மனித ஆன்மாக்கள் பரலோகத்தில் சர்வே சுரனால் படைக்கப்படுகின்றன. அவை அழியாமையிலும், மாசற்றதனத்திலும், அழகிலும் தேவ சாயலாகவும், பாவனையாகவும் சிருஷ்டிக்கப் படுகின்றன. எனவே கடவுள் அவற்றை அளவற்ற விதமாக நேசிக்கிறார். அவையும் தாங்கள் சிருஷ்டிக்கப்பட்ட கணம் முதல் அவரை முகமுகமாய்த் தரிசித்துப் பேரின்பம் அனுபவிக் கின்றன. இந்நிலையில் அவற்றின் பேரழகு எவ் வளவு அதியற்புதமானதாக இருக்கிறது எனில், “மனிதக் கருவோடு சேருமுன் ஓர் ஆன்மாவை அதன் பேரழகில் காண்பீர்கள் என்றால், அதைக் கடவுள் என்று மதித்து ஆராதிக்க முற்படு வீர்கள்!” என்கிறாள் அர்ச். தெரேசம்மாள்.
ஆனால் ஆத்துமம் பெண்ணின் வயிற்றில் கரு உருவாகும் அதே கணத்தில் அதனுடன் இணைக்கப்பட்டவுடன், தனது உத்தமமான பேரழகையும், தேவ சாயலையும், பாவனை யையும் இழந்து போகிறது. ஜென்மப் பாவம் அதைக் கறைப்படுத்தியவுடன் அது கடவுளை “மறந்துபோகிறது. அதன் அறிவு இருளடை கிறது, சித்தம் பலவீனப்படுத்தப்படுகிறது. அது தேவ குழந்தை என்னும் பாக்கியத்தை இழந்து சாத்தானின் அடிமையாகிறது.
ஆனால் ஞானஸ்நானத்தில் கிறீஸ்துநாதரின் திரு இரத்தத்தால் கழுவப்படும் அதே கணத் தில் அது ஜென்மப் பாவம் நீக்கப்பட்டு, சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப் பட்டு, மீண்டும் கடவுளின் குழந்தையாகிறது. ஆயினும் ஜென்மப் பாவ தோஷம் மரணம் வரை அதனுடன் நிலைத்திருக்கும் என்பதால், அது இன்னும் கடவுளை "மறந்த நிலை யிலேயே நிலைத்திருக்கிறது.
இத்தகைய ஆன்மா உலக வாழ்வில் எந்த அளவுக்கு தன் பரிசுத்த ஜீவியத்தால் கடவுளை நெருங்கிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு அது . கடவுளை அதிகமதிகமாக “'ஞாபகப்படுகிறது.'' கணநேர தேவ காட்சிகள் முதலில் அதற்குத் தரப்படுகின்றன. மேன்மேலும் அது , கடவுளை நெருங்கிச் செல்லும்போது, இந்தக் காட்சிகளின் நேரம் அதிகரிக்கிறது. சலுகை பெற்ற ஆன்மாக்கள் இவ்வுலகிலேயே கடவுளைக் காணவும், அவரோடு உரை யாடவும், அவரது திவ்ய நன்மைத்தனத்தை வெகுவாக அனுபவிக் கவும் அனுமதிக்கப்படுகின்றன.
இத்தகைய ஆன்மாக்களையே நாம் அர்ச் சியசிஷ்டவர்கள் என்கிறோம். இவர்கள் தங்கள் பரிசுத்த ஜீவியத்தால் தேவ இஸ்பிரீத்துவான வரின் தேவாலயங்களாகவும், சேசுநாதரின் ஞான மணவாளிகளாகவும் இருக்கிறார்கள். தங்கள் பரிசுத்ததனம், மாசற்றதனம், புண்ணியங்கள் மூலம் இவர்கள் தேவ சுபாவத்தில் பங்கடை பவர்களாகவும், சர்வேசுரனின் ஒளியைப் பிரதி பலிப்பவர்களாகவும் ஆகிறார்கள். அவர்கள் வழி யாகக் கடவுள் மிக அநேக ஆன்மாக்களைத் தம்மிடம் மனந்திருப்புகிறார். அவர்களது மன்றாட்டுகளுக்கும், பரிந்து பேசுதல்களுக் கும் அவர் விருப்பத்தோடு செவிசாய்க்கிறார்.
(இங்கு நாம் கவனிக்க வேண்டிய இரு காரியங்கள்: 1) கத்தோலிக்கத் திருச்சபையால் அர்ச்சியசிஷ்ட பட்டம் வழங்கப்பட்டவர்கள் மட்டுமே இப்பெயருக்குத் தகுதியுள்ளவர் களாக இருக்கிறார்கள்; 2) உலகிலேயே தேவ காட்சி என்பது அர்ச்சியசிஷ்டவராக இருப் பதற்கு இன்றியமையாத நிபந்தனை அல்ல.)
இதிலிருந்தே அர்ச்சியசிஷ்டவர்கள் பக்தியும் வணக்கமும் தோன்றுகின்றன. நாம் அர்ச்சியசிஷ்டவர்களிடம் திரும்புவதற்கு ஐந்து காரணங்களைக் கூறலாம்:
1) அவர்கள் நம்மிலுள்ள அதே மனித சுபாவத் தைக் கொண்டிருக்கிறார்கள்: உலகில் இருந்த வரை அவர்களும் பலவீனம் உள்ளவர்களாக இருந்தார்கள். தங்கள் சொந்த அனுபவத்தால் நம் தேவைகள், துன்பங்கள் மற்றும் கட்டுப் பாடுகளை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
2) தமது அர்ச்சியசிஷ்டவர்கள் விசுவாசி களால் வணங்கப்பட வேண்டுமென கடவுள் விரும்புகிறார். தங்கள் வாழ்வில் அவர்கள் கடவுளுக்கு ஊழியம் செய்தார்கள், அவரது சித்தப்படி வாழ்ந்து மரித்தார்கள். எனவே இப் போது நம் ஜெபங்களைக் கேட்டு அவற்றைக் கடவுள் முன் சமர்ப்பிக்கவும், நமக்காக ஜெபிக் கவும் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
3) பரலோகத்தை நோக்கிய நம் பரதேச பயணத்தில் அவர்களது வார்த்தைகளும் ஒரு பரிசுத்த ஜீவியத்தின் மாதிரிகையும் நமக்குப் பேருதவியாக இருக்கின்றன. நம் வணக்கத் திற்கும், நன்றியறிதலுக்கும் அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
4) அர்ச்சியசிஷ்டவர்களின் பரிந்துரையின் வழியாகக் கடவுள் நமக்குப் புதுமைகளையும், அநேக நன்மைகளையும் தொடர்ந்து நமக்குத் தந்தருளுகிறார். ஏனெனில் மனிதருக்கு வரப் பிரசாதங்களைத் தருவதில் அவர்கள் இன்னும் கூட தேவ ஊழியர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
5) பிரிவினைப் பதிதர்கள் நம்புவது போல, நாம் மரித்தோரிடம் ஜெபிக்கவில்லை. அர்ச்சிய சிஷ்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். பதித சபையினரைப் பொறுத்த வரை, மோட்சம் இன்னும் திறக்கப்படவில்லை . அதில் இரட் சிக்கப்பட்ட ஆன்மாக்கள் ஏதுமில்லை. கிறீஸ்து பாதாளத்தில் காத்திருந்த புண்ணிய ஆத்துமங்களுக்கு மோட்சம் தருவதற்காகத் தாம் மரித்தவுடன் அங்கே இறங்கிச் சென்றார் என்ற விசுவாச சத்தியத்தை அவர்கள் மறுதலிப் பதன் விளைவு இது. ஆனால் கத்தோலிக்க வேத சத்தியத்தின்படி மோட்சம் அர்ச்சிய சிஷ்டவர்களால் ஏற்கெனவே நிரம்பியிருக் கிறது. அவர்கள் கடவுளை முகமுகமாய்த் தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதி உயிர்ப்பு வரை அவர்களது சரீரங்களிலிருந்து அவர்களது ஆன்மாக்கள் தற்காலிகமாகப் பிரிக்கப்பட்டுள்ளன, என்றாலும், நம் உலக வாழ்வு முடியும்போதும், நம் ஆன்மாக்கள் முழுமையாக உயிரோடு இருக்கின்றன என்று நம் திருச்சபை நமக்கு நினைவூட்டுகிறது. வழிபாடு அல்ல, வணக்கம்!
கத்தோலிக்கர்களாகிய நாம், பதிதர்கள் குற்றஞ்சாட்டுவது போல் அர்ச்சியசிஷ்டவர் களை வழிபடுவதில்லை . அவர்கள் உத்தம தேவ ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம் என்பதே உண்மை . கத்தோலிக்கக் கலைக் களஞ்சியம் ஆராதனை அல்லது வழிபாட்டிற்கும், வணக்கத் திற்குமிடையே உள்ள வேறுபாட்டை இப்படி விளக்குகிறது:
"லாத்ரியா என்னும் வழிபாடு அல்லது ஆராதனை கடவுளுக்கு மட்டும் செலுத்தப் படுகிறது; தூலியா அல்லது வணக்கம் அர்ச் சியசிஷ்டவர்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த வணக்கத்தின் ஓர் உயர்நிலையான ஹைப்பர்லூலியா, திவ்ய கன்னிமாமரியின் மேலான மகத்துவத்தின் காரணமாக, அவர் களுக்கு செலுத்தப்படுகிறது.''
பரிசுத்த வேதாகமம் தேவதூதர்களுக்குரிய வணக்கத்தை ஊக்குவிக்கிறது. இவர்கள் கடவு ளோடு விசேஷ உறவுள்ள சிருஷ்டிகள் என்ற முறையில் அர்ச்சியசிஷ்டவர்களோடு ஒப்பிடத் தக்கவர்களாக இருக்கிறார்கள் (யாத். 23:20; தானி.8;15 மற்றும் 10:4; மத்.18:10; லூக்.2:9; அப்.நட.12:7; மற்றும் காட்சி. 5:11 மற்றும் 7:1 காண்க).
“நேரடியாக சேசுவிடம்” என்பதற்கான மறுப்பு
“நாம் ஏன் சேசுவிடம் நேரடியாக ஜெபிக்கக் கூடாது?” என்பது பதிதர்களின் கேள்வி. சேசு விடம் நேரடியாக ஜெபிக்க வேண்டியது உண்மைதான். ஆனால் ஒருவன் தனக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்பது சரியல்ல என்பது இதன் பொருளாகாது. அர்ச்சிய சிஷ்டவர்களிடம் ஜெப உதவி கேட்பது தவறு என்று சொல்லும் இவர்கள் தங்கள் பிரசுரங் களிலும் தொலைக்காட்சிகளிலும் "ஜெப் உதவிக்கு” என்று தங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுப்பதை எப்படி நியாயப் படுத்தப் போகிறார்கள்?!
ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது கத்தோ லிக்க வாழ்வின் ஓர் அங்கம். அர்ச். சின்னப்பர் பல சமயங்களில் தமக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்கிறார் (உரோ .15:30, 32; எபே.6:18, 20; கொலோ .4:3; 1தெச.5:25, 2 தெச.3:1 காண்க). தாம் அவர்களுக்காக ஜெபிப்பதாகவும் அவர் உறுதி தந்தார் (2 தெச. 1:11). மேலும், மற்றவர்களுக்காக ஜெபிக்கும் படி சேசுவே நம்மிடம் கேட்கிறார் (மத்.5:44). எனவே பரிசுத்த வேதாகமம் அர்ச்சியசிஷ்ட வர்களிடம் ஜெபிப்பதை ஊக்குவிக்கிறது என்பது தெளிவாகிறது.
இதிலிருந்து நாம் அடையும் பலன்களில் ஒன்று நம் பலவீனங்களில் அவர்களது ஆதர வையும், நம் விசுவாசம் மற்றும் பக்திக் குறை வில் அவர்களது மன்றாட்டின் பலனையும் நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதே. சேசு சிலரது விசுவாசத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்குப் புதுமைகள் செய்தார் (மத்.8:13; 15:18; மாற்கு.9:17, 29; லூக். 8:49, 55 காண்க). அப்படியிருக்க, பரலோகத்தில், தங்கள் சரீரங்களிலிருந்தும் உலகப் பராக்குகளிலிருந்தும் விடுபட் டிருக்கிற அர்ச்சியசிஷ்டவர்களிடம் நாம் அதிக நம்பிக்கையோடு மன்றாடலாம் என்று சொல்லத் தேவையில்லை.
அர்ச்சியசிஷ்டவர்களின் மீதான பக்தியின் மிக முக்கியமான அம்சம்
தேவ அன்னையிடமும், அர்ச்சியசிஷ்டவர் களிடமும் நம் ஆன்ம சரீர நன்மைகளுக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தர மன்றாடு வதற்காக மட்டுமே அவர்களை அணுகிச் செல்வது பலரது தவறான வழக்கமாக இருக் கிறது. ஆனால் அவர்களைக் கனப்படுத்து வதன் மிக முக்கியமான வடிவம், கடவுளோடு அவர்களுக்குள்ள உறவில் அவர்களைக் கண்டுபாவிப்பதாகும். அர்ச். சின்னப்பர் இந்த ஞான அனுசாரத்தைப் பற்றிப் பல முறை எழுதியுள்ளார். ''நான் கிறீஸ்து நாதரைக் கண்டுபாவிக்கிறதுபோல நீங்களும் என்னைக் கண்டுபாவிக்க உங்களை மன்றாடுகிறேன்” என்று அவர் கூறுகிறார் (1கொரி.4:16). மீளவும் அதே மக்களிடம், "நான் கிறீஸ்துநாதரைக் கண்டுபாவிக்கிறதுபோல, நீங்களும் என்னைக் கண்டுபாவித்து நடங்கள். சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைவுகூர்ந்து, நான் உங்களுக்குப் படிப்பித்தபடி என் கற்பனை களை அநுசரித்து வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்'' என்கிறார் (11:2). மேலும் எபிரேயருக்கு, "உங்களுக்கு தேவ வாக்கியத் தைப் போதித்து, உங்களுக்கு ஞான வழி காட்டினவர்களை நினைவுகூருங்கள். அவர் களது நடக்கையின் முடிவை உற்றுப்பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற் றுங்கள்” (3:17) என்று அறிவுறுத்துகிறார்.
ஆகவே, சகோதரரே, வேதாகம போதனை யின்படியும், திருச்சபையின் படிப்பினையின் படியும் நாம் அர்ச்சியசிஷ்டவர்களிடம் பக்தியை வளர்த்துக் கொள்வோம். நம் ஞான, சரீரத் தேவைகளில் அவர்களது உதவியை நாடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் களது புண்ணியங்களைக் கண்டுபாவித்து, அவர்களோடு மோட்சத்தில் நித்தியப் பேரின்பம் அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெற்றுக்கொள் வோமாக.
Download Catholic Tamil Songs. Here
Download Catholic Tamil Songs. Here