ஜனவரி 12ம் தேதி
வேதசாட்சியான உரோமையின் அர்ச். டாசியானா திருநாள்
இவள், உரோமாபுரியைச் சேர்ந்த மிகவும் பிரசத்திபெற்ற உயரிய குடும்பத்தில் பிறந்தாள்; இவள் தனது கன்னிமையை, திவ்விய சேசுகிறீஸ்து நாதர் சுவாமிக்கு அர்ப்பணித்து, கன்னியாஸ்திரியாக ஜீவிக்க தீர்மானித்தாள். அலெக்சாண்டர் செவருஸ் சக்கரவர்த்தியாக ஆண்ட காலத்தில், இவள் கைது செய்யப்பட்டாள்; அப்போலோ தேவதையினுடைய பசாசின் கோவிலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அஞ்ஞான விக்கிரகங்களுக்கு பலி செலுத்தும்படி வலுவந்தம் செய்யப்பட்டாள்; அர்ச். டாசியானா, ஆண்டவரை நோக்கி ஜெபிக்கத் துவக்கினாள்; உடனே, பூகம்பம் ஏற்பட்டது; அந்த அஞ்ஞான விக்கிரகங்கள் எல்லாம் கீழே விழுந்து சுக்கு நூறாக உடைந்தன. அந்த அப்போலோ கோவிலின் ஒரு பாகம் இடிந்து, அஞ்ஞான குருக்கள் மேல் விழுந்தது. விக்கிரகங்களுக்குள் மறைந்து தங்கி வாழ்ந்திருந்த பசாசு, கூக்குரலிட்டு, கத்தியபடி, அந்த கோவிலை விட்டு வெளியே பறந்துபோனது. கூடியிருந்தவர்கள், காற்றில், பறந்து சென்ற பசாசின் நிழலைக் கண்டனர். இதைக்கண்டு கோபவெறிகொண்ட அஞ்ஞானிகள், அர்ச். டாசியானாவின் கண்களை இரும்புக் கொக்கிகளால் பிடுங்கி சித்ரவதை செய்தனர்; இக்கொடிய உபாதனைகளைப் பொறுமையுடன் ஏற்று அனுபவித்தபடி, அர்ச். டாசியானா, தன்னை உபத்தி ரவப்படுத்துகிறவர்களுக்காக வேண்டிக்கொண்டாள்; அவர்களுடைய மெய் ஞானக்கண்களை ஆண்டவர் திறக்கும்படியாக வேண்டிக்கொண்டாள்; உடனே, அவர்களுள் எட்டுபேர், புதுமையாக மனந்திரும்பி, வேதசாட்சிகளானார்கள்.
பின், அஞ்ஞானிகள், டயானா தேவதையின் கோவிலுக்கு அர்ச். டாசியானாவை இழுத்துச்சென்று, டயானா தேவதைக்கு பலிசெலுத்த வற்புறுத்தினர்; அர்ச். டாசியானா, சிலுவை அடையாளத்தை வரைந்து, அர்ச். சிலுவை மந்திரத்தை ஜெபித்த பிறகு ஆண்டவரை நோக்கி ஜெபிக்கத் துவக்கினாள்; திடீரென்று, மாபெரும் இடியும் மின்னலும் ஏற்பட்டு, அஞ்ஞான தேவதையையும், பலிப்பொருட்களைவும், அஞ்ஞான குருக்களையும் இடி தாக்கியது.
பின்னர், ஒரு சர்க்கஸில் பசியுடனிருந்த சிங்கத்தின் முன்பாக, அர்ச். டாசியானாவை தள்ளி விட்டனர்; சிங்கம், அவளுடைய பாதத்தண்டையில் படுத்துக் கொண்டது. கி.பி.235ம் வருடம், ஜனவரி 12ம் தேதியன்று, அர்ச். டாசியானா, ஒரு வாளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டு, வேத சாட்சியாக மரித்தாள்.
அர்ச். டாசியானாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
Martyrdom of St. Tatiana of Rome
January 12, 235 AD
St. Tatiana was born into an illustrious Roman family and chose to remain a virgin, consecrating herself entirely to Christ.
During the reign of Emperor Alexander Severus, Tatiana was arrested and brought to the temple of Apollo, where she was forced to offer sacrifices to idols. As she began to pray, a sudden earthquake occurred, causing the idols to shatter into pieces. Part of the temple collapsed, falling upon the pagan priests. The demon inhabiting the idols fled with a screech, and its shadow was seen flying through the air by the witnesses.
In response, the pagans brutally tore out Tatiana’s eyes with hooks, but she endured her torment bravely, praying for her persecutors. She asked the Lord to open their spiritual eyes, and as a result, eight of them were converted and martyred.
The pagans then took Tatiana to the temple of the goddess Diana and urged her to offer sacrifice. Tatiana made the Sign of the Cross and began to pray. Suddenly, a deafening thunderclap was heard, and lightning struck the idol, the sacrificial offerings, and the pagan priests.
Tatiana was later brought to a circus and thrown before a hungry lion. However, the lion did not harm her and instead lay peacefully at her feet.
On January 12, 235 AD, St. Tatiana was beheaded with a sword, dying as a martyr for her faith.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக