டிசம்பர் 07ம் தேதி
ஸ்துதியரும், மேற்றிராணியாரும், வேதபாரகருமான
அர்ச். அம்புரோஸ்
அம்புரோஸ் 340ம் வருடம் பிறந்தார்.உரோமையில் சட்டக்கல்வி பயின்றார். இவருடைய அசாதாரணமான திறமையைக் கண்ட உரோமை சக்கரவர்த்தி, இவரை, இவருடைய 33வது வயதில், இத்தாலியின் வடக்குப் பிரதேசத்திற்கு ஆளுனராக நியமித்தார். மிலான் அப்பிரதேசத்தினுடைய தலை நகராயிருந்தது.
374ம் வருடம் மிலான் நகர மேற்றிராணியார் மரித்தார். அச்சமயம், ஆரிய பதிதர்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் இடையே வாக்குவாதமும் கலவரமும் ஏற்பட்டது. இறந்துபோன மேற்றிராணியார், ஆரிய பதிதத்தை ஆதரித்திருந்தவர் என்பதால், அடுத்து வரவேண்டிய மேற்றிராணியாரும் ஆரிய பதிதத்தைச் சேர்ந்தவராயிருக்க வேண்டுமென்று அப்பதிதர்கள் எல்லோரும் வாதிட்டனர். நகர மக்களிடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக, அந்நகர ஆளுனரான அம்புரோஸ் அந்நகரின் கதீட்ரலுக்கு, வீரர்களுடன் விரைந்து வந்தார். அப்போது, அவர் இன்னும் ஞானஸ்நானம் வாங்காத அஞ்ஞானியாக இருந்தார். அப்போது, இரு சாராரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மிக நேர்த்தியான பிரசங்கத்தை, அம்புரோஸ் நிகழ்த்தினார்.
சண்டை இல்லாமலும், மட்டு திட்டத்துடனும், அறிவுடைய மனிதர்களாக இப்பிரச்சினையை அவர்களுக்குள் சுமூகமாக தீர்த்துக்கொள்ளும்படி, அந்நகர மக்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென்று கூட்டத்திலிருந்து ஒரு குழந்தை, “இதோ! நம் மேற்றிராணியார், அம்புரோஸ்!” என்று இரண்டு முறை கூறியது. உடனே, கூட்டத்தினர் எல்லோரும், “நம் மேற்றிராணியார், அம்புரோஸ்!” என்று கூக்குரலிட்டனர். ஆனால், இன்னும் ஞானஸ்நானம் கூட வாங்காத அம்புரோஸியார், தனது மகிமையான பதவியை விட்டு விட்டு, ஆபத்தான ஆரிய பதிதர்களிடையே, ஒரு கத்தோலிக்க மேற்றிராணியாராக பதவியை, எப்படி ஏற்பது என்பதை உணர்ந்தவராக, கதீட்ரலை விட்டு, ஓடிவிட்டார்.
பின், அம்புரோஸ், சக்கரவர்த்தியிடம், ஞானஸ்நானம் கூட வாங்காத தன்னை மிலான் நகர மேற்றிராணியாராக ஆக்கும் அந்நகர மக்களுடைய தீர்மானத்தை இரத்துசெய்யும்படி விண்ணப்பித்தார்.ஆனால், அதற்கு, அவரிடம், “நான் கவர்னராக தேர்ந்தெடுத்த நீங்கள் மேற்றிராணியாராக தகுதியடைந்ததைப்பற்றி மகிழ்ச்சியடைகிறேன்!” என்று கத்தோலிக்கரான உரோமை சக்கரவர்த்திக் கூறினார்.அதைக் கேட்ட அம்புரோஸியார், ஒரு செனட்டரின் வீட்டில் மறைந்திருந்தார். சக்கரவர்த்தியின் தீர்மானத்தை அறிந்ததும், செனட்டர், அம்புரோஸியாரை,அவரிடம், ஒப்படைத்தார்.
உலகத்தில் எங்கு சென்றாலும், இதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்த அம்புரோஸ், ஞானஸ்நானம் பெற்று, குருப்பட்டமும் பெற்றார்; அதே வருடம் டிசம்பர் 7ம் தேதியன்று, மிலான் நகர மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டார். தன் ஆஸ்திகளையெல்லாம் ஏழைகளுக்கு அளித்த பிறகு, அர்ச். சிம்பிளிசியானிடம் அம்புரோஸ், வேத இயலும், வேதாகமும் கற்றுக்கொண்டார். ஆரிய பதிதர்கள், புதிய மேற்றிராணியாரான அம்புரோஸ், ஏற்கனவே அரசாங்கத்தின் உறுப்பினராக இருந்ததாலும், அரசாங்கத்தில் அநேக ஆரிய பதித உறுப்பினர்கள் இருந்ததாலும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பார், என்று எண்ணினர்.
ஆனால், திருச்சபையையும், அரண்மனையையும், செனட் என்ற பாராளுமன்றத்தையும், சக்கரவர்த்தியுடைய குடும்பத்தையும் மிகவும் துன்புறுத்திய ஆரிய பதித்தை எதிர்த்துப்போராடுவதற்கு, அர்ச்.அம்புரோஸ், வழக்கறிஞரான தனது திறமைகளையும், திறமையான பேச்சாளருக்கான திறமைகளையும் பயன்படுத்தினார். மேற்றிராணியார் பதவி தனக்கு வேண்டாம் என்றிருந்த போது, அவர் கொண்டிருந்த அதே உறுதியான மன தைரியம், அர்ச். அம்புரோஸியாருக்கு, இப்போது ஆரிய பதிதத்தை எதிர்ப்பதற்கும், சாங்கோபாங்கத்தின் உத்தமதனத்தை நாடி, அதை அனுசரித்து முன்னேறுவதற்கும் உதவியது.
கோத் என்ற முரட்டு இன மக்கள் இவருடைய மேற்றிராசனத்திற்குள் நுழைந்து அநேகரைச் சிறைபிடித்துச் சென்றபோது, அர்ச். அம்புரோஸ், தன்னிடமிருந்த பணம் எல்லாவற்றையும் செலவழித்து, சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை மீட்டார். “பணயக் கைதிகளையும் அடிமைகளாகச் சிறை பிடிக்கப்பட்டவர் களையும் மீட்புப்பணத்தை அளித்துக் காப்பாற்றி மீட்பதே பிறா்சிநேக அலுவல்களில் மிகச்சிறந்ததும், மகா பலனுள்ளதுமான காரியம்!” என்று அர்ச். அம்புரோஸ் கூறுவார். தேவாலயத்திலிருந்த தங்கப்பாத்திரங்களை உருக்கி, அதை விற்றுப் பணயக் கைதிகளையும் அடிமைகளையும் மீட்டார்; அதைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ஆண்டவருக்காக ஆன்மாக்களைக் காப்பாற்றுவது, திரவியங்களைச் சேகரிப்பதைவிட மேலானது!” என்று கூறுவார்.
390ம் வருடம், தெசலோனிக்காவில், உரோம சக்கரவர்த்திக்கு எதிராகக் கலகம் ஏற்பட்டதை அறிந்த சக்கரவர்த்தி, சினமடைந்தவராக, தனது படைகளை தெசலோனிக்காவிற்கு அனுப்பி, அந்நகரவாசிகள் 7000பேர்களைக் கொன்று போட்டார்.
உரோமை சக்கரவர்த்தி, தியோடோசியுஸ் , மிலான் கதீட்ரலுக்கு வந்தபோது, மேற்றிராணியாரான அர்ச்.அம்புரோஸ், சக்கரவர்த்தியை தேவாலயத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. “நீர் செய்த மாபெரும் கொலைபாதகத்திற்காக மனஸ்தாபப் படாமல், நுழைய வேண்டாம்! என்று பரிசுத்த மேற்றிராணியார், சக்கரவர்த்தியிடம் கூறினார்; சக்கரவர்த்தியும், பகிரங்கமாக மனஸ்தாபப்பட்டு, மன்னிப்பு கேட்டார். 397ம் வருடம் ஏப்ரல் 4ம் தேதி, அர்ச்.அம்புரோஸியார் பாக்கியமாய் மரித்தார். அவருடைய சரீரம் இன்னும் புதுமையாக அழியாத சரீரமாக இருக்கிறது.அவர் மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்ட டிசம்பர் 7ம் தேதி, அவருடைய வருடாந்திர திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.திருவழிபாட்டிற்கான எதிரெதிர் தேவாலய இணைக் குழுப் பாட்டுப்பாடும் முறையை, அர்ச்.அம்புரோஸ் ஏற்படுத்தி, பரப்பினார்; வேனி ரெடம்டோர் ஜென்சியும் என்ற கிறீஸ்துமஸ் பாடலை இயற்றினார். ஆதியிலிருந்த நான்கு வேதபாரகர்களில், அர்ச். அம்புரோஸியாரும் ஒருவர்; மிலான் நகரின் பாதுகாவலராகத் திகழ்கிறார்;அர்ச்.அகுஸ்தீனார் மனந்திரும்புவதற்கும், ஒரு தலைசிறந்த வேதபாரகராக மாறுவதற்கும், அர்ச். அம்புரோஸியார் காரணமாயிருக்கிறார்; ஆரிய பதிதத்தைத் தன் எழுத்துத் திறமையால், அர்ச். அம்புரோஸியார், தன் மேற்றிராசனத்தில், அழித்துப்போட்டார்.
மகிழ்ச்சியாகக் கொண்டாடக்கூடிய பொது நிகழ்வுகளின் போது, சர்வேசுரனை ஸ்துதித்துப்பாடும் வழக்கத்தின்படி பாடப்படுகிற தே தேயும் லவுதாமுஸ் என்ற நன்றியறிந்த ஸ்தோத்திரப்பாடலை,அர்ச். அகுஸ்தீனார் ஞானஸ்நானம் பெற்றபோது, அர்ச். அம்புரோஸியார், அர்ச். அகுஸ்தீனாருடன் சேர்ந்து, எதிரெதிர் இணைக்குழு பாடலாக இயற்றினார்.
“உறங்குகிறவர்களுக்கு தேவ ஆசீர்வாதங்கள் அருளப்படுகிறதில்லை! ஆனால் விழிப்புடன் கண்காணித்துக்கொண்டிருப்பவர்களுக்கே அவை அருளப்படுகின்றன!”-அர்ச்.அம்புரோஸியார்.
ஸ்துதியரும், மேற்றிராணியாரும், வேதபாரகருமான அர்ச். அம்புரோஸியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
Feast of St. Ambrose
December 7
✨ Aurelius Ambrosius, better known as Saint Ambrose, was born in 340 A.D. He studied law in Rome and, due to his extraordinary abilities, was appointed by the Roman Emperor as the governor of northern Italy at just 33 years old, with Milan as his headquarters.
The Call to Serve
In 374 A.D., the Bishop of Milan passed away, leading to a fierce dispute between Catholics and Arian heretics over his successor. Arianism denied the divinity of Jesus Christ, and the former bishop had supported this heresy. The rivalry escalated into a riot in the cathedral.
As governor, Ambrose, though not yet baptized, took charge of restoring peace. He addressed the crowd with a plea for harmony and rational decision-making. During his speech, a child suddenly shouted, “Ambrose for bishop!” The crowd echoed this cry, unanimously calling for Ambrose to take the position.
Initially, Ambrose resisted, reluctant to leave his political career for a challenging religious role. He fled and even appealed to the emperor, citing his lack of baptism. However, the emperor supported the people's decision, and Ambrose ultimately surrendered. He was swiftly baptized, ordained, and on December 7, 374 A.D., consecrated as Bishop of Milan.
Leadership and Legacy
Ambrose gave away his wealth to the poor and sought theological instruction from Saint Simplician. Though the Arians expected him to support their cause, Ambrose used his skills as a lawyer and orator to defend Catholic doctrine. His tenacity became a hallmark of his episcopal ministry.
- Charity: During Gothic invasions, Ambrose ransomed captives using his own funds and even melted Church treasures for the cause, famously stating, “It is better to save souls for the Lord than to save treasures.”
- Confronting Power: After the massacre of 7,000 people in Thessalonica, Ambrose confronted Emperor Theodosius, barring him from entering the cathedral until he publicly repented—a rare act of moral courage.
Contributions to the Church
St. Ambrose is credited with introducing the antiphonal chant, where one side of the choir alternates with the other. He also composed the Christmas hymn “Veni Redemptor Gentium.”
- Te Deum Laudamus: Tradition holds that Ambrose and St. Augustine improvised this Latin hymn at Augustine’s baptism.
- Ambrose influenced St. Augustine, guiding him on his path to sainthood.
Death and Patronage
St. Ambrose passed away on April 4, 397 A.D. His incorrupt body remains venerated. As one of the four original Doctors of the Church, he is the patron saint of Milan.
Wisdom of St. Ambrose
"Divine blessings are not granted to those who sleep, but to those who keep the watch."
🌟 Let us honor St. Ambrose, a model of faith, courage, and wisdom, on this feast day.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக