ஆகஸ்டு2️4️ம் தேதி
அப்போஸ்தலரான
அர்ச். பர்த்தலோமேயு திருநாள்
பர்த்தலோமேயு-
பார்-தோல்மை என்கிற வார்த்தையிலிருந்து வருகிறது; இதனுடைய அர்த்தம்- தோல்மை என்பவரின் மகன் என்று பொருள். இவர் , நமதாண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 அப்போஸ்தலர்களில் ஒருவா். இவரை ஆண்டவர் தாமே,
தமது அப்போஸ்தலராகும்படி அழைத்தார். இவர் கலிலேயாவிலுள்ள கானாவூரைச் சேர்ந்தவர். யூத சட்டத்தில் நிபுணத்துவம்
பெற்றவர்; டாக்டா் பட்டம் பெற்றவர்; அப்போஸ்தலரான அர்ச். பிலிப்புவின் நண்பா். இவருக்கு அளிக்கப்பட்ட நத்தனயேல் என்கிற பெயர் மிகப் பொருத்தமான பெயராயிருக்கிறது. ஆனால் முதல் மூன்று சுவிசேஷங்களும், இவரை பர்த்தலோமேயு என்று
எப்போதும் அழைக்கின்றன என்பதைப் பற்றி ஆச்சரியப்படலாம்; எபிரேய மொழியில், நத்தனயேல் என்கிற பெயரும் மத்தேயு என்கிற பெயரும், சர்வேசுரனுடைய கொடை என்கிற ஒரே
அர்த்தமுள்ளவை என்பதாலேயே, இரு அப்போஸ்தலர்களுக்கும் பெயரில் குழப்பம்
வரக் கூடாது என்பதற்காகவே, முதல் மூன்று சுவிசேஷகர்கள், எப்போதும், பாத்தலோமேயு என்ற பெயரில் மட்டுமே
இவரை அழைத்தனர். அர்ச். இராயப்பரும்,
அர்ச். பெலவேந்திரரும்
அறிவுறுத்தியதன்பேரில்,
அர்ச். பிலிப், கிறீஸ்துநாதரைக் கண்டறிந்ததைப் பற்றிய சந்தோஷ செய்தியை அறிவிக்கும்படியாக தன் நண்பரான பர்த்தலோமேயுவை
நோக்கித் துரிதமாகச்சென்றார்; பிலிப், அவரிடம், “வேதபிரமாணத்திலே, மோயீசனும், தீர்க்கதரிசிகளும் குறித்தெழுதினவரை நாங்கள் கண்டுகொண்டோம்; நீயும் வந்து பார்!” என்றார்.
தம்மை
நோக்கி நத்தனயேல் வருகிறதைக் கண்டதும், நமதாண்டவர், “இதோ! கபடற்ற இஸ்ராயேலன்!”
என்று கூறினார்.ஆண்டவர், நத்தனயேலிடம், “பிலிப் உன்னை அழைப்பதற்கு முன், நீ அத்திமரத்தின் கீழ்
இருந்தபோதே, நான் உன்னைப் பார்த்தேன்!” என்று கூறினார். உடனே, நத்தனயேல், ஆண்டவரிடம், “ராபி!
நீர் சர்வேசுரனுடைய குமாரன்! இஸ்ராயேலின் இராஜா!” என்று கூறினார். (அரு 1:45-49) இவர், பெந்தேகோஸ்தே திருநாளுக்குப் பின், நாகரீகமடையாத மகா மோசமான காட்டுமிராண்டிகள்
ஜீவித்த கிழக்கத்திய நாடுகளுக்கு, இந்தியாவிலுள்ள இந்தியா-ஃபெலிக்ஸ் பகுதி வரைச் சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்; மனந்திரும்பிய அநேக அஞ்ஞானிகளுக்கு ஞானஸ்நானம்
அளித்தார்; அநேகரிடமிருந்து பசாசுக்களைத் துரத்தினார். அர்ச். மத்தேயு எழுதிய சுவிசேஷத்தை இவர் இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்; அர்ச். மத்தேயுவினால் எபிரேய மொழியில், எழுதப்பட்ட இந்த சுவிசேஷத்தை, இந்தியாவில்
வளர்ந்து வந்த திருச்சபையானது, தன்
விலைமதியாத திரவியமாகப் பாதுகாத்து வந்ததை, பின்னாளில், 2ம் நூற்றாண்டில், இப்பகுதிக்கு
வந்த அர்ச். பந்தனேயுஸ் குறிப்பிடுகின்றார்;
அர்ச்.
பந்தனேயுஸ், அர்ச். மத்தேயு
சுவிசேஷத்தை, தன்னுடன் அலெக்சாண்டிரியாவிற்கு எடுத்துச் சென்றார். அர்ச். பர்த்தலோமேயுவின் இறுதி அப்போஸ்தல அலுவல், ஆர்மீனியா வில் நிறைவேற்றப்பட்டது. அங்கிருந்த அஞ்ஞானிகள் பிடிவாதமாக விக்கிரகங்களை வழிபடுவதில் ஈடுபடுவதைக் கண்டித்து, இவர் சத்திய வேதத்தைப் பிரசங்கித்த போது, இவருக்கு மகிமையான வேதசாட்சிய கிரீடம் சூட்டப்பட்டது! ஆர்மீனியாவில், அந்நாட்டின் அரசனான ஆஸ்டியேஜஸ் என்பவன், அர்ச். பர்த்தலோமேயுவிற்கு மரண தண்டனை விதித்தான்;
உயிருடன் இவருடைய தோலை உரித்து, கி.பி.71ம் வருடம்
இவருடைய தலையை வெட்டிக் கொன்றனர்.
அர்ச்.
பர்த்தலோமேயுவின் பரிசுத்த
சரீரம், புதுமையாக தண்ணீரினால் அடித்துச் செல்லப்பட்டு, சிசிலி தீவின் அருகிலுள்ள லிபாரி என்ற ஒரு சிறிய
தீவில் சேர்க்கப்பட்டது! இங்குள்ள அர்ச். பர்த்தலோமேயு
கதீட்ரல் தேவாலயத்தில், இவருடைய பரித்தத் தோலின் பெரும்பகுதியும், அநேக அருளிக்கங்களான பரிசுத்த
எலும்புகளும் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன! கிபி 983ம் வருடம், 2ம்
ஓட்டோ சக்கரவர்த்தி, இப்பரிசுத்த அருளிக்கங்களை உரோமாபுரியிலுள்ள அர்ச். பர்த்தலோமேயு பசிலிக்காவிற்குக் கொண்டு வந்தார். அர்ச். பர்த்தலோமேயுவின் பரிசுத்த மண்டை ஓட்டின் ஒரு பகுதி, ஜெர்மனியின்
பிராங்க்பர்ட்டிலுள்ள கதீட்ரலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது! அர்ச்சிஷ்டவருடைய திருக்கரமானது,
இங்கிலாந்திலுள்ள கான்டர்பரி கதீட்ரல் தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!
இரண்டு
முக்கியமான பண்டைக்கால சாட்சியங்கள் அப்போஸ்தலரான அர்ச். பர்த்தலோமேயு இந்தியாவில் ஆற்றிய அப்போஸ்தல அலுவலைப் பறை சாற்றுகின்றன! 4வது
நூற்றாண்டைச் சேர்ந்த செசரையாவின் யுசேபியுஸ் என்பவர் எழுதிய குறிப்பேடுகளும், அதே நூற்றாண்டைச் சேர்ந்த
அர்ச். ஜெரோம் எழுதிய குறிப்பேடுகளும், 2ம் நூற்றாண்டில் அர்ச்.
பந்தேனுஸ் இந்தியாவிற்குச்
சென்று அப்போஸ்தல அலுவல் புரிந்ததைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடுகின்றன! சேசுசபைக் குருவான சங். பெருமாலில் சுவாமியாரும் மோரேஸ் என்பவரும் மேற்கொண்ட ஆய்வுக்கட்டுரை, கொங்கன் கடற்கரையிலுள்ள பம் பாய்ப் பகுதியில்
அப்போஸ்தலரான அர்ச். பர்த்தலோமேயு தன் வேத போதக
அலுவல்களை ஆற்றினார்! என்று குறிப்பிடுகிறது!
பண்டைக்கால
துறைமுக நகரங்களான கல்யாண், தானே, பாஸ்ஸேயின் போன்றவற்றை உள்ளடக்கிய இப்பகுதியில் தான், இவர் தனது அப்போஸ்தல அலுவலை
நிறைவேற்றினார்; அநேகரை கிறீஸ்துவர்களாக மனந்திருப்பினார்; ஆகவே தான், இப்பகுதி,
“இந்தியா-ஃபெலிக்ஸ்”,
அதாவது “பாக்கியமான இந்தியப்பகுதி” என்று
அழைக் கப்படுகிறது! 7ம் நூற்றாண்டின் சரித்திர
ஆசிரியர் சொஃப்ரோனியுஸ் என்பவரின் குறிப்பின்படி, அர்ச். பர்த்தலோமேயு, பாக்கியமான இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு, சுவிசேஷத்தைப் போதித்தார். கிரேக்க பாரம்பரியத்தின்படி, அப்போஸ்தலரான அர்ச். பர்த்தலோமேயு, இந்தியா-ஃபெலிக்ஸ் பகுதிக்குச் சென்றார். சமஸ்கிருதத்தில்
கல்யாண் என்கிற வார்த்தைக்கு வளமை, அல்லது சந்தோஷம் என்று
அர்த்தம்; இலத்தினில், ஃபெலிக்ஸ் என்ற வார்த்தைக்கு சந்தோஷம்
அல்லது பாக்கியம் என்று அர்த்தம்.
ஆகவே
தான், பண்டைக்கால துறைமுக நகரங்களான கல்யாண், தானே, பாஸ்ஸேயின், சலேஸ்ஸாடே மற்றும் பாம்பே தீவுகள் அடங்கிய பகுதியைப் பற்றி அயல்நாட்டவர் குறிப்பிடும் போது, இந்தியா-ஃபெலிக்ஸ் பாக்கியமான இந்தியப்பகுதி) என்று குறிப்பிடுகின்றனர். இந்தியர்களுக்கு, சந்தோஷமான அல்லது பாக்கியமான இந்தியர்கள் என்கிற அடைமொழியும் அளிக்கப்பட்டது. இந்தியாவில்
கிறீஸ்துவ வேதம், இந்தியா-ஃபெலிக்ஸ் பகுதியிலுள்ள துறைமுக நகரங்களைச் சுற்றிலும், முதல் நூற்றாண்டிலேயே, வேகமாகப் பரவி வளர்ந்தது!
என்பதை 2ம் நூற்றாண்டில், அதாவது
கிபி 189ம் வருடம், இப்பகுதிக்கு வந்த அர்ச். பந்தேனுஸ் குறிப்பிடுகின்றார். பின்னாளில்
இந்தியாவில் இஸ்லாமிய மதம், பரவியபோது, அரபிக் கடலின் எதிர்ப்புறத்திலிருந்த துலுக்க நாடுகளின் கலிஃபாக்களை, வளமை நிறை இந்தியா-ஃபெலிக்ஸ் பகுதி தன் பக்கமாகக் கவர்ந்திழுத்ததால்,
இப்பகுதியையும் துலுக்கர்கள் கைப்பற்றினர். இக்காலத்தில், சக்திய கத்தோலிக்க வேதம் இப்பகுதியில் மறையலாயிற்று! போர்த்துக்கீசிய படையினரின் சிலுவைப்போர் உணர்விற்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்!
1533ம் வருடம், ஜனவரி 20ம் தேதியன்று, போர்த்துக்கல்,
பாஸ்ஸேயினில் நிகழ்ந்த போரில் மகமதியரைத் தோற்கடித்து வீழ்த்தி, இந்தியா-ஃபெலிக்ஸ் பகுதி, கொடூர மூர்க்கர்களான மகமதியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டது! ✝
அப்போஸ்தலரான
அர்ச். பர்த்தலோமேயுவே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!