Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 14 டிசம்பர், 2024

டிசம்பர் 05 - மடாதிபதியான அர்ச். சபாஸ்

டிசம்பர் 05

மடாதிபதியான அர்ச். சபாஸ் 

அர்ச். சபாஸ், செசரையாவிற்கருகிலிருந்த கப்பதோசியாவில், முட்டலாஸ்கா என்ற இடத்தில் 439ம் வருடம் பிறந்தார். இராணுவ அதிகாரியான இவருடைய தந்தை அலெக்சான்டிரியாவிற்குப்போக வேண்டியதினால், தன் குமாரனை பராமரிக்கும்படி, இவருடைய மாமாவின் பொறுப்பில் ஒப்படைத்தார். தனக்குச் சேர வேண்டிய சொத்துக்களினிமித்தம் தன் இரண்டு மாமாக்களிடையே கலகம் உண்டானதைக் கண்ட அர்ச்.சபாஸ், உலகத்தை வெறுத்து முட்டலாஸ்காவிலுள்ள ஒரு துறவற மடத்தில் தங்கியிருந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, இவருடைய இரண்டு மாமாக்களும் சமரசமடைந்து, சமாதானமானபிறகு, இவரிடம் வந்து, இவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஆசித்தனர். இவர் அவர்களுடைய விருப்பத்தை மறுத்து விட்டு, துறவற மடத்திலேயே தங்கி, ஜீவித்து வந்தார். 

456ம் வருடம், அர்ச்.சபாஸ்,ஜெருசலேம் சென்று, தன் 30வது வயதில் துறவற மடத்தில் சேர்ந்தார்.அர்ச்.தியோடிஸ்டுஸின் கீழ், ஒரு துறவியானார். பின், அர்ச். யூதிமியுஸ் வழிநடத்துதலின் கீழ், ஒரு தபோதனரானார். அர்ச். யூதிமியுஸ் இறந்தபிறகு, சபாஸ், ஜெரிக்கோவிலிருந்த வனாந்தரத்தில், நான்கு வருட காலம் ஏகாந்த ஜீவியம் ஜீவித்தார். தனிமையில் ஏகாந்த ஜீவியம் ஜீவிப்பதில் இவருக்கு பெரும் ஆவல் இருந்தபோதிலும், திரளான சீடர்கள் இவர்பால் கவர்ந்திழுக்கப்பட்டனர்; 483ம் வருடம், அர்ச். சபாஸ், சீடர்களை பல துறவற சிற்றறைகளைக் கொண்ட ஒரு துறவற மடத்தில் தங்க வைத்தார். 

இவரிடம் சேர்ந்த 150 துறவிகளும், ஒரு குருவானவர் வேண்டும் என்று கேட்டபோது, துறவிகள் குருப்பட்டம் பெறுவதை அது வரை எதிர்த்து வந்த அர்ச். சபாஸ், கட்டாயத்தின்பேரில், குருப்பட்டம் பெறுவதற்கு சம்மதித்தார்; ஜெருசலேம் பிதாப்பிதாவான சாலுஸ்ட் ஆண்டகையினால், இவர்,491ம் வருடம் குருப்பட்டம் பெற்றார். ஆர்மேனியாவிலிருந்தும், எகிப்திலிருந்தும் அநேக சீடர்கள் இவரிடம் வந்து சேர்ந்தனர். இவர், அநேக மருத்துவமனைகளையும், ஜெரிக்கோவின் அருகில் இன்னொரு தபோதனர்களுக்கான துறவற மடத்தையும் கட்டினார். பாலஸ்தீனத்தில், தனித்தனி சிற்றறைகளில்  ஜீவித்து வந்த எல்லா தபோதனர்களுடைய அதிபராக அர்ச்.சபாஸ் நியமிக்கப்பட்டார்.

 ஆனால், தபசு காலத்தில், அதிகக் கடினமாக தபசு செய்யும்படியாக, தன் சிற்றறையிலிருந்து இவர் வெளியே சென்று ஏகாந்தத்தில்  ஜீவிப்பதைப்பற்றி, இவருடைய சீடர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது; அதன் காரணமாக, இவருடைய சீடர்களில் 60 பேர், இவரிடமிருந்து பிரிந்து, சிதைந்துபோயிருந்த தேகுனா துறவற மடத்தை புதுப்பிக்கச் சென்றனர். அவர்களிடம், எந்த மனவருத்தமும் படாமல், அர்ச். சபாஸ், அவர்களுக்குத் தேவையான உணவையும் மற்ற அத்தியாவசியப் பொருட்களையும் அளித்தார். 511ம் வருடம், முதலாம் அத்தனாசியுஸ் என்ற சக்கரவர்த்தியிடம் அனுப்பப்பட்ட மடாதிபதிகளுடைய தூதுக்குழுவில், இவரும், இடம்பெற்றிருந்தார். 

531ம் வருடம், இவருக்கு 91 வயதானது. மறுபடியும், கான்ஸ்டான்டினோபிளுக்குச் சென்று, அங்கிருந்த ஜஸ்டீனியன் சக்கரவர்த்தியிடம், “சாம்ரிடன்” எதிர்ப்பாளர்களின் சார்பாக, சமரசம் பேசி, அவர்களுக்கான மன்னிப்பைப் பெற்றார். தன் மடத்திற்குத் திரும்பி வந்த சிறிது காலத்திலேயே, வியாதியில், விழுந்தார்; 532ம் வருடம், டிசம்பர் 5ம் தேதியன்று, தனக்குப் பின், அடுத்த மடாதிபதியை ஏற்படுத்தியபிறகு, லாரா மார் சாபா என்கிற தனது மடத்தில், இவர் பாக்கியமாய் மரித்தார். ஆதித்திருச்சபையின் துறவற மடங்களின் மிகச் சிறந்த மடாதிபதியாகவும், கிழக்கத்திய துறவற மடங்களைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், அர்ச். சபாஸ் திகழ்கிறார்.

இவருடைய மடத்திலுள்ளவர்களைவிட இவர் கடினமாய் உழைத்து, ஜெபத் தியானத்தில் அதிக நேரம் செலவழித்து, இரவு வேளையிலும் வெகு நேரம் ஜெபம் செய்வார். மடத்தின் ஒழுங்கை அனுசரிப்பதில் அம்மடத்திலுள்ள துறவிகள் தளர்ச்சியடைந்ததை சபாஸ் அறிந்து, அம்மடத்தை விட்டு வெளியேறி, தனிமையில் ஆண்டவருக்கு  ஊழியம் செய்ய வனாந்தரத்திற்குக் போனார். அங்கு துஷ்ட பசாசோவெனில் மிருக ரூபம் எடுத்து, இவரைத் துன்பப்படுத்தியபோதும், இவர் தம் ஜெப தபத்தால் அதை வென்றார். இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்ட அநேகர் இவருக்கு சீஷரானார்கள். அவர்கள் வெகு காலம் இவருக்கு அடங்கிக் கீழ்படிந்தபோதிலும் அவர்களுக்குள் ஒற்றுமையில்லாததை சபாஸ் கண்டு, வேறு வனாந்தரத்திற்குச் சென்றார். அங்கு ஒரு சிங்கக் குகையில் பிரவேசித்து, நடுச்சாம வேளையில் ஜெபத்தியானம் செய்கையில், அதில் வசித்த சிங்கம் குகையில் சபாஸைக் கண்டு, இவருடைய வஸ்திரத்தைக் கவ்வி இழுத்தது. இவர் அதைவிட்டு அகலாததினால், அது அவ்விடத்தை விட்டு வேறிடம் சென்றது. இவருடைய ஜெபத்தால் மழை பெய்து பெரும் பஞ்சம் நீங்கியது. சபாஸ் அரசராலும் ஜனங்களாலும் மதிக்கப்பட்டு, சகல புண்ணியங்களையும் உத்தமமாய் அனுசரித்து, வந்தார்

ஜெருசலெமுக்கும் சாக்கடலுக்கும் இடையே உள்ள ஏகாந்தமான வனாந்தரப் பகுதியில், தபோதனர்களுக்கான சிற்றறைகளுடைய துறவற மடத்தை, அர்ச். சபாஸ் ஸ்தாபித்தார். இதற்கு. மார் சாபா என்று இவருடைய பெயர் வைக்கப்பட்டது.  இங்கு அநேக மாபெரும் அர்ச்சிஷ்டவர்கள் தோன்றியதாலும், இதனுடைய ஒப்புயர்வான  முதன்மை நிலையினாலும், மாபெரும் துறவற மடம் என்று அழைக்கப்படுகிறது. இம்மடத்தில், இக்காலத்திலும், கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் துறவியர் வசித்து வருகின்றனர். உலகத்திலேயே மிகப் பழமையான துறவற மடங்கள் முன்று அல்லது நான்கு உள்ளன! அவற்றில் இதுவும் ஒன்று! அர்ச். சபாஸின் பரிசுத்த அருளிக்கங்கள், வெனிஸிலுள்ள அர்ச்.மாற்கு தேவாலயத்தில் பூஜிதமாக வணங்கப்படுகின்றன! 


மடாதிபதியான அர்ச்.சபாஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


Feast of St. Sabas

St. Sabas was born in the year 439 at Mutalaska, Cappadocia, near Caesarea. His father was an army officer there, but when assigned to Alexandria, he left Sabas in the care of an uncle.

Sabas was mistreated by his uncle's wife, so he ran away to another uncle when he was only eight. When the two uncles became involved in a lawsuit over his estate, he again ran away, this time to a monastery near Mutalaska. Later, both uncles reconciled and wanted Sabas to marry, but he remained in the monastery.

In 456, he went to Jerusalem and entered a monastery at the age of 30, under St. Theoctistus, and became a hermit under the guidance of St. Euthymius.

After the death of St. Euthymius, Sabas spent 4 years alone in the desert near Jericho. Despite his desire for solitude, he attracted disciples, organized them into a laura in 483, and when his 150 monks asked for a priest (despite his opposition to monks being ordained), he was obliged to accept ordination and was ordained to the priesthood by Patriarch Sallust of Jerusalem in 491.

He attracted disciples from Egypt and Armenia, and built several hospitals and another monastery near Jericho. He was appointed archimandrite of all hermits in Palestine who lived in separate cells. However, his custom of going off by himself during Lent caused dissension in the monastery, and 60 of his monks left to revive a ruined monastery at Thecuna. He bore them no ill will and aided them with food and supplies.

In 511, he was one of a delegation of abbots sent to Emperor Anastasius I. In 531, when he was ninety-one, he again went to Constantinople, this time to plead with Emperor Justinian on behalf of the Samaritan rebels, and obtained their pardon.

He fell ill soon after his return to his laura from this trip and died on December 5th, 532, at Laura Mar Saba, after naming his successor.

St. Sabas is one of the most notable figures of early monasticism and is considered one of the founders of Eastern monasticism.

The laura he founded in the desolate, wild country between Jerusalem and the Dead Sea, named Mar Saba after him, was often called the Great Laura for its preeminence and produced many great saints.

It is still inhabited by monks of the Eastern Orthodox Church and is one of the three or four oldest monasteries in the world.

His relics were taken to Venice by the Venetians and are still venerated in St. Mark's Basilica in Venice.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக