1. சேசுவின் மதுர திரு இருதயமே
சிநேக அக்கினி மயமே
தினமும் நீர் எங்கள்
சிநேகமாயிருப்பீர் தேவ தயாநிதியே
2. மனிதரை மோட்ச கதியிலே சேர்க்க மனுமகனாய்ப் பிறந்தாய்
மகிமை பிரதாப கடவுளானாலும்
மாபழி மேற்சுமந்தாய்.
3. கள்ளளைப் போல கசடர்கள் உன்னைக் கடுஞ்சிலுவையி லறைந்தார்
கருணை ஆர் உந்தன் இருதய அன்பின் கரை எவர் கண்டறிவார்
4. உம் திரு ரத்தம் ஒரு துளி முதலாய் உனக்கென வைத்தாயோ ஓய்விலா அன்பால் உன்னையே மறந்தாய்
ஓ திவ்ய இருதயமே
5. என்றும் எம்மோடு இருந்தருள்
ஈவாய் இனிய நல்லுணவாவாய். இவையெல்லாம் பாரா ஈனர்கள்
நாங்கள் இகழ்ந்துமைப் பழித்தோமே
6. நன்மைமேல் நன்மை என்றும் நீ செய்தாய் நாங்களோ தீமை செய்தோம். நன்றியில்லாமல் உன்தயை மறந்தோம் நாணி இப்போ தழுதோம்
7. எங்களைப் பாரும் இடர்குறை தீரும் இனிய நல்லிருதயமே எந்தெந்தப்
பாவ தந்திரம் நின்று
இரட்சிப்ப துன் பொறுப்பே