ஆகஸ்டு 06ம்
தேதி
நமதாண்டவர் மறுரூபமான திருநாள்
தமது
பரிசுத்தப் பாடுகளுக்கு ஒரு வருடத்திற்கு முன்,
நமதாண்டவர்,தம் பிரிய அப்போஸ்தலர்களான
அர்ச். இராயப்பர், அர்ச். யாகப்பா், அர்ச். அருளப்பருடன் கலிலேயாவிலுள்ள தாபோர் மலை உச்சிக்குச் சென்றார்.
இந்த மலையின் உச்சி , திபேரியக் கடலிலிருந்து ஏறக்குறைய 2000 அடி உயரத்திலிருக்கிறது. இங்கு தான்,
ஆண்டவர் தமது தேவமகிமையை வெளிப்படுத்தினார்:
அவருடையமுகம் சூரிய னைப் போல் துலங்கினது; அவருடைய வஸ்திரங்கள் வெண்மை யாயின! (மத் 17:2) வேத சட்டத்தையும், தீர்க்கதரிசனங்களையும்
குறிக்கும்விதமாக, மோயீசனும், எலியாசும், மறுரூபமான ஆண்டவரை ஆராதிக்கிறதாகக் காணப்பட்டார்கள்; “இவரே நமது பிரிய
குமாரன்! இவரில் நாம் பூரண பிரியமாயிருக்கிறோம்!” என்று பகிரங்கமாக
பிதாவாகிய சர்வேசுரன் தாமே,தமது ஏகக்
குமாரனைப்பற்றி அறிவிக்கிற குரலொலி, மறுபடி, இச்சமயத்திலும் கேட்கப்படுகிறது. நமதாண்டவரின் பகிரங்க ஜீவியத்தின் உச்சக்கட்டமாகவும், மோட்ச மகிமையின் முன்சுவையாகவும் திகழ்கிற நமதாண்டவரின் மகிமைமிகு மறுரூபத் திருநிகழ்வு, இப்பிரிய அப்போஸ்தலர்களின் இருதயங்களில், ஆண்டவரின் பரிசுத்த உபாதனையினுடைய பாடுகளின் நாளில், தேவ விசுவாசத்தை உறுதிப்படுத்தும்
விதமாக நிகழ்ந்தது!
பரம இரகசியமான இத்திருநிகழ்வு
நிகழ்ந்த இடத்தில், தாபோர் மலையில்,4ம் நூற்றாண்டில் ஒரு
தேவாலயம் கட்டப்பட்டு, ஆகஸ்டு 6ம்தேதி அபிஷேகம் செய்யப்பட்டது. ஆண்டவருடைய மகிமைமிகு மறுரூபமான திருநிகழ்வுக்குத் தோத்திரமாக, மத்திய கிழக்கு நாடுளில் திருநாள் கொண்டாடும் வழக்கம், இதே காலத்தில், துவங்கியது.
ஐரோப்பாவின் அநேக பகுதிகளில் , இந்த
திருநாள் கொண்டாடும் வழக்கம், 8ம் நூற்றாண்டிலிருந்து துவங்கியது . 1456ம்
வருடம், ஜூலை 22ம் தேதியன்று, பெல்கிரேடிட்டில் துலுக்கர்களுக்கு
எதிராக நிகழ்ந்த ஒரு சிலுவைப்போரில், மிகச்சிறிய
கத்தோலிக்கர்களுடைய படை, ஒரு மாபெரும்
துருக்கியப் படையை நசுக்கி, அதன் மீது வெற்றியடைந்தது!
உரோமாபுரியை நோக்கி, அந்நகரத்தைக் கைப்பற்றும்படியாக அணிவகுத்துச் சென்ற 1,20,000 மகமதிய வீரர்களைக் கத்தோலிக்க இராணுவம்,கொன்று குவித்தது; பல்லாயிரக்கணக்கான துலுக்க வீரர்கள்,இப்போரில் படுகாய மடைந்தனர்; இப்போரில் கத்தோலிக்க இராணுவம் அடைந்த வெற்றியின் செய்தி, ஆகஸ்டு மாதம் 6ம் தேதி , 3ம்
காலிஸ்துஸ் பாப்பரசரை அடைந்தது. ஆண்டவருக்கு நன்றியறிதலாக, ஆண்டவருடைய மறுரூபமான திருநாளை, ஏற்படுத்தி,ஆகஸ்டு 6ம்தேதியன்று, அடுத்தவருடத்திலிருந்து, இத்திருநாளை அகில உலகம் முழுவதும்
கொண்டாடும்படியாகக் கட்டளையிடடார். மேலும், இந்தபோரில் அடைந்த வெற்றிக்கு, மகா பரிசுத்த தேவ
மாதாவிற்கும் நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்தும் விதமாக, 3ம் காலிஸ்துஸ் பாப்பரசர்,
இனிவரும் காலத்தில், எல்லா தேவாலயங்களிலும் மத்தியம் 12 மணிக்கு தேவமாதாவிற்குத் தோத்திரமகிமையாக, திரிகால ஜெபம் ஜெபிக்கும்படியாக, தேவாலய மணிகள் அடிக்கப்பட வேண்டும் என்று , உத்தரவிட்டார். ஏனெனில் மத்தியம் 12 மணிக்கு தான், துலுக்கப் படை நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டது!
எனவே, அடுத்த தடவை நீ மத்தியம்,
தேவாலயங்களில் 12 மணி திரிகால ஜெபத்திற்கான
மணி சத்தத்தைக் கேட்கும்போது, திரிகால ஜெபத்தை பக்தி பற்றுதலுடன் ஜெபி! மேலும், சத்துருக்களுக்கு எதிராக மகா பரிசுத்த தேவமாதா
கொண்டிருக்கிற மகத்துவமிக்க இராணுவ வல்லமையைப் பற்றி நினைவு கூர்வாயாக! ✝
ஓ! மகா பரிசுத்த
மரியாயே! தேவரீர் போரணியிலிருக்கும் இராணுவத்தைப் போல், மகா வல்லமையுள்ளவர்களாயிருக்கிறீர்!
திபேரிய ஏரி, கலிலேயக் கடல்,
ஜெனசரேத் ஏரி, திபேரியக் கடல்
ஆகிய பெயர்கள் எல்லாம், இஸ்ரேலில் உள்ள ஒரே ஏரியைக்
குறிக்கின்றன. இது மிகப்பெரிய நல்ல
தண்ணீர் ஏரி; இதன் சுற்றளவு
ஏறக் குறைய 53 கி.மீ. இதன்
நீளம், 23 கி.மீ ; அகலம்
13 கி.மீ. கடல் மட்டத்திலிருந்து, 209 மீ கீமே தாழ்வாக
இருக்கிறது! உப்புத்தண்ணீர் ஏரியான சாக்கடலுக்கு அடுத்தபடியாக, உலகத்திலேயே இரண்டாவது மிக தாழ்ந்த ஏரியாக,
இந்த ஏரி இருக்கிறது. இந்த
கலிலேயக் கடலிற்கு பூமிக்கு அடியிலிருக்கும் நல்ல தண்ணீர் ஊற்றுகளிலிருந்து
தண்ணீர் வருகிறது; அத்துடன், இதற்கு வருகிற தண்ணீருக்கு முதன்மையான முக்கிய ஆதாரமாயிருப்பது, யோர்தான் நதியாகும். யோர் தான் நதி, பாலஸ்தீனத்தின் வடக்கிலிருந்து,
தெற்குப் பகுதிக்கு, இக்கலிலேயக் கடல் வழியாகப் பாய்ந்து ஓடுகிறது.