டிசம்பர் 16ம் தேதி
மேற்றிராணியாரும், வேதசாட்சியுமான அர்ச் யுசேபியுஸ்
அர்ச் யுசேபியுஸ்,கி.பி.283ம் வருடம், சார்டினியா தீவில் பிறந்தார். அந்த தீவில் தான் அவருடைய தந்தை வேத விசுவாசத்திற்காக சிறைவைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, வேதசாட்சியாக மரித்தார்; யுசேபியுஸ் உரோமாபுரியில் வளர்க்கப்பட்டார்; பக்தியிலும், கிறீஸ்துவ நல்லொழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்.பியட்மோன்ட் மாகாணத்திலுள்ள வெர்செல்லி நகரத்தில் கல்வி பயின்றார்.
அதே வெர்செல்லி நகரில், இவர் குருப்பட்டம் பெற்றார்; திருச்சபைக்காக ஆர்வமுடனும் உத்தமமான ஆன்ம ஈடேற்ற ஆவலுடனும் உழைத்து வந்தார்; அந்நகர மேற்றிராணியார் இறந்ததும், திருச்சபை அதிகாரிகளும், குருக்களும் அந்நகர மக்களும், ஏக மனதாக யுசேபியுஸை, மேற்றிராணியாராக தேர்ந்தெடுத்தனர். நம் பரிசுத்த மேற்றிராணியாரான யுசேபியுஸ் ஆண்டகை, தனது மந்தையிலுள்ள விசுவாசிகளை ஊக்கப்படுத்தவும், அர்ச்சிஷ்டவர்களாக உருவாக்கவும், உத்தம கத்தோலிக்க வேகத்தில் திடப்படுத்தவும் , மிகச்சிறந்த முதன்மையான வழிமுறையாக, ஆர்வமும் ஆன்ம ஈடேற்ற ஆவலும் கொண்ட பரிசுத்த குருக்களை மேற்றிராசனம் கொண்டிருக்க வேண்டும்! என்பதைக் கண்டுணர்ந்தார்.
அர்ச். அம்புரோஸியார், அர்ச். யுசேபியுஸினுடைய ஜீவியத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மேற்கத்திய நாடுகளில், தனது மேற்றிராசனத்திலுள்ள குருக்களுடைய ஜீவியமுறையை, கிழக்கத்திய நாடுகளில் வனாந்தரத்தில் ஜீவித்த தபோதனர்களுடைய ஜீவிய முறைக்கு ஒத்திருக்கும்படி செய்த மேற்கத்திய நாடுகளின் முதல் மேற்றிராணியாராக அர்ச். யுசேபியுஸ் திகழ்ந்தார்!” என்று விவரிக்கின்றார். வனாந்தரப் பாலைநிலங்களில், ஜீவித்த தபோதனர்கள், துறவியரைப் போலவே ஏறக்குறைய தனது மேற்றிராசனக் குருக்களும், திருச்சபை அதிகாரிகளும் ஜீவிக்கும்படி, அர்ச். யுசேபியுஸ் செய்தார். அவர்கள், ஒரே இடத்தில் தங்கியிருந்து, பொதுவான ஜெபத்திலும், தபசிலும் ஈடுபட்டனர்; மேற்றிராணியாருடைய இல்லத்திலேயே எல்லோரும் தங்கியிருந்து ஜெப தப பரிகார ஜீவியத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆப்ரிக்காவில் அர்ச். அகுஸ்தினாருடைய மேற்றிராசனத்திலும், இதேபோன்றதொரு ஜெப தப பரிகார ஜீவியத்தை மேற்றிராணியார், மற்றும் குருக்கள் துறவியர் யாவரும், பொதுவில் அனுசரித்து வந்தனர்.
அர்ச். யுசேபியுஸ், தனது ஞான மந்தைக்கு, சுவிசேஷ போதனைகளைப் பற்றி, கற்பிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். தனது நன்மாதிரிகையுடன் கூட, அவர் போதித்த ஞான உபதேசத்தினுடைய சத்தியத்தினுடைய உத்வேகமானது, அநேக பாவிகளை மனந்திருப்பி, கத்தோலிக்க வேதத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது!
அலெக்சான்டிரிய மேற்றிராணியாரான அர்ச். அத்தனாசியாரைக் கண்டிக்கும் நோக்கத்துடன் கான்ஸ்டன்ஸ் பேரரசனும், ஆரிய பதிதர்களும் சேர்ந்து செய்த சதித்திட்டத்தினால் இத்தாலியில், கூட்டப்பட்டதிருச்சபை சங்கத்தில், ஆரிய பதிதர்களை, அர்ச் யுசேபியுஸ், தைரியமாக எதிர்த்தார். நீசே சங்கத்தினுடைய விசுவாச பிரமாணத்தில் கூடியிருந்த சகலரும் கையொப்பமிடும்படி, அர்ச்.யுசேபியுஸ் எல்லாரிடமும் கேட்டுக்கொண்டார்; ஆனால், பதிதர்கள், அவரிடமிருந்து அந்த பிரமாணத்தின் தாளைப் பறித்து, அவர் முன்பாகவே கிழித்துப் போட்டார்கள்; அவருடைய எழுதுகோலை உடைததுப் போட்டார்கள். அர்ச். அத்தனாசியாரைக் கண்டனம் செய்யும்படியாக வற்புறுத்தப்பட்ட போது, மிலான் நகர மேற்றிராணியாரான அர்ச். டென்னிசுடன் சேர்ந்து, இவரும் அதற்குக் கையொப்பமிட மறுத்துவிட்டார். உடனே, கான்ஸ்டன்ஸ் பேரரசன், அர்ச். யுசேபியுசையும், அர்ச். டென்னிசையும், பாலஸ்தனத்திலுள்ள ஸ்கைதோபோலிஸ் என்ற இடத்திற்கு நாடு கடத்தினான். அதன் பிறகு, அங்கிருந்து கப்பதோசியாவிற்கு அனுப்பினான். அங்கே, அர்ச். டெனிஸ் இறந்தார்.
இறுதியாக, அர்ச். யுசேபியுஸ், எப்திலுள்ள தேபாய்டின் மேற்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு, இவர் மகாக் கொடூரமாக உபத்திரவப்படுத்தப்பட்டார். இங்கே, ஆரியப் பதிதர்கள், இவரை மிக இழிவாக அவமானப்படுத்தினர்; கொடூர சித்ரவதைகளால் இவரை துன்புறுத்தினர். அர்ச். யுசேபியுஸ், எங்கிருந்தாலும், அங்கிருந்த ஆரிய பதிதர்களை, தமது உன்னதமான முன்மாதிரிகையாலும், ஞானம் நிறைந்த கூர்மதியாலும், சிறுமைப் படுத்தினார்.
361ம் வருடம், கான்ஸ்டன்ஸ் இறந்தவுடன், அர்ச். யுசேபியுஸ் மறுபடியும் தனது மேற்றிராசனத்திற்குத் திரும்பி வந்தார். தன் ஜீவியகாலம் முழுவதும் ஆரிய பதிதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்; புவாரியே மேற்றிராணியாரான அர்ச். ஹிலாரியுடன் சேர்ந்து, ஆரிய பதிதத்தை முழுமூச்சாக எதிர்த்து வந்தார். இவருடைய புகழைப்பாடும் விதத்தில், அர்ச். அம்புரோஸியார் எழுதிய இரண்டு பாடல்கள் மூலம், அர்ச். யுசேபியுஸ் ஒரு வேதசாட்சி என்று அழைக்கப்படுகின்றார்.
இருட்டறை சிறையிலிருந்து, அர்ச். யுசேபியுஸ் எழுதிய இரண்டு கடிதங்கள், மட்டுமே, அவர் எழுதிய நூல்களில் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.ஒரு கடிதம், அவர் திருச்சபைக்கு எழுதிய கடிதம்; மற்றொன்று, எல்விரா மேற்றிராணியாருக்கு எழுதிய கடிதம் . இந்த கடிதத்தில், பதிதனாக மாறியவனை எதிர்க்கும்படியாகவும், அரசனுடைய அதிகார வல்லமையைக் கண்டு பயப்பட வேண்டாமென்றும், எல்விரா மேற்றிராணியாரை உற்சாகப்படுத்தி எழுதியிருந்தார். கி.பி.370ம் வருடம் அர்ச். யுசேபியுஸ் மரித்தார்; இவருடைய அருளிக்கங்கள் வெர்செல்லி நகர கதீட்ரலில் பீடத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன!
வேதசாட்சியும் மேற்றிராணியாருமான அர்ச்.யுசேபியுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
December 16
ST. EUSEBIUS OF VERCELLI
Eusebius was born in a noble family in A.D. 283, on the island of Sardinia, where his father died in prison for the Faith. He was brought up in Rome in the practice of piety, and studied in Vercelli, a city of Piedmont.
Eusebius was ordained a priest there, and served the Church of Vercelli with such zeal that when the episcopal chair became vacant he was unanimously chosen, by both clergy and people, to fill it.
The holy bishop saw that the best and principal means to labor effectually for the edification and sanctification of his people was to have a zealous clergy. Saint Ambrose assures us that he was the first bishop who in the West united the monastic life with the clerical, living and having his clergy live almost like the monks of the East in the deserts.
They shared a common life of prayer and penance, in a single residence, that of the bishop, as did the clergy of Saint Augustine in his African see. Saint Eusebius was very careful to instruct his flock in the maxims of the Gospel. The force of the truth which he preached, together with his example, brought many sinners to a change of life.
When a Council was held in Italy, under the influence of the Emperor Constans and the Arian heretics, with the intention of condemning Saint Athanasius, bishop of Alexandria, Saint Eusebius courageously resisted the heretics. He attempted to have all present sign the Nicene Creed, but the paper was torn out of his hands and his pen was broken.
With Saint Dionysus of Milan, he refused to sign the condemnation of the bishop of Alexandria. The Emperor therefore had him banished to Scythopolis in Palestine with Saint Dionysus of Milan, then to Cappadocia, where Saint Dionysus died; and finally he was taken to the Upper Thebaid in Egypt, where he suffered grievously. The Arians of these places loaded him with outrages and treated him cruelly, and Saint Eusebius confounded them wherever they were.
At the death of Constans in 361, he was permitted to return to his diocese, where he continued to combat Arianism, concertedly with Saint Hilarion of Poitiers. He has been called a martyr in two panegyrics appended to the works of Saint Ambrose.
Two of his letters, written from his dungeons, are still extant, the only ones of his writings which have survived. One is addressed to his church, the other to the bishop of Elvira to encourage him to oppose a fallen heretic and not fear the power of princes.
St. Eusebius died in the year 370. His relics are enshrined in the Cathedral of Vercelli, Italy.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக