Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Today's saints in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Today's saints in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 ஆகஸ்ட், 2024

May 8 - Apparition of the St. Michael - அர்ச். மிக்கேல் சம்மனசானவர் காட்சியளித்தத் திருநாள்


மே 0️8️ம் தேதி

அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவர்

காட்சியளித்தத் திருநாள்

 


முதலாம் ஜெலாசியுஸ் (492-496) பாப்பரசரின் காலத்தில், இத்தாலியிலுள்ள மோந்தே கர்கானோ என்ற மலைப்பகுதியில்,  ஒரு பெரிய செல்வந்தன் தன் கால்நடை மந்தைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தான்.  அது, பிரபலமான சிபோன்டோ நகரத்திற்கு அருகிலிருந்தது. 492ம் வருடத்தில் ஒருநாள், அந்த கால் நடை மந்தை, பட்டியில் அடைபடுவதற்குத் திரும்பியபோது, ஒரு எருது மாடு மட்டும், திரும்பி வந்து  மந்தையுடன் சேரவில்லை.

                மாட்டுக்குச் சொந்தக்காரனும், மாடு மேய்ப்பவனும், அந்த எருதைத் தேடி, அந்த மலைப்பகுதி முழுவதும் தேடி அலைந்தனர். இறுதியாக, அந்த எருதை மலை உச்சியில் கண்டுபிடித்தனர் ; ஒரு குகையின்  வாசலில், அந்த எருது, படுத்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தை விட்டு வருவதற்கு , எருது மறுத்தது. எவ்வளவு கட்டாயப்படுத்தியும், எருது அங்கிருந்து அகலாமலிருக்கிறதைக் கண்ட சொந்தக்காரன், விரக்தியில், தன் வில்லை எடுத்து ஒரு அம்பை, அந்த மாட்டின் மீது குறி வைத்து எய்தான்; என்ன ஆச்சரியம்! அந்த அம்பு, அந்த மாட்டின் மேல் பாயாமல், எய்த அந்த சொந்தக்காரன் மேலேயே திரும்பி வந்து பாய்ந்து அவனைக் காயப்படுத்தியது!

                இந்நூதனமான நிகழ்வைக் கண்டு எல்லோரும் மிகவும் அச்சமடைந்தனர். பின் யாரும் அந்த இடத்திற்கு அணுகிச் செல்வதற்குத் துணியவில்லை!  அங்கிருந்த மக்கள் எல்லோரும், சிபோன்டோ நகர மேற்றிராணியாரிடம் நேராகச் சென்று, அவரிடம் நடந்ததைக் கூறினர். அந்த பரிசுத்த மேற்றிராணியார், அந்த இடத்தில், ஏதோ பரம இரகசியமான ஒரு உன்னத வஸ்து மறைந்திருக்கிறது என்று சந்தேகித்தவராக, சர்வேசுரன் தாமே, இந்த தேவ இரகசியமான காரியத்தை, வெளிப்படுத்தும்படியாக, தமது மேற்றிராசன குருக்களிடமும், மக்களிடமும், கன்னியரிடமும், துறவியரிடமும், மூன்று நாட்கள் தொடர்ந்து உபவாசம் இருந்து ஜெபிக்கும்படி கட்டளையிட்டார்.

                மூன்று நாட்களுக்குப் பிறகு, அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவர், மிகுந்த மாட்சிமை ஒளியுடன், இப்பரிசுத்த மேற்றிராணியாருக்கு காட்சியளித்து, அந்த எருது மாடு இப்போது இருக்கிற அந்த இடம் அவருடைய விசேஷ பாதுகாவலில் இருக்கிறது என்றும், அந்த இடத்தை அவருக்கும் சகல சம்மனசுகளுக்கும் தோத்திர மகிமையாக அர்ப்பணிக்கும்படியும், அந்த இடத்தில், அவருக்கும் சகல சம்மனசுகளுக்கும் தோத்திர மகிமையாக தேவாலயத்தைக் கட்டி, அங்கு சர்வேசுரனுடைய தேவ வழிபாடாகிய  திவ்யபலிபூசை நிறைவேற்றப்பட வேண்டும்! என்றும், அறிவித்தார்.

                இதைக் கேட்டு, அந்த அர்ச்சிஷ்ட மேற்றிராணியார் பெரிதும் மகிழ்ந்தவராக, அர்ச். மிக்கேல் சம்மனசானவர் காட்சியில் அறிவித்ததை, தமது குருக்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்தார்; பின் சகலருடனும் மிகப் பெரிய சுற்றுப்பிரகார பவனியாக அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் பரிசுத்த ஸ்தலத்தை நோக்கி மலை மேல், மேற்றிராணியார் ஏறிச் சென்றார்.

                அங்கிருந்த குகை, ஒரு பாறையில் குடையப்பட்டு, உருவாக்கப்பட்டிருந்த ஒரு தேவாலயம் போல் இருந்தது! அதன் நுழை வாயிலின் மேலிருந்த ஒரு திறப்பின் வழியாக அந்த குகையின் உட்புறம் முழுவதையும் போதுமான அளவிற்கு ஒளிர்வித்தது! அங்கு திவ்யபலிபூசை நிறைவேற்றுவதற்கு, ஒரு பீடம் மட்டுமே தேவைப்பட்டது; அந்த பக்தியுள்ள மேற்றிராணியார் துரிதமாக ஒரு பீடத்தை அங்குக்கட்டி ஸ்தாபிக்க ஏற்பாடு செய்தார். பின்னர், மாபெரும்  ஆடம்பரமாக இந்த புதிய தேவாலயம், அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவருக்கும், சகல சம்மனசுகளுக்கும் தோத்திரமாக அர்ப்பணிக்கப்பட்டது.

                ஆதித்திருச்சபையின் காலத்தில், வேத கலாபனையின் சமயத்தில், இந்த குகையில் இரகசியமாக கிறீஸ்துவர்கள் திவ்ய பலிபூசை, மற்ற தேவாராதனை திருவழிபாட்டுச் சடங்குகள் நடத்தி வந்திருக்கின்றனர், என்ற உண்மை பின்னர் கண்டறியப்பட்டது.

                இந்த குகையில் கட்டப்பட்டிருக்கும் தேவாலயத்தின் பரிசுத்த சந்நிதானத்தின்  மேற்கூரைப் பகுதியில் பாறையின் ஒரு பிளவு இருக்கிறது. இதிலிருந்து பாறைகளிலிருந்து வருகிற தண்ணீர் சொட்டு சொட்டாக, தேவாலயத்தின் உள்ளே விழுந்து கொண்டிருக்கும். அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் விசேஷ பரிந்துரையால், அநேக நோயாளிகள், இந்த பாறையின்  ஊற்றுத் தண்ணீரைப் பருகியதும், புதுமையாகக் குணமடைந்து வருகின்றனர்.

                பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான திருயாத்ரீகர்கள், மோட்சவாசிகளின் பசிலிக்காவைச் சந்திப்பதற்காக, மோந்தே சான் ஆஞ்சலோ என்கிற இந்த மலைக்கு திருயாத்திரையாகச் சென்றனர்.  அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் இப்பரிசுத்த சந்நிதானத்திற்கு, திருயாத்திரையாக வந்த பாப்பரசர்களில், முதலாம் ஜெலாசியுஸ்,9ம் சிங்கராயர்,2ம் உர்பன்,3ம் அலெக்சாண்டர்,10ம் கிரகோரி,5ம் செலஸ்டின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அநேக அர்ச்சிஷ்டவர்கள் இங்கு வந்திருக்கின்றனர்; ஸ்வீடனின் அர்ச். பிரிஜித்தம்மாள், அர்ச். பெர்னார்டு, அர்ச். தாமஸ் அக்வீனாஸ், அர்ச். ஜெரார்டு மஜெல்லா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

 

அதிதூதரான அர்ச். மிக்கேலே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

May 3 - Finding of the Holy Cross, - திருச்சிலுவைக் கண்டெடுக்கப்பட்ட திருநாள்

 

மே 0️3️ம் தேதி

திருச்சிலுவைக் கண்டெடுக்கப்பட்ட திருநாள்

 


            நமதாண்டவர் பாடுபட்டு மரித்த பரிசுத்த சிலுவைக் கண்டெடுக்கப்பட்ட திருநாளை, திருச்சபை இன்று கொண்டாடுகிறது. பெரிய வெள்ளின்று,  சிலுவையானது மனிதர்களுடைய இரட்சணியத்தினுடைய கருவியாக மாற்றப்பட்டதைக் கண்டதும், பசாசினுடைய ஆங்காரம் மிகப் பயங்கரமாகத் தாழ்த்தப்பட்டது!  ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகளின் பெரிய வாரத்திற்கான திருவழிபாட்டின்  முன்னுரைஜெபத்தில்,  திருச்சபைமனுக்குலத்தை ஒரு மரத்தினால் வெற்றிகொண்ட பசாசானவன், ஒரு மரத்தினால் தோற்கடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டான்என்று அறிவிக்கிறது! இவ்விதமாக முறியடிக்கப்பட்ட பசாசு,அவனுடைய சீற்றத்தை, பரிசுத்த சிலுவையின் இரட்சணிய மரத்தின் மீது பாயவிட்டான்; பசாசு. சிலுவையை அழித்து நிர்மூலமாக்கியிருப்பான்; ஆனால், அது, அவனுடைய வல்லமைக்கு அப்பாற்பட்டது என்பதை அறிந்தவனாக,அதை அவசங்கைப் படுத்தவும், பார்வையிலிருந்து மறைக்கவும் மாபெரும் முயற்சியில் ஈடுபட்டான்; ஆகவே, அதைப் புதைத்து விடும்படி, யூதர்களை பசாசு தூண்டி ஏவி விட்டான்.

                கல்வாரியின் அடியில், ஆண்டவருடைய கல்லறையிலிருந்து வெகு அருகிலிருந்த மிக ஆழமான ஒரு துளையினுள், ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையும், அதன் மேல் பொருத்தப்பட்டிருந்த “INRI” என்று பிலாத்துவினால் எழுதும்படி செய்யப்பட்ட தலைப்புப்பலகையும், இரு கள்வர்களின் சிலுவைகளும், எறியப்பட்டன! பின் அந்த துளை, குப்பைகளாலும் மண்ணினாலும் அடைக்கப்பட்டு மூடப்பட்டது.

                நமதாண்டவரை சிலுவையில் அறைந்து நாற்பது வருடகாலத்திற்குப் பிறகு, ஜெருசலேம் நகரம், உரோமையர்களால் அழிக்கப்பட்டது. பின், கல்வாரி மலையின் மேல் உரோமையர்கள் வீனஸ் என்ற அஞ்ஞான தேவதைக்கு ஒரு கோவிலைக் கட்டினர். கி.பி.313ம் வருடம், மகா கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தி கிறீஸ்துவராக மனந்திரும்பிய பின், அவருடைய தாயாரான அர்ச். ஹெலன், ஆண்டவர் பாடுபட்டு மரித்த உண்மையான பரிசுத்த சிலுவையைக் கண்டுபிடிப்பதற்காக, ஜெருசலேமுக்கு திருயாத்திரைச் சென்றார்கள்.

நமது தெய்வீக அரசரான திவ்ய சேசுகிறீஸ்துநாதரின் செங்கோல் (சிலுவை)  அதனுடைய கல்லறையிலிருந்து, ஒரு அரச மகிமையுடைய கரத்தினால் வெளியே உயர்த்தப்பட  வேண்டியிருந்தது! நமதாண்டவர், பாடுகளின்போது, எந்த இடத்தில் யூதர்களால் மாபெரும் நிந்தை அவமானங்களாலும், இழிவுகளாலும், தாழ்த்தப்பட்டாரோ, அதே இடத்தில், மகா கான்ஸ்டன்டைனின் தாயாரும்  அர்ச்சிஷ்ட சக்கரவர்த்தினியுமான ஹெலனம்மாள், உலகத்தினுடைய உண்மையான இராஜாதி இராஜாவான  நமதாண்டவருக்குரிய சகல மகிமைகளையும் செலுத்தும்படியாக பரலோகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்! கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியின் கட்டளையினால்,வீனஸ் தேவதையின் கோவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது! அர்ச். ஹெலனம்மாளின் கட்டளையின்படி, கல்வாரியைச் சுற்றிலுமுள்ள நிலப்பகுதி தோண்டப்பட்டது; மூன்று சிலுவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன; இம்மூன்று சிலுவைகளில் ஆண்டவருடைய பரிசுத்த சிலுவை எதுவாக இருக்கும் என்பதைப் பரிசோதிக்க அர்ச். ஹெலன், ஒரு சாகப்போகிற நோயாளிப் பெண்ணைக் கூட்டிவரும்படிச் செய்து, மூன்று சிலுவைகளையும் தொடச் செய்தார்கள்; ஆண்டவர் பாடுபட்டு மரித்த பரிசுத்த சிலுவையை அப்பெண் தொட்டபோது,உடனடியாக புதுமையாகக் குணமடைந்தாள். அந்த சிலுவையே, ஆண்டவருடைய சிலுவை என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

                தமது இரட்சணிய அலுவலின்  மகிமையின் அடையாள சின்னமாகிய சிலுவையின் கொடியை, பூமியிலிருந்து உயர்த்தியதன் மூலமாக,  இந்த அஞ்ஞான உலகத்தின் மீதான தமது வெற்றியை, நமதாண்டவர் இவ்விதமாக நிறைவேற்றி முடித்தார்;  ஆனால் அந்நாள்வரை, யூதர்களுக்கு இடறலாகவும், அவமானச் சின்னமாகவும், அஞ்ஞானிகளுக்கு மடமையாகவும் திகழ்ந்த சிலுவை, இப்போது, ஆண்டவருடைய இரட்சணிய அலுவலின் மகிமையின் சின்னமாக மாறியது! சிலுவை, மனுக்குல இரட்சணியத்தினுடைய மகிமையின் சின்னமாகத் திகழ்கிறது! சிலுவை, கிறீஸ்துவர்களின் மகிமையான அடையாளச் சின்னமாகவும், பாதுகாக்கும் சின்னமாகவும் திகழ்கிறது!

                326ம் வருடம், அர்ச். ஹெலன் ஆண்டவருடைய மெய்யான சிலுவையைக் கண்டுபிடித்தார்கள்; பிலாத்து கட்டளையிட்டிருந்த “INRI” பெயர்ப்பலகை ஆண்டவருடைய சிலுவையில் பொருத்தப்படும்படி அர்ச். ஹெலன் கட்டளையிட்டார்கள்மேலும், அர்ச். ஹெலன், கல்வாரி மலையில் நமதாண்டவரின் பரிசுத்தப்பாடுகளுக்கும் பரிசுத்த மரணத்திற்கும், அடக்கத்திற்கும்  தோத்திரமாகக் ஒரு பசிலிக்கா தேவாலயத்தைக் கட்டுவித்து, ஆண்டவரின் பரிசுத்த சிலுவையை அதில் ஸ்தாபிக்கும்படிச் செய்தார்கள். இப்பசிலிக்கா தேவாலயம், ஆண்டவருடைய மகிமைமிகு கல்லறையையும், ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த ஸ்தலத்தையும், உள்ளடக்கியுள்ளது! இதற்கு அடுத்ததாக ஆண்டவருடைய பரிசுத்த சிலுவை 300 வருட காலம் புதைக்கப்பட்டிருந்த இடத்திலும் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது; இங்கு நீண்ட தூர நடைபாதை படிக்கட்டுகளால் அமைக்கப்பட்டது! அது, பரிசுத்த சிலுவை புதையுண்டிருந்த ஆழமான ஒரு குகை வரை நீடித்திருக்கும். அந்த குகைதான் பரிசுத்த சிலுவையின் கல்லறையாயிருந்தது.

ஆண்டவரின் பரிசுத்த சிலுவையிலிருந்து, ஒரு பெரிய துண்டை வெட்டியெடுத்து, அர்ச். ஹெலன், புதிய ஜெருசலேமாகிய  உரோமைக்கு அனுப்பி வைத்தார்கள். விலைமதிப்பில்லாத இந்த பொக்கிஷத்தை, மகா கான்ஸ்டன்டைன், உரோமையிலுள்ள செஸ்ஸோரியன் தோட்டத்தில், தான் கட்டியிருந்த ஒரு பசிலிக்கா தேவாலயத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கும்படிச் செய்தார். பின்னர் இந்த தேவாலயம், ஜெருசலேமின் பரிசுத்த சிலுவை பசிலிக்கா தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது.  பின் வந்த எல்லா நூற்றாண்டுகளிலும், ஆண்டவரின் பரிசுத்த சிலுவையிலிருந்து சிறு சிறு துண்டுகள் வெட்டப்பட்டு, கத்தோலிக்க அரசர்களுக்கும், துறவற மடங்களுக்கும் அன்பளிப்பாக அளிக்கப்பட்டன!

! சிலுவையே! எங்கள் ஏக நம்பிக்கையே! வாழ்க! (50 நாள் பலன்)


for Daily Saints History - Click here

August 10 - St. Lawrence, அர்ச்‌. லாரன்ஸ்

 

ஆகஸ்டு 1️0️ம்தேதி

 

உரோமை தலைமை தியாக்கோனும்ஸ்துதியரும் வேதசாட்சியுமான அர்ச்‌.  லாரன்ஸ்திருநாள்


 

                இவர்‌, 225ம்வருடம்‌, ஸ்பெயினில்‌, ஹூஸ்கா என்ற இடத்தில்பிறந்தார்‌. இளைஞராயிருந்தபோது, இவர்உயர்கல்வி கற்பதற்காக சரகோசாவிற்கு அனுப்பப்பட்டார்‌; அங்கு தான்‌, இவர்எதிர்காலத்தில்‌ 2ம்சிக்ஸ்துஸ்பாப்பரசராக திருச்சபையை ஆளவிருந்தவரைச்சந்தித்தார்‌; இருவரும்‌, ஸ்பெயினை விட்டு உரோமாபுரிக்குச்சென்றனர்‌. 257ம்வருடம்‌, 2ம்சிக்ஸ்துஸ்பாப்பரசரானதும்‌, லாரன்ஸ்‌, இப்பாப்பரசரிடம்‌, உரோமையின்ஏழு பேர்களில்ஒருவராக தியாக்கோன்பட்டம்பெற்றார்‌. இவர்தலைமை தியாக்கோனாக பொறுப்பேற்றார்‌; திருச்சபையின்திரவிய சாலையின்பொறுப்பையும்‌, ஏழைகளுக்கு தர்மம்அளித்துப்பராமரிக்கும்அலுவலையும்கொண்டிருந்தார்‌; அச்சமயம்‌, பெர்ஷிய நாட்டில்போரில்ஈடுபட்டிருந்த அஞ்ஞான உரோமைச்சக்கரவர்த்தியான வலேரியன்‌, உரோமாபுரியிலிருக்கும்எல்லா கத்தோலிக்கக்குருக்களையும்கொன்றுபோடும்படியான ஒரு அரச ஆணையை அனுப்பினான்‌; உரோமையிலுள்ள அஞ்ஞான விக்கிரகங்களைப்பாதுகாக்கும்நோக்கத்துடனேயே இந்த அரச ஆணையை அனுப்பியிருந்தான்‌.

                ஏனெனில்‌, அந்நேரம்‌, இதற்கான தீவிரப்பிரச்சாரத்தின்போது வலேரியன்‌, மிக ஆபத்தான துன்பங்களுக்கு ஆளானான்‌; அதன் காரணமாக,அவன்விரைவிலேயே பெர்ஷியர்களால்பிடிக்கப்படவும்‌, அதன்விளைவாக, மரண தண்டனையையும்‌, அடையவும் கூடும்என்கிற ஆபத்தான நிலையிலிருந்தான்‌; வலேரியனுடைய இந்த அரச ஆணையின்உடனடி விளைவாக, 258ம்வருடம்‌, ஆகஸ்டு 6ம்தேதியன்று, 2ம்சிக்ஸ்துஸ்பாப்பரசர்‌, அர்ச்‌. காலிக்ஸ்துஸ்பாப்பரசரின்கல்லறைச்சுரங்கத்தில்‌, திருவழிபாடு நடத்திக்கொண்டிருந்தபோது, கைது செய்யப்பட்டு, வேதசாட்சியாகக்கொல்லப்பட்டார்‌. அதே சமயத்தில்‌, பாப்பரசருடன்கூட அவருடைய தலைமை தியாக்கோனான அர்ச்‌. லாரன்சும்கைது செய்யப்பட்டார்‌; அனால்‌, இவர்திருச்சபையின்திரவியசாலையின்பொறுப்பாளர்என்பதை, உரோமை ஆளுநன்அறிந்தவுடன்‌, இவரிடமிருக்கும்திருச்சபையின்திரவியசாலையை, மூன்று நாட்களுக்குள்‌, தன்னிடம்ஒப்படைத்தால்‌, இவரை உயிருடன்விட்டு விடுவதாகக்கூறினான்‌. அர்ச்‌. லாரன்ஸ்விரைவாக செயல்பட்டு, திருச்சபையின்திரவியத்தை, பணத்தை, ஏழைகளுக்குப்பகிர்ந் தளித்தார்‌; மூன்று நாட்களுக்குப்பிறகு, ஏழைகளையும்முடவர்களையும்‌, உரோமை ஆளுநன்முன்பாகக்கூட்டி வந்து, “இதோ! நான்உங்களிடம்காண்பிப்பதாக வாக்களித்திருந்த திருச்சபையின்பொக்கிஷ திரவியங்கள்,‌ இந்த ஏழைகளிடம்இருக்கிறது! இப்பொக்கிஷங்களுடன்கூட, திருச்சபையின்கிரீடங்களாகத்திகழும்‌, ஏழை விதவைகள்‌, மற்றும்சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர்கள்என்கிற முத்துக்களையும்‌, விலை மதிப்பில்லாத இரத்தினக்கற்களையும்சேர்த்துக்காண்பிப்பேன்‌! திருச்சபை மெய்யாகவே, மிகுந்த செல்வ வளமுடையதாக உங்களுடைய சக்கரவர்த்தியை விட, அதிக செல்வ வளமுடையதாகத்திகழ்கிறது!” என்று கூறினார்‌.

                உரோமை ஆளுநன்‌, இதைக்கேட்டு மிகவும்சீற்றமடைந்தான்‌; அர்ச்‌. லாரன்ஸை, மெதுவாக அதே சமயம்‌, மிகக்கொடிய வேதனை நிறைந்த மரணத்தை அளிக்கும்படியான மரண தண்டனைக்குத்தீர்ப்பிட்டான்‌; அதற்காக, ஒரு பெரிய இரும்புக்கட்டில்தயார்செய்யப்பட்டது; அதன்அடியில்எரியும்கரிகளால்‌, அது,‌ சூடேற்றப்பட்டது;அந்த கட்டில்மேல்படுக்க வைத்து, அர்ச்‌.  லாரன்ஸை, உயிருடன்மெதுவாக, வறுத்தெடுக்க உத்தரவிட்டான்‌. பரிசுத்த தியாக்கோன்லாரன்ஸ்‌, சூடேற்றப்பட்டுக்கொண்டிருந்த அந்த இரும்புக்கட்டிலில்‌, கிடத்தப் பட்டு, நீண்டநேரம்தாங்கமுடியாக அந்த சூட்டினால்‌, வறுத்தெடுக்கப்படுகிற மிகப்பயங்கரமான வேதனையை அனுபவித்த பிறகு, “சகோதரரே! என்னுடைய ஒரு பக்கம்நன்றாக வெந்து விட்டது; அடுத்த பக்கமும்நன்றாக வேகும்படியாக, என்னைத்திருப்பிப் போடுங்கள்‌!” என்கிற தனது மிகப்பிரசத்திபெற்ற வாக்கியத்தை, பரலோக மகிழ்ச்சியுடனும்‌, இனிய முகத்துடனும்‌, கொலைஞர்களிடம்கூறினார்‌. பின்பரலோகத்தை நோக்கி, உரோமாபுரியின்மனந்திரும்புதலுக்காக ஜெபித்து வேண்டிக் கொண்டார்‌; அதன்பின்மரித்தார்‌!

                அர்ச்‌. லாரன்சின்வேதசாட்சிய மரணத்தின்இக்காட்சியைக்கண்ட உரோமை செனட்டர்களில்அநேகர்‌, மனந்திரும்பினர்‌! அவர்களே, எரிந்துபோன அர்ச்‌. லாரன்சின்பரிசுத்த சரீரத்தை, பக்திபற்றுதலுடன்‌, சுமந்து சென்று, பூஜிதமாக திவோலியினரு கிலிருக்கும்‌, வெரோனா வயல்வெளியிலுள்ள ஒரு குகையில்பூஜிதமாக அடக்கம் செய்தனர்‌. 258ம்வருடம்ஆகஸ்டு 10ம்தேதி,அர்ச்‌. லாரன்ஸ்‌, வேதசாட்சியாக, உயிருடன்சூடேற்றப்பட்ட ஒரு இரும்புக்கட்டிலில்வறுத்தெடுக்கப்பட்டுக்கொல்லப்பட்டார்‌. 

                ஏறக்குறைய நூறு வருடங்களுக்குப்பிறகு, மகாக்கான்ஸ்டன்டைன்பேரரசர்‌, அர்ச்‌. லாரன்சின்கல்லறையின்மேல்ஒரு தேவாலயத்கைக்கட்டினார்‌. பின்னாளில்‌, முதலாம்தமாசுஸ்பாப்பரசர்‌, இத்தேவாலயத்தை சீரமைத்து, பெரிய பசிலிக்கா தேவாலயமாகப்புதுப்பித்துக்கட்டினார்‌. இது தான்‌, சான்லொரன்சோ ஃபுவோரி லே முரா என்று, இக்காலத்தில்அழைக்கப்படுகிற அர்ச்‌. லாரன்ஸ்தேவாலயம்‌.  இந்த தேவாலயத்தில்‌, முதல்வேதசாட்சியாக மரித்த அர்ச்‌. முடியப்பருடைய பரிசுத்த சரீரமும்கூட, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டி ருக்கிறது! 2ம்பெலாஜியுஸ்பாப்பரசர்‌, இப்பசிலிக்கா தேவாலயத்தைப்புதுப்பித்துக்கட்டியபோது, கான்ஸ்டான்டிநோபிளிலிருந்த அர்ச்‌.  முடியப்பருடைய பரிசுத்த சரீரத்தை, இப்பசிலிக்கா தேவாலயத்திற்கு இடமாற்றம்செய்தார்‌! இந்த பசிலிக்கா தேவாலயத்தில்‌, ஹிலாரியுஸ்பாப்பரசரும்‌ 9ம்பத்திநாதர்பாப்பரசரும்அடக்கம்செய்யப்பட்டிருக் கின்றனர்‌. அர்ச்‌. லாரன்ஸ்கிடத்தப்பட்டிருந்த அந்த பெரிய இரும்புக்கட்டில்‌, லூசினாவில்‌, அர்ச்‌. லாரன்ஸ்தேவாலயத்தில்‌, 2ம்பாஸ்கால்பாப்பரசரால்பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!

                அர்ச்‌. லாரன்ஸ்திருநாளன்று, அர்ச்‌. லாரன்சின்பரிசுத்தத்தலை அடங்கிய அருளிக்கப்பேழை, வத்திக்கானில்பொது வணக்கத்திற்காக வைக்கப்படும்‌!  1557ம்வருடம்‌, ஆகஸ்டு 10ம்தேதி, அர்ச்‌. லாரன்ஸ்திருநாளன்று, அர்ச்‌. குவென்டின்என்ற இடத்தில்நிகழ்ந்த போரின் போது, அடைந்த வெற்றியின்நினைவாக ஸ்பெயின்அரசரான 2ம்பிலிப்அரசர்‌, அர்ச்‌. லாரன்சிற்குத்தோத்திரமாக ஒரு மாளிகையைக்கட்டினார்‌. இக்கட்டிடம்‌, அர்ச்‌. லாரன்சிற்கு மகிமையாக அவர்வேதசாட்சியாகப்பாடுபட்டு மரித்த இரும்புக்கட்டில்வடிவத்தில்அமைக்கப்பட்டது!

தியாக்கோனும்‌, வேதசாட்சியுமான அர்ச்‌. லாரன்ஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!