Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

August 8 - St. John Maria Vianney - அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர்

 ஆகஸ்டு08ம்தேதி

ஸ்துதியரும்‌, பங்கு சுவாமியார்களின்பாதுகாவலருமான
அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர்திருநாள்


 

அர்ச்‌. மரிய பாப்டிஸ்ட்வியான்னி அருளப்பர், பிரான்சிலுள்ள லியோன்ஸ்நகருக்கருகிலுள்ள டார்டிலி என்ற கிராமத்தில்‌, 1786ம்வருடம்‌, மே 8ம்தேதி, ஒரு ஏழை விவசாயக்குடும்பத்தில்பிறந்தார்‌. குழந்தைப்பருவ முதற்கொண்டு, இவர்மோட்சத்தை நோக்கியே, ஜீவித்து வந்தார்‌. எப்போதும்பரலோகம்‌, இவரை கவர்ந்திழுத்துக்கொண்டிருந்தது! இவருக்கு பகுத்தறியும்திறன்ஏறக்குறைய வருவதற்கு முன்பாகவே, இவருடைய அறிவு, சர்வேசுரனை நோக்கி, இவரை இட்டுச்சென்றது; 3 அல்லது 4 வயதானபோது, தனியாக ஒரு மூலையில்விளையாடிக்கொண்டிருக்கிறபோது,அடிக்கடி, ஜெபித்துக்கொண்டிருப்பதை இவர்வழக்கமாகக்கொண்டிருந்தார்‌.

இவருக்கு ஏழு வயதானபோது, பசுக்களை மேய்க்கும்படி, இவர்அனுப்பப்பட்டார்‌. அச்சமயங்களில்‌, அந்த நாள்முழுவதும்ஜெபத்தி னுடைய இனிமையில்செலவழித்து வந்தார்‌. ஆட்டிடையர்களான சிறுவர்களை, அவ்வப்போது ஒன்று கூட்டி, அவர்களுக்குரிய கடமை களை எவ்வாறு கத்தோலிக்க நல்லொழுக்கத்துடன்நிறைவேற்றுவது என்றும்‌, தீமையைமுற்றிலுமாக விலக்கி, நன்மையிலும்‌, புண்ணியங்களிலும்எவ்வாறு நிலைத்திருப்பது என்றும்‌, ஒரு சிறிய அறிவுரையை அளிப்பார்‌. இவர்தன்நல்ல கத்தோலிக்க பெற்றோர்களை, எப்போதும்தன்கண்முன்பாக, தனது மிகச்சிறந்த நல்ல முன்மாதிரிகைகளாகக்கொண்டிருந்தார்‌;

நல்ல பக்தியுள்ள கத்தோலிக்கர்களான அவருடைய பெற்றோர்கள்‌, எப்போதும்‌, அவர்களுடைய பிள்ளைகளை, தீமையின்அற்பக்கறையும்தீண்டாதபடிக்கு மிகக்கவனத்துடன்வளர்த்துவந்தனர்‌; பக்தியின்மிகச்சிறந்த முன்மாதிரிகைகளாகவும்ஜீவித்து வந்தனர்‌. கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக வேத விரோதிகளால்‌, வந்த  பிரஞ்சு புரட்சியால்‌, எல்லா தேவாலயங்களும்மூடப்பட்டன. குருக்கள்வெளியேற்றப்பட்டனர்‌. மறைவிலேயே கத்தோலிக்கர்கள்‌, வேத ஒழுங்குகளை அனுசரித்து வந்தனர்‌; ஒரு இரவில்‌, ஒரு தானிய களஞ்சிய சேகரிப்பு அறையில்‌, நிறைவேற்றப்பட்ட திவ்ய பலிபூசையின்போது, இவர்புதுநன்மை வாங்கினார்‌. இறுதியாக, ஒரு பக்தியார்வமுள்ள குருவானவர்‌, சங்‌. சார்லஸ்பேய்லி, 1803ம்வருடம்‌, எகுல்லியின்பங்கு குருவாக நியமிக்கப்பட்டார்‌. இந்த பங்கு டார்டிலியிலிருந்து மூன்று மைல்தூரத்திலிருக்கிறது.

இவருடைய கவனம்‌, விரைவிலேயே புண்ணிய சீலரான அர்ச்‌. மரிய வியான்னியின்மீது, விழுந்தது. சிறுவன்மரிய வியான்னி, குருவாக ஆசித்தால்‌, அதற்கு, தான்உதவுவதாக, சங்‌.சார்லஸ்பேய்லி சுவாமியார்கூறி, உற்சாகப்படுத்தினார்‌. அதை சிறுவனும்ஏற்று, அதற்கு தன்இருதயபூர்வமான சம்மதத்தைத்தெரிவித்தார்‌; அடிக்கடி எகுல்லிக்குச்சென்று, இந்த பக்தியுள்ள குருவானவரிடம்இலத்தீன்மொழிப்பாடத்தைக்கற்றுக்கொள்ளக்துவக்கினார்‌. அப்போது,மரிய வியான்னிக்கு 17 வயது. இவர்பள்ளிக்கூடம்செல்லாததால்‌, இலத்தீன்கற்பது, இவருக்கு மிகக்கடினமான காரியமாயிருந்தது.

ஆனால்‌, இவருடைய ஆசிரியரான சங்‌. பேய்லி சுவாமியார்‌, இம்மாசற்ற நேர்மையான இளைஞர்‌, திருச்சபைக்கு, தன்னிகறற்ற தனது பரிசுத்தத்தனத்தினால்‌, மாபெரும்ஊழியம்செய்வார்‌!  என்பதைக் கண்டுணர்ந்தவராக, இவருக்கு மிகுந்த பொறுமையுடன்‌, கற்றுக்கொடுத்து வந்தார்‌; பள்ளிக்கூடத்திலும்‌, பின்குருமடத்திலும்‌, சக மாணவர்களாலும்‌, ஆசிரியர்களாலும்‌, அதிகமான கேலிப்பரிகாசங் களுக்கு ஆளானார்‌; சிறுமைப்படுத்தப்பட்டார்‌; சர்வேசுரனிடம்தேவ உதவியை நாடியவராக, அர்ச்‌. மரிய வியான்னி, லாலுவெஸ்கிலுள்ள அர்ச்‌. ஜான்பிரான்சிஸ்ரேஜிஸின்கல்லறைக்கு திருயாத்திரை செல்வதாக நேர்ந்து, வேண்டிக்கொண்டார்‌.

சின்ன குருமடத்தில்‌, படிப்பை முடிக்க இயலாமல்‌, கஷ்டப்பட்டார்‌; அடுத்த நிலைக்கான லியோன்ஸ்நகர பெரிய குருமடத்திற்குச்செல்வதற்கான நுழைவு தேர்விலும்தோல்வியடைந்தார்‌; இவருடைய ஆசிரியரான சங்‌. பேய்லி சுவாமியாரின்பரிந்துரையினாலே, இவருக்குப்பெரிய குருமடத்தில்நுழைய அனுமதி கிடைத்தது. “மகா பரிசுத்த தேவமாதாவின்மீது உங்களுக்கு பக்தியிருக்கிறதா?” என்று வினவிய மேற்றிராணியார்‌, இவரிடமிருந்த மகா பரிசுத்த தேவமாதா மீதான பக்தியைக்கண்டபிறகு, இறுதியில்‌, இவருக்கு குருப்பட்டத்தை அளித்தார்‌;

இவ்வாறு, 1815ம்வருடம்‌, ஆகஸ்டு 12ம்தேதியன்று, அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர்‌, குருப்பட்டம்பெற்றார்‌. இவரின்ஆசிரியரான சங்‌. பேய்லி சுவாமியாரின்உதவி பங்கு குருவாக அர்ச்‌.  மரிய வியான்னி அருளப்பர்‌, குருப்பட்டம்பெற்றபிறகு, முதலில்‌, எகுல்லிக்கு அனுப்பப் பட்டார்‌. எகுல்லி பங்கு மக்கள்‌, சந்தோஷம்அடைந்தனர்‌. ஏனெனில்‌, அம்மக்கள்‌, இப்புதிய குருவின்ஆழ்ந்த பக்தியைப்பற்றியும்‌, அடக்க வொடுக்கத்தைப்பற்றியும்ஏற்கனவே அறிந்திருந்தனர்‌. ஆத்துமங்களை ஞான வழியில்‌, சிறந்த விதமாக நடத்துவதில்‌, அர்ச்‌. மரிய வியான்னி கொண்டிருந்த அபூர்வ திறன்‌, விரைவிலேயே வெளிப்பட்டது.

ஆத்துமங்களில்தேவ சிநேகத்தை மூட்டி சர்வேசுரனிடம்கூட்டிச்செல்வதில்‌, இவர்உன்னதமான வெற்றிகளை அடையலானார்‌.  1818ம்வருடத்தின்துவக்கத்தில்‌, அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பா்‌, ஆர்ஸ்நகரின்பங்கு குருவாக நியமிக்கப்பட்டார்‌. லியோன்ஸ்மேற்றிராசன முதன்மைப்பங்கு குருவானவர்‌, இவரிடம்‌, என்நண்பரே! நீங்கள்ஆர்ஸ்நகரத்தின்பங்கு சுவாமியார்‌; இது ஒரு சிறிய பங்கு; இங்கிருக்கிற பங்கு மக்களிடம்‌, சர்வேசுரன்மட்டில்மிகச்சிறிய நேசம்மட்டுமே உள்ளது; அவர்களிடம்உத்தம தேவ சிநேகத்தை அதிகரிக்கச்செய்து, முழுமையான தேவசிநேகத்திற்கு, அவர்களைக்கூட்டி வாருங்கள்‌! என்று கூறினார்‌. 

ஆர்ஸ்நகரம்ஞான ஜீவியத்தில்மிக மோசமான நிலைமையில்இருந்தது. அதற்குக்காரணம்இருந்தது; திருச்சபையின்திருவழி பாட்டின்சடங்குகளில்ஒழுங்காக பங்கேற்ற கத்தோலிக்கர்கள்கூட,மிகக்குறைவான வரையரையினுள்மட்டுமே, வேத கடமைகளை அனுசரித்து வந்தனர்‌. மற்றவர்கள்‌, திருவழிபாடுகளில்கலந்து கொண்டனர்‌; ஆனால்‌, வெளியரங்கமாக மட்டுமே பங்கேற்றனர்‌; ஏனெனில்‌, இந்நகர மக்களுடைய, சிற்றின்பத்கையே எப்போதும்நாடித்திரியும்ஒழுக்கம்கெட்ட சுபாவத்தினால்தான்‌, இந்த ஊரில்கத்தோலிக்க வேத விசுவாசம்வளர்ச்சியடையாமல்‌, மிகக்குறைவாகவும்‌, குற்றுயிராகவும்‌, அழியும்தருவாயிலிருந்தது!

இருப்பினும்‌, காண்போரை உத்தம கத்தோலிக்க ஜீவியத்திற்குக்‌  கொண்டு வரும்‌, புதிய குருவானவருடைய உத்தம நன்மாதிரிகை யினாலும்‌, எளிமையான அடக்காவொடுக்கமுள்ள ஜீவியத்தாலும்கவர்ந்திழுக்கப்பட்டவர்களாகஅந்நகர மக்கள்எல்லோரும்‌, அவரை வியப்புடன்போற்றினர்‌. நல்ல ஞான மேய்ப்பர்‌, தம்மை நோக்கி வராத ஆடுகளை நோக்கிச்செல்வதுபோல்‌, அர்ச்‌. மரிய வியான்னி, வேதகடமைகளில்அசமந்தர்களாக, தேவாலயத்திற்கு வராத மக்கள்ஒவ்வொருவரையும்‌, அவரவருடைய வீடு தேடிச்சென்றார்‌; அவர்களிடம்‌, அவர்களுடைய நலத்தின்மீது முழு அக்கறையுடன்பேசி, அவர்கள்அனுபவிக்கிற உலகத்துன்ப உபத்திரவங்கள்‌, அவர்களுடைய பர லோக சம்பாவனையை கூடுதலாக அதிகரிக்கச்செய்கின்றன! என்று ஆறுதல்கூறித்தேற்றி வந்தார்‌; இவ்விதமாக, ஆர்ஸ்நகர மக்களின்ஞான ஜீவியத்தில்மறுமலர்ச்சியைக்கொண்டு வந்தார்‌; நாளடைவில்தேவாலயத்திற்கு வந்த கூட்டம்வெகுவாக அதிகரித்தது.

 ஒவ்வொரு  நாளும்திவ்ய பலிபூசைக்கு திரளான மக்கள்வரத்         துவக்கினா்‌; பாவ சங்கீர்த்தனத்தில்‌, இந்த அர்ச்சிஷ்ட பங்கு குருவானவர்கூறும்‌, தேவ சிநேகத்தை மூட்டக்கூடிய இனிமையான பரிசுத்த அறிவுரையே, திரளான பாவிகளை, அவருடைய பாவசங்கீர்த்தனத்தொட்டிக்கு அழைத்துவந்தது! சர்வேசுரனைப்பற்றியும்‌, மரணத்தைப்பற்றியும்‌, மோட்சத்தைப்பற்றியும்‌, நரகத்தைப்பற்றியும்‌, மகா பரிசுத்த தேவ நற்கருணையைப்பற்றியும்‌, மகா பரிசுத்த தேவமாதாவைப்பற்றியும்‌, இவர்நிகழ்த்திய உன்னதமான ஞானப்பிரசங்கங்களைக்கேட்ட மக்கள்‌, தங்கள்பாவாக்கிரமங்களை நினைத்து, உத்தம மனஸ்தாபத்துடன்‌, வாழ்நாளிலெல்லாம்இல்லாத அளவிற்கு திரளாகக்கண்ணீர்வடித்து அழுதனர்‌.

ஆர்ஸ்என்ற இந்த நகரில்‌, விரைவிலேயே ஒரே ஒரு குரல்ஒலி தான்கேட்கத்துவங்கியது: “எங்கள்பங்கு சுவாமியார்‌, ஒரு அர்ச்சிஷ்டவா்‌!” என்பது தான்‌, அந்த குரலொலி! ஆனால்‌, இந்த கத்தோலிக்க ஊரில்‌, இவ்வுன்னத மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு வெகுக்காலம்‌, அர்ச்‌. மரிய வியான்னி போராடி உழைக்க நேர்ந்தது! சிற்றின்பத்தின்மீதான சிநேகம்‌, மிகக்கடுமையாக அர்ச்சிஷ்டவர்‌, தன்பங்கு மக்களிடையே மேற்கொண்ட ஞான ஜீவிய சீர்திருத்தத்தை எதிர்த்து நின்றது! அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர், தன்அயரா உழைப்பினால்‌, அந்த பாவ சிநேகத்தை, மக்களிடையே முற்றிலுமாக அகற்றி அழித்து, அவர் களுடைய இருதயங்களை தேவசிநேகத்தினால்வெற்றி கொண்டார்‌!

 ஆர்ஸ்நகரில்இப்பரிசுத்த குருவானவர்‌, அடைந்த இம்மகா பெரிய ஞான வெற்றியைப்பற்றிய செய்தி ஐரோப்பா முழுவதும்‌, துரிதமாகப்பரவியது; உயிருடன்வாழும்ஒரு அர்ச்சிஷ்டப்பங்கு சுவாமியாரைக்காணவும்‌, அவரிடம்பாவசங்கீர்த்தனம்செய்யவும்‌, எல்லா நகரங்களிலிருந்தும்மக்கள்கூட்டம்‌, ஆர்ஸ்நகரை நோக்கி, திருயாத்திரையாக வரத் துவங்கியது. ஐரோப்பாவிலிருந்து எல்லா நாடுகளிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும், இந்நகரை நோக்கி வருடந் தோறும், அர்ச்சிஷ்டவரைக் காணவும், அவரிடம் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்யவும்,  20000 பேர் திருயாத்திரையாக வரத்துவக் கினர்! இத்தகைய உன்னதமான ஞான வளர்ச்சி ஐரோப்பாவில்ஏற்படத்துவங்கியதற்குக்காரணம்‌, அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர் அனுசரித்து வந்த மிகக்கடினமான ஜெப தபப்பரிகார ஜீவியம்தான்‌!



அர்ச்‌. மரிய வியான்னி, ஒவ்வொரு நாளும்‌, இரவில்‌, ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம்மட்டுமே உறங்குவதற்கு செலவழித்தார்‌. நடு இரவிற்குப்பிறகு, சிறிது நேரம்கழித்து, இவர்பாவசங்கீர்த்தனம்கேட்க விரைந்து செல்வார்‌: அங்கேயே அந்த நாளின்எஞ்சிய நேரமெல்லாம்பாவசங்கீர்த்தனம்கேட்டுக்கொண்டிருப்பார்‌; அயல்நகரங்களிலிருந்து வருகிற மக்கள்கூட்டம்‌, சில சமயங்களில்‌, இரண்டு அல்லது முன்று நாட்கள்தொடர்ந்து, இவரிடம்‌, பாவசங்கீர்த்தனம்செய்வதற்காக வரிசையில்காத்திருப்பார்கள்‌; காலையில்திவ்ய பலிபூசை நிகழ்த்துவதற்காக மட்டுமே, இவர்பாவசங்கீர்த்தனத்தொட்டியை விட்டு எழுந்து செல்வார்‌.

சில சமயங்களில்‌, ஒரு சுருக்கமான ஞான உபதேசத்திற்கும்‌, உணவு நேரத்தில்மிகச்சிறிதளவான உணவிற்கும்எழுந்து செல்வார்‌. உறக்கமும்போதிய உணவும்இல்லாமல்‌, அர்ச்‌. மரிய வியான்னி, எவ்வாறு நாள்முழுவதும்‌, இவ்விதமாகக்கடுமையான உழைப்பில்ஈடுபடுதற்குத்தேவையான பலத்தைப்பெற்றார்‌! என்பதைப்பற்றி எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்‌; ஏனெனில்‌, இவர்எப்போதும்‌, பலவீன ராயிருந்தார்‌. மேலும்‌, இது பற்றாது என்பதைப்போல்‌, அர்ச்‌. மரிய வியான்னி, தன்சரீரத்தை மிகக்கடுமையான ஒறுத்தல்‌, சாட்டையடிகள்போன்ற தபசுகளால்‌, ஒறுத்தார்‌; இது, சர்வேசுரனை எவ்வளவுக்கு அதிகமாக மகிழ்வித்தது! என்றால்‌, இன்னும்கூடுதல்உள்ளரங்க சோதனைகளை, அனுப்பி வைத்தார்‌; அதிலும்குறிப்பாக இரவு நேரத்தில்‌, பசாசு, இவரை அதிகம்உபாதித்து வந்தது!

இது, அர்ச்‌. வனத்து அந்தோணியாருக்கு பசாசினால்வந்து சோதனைகளைப் பற்றி அர்ச்‌. அத்தனாசியார்‌, விவரிப்பதை  நமக்கு ஞாபகப்படுத்துகின்றது! வல்லமையைப்பற்றியும்‌, அழகைப்பற்றியும்‌, நீதிமானுடைய ஆத்துமத்தின்மாட்சிமிக்க பேரெழிலைப்பற்றியும்‌, தேவவிசுவாசம்நமக்குக்கற்பிக்கிற உன்னத குணாதிசயங்க ளெல்லாம்‌, அர்ச்‌.  மரிய வியான்னி அருளப்பரிடம்‌, தன்னிகரற்ற விதமாகத்திகழ்ந்தனதன்னிடம்வருகிற பாவிகளுடைய இருதய உள்ளரங்க ஆத்துமத்திலிருக்கும்இரகசியங்களையும்‌, அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர்அறியக்கூடிய திறனைக்கொண்டிருந்தார்‌. ஒரு சமயம்‌, தன்னிடம்வந்த ஒரு இளம்பெண்ணிடம்‌, அவள்அணிந்திருந்த மகா பரிசுத்த தேவ மாதாவின்அற்புதப்பதக்கம்தான்‌, அவளிடம்‌, அன்றொரு நாள்‌, நடை பெற்ற ஒரு நடன நிகழ்ச்சியில்‌, ஒரு அழகிய வாலிப உருவத்தில்தோன்றி எல்லா பெண்களுடனும்நடனமாடிய பசாசை, நெருங்கக்கூடாமல்‌, செய்தது! என்கிற உண்மையைக்கூறினார்‌.

1859ம்வருடம்‌, ஜூலை 29ம்தேதியன்று, அர்ச்‌. மரிய வியான்னி  அருளப்பருக்கு, 73 வயதானபோது, வழக்கம்போல்‌, 16 அல்லது 17 மணி நேரம்பாவசங்கீர்த்தனம்கேட்டார்‌. அப்போது, திடீரென்று, பலமெல்லாம்இழந்து மயங்கி விழுந்தார்‌; ஆகஸ்டு மாதம்‌ 4ம்தேதி காலையில்‌, சங்‌.மோனின்என்ற மடாதிபதி, இறக்கிறவர்களுக்கான ஜெபத்தை, சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசுகள்இவரைச்சந்திக்க வருவார்களாக! இவரை வழிநடத்தி, பரலோக ஜெருசலேமுக்குக்கூட்டிச்செல்வார்களாக! என்கிற ஜெபத்தை ஜெபித்தபோது, அர்ச்‌.  மரிய வியான்னி அருளப்பருடைய பரிசுத்த ஆத்துமம்‌, பரலோகத்தை நோக்கிப்பறந்து சென்றது! ஆனால்‌, ஆத்துமங்களை சர்வேசுரனிடம்கூட்டிவருகிற இவருடைய உன்னத அலுவல்‌, இவருடைய மரணத்துடன்முடியவில்லை!

 அர்ச்‌. பத்தாம்பத்திநாதர்‌, 1905ம்வருடம்‌, ஜனவரி 8ம்தேதியன்று, இவருக்கு முத்திப்பேறு பட்டம்அளித்தபோது, அதில உலகமும்அகமகிழ்ந்தது!  1925, மே 31ம்தேதியன்று, இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்‌, அளிக்கப்பட்டது. 11ம்பத்திநாதர்பாப்பரசர்‌, 1929ம்வருடம்‌, இவரை சகல மேற்றிராசனப்பங்குக்குருக்களுக்கும்பாதுகாவலராக ஏற்படுத்தினார்‌. இவருடைய பரிசுத்த சரீரம்புதுமையாக அழியாத சரீரமாகத்திகழ்கின்றது.

 

அர்ச்‌.  மரிய வியான்னி அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்‌!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக