Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

saints story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
saints story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

August 4 - St. Dominic (அர்ச். சாமிநாதர்)

ஆகஸ்டு 4ம் தேதி

போதக துறவியர் சபையின் ஸ்தாபகரும், மகா பரிசுத்த ஜெபமாலையின் மூலம் ஆல்பிஜென்சிய பதிதத் தப்பறையிலிருந்து, உலகத்தைக் காப்பாற்றிய மகிமைமிகு பிதாப்பிதாவுமான அர்ச். சாமிநாதர் திருநாள்

 

 அர்ச்‌.தோமினிக்‌ என்கிற அர்ச்‌. சாமிநாதர்‌, கி.பி.1170ம்‌ வருடம்‌, ஸ்பெயின்‌ நாட்டில்‌ பிறந்தார்‌. கர்ப்பஸ்திரீகளான தாய்மார்களுக்குப்‌ பாதுகாவலரான அர்ச்‌. சீலோஸ்‌ தோமினிக்கின்‌ பெயரையே இவருக்கு வைத்தனர்‌.பலேன்சியா பல்கலைக்கழகத்தில்‌, கல்வி பயின்றார்‌; 24வது வயதில்‌,குருப்பட்டம்‌ பெற்றார்‌. 1199ம்‌ வருடம்‌, ஓஸ்மா நகர கதீட்ரல்‌ தேவாலய அதிபராக நியமிக்கப்பட்டார்‌. 1203ம்‌ வருடம்‌, ஓஸ்மா நகர மேற்றிராணியாருடன்‌ பிரான்சின்‌ தெற்குப்‌ பகுதிகளுக்குச்‌ சென்றபோது, அப்பகுதிகளில்‌, ஆல்பிஜென்சியப்‌ பதிதத்தப்பறை, பிரான்ஸ்‌ மக்களுடைய ஞான ஜீவியத்தில்‌ ஏற்படுத்திய மாபெரும்‌ ஆத்தும சேதத்தையும்‌, சீரழிவையும்‌, துயரமான சூழலையும்‌ கண்டு பெரிதும்‌ மனச்‌ சஞ்சலமடைந்தார்‌.

1208ம்‌ வருடம்‌, பிரான்‌சின்‌ தெற்குப்பகுதியை ஆக்ரமித்‌ திருந்த ஆல்பிஜென்சியரிடமிருந்து கத்தோலிக்க மக்களைப்‌ பாதுகாக்கும்படி அனுப்பப்பட்ட பாப்பரசரின்‌ தூதுவரான காஸ்டெல்னெனின்‌ பீட்டர்‌ என்பவர்‌, ஆல்பிஜென்சியரால்‌ கொல்லப்பட்டபோது, 3ம்‌ இன்னசென்ட்‌ பாப்பரசர்‌,ஆல்பி ஜென்சிய பதிதர்களுக்கு எதிரான ஒரு சிலுவைப்போரை, 4ம்‌ சைமன்‌ டி மோன்ஃபோர்ட்‌ என்ற பிரபுவின்‌ தலைமையில்‌ துவக்கி வைத்தார்‌; இப்போர்‌ அடுத்த ஏழு வருடகாலம்‌ நீடித்தது. இவருடைய படை வீரர்களுடன்‌ அர்ச்‌.சாமிநாதர்‌ கூட சென்று, அப்பகுதியிலிருந்த ஆல்பிஜென்சிய பதிதர்களுக்கு ஞானப்பிரசங்கங் கள்‌ நிகழ்த்தினார்‌. இச்சமயம்‌, அர்ச்‌.சாமிநாதர்‌ நிகழ்த்திய பிரசங்கங்களால்‌, அதிக நன்மை ஏற்படவில்லை!

1214ம்‌ வருடம்‌,சைமன்‌ பிரபு, காஸ்ஸெனேவுயில்‌ என்ற இடத்திலிருந்த ஒரு கோட்டையை அர்ச்‌. சாமிநாதருக்கு அளித்தார்‌. இங்கு, சத்திய கத்தோலிக்க வேத சத்தியங்களைப்‌ பாதுகாப்பதற்கும்‌, ஆல்பிஜென்சிய பதிதத் தப்பறையை அழிப்பதற்கும்‌, ஆல்பிஜென்சிய பதிதர்களை மனந்திருப்புவதற்குமாக, ஆறு துறவியருடன்‌, அர்ச்‌. சாமிநாதர்‌ போதக துறவியர்‌ சபையை ஸ்தாபித்தார்‌; அதே சமயம்‌, ஆல்பிஜென்சிய பதிதம்‌ வளர்ந்ததற்குக்‌ காரணம்‌, பாவம்‌ தான்‌! என்பதையும்‌, அவர்கள்‌ மனந்திரும்புவதற்குத்‌ தடையாயிருப்பதும் பாவம்‌ தான்!‌ என்பதையும்‌ உணர்ந்த அர்ச்‌. சாமிநாதர்‌, ஆல்பிஜென்ய பதிதத்தை, அழித்து ஒழிப்பதற்காகவும்‌, இப்பதிதர்கள்‌ மனந்திரும்புவதற்காகவும்‌, தூலோஸ்‌ நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு காட்டில்‌, மூன்று இரவும்‌ மூன்று பகலுமாக தொடர்ந்து, ஜெபத்திலும், தபசிலும்‌ ஈடுபட்டிருந்த போது, அர்ச்‌.சாமிநாகருக்கு,மகா பரிசுத்த தேவ மாதா காட்சியளித்து, இப்பதிதத்தை அழிப்பதற்காகவும்‌ ஆல்பிஜென்‌ சியப்‌ பதிதர்களையும்‌, பாவிகளையும்‌ மனந்திருப்புவதற்காகவும், மகா பரிசுத்த ஜெபமாலையை அளித்தார்கள்‌. மகா பரிசுத்த தேவமாதா, அப்போது, அர்ச்‌.சாமிநாதரிடம்‌, “இத்தகைய போராட்டத்தின்போது, புதிய ஏற்பாட்டின்‌ அஸ்திவாரக்கல்லாகத்‌ திகழ்கிற சம்மனசானவரின்‌ சங்கீதமாலை (அருள்நிறை மந்திரம்‌) தான்‌, எப்போதும்‌ முதன்மையான ஆயுதமாகக்‌ திகழ்கிறது! என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டுமென்று நான்‌ விரும்புகிறேன்‌.

ஆகவே, இந்த கடினப்பட்ட ஆத்துமங்களை அணுகுவதற்கும்‌, அவர்களை, சர்வேசுரனிடம்‌ மனந்திருப்பிக்‌ கொண்டு வருவதற்கும்‌, என்னுடைய சங்கீத (அருள்‌ நிறை மந்திர மாலை) மாலையை அவர்களுக்குப் பிரசங்கி!” என்று கூறினார்கள்‌. அதன்படியே, மகா பரிசுத்த ஜெபமாலையின்‌ மூலமாக, ஆல்பிஜென்சிய பதிதத்தை, பிரான்ஸ்‌ நாட்டில்‌ அழித்தொழித்தார்‌; 3ம்‌ ஹொனோரியுஸ்‌ பாப்பரசர்‌, போதகர்‌ துறவற சபையை (இப்போது அர்ச்‌.சாமிநாதர்‌ சபை என்று அழைக்கப்படுகிறது), 1217ம்‌ வருடம்‌ அங்கீகரித்து, அகில உலகத்திலும் போதிப்பதற்கான அதிகாரத்தை, போதகத்‌ துறவியருக்கு அளித்தார்‌. (பிற்காலத்தில்‌ வரவிருந்த பதிதத்‌ தப்பறைகளையும்‌, அர்ச்‌.சாமிநாதர்‌ சபையினர்‌, மகா பரிசுத்த ஜெபமாலையின்‌ உதவியினால்‌, உலகத்தில்‌ அழித்தொழிப்பதை, திருச்சபையின்‌ சரித்திரத்தில்‌ காணலாம்‌).அர்ச்‌. சாமிநாதா்‌, தனது ஜீவிய காலத்தின் இறுதி வருடங்களை,தனது துறவற சபையை, நிர்வகிப்பதிலும்‌, சீரமைப்பதிலும்‌,ஸ்திரப்படுத்துவதிலும்‌, புதிய உறுப்பினர்களை ஏற்‌றுக்கொண்டு, அவர்களுக்கான புதிய மடங்களை ஸ்தாபிப்பதிலும்‌, இத்தாலி,ஸ்பெயின்‌,பிரான்ஸ் நாடுகளெங்கும்‌, இதற்காக பயணிப்பதிலும்‌, ஈடுபட்டிருந்தார்‌. ஒரு இலட்சம்‌ பதிதர்களை, மனந்திருப்பி, சத்திய திருச்சபையில்‌ சேர்த்தார்‌. அர்ச்‌.சாமிநாதர்‌,தனது 51வது வயதில்‌, 1221ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 6ம்‌ தேதியன்று, இத்தாலி, பொலோஞா நகரில்‌, பாக்கியமாய்‌ மரித்தார்‌. 9ம்‌ கிரகோரி பாப்பரசரால்‌, 1234ம்‌ வருடம்‌, ஐூலை 13ம்‌ தேதியன்று, இவருக்கு,அர்ச்சிஷ்டப்பட்டம்‌ அளிக்‌கப்பட்டது.

 

ஆல்பிஜென்சியப்‌ பதிதம்‌ என்றால்‌ என்ன?

இத்தப்பறை, மத்திய நூற்றாண்டுகளில்‌, ஆல்பி என்ற ஒரு தெற்குப்‌ பிரான்சின்‌ நகரத்திலிருந்து தோன்றிய தப்பறையாகும்‌. இப்பதிதத்‌ தப்பறை, இரண்டு கடவுள்கள்‌ இருப்பதாகவும்‌, அதில்‌, நமதாண்டவரை நல்லகடவுள்‌ என்றும்‌, பழைய ஏற்பாட்டின்‌ கடவுளை கெட்ட கடவுளாகவும்‌, பசாசையே அந்த கெட்டகடவுளாகவும்‌ கூறி பிதற்றியது. இந்த தப்பறையை , மகா பரிசுத்த ஜெபமாலை அழித்து நிர்மூலமாக்கியது; அர்ச்‌.சாமிநாதர்‌ சபைத்துறவியர்‌ மூலமாகவே, மகா பரிசுத்த ஜெபமாலை மீதான பக்தி உலகம்‌ முழுவதும்‌ பரவியது. அர்ச்‌.சாமிநாதர்‌ துறவற சபைத்‌ துறவியருக்கும்‌, மால்டா தீவின்‌ அரசாங்கத்திற்கும்‌, மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது; அர்ச்‌.சாமிநாதர்‌ துறவற சபையைச்‌ சேர்ந்த துறவியும்‌, மாபெரும்‌ அர்ச்சிஷ்டவருமான அர்ச்‌. 5ம்‌ பத்திநாதா் பாப்பரசர்‌, மால்டா தீவிலுள்ள அர்ச்‌.அருளப்பரின்‌ வீரர்கள்‌ வலெட்டா என்ற நகரத்தைக்‌ கட்டுவதற்கு உதவினார்‌.

“தன்‌ ஆசாபாசங்களை ஆண்டு நடத்துகிற ஒரு மனிதன்‌, உலகத்தினுடைய அதிபதியாகத்‌ திகழ்கிறான்‌; ஒன்றில்‌ நாம்‌, நம்‌ ஆசாபாசங்களைக்‌ கட்டாயமாக ஆண்டு நடத்த வேண்டும்‌; அல்லது. அவை நம்‌மை ஆண்டு நடத்திவிடும்‌! ஆகவே, அடிக்கப்படுகிற ஒரு பட்டறைக்‌ கல்லாக இருப்பதைவிட, அடிக்கிற ஒரு சுத்தியலாக இருப்பதே மேல்‌!” 📚🏻 + அர்ச்‌.சாமிநாதர்‌.

 

காண்பவர்‌ இருதயங்களில்‌ தேவசிநேக நெருப்பைத்தூண்டுகிறவரும்‌, மகா பரிசுத்த ஜெபமாலை மூலமாக பதிதத்‌ தப்பறைகளை அழித்தவரும்‌, போதக துறவியர்‌ சபையின்‌ ஸ்தாபகரும்‌, சரீரமெடுத்த பக்தி சுவாலகரும்‌, மகிமை மிகுந்த பிதாப்பிதாவுமான அர்ச்‌.சாமிநாதரே! எங்களுக்காக வேண்டிக்‌ கொள்ளும்‌!