Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
செவ்வாய், 17 டிசம்பர், 2024
டிசம்பர் 16ம் தேதி - அர்ச் யுசேபியுஸ்
செவ்வாய், 10 டிசம்பர், 2024
Story about St. Lucy, written in a dialogue format
Here’s a story about St. Lucy, written in a dialogue format to make it engaging for children:
Scene: A Cozy Living Room
Grandma sits on a rocking chair with her grandchildren, Mia and Leo, sitting cross-legged on a rug. The fireplace crackles warmly.
Mia: Grandma, can you tell us a story about a saint?
Grandma: Of course, Mia! Let me tell you about St. Lucy, a brave young girl who lived a long, long time ago.
Leo: Was she like a superhero?
Grandma: In a way, yes! Lucy had a heart full of courage and love. She lived in Sicily, a beautiful island in Italy, over 1,700 years ago. Back then, many people had to keep their faith in Jesus a secret because it was dangerous.
Mia: Why was it dangerous, Grandma?
Grandma: The rulers didn’t like Christians because they refused to worship the Roman gods. Lucy loved Jesus so much that she wanted to dedicate her whole life to Him.
Leo: How did she do that?
Grandma: Lucy decided she didn’t want to get married because she wanted to help the poor and pray to God. But there was a problem. Her mother wanted her to marry a rich man who didn’t believe in Jesus.
Mia: Oh no! What did Lucy do?
Grandma: Lucy prayed for guidance. She also prayed for her mother, who was sick, to be healed. Guess what?
Leo: What?
Grandma: Her mother was healed! Lucy’s mom was so amazed that she agreed to let Lucy follow her heart and live for Jesus.
Mia: That’s amazing! But what about the rich man?
Grandma: Ah, he wasn’t happy when Lucy said she wouldn’t marry him. He was so angry that he told the Roman governor Lucy was a Christian.
Leo: Oh no! Did she get in trouble?
Grandma: Yes, the governor tried to make Lucy worship the Roman gods, but she refused. She said, "I only serve Jesus." They tried to make her leave her faith, but Lucy stayed strong, even when they threatened her.
Mia: Wasn’t she scared?
Grandma: She must have been, but her love for Jesus made her brave. She trusted that God was with her.
Leo: What happened to her?
Grandma: Lucy suffered for her faith, but her story inspired so many people to be brave and kind. Today, St. Lucy is remembered as a saint, and her name means "light."
Mia: Why light?
Grandma: Because Lucy’s faith shone brightly, even in dark times. In some places, people celebrate her feast day, December 13th, by wearing crowns of candles to remember her light.
Leo: I want to be brave like Lucy!
Mia: Me too! Can we light candles for her feast day, Grandma?
Grandma: Absolutely, my loves. St. Lucy’s story reminds us to be kind, brave, and full of faith, no matter what.
The children hug Grandma, imagining themselves shining like little lights in the world.
This version is simple and engaging while highlighting St. Lucy’s courage and faith in a way that children can understand and admire.
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024
August 6 - Transfiguration of Our Lord - நமதாண்டவர் மறுரூபமான திருநாள்
ஆகஸ்டு 06ம் தேதி
நமதாண்டவர் மறுரூபமான திருநாள்
தமது பரிசுத்தப் பாடுகளுக்கு ஒரு வருடத்திற்கு முன், நமதாண்டவர்,தம் பிரிய அப்போஸ்தலர்களான அர்ச். இராயப்பர், அர்ச். யாகப்பா், அர்ச். அருளப்பருடன் கலிலேயாவிலுள்ள தாபோர் மலை உச்சிக்குச் சென்றார். இந்த மலையின் உச்சி , திபேரியக் கடலிலிருந்து ஏறக்குறைய 2000 அடி உயரத்திலிருக்கிறது. இங்கு தான், ஆண்டவர் தமது தேவமகிமையை வெளிப்படுத்தினார்: அவருடையமுகம் சூரிய னைப் போல் துலங்கினது; அவருடைய வஸ்திரங்கள் வெண்மை யாயின! (மத் 17:2) வேத சட்டத்தையும், தீர்க்கதரிசனங்களையும் குறிக்கும்விதமாக, மோயீசனும், எலியாசும், மறுரூபமான ஆண்டவரை ஆராதிக்கிறதாகக் காணப்பட்டார்கள்; “இவரே நமது பிரிய குமாரன்! இவரில் நாம் பூரண பிரியமாயிருக்கிறோம்!” என்று பகிரங்கமாக பிதாவாகிய சர்வேசுரன் தாமே,தமது ஏகக் குமாரனைப்பற்றி அறிவிக்கிற குரலொலி, மறுபடி, இச்சமயத்திலும் கேட்கப்படுகிறது. நமதாண்டவரின் பகிரங்க ஜீவியத்தின் உச்சக்கட்டமாகவும், மோட்ச மகிமையின் முன்சுவையாகவும் திகழ்கிற நமதாண்டவரின் மகிமைமிகு மறுரூபத் திருநிகழ்வு, இப்பிரிய அப்போஸ்தலர்களின் இருதயங்களில், ஆண்டவரின் பரிசுத்த உபாதனையினுடைய பாடுகளின் நாளில், தேவ விசுவாசத்தை உறுதிப்படுத்தும் விதமாக நிகழ்ந்தது!
பரம இரகசியமான இத்திருநிகழ்வு நிகழ்ந்த இடத்தில், தாபோர் மலையில்,4ம் நூற்றாண்டில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டு, ஆகஸ்டு 6ம்தேதி அபிஷேகம் செய்யப்பட்டது. ஆண்டவருடைய மகிமைமிகு மறுரூபமான திருநிகழ்வுக்குத் தோத்திரமாக, மத்திய கிழக்கு நாடுளில் திருநாள் கொண்டாடும் வழக்கம், இதே காலத்தில், துவங்கியது. ஐரோப்பாவின் அநேக பகுதிகளில் , இந்த திருநாள் கொண்டாடும் வழக்கம், 8ம் நூற்றாண்டிலிருந்து துவங்கியது . 1456ம் வருடம், ஜூலை 22ம் தேதியன்று, பெல்கிரேடிட்டில் துலுக்கர்களுக்கு எதிராக நிகழ்ந்த ஒரு சிலுவைப்போரில், மிகச்சிறிய கத்தோலிக்கர்களுடைய படை, ஒரு மாபெரும் துருக்கியப் படையை நசுக்கி, அதன் மீது வெற்றியடைந்தது! உரோமாபுரியை நோக்கி, அந்நகரத்தைக் கைப்பற்றும்படியாக அணிவகுத்துச் சென்ற 1,20,000 மகமதிய வீரர்களைக் கத்தோலிக்க இராணுவம்,கொன்று குவித்தது; பல்லாயிரக்கணக்கான துலுக்க வீரர்கள்,இப்போரில் படுகாய மடைந்தனர்; இப்போரில் கத்தோலிக்க இராணுவம் அடைந்த வெற்றியின் செய்தி, ஆகஸ்டு மாதம் 6ம் தேதி , 3ம் காலிஸ்துஸ் பாப்பரசரை அடைந்தது. ஆண்டவருக்கு நன்றியறிதலாக, ஆண்டவருடைய மறுரூபமான திருநாளை, ஏற்படுத்தி,ஆகஸ்டு 6ம்தேதியன்று, அடுத்தவருடத்திலிருந்து, இத்திருநாளை அகில உலகம் முழுவதும் கொண்டாடும்படியாகக் கட்டளையிடடார். மேலும், இந்தபோரில் அடைந்த வெற்றிக்கு, மகா பரிசுத்த தேவ மாதாவிற்கும் நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்தும் விதமாக, 3ம் காலிஸ்துஸ் பாப்பரசர், இனிவரும் காலத்தில், எல்லா தேவாலயங்களிலும் மத்தியம் 12 மணிக்கு தேவமாதாவிற்குத் தோத்திரமகிமையாக, திரிகால ஜெபம் ஜெபிக்கும்படியாக, தேவாலய மணிகள் அடிக்கப்பட வேண்டும் என்று , உத்தரவிட்டார். ஏனெனில் மத்தியம் 12 மணிக்கு தான், துலுக்கப் படை நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டது! எனவே, அடுத்த தடவை நீ மத்தியம், தேவாலயங்களில் 12 மணி திரிகால ஜெபத்திற்கான மணி சத்தத்தைக் கேட்கும்போது, திரிகால ஜெபத்தை பக்தி பற்றுதலுடன் ஜெபி! மேலும், சத்துருக்களுக்கு எதிராக மகா பரிசுத்த தேவமாதா கொண்டிருக்கிற மகத்துவமிக்க இராணுவ வல்லமையைப் பற்றி நினைவு கூர்வாயாக! ✝
ஓ! மகா பரிசுத்த மரியாயே! தேவரீர் போரணியிலிருக்கும் இராணுவத்தைப் போல், மகா வல்லமையுள்ளவர்களாயிருக்கிறீர்!
திபேரிய ஏரி, கலிலேயக் கடல், ஜெனசரேத் ஏரி, திபேரியக் கடல் ஆகிய பெயர்கள் எல்லாம், இஸ்ரேலில் உள்ள ஒரே ஏரியைக் குறிக்கின்றன. இது மிகப்பெரிய நல்ல தண்ணீர் ஏரி; இதன் சுற்றளவு ஏறக் குறைய 53 கி.மீ. இதன் நீளம், 23 கி.மீ ; அகலம் 13 கி.மீ. கடல் மட்டத்திலிருந்து, 209 மீ கீமே தாழ்வாக இருக்கிறது! உப்புத்தண்ணீர் ஏரியான சாக்கடலுக்கு அடுத்தபடியாக, உலகத்திலேயே இரண்டாவது மிக தாழ்ந்த ஏரியாக, இந்த ஏரி இருக்கிறது. இந்த கலிலேயக் கடலிற்கு பூமிக்கு அடியிலிருக்கும் நல்ல தண்ணீர் ஊற்றுகளிலிருந்து தண்ணீர் வருகிறது; அத்துடன், இதற்கு வருகிற தண்ணீருக்கு முதன்மையான முக்கிய ஆதாரமாயிருப்பது, யோர்தான் நதியாகும். யோர் தான் நதி, பாலஸ்தீனத்தின் வடக்கிலிருந்து, தெற்குப் பகுதிக்கு, இக்கலிலேயக் கடல் வழியாகப் பாய்ந்து ஓடுகிறது.
August 4 - St. Dominic (அர்ச். சாமிநாதர்)
ஆகஸ்டு 4ம் தேதி
போதக துறவியர் சபையின் ஸ்தாபகரும், மகா
பரிசுத்த ஜெபமாலையின் மூலம் ஆல்பிஜென்சிய பதிதத் தப்பறையிலிருந்து, உலகத்தைக் காப்பாற்றிய
மகிமைமிகு பிதாப்பிதாவுமான அர்ச். சாமிநாதர் திருநாள்
அர்ச்.தோமினிக் என்கிற அர்ச். சாமிநாதர், கி.பி.1170ம்
வருடம், ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். கர்ப்பஸ்திரீகளான தாய்மார்களுக்குப் பாதுகாவலரான
அர்ச். சீலோஸ் தோமினிக்கின் பெயரையே இவருக்கு வைத்தனர்.பலேன்சியா பல்கலைக்கழகத்தில்,
கல்வி பயின்றார்; 24வது வயதில்,குருப்பட்டம் பெற்றார். 1199ம் வருடம், ஓஸ்மா
நகர கதீட்ரல் தேவாலய அதிபராக நியமிக்கப்பட்டார். 1203ம் வருடம், ஓஸ்மா நகர மேற்றிராணியாருடன்
பிரான்சின் தெற்குப் பகுதிகளுக்குச் சென்றபோது, அப்பகுதிகளில், ஆல்பிஜென்சியப்
பதிதத்தப்பறை, பிரான்ஸ் மக்களுடைய ஞான ஜீவியத்தில் ஏற்படுத்திய மாபெரும் ஆத்தும
சேதத்தையும், சீரழிவையும், துயரமான சூழலையும் கண்டு பெரிதும் மனச் சஞ்சலமடைந்தார்.
1208ம் வருடம், பிரான்சின் தெற்குப்பகுதியை
ஆக்ரமித் திருந்த ஆல்பிஜென்சியரிடமிருந்து கத்தோலிக்க மக்களைப் பாதுகாக்கும்படி அனுப்பப்பட்ட
பாப்பரசரின் தூதுவரான காஸ்டெல்னெனின் பீட்டர் என்பவர், ஆல்பிஜென்சியரால் கொல்லப்பட்டபோது,
3ம் இன்னசென்ட் பாப்பரசர்,ஆல்பி ஜென்சிய பதிதர்களுக்கு எதிரான ஒரு சிலுவைப்போரை,
4ம் சைமன் டி மோன்ஃபோர்ட் என்ற பிரபுவின் தலைமையில் துவக்கி வைத்தார்; இப்போர்
அடுத்த ஏழு வருடகாலம் நீடித்தது. இவருடைய படை வீரர்களுடன் அர்ச்.சாமிநாதர் கூட
சென்று, அப்பகுதியிலிருந்த ஆல்பிஜென்சிய பதிதர்களுக்கு ஞானப்பிரசங்கங் கள் நிகழ்த்தினார்.
இச்சமயம், அர்ச்.சாமிநாதர் நிகழ்த்திய பிரசங்கங்களால், அதிக நன்மை ஏற்படவில்லை!
1214ம் வருடம்,சைமன் பிரபு, காஸ்ஸெனேவுயில்
என்ற இடத்திலிருந்த ஒரு கோட்டையை அர்ச். சாமிநாதருக்கு அளித்தார். இங்கு, சத்திய
கத்தோலிக்க வேத சத்தியங்களைப் பாதுகாப்பதற்கும், ஆல்பிஜென்சிய பதிதத் தப்பறையை அழிப்பதற்கும்,
ஆல்பிஜென்சிய பதிதர்களை மனந்திருப்புவதற்குமாக, ஆறு துறவியருடன், அர்ச். சாமிநாதர்
போதக துறவியர் சபையை ஸ்தாபித்தார்; அதே சமயம், ஆல்பிஜென்சிய பதிதம் வளர்ந்ததற்குக்
காரணம், பாவம் தான்! என்பதையும், அவர்கள் மனந்திரும்புவதற்குத் தடையாயிருப்பதும்
பாவம் தான்! என்பதையும் உணர்ந்த அர்ச். சாமிநாதர், ஆல்பிஜென்ய பதிதத்தை, அழித்து
ஒழிப்பதற்காகவும், இப்பதிதர்கள் மனந்திரும்புவதற்காகவும், தூலோஸ் நகரத்திற்கு அருகிலுள்ள
ஒரு காட்டில், மூன்று இரவும் மூன்று பகலுமாக தொடர்ந்து, ஜெபத்திலும், தபசிலும் ஈடுபட்டிருந்த
போது, அர்ச்.சாமிநாகருக்கு,மகா பரிசுத்த தேவ மாதா காட்சியளித்து, இப்பதிதத்தை அழிப்பதற்காகவும்
ஆல்பிஜென் சியப் பதிதர்களையும், பாவிகளையும் மனந்திருப்புவதற்காகவும், மகா பரிசுத்த
ஜெபமாலையை அளித்தார்கள். மகா பரிசுத்த தேவமாதா, அப்போது, அர்ச்.சாமிநாதரிடம், “இத்தகைய
போராட்டத்தின்போது, புதிய ஏற்பாட்டின் அஸ்திவாரக்கல்லாகத் திகழ்கிற சம்மனசானவரின்
சங்கீதமாலை (அருள்நிறை மந்திரம்) தான், எப்போதும் முதன்மையான ஆயுதமாகக் திகழ்கிறது!
என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
ஆகவே, இந்த கடினப்பட்ட ஆத்துமங்களை அணுகுவதற்கும்,
அவர்களை, சர்வேசுரனிடம் மனந்திருப்பிக் கொண்டு வருவதற்கும், என்னுடைய சங்கீத (அருள்
நிறை மந்திர மாலை) மாலையை அவர்களுக்குப் பிரசங்கி!” என்று கூறினார்கள். அதன்படியே,
மகா பரிசுத்த ஜெபமாலையின் மூலமாக, ஆல்பிஜென்சிய பதிதத்தை, பிரான்ஸ் நாட்டில் அழித்தொழித்தார்;
3ம் ஹொனோரியுஸ் பாப்பரசர், போதகர் துறவற சபையை (இப்போது அர்ச்.சாமிநாதர் சபை
என்று அழைக்கப்படுகிறது), 1217ம் வருடம் அங்கீகரித்து, அகில உலகத்திலும் போதிப்பதற்கான
அதிகாரத்தை, போதகத் துறவியருக்கு அளித்தார். (பிற்காலத்தில் வரவிருந்த பதிதத் தப்பறைகளையும்,
அர்ச்.சாமிநாதர் சபையினர், மகா பரிசுத்த ஜெபமாலையின் உதவியினால், உலகத்தில் அழித்தொழிப்பதை,
திருச்சபையின் சரித்திரத்தில் காணலாம்).அர்ச். சாமிநாதா், தனது ஜீவிய காலத்தின்
இறுதி வருடங்களை,தனது துறவற சபையை, நிர்வகிப்பதிலும், சீரமைப்பதிலும்,ஸ்திரப்படுத்துவதிலும்,
புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கான புதிய மடங்களை ஸ்தாபிப்பதிலும்,
இத்தாலி,ஸ்பெயின்,பிரான்ஸ் நாடுகளெங்கும், இதற்காக பயணிப்பதிலும், ஈடுபட்டிருந்தார்.
ஒரு இலட்சம் பதிதர்களை, மனந்திருப்பி, சத்திய திருச்சபையில் சேர்த்தார். அர்ச்.சாமிநாதர்,தனது
51வது வயதில், 1221ம் வருடம், ஆகஸ்டு 6ம் தேதியன்று, இத்தாலி, பொலோஞா நகரில்,
பாக்கியமாய் மரித்தார். 9ம் கிரகோரி பாப்பரசரால், 1234ம் வருடம், ஐூலை 13ம்
தேதியன்று, இவருக்கு,அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது.
ஆல்பிஜென்சியப்
பதிதம் என்றால் என்ன?
இத்தப்பறை,
மத்திய நூற்றாண்டுகளில், ஆல்பி என்ற ஒரு தெற்குப் பிரான்சின் நகரத்திலிருந்து தோன்றிய
தப்பறையாகும். இப்பதிதத் தப்பறை, இரண்டு கடவுள்கள் இருப்பதாகவும், அதில், நமதாண்டவரை
நல்லகடவுள் என்றும், பழைய ஏற்பாட்டின் கடவுளை கெட்ட கடவுளாகவும், பசாசையே அந்த
கெட்டகடவுளாகவும் கூறி பிதற்றியது. இந்த தப்பறையை , மகா பரிசுத்த ஜெபமாலை அழித்து
நிர்மூலமாக்கியது; அர்ச்.சாமிநாதர் சபைத்துறவியர் மூலமாகவே, மகா பரிசுத்த ஜெபமாலை
மீதான பக்தி உலகம் முழுவதும் பரவியது. அர்ச்.சாமிநாதர் துறவற சபைத் துறவியருக்கும்,
மால்டா தீவின் அரசாங்கத்திற்கும், மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது; அர்ச்.சாமிநாதர்
துறவற சபையைச் சேர்ந்த துறவியும், மாபெரும் அர்ச்சிஷ்டவருமான அர்ச். 5ம் பத்திநாதா்
பாப்பரசர், மால்டா தீவிலுள்ள அர்ச்.அருளப்பரின் வீரர்கள் வலெட்டா என்ற நகரத்தைக்
கட்டுவதற்கு உதவினார்.✝
“தன்
ஆசாபாசங்களை ஆண்டு நடத்துகிற ஒரு மனிதன், உலகத்தினுடைய அதிபதியாகத் திகழ்கிறான்;
ஒன்றில் நாம், நம் ஆசாபாசங்களைக் கட்டாயமாக ஆண்டு நடத்த வேண்டும்; அல்லது. அவை
நம்மை ஆண்டு நடத்திவிடும்! ஆகவே, அடிக்கப்படுகிற ஒரு பட்டறைக் கல்லாக இருப்பதைவிட,
அடிக்கிற ஒரு சுத்தியலாக இருப்பதே மேல்!”
📚✍🏻 + அர்ச்.சாமிநாதர்.
காண்பவர் இருதயங்களில் தேவசிநேக நெருப்பைத்தூண்டுகிறவரும், மகா பரிசுத்த ஜெபமாலை மூலமாக பதிதத் தப்பறைகளை அழித்தவரும், போதக துறவியர் சபையின் ஸ்தாபகரும், சரீரமெடுத்த பக்தி சுவாலகரும், மகிமை மிகுந்த பிதாப்பிதாவுமான அர்ச்.சாமிநாதரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!