆராதனை முறையில் ஏற்படுத்தினார் என்று சொல்ல நியாயம் உண்டு.

உரோமையர் தங்கள் வேத சடங்குமுறைகளில் மணி உபயோகப்படுத்தினதாகத் தெரியவில்லை. சண்டையில் ஜெயித்தபின் சந்தோஷங் கொண்டாடுவதற்காக நடத்தின ஊர்வலங்களில் மணி அடித்துக்கொண்டு போவது அவர்களுக்குள் வழக்கமாயிருந்தது.

கிறீஸ்தவ ஆலயங்களில் மணியின் உபயோகம் கி.பி. 400-ம் ஆண்டில் ஏற்பட்டது. இத்தாலியாவிலுள்ள நோலா நகரத்து மேற்றிராணியாராகிய பவுலினுஸ் என்பவர் முதன்முதல் இந்த வழக்கத்தை உண்டு பண்ணினார் என்று கூறுகிறார்கள். அக்காலங்களில் தேவாராதனை சடங்குகளுக்கு மட்டுமின்றி, யாதொரு அபாயத்தை ஜனங்களுக்கு அறிவிப்பதற்காகவும் கோவில் மணியை அடிப்பார்கள். இதனிமித்தம் தேவாலயங்களில் மணிகள் அமைக்கிற வழக்கம் வெகு துரிதமாய் எங்கும் பரவிற்று. நமது நாட்டில் இந்தப் பூர்வீக வழக்கத்தை அநுசரித்து, இன்னும் சிற்சில கிராமங்களில் நெருப்புப்பிடித்தல் போன்ற விபத்துக்களை அறிவிப்பதற்குக் கோவில் மணியை அடிப்பதுண்டு. கோவில் மணி உபயோகம் கி.பி. 604-ம் ஆண்டில் சபினியன் என்னும் பாப்பானவர் காலத்தில் திருச்சபையின் அங்கீகாரம் பெற்றது. சிறிது காலத்துக்குப் பிறகு மணியை மந்திரிப்பதற்கு விசேஷ சடங்கு ஒன்று ஏற்பாடாயிற்று. கோவில் கோபுரங்களில் பெரிய மணிகளை அமைக்க ஆரம்பித்தது 11-ம் நூற்றாண்டுக்கு முன் அல்லவென்று சொல்லலாம்.

ஐரோப்பாவிலுள்ள பலவித காட்சிசாலைகளில் பழமையான பல மணிகளைக் காணலாம். விசேஷமாய் அயர்லாந்து தேசத்திலும், ஸ்காட்லாண்டு தேசத்திலும் வெகு பூர்வீகமான மணி வகைகள் இன்றும் இருக்கின்றன. அவைகளில் சில சதுர வடிவமாகவும், வெண்கலம் அல்லது இரும்புத் தகடுகளால் இணைக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. இதனால் அவைகளின் நாதம் கேட்பதற்குக் கோரமாய் இருந்ததுமல்லாமல், இக்காலத்து மணிகளைப்போல் அவ்வளவு ஓசையுள்ளதுமல்ல என்பது நிச்சயம்.


கீழ்த்திசை கிரேக்க ஆலயங்களில் 9-ம் நூற்றாண்டில் மணி உபயோகம் ஆரம்பித்தது. ரஷ்ய தேசத்திலுள்ள பெரிய மேற்றிராசனக் கோவில்களில் தான் உலகப் பிரசித்திப் பெற்ற மணிகள் இருந்தன. எல்லாவற்றிலும் மிகப் பெரிதான மணி மாஸ்கோ பட்டணத்தில் உள்ளது. அது 19 அடி உயரமும், சற்றேறக்குறைய அதேயளவு குறுக்களவிலும் இருந்தது.

சில தேவாலயங்களில், 8, 12, அல்லது 14 மணிகள் வரிசையாய்த் தொங்கவிடப்பட்டிருக்கிறது. இவைகள், சங்கீதத்தின் எழு ஸ்வரங்களும் தொனிக்கும்படியாக வார்க்கப்பட்டவை. இவைகள் அடிக்கப்படும்போது, செவிக்கு இனிமையான நாதத்தையும், வெகு தூரம் கேட்கக்கூடிய அளவில் ஓசையையும் உண்டாக்குகின்றன என்பது சொல்லாமலே விளங்கும். குறிப்பான சில வசனங்கள் மணிகளில் செதுக்கப்பட்டிருப்பது சகஜம். அவ்வசனங்கள் மணியின் பிரயோகத்தை எடுத்துரைக்கின்றன. இங்கிலாந்து தேசத்தில் உள்ள பழைய ஆலயங்களில் அநேக மணிகளின் மேற்பரப்பில் செதுக்கப்பட்டுள்ள சில வாக்கியங்களை நாம் வாசிக்கும் பொழுது அவைகள் நமக்கு விசித்திரமாகத் தோன்றும். அவைகளில் சில வசனங்கள் பின்வருமாறு:

"துக்கத்தொனியால் மரணமதைத் தெரிவிக்கிறேன்” 

“மின்னல், இடியின் இன்னலதைத் தவிர்க்கிறேன்” 

"ஓய்வுநாளில் ஆலயத்திற்கு எல்லோரையும் அழைக்கிறேன்” 

"தூங்குபவர் துரிதமாய் துயில்விட்டெழத் தொனிக்கிறேன்” 

சண்டமாருதத்தைச் சதா சாந்தப்படுத்துகிறேன்” "

"அபாயம் நேரிடுங்கால் அபயமிட்டு அலறுகிறேன்...." 

என்கிற வாக்கியங்கள் சில மணிகளில் காணக்கிடக்கின்றன.

மின்னல், இடி, புயல் இவைகளால் ஆபத்து நேரிடாவண்ணம் தடுப்பதற்குக் கோவில் மணிச்சத்தம் நிச்சயமான ஓர் சாதனம் என்கிற எண்ணம் அக்காலத்து ஜனங்களுக்கு இருந்ததாகத் தெரியவருகிறது. முத்தின காலங்களில் சாவுமணி அடித்த விதமும் குறிப்பிடத்தக்கத்து. இறந்தவனுடைய வயது எத்தனையோ அத்தனை தடவை தட்டு மணி அடிப்பதுதான் வழக்கமாயிருந்து.

திரிகால ஜெபத்துக்கும், திவ்விய பூசை, திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் ஆகிய கோவில் ஆராதனைகளுக்கு முந்தியும் மணி அடிப்பது வழக்கம். சில இடங்களில் நடுப்பூசை நேரத்திலும் கோவில் பெரிய மணியை அடிப்பதுண்டு. நியாயமான விக்கினத்தை முன்னிட்டுத் திவ்விய பலிபூசைக்கு வர இயலாதவர்களும் தாங்கள் இருக்கிற இடத்திலிருந்து, நற்கருணையில் எழுந்தருளிவருகிற ஆண்டவரை ஆராதிக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த வழக்கம் 13-ம் நூற்றாண்டில் ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள். இந்த மணிச்சத்தங் கேட்டவுடன், எல்லோரும் எங்கேயிருந்தாலும் ஒரு நிமிடம் முழந்தாட்படியிட்டு ஆராதனை முயற்சி செய்வது வழக்கமாயிருந்தது


மணி மந்திரித்தல்:



மேற்றிராணியார் அல்லது அவரிடமிருந்து விசேஷ அதிகாரம் பெற்ற குருவானவர் மாத்திரம் மணி மந்திரிக்கிற சடங்கை நிறைவேற்றலாம். மணியை மந்திரிக்கிறவரும் மற்ற குருக்களும் அதைச் சுற்றிவருவதற்கும் அதன் உட்புறத்தைத் தொடுவதற்கும் விக்கினமில்லாத விதமாய் கோளில் நடுச் சாலையில் தலைப்பில் அல்லது வேறு முக்கியமான இடத்தில் மணியைத் தொங்கவிட்டு வைக்கவேண்டும். மேற்றிராணியாரும் குருக்களும் அதை தொங்கவிடப்பட்டிருக்கிற இடத்துக்குச் சுற்றுப் பிரகாரமாய் ஏழு சங்கீதங்களைச் சொல்லித் திருச்சபைக்கும் அதைச் சேர்ந்த எல்லோருக்கும் தேவ இரக்கத்தை மன்றாடிக்கொண்டு போவார்கள். அங்குப் போய்ச் சேர்ந்தவுடன், மேற்றிராணியார் தீர்த்தம் மந்திரித்து, அதைக் கொண்டு மணியைக் கழுவுவார். அவருக்கு உதவியாய் நிற்கிற குருக்கள் மணியின் உள்ளும் புறமும் மேற்பரப் பெல்லாம் கழுவி முடிப்பார்கள். இதனிடையில் வேறு ஏழு சங்கீதங்கள் சொல்லப்படும். சங்கீதங்களின் முடிவில் சொல்கிற ஜெபம் வெகு நேர்த்தியானது. சர்வேசுரன் தமது பிரஜைக்குத் தமது அருளை ஈந்து, மணிச்சத்தத்தைக் கேட்பதான அவர்களுடைய விசுவாசமும் பக்தியும் அதிகரிக்கவும், துஷ்ட அரூபியின் வஞ்சனைகளெல்லாம் பயனற்றுப்போகவும், ஆரோக்கியம் உண்டாகவும், மணிச்சத்தத்தைக் கேட்டு பசாசுக்கள் பறந்தோடவும் வேண்டுமென்று மன்றாடுகிறார். இன்னுமொரு ஜெபம் சொன்னபின், அவஸ்தைபூசுதலில் உபயோகிக்கிற அர்ச்சியசிஷ்ட எண்ணெயால் ஏழு இடங்களில் மணியின் வெளிப்புறத்தில் தடவுகிறார். மீண்டும் வேறொரு ஜெபம் சொல்லி மணியின் உள்வாயில் பரிமள தைலத்தால் நாலு சிலுவை அடையாளம் வரைகிறார். வேறு சில ஜெபங்களும் சங்கீதமும் சொன்னபின்னர், பெரிய பாட்டுப் பூசையில் செய்வதுபோல் சுவிசேம் பாடப்படும். இந்த சுவிசேத்தின் பாகம், நமது திவ்விய இரட்சகர் மார்த்தா, மரியம்மாள் என்னும் இரு சகோதரிகளையும் பார்க்கப்போன சம்பவத்தைக் குறிக்கிறது. கோவில் மணிச்சத்தங் காதில் விழும்போதெல்லாம், மரியம்மாளைப் போல் கடவுளைத் தியானிப்பதே மேலான காரியம் என்பதை நாம் நினைவுகூர்ந்து கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

வெள்ளி, 6 ஜனவரி, 2023

உன்னத ஸ்தலங்களிலே சர்வேசுரனுக்கு மகிமைப் பிரதாபமும், பூலோகத்திலே நல்ல மனதுள்ள மனுஷர்களுக்குச் சமாதானமும் உண்டாகக்கடவது


 

உன்னத ஸ்தலங்களிலே சர்வேசுரனுக்கு மகிமைப் பிரதாபமும், பூலோகத்திலே நல்ல மனதுள்ள மனுஷர்களுக்குச் சமாதானமும் உண்டாகக்கடவது  (லூக். 2:14). பூமி முழுவதும் சமாதானம் அறிவிக்கப்படுகிறது; பாவங்களை மன்னிப்பதன் மூலம் கடவுளுடன் மனிதனின் அமைதி; தங்களுக்குள்ளேயே மனிதர்களின் அமைதி, கடவுள் விரும்புவதை விரும்புவதோடு, அவனது ஆசைகள் அனைத்தும் ஒத்துப்போவதன் மூலம் மனிதன் தன்னுடனிருக்கும் அமைதி. இதுவே தேவதூதர்கள் பாடி பிரபஞ்சம் முழுவதும் அறிவிக்கும் அமைதி.

இந்த விதிமுறைகளில் தான் Bossuet, அவரது Elevations sur les Mysteries (16வது வாரம், 9வது உயரம்) இல், கிறிஸ்துமஸ் இரவில் தேவதூதர்களின் பாடலைப் பற்றி கருத்துரைத்தார். ஒரு புதிய ஆண்டின் வாசலில் கிறிஸ்தவ ஆன்மாக்கள் விரும்பும் அனைத்தும் உள்ளன.

The Eagle of Meaux  குறிப்பிடுகிறது: “நல்ல மனப்பான்மையுள்ள மனிதர்களுக்கு சமாதானம், அதாவது முதலில் கடவுள் யாருக்கு நன்மையை விரும்புகிறாரோ அவர்களுக்கு; இரண்டாவதாக, நல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு; ஏனென்றால், கடவுள் நம்மீது கொண்டுள்ள நல்லெண்ணத்தின் முதல் விளைவு, அவரை நோக்கி ஒரு நல்ல விருப்பத்துடன் நம்மைத் தூண்டுவதாகும்.

"நல்ல விருப்பம் என்பது கடவுளின் விருப்பத்திற்கு இணங்குவது: அது சாராம்சத்திலும் தன்னிலும் நன்றாக இருப்பதால், அதற்கு இணங்குவது இந்த வகையில் நல்லது. ஆகவே, நம் விருப்பத்தை கடவுளின் விருப்பத்திற்கு நெறிப்படுத்துவோம், மேலும் நாம் நல்லெண்ணம் கொண்ட மனிதர்களாக இருப்போம், அது உணர்வின்மை, அலட்சியம், அலட்சியம் மற்றும் வேலையைத் தவிர்ப்பதன் மூலம் அல்ல, ஆனால் "அவர்மேல் உங்கள் சகல கவலைகளையும் வைத்துவிடுங்கள். " (cf . 1 இரா. 5:7: "அவர் உங்களை விசாரிக்கிறவராகையால், அவர்மேல் உங்கள் சகல கவலைகளையும் வைத்துவிடுங்கள்.").

"மென்மையான மற்றும் சோம்பேறி ஆன்மாக்கள் திடீரென்று இதைச் சொல்லுகின்றன: கடவுள் அவர் விரும்பியதைச் செய்யட்டும்; வலி மற்றும் கவலையில் இருந்து ஓடுவதை மட்டுமே கவனித்துக் கொள்ளுங்கள்."

நல்லெண்ணமுள்ள மனிதர்களுக்கு நாம் விரும்பும் அமைதி என்பது வெற்று வார்த்தை அல்ல. கடவுளின் மகிமைக்காக உண்மையாகச் செயல்படும் விசுவாசம் மற்றும் தானத்தின் பலன் இது: "நல்ல சித்தம் என்பது கடவுளின் உண்மையான அன்பு, மற்றும் புனித பவுல் சொல்வது போல், 'கற்பனையின் கதி ஏதெனில், பரிசுத்த இருதயத்தினாலும், நல்ல மனச்சாட்சியினாலும், போலியற்ற விசுவாசத்தினாலும் உண்டாகிற பரம அன்பாமே.' (1 தீமோ. 1:5).

“நல்ல செயல்களால் ஆதரிக்கப்படாதவர்களிடம் நம்பிக்கை போலியாக இருக்கிறது; ஒருவன் கடவுளைப் பிரியப்படுத்த விரும்புவதே  நற்செயல்களாகும்.

எனவே, 2023 ஆம் ஆண்டு உண்மையிலேயே நல்லதாகவும் புனிதமாகவும் இருக்க, கிறிஸ்மஸில் தேவதூதர்களின் பாடலைப் பாடுவது போதாது: "உன்னத ஸ்தலங்களிலே சர்வேசுரனுக்கு மகிமைப் பிரதாபமும், பூலோகத்திலே நல்ல மனதுள்ள மனுஷர்களுக்குச் சமாதானமும் உண்டாகக்கடவது!" இது வருடத்தின் ஒவ்வொரு நாளும் உறுதியான தீர்மானமாக மாற்றப்பட வேண்டும்.


(ஆதாரம்: DICI n° 427 - FSSPX.News)

விளக்கம்: Flickr / Jean-Louis Mazieres (CC BY-NC-SA 2.0)

https://fsspx.news/en/news-events/news/earth-peace-men-good-will-79090