ஜனவரி 13ம் தேதி
நமதாண்டவரின் ஞானஸ்நானத்தின் திருநாள்
திவ்ய சுதனாகிய சர்வேசுரனும் மனிதனுமான நமதாண்டவருக்கு, ஞானஸ்நானம் தேவையில்லாத ஒன்று. ஏனெனில், பிறக்கும் மனிதர் எல்லோருக்கும் , ஞானஸ்நானம் அவசியமாயிருக்கிறது என்றும், ஞானஸ்நானம், அவர்களுடைய ஆத்துமங்களை ஜென்மப் பாவதோஷத்திலிருந்து, கழுவி தூய்மைப் படுத்திப் பரிசுத்தப்படுத்துகிறது! என்றும், நம் சத்தியக் கத்தோலிக்க திருச்சபை நமக்குக் கற்பிக்கின்றது. இது தான், இந்தத் திருநாளைப் பற்றி நமக்கு வரும் முதல் சிந்தனையாயிருக்கிறது. அப்படியென்றால், திவ்ய சுதனாகிய சர்வேசுரனும், ஜென்மப்பாவமில்லாமல் பிறந்தவரும் ஜீவிய காலமெல்லாம் பாவமில்லாமல் ஜீவித்தவருமான நமதாண்டவர், திவ்ய சேசுகிறீஸ்துநாதர் சுவாமிக்கு , ஏன் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டது? திருச்சபையின் பிதாப்பிதாக்களும், மத்திய காலத்தின் வேத இயல் தர்க்க சாஸ்திரிகளும்,ஆண்டவரின் ஞானஸ்நானத்தை, ஞானஸ்நானம் என்ற தேவதிரவிய அனுமானத்தை, ஆண்டவர் தாமே உலகத்தில் ஸ்தாபித்தத் திருநாளாகக் கண்டார்கள்! அன்று, ஆண்டவருடைய திவ்ய சரீரம், தண்ணீரை ஆசீர்வதித்தது! திவ்ய சேசுநாதர்சுவாமியினுடைய ஞானஸ்நானத்தினால், அர்ச்சிக்கப்பட்டு, பரிசுத்தப்படுத்தப்பட்டதன் மூலமாக, உலகிலுள்ள எல்லா தண்ணீர்களும், கிறீஸ்துவ ஞானஸ்நானத்தை பெறும்படியாக அழைக்கப்படும் சகல மனிதர்களையும், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரில் அர்ச்சிக்கக்கூடிய வல்லமையை நித்தியத்திற்குமாகப் பெற்றுக்கொண்டன! யோர்தான் நதியில் நின்றுகொண்டிருந்த திவ்ய சுதனாகிய சர்வேசுரனைப் பற்றி, பரலோகத்திலிருந்து சப்தித்த திவ்ய பிதாவாகிய சர்வேசுரனுடைய திவ்ய குரலொலியும், திவ்ய சுதன் மேல் பரலோகத்திலிருந்து திவ்ய இஸ்பிரீத்து சாந்துவான சர்வேசுரன் புறா வடிவில் இறங்கிவந்ததும், சர்வேசுரனுடைய மகா பரிசுத்த தமதிரித்துவ சுபாவத்தை பகிரங்கமாக, இப்பரம இரகசிய திருநிகழ்வின்போது, உலகத்திற்கு வெளிப்படுத்தியது!
மேலும், இக்காட்சியில், மனுக்குலத்தின் இரட்சணியத்தின் மட்டில் திவ்ய பிதாவாகிய சர்வேசுரனும் , திவ்ய சுதனாகிய சர்வேசுரனும், திவ்ய இஸ்பிரீத்துசாந்துவான சர்வேசுரனும், கொண்டிருந்த அலுவல்கள் நமக்குக் காண்பிக்கப்படுகின்றன! உலக சிருஷ்டிப்புக்கு முன்னரே, பிதாவாகிய சர்வேசுரன், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அன்புகூர்ந்தார்! (எபே1:4) . சிதறிப்போனதைத் தேடி இரட்சிக்குமபடியாகவே மனுமகனும் வந்திருக்கிறார்! (லூக் 19:10).
திவ்ய இஸ்பிரீத்துசாந்துவானவர் பாவத்தைக் குறித்து உலகத் தைக் கண்டித்து உணர்த்துவார்! (அரு16:8).திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவர், விசுவசிக்கிற மனிதர்களை, திவ்ய சுதன் மூலமாக திவ்ய பிதாவாகிய சர்வேசுரனிடம் கூட்டிவருவார்.
யோர்தான் நதியில் நமதாண்டவர் ஞானஸ்நானம் பெற்ற போது, திவ்ய சேசுகிறீஸ்துநாதர் சுவாமியின் மூலமாக சர்வேசுரனுடைய தேவ இரக்கத்தின் எல்லா மகிமைமிகு சத்தியங்களும் காட்சியாக வெளிப்படுத்தப்பட்டன!
அர்ச்.ஸ்நாபக அருளப்பர், ஞானஸ்நானம் என்ற தேவதிரவிய அனுமானத்தை ஸ்தாபிக்கவில்லை. ஏனெனில், நமதாண்டவர், மட்டுமே, தேவதிரவிய அனுமானத்தை ஸ்தாபிக்க முடியும். அர்ச்.ஸ்நாபக அருளப்பர் அளித்த ஞானஸ்நானம், தேவ வரப்பிரசாதக் கருவியின் பலனை அளிக்கிறதாக, இருந்தது; அதாவது, இது. ஒரு தேவதிரவிய அனுமானத்தைப்போல், தன்னிலேயே தேவ வரப்பிரசாதத்தை அளிக்காமல், அதைப் பெறுவதற்கான வழியை ஆயத்தம் செய்தது. அதாவது உதவி வரப்பிரசாதத்தை, அருளப்பருடைய ஞானஸ்நானம் கொண்டிருந்தது! மெசியாவின் வருகைக்காக தபசு செய்யும்படி மக்களை அழைப்பதற்காக, வனாந்தரத்தில் கூக்குரலிடும் குரலொலியாக இசையாஸ் தீர்க்கதரிசி (இசை 40:3), அர்ச்.ஸ்நாபக அருளப்பரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். ஆண்டவருக்கு ஞானஸ்நானம் அளித்ததன் மூலமாக, அர்ச்.ஸ்நாபக அருளப்பர், அங்குக் கூடியிருந்த மக்களிடம் பகிரங்கமாக , இவ்வளவு காலமாக யாருக்காகக் காத்திருந்தார்களோ, அவரை, திவ்ய இஸ்பிரீத்து சாந்துவிலும், அக்கினியிலும் ஞானஸ்நானம் கொடுக்க வருகிற திவ்ய செம்மறிப்புருவையானவரும், தேவசுதனுமான திவ்ய இரட்சகரை, சுட்டிக்காண்பித்து , அறிவித்தார்! (மத்.3:17).
Feast of the Baptism of Our Lord
January 13
At first glance, the Baptism of Our Lord might seem an odd feast. The Catholic Church teaches that the Sacrament of Baptism is necessary for the remission of sins, particularly Original Sin.
Why was Christ baptized? After all, He was born without Original Sin, and He lived His entire life without sinning.
Many of the Fathers of the Church, as well as the medieval Scholastics, saw Christ's Baptism as the institution of the sacrament of Baptism. His Flesh blessed the water. Sanctified by the baptism of Jesus, the waters received forever the power to sanctify, through the Holy Spirit, all those who are called to receive Christian baptism.
The voice of God the Father and the descent of the Holy Spirit from heaven upon God the Son standing in the river Jordan was the public manifestation of the Trinitarian nature of God.
It also depicts the work of the Father, Son, and Holy Spirit in the salvation of mankind.
- The Father loves the elect from before the foundation of the world (Ephesians 1:4).
- He sends His Son to seek and save the lost (Luke 19:10).
- The Holy Spirit convicts of sin (John 16:8) and draws the believer to the Father through the Son.
All the glorious truth of the mercy of God through Jesus Christ is on display at His baptism in the river Jordan.
St. John the Baptist did not institute the Sacrament of Baptism, for Christ alone could institute a Sacrament. The baptism given by St. John had the effect of a sacramental; it did not of itself give grace but prepared the way for it.
John was the “voice crying in the wilderness” prophesied by Isaiah, calling people to repentance in preparation for their Messiah (Isaiah 40:3). By baptizing Him, John was declaring to all that here was the One they had been waiting for, the Son of God, the One he had predicted would baptize “with the Holy Spirit and fire” (Matthew 3:11).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக