Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

August 24 - St. Bartholomew (அர்ச்‌. பர்த்தலோமேயு)

 

ஆகஸ்டு2️4️ம்தேதி

அப்போஸ்தலரான அர்ச்‌. பர்த்தலோமேயு திருநாள்

 


பர்த்தலோமேயு- பார்‌-தோல்மை என்கிற வார்த்தையிலிருந்து வருகிறது; இதனுடைய அர்த்தம்‌- தோல்மை என்பவரின்மகன்என்று பொருள்‌. இவர்‌ , நமதாண்டவரால்தேர்ந்தெடுக்கப்பட்ட 12 அப்போஸ்தலர்களில்ஒருவா்‌. இவரை ஆண்டவர்தாமே, தமது அப்போஸ்தலராகும்படி அழைத்தார்‌. இவர்கலிலேயாவிலுள்ள கானாவூரைச்சேர்ந்தவர்‌. யூத சட்டத்தில்நிபுணத்துவம்பெற்றவர்‌; டாக்டா்பட்டம்பெற்றவர்‌; அப்போஸ்தலரான அர்ச்‌. பிலிப்புவின்நண்பா்‌. இவருக்கு அளிக்கப்பட்ட நத்தனயேல்என்கிற பெயர்மிகப்பொருத்தமான பெயராயிருக்கிறது. ஆனால்முதல்மூன்று சுவிசேஷங்களும்‌, இவரை பர்த்தலோமேயு என்று எப்போதும்அழைக்கின்றன என்பதைப்பற்றி ஆச்சரியப்படலாம்‌; எபிரேய மொழியில்‌, நத்தனயேல்என்கிற பெயரும்மத்தேயு என்கிற பெயரும்‌, சர்வேசுரனுடைய கொடை என்கிற ஒரே அர்த்தமுள்ளவை என்பதாலேயே, இரு அப்போஸ்தலர்களுக்கும்பெயரில்குழப்பம்வரக்கூடாது என்பதற்காகவே, முதல்மூன்று சுவிசேஷகர்கள்‌, எப்போதும்‌, பாத்தலோமேயு என்ற பெயரில்மட்டுமே இவரை அழைத்தனர்‌. அர்ச்‌.  இராயப்பரும்‌, அர்ச்‌. பெலவேந்திரரும்அறிவுறுத்தியதன்பேரில்‌, அர்ச்‌. பிலிப்‌, கிறீஸ்துநாதரைக்கண்டறிந்ததைப்பற்றிய சந்தோஷ செய்தியை அறிவிக்கும்படியாக தன்நண்பரான பர்த்தலோமேயுவை நோக்கித்துரிதமாகச்சென்றார்‌; பிலிப்‌, அவரிடம்‌, “வேதபிரமாணத்திலே, மோயீசனும்‌, தீர்க்கதரிசிகளும்குறித்தெழுதினவரை நாங்கள்கண்டுகொண்டோம்‌; நீயும்வந்து பார்‌!” என்றார்‌.

தம்மை நோக்கி நத்தனயேல்வருகிறதைக்கண்டதும்‌, நமதாண்டவர்‌, “இதோ! கபடற்ற இஸ்ராயேலன்‌!” என்று கூறினார்‌.ஆண்டவர்‌, நத்தனயேலிடம்‌, “பிலிப்உன்னை அழைப்பதற்கு முன்‌, நீ அத்திமரத்தின்கீழ்இருந்தபோதே, நான்உன்னைப்பார்த்தேன்‌!” என்று கூறினார்‌. உடனே, நத்தனயேல்‌, ஆண்டவரிடம்‌, ராபி! நீர்சர்வேசுரனுடைய குமாரன்‌! இஸ்ராயேலின்இராஜா!” என்று கூறினார்‌. (அரு 1:45-49) இவர்‌, பெந்தேகோஸ்தே திருநாளுக்குப்பின்‌, நாகரீகமடையாத மகா மோசமான காட்டுமிராண்டிகள்ஜீவித்த கிழக்கத்திய நாடுகளுக்கு, இந்தியாவிலுள்ள இந்தியா-ஃபெலிக்ஸ்பகுதி வரைச்சென்று, சுவிசேஷத்தைப்பிரசங்கித்தார்‌; மனந்திரும்பிய அநேக அஞ்ஞானிகளுக்கு ஞானஸ்நானம்அளித்தார்‌; அநேகரிடமிருந்து பசாசுக்களைத்துரத்தினார்‌. அர்ச்‌. மத்தேயு எழுதிய சுவிசேஷத்தை இவர்இந்தியாவிற்குக்கொண்டு வந்தார்‌; அர்ச்‌. மத்தேயுவினால் எபிரேய மொழியில், எழுதப்பட்ட இந்த சுவிசேஷத்தை‌, இந்தியாவில்வளர்ந்து வந்த திருச்சபையானது, தன்விலைமதியாத திரவியமாகப்பாதுகாத்து வந்ததை, பின்னாளில்‌, 2ம்நூற்றாண்டில்‌, இப்பகுதிக்கு வந்த அர்ச்‌. பந்தனேயுஸ்குறிப்பிடுகின்றார்‌;

அர்ச்‌. பந்தனேயுஸ்‌, அர்ச்‌. மத்தேயு சுவிசேஷத்தை, தன்னுடன்அலெக்சாண்டிரியாவிற்கு எடுத்துச்சென்றார்‌. அர்ச்‌. பர்த்தலோமேயுவின்இறுதி அப்போஸ்தல அலுவல்‌, ஆர்மீனியா வில்நிறைவேற்றப்பட்டது. அங்கிருந்த அஞ்ஞானிகள்பிடிவாதமாக விக்கிரகங்களை வழிபடுவதில்ஈடுபடுவதைக்கண்டித்து, இவர்சத்திய வேதத்தைப்பிரசங்கித்த போது, இவருக்கு மகிமையான வேதசாட்சிய கிரீடம்சூட்டப்பட்டது! ஆர்மீனியாவில்‌, அந்நாட்டின்அரசனான ஆஸ்டியேஜஸ்என்பவன்‌, அர்ச்‌. பர்த்தலோமேயுவிற்கு மரண தண்டனை விதித்தான்‌; உயிருடன்இவருடைய தோலை உரித்து, கி.பி.71ம்வருடம்இவருடைய தலையை வெட்டிக்கொன்றனர்‌.

அர்ச்‌. பர்த்தலோமேயுவின்பரிசுத்த சரீரம்‌, புதுமையாக தண்ணீரினால்அடித்துச்செல்லப்பட்டு, சிசிலி தீவின்அருகிலுள்ள லிபாரி என்ற ஒரு சிறிய தீவில்சேர்க்கப்பட்டது! இங்குள்ள அர்ச்‌.  பர்த்தலோமேயு கதீட்ரல்தேவாலயத்தில்‌, இவருடைய பரித்தத்தோலின்பெரும்பகுதியும்‌, அநேக அருளிக்கங்களான பரிசுத்த எலும்புகளும்பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன! கிபி 983ம்வருடம்‌, 2ம்ஓட்டோ சக்கரவர்த்தி, இப்பரிசுத்த அருளிக்கங்களை உரோமாபுரியிலுள்ள அர்ச்‌. பர்த்தலோமேயு பசிலிக்காவிற்குக்கொண்டு வந்தார்‌. அர்ச்‌. பர்த்தலோமேயுவின்பரிசுத்த மண்டை ஓட்டின்ஒரு பகுதி, ஜெர்மனியின்பிராங்க்பர்ட்டிலுள்ள கதீட்ரலுக்கு இடமாற்றம்செய்யப்பட்டது! அர்ச்சிஷ்டவருடைய திருக்கரமானது, இங்கிலாந்திலுள்ள கான்டர்பரி கதீட்ரல்தேவாலயத்தில்ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!

இரண்டு முக்கியமான பண்டைக்கால சாட்சியங்கள்அப்போஸ்தலரான அர்ச்‌. பர்த்தலோமேயு இந்தியாவில்ஆற்றிய அப்போஸ்தல அலுவலைப்பறை சாற்றுகின்றன! 4வது நூற்றாண்டைச்சேர்ந்த செசரையாவின்யுசேபியுஸ்என்பவர் எழுதிய குறிப்பேடுகளும்‌, அதே நூற்றாண்டைச்சேர்ந்த அர்ச்‌. ஜெரோம்எழுதிய குறிப்பேடுகளும்‌, 2ம்நூற்றாண்டில்அர்ச்‌. பந்தேனுஸ்இந்தியாவிற்குச்சென்று அப்போஸ்தல அலுவல்புரிந்ததைப்பற்றிய விவரங்களைக்குறிப்பிடுகின்றன! சேசுசபைக்குருவான சங்‌. பெருமாலில்சுவாமியாரும்மோரேஸ்என்பவரும்மேற்கொண்ட ஆய்வுக்கட்டுரை, கொங்கன்கடற்கரையிலுள்ள பம்பாய்ப்பகுதியில்அப்போஸ்தலரான அர்ச்‌. பர்த்தலோமேயு தன்வேத போதக அலுவல்களை ஆற்றினார்!‌ என்று குறிப்பிடுகிறது!

பண்டைக்கால துறைமுக நகரங்களான கல்யாண்‌, தானே, பாஸ்ஸேயின்போன்றவற்றை உள்ளடக்கிய இப்பகுதியில்தான்,‌ இவர்தனது அப்போஸ்தல அலுவலை நிறைவேற்றினார்‌; அநேகரை கிறீஸ்துவர்களாக மனந்திருப்பினார்‌; ஆகவே தான்‌, இப்பகுதி, “இந்தியா-ஃபெலிக்ஸ், அதாவதுபாக்கியமான இந்தியப்பகுதிஎன்று அழைக்கப்படுகிறது! 7ம்நூற்றாண்டின்சரித்திர ஆசிரியர்சொஃப்ரோனியுஸ்என்பவரின்குறிப்பின்படி, அர்ச்‌. பர்த்தலோமேயு, பாக்கியமான இந்தியர்கள்என்று அழைக்கப்பட்டவர்களுக்கு, சுவிசேஷத்தைப்போதித்தார்‌. கிரேக்க பாரம்பரியத்தின்படி, அப்போஸ்தலரான அர்ச்‌. பர்த்தலோமேயு, இந்தியா-ஃபெலிக்ஸ்பகுதிக்குச்சென்றார்‌.  சமஸ்கிருதத்தில்கல்யாண்என்கிற வார்த்தைக்கு வளமை, அல்லது சந்தோஷம்என்று அர்த்தம்‌; இலத்தினில்‌, ஃபெலிக்ஸ்என்ற வார்த்தைக்கு சந்தோஷம்அல்லது பாக்கியம்என்று அர்த்தம்‌.

ஆகவே தான்‌, பண்டைக்கால துறைமுக நகரங்களான கல்யாண்‌, தானே, பாஸ்ஸேயின்‌, சலேஸ்ஸாடே மற்றும்பாம்பே தீவுகள்அடங்கிய பகுதியைப்பற்றி அயல்நாட்டவர்குறிப்பிடும்போது, இந்தியா-ஃபெலிக்ஸ்பாக்கியமான இந்தியப்பகுதி) என்று குறிப்பிடுகின்றனர்‌. இந்தியர்களுக்கு, சந்தோஷமான அல்லது பாக்கியமான இந்தியர்கள்என்கிற அடைமொழியும்அளிக்கப்பட்டது.  இந்தியாவில்கிறீஸ்துவ வேதம்‌, இந்தியா-ஃபெலிக்ஸ்பகுதியிலுள்ள துறைமுக நகரங்களைச்சுற்றிலும்‌, முதல்நூற்றாண்டிலேயே, வேகமாகப்பரவி  வளர்ந்தது! என்பதை 2ம்நூற்றாண்டில்‌, அதாவது கிபி 189ம்வருடம்‌, இப்பகுதிக்கு வந்த அர்ச்‌. பந்தேனுஸ்குறிப்பிடுகின்றார்‌.  பின்னாளில்இந்தியாவில்இஸ்லாமிய மதம்‌, பரவியபோது, அரபிக்கடலின்எதிர்ப்புறத்திலிருந்த துலுக்க நாடுகளின்கலிஃபாக்களை, வளமை நிறை இந்தியா-ஃபெலிக்ஸ்பகுதி தன்பக்கமாகக்கவர்ந்திழுத்ததால்‌, இப்பகுதியையும்துலுக்கர்கள்கைப்பற்றினர்‌. இக்காலத்தில்‌, சக்திய கத்தோலிக்க வேதம்இப்பகுதியில்மறையலாயிற்று! போர்த்துக்கீசிய படையினரின்சிலுவைப்போர்உணர்விற்கு நாம்நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்‌! 1533ம்வருடம்‌, ஜனவரி 20ம்தேதியன்று, போர்த்துக்கல்‌, பாஸ்ஸேயினில்நிகழ்ந்த போரில்மகமதியரைத்தோற்கடித்து வீழ்த்தி, இந்தியா-ஃபெலிக்ஸ்பகுதி, கொடூர மூர்க்கர்களான மகமதியரின்அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டது!

அப்போஸ்தலரான அர்ச்‌. பர்த்தலோமேயுவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

August 23 - ST. PHILIP BENIZI - அர்ச்‌. பிலிப்‌ பெனிசயார்

 

ஆகஸ்டு2️3️ம்‌ தேதி

ஸ்துதியரான அர்ச்‌. பிலிப்பெனிசயார்திருநாள்

 


இவர்‌, 1233ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 15ம்‌ தேதியன்று, இத்தாலியின்‌, ஃபுளாரன்சில்‌ பிறந்தார்‌. மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மகிமை மிகு மோட்சாரோபனத்‌ திருநாளன்று பிறந்தார்‌; அதிலும்‌, விசேஷமாக, அந்த வருடம்‌ இந்தத்‌ திருநாளன்று மகா பரிசுத்த தேவமாதாவின்‌ ஏழு ஊழியர்‌ துறவற சபையை ஸ்தாபித்த அந்த ஏழு அர்ச்சிஷ்டவர்களுக்கு முதன்‌ முதலாக, மகா பரிசுத்த தேவமாதா தாமே காட்சியளித்து, இத்துறவற சபையை ஸ்தாபிக்‌கும்படி கூறினார்கள்‌; இதே நாளில்‌ பிறந்த அர்ச்‌. பிலிப்‌ பெனிசியாரும்‌ பின்னாளில்‌, மகா பரிசுத்த தேவ மாதாவின்‌ ஏழு ஊழியர்‌ சபையில்‌ சேர்ந்து, அதன்‌ தலைமை அதிபராகவும்‌, ஆனார்!‌ என்பது குறிப்பிடத்தக்கது!

இளம்‌ வயதில்‌ ஏற்படும்‌ சகல பாவசோதனைகள்‌ மத்தியில்‌, இவர்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ ஊழியராக வேண்டும்‌ என்று ஆசித்தார்‌. அதற்கு தன்‌னுடைய தகுதியற்றதனத்தின்‌ மட்டில்‌ அஞ்சியதால்‌ மட்டுமே, இவர்‌, தன்‌ தந்தையின்‌ ஆவலை நிறைவேற்றும்படியாக, பதுவாவிலுள்ள மருத்துவக்‌ கல்லூரியில்‌ படித்து மருத்துவரானார்‌. இவர்‌,தனது தகுதியற்றதனத்தின்‌ மீது கொண்டிருந்த சந்தேகத்தினால்‌,  நீண்ட காலம்‌ தேவ ஊழியத்தில்‌ நுழைவதற்குத்‌ தாமதம்‌ ஏற்பட்டது. அதன்‌ காரணமாக சோர்வுற்ற நிலையிலிருந்தபோது, ஒரு நாள்‌, ஃபுளாரன்ஸ்‌ நகரில்‌ மகா பரிசுத்த தேவமாதாவின்‌ ஏழு ஊழியர்‌ சபை மடத்தின்‌ சிற்றாலயத்தில்‌, திவ்ய பலிபூசை நேரத்தின்போது,மகா பரிசுத்த தேவமாதா தாமே, இவருக்குக்‌ காட்சியளித்து, தம்முடைய இந்த துறவற சபையில்‌ சேரும்படி, கட்டளையிட்டார்கள்‌.அர்ச்‌. பிலிப்‌, உடனே, இத்துறவற சபையில்‌, சேர்ந்தார்‌; இருப்பினும்‌, தன் தகுதியற்றதனத்தின்‌ காரணமாக ஒரு பொதுநிலைச் சகோதரராகவே சேரத்‌ துணிந்தார்‌.

கல்வியில்,‌ தான்‌ பெற்றப்‌ பட்டங்களைப்‌ பற்றியோ, மருத்துவரானதைப்‌ பற்றியோ, மடத்தின்‌ அதிபரிடம்‌, ஒன்றும்‌ வெளிப்படுத்தாமல்‌, தன்‌ பாவங்களுக்காக, இவ்வெளிய தாழ்மையான நிலைமையிலேயே தபசு செய்ய ஆசித்தார்‌. ஒரு சமயம்‌, இவருடைய மடத்திற்கு வந்த இரண்டு அர்ச்‌. சாமிநாத சபைத்‌ துறவியருடன்‌ இவர்‌ பயணம்‌ செய்தபோது, அந்நாள்‌ வரையிலும்‌ இவர்‌ வெற்றிகரமாக மறைத்து வைத்திருந்த மாபெரும்‌ திறமைகளையும்‌ , ஞானத்தையும்‌, அறிவையும்‌, இவ்விரு துறவியரும்‌ கண்டறிந்தனர்‌. உடனே, இவரைப்‌ பற்றி, இவ்விரு சாமிநாத துறவியரும்‌, இவருடைய அதிபர்களிடம்‌ கூறினர்‌. உடனே, இவரை குருப்பட்டத்திற்காக தயாரிக்கும்படி, அதிபர்‌ கூறினார்‌; அதன்படி,1258ம்‌ வருடம்‌, சியன்னா நகரில்‌ , குருப்பட்டம்‌ பெற்றார்‌. ஒரு குருவானவராக அர்ச்‌. பிலிப்‌ பெனிசியார்‌, மாபெரும்‌ நன்மையான காரியங்களைச்‌ செய்தார்‌. கருத்துவேறுபாடுகளால்‌ பகையிலிருந்த நக ரங்களுக்கிடையே , சமாதானத்தை ஏற்படுத்தினார்‌.

ஒரு சமயம்‌, ஏறக்குறைய நிர்வாணமாயிருந்த ஒரு தொழு நோயாளியைச்‌ சந்தித்தபோது, இவரிடம்‌ பணம்‌ ஏதுமில்லாமலிருந்ததால்‌, தனது மேலங்கியை அந்நோயாளிக்குக்‌ கொடுத்தார்‌. அந்த அங்கியை அந்த நோயாளி அணிந்துகொண்டவுடன்‌, அந்‌நேரமே, புதுமையாக தொழுநோய்‌ முற்றிலுமாகக்‌ குணமடைந்தது! இதற்குப்‌ பின்‌,மிக துரிதமாக இவருக்கு மகிமைகள்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக பின்தொடர்ந்து வந்தன! இவர்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ ஏழுஊழியர்‌ துறவற சபையின்‌ பொது தலைமை அதிபரானார்‌. ஆனால்‌, இவரை புதிய பாப்பரசராகத்‌ தேர்ந்தெடுக்கப்போகும்‌ சமயத்தில்‌, இவர்‌ தூனியாடோ என்ற மலைக்கு ஓடிப்போனார்‌. புதிய பாப்பரசராக 10ம்‌ கிரகோரியார்‌ தேர்ந்தெடுக்‌ கப்படும்‌ வரை, இவர்‌ அந்த மலையிலேயே ஒளிந்திருந்தார்‌.

அர்ச்‌. பிலிப்‌ பெனிசியாரின்‌ தேவசிநேகத்தை மூட்டக்கூடிய தியானப்‌ பிரசங்கங்களால்‌, உள்நாட்டுப்‌ போர்களால்‌ அலைக்கழிக்கப்பட்டிருந்த இத்தாலி நாடு முழுவதிலும்‌, சமாதானத்தையும்‌ அமைதியையும்‌ ஏற்படுத்தினார்‌. ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கும்‌ சென்று, அநேகரை மனந்திருப்பினார்‌. சில இடங்களில்‌ துஷ்ட எதிரிகளால்‌ சாட்டையடிகள்‌ பட்டார்‌. இத்தாலியில்‌ ஃபோர்லி என்ற இடத்திற்கு ஒரு சமயம்‌ இவர்‌ அனுப்பப்பட்டபோது, அச்சமயம்‌. சக்கரவர்த்திக்கும்‌ பாப்பரசருக்கும்‌ கருத்து வேறுபாடு நிலவியது. இவர்‌ அங்கு பிரசங்கித்த போது, பெரிகிரின்‌ லாசியோசி என்ற 18 வயது இளைஞன்‌, இவரைத் தாக்கி அடித்தான்‌; உடனே, அர்ச்சிஷ்டவர்‌, தனது மறு கன்னத்தையும்‌, அந்த இளைஞனுக்குக்‌ காண்பித்தார்‌; இவருடைய தீரமிக்க இந்த உத்தமமான புண்ணிய செயலினால்‌ , பெரிகிரின்‌ பெரிதும்‌ கவர்ந்திழுக்கப்பட்டவராக, மனந்திரும்பி, இறுதியில்‌ இதே துறவற சபையில்‌ சேர்ந்து துறவியானார்‌; பின்னர்‌ ஒரு அர்ச்சிஷ்டவருமானார்‌, அர்ச்‌. பெரிகிரினார்‌, புற்றுநோயாளிகளுக்குப்‌ பாதுகாவலராகத்‌ திகழ்கிறார்‌. இவருடைய திருநாள்‌ - மே 1ம்‌ தேதி அனுசரிக்கப்படுகிறது.

லியோன்ஸ்‌ நகர பொதுச்சங்கத்தின்போது, பிலிப்‌ கூடியிருந்த மேற்‌றிராணியார்களிடம்‌, பெந்தேகோஸ்தே திருநாளின்போது, பலமொழி வரம்‌ பெற்று, அப்போஸ்தலர்கள்‌ பேசியதைப்போலவே, பேசினார்‌; மேற்றிராணிமார்களும்‌, அவரவருடைய மொழிகளில்‌ , இவருடைய பிரசங்கத்தைக்‌ கேட்‌டனர்‌. இவ்வளவு மகிமைகளுக்கும்‌ மத்தியில்‌, அர்ச்‌. பிலிப்,‌ மிகக்‌ கடினமான தபசைக்‌ கடைபிடித்தார்‌. எந்நேரமும்‌ சர்வேசுரன்‌ முன்பாக, இடைவிடாமல்‌ தனது ஆத்துமத்தைப்‌ பரிசோதித்துக்‌ கொண்டிருந்தார்‌.

 இவருடைய மரணத்தருவாயில்‌, மகா பரிசுத்த தேவமாதா, இவருக்குக்‌ காட்சியளித்தார்கள்‌; உடனே, அர்ச்‌. பிலிப்‌ மகா மோட்சானந்த சந்தோஷத்துடன்‌, தனது இரு கரங்களையும்‌ பரலோகத்தை நோக்கி உயர்த்தியபடி, தனது ஆத்துமத்தை, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ திருக்கரங்களில்‌ ஒப்படைத்ததைப்போல்‌ ஒரு பெருமூச்சை விட்டுப்‌ பாக்கியமாய்‌ மரித்தார்‌. மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மோட்சாரோபனத்‌திருநாளுக்குப்‌ பின்‌ வரும்‌ எட்டாம்‌ நாள்‌ ஆகஸ்டு 22ம்‌ தேதியன்று, 1285ம்‌ வருடம்‌ பாக்கியமாய்‌ மரித்தார்‌. 10ம்‌ இன்னசன்ட்‌ பாப்பரசரால்‌ முத்திப்பேறு பட்டம்‌ அளிக்கப்பட்டது; 1671ம்‌ வருடம்‌, ஏப்ரல்‌ 12ம்‌ தேதியன்று, 10ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசர்‌ இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்‌ அளித்தார்‌. 1284ம்‌ வருடம்‌, அர்ச்‌. பிலிப்‌ பெனிசியார்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ ஏழு ஊழியரின்‌ துறவற சபையின்‌ துறவியரை, முதன்‌ முதலாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்‌.

ஸ்துதியரான அர்ச்‌. பிலிப்‌ பெனிசியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்‌!

 

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

August 22 - Immaculate Heart of Mary - அர்ச்‌. மரியாயின்‌ மாசற்ற இருதயம்

 

ஆகஸ்டு 2️2️ம்‌ தேதி

மகா பரிசுத்த தேவமாதாவான
அர்ச்‌. மரியாயின்மாசற்ற இருதயம்

        


    மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்தி முயற்சி, திருச்சபையின்‌ சரித்திர ஆசிரியர்களின்‌ குறிப்பீடுகள்‌ மூலம்‌, 12வது நூற்றாண்டு முதல்‌ அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருச்சபையின்‌ பரிசுத்த எழுத்தாளர்களான அர்ச்‌. ஆன்செல்ம்‌, அர்ச்‌. கிளார்வாக்ஸ்‌ பெர்னார்டு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்தியைப்‌ பற்றி எழுதியிருக்கின்றனர்‌. அர்ச்‌.  சியன்னா பெர்னர்தீன்‌ (1380-1484), "தேவ சிநேகத்தினுடைய அக்கினிச்‌ சூளையி லிருந்து புறப்படும்‌ அக்கினிச் சுவாலைகள்‌ போல்‌, மகா பரிசுத்த தேவ மாதா, தமது மாசற்ற இருதயத்திலிருந்து புறப்பட்ட மகா அத்தியந்த தேவ சிநேகத்தினுடைய வார்த்தைகளால்‌, பேசினார்கள்‌, என்று எழுதியுள்ளார்‌.

            நமதாண்டவரின்‌ மகா பரிசுத்த திவ்ய திரு இருதயத்தின்‌ திருநாளை அகில திருச்சபையிலும்‌ கொண்டாடத்‌ துவங்குவதற்கு இருபது வருடங்களுக்கு முன்பாக, அர்ச்‌. யூட்ஸ்‌ அருளப்பரும்‌ அவருடைய துறவியர்களும்‌, 1643ம்‌ வருடம்‌, பிப்ரவரி 8ம்‌ தேதியன்று, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ திருநாளைக்‌ கொண்டாடத்‌ துவக்கினர்‌. 1799ம்‌ வருடம்‌, 6ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, ஃபுளாரன்ஸ்‌ நகரில்‌ சிறைக்கைதியாயிருந்தபோது, பாலர்மோ நகர மேற்றராணியாருக்கு, அவருடைய மேற்றிராசனத்திலிருந்த சில தேவாலயங்களில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மகா தூய இருதயத்தின்‌ திரு நாளைக்‌ கொண்டாடுவதற்கு அனுமதியளித்தார்‌. 1805ம்‌ வருடம்‌, 7ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, ஒரு புதிய சலுகையை அளித்தார்‌; அதன்‌ காரணமாக இப்பக்திமுயற்சி, உலகில்‌ பெரும்‌ பகுதிகளில்‌ பரவி அனுசரிக்கப்பட்டது.

            மகா பரிசுத்த தேவமாதாவின்‌ அற்புதப்பதக்கத்தைப்‌ பற்றி மகா பரிசுத்த தேவமாதா தாமே, பாரீஸிலுள்ள அர்ச்‌.  வின்சென்‌ட்‌ தே பவுலின்‌ பிறா்சிநேகக்‌ கன்னியர்‌ சபைக்‌ கன்னியாஸ்திரியான அர்ச்‌. கத்தரீன்‌ லபூரேவிற்குக்‌ காட்சியளித்து, வெளிப்படுத்தியதும்‌, பாரீஸிலுள்ள ஜெயராக்கினி மாதா தேவாலயத்தில்‌, பாவிகளின்‌ அடைக்கலமான மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற இருதயத்தின்‌ மீதான தலைமை பக்திசபை ஸ்தாபிக்கப்பட்டதுமாகிய இவ்விரு பரலோக நிகழ்வுகளும்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்திமுயற்சி‌, மிக உத்வேகமாகவும்‌ தீவிரமாகவும்‌, துரிதமாகவும்‌  மற்ற எல்லா நாடுகளிலும்‌ பரவுவதற்குக்‌ காரணமாயின!

            1855ம்‌ வருடம்‌, ஐூலை 21ம்‌ தேதியன்று, திருச்‌சபையின்‌ உரிமைகள்‌ ஆணையம்‌, இறுதியாக, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மகா தூய இருதயத்தின்‌ திரு நாளுக்கான திவ்ய பலி பூசை ஜெபங்கள்‌ மற்றும்‌ கட்‌டளை ஜெபங்களை அங்கீகரித்தது! இருப்பினும்‌, இத்திருநாளை அகில திருச்சபையும்‌, அனுசரிப்பதற்குக்‌ கட்டாயமாக்காமல்‌ விட்டது.

            1830ம்‌ வருடம்‌ , அர்ச்‌. கத்தரீன்‌ லபூரேவிற்கு அற்புதப்பதக்கத்‌தைப்‌ பற்றி அறிவித்த மகா பரிசுத்த தேவமாதாவின்‌ காட்சிகளுக்கும்‌, பாத்திமாவில்‌, 1917ம்‌ வருடம்‌ (மே 13ம்‌ தேதி முகல்‌ அக்டோபர்‌ 13ம்‌ தேதி வரை) மகா பரிசுத்த தேவமாதா, லூசியா, பிரான்சிஸ்கோ, ஐசிந்தா என்ற மூன்று சிறுவர்களுக்கு அளித்த காட்சிகளுக்கும்‌ பிறகு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ மீதான பக்தி மாபெரும்‌ விதமாக, தீவிரமாக உலகம்‌ முமுவதும்‌ பரவியது! 1917ம்‌ வருடம்‌ ஜூலை 13ம்‌ தேதியன்று, மகா பரிசுத்த தேவமாதா, பாத்திமாவில்‌, பூமியின்கீழ்‌ வயிற்றுப்‌ பகுதியிலுள்ள நரகத்தைக்‌ காட்சியில்‌ காண்பித்த பிறகு, அம்மூன்று சிறுவர்களிடம்‌, “நீசப்பாவிகளைக்‌ காப்பாற்றும்படியாக, சர்வேசுரன்‌, உலகத்தில்‌ என்‌ மாசற்ற இருதயத்தின்‌ மீதான பக்தியை ஏற்படுத்த ஆசிக்கின்றார்‌!” என்று அறிவித்தார்கள்‌. ஜெபம்‌, ஜெபமாலை, தபம்‌, பரிகாரம்‌, ஆண்டவருக்கும்‌ தேவமாதாவிற்கும்‌ எதிராக மனிதர்கள்‌ கட்டிக்கொள்கிற பாவாக்கிரமங்களுக்கும்‌, நிந்தைகளுக்கும்‌, அவசங்கைகளுக்கும்‌ பரிகாரம்‌ செய்ய  வேண்டும்‌ என்பதே, பாத்திமா காட்சிகளுடைய செய்திகளின்‌ சாராம்சமாகும்‌.



            1942ம்‌ வருடம்‌, பாத்திமா காட்சிகளின்‌ 25ம்‌ வருடாந்திர தினத்தில்‌, 12ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, உலகத்தை மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்திற்கு அர்ப்பணம்‌ செய்தார்‌. அதே வருடத்தில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திருஇருதயத்தின்‌ திருநாளாகக்‌ கொண்டாடுவதற்கு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மோட்சாரோபனத் திருநாளுடைய எட்டாம்‌ நாளாகிய ஆகஸ்டு 22ம்‌ தேதியைத்‌ தேர்ந்தெடுத்தார்‌. 1944ம்‌ வருடம்‌, மே 4ம்‌ தேதியன்று, 12ம்‌ பத்திநாதர்‌ பாப்பரசர்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயத்தின்‌ திருநாளை ஆகஸ்டு மாதம்‌ 22ம்‌ தேதியன்று வருடந்தோறும்‌, அகில உலகத்‌ திருச்சபையும்‌ கொண்டாடுவதற்கு அனுமதியளித்தார்‌.

மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மாசற்ற திரு இருதயமே! எங்கள்‌ இரட்‌சணியமாயிரும்‌!

புதன், 21 ஆகஸ்ட், 2024

August 21 - St. Jane Frances de Chantal - அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்

 

ஆகஸ்டு 2️1️ம்‌ தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மினவுதல்‌ சபையின்‌ ஸ்தாபகரும்‌ விதவையுமான
அர்ச்‌.ஜேன்பிரான்செஸ்தே ஷாந்தால்


 

            ஜேன்‌ பிரான்செஸ்‌ ஃப்ரெமாய்ட்‌ 1572ம்‌ வருடம்‌,பிரான்சிலுள்ள பா்‌ கண்டியில்‌ பிறந்தாள்‌. இவளுடைய தாயார்‌, கிளார்வாக்ஸின்‌ அர்ச்‌. பெர்னார்டுவின்‌ பாரம்பரிய வம்சாவளியைச்‌ சேர்ந்தவர்கள்‌; இவளுக்கு ஒன்றரை வயதானபோது, இவளுடைய தாயார்‌, அடுத்த குழந்தையைப்‌ பிரசவித்தபோது, இறந்து போனார்கள்‌.  ஒரு புராட்டஸ்டன்டு பதிதன்‌, இவளை திருமணம்‌ செய்ய முன்‌  வந்தபோது, சர்வேசுரனுக்கும்‌ அவருடைய திருச்சபைக்கும்‌ எதிரியாயிருக்கிற பதிதனை நான்‌ திருமணம்‌ செய்யமாட்டேன்‌, என்று தீர்மானமாகக்‌ கூறி மறுத்துவிட்டார்கள்‌. 1592ம்‌ வருடம்‌, பிரான்ஸ்‌ அரசருடைய மெய்காப்பு வீரரும்‌, அரசவை உறுப்பினருமான கிறிஸ்டோஃபா்‌ ராபுடின்‌ -ஷாந்தால்‌ என்கிற ஒரு பிரபுவை, இவள்‌, திருமணம்‌ செய்து கொண்டாள்‌. 1601ம்‌ வருடம்‌, இவளுடைய கணவர்‌ துப்பாக்‌கிச்சூட்டின்போது ஏற்பட்ட ஒரு விபத்தில்‌, கொல்லப்பட்டார்‌.ஜேன்‌ 28 வயதில்‌ விதவையானாள்‌.

            4 குழந்தைகள்‌ பிறந்திருந்தன. மறு திருமணம்‌ செய்துகொள்ள உறவினர்களும்‌, பணிவிடைக்காரர்களும்‌ வற்‌புறுத்தி, கணவரை இழந்த துயரத்திலிருந்த இவளுடைய வேதனையை இன்னும்‌ கூடுதலாக அதிகரிக்கச்‌ செய்தனர்‌. 1604ம்‌ வருடம்‌, ஜேன்‌, ஜெனிவா மேற்றிராணியாரான, அர்ச்‌. பிரான்சிஸ்‌ சலேசியாரைச்‌ சந்தித்தாள்‌. டிஜானில்‌ உள்ள செயிண்ட் சாப்பல் ‌ தேவாலயத்தில்‌ பிரசங்கம்‌ நிகழ்த்தியபோது, அவரைச்‌ சந்தித்தாள்‌; அவரையே தனது ஆன்ம குருவாகத்‌ தெரிந்துகொண்டாள்‌.பின்னாளில்‌, இவருடைய ஆதரவின்‌ துணையுடனும்‌, தன்‌ தந்தையின்‌ ௨தவியுடனும்‌, போர்ஜஸ்‌ நகர அதிமேற்றிராணியாராயிருந்த தன்‌ சகோதரரின்‌ உதவியுடனும்‌, தனது நான்கு பிள்ளைகளையும்‌ உருவாக்கி, வளர்த்து ஆளாக்கியபிறகு, ஆன்னஸி என்ற இடத்திற்கு, மகா பரிசுத்த தேவமாதாவின்‌ மினவுதல்‌ கன்னியர்‌ சபையை ஸ்தாபிப்பதற்காகச்‌ சென்றாள்‌.

            இந்த இடத்தில்‌, 1610ம்‌ வருடம்‌, ஐூன்‌ 6ம்‌ தேதி, மகா பரிசுத்த தமதிரித்துவத்தின்‌ திருநாளன்று, மகா பரிசுத்த தேவ மாதாவின்‌ மினவுதல்‌ கன்னியர்‌ சபை, திருச்சபையின்‌ அங்கீகாரத்துடன்‌ ஸ்தாபிக்கப்பட்டு துவக்கப்பட்டது! வியாதியினாலும்‌ வயதின்‌ காரணத்தினாலும்‌, மற்ற கன்னியர்‌ துறவற சபைகளில்‌ ஏற்றுக்கொள்‌ளப்படாத பெண்கள்‌, இச்சபையில்‌ எற்றுக் கொள்ளப்பட்டனர்‌.  ஜேன்‌ , பிரான்ஸ்‌ மற்றும்‌ இத்தாலி நாடுகளில்‌ அயராத பயணத்தை மேற்கொண்டு, அநேக மினவுதல்‌ சபைக்‌ கன்னியர்‌ மடங்களை ஸ்தாபித்தாள்‌. இவள்‌ மரித்தபோது, ஸ்தாபிக்கப்பட்டிருந்த 86 மினவுத‌ல் கன்னியர்‌ சபை மடங்களே, இவளுடைய உன்னதமான அயரா முயற்சிகளின்‌ வெற்‌றிக்கு, அத்தாட்சியாயிருக்கின்றன!

            ஜேன்‌, தனது எல்லா மினவுதல்‌ சபைக்‌ கன்னியர்‌ மடங்களிலும்‌  அறிவிக்கப்பட வேண்டிய ஒரு சுற்றறிக்கையை, தன்‌ உதவியாளரிடம்‌ எழுதும்படிச்‌ செய்தபிறகு, உறுதியான விசுவாச முயற்சி செய்தாள்‌; இறுதி தேவதிரவிய அனுமானமாகிய மகா பரிசுத்த தேவநற்கருணையை மிகுந்த பக்திபற்றுதலுடன்‌ உட்கொண்டாள்‌; அவஸ்தைப்பூசுதலை பக்தியுடன்‌ பெற்றுக்‌ கொண்டாள்‌; திவ்ய சேசுநாதரின்‌ மகா பரிசுத்தத்‌ திருநாமத்தை மிகுந்த பக்திபற்றுதலுடன்‌ மெதுவாக , நிதானமாக மூன்று முறை உச்சரித்தபடி, 1641ம்‌ வருடம்‌ டிசம்பர்‌ 13ம்‌ தேதியன்று, பாக்கியமாய்‌ மரித்தாள்‌. இவளுடைய பரிசுத்த ஆத்துமம்‌, ஒரு நெருப்பின்‌ கோளமாக மேலே உயர்ந்து மோட்சத்தை நோக்கிப்‌ பறந்து சென்றதை, அர்ச்‌.பிரான்சிஸ்‌ சலேசியாருக்குப்‌ பிறகு, இவளுடைய ஆன்மகுருவாயிருந்த அர்ச்‌.வின்சென்ட்‌ தே பவுல்‌ கண்டார்‌. அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தாலுக்கு, 14ம்‌ ஆசிர்வாதப்பா்‌ பாப்பரசரால்‌, 1751ம்‌ வருடம்‌, நவம்பர்‌ 21ம்‌ தேதி முத்திப்‌ பேறுபட்டமளிக்கப்பட்டது; 13ம்‌ கிளமென்ட்‌ பாப்பரசர்‌, 1767ம்‌ வருடம்‌ ஜூலை 16ம்‌ தேதியன்று அர்ச்சிஷ்டப்பட்டம்‌ அளிக்கப்பட்டது.

“நரகமானது, திறமைமிக்கவர்களாக ஜீவித்த மனிதர்களால்‌ நிறைந்தி ருக்கிறது! ஆனால்‌, மோட்சமானது, ஆற்றல்மிக்கவர்களாக ஜீவித்த மனிதர்களைக்‌ கொண்டிருக்கிறது -🏻 அர்ச்‌. ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்‌

“ஆனால்”‌, “ஒருவேளை என்று எவ்வித நிபந்தனைகளுமில்லாமல்‌, சர்‌ வேசுரனுடைய திருச்சித்தம்‌, இன்றும்‌, நாளைக்கும்‌, எல்லா காலத்திற்கு மாக நிறைவேற்றப்படும்! -🏻 அர்ச்‌. ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தால்‌                                                                             

அர்ச்‌.ஜேன்‌ பிரான்செஸ்‌ தே ஷாந்தாலே! எங்களுக்காக வேண்டிக்‌ கொள்ளும்!

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

August 20 - St. Bernard - அர்ச்‌. கிளார்வாக்ஸ்‌ பெர்னார்டு

 ஆகஸ்டு2️0️ம்தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமைகளை ஸ்துதித்துப்பாடிய சிதார்இசைக்கருவி என்று அழைக்கப்பட்டவரும்‌,ஸ்துதியரும்வேதபாரகருமான அர்ச்‌.  கிளார்வாக்ஸ்பெர்னார்டு திருநாள்

“Nun Quam satis De Maria”- 🏻+ St. Bernard of Clairvaux

மகா பரிசுத்த தேவமாதாவைப் பற்றி யாராலும்ஒருபோதும்போதிய அளவிற்குப்புகழ முடியாது!” ”- 🏻அர்ச்‌. பொர்னார்டு

அர்ச்‌. பொர்னார்டு, 12ம்நூற்றாண்டின்முற்பகுதியில்‌, தலைமை ஏற்று நடத்தக்கூடிய திருச்சபையின்மாபெரும்பிதாப்பிதாக்களில்ஒருவராகவும்‌, எல்லா காலத்திற்குமான மாபெரும்ஞான ஆசிரியர்களில்ஒருவராகவும்திகழ்ந்தார்‌.  இவர்‌ 1091ம்வருடம்பிரான்சிலுள்ள பர்கண்டியில்ஃபோன்டேன்ஸ்என்ற ஒரு கோட்டையில்பிறந்தார்‌. இவர்கொண்டிருந்த விசேஷ அறிவாற்றலின்உத்வேகத்தைக்கண்டு, இவருடைய பெற்றோர்கள்இவர்மட்டில்மிக உயரிய நம்பிக்கைகளைக்கொண்டிருந்தனர்‌; உலகம்இவருக்கு முன்பாக மாபெரும்ஒளியுடனும்‌,புன்னகைத்தபடியும்தோன்றியது! ஆனால்‌, 22வயதானபோது, அர்ச்‌. பெரனார்டு, இராணுவத்தை விட்டு வெளியேறினார்‌; சிட்டோவின்மடாதிபதியான, அர்ச்‌. ஸ்டீஃபன்ஹார்டிங்கிடம்ஞான ஆலோசனையைப்பெற்றபிறகு, 1098ம்வருடம்புதிகாக ஸ்தாபிக்கப்பட்டு, துவக்கப்பட்டிருந்த சிஸ்டர்ஷியன்துறவற மடத்தில்சேர தீர்மானித்தார்‌; அச்சிறிய துறவறசபை அச்சமயம்‌, பல இன்னல்களுக்கிடையே அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

இத்துறவறசபை, அர்ச்‌. ஆசிர்வாதப்பர்துறவறசபையின்ஆரம்ப கால கடின தபசையும்ஒழுங்குவிதிமுறைகளையும்அனுசரிக்கும்படியாக, துவக்கப்பட்டிருந்தது.இத்துறவற சபையின்விதிமுறைகள்‌,அர்ச்‌. பெர்னார்டை மிகவும்கவர்ந்திழுத்தது; அதன்காரணமாக, இவர்‌, தனது சகோதரர்கள்ஐந்து பேரையும்மற்றும்‌, தனது நண்பர்கள்‌ 25 பேரையும்‌,இத்துறவற சபையில்சேரும்படி பெருமுயற்சி செய்துத்தூண்டினார்‌. அதன்படி, இவர்தன்சகோதரர்கள்‌, மற்றும்நண்பர்கள்என்று 30 பேருடன்‌ 1113ம்வருடம்‌, சிட்டோவிலுள்ள சிஸ்டர்ஷியன்துறவற மடத்தில்சேர்ந்தனர்‌. அர்ச்‌. பெர்னார்டு, தன்கடைசி இளைய சகோதரரான நிவார்டுவை , தனிமையில்வயோதிப வயதிலிருக்கும்தந்தையை கவனித்துக்கொள்ளும்படி விட்டுச்சென்றார்‌. ஏனெனில்இவருடைய தாயார்ஏற்கனவே காலமாயிருந்தார்கள்‌; மேலும்‌, அண்ணன்மார்கள்‌, அந்த கடைசி தம்பி நிவார்டுவிடம்‌,” இனி நம்குடும்பத்தின்சகல ஆஸ்திகளுக்கும்நீ மட்டும்தான்ஒரே வாரிசு!”, என்று கூறிச்‌  சென்றனர்‌; அதற்கு, நிவார்டு, தன்அண்ணன்பெர்னார்டுவிடம்‌, “ஆம்‌.நீங்கள்எனக்கு உலகத்தை விட்டுச்செல்கிறீர்கள்‌. ஆனால்‌, நீங்கள்‌ , மோட்சத்தை உங்களுக்கு மட்டும்வைத்துக்கொள்கிறீர்கள்‌! இது நீதி என்று கருதுகிறீர்களா?” என்று கூறிவிட்டு, அவரும்‌, அவர்களுடன்சிஸ்டர்ஷியன்மடத்திற்குள்நுழைந்தார்‌; இறுதியில்‌, அவர்களுடைய வயது முதிர்ந்த தந்தையும்‌, அவர்களுடன்சேர்ந்து கொண்டார்‌!

மூன்று வருட காலத்திற்குள்‌, அர்ச்‌. பெர்னார்டு, கிளார்வாக்ஸிலுள்ள மூன்றாவது சிஸ்டர்ஷியன்மடத்தின்மடாதிபதியாக நியமிக்கப் பட்டார்‌. இளம்வயதிலேயே மடாதிபதியான அர்ச்‌.  பெர்னார்டு, மகா பரிசுத்த தேவமாதாவின்மங்கள வார்த்தையின்பரம இரகசியத்திருநாளுக்கான ஞான தியானப்பிரசங்கங்களை எழுதினார்‌. இது, இவரை விசேஷவரம்பெற்ற ஒருமாபெரும்ஞான ஆசிரியரும்எழுத்தாளருமாக திருச்சபைக்குக்காண்பித்தது! அதே சமயம்‌, “மகா பரிசுத்த தேவமாதாவின்சித்தாரா இசைக்கருவி!” என்றும்‌, இவர்அழைக்கப்படக்காரணமாயிற்று! மேலும்‌, ஆண்டவருக்கும்‌, மனுக்குலத்திற்கும்இடையே மத்தியஸ்தராக மகா பரிசுத்த தேவமாதா ஆற்றும்உன்னதமான அலுவல்பற்றி, இவர்தெளிவித்துக்காண்பித்த தியானக்கருத்துக்கள்,‌ இவரை மகா பரிசுத்த தேவமாதாவின்வேதபாரகராக அடையாளம்காண்பித்தன!

 இவர்எழுதிய ஞான நூல்களும்‌, இவருடைய அசாதாரண தனிப்பட்ட வசீகரமான உன்னத கத்தோலிக்கக்குணாதிசயங்களும்‌, அநேகரை, கிளார்வாக்ஸ்மற்றும்மற்ற சிஸ்டர்ஷியன்துறவற மடங்களை நோக்கிக்கவர்ந்திழுக்கக்காரணமாயின! இதனால்‌, அநேக சிஸ்டர்ஷியன்துறவற மடங்கள்புதிதாகத்துவங்கப்பட்டன! அர்ச்‌. பெர்னார்டு, ஜீவிய காலத்தில்‌, 136 துறவற மடங்களை ஸ்தாபித்தார்‌; இவருடைய துறவிகள்‌, ஜெர்மனி, போர்த்துக்கல்‌, ஸ்வீடன்‌,அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்குச்சென்றனர்‌.

அர்ச்‌. பெர்னார்டுவின்அசாதாரணமான அர்ச்சிஷ்டதனத்தினுடைய உன்னதமான சுகந்த நறுமணமும்புகழும்‌, எல்லா இடங்களிலும்பரவியது. அநேக மேற்றிராசனங்கள்‌, இவரை அவர்களுடைய மேற்றிராணியாராக்குவதற்குக்கேட்டனர்‌. தனது முந்தைய சீடரும்அப்போதைய பாப்பரசருமாயிருந்த 3ம்யூஜினியுஸின்உதவியால்‌, இம்மேற்றிராணியார்பட்டத்திலிருந்து , அர்ச்‌. பெொர்னார்டு தப்பித்துக்கொண்டார்‌.  இருப்பினும்‌, மேற்றிராணியார்களும்‌, அரசர்களும்‌, பாப்புமார்களும்‌, இவரிடம்‌, அவ்வப்போது, ஞான ஆலோசனையைப்பெற்று வந்தனர்‌.

இறுதியாக, யூஜினியுஸ்பாப்பரசர்‌, இவரை சிலுவைப்போருக்குப்பிரசங்கியாராக ஏற்படுத்தினார்‌. அர்ச்‌. பெர்னார்டு, தனது அத்தியந்த பக்திபற்றுதலுடனும்‌, ஆர்வத்துடனும்‌, நேர்த்தியான பிரசங்கங் களாலும்‌, புதுமைகளாலும்‌, அகில உலகக்கிறீஸ்துவ நாடுகளிலும்‌, பிரான்ஸ்‌, ஜெர்மனி, ஆகிய நாடுகளிலும்‌, சிலுவைப்போர்செய்வதற்கான ஊக்கத்தையும்உற்சாகத்தையும்ஏவித்தூண்டினார்‌. 3ம்கொன்ராடு சக்கரவர்த்தி ஒரு சமயம்‌, இவருடைய சிலுவைப்போருக்கான பிரசங்கத்கைக்கேட்டு உருக்கமாக கண்ணீர்சிந்தி அழுதார்‌; இரண்டு மிகப்பெரிய படைகளை சிலுவைப்போருக்கு அனுப்பி வைத்தார்‌.

இவர்‌, ஆண்டவரின்பரிசுக்த பூமியை மகமதியரிடமிருந்து, பாதுகாக்கும்படியாக, துறவற வார்த்தைப்பாடுகளைக்கொடுத்து, இராணுவ யுக்திகளுடன்பயணங்கள்மேற்கொண்டு, கிறீஸ்துவுக்காக மாவீரர்களாக (Knights Templar) போராடக்கூடிய ஒரு புதிய துறவற சபைக்கான விதிமுறைகளையும்இயற்றி எழுதினார்‌. 3ம்யூஜின் பாப்பரசரின்விண்ணப்பத்தின்படி,காணக்கூடிய திருச்சபையின்தலைவருடைய தனிப்பட்ட பரிசுத்தத்தனத்தினுடைய அவசியத் தேவையின்மட்டில்வலியுறுத்தும்படியாக கவனமாகக்கருத்தில்கொண்டிருக்க வேண்டியவைகளுடைய புத்தகத்தை, மிக உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு ஞான புத்தகத்தை, அர்ச்‌.  பெர்னார்டு எழுதினார்‌. அர்ச்‌. பெர்னார்டு, கிளார்வாக்ஸில்‌, 1153ம்வருடம்‌, ஆகஸ்டு 20ம்தேதி பாக்கியமாய்மரித்தார்‌; 1174ம்வருடம்‌, ஜனவரி 18ம்தேதியன்று, 3ம்அலெக்சாண்டர்பாப்பரசரால்‌, அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது: 7ம்பத்திநாதர்பாப்பரசரால்‌, 1830ம்வருடம்‌, இவர்திருச்சபையின்வேதபாரகராக அறிவிக்கப்பட்டார்‌.

ஆபத்துக்கள்‌, சந்தேகங்கள்‌, கஷ்டங்கள்‌, ஏற்படும்போது, மகா பரிசுத்த தேவமாதாவைப்பற்றி நினை! அவர்களைக்கூவி அழை! மகா பரிசுத்த தேவமாதாவின்பரிசுத்தத்திருநாமம்‌, உன்உதடுகளிலிருந்து அகலாமலிருப்பதாக! மகா பரிசுத்த தேவமாதாவின்பரிசுத்தத்திரு நாமம்‌, உன்இருதயத்கை விட்டு ஒருபோதும்வெளியேற விடாதே! மகா பரிசுத்த தேவமாதாவின்ஜெபத்தினுடைய உதவியை, அதிக நிச்சயத்துடன்நீ அடைந்துகொள்வதற்கு, அவர்களுடைய காலடியைப்பின்பற்றி, கவனத்துடன்நடந்து செல்‌! மகா பரிசுத்த தேவமாதாவை ,உன்வழிகாட்டியாகக்கொண்டிருந்தால்‌, நீ ஒருபோதும்‌, வழிதவறிக்கெட்டுப்போக மாட்டாய்‌! நீ்அவர்களை நோக்கி வேண்டிக் கொள்ளும்போது, ஒருபோதும்அதைரியமடையமாட்டாய்‌! இருதய சஞ்சலமடைய மாட்டாய்‌! நம்பிக்கையை இழக்க மாட்டாய்‌! மகா பரிசுத்த தேவமாதா, உன்மனதில்இருக்கும்வரை, நீ ஏமாற்றப்படாமல்பாதுகாப்பாய்இருப்பாய்‌! மகா பரிசுத்த தேவமாதா உன்கரத்தைப்பிடித்திருக்கும்போது, நீ தவறி விழமாட்டாய்‌! அவர்களுடைய பாதுகாப்பின்கீழ்‌,நீ எதற்கும்பயப்படத்தேவையில்லை! அவர்கள்உன்முன்பாக நடந்து சென்றால்‌, நீ சோர்வடையமாட்டாய்‌! உனக்கு மகா பரிசுத்த தேவமாதா, தமது ஆதரவைக்காண்பித்தால்‌, நீ இலக்கை நிச்சயமாகஅடைந்துகொள்வாய்‌!”📚🏻+ அர்ச்‌. பெர்னார்டு

 ஸ்துதியரும்மகா வேதபாரகரும்‌ , மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமைப்பாடும்இசைக்கருவியுமான அர்ச்‌. பெர்னார்டு! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!