Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

August 1st - SAINT PETER'S CHAINS - அர்ச்‌. இராயப்பர்‌ சங்கிலிகளால்‌ கட்டுண்ட திருநாள்‌.

 

ஆகஸ்டு 1ம்‌ தேதி

அர்ச்‌. இராயப்பர்‌ சங்கிலிகளால்‌ கட்டுண்ட திருநாள்‌.

 

ஏரோது அரசனான அகிரிப்பா, யூதர்களை சந்தோஷப்படுத்துவதற்காக, அர்ச்‌.பெரிய யாகப்பரைக்‌ கொன்றான்‌; பின்‌ கி.பி.44ம்‌ வருடம்‌ அர்ச்‌. இராயப்பரையும்‌ கொன்று போட திட்டமிட்டான்‌; அர்ச்‌. இராயப்பரை ஜெருசலேம்‌ சிறையிலடைத்து, இரும்புச்‌ சங்கிலிகளால்‌, அவருடைய கால்களுடன்‌ பிணைத்துக்‌ கட்டி வைத்தான்‌. பலத்தப்‌ பாதுகாப்பு ஏற்பாடு செய்தான்‌; பல வீரர்களைக்‌ கொண்டு அவரைக்‌ கண்காணிக்கச்‌ செய்தான்‌. அர்ச்‌. இராயப்பர்‌ சிறையிலிருந்து தப்பிக்காதபடிக்கு, 16 வீரர்கள்‌ இரவு பகலாகக்‌ காவல்‌ காத்தனர்‌. அதில்‌ நான்கு வீரர்களில்‌, இருவர்‌ அர்ச்‌.இராயப்பரின்‌ சிறை இருந்த இருண்ட குழிக்குள்ளேயும்‌, இருவர்‌ வாசலண்டையிலும்‌ நின்றபடி, கண்காணித்து வந்தனர்‌; ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும்‌, நால்வர்‌ நால்வராக மாறி வந்து, இரவு பகலாகத்‌ தொடர்ந்து, சிறையைக்‌ காவல்‌ காக்கும்‌ வேலையில்‌ ஈடுபட்டிருந்தனர்‌. ஜெருசலேமிலிருந்த எல்லா கிறீஸ்துவர்களும்‌, முதல்‌ பாப்பரசரான அர்ச்‌. இராயப்பரின்‌ உயிர்‌ பாதுகாக்கப்படும்படியாகவும்‌, அவரின்‌ விடுதலைக்காகவும்‌, பக்திபற்றுதலுடன்‌ இடைவிடாமல்‌ ஆண்டவரிடம்‌ ஜெபித்து வேண்டிக்கொண்டிருந்தனார்‌. அன்று இரவே, அவர்களுடைய ஜெபத்தின்‌ வேண்டுதல்‌ கேட்கப்பட்டது: அடுத்த நாள்‌ காலையில்‌, அர்ச்‌.  இராயப்பரைக்‌ கொல்வதற்கு ஏரோது திட்டமிட்டிருந்தான்‌. அதற்கு முந்தின இரவில்‌, சர்வேசுரன்‌, அர்ச்.‌இராயப்பரை அவருடைய எதிரிகளின்‌ கரங்களிலிருந்து விடுவிக்கச்‌ சித்தமானார்‌. அர்ச்‌. இராயப்பர்‌ சிறையில்‌ இரண்டு சிறைக்காவலர்களுக்கு மத்தியில்‌, கால்‌கள்‌ சங்கிலிகளாலும்‌, கைகள்‌ விலங்குகளாலும்‌ கட்டப்பட்டிருந்த படி, அன்றிரவு உறங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு சம்மனசானவர்‌ சிறையில்‌ தோன்றினார்‌. அர்ச்‌. இராயப்பரை பக்கவாட்டில்‌ தொட்டு எழுப்பி விட்டார்‌. சம்மனசானவர்‌, இராயப்பரிடம்‌, உடனே எழுந்து, அவருடைய அங்கியை அணிந்து கொண்டு, தம்மைப்‌ பின்தொடர்ந்து வரும்படிக்‌ கூறினார்‌; அர்ச்‌.இராயப்பா்‌ எழுந்து நின்றதும்‌ அவருடைய கைகளிலிருந்த விலங்குகளும்‌, கால்களைக்‌ கட்டியிருந்த இரும்புச்‌ சங்கிலியும்‌, புதுமையாகக்‌ தானாகவே கழன்றன! அர்ச்‌. இராயப்பர்‌, சம்மனசானவரைப்‌ பின்பற்றி, சிறையை விட்டு வெளியேறத்‌ துவக்கினார்‌. முதல்‌ காவலையும்‌, இரண்டாம்‌ காவலையும்‌ கடந்து சென்றனர்‌. பின்னர்‌, நகரத்திற்குச்‌ செல்கிற பெரிய இரும்புக்‌ கதவண்டையில்‌ வந்து சேரவே, அதுவும்‌ தானாக, அவர்களுக்குத்‌ திறக்கப்பட்டது! அதன்பின்‌, ஜெருசலேம்‌ நகரத்திற்குள்‌ சம்மனசானவர்‌, ஒரு தெருவழியாகக்‌ கூட்டிச்‌ சென்று, அங்கே இராயப்பரை விட்‌டு, சம்மனசானவர்‌ மறைந்துபோனார்‌! இதுவரை தூக்கத்தில்‌ ஏதோ ஒரு கனவு காண்பதாக நினைத்திருந்த அர்ச்‌. இராயப்பர்‌, இப்போது, சிறையிலிருந்து, தன்னை மீட்பதற்காகவே, சர்வேசுரன்‌ ஒரு சம்மனசானவரை அனுப்பியிருக்கிறார்‌! என்பதை உணர்ந்தார்‌. மாற்கு என்கிற காரணப்பெயரையுடைய அருளப்பரின்‌ தாயாரான மரியம்மாளின்‌ வீட்டிற்குச்‌ சென்றார்‌; அங்கு கிறீஸ்துவர்கள்‌ எல்லோரும்‌ கூடி, அர்ச்‌. இராயப்பருடைய (அப்‌.நட 12:3-19) பாதுகாப்பிற்காக ஜெபித்துக்‌ கொண்டிருந்தனர்‌. இந்த புதுமை, உங்களில்‌ இரண்டு பேர்‌, தாங்கள்‌ மன்றாடிக்‌ கேட்கும்‌ எந்தக்‌ காரியத்திலும்‌, பூமியில்‌ ஒருமனப்பட்டிருந்தால்‌, அது பரமண்டலங்களி லிருக்கிற என்‌ பிதாவினால்‌, அவர்களுக்கு செய்தருளப்படும்‌! (மத்‌ 18:19) என்று நமதாண்டவா்‌ தாமே,நமக்கு அளித்திருக்கிற தேவ வாக்குறுதியை, மிகத்‌ தெளிவாக  நிச்சயப்படுத்துகிறது!  ஜெருசலேம்‌ சிறையில்‌ அர்ச்‌. இராயப்பரைக்‌ கட்டியிருந்த சங்கிலி,  உரோமைச்‌ சக்கரவர்த்தியான 3ம்‌ வாலென்டினியனின்‌ மனைவியான யுடோக்ஸியாவிற்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. பின்னர்‌, அந்த சங்கிலியை 3ம்‌ வாலன்டினியன்‌, முதலாம்‌ சிங்கராயர்‌ பாப்பரசருக்கு, அன்பளிப்பாக அளித்தார்‌. பாப்பரசர்‌ முதலாம்‌ சிங்கராயர்‌, ஜெருசலேம்‌ சிறையில்‌, அர்ச்‌. இராயப்பரைக்‌ கட்டியிருந்த சங்கிலியை, பிற்காலத்தில்‌ உரோமாபுரியில்‌ அர்ச்.இராயப்பரை அவருடைய வேதசாட்சிய மரணத்திற்கு முன்பாக, ஒரு சிறையில்‌ கட்டியிருந்த சங்கிலியுடன்‌ ஒப்பிட்டுப்‌ பார்ப்பதற்காகக்‌ கொண்டு சென்றபோது, இரு சங்கிலிகளும்‌ புதுமையாக, ஒன்று சேர்ந்து, ஒரே சங்கிலியாக ஒன்றிணைந்தன!

அர்ச்‌. இராயப்பருடைய கரங்களையும்‌ கால்களையும்‌ பிணைத்துக்‌ கட்டிய இவ்விரும்புச்‌ சங்கிலிகள்‌, சர்வேசுரனுடைய தேவ வார்த்தையைக்‌ கட்டிப்போடக்கூடாதவையாயிருந்தன! அதே சமயம்‌, அர்ச்‌. இராயப்பரின்‌ வேதசாட்சிய மரணத்திற்குப்‌ பின்‌, இந்த இரும்புச்‌ சங்கிலிகள்‌, விலையுயா்‌ தங்க நகைகளையும்‌, தங்கத்‌தையும்‌ விட மேலான அதிக விலைமதிப்புள்ளவையாக மதிக்கப்படுகின்றன! உரோமாபுரியிலுள்ள சங்கிலிகளால்‌ கட்டுண்ட அர்ச்‌.இராயப்பரின்‌ பசிலிக்கா தேவாலயத்தின்‌ பெரிய முதன்மைப்‌ பீடத்தின்‌ அடியிலிருக்கும்‌ ஒரு அருளிக்கப்‌ பேழையினுள்‌, புதுமையாக ஒன்றிணைந்த இந்த சங்கிலிகள்‌ பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக் கின்றன! 439ம்‌ வருடம்‌, 3ம்‌ சிக்ஸ்துஸ்‌ பாப்பரசரால்‌, இந்த பசிலிக்கா தேவாலயம்‌ அபிஷேகம்‌ செய்யப்பட்டது.

உரோமாபுரி சிறையில்‌ அர்ச்‌.இராயப்பரைக்‌ கட்டியிருந்த சங்கிலி  உரோமாபுரியின்‌ சிறைகளின்‌ அதிபதியான குவிரினுஸ்‌ என்பவனுடைய மகளான பால்பினா ஒருசமயம்‌, பரிசுத்த பாப்பரசரான அலெக்சாண்டரைக்‌ கட்டியிருந்த சங்கிலிகளைக்‌ தொட்டவுடன்‌, அவளுடைய வியாதியிலிருந்து, புதுமையாகக்‌ குணமடைந்தாள்‌. தன்னைக்‌ குணப்படுத்திய பாப்பரசரின்‌ கரங்களை, அவள்‌ இடைவிடாமல்‌, பக்தியுடன்‌ முத்தி செய்துகொண்டே இருந்தாள்‌; அச்சமயம்‌, பாப்பரசர்‌, அவளிடம்‌. என்‌ கரங்களை முத்தி செய்வதை விட, அர்ச்‌.இராயப்பரைக்‌ கட்டியிருந்த சங்கிலிகளைக்‌ கண்டுபிடித்து, அவற்றை முத்தி செய்‌! என்று கூறினார்‌. பாப்பரசருக்குக்‌ கீழ்ப்படிந்து, அர்ச்‌.இராயப்பரைக்‌ கட்டியிருந்த சங்கிலிகளை (அவருடைய வேதசாட்சிய மரணத்‌திற்கு முன்பாக உரோமாபுரியிலிருந்த ஒரு சிறையில்‌ அவரைக்‌ கட்டியிருந்த சங்கிலிகளை) கண்டுபிடித்தாள்‌; அந்த சங்கிலிகளை பரிசுத்த அருளிக்கங்களாக பாவித்து, பால்பினா, மிகுந்த பக்திபற்றுதலுடன்‌ தன்‌ ஆவல்‌ தீர அவற்றை முத்தி செய்தாள்‌;

பின்னர்‌, வேதசாட்சியாக மரித்த அர்ச்‌.ஹெர்மெஸின்‌ சகோதரியும்‌ உயர்குடிமகளுமான தியோடோராவிடம்‌ இந்த சங்கிலிகளை அளித்தாள்‌. தன்னை ஆண்ட மனிதனையே கடவுளாக உருவாக்கிய உரோமாபுரி, அகஸ்டஸ்‌ சீசருக்கு, ஆகஸ்டு மாதத்தை அர்ப்பணித்தது!

ஆனால், ‌நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதர்சுவாமி, உரோமாபுரியை அஞ்ஞானத்திலிருந்து விடுவித்தபோது, உரோமாபுரி, மறுபடியும்‌ சம்பாதித்த உன்னதமான சுதந்திரத்தின்‌ வெற்றிக் கோப்பையாக, இதே ஆகஸ்டு மாதத்தின்‌ தலையில்‌, அதாவது இம்மாதத்தின்‌ முதல்‌ தேதியன்று, அர்ச்‌.இராயப்பரின்‌ இந்த சங்கிலிகளை வைத்தது! ஏனெனில்‌, உரோமாபுரியின்‌ தலையிலிருந்த அஞ்ஞான மகுடத்தை உடைத்தெறியும்படியாகவே, கிறீஸ்துநாதரின்‌ பிரதிநிதியான அர்ச்‌. இராயப்பர்‌ இந்த சங்கிலிகளால்‌ கட்டுண்டி ருந்தார்‌!  சீசரின்‌ சுவீகார புத்திரனை விட மேலான விதமாக இந்த ஆகஸ்டு மாதத்தை ஆளக்கூடிய உரிமை கோருகின்ற ஓ! தேவ ஞானமே! உம்முடைய சாம்ராஜ்ஜியத்தை, இதைவிட அதிக உண்மையான விதமாக துவங்கியிருக்க முடியாது! பலமும்‌ மதுரமான இனிமையும்‌, உமது அலுவல்களின்‌ குணாதிசயங்களாக இருக்கின்றன! உம்மால்‌ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்‌ பலவீனத்தில்‌ தான்‌, தேவரீர்‌, வல்லமையுள்‌ளவர்கள்‌ மீது வெற்றியடைகின்றீர்‌! எங்களுக்கு ஜீவனைத் தரும்படியாக, மரணத்தை நீர்தாமே, விழுங்கி விடுகிறீர்‌! யோனாவின்‌ குமாரனான அர்ச்‌. சீமோன்‌ இராயப்பர்‌, தன்னிடம்‌ ஒப்படைக்கப் பட்டிருந்த உலகத்தை விடுவிக்கும்படியாக , ஒரு சிறைக்கைதியானார்‌!

திருச்சபையின்‌ முதல்‌ பாப்பரசரான அர்ச்‌.இராயப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 




If you want any book from Archeive.org 

I can download it for you. 
Contact me on Email (lourdhurobin@gmail.com) or Telegram or https://t.me/Lourdhurobin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக