Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

August 6 - Transfiguration of Our Lord - நமதாண்டவர்‌ மறுரூபமான திருநாள்

 

ஆகஸ்டு 06ம்தேதி

நமதாண்டவர்மறுரூபமான திருநாள்


 தமது பரிசுத்தப்பாடுகளுக்கு ஒரு வருடத்திற்கு முன்‌, நமதாண்டவர்‌,தம்பிரிய அப்போஸ்தலர்களான அர்ச்‌. இராயப்பர்‌, அர்ச்‌. யாகப்பா்‌, அர்ச்‌. அருளப்பருடன்கலிலேயாவிலுள்ள தாபோர்மலை உச்சிக்குச்சென்றார்‌. இந்த மலையின்உச்சி , திபேரியக்கடலிலிருந்து ஏறக்குறைய 2000 அடி உயரத்திலிருக்கிறது. இங்கு தான்‌, ஆண்டவர்தமது தேவமகிமையை வெளிப்படுத்தினார்‌: அவருடையமுகம்சூரிய னைப்போல்துலங்கினது; அவருடைய வஸ்திரங்கள்வெண்மை யாயின! (மத்‌ 17:2) வேத சட்டத்தையும்‌, தீர்க்கதரிசனங்களையும்குறிக்கும்விதமாக, மோயீசனும்‌, எலியாசும்‌, மறுரூபமான ஆண்டவரை ஆராதிக்கிறதாகக் காணப்பட்டார்கள்‌; “இவரே நமது பிரிய குமாரன்‌! இவரில்நாம்பூரண பிரியமாயிருக்கிறோம்!” என்று பகிரங்கமாக பிதாவாகிய சர்வேசுரன்தாமே,தமது ஏகக்குமாரனைப்பற்றி அறிவிக்கிற குரலொலி, மறுபடி‌, இச்சமயத்திலும்கேட்கப்படுகிறது. நமதாண்டவரின்பகிரங்க ஜீவியத்தின்உச்சக்கட்டமாகவும்‌, மோட்ச மகிமையின்முன்சுவையாகவும்திகழ்கிற நமதாண்டவரின்மகிமைமிகு மறுரூபத்திருநிகழ்வு, இப்பிரிய அப்போஸ்தலர்களின்இருதயங்களில்‌, ஆண்டவரின்பரிசுத்த உபாதனையினுடையபாடுகளின்நாளில்‌, தேவ விசுவாசத்தை உறுதிப்படுத்தும்விதமாக நிகழ்ந்தது!

பரம இரகசியமான இத்திருநிகழ்வு நிகழ்ந்த இடத்தில்‌, தாபோர்மலையில்‌,4ம்நூற்றாண்டில்ஒரு தேவாலயம்கட்டப்பட்டு, ஆகஸ்டு 6ம்தேதி அபிஷேகம்செய்யப்பட்டது. ஆண்டவருடைய மகிமைமிகு மறுரூபமான திருநிகழ்வுக்குத்தோத்திரமாக, மத்திய கிழக்கு நாடுளில்திருநாள்கொண்டாடும்வழக்கம்‌, இதே காலத்தில்‌, துவங்கியது. ஐரோப்பாவின்அநேக பகுதிகளில்‌ , இந்த திருநாள்கொண்டாடும்வழக்கம்‌, 8ம்நூற்றாண்டிலிருந்து துவங்கியது . 1456ம்வருடம்‌, ஜூலை 22ம்தேதியன்று, பெல்கிரேடிட்டில்  துலுக்கர்களுக்கு எதிராக நிகழ்ந்த ஒரு சிலுவைப்போரில்‌, மிகச்சிறிய கத்தோலிக்கர்களுடைய படை, ஒரு மாபெரும்துருக்கியப்படையை நசுக்கி, அதன் மீது வெற்றியடைந்தது! உரோமாபுரியை நோக்கி, அந்நகரத்தைக் கைப்பற்றும்படியாக அணிவகுத்துச்சென்ற 1,20,000 மகமதிய வீரர்களைக்கத்தோலிக்க இராணுவம்‌,கொன்று குவித்தது; பல்லாயிரக்கணக்கான துலுக்க வீரர்கள்‌,இப்போரில்படுகாய மடைந்தனர்‌; இப்போரில்கத்தோலிக்க இராணுவம்அடைந்த வெற்றியின்செய்தி, ஆகஸ்டு மாதம்‌ 6ம்தேதி , 3ம்காலிஸ்துஸ்பாப்பரசரை அடைந்தது. ஆண்டவருக்கு நன்றியறிதலாக, ஆண்டவருடைய மறுரூபமான திருநாளை, ஏற்படுத்தி,ஆகஸ்டு 6ம்தேதியன்று, அடுத்தவருடத்திலிருந்து, இத்திருநாளை அகில உலகம்முழுவதும்கொண்டாடும்படியாகக்கட்டளையிடடார்‌. மேலும்‌, இந்தபோரில்அடைந்த வெற்றிக்கு, மகா பரிசுத்த தேவ மாதாவிற்கும்நன்றியறிந்த ஸ்தோத்திரம்செலுத்தும்விதமாக, 3ம்காலிஸ்துஸ்பாப்பரசர்‌, இனிவரும்காலத்தில்‌, எல்லா தேவாலயங்களிலும்மத்தியம்‌ 12 மணிக்கு தேவமாதாவிற்குத்தோத்திரமகிமையாக, திரிகால ஜெபம்ஜெபிக்கும்படியாக, தேவாலய மணிகள்அடிக்கப்பட வேண்டும்என்று , உத்தரவிட்டார்‌. ஏனெனில்மத்தியம்‌ 12 மணிக்கு தான்‌, துலுக்கப்படை நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டது! எனவே, அடுத்த தடவை நீ மத்தியம்‌, தேவாலயங்களில்‌ 12 மணி திரிகால ஜெபத்திற்கான மணி சத்தத்தைக்கேட்கும்போது, திரிகால ஜெபத்தை பக்தி பற்றுதலுடன்ஜெபி! மேலும்‌, சத்துருக்களுக்கு எதிராக மகா பரிசுத்த தேவமாதா கொண்டிருக்கிற மகத்துவமிக்க இராணுவ வல்லமையைப்பற்றி நினைவு கூர்வாயாக!

! மகா பரிசுத்த மரியாயே! தேவரீர்போரணியிலிருக்கும்இராணுவத்தைப்போல்‌, மகா வல்லமையுள்ளவர்களாயிருக்கிறீர்‌!

திபேரிய ஏரி, கலிலேயக்கடல்‌, ஜெனசரேத்ஏரி, திபேரியக்கடல்ஆகிய பெயர்கள்எல்லாம்‌, இஸ்ரேலில்உள்ள ஒரே ஏரியைக்குறிக்கின்றன. இது மிகப்பெரிய நல்ல தண்ணீர்ஏரி; இதன்சுற்றளவு ஏறக்குறைய 53 கி.மீ. இதன்நீளம்‌, 23 கி.மீ ; அகலம்‌ 13 கி.மீ. கடல்மட்டத்திலிருந்து, 209 மீ கீமே தாழ்வாக இருக்கிறது! உப்புத்தண்ணீர்ஏரியான சாக்கடலுக்கு அடுத்தபடியாக, உலகத்திலேயே இரண்டாவது மிக தாழ்ந்த ஏரியாக, இந்த ஏரி இருக்கிறது. இந்த கலிலேயக்கடலிற்கு பூமிக்கு அடியிலிருக்கும்நல்ல தண்ணீர்ஊற்றுகளிலிருந்து தண்ணீர்வருகிறது; அத்துடன்‌, இதற்கு வருகிற தண்ணீருக்கு முதன்மையான முக்கிய ஆதாரமாயிருப்பது, யோர்தான்நதியாகும்‌. யோர்தான்நதி, பாலஸ்தீனத்தின்வடக்கிலிருந்து, தெற்குப்பகுதிக்கு, இக்கலிலேயக்கடல்வழியாகப்பாய்ந்து ஓடுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக