மரியாயியல்
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
மங்கள் வார்த்தை
(சுருக்கமான வியாக்கியானம்)
சர்வேசுரன் அனைத்தையும் சிறப்புற செய்வார் - என்றும் இவை அனைத்தும் நமது படிப்பினைக்காக தரப்பட்டது என்றும் நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். அதே போன்றுதான் மங்கள வார்த்தை நிகழ்ச்சியின் போதும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு வார்த்தைகளும், சிறப்புற கோர்க்கப்பட்டுள்ளது. அதனை அர்ச். லூக்காஸ் எழுதிய சுவிஷேத்தின் 1-ம் அதிகாரத்திலிருந்து காண்போம்.இங்கே மூன்று காரியங்கள் அடங்கியுள்ளன.
1. மாதாவின் கவனத்தை தன்னிடம் திருப்ப தேவதூதன் கூறியது.
1.1. வித்தியாசமான முறையில் வாழ்த்தியது பிரியதத்ததினாலே பூரணமானவளே
1.2. அதன் அர்த்தம் கடவுள் உம்முடனே 1.3. அதன் விளைவு ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.2. மனிதாவதார இரகசியத்தை வெளிப்படுத்தியது.
2.1. நடக்கப்போவதை முன்னறிவித்தல் இதோ, உமது உதிரத்தல் கெற்பந்தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர் (லூக் 1:31)
2.2. அவர் யார் அவர் பெரியவராயிருப்பார் ... அவருடைய அரசாட்சிக்கு முடிவு இராது என்றார். (லூக்.1:32,33)
3. இது கடவுளின் செயல் என்பதை நிரூபித்தல்
3.1. எலிசபெத்தின் உதாரணம் உமக்குப் பந்துவாகிய எலிசபெத் மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
3.2. உதாரணம் எடுத்துரைக்கும் உண்மை - ஏனெனில் சர்வேசுரனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை .
The Miracle of the Holy House of Loreto
by Lee WellsInterior of the Holy House |
பல்லவி
தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோர்க்கு
தஞ்சமும் ஆதரவும் நீரே
சரணங்கள்
1. தீயில் மெலிந்து வெந்து சோர்ந்து உந்தன்
திருத்தயை கேட்க நீரோ அறிந்து
தூயவான் கதியினிற் சேர்ந்து உம்மை
ஸ்துதித்திட அருள் செய்வீர் புரிந்து
உலகம் பசாசைத் தினம் வென்றார் தங்கள்
உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார்
கலகமெல்லாம் கடந்த பின்னும் சொற்பக்
கறையினால் துறை சேரார் இன்னும் தாயே
தாய் விட்டுப் பிள்ளை நிற்கலாமோ உந்தன்
தயை விட்டால் துயர் விட்டுப் போமோ !
தூய கருணை நிறை ஆயே இவர்
துயரெல்லாம் நீக்க வரும் தாயே
உம் மகன் தன்னைக் காணாதாலும் தீயில்
உழன்று வருந்து வதினாலும்
நன்மை நிறை கன்னியாந் தாயே மோட்ச
நாடுதந் தாதரிப்பீர் ஆயே
5. பாவிகட் கடைக்கலம் நீரே-மிக
பரிதவிப் போர்க் குதவி நீரே
சேவிப் போர்க்கு துணையும் நீரே-தம்
சென்றோர்க்கு இராக்கினியும் நீரே
திவ்விய ஸ்பீரித்து சாந்துவே 2
அடியோர் உள்ளத்தில் எழுந்தே
வருவீர் இனிய சிநேக தேவனே
உலக இருளை அகற்ற உமது
பரலோக ஒளி தாருமே 2
உண்மைக் கண்டு நன்மை பெற
நாதனே அருள் செய்குவாய்
நன்மை பயக்கும் ஞானக் கொடைகள்
யாவும் அளிப்பாய் பரமனே 2
நல்வழியை நாங்கள் கண்டு
நற்கதி பெறச் செய்குவாய்
ஞானம் புத்தி விமரிசையுடன்
அறிவு திடம் பக்தியும் 2
தெய்வபயமான வரங்கள்
ஏழும் எமக்கு ஈவாயே
இஸ்பீரித்து சாந்துவின் ஏழுவரம் கேட்டல்
தேவ ஸ்பீரித்து சாந்துவே
(சத், வேத சங்கீர்த்தனை)
தேவ ஸ்பீரித்து சாந்துவே
தேவரீர் வாரும் எம்மில்
மாவரப்ரசாதம் நும்
மைந்தர் எங்கட்கீயவே
வாரும் ஸ்பீரித்து சாந்துவே
வல்லப அநாதியே
தேவுலகில் நின்று நும்
திவ்விய ப்ரகாசத்தின்
பேரொளி கொள் காந்தியை
தேவரீர் வரவிடும்
வாரும் ஸ்பீரித்து...
ஞானம் புத்தி விமரிசை
அறிவு திடம் பக்தியும்
தெய்வ பயமாகிய வரங்கள்
எங்கட்கீயவே
வாரும் ஸ்பீரித்து…
ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
ஞானம் நிறைக் கன்னிகையே
அனுபல்லவி
மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2
பலி பீடமுமாய் அலங்கரித்தாரே-ஞானம்
பாவ நிழலே அணுகா
பாதுகாத்தார் உம்மையே பரமன்
தாயுதரம் நீர் தரித்திடவே-2
தனதோர் அமல தலமெனக் கொண்டார்-ஞானம்
வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே-2
வானோர் துதிக்கும் இறைவியே வாழி-ஞானம்
வாக்குத் தத்த பெட்டகமே
வானகம் சேர்க்கும் வாசலே
மகிழ் ஒளி நல்கும் விடி வெள்ளியே-2
மெய் மனம் நொந்தோர்க் காறுதலே-ஞானம்
1. கிருபை தயாபத்தின் மாதாவாய்
இருக்கின்ற இராக்கினியே வாழ்க
பல்லவி
வாழ்க வாழ்க மாதாவே
வாழ்க வாழ்க மாதாவே
2. எமதுயிர் தஞ்சமும் நீராமே
எமது நல் மதுரமும் நீராமே - வாழ்க
3. பரதேச ஏவையின் மக்கள் யாம்
பரிவாக உம்மை யழைக்கின்றோம் - வாழ்க
4. இந்தக் கண்ணீ ர் கணவாய் நின்று
உம்மையே நோக்கி அழுகின்றோம் - வாழ்க
5. ஆதலின் எமக்காக வேண்டுகின்ற
மாதயை மாமரி விழி பாரும் - வாழ்க
6. பரதேச மிதையாம் கடந்த பின்னர்
திருக்கனி சேசுவின் முகங்காட்டும் - வாழ்க
7. கிருபாகரியே தயா பரியே
மரியே மதுர மா கன்னிகையே - வாழ்க
ஸ்பீரித்து சாந்துவே வாரும் - 2
அன்பான தேவனே
அடியோர் உள்ளத்தே இறங்கும்
உமது ஞானம் இல்லாதாகில்
தவறிப்போவோம் பாருமே
எமதஞ்ஞானத்தை நீக்கவே
எழுந்தருளும் மெய் ஜோதியே
வாரும் ஞான ஜோதியே (2)
நரக மோடுலகு சேர்ந்தே
நம்மை ஐயோ கெடுக்குதே
விரைவாய் வாரும் தேவனே
நீர் வேதனையார் எம்மை மீட்கவே
வாரும் எம்மை மீட்கவே (2)
திருப்ரசாதம் தரவாரும்
தீங்கில்லாமல் நாமிருப்போம்
தேவனே நீர் காவல் செய்வோர்க்கு
ஆனந்தமே தூயானந்தமே
வாரும் காவல் தாருமே (2)
Our Lady of Snow, Tuticorin |
மாதாவே சரணம் - உந்தன்
பாதாரம் புவிக்காதாரம் - கன்னி
அனுபல்லவி
மா பாவம் எமை மேவாமல்-2
காவீரே அருள் ஈவீரே - கன்னி-மாதாவே
சரணங்கள்
மாசில் உம் மனமும் சேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம்
ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம்
பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் - மாதாவே
நானிலத்தில் சமாதானமே நிலவ
நாஸ்திக ரஷ்யா ஆஸ்திகம் அடைய
உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம்
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் - மாதாவே
பல்லவி
மாதாவே சரணம் - உந்தன்
பாதாரம் புவிக்காதாரம் - கன்னி
அனுபல்லவி
மா பாவம் எமை மேவாமல்-2
காவீரே அருள் ஈவீரே - கன்னி-மாதாவே
சரணங்கள்
மாசில் உம் மனமும் சேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம்
ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம்
பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் - மாதாவே
நானிலத்தில் சமாதானமே நிலவ
நாஸ்திக ரஷ்யா ஆஸ்திகம் அடைய
உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம்
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் - மாதாவே
1. சூரியன் சாய காரிருள் மெல்ல
சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை
பாருல கெங்கும் நின்றெழுந் தோங்கும்..
பண்புயர் கீதம் வாழ்க மரியே
2. பட்சிகள் ஓசை மாய்ந்திட ஆடும்
பாலகர் நின்று வீடு திரும்ப
அர்ச்சய கோபுரங் களிசைக்கும்
ஆனந்த கீதம் வாழ்க மரியே
3. மாயவுலகிற் சிக்கியுழன்று
வாடியே உள்ளம் சோர்ந்திடும் வேளை
தாயகங் காட்டி கண்ணீர் துடைத்து
சஞ்சலந் தீர்க்கும் வாழ்க மரியே
4. சுந்தர வாழ்க்கை தோற்ற மறைய
துன்ப அலைகள் கோஷித் தெழும்பும்
அந்திய காலை எம்மரு குற்றும்
ஆதரவீயும் வாழ்க மரியே
பல்லவி
அன்னையே எங்கள் செல்வதாடு
அஞ்ஞானம் நீங்கி உன் நாடாகிய
விண்ணவனாம் உன் சுதன் சேசுவையே
வேண்டி மன்றாடிடாய்
வேண்டி மன்றாடிடாய் - தாயே தாயே
சரணம்
மானிட தேவன் இவ்வுலோகத்தில்
வந்தித்தனை நாளாயிற்றே
ஈனப் பிசாசை எங்கள் நல் நாடோ
இன்னும் விடாமற் போயிற்றே
தன்னை உருவாக்கிய தாதாவை
சற்றும் தேடாமல் விட்டதே
கண்ணில்லாத் தேவதைகள் தம்மையே
எம் நாடு நம்பிக் கெட்டதே ‘
சூரியன் சந்திரன் முதலான
சோதிகளைப் பணிந்ததே வீரர்
அரசர்கள் தம்மையுமே வீழ்ந்து
தொழத் துணிந்ததே
கண்ணிலே கண்ட தெல்லாம்
சேவித்து கர்த்தனையே மறந்ததே
எண்ணியிந் நாட்டையே உன்
நாடாக்கல் யாவற்றினுஞ் சிறந்ததே
பல்லவி
அழகின் முழுமையே தாயே
அலகையின் தலை மிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே
அமலனை எமக்களித்தாயே
சரணங்கள்
1. இருளே சூழ்ந்திடும்போதே
உதய தாரகை போலே
அருளே நிறைந்த மாமரியே
அருள்வழி காட்டிடுவாயே
அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனைப் பின் செல்வோம்
உன்னைத்துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்