ஆகஸ்டு 0️8ம் தேதி
தியாக்கோனும், பேயோட்டுபவரும், வேதசாட்சியுமான
அர்ச். சிரியாக்கூஸ் திருநாள்
அர்ச்.
சிரியாக்கூஸ், திருச்சபையின் 14 உதவியாளர்களில் ஒருவராக போற்றப்பட்டு மகிமைப்படுத்தப்படுகிறார். மேலும், திருச்சபையின் மாபெரும் வேதசாட்சியான தியாக்கோன்களான அர்ச். முடியப்பா், அர்ச். லாரன்ஸ், சரகோசாவின் அர்ச். வின்சென்ட் ஆகியோருடன் ஒருவராகக் திகழ்கிறார். உரோமாபுரியின் பத்ரீசிய உயர்குடி மகனாகப் பிறந்தார்; கத்தோலிக்கரானார்; தன் ஆஸ்திகளையெல்லாம், ஏழைகளுக்குக் கொடுத்தார்;
முதலாம் மர்செல்லினுஸ் பாப்பரசர், இவருக்கு தியாக்கோன் பட்ட மளித்தார். பரிசுத்த தியாக்கோனான சிரியாக்கூஸ், உரோமையின் கொடுங்கோல் சக்கரவர்த்தி தியோக்ளேஷியனின் மகளான ஆர்டிமிசியாவிடமிருந்து பசாசுகளை ஓட்டினார்; இவளும், இவளுடைய தாயான அர்ச். செரினாவும், கிறீஸ்துவர்களாக மனந்திரும்பினார்; மேலும், பெர்ஷிய அரசரான ஷாபுரின் மகளான ஜோபியாஸிடமிருந்து, பசாசுகளை ஓட்டி விரட்டினார்;
இப்புதுமையால், அரசருடைய குடும்பமும், பெர்ஷிய நாட்டின் 400 அஞ்ஞானிகளும் கிறீஸ்துவர்களாக மனந்திரும்பினர். பெர்ஷியாவி லிருந்து, இவர், உரோமைக்குத்திரும்பி வந்தபோது, உரோமையின் மாக்சிமின் என்ற அஞ்ஞானியும் கிறீஸ்துவர்களைக்
கொடூரமாக உபத்திரவப்படுத்தியவனுமான சக்கரவர்த்தி மாக்ஸ்மின், மாபெரும் குளியல் அறைகளுடனான ஒரு பிரம்மாண்டமான அழகிய
அரண்மனையைக் கட்டிக் கொண்டிருந்தான். உரோமை விக்கிரகங் களை வழிபட மறுத்த பத்தாயிரத்திற்கு மேலான கத்தோலிக்கர்களை, குருக்களை, சிறைபிடித்து அடிமைகளாக்கி, இந்த கட்டிட வேலையில்,
அமர்த்தினான். இவர்களுக்கு சொற்ப உணவை அளித்தான்; கடின
வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்!
ஆகவே, தியாக்கோன் சிரியாக்கூஸ், தன் சக தோழர்கள்
சிலருடன் சேர்ந்து, மற்ற விசுவாசிகளிடமிருந்து உணவையும், மற்ற
அத்தியா வசியப் பொருட்களையும் சேகரித்து, இரகசியமாக, அடிமைகளாயிருந்த கிறீஸ்துவர் களுக்குக் கொடுத்து வந்தார். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட மாக்ஸ்மின், இவரைக் கைதுசெய்து, கொடிய சித்ரவதைகள் செய்து உபத்திரவப்படுத்தினான்; இவருடைய சரீரத்தின் மீது, கொதிக்கிற கீல் ஊற்றப்பட்டது: இறுதியாக, வியா ஒஸ்டென்ஸ் என்ற
இடத்தில், 304ம் வருடம், 8ம்
தேதியன்று, இவரை தலையை வெட்டிக்
கொன்றனர்;
இவருடன் இவருடைய சக தோழர்களான லார்ஜூஸ்,
ஸ்மாராக்டுஸ் ஆகிய இருவரும், இன்னும்
மற்ற இருபது கத்தோலிக்கர் களும் வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். அர்ச்.சிரியாக்கூஸின் பரிசுத்த சரீரம், உரோமையிலுள்ள வியா லாட்டாவிலுள்ள மகா
பரிசுத்த தேவமாதா தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த தேவாலயத்தில், இவருடைய
சகாக்களின் பரிசுத்த சரீரங்களும், இன்னும் அநேக வேதசாட்சிகளின் பரிசுத்த
அருளிக்கங்களும் பூஜிதமாக அடக்கம் செய்யப்பட்டு, ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றன! இவருடைய பரிசுத்த இரத்தம் அடைக்கப்பட்டிருக்கிற ஒரு அருளிக்கக் குப்பி,
டோர்ரே லே நோச்செல்லேயிலுள்ள பரிசுத்த சந்நிதானத்தில்
ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!
மரணப்படுக்கையிலிருக்கிற போது,
வருகிற சோதனைகள் நேரத்தில் அர்ச். சிரியாக்கூஸிடம், வேண்டிக் கொள்வது மிகுந்த பலனை அளிக்கக்கூடிய பக்தி
முயற்சியாகும். பசாசுகளின் பிடியிலிருந்து விடுதலை அடைவததற்கும், அர்ச். சிரியாக்கூஸிடம்
வேண்டிக்கொள்ளலாம்.
தியாக்கோனும்,
பேயோட்டுபவரும், வேதசாட்சியுமான அர்ச். சிரியாக் கூஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!