-சங் J.M. நிக்கொலாஸ் சுவாமி
சின்ன ஆசியாவிலுள்ள கால்சிதன் என்னும் இடத்தில் கி.பி. 451 ம் ஆண்டில் திருச்சபையின் பேர்பெற்ற பொது சங்கம் ஒன்று நடைபெற்றது. திருச்சபையின் பிதாக்கள் திரளான பேர் அங்கு கூடியிருந்தனர். உரோமைச் சக்கரவர்த்தி மார்ஸியன் கூட்டத்தினுள் நுழைந்தார். பிதாக்களிடம் அவர் ஒரு காரியம் கேட்டார். "கடவுளுடைய மாதாவின் உடலை எப்படியாவது கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள். அத்திரு உடலுக்கென்று ஓர் அழகிய ஆலயம் அமைக்கத் தீர்மானித்திருக்கிறேன். அந்த மாசற்ற உடலே உலகில் மிக விலையேறப்பெற்ற அர்ச்சியசிஷ்ட பண்டம். ஆதலின் ஒரு மகா தேவாலயம் அதற்குத் நேசத்திரமாக எழுப்பப்படல் நியாயமே மரியாயின் மாசற்ற உடலை நீங்கள் கண்டுபிடித்துக் கொடுப்பீர்களானால், நான் அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து முத்திரையீட்டு, விலையேறுப்பெற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் கீழ் அதை வைப்பேன். வணக்கத்துக்குரிய பிதாக்களே, நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: ஒரு காலத்தில் மாமிசமான கடவுளின் வார்த்தையானவருடைய உறைவிடமாயிருந்த அந்த சரீரத்தைக் கண்டுபிடியுங்கள்" என சக்கரவர்த்தி மன்றாடினார். கூட்டத்திலிருந்தவர்கள் திகைத்தார்கள். இராயப்பர். சின்னப்பர் இவர்களுடைய உடல்கள் எங்கிருந்தன என அவர்கள் அறிவார்கள். கொன்ஸ்தாந்தின் சக்கரவர்த்தியின் தாயான ஹெவேனா கண்டுபிடித்த கிறீஸ்துநாதருடைய சிலுவை இருந்த இடம் அவர்களுக்குத் தெரியும். கிறிஸ்தவ மறையின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட வேதசாட்சிகள். கன்னியர் இவர்களுடைய எலும்புகள் அழகிய பெட்டிகளிலும் ஆயிரக்கணக்கான பீடங்களிலும் இருந்தன. ஆனால் எந்தப் பட்டணமாவது; எந்த மேற்றிராசனக் கோவிலாவது, திருச் சேத்திரமாவது தேவதாயின் உடல் தன்னிடம் இருந்ததாகப் பாராட்டவில்லை.
ஜெருசலேம் நகர் மேற்றிராணியாரான (அர்ச்) யுவெனால் கூட்டத்தின் மத்தியில் எழுத்து நின்றார்.
மரியம்மாளின் மரணத்திற்குப்பின் நிகழ்ந்ததை, ஜெருசலேம் கிறீஸ்தவர்கள் தலைமுறை தலைமுறையாய் அறிந்து வந்ததை யுவெனால் எடுத்துரைத்தார். அந்தச் சபையிலிருந்த பிதாக்களுக்கு அந்த வரலாறு ஏற்கனவே தெரியும்: ஆனால் சக்கரவர்த்தி ஆவலுடன் வரலாற்றுக்குச் செவிசாய்த்தார்.
ஆதாமுடைய பிள்ளைகள் யாவரும் சாகவேண்டும். அந்த நேரம் தேவதாய்க்கு அணுகி வந்தது. அவர்களுடைய மகன் இறந்தார். இப்பொழுது மரியம்மாள் அந்த நேரத்தை சுஎதிர்பார்த்து படுக்கையில் இருந்தார்கள். பாவமே மனிதனை உருக்குலைத்து சீரழிப்பது. தேவதாயோ தன் வாழ்வின் இறுகிக் கட்டக்கிலும் வெகு அழகுடனிருந்தார்கள்.
வேதம் போதிப்பதற்காக உலகின் பல திசைகளுக்கும் சென்றிருந்த அப்போஸ்தலர்கள் இஸ்பிரித்துசாந்துவின் ஏவுதால் தங்கள் அரசியின் மரணப் படுக்கையண்டை வந்து சேர்ந்தனர். கிறீஸ்துநாதருடைய மரணத்திற்குப்பின் அவர்களை விடாது பின்சென்ற அப்போஸ்தலர்கள். இஸ்பிரித்துசாத்துவின் வருகைக்குப்பின், அவர்களை அருளப்பருடைய பராமரிப்பில் விட்டுப் பிரிந்தனர். ஆனால் எப்பொழுதுமே அவர்கள் அப்போஸ்தலர்களுடைய தாய், அரசி, துயரத்தில் அவர்களது திடம்.
கிறிஸ்துநாதருடைய தூதர்களான அப்போஸ்தலர்கள் கிறிஸ்துநாதருடைய மாதா தன் மகனிடம் போகுமுன் அவர்களைப் பார்க்கவேண்டுமென்று வந்தார்கள். சேசுவுக்கு எத்தனையோ செய்திகள் சொல்லி அனுப்பினார்கள்.
அமைதியாய் யாதொரு அவஸ்தையுமின்றி அன்னை உயிர் வீட்டார்கள். கிறிஸ்துநாதருடைய முப்பத்துமூன்று வருட மறைந்த வாழ்க்கையைப்பற்றி இனி அவர்கள் வாயிலிருந்து ஒன்றும் கேட்க முடியாது. உலகத்தை அவரிடம் கொண்டு சேர்ப்பதில் அவளிடம் ஆலோசனைக் கேட்க முடியாது. இது அவர்களுக்கு விசனத்தைக் கொடுத்தது.
கிறீஸ்துநாதரின்றி மரியன்னைக்கு உலகம் வெறுமனாகக் காணப்பட்டதென அப்போஸ்தலர்கள் அறிவார்கள். சற்பிரசாதத்தில் அவர் இருந்தபோதிலும் நேரில் பாரப்பதற்குச் சமானமாகுமா? அவர் பரலோகத்திற்கு எழுந்த பிற்பாடு, அவருடன் தான் ஒன்று சேர அவர் எப்பொழுது அழைப்பார் என அவர்கள் பொறுமையாய்க் காத்திருந்தார்கள். வாழ்நாள் முழுவதுமே அவர்கள் அவரது அழைப்புக்கும் விருப்பங்களுக்கும் இணங்கி வந்தவர்களல்லவா? இப்பொழுதும் அவருடைய அழைப்பை, மரணத்தை, பொறுமையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
கடைசியாக அது வந்தது. அச்சத்துடன் நோக்கப்படும் வெற்றியாளனைப்போலல்ல. ஆனால் விடுதலை செய்பவனை போல் அது வந்தது. தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் அப்போஸ்தலர்கள் ஒருவிதத்தில் மகிழ்த்தனர். அவர்களை அழைத்துச்செல்ல வந்த தன் மகனுடன் மாமரி இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார்கள்.
அந்த நாட்டில் இறப்பவர்களது சடலங்களை நெடு நேரம் வைத்திருப்பதில்லை. அப்போஸ்தலர்கள் தங்கள் அன்னையின் சரீரத்தைத் தூக்கீச் சென்று கல்லறையில் வைத்தனர். அடக்கச் சடங்கின்போது, அவர்கள் நாங்கள் பங்கு பற்றாத இன்னொரு அடக்கத்தைப்பற்றி நினைத்தனர். கல்வாரியிலிருந்து அரிமத்தியா குசையின் கல்லறைக்குச் சென்ற அந்த சுற்றுப்பிரகாரத்தைப்பற்றி அன்னை அவர்களுக்குப் பலமுறை சொல்லியிருந்தார்கள். அந்நியரால் அவர் அடக்கம் செய்யப்படுகையில் தாங்கள் மறைந்திருந்ததைப்பற்றி அப்போஸ்தலர்கள் வெட்டு துக்கித்தனர். பெரிய வெள்ளிக் கிழமையன்று செய்த அந்த தவறுக்குப் பரிகாரமாயிருக்கும்படி. அவரது தாயாரை பரிவுடன் அடக்கம் செய்தனர்.
வழக்கம்போல் தோமையார் பிந்தி வந்தார். முக்கியமாக சம்பவங்களுக்கெல்லாம் அவர் பிந்திதான் வருவார் போலும். ஆனால் அவர் பிந்தியது நமக்கு நல்லதாயிற்று. உயிர்த்தெழுந்த கிறீஸ்துவை அப்போஸ்தலர்கள் முதன்முறை சந்தித்தபோது தோமையார் அங்கு இல்லை. கிறீஸ்துநாதர் உயிர்த்தெழுந்தார் என்பதை முதலில் சந்தேகித்தார். பின் அதை நாம் உண்மை என ஏற்றுக் கொள்ளுவதற்கான நிபந்தனைகளை விதித்தனர். கடைசியாக தம் விரல்களை கிறீஸ்துநாகருடைய காயங்களிலும், கரத்தை அவரது விலாவிலும் வைத்தார். சேசு உயிர்த்தெழுத்தார் என்பதற்கு நல்ல அத்தாட்சி தந்ததற்காக நாம் தோமையாருக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.
மாமரி இறந்தபோதும் அவர் பிந்திப் போனார். அடக்கத்துக்கு முன் அவர் வந்திருப்பாரானால் அன்னை கல்லறையிலிருந்து மோட்சத்திற்கு எடுக்கப்பட்டதை நாம் அறியாதிருக்கலாம்.
"அன்னையின் அந்திய காலத்தில் நான் இங்கு வரமுடியவில்லை. அவர்களது திரு முகத்தையாவது நான் பார்க்க வேண்டும். எல்லோரும் என்னுடன் வாருங்கள். கல்லைப் புரட்டிப் பார்த்துவிட்டு வருவோம்" என வற்புறுத்தினார். அந்த இனிய முகத்தை இன்னொரு முறை பார்க்க அப்போஸ்தலர்களுக்கு பெரும் ஆவல். தோமையாருடன் போய். கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டினார்கள். உடலைக் காணோம். எவரும் அதைத் திருடியிருக்க மாட்டார்கள். அது நிச்சயம். தன் மகனைப் போலவே, தாயும் சரீரத்துடன் மோட்சம் சேர்ந்தார்கள் என தீர்மானித்தனர்.
கல்லறை வெறுமையாயிருத்து. அவர்களது சடலம் இருந்த இடத்தில் அழகிய மலர்கள் காணப்பட்டன. மரண நாற்றம் அங்கு இல்லை. மலர்களின் மணமும் பரலோக வாசனையுமே வீசின.
உயிர்த்த சேசு தம் மாதாவையும் தம்முடன் இருக்கும்படி எடுத்துக்கொண்டார். கிறீஸ்துநாதருடைய உடல்மீது சாவு பெற்ற வெற்றி குறுகியது. கிறீஸ்துநாதருடைய உடலைச் சுமந்தவர்களுடைய உடல்மீது சாவு பெற்ற வெற்றி நீடிக்க முடியாத வெற்றி மாமரி பூமியிலிருந்து பரகதிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.
வெறுமையாயிருந்த கல்லறையருகில் அப்போஸ்தலர்கள் முழந்தாளிட்டு, தாயையும் மகனையும் ஒருங்கே கொண்டிருந்த மோட்சத்தை நோக்கினார்கள். பின் மன மகிழ்வுடன் வீடு திரும்பினர்.
அன்றிலிருந்து கிறீஸ்தவ உலகம் மரியாயின் உடலுக்காக தேடி அலைந்ததில்லை. அது தன் தூய ஆத்துமத்துடன் ஒன்றித்து கடவுளருகில் இருந்தது என அவர்கள் அறிந்திருந்தார்கள்.
அர்ச். யுவெனால், சக்கரவர்த்தி மார்ஸியனுக்கும் அவரது அழகிய மனைவி புல்க்கேரியாவுக்கும் கால்ஸிதளில் கூடிய பொதுச் சங்கத்தில் இருந்த திருச்சபையின் பிதாக்களுக்கும் காடுத்துரைத்த வரலாறு இதுதான். யாவகும் முழுத் திருப்தியுடன் தலைகுனிந்து தங்கள் அங்கீகாரத்தை வெளியிட்டனர்.
மரியாயி மோட்சத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட திருநாள்
(ஆகஸ்ட் 15)
பரிசுத்த கன்னிகையின் பாக்கியமான மரணம்.
மரியாயி இறந்தது நோயினாலல்ல, முதிர்பீராயத்தால் அல்ல, பாவத்தின் தண்டனையாகவுமல்ல. ஏனெனில் அவர்கள் ஒருபோதுமே பாவம் செய்தவளல்ல. நேசத்தால் அவள் உயிர்விட்டாள். அவளுடைய நேச மகன் பரலோகத்துக்கு ஆரோகணமானதிலிருந்து நேசத்தால் அவரை நோக்கியே ஏங்கிக் கொண்டிருந்தார்கள். நன் நேச மகன் ஒன்றிக்கும். நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றார்கள். அவரைப் பிரிந்து வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கு வேதனையாயிருந்தது. அவரது ஆத்துமத்தை உடலுடன் பிணைத்திருந்த கட்டுகளை நேசமானது இறுதியாக அறுத்தது. அவர்களது தூய ஆத்துமம் பரலோகத்திற்கு பறந்து சென்றது. உலகப்பொருட்கள் மேல் பற்றின்றி வாழ்கிறவர்கள் பாக்கியவான்கள்; கடவுளைப் பார்த்து நித்தியத்திற்கும் அவரைக் கொண்டிருக்கும்படி அவர்கள் உயிர் ஆசையாயிருக்கிறார்கள்.
பிதாப்பிதாக்களும் இவ்வித ஆசையுடன் இருந்தார்கள். அவர்களது கண்கள் எப்பொழுதும் தங்களது பரலோக வீட்டையே நோக்கி நின்றன. தாவீது அரசர் இப்பூமியில் தம்மை பரதேச வாசியாக மதித்து பரகதியை நாடினார். எனது தேகக்கட்டு அவிழ்ந்து, என் ஆத்துமம் தன் சிறையைவிட்டு வெளியேறி சேசுவுடன் ஒன்றிக்க வேண்டும் என அர்ச் சின்னப்பர் ஆசிந்தார். கிறீஸ்துவை அனுபவிப்பதே நமது ஏக ஆசை என் வேதசாட்சியான அர்ச். இஞ்ஞாசியார் மொழிந்தார். இப்பூமியின் பிரயாணி போல் எங்காதவன் மோட்சத்தில் பிரஜைபோல் வாழ மாட்டான் என அர்ச். அகுஸ்தீன் சொல்கிறார். அசிசி அர்ச். பிரான்சிஸ் எப்பொழுதும் பரகதியையே நோக்கி நின்றார் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் இரவு நேரத்தில் அழகிய வானத்தை நோக்கிக்கொண்டிருப்பார்: “பரலோகத்தை நோக்கும் பொழுது பூமி எத்தனை நிர்ப்பாக்கியமாகத் தோன்றுகிறது" என்பார். மோட்சத்தை நினைத்து ஆசைப் படாதவன் கிறீஸ்தவனல்ல.
பரிசுத்த கன்னியின் உத்தானம்.
கடவுள் மீது மரியாய் கொண்டிருந்த நேசமானது. உடலினின்று அவர்களது ஆத்துமத்தை அகற்றியது. அவர்களது தூய்மையானது. அழியாமை என்னும் அரச ஆடையால் அவர்களைப் போர்த்தியது. இத்தனை பரிசுத்தமான உடல் கல்லறையில் அழிவது தகுதியல்ல, பாவத்தின் தண்டனையே இந்த அழிவு, கன்னிமாமரி பாவம் செய்தவர்களல்ல. இவ்விதம் சேசு தம்முடைய மாதாவை நித்திய மகிமைக்கு உயர்த்தினார், கற்பு குன்றா உடல்கள் மேலும் இருதயங்கள் மேலும் கடவுளுக்குள்ள நேசத்தைக் கண்டு நாம் அதிசயிப்போமாக. இனிமேலாக நாம் நமது உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருப்போமாக. அற்ப இன்ப சுகத்திற்காக அதை நரகத்திற்கு உள்ளாக்க மாட்டோம். மோட்ச மகிமையை இழக்க மாட்டோம். ஓ பரிசுத்த கற்பே, மரியாயின் உடலை நீ எவ்வளவு அழகுபடுத்தி யிருக்கிறாய்! எங்கள் மதிப்புக்கும் நேசத்திற்கும் நீ எவ்வளவோ உரிமை பெறுகிறாய்? மிக விலையுயர்ந்த திரவியமாக உன்னை நாங்கள் மதித்துக் காப்பாற்றி வரவேண்டும்.
மரியாயி மோட்ச அரசி.
பூமியில் நாம் நம்மைத் தாழ்ந்தும் அளவு பரகதியில் நாம் உயர்த்தப்படுவோம். இது கடவுளது சட்டம் (லூக் 14:17). மரியாயி தன்னை எல்லா சிருஷ்டிகளுக்கும் கீழாகத் தாழ்த்தினார்கள். சுடவுளுடைய தாய் என்ற மட்டில் அரசியான அவர்கள் தன்னை ஓர் அடிமை என்றார்கள். சம்மனசுகளைவிடக் தூய்மை வாய்ந்த அவர்கள், சுத்திகர நாளன்று தேவாலயத்தில் சாதாரண பெண்களைப்போல் போய் நின்றார்கள். அரசர்களின் குமாரத்தியான அவர்கள், சாதாரண பெண்ணைப்போல் தன்னைத் தாழ்த்தி, உழைத்து வந்தார்கள். எல்லோருக்கும் கீழாக அவர்கள் தன்னைத் தாழ்த்தியமையால் எல்லா சிருஷ்டிகளுக்கும் மேலாக அவர்கள் உயர்த்தப்பட உரிமை பெற்றார்கள். இதை அவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளில் கடவுள் செய்தார். மகிமையுடன் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அவர்கள், மேகங்களுக்கு மேல் வெற்றி வீரப்பெண்போல் எழும்புகிறார்கள். சம்மனசுக்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். "வனாந்தரத்திலிருந்து எழும்பி வருகிற இவள் யாரோ?" (உத், சங். 8:8) என்று அவர்களுடைய மகிமையைப் பாடுகிறார்கள். அவர்கள் மோட்சத்தில் நுழைந்ததும் தீர்க்கதரிசிகளும் பிதாப்பிதாக்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். மோயீசன், யாக்கோபின் நட்சத்திரம் என தாம் முன்னறிவித்தவளை வரவேற்கிறார். இசையாஸ், கன்னித் தாய் என தாம் முன்னறிவித்தவளை, எசேக்கியேல், கீழ்த் திசையின் வாசல் எனத் தாம் கூறியவளை, தாவீது மன்னன். அரசரின் வலது பக்கத்தில் நிற்கும் அரசி எனத் தாம் சொன்னவளை, குதூகலத்துடன் வரவேற்கின்றனர். இந்த மகிழ்ச்சிக் கீதங்களின் மத்தியில் மரியாயி தன் தேவகீதத்தை இசைத்து, "என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப் படுத்துகின்றது" என்கிறார்கள். இது தொடக்கமே. மரியாயிக்கென தயாரிக்கப்பட்டிருந்த சிம்மாசனத்தில் கடவுள் மரியாயை வைத்து, அவளது சிரசில் அரச கிரீடத்தைச் சூட்டி, அவள் பரலோக பூலோக அரசி என சம்மனசுக்களுக்கும் மனிதருக்கும் காட்டுகிறார். ஓ என் மாதாவே. ஓ என் அரசியே. ஓ என் ஆண்டவளே, மகிமையில் வீற்றிருக்கும் உம்மை நான் வணங்குகிறேன். என்னை முழுவதும் உமக்கு அர்ப்பணம் செய்து, உமது சிநேக ஆட்சியின் கீழ் என்னை வைத்து விடுகிறேன். நீர் உண்மையாகவே என்னுடைய பாதுகாவலியாகவும், அன்னையாகவும் இருப்பீராக. சமாதானமும் கத்தோலிக்க மறையும், கடவுள்மீது அன்பும், திருச்சபைமீது நேசமும் உமது மன்றாட்டால் எங்கும் அரசுபுரியச் செய்யும். ஆமென்.