ஆகஸ்டு
0️9ம்
தேதி
வேதசாட்சியான அர்ச். ரோமானுஸ் திருநாள்
பரிசுத்த வேதசாட்சியான அர்ச். லாரன்ஸ் அனுபவித்த கொடிய உபத்திரவங்கள் மத்தியில்,கொண்டிருந்த பரலோக சந்தோஷத்தையும், சுபாவத்திற்கு மேற்பட்ட நீடித்த பொறுமையையும், தன் துன்ப உபத்திரவத்தைப்
பற்றிய எந்த முறையீடுமில்லாத முழுமையான
மவுனத்தையும் கண்டு, அவரைக் கண்காணித்து வந்த உரோமைப் படை
வீரரான ரோமானுஸ் பெரிதும் ஆச்சரியத்துடன், திகைப்பில் ஆழ்ந்தார். இரத்தமும் சரீரமும் உள்ள ஒரு மனிதரால்,
இவ்வளவு கொடிய சித்ரவதையை எவ்வாறு பொறுமையுடன் ஏற்று, ஒரு முறையீடும் செய்யாமல்
இருக்கக்கூடும்? என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ள இயலாதவராக, தனக்குள் வியந்துகொண்டிருந்தபோது, விசேஷ தேவ வரப்பிரசாத ஏவுதலால்,
கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஏற்றுக்
கொள்ள ஆவல் கொண்டார்.
அர்ச். லாரன்ஸ், சித்ரவதைக்கான அடுக்குத் தட்டில் கட்டப் பட்டிருந்த போது, அக்கொடிய உபாதனை நேரத்தில், ரோமானுஸ், அர்ச். லாரன்ஸை நோக்கி, தானும் ஒரு கிறீஸ்துவனாக வேண்டும்
என்கிற ஆவலை தெரிவித்தார். அர்ச்.
லாரன்ஸ்,
கட்டவிழ்க்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டபோது, தன்னிடம் இடைவிடாமல், கிறீஸ்துவனாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த ரோமானுஸிடம் தண்ணீர் கொண்டு வரும்படிக் கூறினார். அவர் தண்ணீர் கொண்டு வந்தபோது, அந்த தண்ணீரினால், அர்ச்.
லாரன்ஸ், அவருக்கு
ஞானஸ்நானம் கொடுத்தார். உடனே நீதியாசனத்தின் முன்பாக
ரோமானுஸ் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கே, ரோமானுஸ், எதற்கும், யாருக்கும் அஞ்சாமல், மிகுந்த சந்தோஷத்துடன், நான் ஒரு கிறீஸ்துவன்! என்று
கம்பீரமாக உரத்தக் குரலில் கூறினார்.
உடனே, அவர் மரணதண்டனை விதிக்கப்பட்டு, தலைவெட்டிக் கொல்லப்பட்டார்; அர்ச். லாரன்ஸ் வேதசாட்சியாகக் கொல்லப்படு வதற்கு முந்தின நாளன்று, அதாவது, கி.பி.258ம்
வருடம், ஆகஸ்டு9ம் தேதியன்று, அர்ச்.
ரோமானுஸ் வேதசாட்சியாகக்
கொல்லப்பட்டார். இவருடைய பரிசுத்த சரீரம் ஒரு குருவானவரால் பூஜிதமாக,
தைபர் நதிக்குச் செல்கிற பாதையினருகில் உள்ள ஒரு குகையில்
அடக்கம் செய்யப்பட்டது. பின், இவருடைய பரிசுத்த அருளிக்கங்கள், லூக்காவிலுள்ள அர்ச். ரோமானுஸ்
தேவாலயத்தின் பிரதான பீடத்தின் அடியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஒரு பேழைக்கு, இடமாற்றம்
செய்யப்பட்டன.
வேதசாட்சியான அர்ச். ரோமானுஸே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!