Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 20 டிசம்பர், 2024

டிசம்பர்‌ 20ம்‌ தேதி அர்ச்‌. சிலோஸ்‌ தோமினிக்‌

டிசம்பர்‌ 20ம்‌ தேதி 
 அர்ச்‌. சிலோஸ்‌ தோமினிக்‌

அர்ச்‌. தோமினிக்‌,ஸ்பெயினில்‌,நவாரிலுள்ள கானாஸ்‌ என்ற இடத்தில்‌ கி.பி.1000ம் வருடம்‌ பிறந்தார்‌. இவர்‌ விவசாயக்‌ குடும்பத்தில்‌ பிறந்தார்‌;ஆடுமாடு மேய்க்கும்‌ தொழில்‌ செய்து வந்தார்‌.பின்னர்‌, நவாரிலுள்ள அர்ச்‌.ஆசீர்வாதப்பர்‌ மடத்தில்‌ சேர்ந்தார்‌. அதே மடத்தில்‌ மடாதிபதியாகவும்‌ பொறுப்பேற்றார்‌. 

3ம்‌ கார்சியா என்ற நவார்‌ அரசனிடம்‌, இவர்‌ தனது மடத்திற்கு சொந்தமான நிலங்களை ஒப்படைக்க மறுத்தார்‌; உடனே, அரசன்‌, இவரை மடத்திலிருந்து வலுவந்தமாக வெளியேற்றினான்‌; இவருடன்‌ இன்னும்‌ இரு துறவியர்‌ மடத்திலிருந்து வெளியேறினர்‌. 

தோமினிக்‌, பழைய காஸ்டிலுக்குச்‌ சென்றார்‌. காஸ்டில்‌ மற்றும்‌ லியோனுடைய அரசனான முதலாம்‌ ஃபெர்டினான்டு அரசன்‌, அங்கு இவரை வரவேற்றார்‌; சீலோஸிலுள்ள அர்ச்.செபஸ்தியார்‌ மடத்தினுடைய மடாதிபதியாக, இவரை நியமித்தார்‌.(இந்த மடம்‌, இப்போது, அர்ச்‌.தோமினிக்‌ மடம்‌ என்று அழைக்கப்படுகிறது) இவர்‌ தனது துறவற மடத்தை சீர்திருத்தினார்‌;உரோமையரின்‌ கட்டிடக்‌ கலையில்‌, அடைபட்ட மடங்களைக்‌ கட்டினார்‌;எழுதக்‌ கற்றுக்கொடுக்கும்‌ எழுதுக்கூடத்தைத்‌ துவக்கினார்‌; அப்பிரதேசத்தில்‌, இது மிகவும்‌ பிரபலியமாக ஆனது. 

 இவர்‌ தனது பக்தியுள்ள ஜெபங்களாலும்‌, தபசுகளாலும்‌,அநேக நோயாளிகளைப்‌ புதுமையாகக்‌ குணப்படுத்தினார்‌; அதனால்‌, இவருடைய கீர்த்தி எல்லா இடங்களிலும்‌ பரவியது. மேலும்‌, மகமதியர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து, கிறீஸ்துவர்களை மீட்பதற்காக, இவர்‌ தனது ஜெபதப மன்றாட்டுகளால்‌ புதுமைகள்‌ செய்தார்‌.

 அர்ச்‌. தோமினிக்‌, 1073ம்‌ வருடம்‌, டிசம்பர்‌ 20ம்‌ தேதி பாக்கியமாய்‌ மரித்தார்‌. ஸ்பெயின்‌ நாட்டு மக்களால்‌ நேசிக்கப்படுகிற மிகப்‌ பிரியமான அர்ச்சிஷ்டவர்களில்‌ இவரும்‌ ஒருவர்‌. அர்ச்‌.சிலோஸ்‌ தோமினிக்கின்‌ திருயாத்திரை ஸ்தலமாகக்‌ திகழும்‌ தேவாலயம்‌, போதகக்‌ குருக்கள்‌ சபையைக்‌ தோற்றுவித்த அர்ச்‌.தோமினிக்‌ என்ற அர்ச்‌.சாமிநாதருடைய பிறப்பில்‌ முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்‌, அர்ச்‌.சாமிநாதரின்‌ தாயார்‌,இவருடைய திருயாத்திரை ஸ்தலத்திலிருந்த கல்லறையில்‌, தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று ஜெபித்தார்கள்‌.அதனால்‌ தான்‌, 1170ம்‌ வருடம்‌, குழந்தை பிறந்தபோது, தோமினிக்‌ என்ற பெயரையும்‌ வைத்தார்கள்‌.  

அர்ச்‌.சிலோஸ்‌ தோமினிக்கே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக