ஜூலை
31ம் தேதி
புராட்டஸ்டன்டு பதிதத்தப்பறையிலிருந்து திருச்சபையைக் காப்பாற்றும்படியாக, சர்வேசுரனுடைய விசேஷ தேவ வரப்பிரசாதத் தைப் பெற்று, சேசு சபையை ஸ்தாபித்தவரும், வேத இயல் அறிஞரும், ஸ்துதியருமான அர்ச் இலொயோலா இஞ்ஞாசியார் திருநாள்.
அர்ச். இஞ்ஞாசியாருடைய பெயர், இக்னேஷியஸ் லோபெஸ். இவர், 1491ம் வருடம், அக்டோபர்
23ம் தேதியன்று, ஸ்பெயினிலுள்ள இலொயோலா என்ற கோட்டையில் பிறந்தார்.
இவருடைய பெற்றோர்களுக்கு, இவர் 19வது கடைசி மகனாகப்
பிறந்தார். 17 வயதில், இராணுவத்தில் சேர்ந்தார். ஒரு சமயம் ஒரு
மகமதியன், நமதாண்ட வருடைய தேவத்துவத்தை மறுத்தபோது, அர்ச். இஞ்ஞாசியார், அவனை சாகும் வரைப்
போரிடக்கூடிய தனிச்சண்டைக்கு அழைத்தார். கத்திச்சண்டையின் இறுதியில், அவனை வீழ்த்தி, அவன்
மேல் வெற்றிகொண்டார். 1509ம் வருடம், நவார்
வைஸ்ராயாக இருந்த அன்டோனி யோ டி லாரா
என்பவருக்காக, பாம்பலூனா கோட்டையைப் பாதுகாப்பதற்காக, பிரஞ்சுப் படைக்கு எதிராகப் போரில் பங்கேற்றார்;
1527ம் வருடம் மே
20ம் தேதியன்று, பாம்பலூனா கோட்டை கைப்பற்றப்பட்டது! ஒரு பீரங்கிக் குண்டு,
இக்கோட்டையைத் தாக்கியபோது, இவர் பெரிதும் காயப்பட்டு, உயிருக்கே ஆபத்தாகி, மருத்துவமனையில், சிகிச்சைபெற்றார். இவருடைய ஒரு கால், காயமடைந்தது!
இது, இவருடைய ஜீவிய காலமெல்லாம் ஊனமாகவே இருந்தது. மருத்துவமனையிலிருந்தபோது, நமதாண்டவருடைய ஜீவிய சரித்திரம், என்கிற புத்தகமும்,
அர்ச்சிஷ்டவர்களின் ஜீவிய சரித்திரமும், இவருக்கு வாசிக்கக்கிடைத்தன.
இவ்விரு புத்தகங்களும், இவருடைய ஜீவியத்தையே, முழுமையாக மாற்றின! அர்ச். இஞ்ஞாசியார், இராணுவத்தைத் துறந்தார். சர்வேசுரனுக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்தார்; 1522ம் வருடம், மார்ச்
மாதத்தில், மோன்செராத்திலுள்ள மகா பரிசுத்த தேவமாதா
வின் திருயாத்திரை ஸ்தலத்தில், தேவ பாலனுடன், பரலோக
இராக்கினி, இவருக்குக் காட்சியளித்தார்கள்! பிறகு, இவர், மன்ரேசா என்ற இடத்திலுள்ள ஒரு
குகைக்குச் சென்று, ஏகாந்தத்தில் ஜெப தப ஜீவியத்தில்,
ஒரு வருட காலம் ஜீவித்தார். 1523ம்
வருடம், செப்டம்பர் மாதம், அர்ச் இஞ்ஞாசியார், நமதாண்டவர் ஜீவித்த புண்ணியபூமிக்கு திருயாத்திரை சென்றார்: 1531ம் வருடம், பாரீஸ்
நகரை அடைந்தார்; அச்சமயம், பிரான்ஸ் நாட்டில் குழப்பத்தையும், பதிதத்தப்பறை களையும் ஏற்படுத்திக்கொண்டிருந்த புராட்டஸ்டன்டுகளுக்கு எதிராக, பிரஞ்சுக் கத்தோலிக்கர்கள் போராட்டத்தில், கால்வினிஸ்டு பதிதத் தப்பறையை பரப்பி வந்த ஜான் கால்வின்,
பிரான்சை விட்டு ஓடிப் போனான். பாரீஸ்
நகரப் பல்கலைக்கழகத்தில், அர்ச். இஞ்ஞாசியார், வேத இயலில் முனைவர்
பட்டம் பெற்றார்; அச்சமயம், இவர் சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக, புராட்டஸ்டன்டு போன்ற பதிதத்தப்பறைகளிலிருந்து, திருச்சபையைப் பாதுகாக்கும்படி, சர்வேசுரனுடைய வேத சத்தியங்களையும், ஞான உபதேசத்தையும்,
உலகமெங்கும் கற்பிக்கும்படியான உத்தமமான கத்தோலிக்க பள்ளிக் கூடங்களையும், கல்லூரிகளையும் கட்டும்படியாகவும், எல்லாவற் றிற்கும் மேலாக, சேசு சபையை ஸ்தாபிக்கவும்,
தன்னுடன் சேசுசபையில் துறவிகளாக சேர்ந்து, ஆத்துமங்களை இரட்சணியப் பாதைக்குக் கூட்டி வரும்படியாக உழைப்பதற்கு, தன் பிறகே வரக்கூடிய
ஆறு பேரைக்
கவர்ந்திழுத்தார்:
அர்ச். பிரான்சிஸ் சவேரியார், அல்ஃபோன்சோ சால்மரான்,
தியகோ லேனெஸ், நிக்கோலாஸ் போபாடில்லா ஆகிய நான்கு இஸ்பானியர்களையும்,
பீட்டர் ஃபேபர் என்கிற ஒரு பிரஞ்சு நாட்டினரும்,
சிமாவோ ரொட்ரிகஸ் என்கிற ஒரு போர்த்துக்கல் நாட்டினரும்,
அர்ச். இஞ்ஞாசியாரைப் பின்பற்றி, முதன் முதலில் சேசுசபையில், ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் என்கிற வார்த்தைப்பாடுகள் கொடுத்து துறவிக ளாகச் சேர்ந்த ஆறு பேர்களாவர்.
1539ம் வருடம் ஆகஸ்டு
15ம் தேதியன்று, அர்ச்.இராயப்பர் தேவாலயத்தில், மோன்மாத்தர்
என்ற இடத்தில், அர்ச். இஞ்ஞாசியாரும், இந்த
ஆறு பேர்களும், சேசு சபை என்கிற
துறவற சபையை ஸ்தாபித்தனர். இதில் சங். பீட்டர் ஃபேபர் மட்டுமே ஒரு குருவாக இருந்தார்.
மற்றவர்கள் எல்லாரும், பின்னாளில் குருப்பட்டம் பெற்றனர். 1580ம் வருடம், 3ம்
சின்னப்பர் பாப்பரசர், சேசு சபைக்கு, அங்கீகாரம்
அளித்தார். சேசு சபை உலகெங்கிலும்
பரவி, துறவற மடங்களையும், தேவாலயங்களையும், கல்விநிலையங்களையும் கட்டி, சகல பதிதத் தப்பறைகளிலிருந்தும்,
சத்திய கத்தோலிக்க திருச்சபையைப் பாதுகாத்து வந்தது! அர்ச். பிரான்சிஸ் சவேரியார், இந்தியாவிற்கும், ஐப்பான் போன்ற கீழை நாடுகளுக்கும் வந்து,
சத்திய வேதத்தைப் பரப்பினார்.
அர்ச் இஞ்ஞாசியார், 1556ம் வருடம், ஜுலை
31ம் தேதியன்று பாக்கியமாய் மரித்தார்; 1609ம் வருடம் ஜூலை
27ம் தேதியன்று, 2ம் சின்னப்பர் பாப்பரசரால்
, முத்திப்பேறு பட்டமும், 1622ம் வருடம் மார்ச்
12ம் தேதியன்று, 18ம் கிரகோரி பாப்பரசரால்
அர்ச்சிஷ்டப்பட்டமும் அளிக்கப்பட்டது! அர்ச் இலொயோலா இஞ்ஞாசியார், மருத்துவமனை யில் வாசித்த தே வீடா கிறிஸ்தி
என்கிற புத்தகம், அதாவது நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய ஜீவிய சரித்திரம் என்கிற புத்தகமானது, ஆதித்திருச்சபையின் தந்தையர்களான மாபெரும் அர்ச்சிஷ்டவர்கள் 60 பேர் எழுதிய நூல்களிலிருந்து கையாளப்பட்ட மேற்கோள்களுடன், சுவிசேஷ புத்தகங்களின் விளக்க வுரை நூலாகத் தொகுக்கப்பட்டிருந்தது! எளிய தியானம் என்கிற
ஜெப முறையானது, அர்ச். இஞ்ஞாசியார், தனது ஞான முயற்சிகள்
என்கிற தியான பயிற்சிக்காக ஏற்படுத்திய அடிப்படை பயிற்சிமுறையாக விளங்குகிறது!
அகில
திருச்சபையெங்கிலும்
தேவசிநேக நெருப்பைப் பற்றி யெரியச் செய்த சேசு சபையின் ஸ்தாபகரும், வேத இயல் அறிஞரும், ஸ்துதியருமான அர்ச் இலொயோலா இஞ்ஞாசியாரே! எங்களுக் காக வேண்டிக்கொள்ளும்!
Life History of St. Ignatius of Loyala in Tamil.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக