Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 13, St. HIPPOLYTUS , அர்ச்‌. ஹிப்போலிடஸ்

 

ஆகஸ்டு 13ம் தேதி

வேதசாட்சியான அர்ச்‌. ஹிப்போலிடஸ் திருநாள்

            இன்று, அர்ச்‌. ஹிப்போலிடஸின் திருநாளையும் கொண்டாடுகிறோம். இவர் உரோமைக் காவல்படை வீரர். உரோமைத் தலைமைத் தியாக்கோனும், வேதசாட்சியுமான அர்ச்‌. லாரன்ஸ் கொடூரமாக சித்ரவதைச் செய்யப்பட்டபோது, இவர், அவருக்குக் காவல் வீரராக இருந்து அவரைக் கண்காணித்து, வந்தார்; அச்சமயம், அர்ச்‌. லாரன்ஸ், பெரிய இரும்பு அடுப்புக்கட்டிலில் கிடத்தப்பட்டு,  சூடேற்றப்பட்டு, உயிருடன் வறுத்தெடுக்கப்பட்டபோது, அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்தமுகத்தில் காணப்பட்ட மகிமையான பரலோக சந்தோஷ ஒளியை, இவர் கண்டார்.

            அகஷணமே, தேவபராமரிப்பினால், இவர்,மனந்திரும்புவதற்குத் தேவையான தேவ வரப்பிரசாதத்தைப் பெற்று, அர்ச்‌. லாரன்சிடம், தனக்கு ஞானஸ்நானம் வேண்டும் என்று கேட்டார்;அதன்படி,அர்ச்‌. லாரன்சிடம் ஞானஸ்நானம் பெற்று, கிறீஸ்துவரானார்; இதைக் கேள்விப் பட்ட உரோமை ஆளுநன், இவரைக் கொன்று போடக் கட்டளையிட்டான்; அதன்படி, இவருடைய கால்களைக் கயிற்றினால்கட்டி, அந்த கயிற்றை, முரட்டுக் குதிரைகளுடன் கட்டி விட்டனர். இவ்விதமாக, 260ம் ஆண்டு, அர்ச்‌.  ஹிப்போலிடஸ் , மகிமையான வேதசாட்சி முடியைப் பெற்றுக்கொண்டார்.

வேதசாட்சியான அர்ச்‌. ஹிப்போலிடஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!                                                                                                                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக