Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

August 9 - St. Romanus - அர்ச்‌. ரோமானுஸ்

 

ஆகஸ்டு 0️9ம்தேதி     

வேதசாட்சியான அர்ச்‌.  ரோமானுஸ்திருநாள்




   உரோமையின்பரிசுத்த தியோக்கோனான அர்ச்‌. லாரன்ஸை உரோமை சக்கரவர்த்தியான வலேரியன்‌, நீதிவிசாரணை செய்யும்போதும்‌, அவரைக்கொடூரமாக சித்ரவதை செய்து, உபத்திரவப்படுத்திய போதும்‌, உரோமை இராணுவ வீரராக, அங்கிருந்து அர்ச்‌. லாரன்ஸை உற்றுக்கவனித்துக்கொண்டிருந்த உரோமைப்படைவீரர்தான்‌, அர்ச்‌. ரோமானுஸ்‌.

                பரிசுத்த வேதசாட்சியான அர்ச்‌. லாரன்ஸ்அனுபவித்த கொடிய உபத்திரவங்கள்மத்தியில்‌,கொண்டிருந்த பரலோக சந்தோஷத்தையும்‌, சுபாவத்திற்கு மேற்பட்ட நீடித்த பொறுமையையும்‌, தன் துன்ப உபத்திரவத்தைப்பற்றிய எந்த முறையீடுமில்லாத முழுமையான மவுனத்தையும்கண்டு, அவரைக்கண்காணித்து வந்த உரோமைப் படை வீரரான ரோமானுஸ்பெரிதும்ஆச்சரியத்துடன்‌, திகைப்பில்ஆழ்ந்தார்‌. இரத்தமும்சரீரமும்உள்ள ஒரு மனிதரால்‌, இவ்வளவு கொடிய சித்ரவதையை எவ்வாறு பொறுமையுடன்ஏற்று, ஒரு முறையீடும்செய்யாமல்இருக்கக்கூடும்‌? என்பதைப்பற்றிப்புரிந்துகொள்ள இயலாதவராக, தனக்குள்வியந்துகொண்டிருந்தபோது, விசேஷ தேவ வரப்பிரசாத ஏவுதலால்‌, கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஏற்றுக்கொள்ள ஆவல்கொண்டார்‌.

                அர்ச்‌. லாரன்ஸ்‌, சித்ரவதைக்கான அடுக்குத்தட்டில்கட்டப் பட்டிருந்த போது, அக்கொடிய உபாதனை நேரத்தில்‌, ரோமானுஸ்‌, அர்ச்‌. லாரன்ஸை நோக்கி, தானும்ஒரு கிறீஸ்துவனாக வேண்டும்என்கிற ஆவலை தெரிவித்தார்‌. அர்ச்‌.  லாரன்ஸ்‌, கட்டவிழ்க்கப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டபோது, தன்னிடம்இடைவிடாமல்‌, கிறீஸ்துவனாக வேண்டும்என்று கேட்டுக்கொண்டிருந்த ரோமானுஸிடம்தண்ணீர்கொண்டு வரும்படிக்கூறினார்‌. அவர்தண்ணீர்கொண்டு வந்தபோது, அந்த தண்ணீரினால்‌, அர்ச்‌. லாரன்ஸ்‌, அவருக்கு ஞானஸ்நானம்கொடுத்தார்‌. உடனே நீதியாசனத்தின்முன்பாக ரோமானுஸ்இழுத்துச்செல்லப்பட்டார்‌. அங்கே, ரோமானுஸ்‌, எதற்கும்‌, யாருக்கும்அஞ்சாமல்‌, மிகுந்த சந்தோஷத்துடன்‌, நான்ஒரு கிறீஸ்துவன்‌! என்று கம்பீரமாக உரத்தக்குரலில்கூறினார்‌.

                உடனே, அவர்மரணதண்டனை விதிக்கப்பட்டு, தலைவெட்டிக்கொல்லப்பட்டார்‌; அர்ச்‌. லாரன்ஸ்வேதசாட்சியாகக்கொல்லப்படு வதற்கு முந்தின நாளன்று, அதாவது, கி.பி.258ம்வருடம்‌, ஆகஸ்டு9ம்தேதியன்று, அர்ச்‌. ரோமானுஸ்வேதசாட்சியாகக்கொல்லப்பட்டார்‌. இவருடைய பரிசுத்த சரீரம்ஒரு குருவானவரால்பூஜிதமாக, தைபர்நதிக்குச்செல்கிற பாதையினருகில்உள்ள ஒரு குகையில்அடக்கம்செய்யப்பட்டது. பின்‌, இவருடைய பரிசுத்த அருளிக்கங்கள்‌, லூக்காவிலுள்ள அர்ச்‌.  ரோமானுஸ்தேவாலயத்தின்பிரதான பீடத்தின்அடியில்ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்ஒரு பேழைக்கு, இடமாற்றம்செய்யப்பட்டன.

வேதசாட்சியான அர்ச்‌.  ரோமானுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக