ஜூலை
29ம் தேதி
அர்ச். மார்த்தம்மாள் திருநாள்
அர்ச்.
மார்த்தம்மாள்,
சகோதரியான அர்ச். மரிய
மதலேனம்மா ளுடனும், சகோதரரான
அர்ச். லாசருடனும் ஜெருசலேமுக்கு அருகிலுள்ள பெத்தானியா என்ற கிராமத்தில் வசித்ததாகவும்,
நமதாண்டவர் இம்மூவரையும் சிநேகித்ததாகவும், அர்ச். லூக்காஸ்
மற்றும் அர்ச். அருளப்பர் சுவிசேஷங்களில் (அரு 11:5) வாசிக்கிறோம். தன் சகோதரர் லாசர்
இறந்தபோது, நமதாண்டவரிடம் அர்ச். மார்த்தம்மாள் கொண்டிருந்த மாபெரும் விசுவாசத்தை சுவிசேஷத்தில் காண்கிறோம். அச்சமயம், பெத்தானியாவிற்கு ஆண்டவர் வருகிறார் என்று கேள்விப்பட்டதும், ஆண்டவரிடம் விரைந்தோடிப்போய், ஆண்டவரே! தேவரீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க
மாட்டான், என்று கூறினாள்.
ஆண்டவர் அவளிடம் , “லாசர் இறக்கவில்லை! அவன் எழுந்திருப்பான்; என்னிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பவன், இறப்பினும் உயிர்வாழ்வான்! இதை நீ விசுவசிக்கிறாயா?”
என்று வினவினார். அதற்கு, அவள், “ஆம்! ஆண்டவரே! நீர் கிறீஸ்து என்றும், உலகத்திற்கு இறங்கி வந்த சர்வேசுரனுடைய திவ்ய
குமாரன் என்றும் நான் விசுவசிக்கிறேன், என்று பதில் கூறினாள். ஆண்டவருக்கு, மிகவும் பிரியமுள்ள இக்குடும்பத்தைப் பற்றி, மறுபடியும் சுவிசேஷத்தில், நாம் எதையும் காண்கிறதில்லை! ஆனால் திருச்சபையின் பரிசுத்தப் பாரம்பரியம், இக்குடும்பத்தினா், இன்னும் சில சகக் கிறீஸ்துவர்
களுடன், கி.பி.47ம் வருடம்
ஜெருசலேமில் கிறீஸ்துவர்களுக்கு எதிரான வேதகலாபனை துவங்கியபோது, யூதர்களால் எந்த துடுப்பும், பாய்மர
மும் இல்லாத ஒரு படகிலே ஏற்றப்பட்டு,
மத்தியக்தரைக்கடலிலே அனுப்பி
வைக்கப்பட்டனர், என்றும், அது, புதுமையாக மத்தியத்
தரைக்கடலைக் கடந்து, பிரான்சின் தெற்கு துறைமுக நகரமான மார்சேல்ஸை அடைந்தது என்றும் கூறுகின்றது.
பிரான்சில், அர்ச். மார்த்தம்மாள், பரிசுத்த ஸ்திரீகளுடன் சேர்ந்து ஒரு
குழுவாக, பக்த சபையை ஏற்படுத்தி,
ஜீவித்து வந்தார்கள்; அர்ச். மார்த்தம்மாள்,
மாபெரும் ஜெப தப பரிகார
ஜீவியம் ஜீவித்து வந்தார்கள்; யாவரும் வியக்கத்தக்க ஆச்சரியத்திற்குரிய தபசினுடையவும், பரி சுத்தத்தனத்தினுடையவும் ஜீவியம் ஜீவித்து,
கி.பி.84ம் வருடம்,
பாக்கியமாய் மரித்தார்கள்; டாராஸ்கோன் என்ற இடத்தில் பூஜிதமாக
ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்கள். அருகில் மலைக் குகையில் தபோதனராக ஜெபத்திலும் தபசிலும் ஜீவித்த அர்ச். மரிய மதலேனம்மாளின் கல்லறை, லா செயிண்ட் போம்
என்ற இடத்தில் இருக்கிறது; அர்ச். லாசருஸ், மார்சேல்ஸ் நகரில், கத்தோலிக்க திருச்சசபையை ஸ்தாபித்தவர் என்று வணங்கப்படுகிறார்.
இவர்கள் தான், நமதாண்டவர் தீர்க்கதரிசனமாக முன்னறிவிப்பு செய்து எச்சரித்திருந்ததன்படி, விரைவில் அடுத்து வரவிருக்கும் ஜெருசலேமின் அழிவின்போது, யூதர்களாலும், உரோமையர்களாலும், அவசங்கை செய்யப்பட்டுவிடும் என்கிற அச்சத்தினால், மகா பரிசுத்த அர்ச்.
அன்னம்மாளின் பரிசுத்த
அருளிக்கங்களை, இரகசியமாக பிரான்சிற்குக் கொண்டு வந்தனர்! ஸ்பெயின் நாடு, அர்ச். மார்த்தம்மாளை, அந்நாட்டின் பாதுகாவலராக ஏற்று மகிமைப்படுத்திக் கொண்டாடி வருகிறது; ஸ்பெயின் நாட்டில் வில்லாயோயோசா என்ற நகரில், அர்ச்.
மார்த்தம்மாளுக்குத் தோத்திர
மகிமையாக, வருடந் தோறும், கிறீஸ்துவர்களுடையவும், மூர் இனமக்களுடையவும் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
இந்த திருவிழா, 1538ம்
வருடம், ஸாலே ஆர்ராயேஸ் என்பவனுடைய
தலைமையின் கீழ் படையெடுத்து வந்த மகமதியரி டமிருந்து அர்ச். மார்த்தம்மாள் இந்நகரைப் புதுமையாகக்
காப்பாற்றி யதன் ஞாபகார்த்தமாகவே, கொண்டாடப்படுகிறது; அச்சமயம், இந்நகர மக்கள், தங்கள் நகரத்தை,மகமதியரிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று, அர்ச். மார்த்தம்மாளிடம் வேண்டிக்கொண்டனர். அர்ச். மார்த்தம்மாள், திடீரென்று ஒரு வெள்ளத்தை ஏற்படுத்தி,
அதன் முலம் இந்நகரை தாக்க வந்த மகமதியப் படையை
அந்த வெள்ளத்தினுள் அமிழ்ந்து மூழ்கச்செய்து, இந்நகர மக்களைக் காப்பாற்றினார்கள். தேவாலய மணிகளை, அர்ச்சித்து மந்திரிக்கும் திருச்சபையின் சடங்கின்போது,நமதாண்டவர் அர்ச். மார்த்தம்மாளின் வீட்டிற்கு வருகிற சுவிசேஷ நிகழ்வு, வாசிக்கப்பட்டு நினைவு கூரப்படுகிறது! ✝
அர்ச். மார்த்தம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக