ஆகஸ்டு
05ம் தேதி .
மகா பரிசுத்த பனிமய மாதாவின் பசிலிக்கா பேராலயம் (மகா பரிசுத்த தேவமாதாவின் தலைமை பசிலிக்கா தேவாலயம்)அபிஷேகம் செய்யப்பட்ட திருநாள்.
இந்த பசிலிக்கா தேவாலயம்
உலகிலேயே மிகப்பழமையானதும் மிக முக்கியமானதுமான தேவமாதாவிற்கு
தோத்திரமாகக் கட்டப்பட்ட தேவாலயங்களில், திருயாத்திரை ஷேத்திரங்களில், ஒன்றாகக் திகழ்கிறது! மகா பரிசுத்த தேவமாதா
தாமே கேட்டுக் கொண்டதன்பேரில் தான், இந்த பசிலிக்கா தேவாலயம்
கட்டப்பட்டது; இவ்வற்புத நிகழ்வு, “பனிமயமாதா!” என்கிற மகா பரிசுத்த தேவமாதாவின்
மிகப்பழமையான பட்டத்தை , நாம் அறியும்படிச் செய்தது! பாரம்பரியத்தின்படி, உரோமையைச் சேர்ந்த ஒரு பத்ரீசியரான ஜியோவான்னியும்
அவருடைய மனைவியும், குழந்தை யில்லாமல், தங்களுடைய உடைமைகளை நிர்வகிப்பதற்குத் தங்களுக்கு ஒரு வாரிசு வேண்டுமென்று,
மகா பரிசுத்த தேவமாதா விடம், பக்திபற்றுதலுடன் ஜெபித்து வேண்டிக் கொண்டிருந்தனர். மகா பரிசுத்த தேவமாதா,
352ம் வருடம், ஆகஸ்டு 4ம் தேதிக்கும் 5ம்
தேதிக்கும் இடையில் இரவின்போது, இத்தம்பதியருக்குக் காட்சியளித்து,
தமக்குத் தோத்திரமாக உரோமையிலுள்ள எஸ்குயிலின் குன்றின்மீது, ஒரு தேவாலயத்தைக் கட்ட
வேண்டும் என்றும், அக்குன்றின் மேல் தேவாலயம் கட்ட வேண்டிய இடம்,
மிகச்சரியாக, பனியினால் குறிக்கப்பட்டிருக்கும், என்றும் கூறினார்கள். அச்சமயம், இத்தாலியில் கடுமையான கோடைகால உஷ்ணம் நிலவியது. அதே சமயம், மகா
பரிசுத்த தேவமாதா கூறியதுபோல், புதுமையாக தேவாலயம் கட்டப்பட வேண்டிய இடத்தை, பனி மூடியிருந்தது. மகா
பரிசுத்த தேவமாதா, பாப்பரசர் லிபேரியசுக்கும் அதே இரவில் தோன்றி
இதைப்பற்றி அறிவித்திருந்ததால், தேவாலயம் கட்டப்பட வேண்டிய இடம், புதுமையாகப் பனிபடர்ந்து இருப்பதை, அவரும் வந்து பார்த்தார்.
352ம் வருடம், ஆகஸ்டு,
5ம் தேதியன்று, காலையில், ஜியோவான்னியும், அவருடைய மனைவியும் எஸ்குயிலின் குன்றிற்கு விரைந்து சென்றனர்; அச்சமயம், பாப்பரசர் லிபேரியுசும் தமது பரிவாரங்களுடன் ஆடம்பர
பவனியாக, அந்த குன்றிற்கு வந்தார்.
இப்புதுமையைக் காண்பதற்கு அங்கு திரளான மக்கள் கூடியிருந்தனர்; பளிச்சிடும் வெண்பனி புதுமையாக அக்குன்றின் மீது படர்ந்திருந்ததை அனைவரும்
கண்டனர்; சூரிய ஒளி கடுமையாக இருந்தபோதிலும்,
அந்த இடத்திலிருந்த பனி புதுமையாக உருகாமல்,
படர்ந்திருக்கிறதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்! தேவாலயத்திற்கான அளவு குறிக்கப்பட்டது; அதன்பின்
பனி உருகியது; மகா பரிசுத்த தேவமாதா
பசிலிக்கா தேவாலயம், இரண்டு வருடங்களுக்குள் கட்டி முடிக்கப் பட்டது; பாப்பரசர் லிபேரியுசினால், அபிஷேகம் செய்யப்பட்டது.
எஃபேசுஸ் நகரில் 431ம் வருடம் நிகழ்ந்த
திருச்சபையின் பொதுச்சங்கம், மிகவும் பரிசுத்த கன்னிமரியம்மாளை, சர்வேசுர னுடைய மகா பரிசுத்த மாதா,
என்று அதிகார பூர்வமாகப்பிரகடனம் செய்தபோது, 3ம் சிக்ஸ்துஸ் பாப்பரசர்(432-
440), இந்த பசிலிக்கா தேவாலயத்தை திரும்பக் கட்டி, அழகுப்படுத்தினார்; அர்ச். 5ம் பத்திநாதர் பாப்பரசர்,
1568ம் வருடம், திரிதெந்தீன் பொதுச்சங்கத்தின் போது, உறுப்பினர்கள் கோரிய விண்ணப்பத்தின்படி, இத்திருநாளை பொது உரோம திருவழிபாட்டின்
காலண்டரில் சேர்த்தார். 18ம் நூற்றாண்டின்போது, இப்பசிலிக்கா தேவாலயம்,
முழுமையாக மறுபடியும் புதுப்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது! இந்த பசிலிக்கா தேவாலயத்தின்
முகப்பின் தோற்றமும், இதன் உள் தோற்றத்தின் அலங்காரங்கள்
எல்லாமும், இக்காலத்தைச் சேர்ந்த வேலைப்பாடு களாக இருக்கின்றன! இருப்பினும், பண்டைக்காலத்தில் மேற்கொள்ளப் பட்ட வேலைப்பாடுகளும், சலவைக்கற்தூண்களும், அநேக 5ம் நூற்றாண்டின் மொசைக்
கற்களும், அழகுற பாதுகாக்கப் பட்டிருக்கின்றன! உரோமாபுரியிலேயே, அதிக உயரமான மத்திய
நூற்றாண்டைச் சேர்ந்த 240 அடி உயர கோபுர மணியையும், இந்த பசிலிக்கா தேவாலயம்
கொண்டிருக்கிறது.
மகா பரிசுத்த தேவமாதாவின்
இந்த தலைமை பசிலிக்கா தேவாலயம், உலகத்திலேயே மிக நேர்த்தியான கலை
வேலைப்பாடு களையும், கட்டிடக்கலையின் அதிசய நுட்பங்களையும் கொண்டிருக்கிறது! தேவாலய உட்கூரையில் காணப்படும் ஓவியம், மத்திய நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சியின் காலத்தைச் சேர்ந்த ஜூலியானோ சங்கல்லோ என்பவரின் தலைசிறந்த கைவேலைப் பாடாகத் திகழ்கிறது! அச்சமயம், அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடித்த கிறிஸ்டோஃபர், அமெரிக்காவிலிருந்து ஸ்பெயின் நாட்டிற்குக் கொண்டு வந்ததும், ஸ்பெயின் நாட்டின் அரசரான ஃபெர்டினான்டினாலும், அரசி இசபெல்லாவினாலும், 6ம் அலெக்சாண்டர்
பாப்பரசருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டதுமான தங்கத்தினாலான பூச்சு வேலைப்பாட்டுடன், உள் தேவாலயத்தின் மேற்கூரையில்
தீட்டப்பட்ட வண்ண ஓவியம் இன்னும்
அழகுற மெருகேற்றப்பட்டது!
இப்பசிலிக்கா தேவாலயத்தில் இன்னும் இரண்டு முக்கியமாகக் குறிப்பிடத்தக்க கிறீஸ்துவ பொக்கிஷ திரவியங்கள் உள்ளன: முதலாவதாக, நமதாண்டவர், திவ்ய பாலனாக கிறீஸ்துமஸ் அன்று பெத்லகேம் குகையில் பிறந்து, கிடத்தப்பட்டிருந்த அந்த மாட்டுக் கொட்டில்
அல்லது முன்னிட்டியே, ஒரு அருளிக்கமாக, இத்தேவால
யத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற அருளிக்கங்களில், மகாக் குறிப்பிடத்தக்க அருளிக்கமாகத் திகழ்கிறது. ஏழாம் நூற்றாண்டின்போது, பாலஸ்தீனத்தை மகமதியர் கைப்பற்றியபோது, அகதிகளாக உரோமைக்கு வந்த கிறீஸ்துவர்கள் இந்த
பரிசுத்த முன்னிட்டியை, ஒரு அருளிக்கமாகத் தங்களுடன்
கொண்டு வந்தனர். இப்பரிசுத்த முன்னிட்டியானது, ஒரு மகா பெரிய
அருளிக்கமாக, இந்த பசிலிக்கா தேவாலய
முதன்மைப் பெரிய பீடத்தின் அடியில் ஸ்தாபிக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது!
மாட்சிமிக்க இவ்வருளிக்கத்தை நோக்கியபடி, அதற்கு எதிரில், 1854ம் வருடம் மகா
பரிசுத்த தேவமாதாவின் மகிமை மிகுந்த அமலோற்பவத்தை ஒரு விசுவாசப்பிரகடனமாக
அறிவித்த முத்.9ம் பத்தி நாதர்
பாப்பரசரின் சலவைக் கற்சுரூபம் ஸ்தாபிக்கப்பட்டிருக் கிறது. உரோமை மக்களுடைய இரட்சணியம் என்று அழைக்கப்படுகிறதும், உரோமை மக்களுடைய தன்னிகறற்ற தனிச்சிறந்த பக்தி முயற்சிக்குரியதுமான மகா பரிசுத்த தேவமாதாவின்
வரைபடத்தினுடைய ஓவியம் தான், அந்த இரண்டாவது மகா
விலையுயர்ந்த பொக்கிஷ திரவியமாக விளங்குகிறது! இந்த ஒவியத்தை வரைந்தவர்
அர்ச். லூக்காஸ் என்று பாரம்பரியம் அறிவிக்கிறது. மகா பரிசுத்த தேவமாதாவின்
இந்த அரிதான உன்னத ஓவியப் படத்தை, புண்ணிய பூமியிலிருந்து, மகா கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியின்
தாயாரான அர்ச் ஹெலன் உரோமாபுரிக்குக் கொண்டு வந்தார்கள். அர்ச்.
கிரகோரியார் பாப்பரசர் (590-604) ஆண்ட காலத்தில், உரோமை
நகரத்தை ஒரு கொள்ளை நோய்
தீண்டியபோது, உரோமை நகர மக்கள்,தங்களை
மோட்சத்திலிருந்து பாதுகாக்கிறவர் களான மகா பரிசுத்த தேவமாதாவிடம்,
ஜெபித்து வேண்டிக்கொள்ளும் படியாக, இவ்வற்புதப்படத்தை, பாப்பரசர் பக்தி பற்றுதலுடன், உரோமை நகரின் தெருக்களில், சுற்றுப்பிரகார பவனியாகக் கொண்டு சென்றார்.
இதன்பலனாக, புதுமையாக கொள்ளை நோய், நின்று போனவுடன், பாப்பரசர், மகா பரிசுத்த தேவமாதாவிற்கு
நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்த ஒரு மகா ஆடம்பரமான
சடங்கின்போது, இந்த அற்புதப் படத்திலுள்ள
மகா பரிசுத்த தேவமாதாவினுடைய திருத்தலையிலும், தேவபாலனுடைய திருத்தலையிலும், விலையுயர்ந்த மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தினாலான கிரீடங்களை சூட்டினார். இந்த பசிலிக்கா தேவாலயத்தில்
அர்ச். 5ம் சிக்ஸ்துஸ் பாப்பரசரும்,
அர்ச். 5ம் பத்திநாதர் பாப்பரசரும்
அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர், என்பதும் குறிப்பிடத்தக்கவையாகும். திருச்சபையின்
பரிசுத்தப் பாரம்பரிய சடங்குகளை நேசிப்பதற்கும் அவற்றிற்காகப் போராடுவதற்கும், பாத்திமாவில், மகா பரிசுத்த தேவமாதா,
தீர்க்கதரிசனமாகக் கூறியதன்பிரகாரம், துப்புரவு தண்டனைக் கால நாட்களில், நிகழவிருக்கும்
மகா வியக்க வைக்கும் புதுமைகளுக்கு நம்முடைய ஆத்துமங்களைத் திறப்பதற்கும், மகா பரிசுக்த தேவமாதா
நமக்கு உதவி செய்யும்படியாக, நாம்,
மகா பரிசுத்த பனிமய மாதா என்கிற மகிமைமிகு
பட்டத்தினால், அவர்களை நோக்கிக் கூவி அழைத்து மன்றாடி
ஜெபிப்போமாக! ✝
ஓ! மகா பரிசுத்த
பனிமய மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக