Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
அர்ச் சிசிலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச் சிசிலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 20 பிப்ரவரி, 2019
சனி, 24 நவம்பர், 2018
அர்ச்சியசிஷ்டவர்கள் என்பவர்கள் யார்?
மனித ஆன்மாக்கள் பரலோகத்தில் சர்வே சுரனால் படைக்கப்படுகின்றன. அவை அழியாமையிலும், மாசற்றதனத்திலும், அழகிலும் தேவ சாயலாகவும், பாவனையாகவும் சிருஷ்டிக்கப் படுகின்றன. எனவே கடவுள் அவற்றை அளவற்ற விதமாக நேசிக்கிறார். அவையும் தாங்கள் சிருஷ்டிக்கப்பட்ட கணம் முதல் அவரை முகமுகமாய்த் தரிசித்துப் பேரின்பம் அனுபவிக் கின்றன. இந்நிலையில் அவற்றின் பேரழகு எவ் வளவு அதியற்புதமானதாக இருக்கிறது எனில், “மனிதக் கருவோடு சேருமுன் ஓர் ஆன்மாவை அதன் பேரழகில் காண்பீர்கள் என்றால், அதைக் கடவுள் என்று மதித்து ஆராதிக்க முற்படு வீர்கள்!” என்கிறாள் அர்ச். தெரேசம்மாள்.
ஆனால் ஆத்துமம் பெண்ணின் வயிற்றில் கரு உருவாகும் அதே கணத்தில் அதனுடன் இணைக்கப்பட்டவுடன், தனது உத்தமமான பேரழகையும், தேவ சாயலையும், பாவனை யையும் இழந்து போகிறது. ஜென்மப் பாவம் அதைக் கறைப்படுத்தியவுடன் அது கடவுளை “மறந்துபோகிறது. அதன் அறிவு இருளடை கிறது, சித்தம் பலவீனப்படுத்தப்படுகிறது. அது தேவ குழந்தை என்னும் பாக்கியத்தை இழந்து சாத்தானின் அடிமையாகிறது.
ஆனால் ஞானஸ்நானத்தில் கிறீஸ்துநாதரின் திரு இரத்தத்தால் கழுவப்படும் அதே கணத் தில் அது ஜென்மப் பாவம் நீக்கப்பட்டு, சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப் பட்டு, மீண்டும் கடவுளின் குழந்தையாகிறது. ஆயினும் ஜென்மப் பாவ தோஷம் மரணம் வரை அதனுடன் நிலைத்திருக்கும் என்பதால், அது இன்னும் கடவுளை "மறந்த நிலை யிலேயே நிலைத்திருக்கிறது.
இத்தகைய ஆன்மா உலக வாழ்வில் எந்த அளவுக்கு தன் பரிசுத்த ஜீவியத்தால் கடவுளை நெருங்கிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு அது . கடவுளை அதிகமதிகமாக “'ஞாபகப்படுகிறது.'' கணநேர தேவ காட்சிகள் முதலில் அதற்குத் தரப்படுகின்றன. மேன்மேலும் அது , கடவுளை நெருங்கிச் செல்லும்போது, இந்தக் காட்சிகளின் நேரம் அதிகரிக்கிறது. சலுகை பெற்ற ஆன்மாக்கள் இவ்வுலகிலேயே கடவுளைக் காணவும், அவரோடு உரை யாடவும், அவரது திவ்ய நன்மைத்தனத்தை வெகுவாக அனுபவிக் கவும் அனுமதிக்கப்படுகின்றன.
இத்தகைய ஆன்மாக்களையே நாம் அர்ச் சியசிஷ்டவர்கள் என்கிறோம். இவர்கள் தங்கள் பரிசுத்த ஜீவியத்தால் தேவ இஸ்பிரீத்துவான வரின் தேவாலயங்களாகவும், சேசுநாதரின் ஞான மணவாளிகளாகவும் இருக்கிறார்கள். தங்கள் பரிசுத்ததனம், மாசற்றதனம், புண்ணியங்கள் மூலம் இவர்கள் தேவ சுபாவத்தில் பங்கடை பவர்களாகவும், சர்வேசுரனின் ஒளியைப் பிரதி பலிப்பவர்களாகவும் ஆகிறார்கள். அவர்கள் வழி யாகக் கடவுள் மிக அநேக ஆன்மாக்களைத் தம்மிடம் மனந்திருப்புகிறார். அவர்களது மன்றாட்டுகளுக்கும், பரிந்து பேசுதல்களுக் கும் அவர் விருப்பத்தோடு செவிசாய்க்கிறார்.
(இங்கு நாம் கவனிக்க வேண்டிய இரு காரியங்கள்: 1) கத்தோலிக்கத் திருச்சபையால் அர்ச்சியசிஷ்ட பட்டம் வழங்கப்பட்டவர்கள் மட்டுமே இப்பெயருக்குத் தகுதியுள்ளவர் களாக இருக்கிறார்கள்; 2) உலகிலேயே தேவ காட்சி என்பது அர்ச்சியசிஷ்டவராக இருப் பதற்கு இன்றியமையாத நிபந்தனை அல்ல.)
இதிலிருந்தே அர்ச்சியசிஷ்டவர்கள் பக்தியும் வணக்கமும் தோன்றுகின்றன. நாம் அர்ச்சியசிஷ்டவர்களிடம் திரும்புவதற்கு ஐந்து காரணங்களைக் கூறலாம்:
1) அவர்கள் நம்மிலுள்ள அதே மனித சுபாவத் தைக் கொண்டிருக்கிறார்கள்: உலகில் இருந்த வரை அவர்களும் பலவீனம் உள்ளவர்களாக இருந்தார்கள். தங்கள் சொந்த அனுபவத்தால் நம் தேவைகள், துன்பங்கள் மற்றும் கட்டுப் பாடுகளை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
2) தமது அர்ச்சியசிஷ்டவர்கள் விசுவாசி களால் வணங்கப்பட வேண்டுமென கடவுள் விரும்புகிறார். தங்கள் வாழ்வில் அவர்கள் கடவுளுக்கு ஊழியம் செய்தார்கள், அவரது சித்தப்படி வாழ்ந்து மரித்தார்கள். எனவே இப் போது நம் ஜெபங்களைக் கேட்டு அவற்றைக் கடவுள் முன் சமர்ப்பிக்கவும், நமக்காக ஜெபிக் கவும் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
3) பரலோகத்தை நோக்கிய நம் பரதேச பயணத்தில் அவர்களது வார்த்தைகளும் ஒரு பரிசுத்த ஜீவியத்தின் மாதிரிகையும் நமக்குப் பேருதவியாக இருக்கின்றன. நம் வணக்கத் திற்கும், நன்றியறிதலுக்கும் அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
4) அர்ச்சியசிஷ்டவர்களின் பரிந்துரையின் வழியாகக் கடவுள் நமக்குப் புதுமைகளையும், அநேக நன்மைகளையும் தொடர்ந்து நமக்குத் தந்தருளுகிறார். ஏனெனில் மனிதருக்கு வரப் பிரசாதங்களைத் தருவதில் அவர்கள் இன்னும் கூட தேவ ஊழியர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
5) பிரிவினைப் பதிதர்கள் நம்புவது போல, நாம் மரித்தோரிடம் ஜெபிக்கவில்லை. அர்ச்சிய சிஷ்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். பதித சபையினரைப் பொறுத்த வரை, மோட்சம் இன்னும் திறக்கப்படவில்லை . அதில் இரட் சிக்கப்பட்ட ஆன்மாக்கள் ஏதுமில்லை. கிறீஸ்து பாதாளத்தில் காத்திருந்த புண்ணிய ஆத்துமங்களுக்கு மோட்சம் தருவதற்காகத் தாம் மரித்தவுடன் அங்கே இறங்கிச் சென்றார் என்ற விசுவாச சத்தியத்தை அவர்கள் மறுதலிப் பதன் விளைவு இது. ஆனால் கத்தோலிக்க வேத சத்தியத்தின்படி மோட்சம் அர்ச்சிய சிஷ்டவர்களால் ஏற்கெனவே நிரம்பியிருக் கிறது. அவர்கள் கடவுளை முகமுகமாய்த் தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதி உயிர்ப்பு வரை அவர்களது சரீரங்களிலிருந்து அவர்களது ஆன்மாக்கள் தற்காலிகமாகப் பிரிக்கப்பட்டுள்ளன, என்றாலும், நம் உலக வாழ்வு முடியும்போதும், நம் ஆன்மாக்கள் முழுமையாக உயிரோடு இருக்கின்றன என்று நம் திருச்சபை நமக்கு நினைவூட்டுகிறது. வழிபாடு அல்ல, வணக்கம்!
கத்தோலிக்கர்களாகிய நாம், பதிதர்கள் குற்றஞ்சாட்டுவது போல் அர்ச்சியசிஷ்டவர் களை வழிபடுவதில்லை . அவர்கள் உத்தம தேவ ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம் என்பதே உண்மை . கத்தோலிக்கக் கலைக் களஞ்சியம் ஆராதனை அல்லது வழிபாட்டிற்கும், வணக்கத் திற்குமிடையே உள்ள வேறுபாட்டை இப்படி விளக்குகிறது:
"லாத்ரியா என்னும் வழிபாடு அல்லது ஆராதனை கடவுளுக்கு மட்டும் செலுத்தப் படுகிறது; தூலியா அல்லது வணக்கம் அர்ச் சியசிஷ்டவர்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த வணக்கத்தின் ஓர் உயர்நிலையான ஹைப்பர்லூலியா, திவ்ய கன்னிமாமரியின் மேலான மகத்துவத்தின் காரணமாக, அவர் களுக்கு செலுத்தப்படுகிறது.''
பரிசுத்த வேதாகமம் தேவதூதர்களுக்குரிய வணக்கத்தை ஊக்குவிக்கிறது. இவர்கள் கடவு ளோடு விசேஷ உறவுள்ள சிருஷ்டிகள் என்ற முறையில் அர்ச்சியசிஷ்டவர்களோடு ஒப்பிடத் தக்கவர்களாக இருக்கிறார்கள் (யாத். 23:20; தானி.8;15 மற்றும் 10:4; மத்.18:10; லூக்.2:9; அப்.நட.12:7; மற்றும் காட்சி. 5:11 மற்றும் 7:1 காண்க).
“நேரடியாக சேசுவிடம்” என்பதற்கான மறுப்பு
“நாம் ஏன் சேசுவிடம் நேரடியாக ஜெபிக்கக் கூடாது?” என்பது பதிதர்களின் கேள்வி. சேசு விடம் நேரடியாக ஜெபிக்க வேண்டியது உண்மைதான். ஆனால் ஒருவன் தனக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்பது சரியல்ல என்பது இதன் பொருளாகாது. அர்ச்சிய சிஷ்டவர்களிடம் ஜெப உதவி கேட்பது தவறு என்று சொல்லும் இவர்கள் தங்கள் பிரசுரங் களிலும் தொலைக்காட்சிகளிலும் "ஜெப் உதவிக்கு” என்று தங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுப்பதை எப்படி நியாயப் படுத்தப் போகிறார்கள்?!
ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது கத்தோ லிக்க வாழ்வின் ஓர் அங்கம். அர்ச். சின்னப்பர் பல சமயங்களில் தமக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்கிறார் (உரோ .15:30, 32; எபே.6:18, 20; கொலோ .4:3; 1தெச.5:25, 2 தெச.3:1 காண்க). தாம் அவர்களுக்காக ஜெபிப்பதாகவும் அவர் உறுதி தந்தார் (2 தெச. 1:11). மேலும், மற்றவர்களுக்காக ஜெபிக்கும் படி சேசுவே நம்மிடம் கேட்கிறார் (மத்.5:44). எனவே பரிசுத்த வேதாகமம் அர்ச்சியசிஷ்ட வர்களிடம் ஜெபிப்பதை ஊக்குவிக்கிறது என்பது தெளிவாகிறது.
இதிலிருந்து நாம் அடையும் பலன்களில் ஒன்று நம் பலவீனங்களில் அவர்களது ஆதர வையும், நம் விசுவாசம் மற்றும் பக்திக் குறை வில் அவர்களது மன்றாட்டின் பலனையும் நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதே. சேசு சிலரது விசுவாசத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்குப் புதுமைகள் செய்தார் (மத்.8:13; 15:18; மாற்கு.9:17, 29; லூக். 8:49, 55 காண்க). அப்படியிருக்க, பரலோகத்தில், தங்கள் சரீரங்களிலிருந்தும் உலகப் பராக்குகளிலிருந்தும் விடுபட் டிருக்கிற அர்ச்சியசிஷ்டவர்களிடம் நாம் அதிக நம்பிக்கையோடு மன்றாடலாம் என்று சொல்லத் தேவையில்லை.
அர்ச்சியசிஷ்டவர்களின் மீதான பக்தியின் மிக முக்கியமான அம்சம்
தேவ அன்னையிடமும், அர்ச்சியசிஷ்டவர் களிடமும் நம் ஆன்ம சரீர நன்மைகளுக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தர மன்றாடு வதற்காக மட்டுமே அவர்களை அணுகிச் செல்வது பலரது தவறான வழக்கமாக இருக் கிறது. ஆனால் அவர்களைக் கனப்படுத்து வதன் மிக முக்கியமான வடிவம், கடவுளோடு அவர்களுக்குள்ள உறவில் அவர்களைக் கண்டுபாவிப்பதாகும். அர்ச். சின்னப்பர் இந்த ஞான அனுசாரத்தைப் பற்றிப் பல முறை எழுதியுள்ளார். ''நான் கிறீஸ்து நாதரைக் கண்டுபாவிக்கிறதுபோல நீங்களும் என்னைக் கண்டுபாவிக்க உங்களை மன்றாடுகிறேன்” என்று அவர் கூறுகிறார் (1கொரி.4:16). மீளவும் அதே மக்களிடம், "நான் கிறீஸ்துநாதரைக் கண்டுபாவிக்கிறதுபோல, நீங்களும் என்னைக் கண்டுபாவித்து நடங்கள். சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைவுகூர்ந்து, நான் உங்களுக்குப் படிப்பித்தபடி என் கற்பனை களை அநுசரித்து வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்'' என்கிறார் (11:2). மேலும் எபிரேயருக்கு, "உங்களுக்கு தேவ வாக்கியத் தைப் போதித்து, உங்களுக்கு ஞான வழி காட்டினவர்களை நினைவுகூருங்கள். அவர் களது நடக்கையின் முடிவை உற்றுப்பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற் றுங்கள்” (3:17) என்று அறிவுறுத்துகிறார்.
ஆகவே, சகோதரரே, வேதாகம போதனை யின்படியும், திருச்சபையின் படிப்பினையின் படியும் நாம் அர்ச்சியசிஷ்டவர்களிடம் பக்தியை வளர்த்துக் கொள்வோம். நம் ஞான, சரீரத் தேவைகளில் அவர்களது உதவியை நாடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் களது புண்ணியங்களைக் கண்டுபாவித்து, அவர்களோடு மோட்சத்தில் நித்தியப் பேரின்பம் அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெற்றுக்கொள் வோமாக.
Download Catholic Tamil Songs. Here
Download Catholic Tamil Songs. Here
சனி, 7 செப்டம்பர், 2013
அர்ச் அருளானந்தர்
போர்த்துகலில் செல்வந்தரான அரசகுலப் பெற்றோரின் மகனாக மார்ச்1, 1647ல் ஜான் டி பிரிட்டோ பிறந்தார். சிறு வயதிலிருந்தே ஜானின் உடல் சீராக இருக்கவில்லை. 11 வயதில் தீவிர நோய்த்தாக்கத்தில் பிழைப்பதரிது என்ற நிலையில் அவரது தாய், அர்ச் ஃபிரான்சிஸ் சவேரியாரிடம் உருக்கமாக மன்றாடினார். சிறுவன் பிழைத்தெழுந்தான். இயேசு சபையினரின் உடை போன்று ஓராண்டளவும் தம் மகனை உடுத்தச் செய்தார் தாய். அதிலிருந்து அர்ச் சவேரியாரைப் போல தாமும் இயேசுவின் ஒளியை இந்திய மண்ணில் பரவச் செய்ய வேண்டும் என்ற பேராவல் அவரது இதயத்தில் பற்றியெரிய ஆரம்பித்தது. அவர் விரும்பியவாறே 15 வயதில் இயேசு சபையில் அனுமதிக்கப்பட்டார்.
குருபட்டம் பெற்றபோது கற்றலில் சிறந்த அவரது ஆற்றல் கண்டு, ஜானைப் போர்த்துக்கல்லில் இருத்திக் கொள்ள விரும்பினார். ஜானுக்கு இந்தியாவே இலக்காயிருந்தது. பாப்புவின் பிரதிநிதிவரை சென்று தம் மகனின் இந்தியப் பயணத்தைத் தடுக்க முயற்சித்தார் தாய். 'துறவற வாழ்வுக்கு என்னை அழைத்த ஆண்டவர் இப்போது இந்தியாவுக்கு அழைக்கிறார்" எனக் கூறி அன்னையை ஆறுதல்படுத்தினார். கி.பி.1673ல், 16 சககுருக்களுடன் கோவாவில் கால்பதித்தார் ஜான். இறையியல் முதலான மேற்படிப்புக்களை முடித்தார். மதுரை மறைபரப்புத் தளத்தின் தலைமைப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பணி தொடங்கு முன் 30 நாள் ஞான ஒடுக்கம் செய்தார். தமிழில் பேசக் கற்றார். தமிழில் போதிக்கும் திறம் வளர்த்தார்.
இந்தியத் துறவி போல் காவி உடை அணிந்தார். மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று அருளானந்த சுவாமியானார். தமக்குப் பழக்கமில்லாத தமிழக வெப்பத்தைப் பொருட்படுத்தாது, சென்னை, வேலூர், தஞ்சை, முகவை எனப் பல மாவட்டங்களிலும் நடந்தே சென்று போதித்தார். இவரது தவமிகு வாழ்வு, மிகுதியான ஆர்வம், மறைப்பணியில் தீவிரம் இவற்றின் விளைவாய் ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ மதத்தை தழுவினர். தஞ்சைத் தளத்தில் அறுவடை மிகுதியானது. மறவர் நாட்டில் இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. புதிய வேதத்தின் போதனையைத் தடுக்கப் புனிதரைக் கைது செய்தான் முகவை முதன் மந்திரி. விசாரணை இன்றியே துன்புறுத்திக் கொள்ள முயன்ற போது, முகவை மன்னன் தலையிட்டுப் புனிதரை விடுவித்து நாடு கடத்தினான்.
தந்தை ஜானைப் போர்த்துகல் வரவேற்றது. இயேசு சபை மாநிலத் தலைவர் பதவி அளிக்க முன் வந்தது. ஆயர் பதவி காத்திருந்தது. வறண்ட மறவர் நாட்டின் மீது தணியாகத் தாகம் கொண்டிருந்த அருளானந்தர் எதையும் ஏற்க மறுத்துத் தமிழகம் திரும்பினார். இராமநாதபுரத்தில் அரச குடும்பத்தைச் சார்ந்த சிலர் திருமுழுக்குப் பெற்றனர். குணமளிக்கும் வரம் பெற்றிருந்தார் புனிதர். அவரது மன்றாட்டால் மக்கள் உடல் நலம் பெற்றதைக் கண்டு அந்தணர்கள் அழுக்காறுற்றனர். இது பேய் வேலை என்றனர். நோயால் துன்புற்று மரணத்தை எதிர் நோக்கியிருந்த மறவ இளவரச தடியத் தேவர் புனிதர் தம்மிடம் வரப்பிரார்த்தித்தார். ஜான் தாம் செல்லாது தம்வேதியருள் சிறந்த ஒருவரை அனுப்பி இறைவேண்டல் செய்ய, தடியத் தேவர் நலம் பெற்றார். மறையறிவு பெற்று கிறித்தவரானார். அவருக்கு 5 மனைவியர். கிறித்தவரானதும், தம் முதல் மனைவியைத் தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டார்.
அவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் ஒருவர் கடலாயி முகவைச் சேதுபதியின் நெருங்கிய உறவினர். மன்னனிடம் முறையிட்டாள். ஓரியூரிலிருந்த தன் தம்பி உடையத்தேவர் மூலம் அருளானந்தரைக் கொல்ல வழிதேடினாள். திருமுழுக்கு யோவானைப் போலவே ஒரு பெண்ணின் சினத்துக்குப் பலியானார் புனிதர். முகவையிலிருந்து ஓரிய10ருக்கு நடத்திச் செல்லப்பட்டார். 'மரணத்தை எதிர்நோக்கியுள்ளேன். இதுவே என் வேண்டுதலின் இலக்காக இருந்தது. எனது உழைப்பிற்கும் வேதனைகளுக்கும் விலை மதிப்பற்ற பரிசாக இந்த நாள் அமைகிறது" என மரணத்திற்குமுன் தம் தலைமைக் குருவுக்கு எழுதினார். தம் இறுதித் தண்டனைக்குக் குறிக்கப்பட்ட இடமான மணல்மேட்டிற்கு விரைந்து சென்றனர். வெட்டப்பட ஏதுவாய் தலைதாழ்த்தினார். தலையைக் கொய்த முரடர்கள் புனிதரது கைகளையும், பாதங்களையும் வெட்டினர். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாகட்டும் என்ற எண்ணத்துடன் இரு கம்பங்களை நட்டு, உடல் சிதைவுகளைத் தொங்கவிட்டனர். அது மழைக் காலமில்லையெனினும் 8 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. மழைக்குப் பின்னர் புனிதரின் சில எலும்புத் துண்டுகளே மீந்துகிடந்தன.
மறைசாட்சியின் இரத்தத்தால் மணல்மேடு சிவந்தது. சிவந்த மணலை இன்றும் காணலாம். மக்கள் திரளாக திருயாத்திரையாக ஓரியூருக்கு வர ஆரம்பித்தார்கள். 1947ல் அருளானந்தருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மறவநாட்டுத் திருத்தூதர், மதுரை மறைத்தளத்தின் பாதுகாவலர் அர்ச் அருளானந்தரின் நினைவைத் திருச்சபை பெப்ரவரி 4ல் போற்றுகிறது.

கார்மேல் - உத்தரியமாதா
பரிசுத்த பூமியாம் பாலஸ்தீன நாட்டின் மேற்கு திசையில் மத்தியதரைக்கடலுக்கு அருகாமையில் ஒரு உயர்ந்த மலை இருக்கிறது. இதற்கு கார்மேல் மலை என்றுப் பெயர். கடற்கரையோரத்தில் இருக்கும் இம்மலையைப் பற்றி விவிலியத்தில் அருமையான வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
அதன் அழகிய சிகரம் எபிரேய மொழியில் " தோட்டம் " அல்லது " நடப்பட்ட திராட்சை தோட்டம் " உள்ற சிறப்பு பெயர் பெற்றிருக்கின்றது.இந்த மலையில் எலியாஸ் இறைவாக்கினரும் அவருக்குபின் எலிசேயுஸ் என்பவரும் தங்கி செப,தபங்களால் பல அரிய வல்ல செயல்கள் செய்து வந்தனர். இவர்கள் கார்மேல் மலை சன்னியாசி என்ற அழைக்கப்பட்டனர்.
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் என்னும் கார்மேல் மாதா சபையைச் சார்ந்த ஒரு மடம் இருந்தது. இச்சபையின் தலைவர் அர்ச் சைமன்ஸ்டாக் என்பவர் 1251ஆம் ஆண்டு ஜீலை மாதம் 16 ஆம் நாள் தேவஅன்னையின் அடைக்கலத்தை நாடி பக்தியாக செபித்துக் கொணடிருந்தார். அச்சமயத்தில் அன்னை மரியா தமது கரத்தில் ஒரு உத்தரியத்தை ஏந்திவளாய் அவர்க்கு காட்சி தந்தார்.
அவரைப் பார்த்து 'என் பிரிய மகனே, இதோ இந்த உத்தரியத்தை என் விருதாக (வெற்றிச்சின்னமாக) ஏற்றுக் கொள். இதை அணிந்துக் கொண்டு மரிக்கின்றவன் நித்திய நரக ஆக்கினையின்று தப்பித்துக் கொள்வான். இது காக்கிறவரின் அட்டையாளமாகவும், ஆபத்த சமயத்தில் கேடயமாகவும், என்னுடைய உதவியின் ஆரம்பமாகவும் இருக்கிறது. " என்று சொன்னார்கள்.
1301 ஆண்டு உத்தரியமாதா 22ஆம் அருளப்பர் என்ற திருதந்தைக்கு தரிசனமாகி உத்தரியசபைமார் மரித்து உத்தரிக்கிறஸ்தலத்திற்குப் போயிருந்தால் கூடிய விரைவில் நான் அவர்களை மீட்டுக் கொள்வோன். என்றார். மேலும் மரணத்திற்கு பிறகு வரும் முதல் சனிக்கிழமைகளில் அவர்கள் அவ்விடத்திலிருந்து விடுதலை ஆவார்கள்என மொழிந்தர்ர்கள்.
கார்மேல் மாதாவுடைய பேருதவியை கார்மேல் சபையினர்க்கு மட்டுமல்ல, அவரது உத்தரியத்தை அணியும் அனைவரும் பலன் அடைவார்கள். உத்தரியத்திற்கு பதிலாக உத்தரிய சுருபத்தை அணியலாம். இந்த பக்தியானது மோட்ச இராக்கினியின் ஞானபிள்ளைகளாக வாழ்வதற்கு உதவிபுரியும்.
அர்ச் கன்னிமரியாளைப் பின்பற்றி அவரைப் போல் பரிசுத்தமாய் வாழ்ந்து அவர்களுக்கு சொந்தமானவர் என்று வெளிப்படையாக வாழ்ந்து காட்டுவது பெரும் பாக்கியமாகும்.
பரிசுத்த உத்தரியத்தை நாமும் அணிந்து தீயோனிடமிருந்து நம்மை காப்போம். எல்லா நேரங்களிலும் உத்தரியமாதா நம்மை காத்திடுவாள் என்பது திண்ணம்.
உத்தரியமாதாவே! எங்களுக்காக உமது திருகுமாரனிடம் பரிந்து பேசுவீராக!

லேபிள்கள்:
(St.Ceceilia),
அர்ச் சிசிலியா,
வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை
வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை
1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் கன்னியாக்குமரி மாவட்டத்தில்
நட்டாலம் என்ற ஊரில் தேவசகாயம் பிறந்தார். உயர்சாதி வைதீக இந்து நாயர் குடும்பத்தில் பிறந்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நீலகண்டபிள்ளை. இவரது தந்தை கேரளாவில் உள்ள காயங்குளம் கிராமத்தையும், தாய் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியையும் சேர்ந்தவர்கள். இந்து சாஸ்திரங்களின்படி துறைப்படி மத நம்பிக்கைகளையும், பாரம்பரியங்களையும் உறுதியாகப் பினபற்றும்படி கற்பிக்கப்பட்டார்.

இளம்வயதில் அரசுப் பணியில் சேர்ந்த தேவநகாயம் பிள்ளை 28ஆம் வயதில் திருவாங்கூர் அரசில் பத்மநாபபுரம் அரண்மனையில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். புத்மநாபபுரத்திற்கு அருகிலுள்ள உதயகிரி கோட்டையிலிருந்த மன்னரின் இராணுவ அதிகாரி பெநேடிச்டுஸ் தே டிலனாய் என்ற ஐரோப்பியர் மூலமாக இயேசுவின் அன்பை தேவசகாயம் பிள்ளை கேள்விப்பட்டார். யாருடைய கட்டாயமும் இல்லாமல் தன் சொந்த விருப்பத்தின்படி தேவசகாயம் பிள்ளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். திருமுழுக்கின் போது இவர் “லாசரு” என்று அழைக்கப்பட்டார். அப்பெயர்க்கு தமிழிலும், மலையாளத்திலும் “தேவசகாயம்” என்று அர்த்தம்.
இன்றைய நெல்லை மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் கிராமத்திலுள்ள ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்ற தேவசகாயம் பிள்ளை அக்கிராமத்தைச் சேர்ந்த ஞானப்ப அம்மாள் என்ற பெண்ணை மணம் புரிந்தார். இவருடைய மனைவியும் குடும்பத்தில் சிலரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சிலமதவாதசக்திகளும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அவருடைய இனமக்களும் தேவசகாயம் பிள்ளை மீது பொய்க்குற்றங்களைச் சாட்டி பதவியைப் பறித்ததோடு, அன்றைய மாகாண எல்லையான ஆரல்வாய் மொழிக்கு அவரை அனுப்பிவிட்டனர்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு மதம் மாறியதற்காகக் கைது செய்யப்பட்ட இவர் கிறிஸ்துவை மறுதலிக்கும்படி பலமுறை எச்சரிக்கப்பட்டும் இவர் கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகுவதில்லை என்று உறுதியுடன் இருந்தார் . இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காக சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும் புள்ளியும், செம் புள்ளி குத்தப்பட்டது. கைகள் பின்புறமாககட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கபட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்து சென்றார்கள்.
புலியூர்குறிச்சி என்ற இடத்தலி தங்கியிருந்த இவர் முழங்கால்படியிட்டு செபித்த பாறையில் இன்றும் காணப்படும் ஒரு சிறுதுவாரத்தின் மூலமாகத் தண்ணீர் பீறிட்டு வரச் செய்து கர்த்தர் அவர் தாகத்தைத் தணித்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். பெருவிளை என்ற கிராமத்தில் அவர் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு வேப்பமரத்தின் இலைகள் சுகவீனத்திலிருந்து மக்களை விடுவித்தாகவும் நம்பப்படுகிறது. கடும் சித்திரவதைகள், சிறைவாசம், கொடுமைகள் எதுவும் தேவசகாயம் பிள்ளையின் விசுவாசத்தை அசைக்க முடியவில்லை. ஆரல்வாய்மொழி காடுகளுக்குள் கடத்தப்பட்ட இவர் ஆழ்ந்ததியானத்தில் ஈடுபட்டார். இந்த பரிசுத்தவானைக் காண அருகிலிருந்த கிராம மக்கள் வந்தனர்.
அன்றைய சமுதாயத்தின் ஒரு பிரிவினர் இவருக்கு விரோதமாகத் திட்டம் வகுத்தனர். போர்வீரர்கள் காடுகள் நிறைந்த மலைப்பகுதிக்குள் சென்று தேவசகாயம் பிள்ளையைத் துப்பாக்கியால் சுடடுக் கொல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்தத் துப்பாக்கிகள் வெடிக்காததால் அவரைக் கொல்ல முடியவில்லை. ஆனால் தேவசகாயம் பிள்ளை அத்துப்பாக்கிகளை தன் கையில் எடுத்து ஆசீர்வதித்து போர்வீரகளிடம் திருப்பி கொடுத்து “ நீங்கள் விரும்பினால் என்னை சுட்டுக் கொல்லுங்கள்” என்றாராம். போர்வீரர்கள் துப்பாக்கியை எடுத்து ஐந்து முறை அவரை நோக்கி சுட்டனர். இவ்வாறாக 1752ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியன்று போர் வீரர்களால் தேவசகாயம் பிள்ளை சுடடுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாக தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துவின் மேல் கொண்ட விசுவாவத்திற்காக ஒரு சிறந்த கிறித்தவர் வேதசாட்சியாக மரித்தார் என்று சரித்திரத்தின் பக்கங்கள் கூறுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டறு தூய சவேரியார் பேராலயத்தின் வலது பக்கம் இவரது புனிதர் பட்டத்திற்காக மன்றாடும் வகையில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு புனிதர் பட்டம் கிடைக்க நாமும் ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
Source from:http://www.anbinmadal.org

வெள்ளி, 6 செப்டம்பர், 2013
நாம் கோவிலுக்கு போகையில்
- கல்வாரி பலியில் பங்கெடுக்க போகிறோம் என்கிற கருத்து உங்களிடம் இருகிறதா?
- அப்படி இருந்தால் இப்படி கட்டுபாடற்ற முறையில் போவிர்களா?
- இப்படிப்பட்ட உடையோடு போவிர்களா?
- எதற்காக ஒரு கேளிக்கை இடத்திருக்கு போவதை போல் உடை அணிகிறிர்கள்?
- அலங்காரம் செய்கிறிர்கள்?
- யாருக்காக இதை செய்கிறிர்கள்?
- நீங்கள் கடவுளை வழிபடவும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிகவும் கோவிலுக்கு வர வேண்டும்.
- அடக்கவொடுக்கம் இச்சை அடக்கத்தோடு அல்லவா சர்வேசுரன் முன் இருக்க வேண்டும்.
வெள்ளி, 12 ஏப்ரல், 2013
அர்ச் சிசிலியா (St.Ceceilia) வாழ்க்கை வரலாறு in Tamil
அர்ச் சிசிலியா (St.Ceceilia)
குறிப்பு
பிறப்பு : தெரியவில்லை
இறப்பு : 177 ஆம் ஆண்டு Nov .22
மரணம் : வேத சாட்சி மரணம்.
உடல் அழியாமல் இன்னும் உள்ளது.
அர்ச் சிசிலியா ஒரு ரோமன் புனிதை. அவரது பிறந்த ஆண்டு தெரியவில்லை, ஆனால் அவர் ரோம் நகரில் 177 கி.பி. இறந்தார் என்று நம்பப்படுகிறது. அவருடைய உடல் அழியா நிலையில் 1599 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடல் தான் முதல் முதலில் அழியாமல் இருந்த முதல் புனிதை என அறிய படுகிறது.
வரலாற்று ஆசிரியர்கள் அர்ச் சிசிலியா ஒரு ரோமன் கிறிஸ்தவரின் மகள் என்று கூறுகின்றனர். பெற்றோருடைய வற்புறத்தலால் Valerian of Trastevere என்ற வாலிபனை திருமணம் செய்தார். ஆனால் அவருடைய விருப்பமோ ஒரு கன்னியாக இருப்பது மட்டுமே. திருமண நாள் அன்று அவர் ஆண்டவரிடம் "ஆண்டவரே நான் எந்த குழப்பமும் இல்லாமல் என் மனது மற்றும் உடல் துய்மையாக வைத்திருக்க உ த வும்,
திருமணம் முடிந்த பிறகு வீடு சென்ற பின் அர்ச் சிசிலியா தன் கணவனை பார்த்து சொன்னதாவது தன்னுடைய கற்பை ஒரு காவல் சம்மனசு கோபத்துடன் காத்து வருவதாக சொன்னார். அர்ச் சிசிலியாவிடம் அப்படி என்றல் உன் காவல் சம்மனசை எனக்கு காட்டு என்றான். அர்ச் சிசிலியா அவனிடம் நீ பார்க்க வேண்டுமானால் நீ கத்தோலிக்க திருச்சபையை விசுவசித்து ஞனஸ்தானம் பெற்றால் மட்டுமே நீ அவரை பார்க்க முடியும். என்றார்.
தன் மனைவி சொன்னதை விசுவசித்து அவனும் ஞனஸ்தானம் பெற்றான். அன்று இரவு தன் மனைவி ஜெபிக்கும் பொது இரு காவல் சம்மனசுக்கள் அவள் அருகே நிற்பதை கண்டான். அவர்கள் அர்ச் சிசிலியா தலையின் மீது ரோஜா மற்றும் லில்லியால் அலங்கரிக்க பட்ட கிரிடத்தை சூட்டினர். அவனுடைய சகோதரனும் ஞனஸ்தானம் பெற்றான். இரு சகோதரர்களும் பணகரர்களாக இருந்ததால் வேதசாட்சி மரணம் அடைந்த கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உதவி செய்தனர். கிறிஸ்தவர்களுடைய சடலங்களை அவர்கள் பக்தியுடன் புதைத்தனர்.
ரோம் நகரிலே கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டு ஆளுநன் Almachius என்பவர் முன் கொண்வரப்பட்டனர். அவர்கள் பொய்யன் கடவுளை வழிபட மறுத்தனர். எனவே அவர்களை வாலால் வெட்டி கொன்றான். இதை அறிந்த அர்ச் சிசிலியா அவர்களது உடலை பக்தியுடன் கல்லறையில் வைத்தார்.
இதனை அறிந்த ஆளுநன் Almachius அர்ச் சிசிலியாவையும் கைது செய்தான். அர்ச் சிசிலியாவையும் அவளின் அந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க சொன்னான். ஆனால் அர்ச் சிசிலியா அதை மறுத்தார். எனவே குளிக்கும் அறையில் சூடான வெந்நீர் உற்றி கொல்ல முயன்றனர். ஆனால் அந்த வெந்நீர் அவளை ஒன்றும் செய்யவில்லை.
பின் அவளை தலை வெட்டுண்டு கொலை செய்ய அனுப்பினான். மூன்று முறை வெட்டப்பட்டு ஆனால் முழுவதும் வெட்டபடாமல் கழுத்து தொங்கி கொண்டு இருந்தது. தலை வெட்டுண்டு முன்று நாட்கள் உயிருடன் இருந்தார்.
அவள் அந்த மூன்று நாளும் வலியுடன் ஆண்டவரை புகழ்ந்து பாடிக்கொண்டு இருந்தார். இறுதியாக அவர் மூன்று நாட்களுக்கு பிறகு அவர் இறந்தார்.
அவருடைய கல்லறை 817 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க பட்டு ரோமில் உள்ள அவரது ஆலயத்துக்கு மாற்ற பட்டது. 1599 ஆம் ஆண்டு மீண்டும் அவரது கல்லறையை திறந்த போது அவரது உடல் அழியாமல் இருப்பதை கண்டனர்.
இப்போதும் நாம் ரோம் நகரில் உள்ள அவரது ஆலயம் சென்ட்ரல் அவரது அழியா உடலை காணலாம்.
அர்ச் அஞ்சேம்மாள் ( st .Agnes ) வாழ்க்கை வரலாறு
அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .(தமிழில்)
லேபிள்கள்:
(St.Ceceilia),
அர்ச் சிசிலியா,
வாழ்க்கை வரலாறு in Tamil
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)