Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 20 டிசம்பர், 2024

‌டிசம்பர் 19ம் தேதி அர்ச்‌. முதலாம்‌ அனஸ்தாசியுஸ்‌

‌டிசம்பர் 19ம் தேதி
அர்ச்‌. முதலாம்‌ அனஸ்தாசியுஸ்‌ 

இவர்‌, உரோமில்‌ அந்நகரக்‌ குடிமகனாகப்‌ பிறந்தார்‌. இவர்‌ ஒரு மாசற்றவரும்‌, அப்போஸ்தலிக்க ஆவல்‌ மிக்கவருமாயிருந்தார்‌ என்றும்‌, மாபெரும்‌ பரிசுத்த‌ தனதத்தையுடையவரும்‌, தரித்திரத்தில்‌ மாபெரும்‌ உயர்ந்த நிலையிலிருந்தவருமாகத் திகழ்ந்தார்,‌ என்றும்‌, அர்ச்‌. ஜெரோம்‌ இவருடைய ஜீவிய சரித்திரத்தில்‌ எழுதியுள்ளார்‌. உரோமாபுரியில்‌ மாக்சிமுஸின்‌ மகனாகப்‌ பிறந்தார்‌. அர்ச்‌.சிரிசியுஸ்‌ பாப்பரசருக்கு அடுத்ததாக இவர்‌ கி.பி.399ம்‌ வருடம்‌ முதல்‌ 401ம்‌ வருடம்‌ வரை பாப்பரசராக ஆட்சி புரிந்தார்‌. 

கி.பி.400ம்‌ வருடம்‌, அலெக்சாண்டிரியாவின்‌ பிதாப்பிதாவான தியோஃபிலுஸ்‌, ஓரிஜன்‌ என்பவர்‌ கத்தோலிக்க கிறீஸ்துவ போதனைகளுக்குப்‌ பிரமாணிக்கமுடன்‌ இருக்கிறாரா என்பதைப்‌ பற்றிய மிக வலுவான சந்தேகத்தை எழுப்பி, ஒரு கடிதத்தை எழுதி, பாப்பரசருக்கு அனுப்பியிருந்தார்‌. அதன்‌ பின்னணியில்‌, இவர்‌ திருச்சபை சங்கத்தைக்‌ கூட்டினார்‌; அந்த சங்கம்‌, கிறீஸ்துவ போதனைகளிலி ருந்து மாறுபட்ட போதனைகளைப்‌ போதிக்கிறார்‌, என்று ஓரிஜனைக்‌ கண்டித்‌துக்‌ கண்டனம்‌ செய்தது. மேலும்‌, ஓரிஜனால்‌ மொழிபெயர்க்கப்பட்ட முதல்‌ தத்துவங்கள்‌ என்ற நூலிற்கு ஆதரவாக அக்வீலியா, ரூஃபினுஸ் ஆகியோர்,‌ பாப்பரசருக்கு எழுதியிருந்தனர்‌; ஆனால்‌, அந்த நூலை ஏற்கனவே அர்ச்‌.ஜெரோம்‌ எதிர்த்து நிராகரித்திருந்தார்‌; பாப்பரசரும்‌, ஓரிஜனுடைய சகல எழுத்துக்களையும்‌, கண்டனம்‌ செய்த சங்கத்தின்‌ தீர்மானத்தையே ஆதரித்து, அதையே நிலை நிறுத்தினார்‌. வட ஆப்ரிக்காவிலுள்ள கிறீஸ்துவர்கள்‌, டோனடிசம்‌ என்ற பதிதத்திற்கு எதிராகப்‌ போராடும்படி, இவர்‌ வலியுறுத்தினார்‌. 401ம்‌ வருடம்‌ பாக்கியமாய்‌ மரித்தார்‌; போந்தியனுடைய கல்லறையில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டார்‌. 

பரிசுத்த பாப்பரசரான அர்ச்‌ முதலாம் அனஸ்தாசியுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக