Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 4 - Life History of Rose of Lima in Tamil

 அர்ச்.லீமா ரோசம்மாள்(1585-1617):

ஜீவிய சரித்திரம்:

திருநாள்:ஆகஸ்ட் 30ம்தேதி


தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் தலைநகரமான லீமாவில் 1585ம் ஆண்டு ஸ்பானிய பெற்றோரான கஸ்பார், ஒலிவா தம்பதியருக்கு 11வது குழந்தை யாக அர்ச். ரோசம்மாள் பிறந்தாள். பிறந்த குழந்தை மிகவும் பலவீனமாக இருந்ததால், பிறந்த உடனே அதற்கு ஞானஸ்நானம் கொடுத்து இசபெல் என்று அதற்கு அதனுடைய பாட்டியினுடைய பெயரையே வைத்தனர். குழந்தையின் முகமானது ஒரு அழகிய ரோஜா மலராக தோற்றமளித்துக் கொண்டு அந்த முகத்தை தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததையும் கண்டதால் அந்நகரத்து மேற்றிராணியாரான அர்ச்.துர்பியுஸ் குழந்தைக்கு “ரோஸ்” என்று பெயர் வைத்து கதிட்ரல் தேவாலயத்தில் ஆடம்பரமாக ஞானஸ்நானம் கொடுத்தார். “லீமா ரோஸ்” என்ற இப்பெயரே இறுதி வரை நிலைத்தது. குழந்தை பருவத்திலேயே ரோசம்மாள் சர்வேசுரனுடைய விசேஷ தேவவரப்ரசாத சலுகைகளை அடையப் பெற்றிருந்தாள். தவழ்ந்து நடக்கும் குழந்தை பருவத்திலேயே அவளுடைய தாயாருடைய அறைக்குள்ளிருந்த பெரிய பாடுபட்ட சுரூபத்தையே உற்று நோக்கியவளாக ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தாள். 3 வயது குழந்தையாக இருந்தபோது, ரோஸ், அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிட்டது.

அப்போது அவள் அனுபவித்த மிக கொடிய உபாதனையை ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் தாங்கிக் கொண்டாள். அப்போது அவள், “இதைவிட மாபெரும் வேதனையை நமது திவ்ய இரட்சகர் நமக்காக அனுபவித்தாரே” என்று கூறினாள். மற்றொரு சமயம், அவளுக்குக் காது வலி வந்தது. அது வலிக்கிறதா என்று அவளிடம் வினவியபோது, அவள், “ ஆமாம். கொஞ்சம் வலிக்கிறது. ஆனால் தமது முள்முடியினால் நமது நல்ல நேச ஆண்டவர் எவ்வளவு அதிகமாக வேதனையுற்றார்!” என்று பதில் கூறுவாள். ரோஸூக்கு நான்கு வயதானபோது திடீரென்று ஒரு நாள் ஜெபபுத்தகத்தை சரளமாக வாசிக்கலானாள். அவள் எப்படி அதை வாசிக்கக் கற்றுக்கொண்டாள் என்று வினவியபோது, திவ்ய குழந்தை சேசுவே அவளுக்குக் கற்றுக் கொடுத்ததாகக் கூறினாள். சின்ன ரோஸ் ஆடம்பரமான ஆடையலங்காரங்கள், அழகான உடைகளையெல்லாம் அணிவதற்கு விரும்ப மாட்டாள். இப்பூவுலகத்தைவிட பரலோகத்திற்கே அதிகம் சொந்தமானவளாக திகழ்ந்த தமது குமாரத்தியைப் பற்றி கவலையுற்றவளாக ரோஸின் தாயார், ஒலிவா, ரோஸிடம் பல சமயங்களில் உலகக் காரியங்களின் பொருட்டு மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டாள். சில சமயங்களில் வீண் உலக ஆடம்பரங்களுக்காக அவளைக் கட்டாயப்படுத்துவாள். இவ்வாறு பல சமயங்களிலும் ரோஸின் பொறுமையை சோதிப்பாள்.

 சின்ன ரோஸ் ஒருபோதும் பொறுமையை இழந்துவிடாமலும் தாய்க்கும் மற்ற பெரியவர்களுக்கும் கீழ்ப்படிவதிலும் எப்போதும் பிரமாணிக்கமுடன் இருந்தாள். அவளுக்கு 12 வயதானபோது, அவளுடைய தாய், ஒலிவா, திருமணத்திற்கான ஏற்பாடு செய்யத் திட்டமிட்டபோது, ரோஸ், தான் அர்ச்.சாமிநாதரின் 3ம் தவச்சபையில் உட்பட்டு விட்டிலேயே ஜெபதப பரிகார ஜீவியம் ஜீவிக்கப்போவதாகத் தெரிவித்தாள். அதை பலவிதத்திலும் வெகுநாட்களாக எதிர்த்தாலும் ஒலிவா, இறுதியில் அதுவே சர்வேசுரனுடைய திருவுளம் என்று அறிந்து கொண்டாள். லீமாவில் இருந்த அர்ச்.சாமிநாதரின் மடத்தில் அச்சபையின் துணைச் சகோதரராக ஜீவித்துவந்த மாபெரும் அர்ச்சிஷ்டவரான அர்ச்.மார்டின் தே போரஸூம் அர்ச். லிமா ரோசம்மாளும் ஞான ஜீவியத்தில் இணைந்த நண்பர்களாக ஜீவித்தனர். அவர்கள் இருவரும் எல்லாம் வல்ல சர்வேசுரனுடைய மகத்துவமான இலட்சணங்களைப்பற்றியும் தேவமாதாவின் மகிமைகளைப் பற்றியும் அடிக்கடி தியானித்து மகிழ்வர். பெரு நாட்டில் அப்போது ஏற்பட்டிருந்த வறுமை பிணியைப் போக்குவதற்காக மூலிகை மருந்துகளை தயாரித்து ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்கி அவர்களுடைய பிணியையும் வறுமையையும் நீக்குவர்.

அர்ச். லீமா ரோசம்மாள், அவளுடைய சகோதரர் ஃபெர்டினான்டுடன் சேர்ந்து அவர்களுடைய வீட்டுத் தோட்டத்திலேயே கட்டிய, தபோதனர்களுக்கான ஒரு குகையிலேயே வாழ்ந்து வர திர்மானித்தாள். அது மிகச் சிறியதாக இருக்கிறதே என்று எல்லாரும் எதிர்த்தனர். உடனே அதற்கு அவள், “இது நம் நேச ஆண்டவரான திவ்ய சேசுவுக்கும் எனக்கும் தங்குவதற்கு போதுமான இடமாக இருக்கிறது” என்று கூறினாள். இந்தக் குகையிலேயே அவள் தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம், இரவு பகல் முழுவதும் நேச இரட்சகருடைய திவ்ய பாடுகளைப் பற்றிய தியானத்திலும் அதற்கு காரணமான தன்னுடையவும் உலகினுடையவும் பாவங்களைப் பரிகரிப்பதற்காக, ஜெபதவ பரிகார ஜிவியத்திலும் செலவழித்தாள். அவளுக்கு பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆயினும், அவளுடைய 4வது வயதிலிருந்தே அவள் அப்பழங்களைத் தொட மாட்டாள். அதே போல் அர்ச்.லீமா ரோசம்மாள் மாமிச உணவை ஒருபோதும் உட்கொண்டதே இல்லை. காய்ந்த உரொட்டித் துண்டுகளும் தண்ணீரும் சில கசப்பான கீரைகளுமே அவளுடைய அன்றாட உணவாக இருந்தது. தபசு காலத்தில் அந்த உரொட்டித் துண்டுகளையும் சாப்பிட மாட்டாள். ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ தான் அவள் உறங்கும் நேரம். அவள் தன் தலைமாட்டில் கரடுமுரடான பாறைகளையும் படுக்கையில் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் வைத்திருப்பாள். அந்த சொற்ப நேர தூக்குமும் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாள். 

அங்கு ஏற்படும் கொடூரமான கோடை உஷ்ணகாலத்திலும் பல நாட்கள் தண்ணீரே உட்கொள்ளாமல் தன்னையே ஒறுத்து ஜீவித்தாள். ஒரு முள்முடியை பின்னி அதைத் தன் முடி அலங்காரத்திற்குள் வைத்து மறைத்திடுவாள். எப்பொழுதும் அவள் தலைக்குள் குத்திக் கொண்டிருக்கும் இந்த முள்முடியுடனேயும் அதனால ஏற்படும் இரத்தக் காயத்துடனும் ஜீவித்து வந்தாள். மேலும், ரோஸ், தான் உடுத்தியிருந்த உடைக்குள் தன் உடல் முழுவதையம் ஒரு முரட்டு கயிற்றால் இறுகக் கட்டிக் கொண்டவளாக, அதனால் ஏற்படும் வலியை ஒறுத்தலாக ஒப்புக் கொடுத்தும் ஜீவித்தாள். இரவு நேரங்களில் வெறுங்காலுடன் தோட்டத்தில் மிகப் பாரமான சிலுவையை சுமந்தபடி நடப்பாள். ஒரு வேலைக்காரியிடம் அதிக பளுவான விறகுக் கட்டைகளை தன் மேல் சுமத்தும்படி செய்வாள். அதுவும் அப்பாரத்தைத் தாங்கமாட்டாமல் அதனடியில் தான் விழும் வரைக்கும் அப்படிச் செய்யச் சொல்வாள்.

இவ்வாறு, தனது திவ்ய இரட்சகர் மேல் கொண்ட சிநேகத்தை முன்னிட்டு, ஒறுத்தல் செய்வதற்கான எல்லா வழிமுறைகளையும் மிக நுட்பமான விதத்தில் அர்ச்.லீமா ரோசம்மாள் கடைபிடித்துவந்தாள்.

புண்ணிய கிரியைகளிலும் சாங்கோபாங்கத்திலும் உத்தமமான விதத்தில் ஜீவித்த அர்ச்.ரோசம்மாள், தன் குடும்பத்தினருக்குத் தேவைகளை சமாளிப்பதற்காக உழைத்து வருவாள். நல்ல பூவேலைபாடுகளுடன் துணிமணிகளையும் ஆடை ஆபரணங்களையும் நூற்பதில் கை தேர்ந்தவள். இத்தொழில் மூலம் தன் குடும்பத்திற்கு போதிய வருவாய் ஈட்டி வந்தாள். இவள் தன் தோட்டத்தில் பலவித பூச்செடிகளை பராமரித்து வந்தாள். அவற்றில் மலரும் பூக்களை விற்று வருவாள். தன் தோட்டத்து மலர்களால் அர்ச்.சாமிநாதருடைய மடத்துக் கோவிலில் இருந்த தேவமாதாவின் பீடத்தை தினமும் அலங்கரிப்பது இவளுக்கு மிகப்பிடித்தமான காரியம். அர்ச்.சாமிநாதர் சபையைச் சேர்ந்த மற்ற அர்ச்சிஷ்டவர்களைப் போலவே இவளும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டுமே உள்ளது என்று கலங்குவாள். ஏனென்றால், அதில் 10 மணி நேரம் வேலைக்குப் போய் விட்டால் மிதியான நேரம் ஜெபிப்பதற்கும் மற்ற புண்ணிய கிரியைகள் புரிவதற்கும் பற்றாமல் போகுமே என்று நினைப்பர். 

இப்பிரச்னையை இருவழிகளில் திர்த்தாள்: 

1) தூங்கும் நேரத்தை தவிர்த்தாள். 

2) மற்ற வேலை நேரம் முழுவதும் சர்வேசுரனுடன் ஐக்கியமாக ஒன்றிணைந்திருந்தாள். 

அதாவது அவள் வேலை நேரத்தில் தனது கரங்களில் நூற்கும் ஊசியைப் பிடித்திருந்தாலோ அல்லது மலர்களை பறித்துக் கொண்டிருந்தாலோ அல்லது ஜெபநேரத்தில் அவளுடைய கரங்கள் ஜெபமாலையைப் பிடித்துக் கொண்டிருந்தாலோ, 24 மணி நேரமும், எப்பொழுதும், அவள் தனது பரலோக பத்தாவுடன் நெருக்கமாக இணைந்திருந்தாள். அவள் நுட்பமாக எவ்வளவுக்கு தன்னைமுழுதும் சர்வேசுரனுடன் ஒன்றிணைத்து எப்பொழுதும் ஜீவித்தாளோ, அதே அளவிற்கு தான் செய்த அனைத்தையும் ஒறுத்தலாகவும் தபசாகவும் ஒப்புக் கொடுத்து வந்தாள். அநேக நேரங்களில் அவள் ஆழ்ந்த பரவசநிலையிலேயே தொடர்ந்து இருப்பாள்:

அவளுடைய தோட்டத்தில் அவள் வசித்து வந்த சிறு குகைக்கு தினமும் ஏராளமான மோட்சவாசிகள் வந்து அவளைப் பார்த்து செல்வர். கோவிலில் திவ்ய பலிபூசையின் போது திவ்ய நன்மை உட்கொண்டபிறகு, பல மணி நேரத்திற்கு காட்சி தியான பரவச நிலையிலேயே இருப்பாள். அவளை சுற்றிலும் மக்கள் உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கூட உணராதவளாக இருப்பாள். நரகிலிருந்து பசாசு கொடூரமான உருவத்துடன் அவள் முன்பாக நேரிடையாகவே தோன்றி அவளை வாதித்தது, சோதித்தது. ஞான வறட்சியில் நீண்ட நேரம் ரோசம்மாள் தனிமையில் விடப்பட்டாள். அத்தகைய தருணங்களில், அவள் ஆண்டவரிடம், “ஆண்டவரே! நீங்கள் என்னுடனிருந்திருந்தால், நான் இத்தகைய கொடூரமான சோதனைகளில் விடப்பட்டு சஞ்சலமடைந்திருக்க மாட்டேன்” என்பாள். அப்போது ஆண்டவர் அவளிடம், “ரோஸ்! நான் இங்கு இல்லாமல் இருந்திருந்தால் நீ இந்த சோதனைகளில் இவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நம்புகிறாயா?” என்று வினவினார். அர்ச். லீமா ரோசம்மாள் வேதசாட்சிய முடி பெறுவதற்காக அதிகம் ஜெபிப்பாள். வேதபோதக ஜீவியத்தின் மேலும் அதிகம் பற்றுடையவளாக இருந்தாள். அவள் வேதபோதகர்களுக்காக இடைவிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் ஜெபித்து வந்தாள். ஜப்பானில் நாகசாகியில் வேதசாட்சிகளாக கொல்லப்பட்ட வேதபோதக குருக்கள் அந்த உன்னத முடியைப் பெறுவதற்கு காரணமாக இருந்தவள் அர்ச்.லிமா ரோசம்மாள்.

ஏனெனில் அவள் இறந்த அதே வருடத்தில் தான் அவர்களும் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டனர். ஒரு சமயம் டச்சுக்கார பதிதர்களால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஜார்ஜ் ஸ்ப்ரில்பெர்கன் என்ற கடற்கொள்ளைக்காரன் 6 கப்பல்களில் கொள்ளையருடன் பெரு நாட்டின் காலவோ என்ற துறமுகத்தைக் கைப்பற்றினான். லீமா நகரத்தின் ஆண்மக்கள் அனைவரும் அவனுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். அதே சமயம் முந்தின நாள் இரவு முழுவதும் சாந்தோ டோமிங்கோ என்ற தேவாலயத்தில் திவ்ய சற்பிரசாதநாதருக்கு முன்பாக அர்ச்.லீமா ரோசம்மாளும் அர்ச்.சாமிநாதரின் 3ம் தவச்சபையைச் சேர்ந்த பெண்களும் சிறுபிள்ளைகளும் தொடர்ந்து 40 மணிநேர ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். லீமா நகரத்தையும் கைப்பற்றி அதன் முக்கிய கட்டிடங்களையும் தேவாலயங்களையும் பீரங்கியால் தரை மட்டமாக்குவதற்கு திட்டமிடுகிறான் என்ற செய்தி அறிந்ததும் அர்ச்.லீமா ரோசம்மாள், தன் முழங்காலுக்குக் கீழ் தொங்கிய தன் உடுப்பினை கத்திரியால் வெட்டினாள். “நமது திவ்ய சற்பிரசாதநாதரைப் பாதுகாப்பதற்கான போருக்காக என்னைத் தயாரிக்கிறேன். இப்போரில் நம் நேச ஆண்டவருக்காக உயிரைக் கொடுக்க விரும்புவோர் எல்லோரும் என்னோடு சேர்ந்து கொள்ளலாம்” என்று மற்ற பெண்களிடம் கூறினாள். பிறகு மகா பரிசுத்த திவ்ய நற்கருணையில் விற்றிருக்கும் தன் நேச ஆண்டவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது நம் திவ்ய இரட்சகர் கதிர்பாத்திரத்திற்கு மேலே தோன்றினார்.

ஆண்டவருடைய திவ்ய திருத்தலைமுடியிலும், திவ்ய நெற்றியிலும், திவ்ய திருக்கண்களிலும் முள்முடியிலும், திரு இரத்தம் ஒழுகி வடிந்துக் காய்நதிருப்பதைக் கண்டாள். ஆண்டவருடைய திவ்ய திரு இருதயத்திலிருந்து கை கால்கள் மற்றும் மணிக்கட்டுகளிலும் திரு இரத்தம் ஓடி வழிந்து காய்ந்திருப்பதையும் கண்டாள்.

சேசுநாதர்சுவாமியின் திவ்ய திருவாய், இறுதி வாக்கியத்தை கூறியபடியே திறந்திருப்பதையும், காயப்பட்டும், விங்கியும் இருப்பதையும் கண்டாள். பிறகு அவள் தன் சிநேக ஆண்டவருடைய திவ்ய திருக்கண்கள் தன்னையே நேருக்கு நேராக உற்றுப் பார்ப்பதையும் கண்டாள். உடனே அவள் தன் நேச ஆண்டவரிடம், “ திவ்ய சற்பிரசாதத்தில் விற்றிருக்கும் என் நேச இரட்சகரே! இன்று உம்மை நான் காப்பாற்றுவேனாகில் நீர் மறுபடியும் சிலுவையிலறையப்பட மாட்டீர். நீர் எனக்காக சிலுவையில் தொங்கி மரித்தபோது என்னால் உம்மைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இப்பொழுது என்னால் உம்மைக் காப்பாற்ற முடியும்!” என்று கூறினாள். பிறகு அவள் தன்னைச் சுற்றி இருந்த மற்ற பெண்களிடம், “நம் நேச ஆண்டவரான திவ்ய சேசுவுக்காக உயிரைக் கொடுப்பதற்கு என்னோடு யாரெல்லாம் முன்வருவிர்கள்? அவருடைய எதிரிகளுக்கு எதிராக போர் புரிவதற்கு என்னுடன் யார் நிற்கப்போகிறிர்கள்? இதோ இங்கே, நமது சரீரங்களினால் மட்டுமே பாதுகாக்கப்படும்படியாக, நம்மேல் கொண்ட எல்லையில்லா சிநேகத்தின் பொருட்டு, நம் நேச ஆண்டவர் நம்மிடையே வீற்றிருக்கின்றார்! சகோதரிகளே உதவிக்கு வாருங்கள்! நாம் அனைவரும் நமது திவ்ய இரட்சகருக்காக ஒன்றாக இறப்போமாக! தேவநற்கருணையிலுள்ள நமது நேச ஆண்டவருடைய பரிசுத்த திவ்ய சரீரத்தை அவர்கள் அடைய வேண்டுமானால், முதலில் அவர்கள் நமது சரீரங்களை வெட்டி விழ்த்தட்டும். பிறகு வெட்டப்பட்ட நமது சரீரங்களின் வழியாக மட்டுமே அவர்கள் நம் ஆண்டவரை நெருங்க முடியும் என்பதை அந்த கடல் கொள்ளையருக்கு பறைசாற்றுவோம்!” என்று கூறினாள். 

மனித சுபாவத்திற்கு மேற்பட்ட ஒரு உன்னதமான பரலோக சக்தியினால் ஆட்கொள்ளப்பட்டவளாக, அர்ச்.லீமா ரோசம்மாள் இவ்வாறு கூறக் கேட்டதும், தமது உன்னதமான பலவினத்தில், அதாவது ஒரு அப்பத்தின் வடிவில் விற்றிருக்கும் தங்களுடைய திவ்ய இரட்சகரைப் பாதுகாக்கும் கேடயங்களாக தங்கள் சரீரங்களையும் தங்களுடைய உயிரையும் கையளித்தல் என்ற ஏக தேவசிநேகமுயற்சியில் அங்கிருந்த பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவருடைய ஆத்துமங்களும் அசாதாரண முறையில் ஒன்றிணைந்தன. அவர்கள் எதிர்கொள்ளப்போகும் அபாயத்திலிருந்து தங்களுக்காகவோ அல்லது தங்களுடைய குடும்பத்தினருக்காகவோ பயத்தால் ஏற்படும் யாதொரு ஒரு அசைவுமின்றி, விரைவில் அந்த தேவாலயத்தில் நிகழப்போகும் (என்று அவர்கள் எண்ணியிருந்தனர்)

அவசங்கைகளுக்கும் அநாச்சாரங்களுக்கும் எதிராக ஒரே ஆத்துமமாக ஒன்றித்து செயல்படுவதற்கு தயாராக இருந்தனர். இவ்வாறு அர்ச்.சாமிநாதர் 3ம்சபை உறுப்பினர்களான அர்ச்.ரோசம்மாளும் மற்ற பெண்களும் சாந்தோ டோமிங்கோ தேவாலயத்தில் மகா பரிசுத்த தேவநற்கருணையில் விற்றிருக்கும் தங்கள் நேச ஆண்டவரைப் பாதுகாப்பதற்காக தங்களையே அர்ப்பணித்த அதே சமயம், காலவோ என்ற இடத்தை கடற்கொள்ளையர் பீரங்கியால் இருமுறை தாக்கினர். அங்கிருந்த குடியிருப்புப் பகுதியிலிருந்த சில வீடுகளை தரைமட்டமாக்கினர். கப்பல் தளத்தில் இருந்த தனது அறையில் கடற்கொள்ளையரின் தலைவன் ஸ்பில்பெர்கன் வெற்றிக்களிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய மேஜை மீது காலவோ மற்றும் லிமா நகரத்தின் வரைபடம் இருந்தது. அந்நகரங்களின் முக்கிய கட்டிடங்களையும் தேவாலயங்களையும் தகர்ப்பதற்காக குறித்தான். அவன் வானத்தை நோக்கி ஆணவத்துடன் சிரித்தான். ஏனெனில் அவன் தன் ஆத்துமத்தை வெகுகாலத்திற்கு முன்பாகவே பெரும்பாவங்களினால் இழந்திருந்தான். பிறகு அவன் தன்னிடமிருந்த தொலைநோக்கிக் கருவியை எடுத்து அதன் லென்ஸைத் துடைத்தான். பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே புறப்படும் சமயத்தில் அவன் ஒருவித திமிர்வாத நோயினால் பாதிக்கப்பட்டவனாக, திடீரென்று அலறிக் கீழே விழுந்தான். 

அவன் விழுந்த 15வது நிமிடத்தில் அவனுடைய 6 கப்பல்களுடன் கடற்கொள்ளையர் அனைவரும் பெரு நாட்டைவிட்டு விரைந்து ஓடி மறைந்தனர். ஏனெனில் தலைவன் இல்லாமல் அவர்களால் சண்டைபோடமுடியாது. இவ்வாறு அர்ச்.லீமா ரோசம்மாளுடைய ஜெபத்திற்கு சர்வேசுரன் தயவாய் செவிசாய்த்தார். லீமா நகரத்தை சர்வேசுரன் அர்ச்.ரோசம்மாளின் ஜெபத்தினால் இவ்வாறு காப்பாற்றியதற்காக லீமா நகர மக்கள் அர்ச்.லீமா ரோசம்மாளை நன்றிபெருக்குடன் கொண்டாடியது.

ரோசம்மாள், தன் தந்தை, கொன்சாலோவின் உதவியுடன் கோவிலிலிருந்து விட்டிற்கு சென்றாள். “நமது நேச ஆண்டவருக்காக நம் உயிரை விடுவதற்கு என்ன அருமையான சந்தர்ப்பம் இது!” என்று கூறினாள். தொடர்ந்து கடைபிடித்துவந்த கடின தபசினால், பரலோகத்தின் தேவபத்தாவுடன் அவள் அடைந்த உன்னதமான காட்சி தியான ஜீவியத்தின் உச்சநிலை ஐக்கியமானது, பல சரீர அடையாளங்களினால் அர்ச்.ரோசம்மாளிடம் வெளிப்படையாக காணப்பட்டது. அவளுடைய சரீரம் முழுவதும் வேதனையாலும், பலவினத்தாலும் காய்ச்சலாலும், தலை முழுவதும் இடைவிடாத வலியாலும் வாதிக்கப்பட்டாள். தண்ணீர் அருந்தினால் கூட இறந்துவிடுவாள் என்பதால் குடிக்க தண்ணீரின்றி கொடிய தாகத்தினால் இறக்கும் வரைக்கும் வருந்தினாள்.

1617, ஆகஸ்ட் 24ம் நாளன்று, 31வது வயதில் இறுதி அவஸ்தை பூசுதலைப்பெற்று திவ்ய நற்கருணை நாதரை தனது இருதயத்தில் வரவேற்றபடியே பாக்கியமான மரணமடைந்தாள். லீமா நகர மக்கள் அனைவரும் துக்கித்தனர். அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவள் மருத்துவம் செய்து குணமாக்கிய எண்ணற்ற நிக்ரோக்கள், செவ்விந்தியர், தேவதிரவிய அனுமானத்திற்கு அவளால் திரும்ப அழைத்து வரப்பட்ட மனந்திரும்பிய ஸ்பானியர்கள் மற்றும் எல்லா உயர்குடிமக்கள் அனைவரும் அவளுடைய பிரேதப்பெட்டிக்கு இருமருங்கிலும் முழங்காலில் இருந்து ஜெபமாலை ஜெபித்தனர். 1671 ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அர்ச்சிஷ்டவளாக பாப்பரசர் லீமா ரோசம்மாளை பீடத்திற்கு உயர்த்தினார்.†

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் - அத்தியாயம் 20

மீண்டும் ரோமாபுரி பயணம் 

சிறிது காலத்திலேயே, அர்ச்.சாமிநாதர் தூலோஸ் மடத்திலிருந்த தமது சபைதுறவிகளை புரோயிலுக்கு வரவழைத்து அவர்களையும் அங்கேயே தங்க வைத்தார். இங்கு தான் தேவமாதா அவருக்கு 10 வருடங்களுக்கு முன் தோன்றி ஒரு துறவறசபையை அவர் துவக்குவார் என்று முன்னறிவித்திருந்தார்கள். 1216ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புரோயிலில் கூடிய அவருடைய சபையின் துறவிகள்: பிரான்சு நாட்டிலிருந்து 7 பேரும் ஸ்பெயின் நாட்டிலிருந்து 6 பேரும் போர்த்துக்கல், பெல்ஜியம் மற்றும் இங்கிலிரந்திலிருந்து தலா ஒருவருமாக மொத்தம் 16 பேர் அர்ச். சாமிநாதரைப் பின்பற்றி சர்வேசுரனுக்காக தங்கள் ஜீவியத்தை முற்றும் கையளிப்பதற்காக அந்த மடத்தில் கூடினர். 

அப்பொழுது அர்ச்.சாமிநாதர் பாப்பரசரின் அறிவுரையின்படி தமது துறவற சபையின் விதிமுறைகளை ஏற்படுத்துவதற்காக அங்கு கூடியிருந்த 16 பேருடனும் ஆழ்ந்த ஜெபத்தில்  நீண்ட நேரம் ஈடுபட்டார். பின்னர் அனைவரும் ஏக மனதாக காலத்தால்  போற்றப்பட்டுவந்ததும் பண்டைய கால திருச்சபையில் துறவற மடங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்ததுமான அர்ச். அகுஸ்தினாரின் துறவறசபை விதிமுறைகளையே தங்களுடைய சபையின் விதிமுறைகளாக அங்கீகரித்தனர். ஏனெனில் இந்த துறவற சபையில் தான் எண்ணற்ற அர்ச்சிஷ்டவர்கள் தோன்றினார்கள் என்பதையும் இச்சபையின் விதிமுறைகள் சபைதுறவிகள் வேதபோதகத்தில் ஈடுபடுவதற்கும் ஞான பிரசங்கங்களில் ஈடுபடுவதற்கும் ஏற்புடையனவாக உள்ளன என்றும் அறிந்திருந்தனர். போர்த்துக்கிசியரான சகோ.சுவரோ கோமஸ் என்பவர் அர்ச்.சாமிநாதரிடம், “நாம் இப்பொழுது சர்வேசுரனுக்கு உகந்த ஊழியத்தை சரியாகச் செய்யலாம். சபைஒழுங்குகளைப்பற்றி எங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், சுவாமி! தினமும் நீங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்றார். 

அதற்கு அர்ச்.சாமிநாதர், “சகோ.பெர்ட்ராண்ட் உங்களுக்கு இதில் உதவுவார். நான் ரோமாபுரிக்கு திரும்பிச் செல்கின்றேன்” என்றார். 

அதற்கு சகோ.சுவரோ கோமஸ் சாமிநாதரிடம், “ஆனால், சுவாமி! இப்போது தானே அங்கிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் நிச்சயமாக உடனே அங்கு செல்வதற்கு கூட நினைத்திருக்க மாட்டீர்கள்” என்றார். உடனே இங்கிலாந்தைச் சேர்ந்த சகோ. லாரன்ஸ் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த சகோ.ஸ்டீபன் சாமிநாதரை அணுகி, “ ரோம் 600 மைல் தொலைவில் அல்லவா உள்ளது” “சுவாமி! இப்பொழுது தான் அந்த தொலை தூர பயணத்தை இருமுறை முடித்திருக்கிறீர்கள்” “அந்த நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு உங்களுக்கு ஓய்வு அவசியமாகத் தேவைப்படும்” “ சுவாமி! எங்களை முன்னிட்டு உங்களுடைய சரீர நலனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்றெல்லாம் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

அதற்கு அர்ச்.சாமிநாதர் புன்னகைத்துக் கொண்டே, “இப்பொழுது, நீஙகள் எனது சரீர ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். நான் நன்றாக பலமான சரீரத்துடன் இருக்கிறேன். மேலும், நமது சபை விதிமுறைகளை தேர்ந்தெடுத்த உடனே பரிசுத்த தந்தை பாப்பரசருக்கு தெரியபடுத்துவதாக அவரிடம் வாக்களித்துள்ளேன். அதை மீறச் சொல்கிறீர்களா?” என்றார். இதற்கு சபையின் 16 உறுப்பினர் சகோதரர்களும் உடன்பட்டனர். ஆனால் பாப்பரசரை சந்தித்தபிறகு ரோமாபுரியில் நிண்டகாலம் தங்காமல் உடனே தங்களிடம் திரும்பி வரும்படி அவர்கள், அர்ச்.சாமிநாதரிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கு அர்ச்.சாமிநாதர், “சர்வேசுரனுக்கு சித்தமானால் ஒரு சில மாதங்களுக்குள்ளேயே நான் திரும்பி வருவேன்” என்று பதிலளித்தார்.

அர்ச்.சாமிநாதர் ரோமாபுரிக்கு செல்வதற்கு முன்பாக வந்.ஃபல்குவஸ் ஆண்டகை தமது தூலோஸ் நகரத்திலிருக்கும் அர்ச்.ரோமானுஸ் தேவாலயத்தையும் அதன் வளாகத்தையும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து, அவரிடம், “ நீங்கள் துவங்க இருக்கும் புதிய துறவற சபைக்கு ஃபோஷோ மற்றும் புரோயிலை விட இந்த இடம் மிகவும் ஏற்புடையதாக இருக்கும். இங்கு உங்களுடைய மடத்தை இந்த வளாகத்தில் கட்டிக் கொள்ளுங்கள்” என்றார். அதற்கு அர்ச்.சாமிநாதர், “ அர்ச்.ரோமானுஸ் தேவாலயத்தினுடைய இந்த வளாகமே எங்களுடைய முதல் துறவற மடமாக விளங்கும். ஓ ஆண்டவரே! நமது பரிசுத்த தந்தை நீங்கள் எங்களுக்கு அளிக்கும் இந்நன்கொடையைப் பற்றி அறியவரும்போது எவ்வளவு மகிழ்ச்சியடைவார்!” என்றார். ஆனால், மடத்தை அங்குக் கட்ட துவக்கியபோது, அவர்களுக்கு பாப்பரசர் இறந்து விட்டார் என்ற துயர செய்தி ரோமாபுரியிலிருந்து வந்தது. அவர்களுடைய மடம் கட்டியபிறகும் அர்ச்.சாமிநாதர் அப்போது புதிதாக பதவியேற்ற 3ம் ஹொனோரியுஸ் பாப்பரசரை சந்திக்க ரோமாபுரிக்கு சென்றார்.

ஆனால் அவரை சந்திக்க இயலவில்லை.ஏதோ முக்கிய அலுவலுக்காக வெளிநாடு சென்றிருந்த பாப்பரசர் எப்போது ரோமாபுரிக்கு திரும்புவார் என்று யாருக்கும் தெரியாமலிருந்தது.


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 3 St. Leonard of Port Maurice Life History in Tamil

 அர்ச்.போர்ட்மோரீஸின் லியோனார்டு

(1676-1751), திருநாள் நவம்பர் 26



ஜெனோவா நகரின் அருகிலுள்ள மோரீஸ் என்னும் துறைமுக நகரத்தில் அர்ச்.லியோனார்டு, 1676ம் வருடம், தோமினிக் காசோவா என்ற கப்பல் தலைவனுடைய மகனாகப் பிறந்தார். இரு சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும், இவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். இவருக்கு 13 வயதான போது, ஒரு புகழ் பெற்ற ரோமன் கல்லூரியில் சேர்ந்தார். அது, அர்ச். கொன்சாகா ஞானப்பிரகாசியார் படித்த கல்லூரி. பக்தியிலும் ஞானத்திலும் கத்தோலிக்க ஒழுக்கத்திலும், நல்ல அலுவல்களிலும், சிறந்து விளங்கியதால், நாளடைவில், இவரும், இன்னொரு ஞானப்பிரகாசியார் என்ற பெயர்பெற்றார். இங்கு, கல்வியை முடித்தவுடன், மருத்துவத்துறையில் உயர்கல்வி கற்பதற்கு ஆசித்தார். ஆனால், ரோமாபுரியிலுள்ள அர்ச்.பொனவெந்தூரின் பிரான்சிஸ்கன் சந்நியாச மடத்தை சந்தித்த போது, பரிசுத்த குருத்துவத்திற்கான தேவஅழைத்தலைப் பெற்றார். 1697ம் ஆண்டு, அக்டோபர் 2ம் நாளன்று அச்சபையில் உட்பட்டார். விரைவிலேயே அர்ச்சிஷ்டதனத்தினால், அம்மடத்தினுடைய மகிமையாக விளங்கினார்.

சபைவிதிகளை நுட்பமாக அனுசரித்தார். ஆழ்ந்த பக்திபற்றுதலுடன் ஜெபத்தில் ஈடுபட்டார். சேசுமரியாயின் மிதான பக்தியினால் இவருடைய இருதயம் எப்பொழுதும் பற்றி எரிந்தது. கடினதபசினாலும், தாழ்ச்சியினாலும், இடைவிடாத பிறர்சிநேக அலுவல்களினாலும் இவருடைய அர்ச்சிஷ்ட ஜிவியம் பரிமளித்தது. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக, சீன தேசத்திற்கு செல்வதற்கு மிகவும் திவிரமான ஆவல்கொண்டார். ஆனால், இவருடைய சரீர பலவினத்தினால், சொந்த நாட்டிலேயே பிரசங்கிப்பதற்கு இவரால் கூடாமற் போயிற்று. தபசு மிகுந்த ஜீவியத்தினால், இவருடைய தேகபலம் நாளுக்கு நாள் குறைந்து, இறந்துபோகும் அளவிற்கு மெலிந்தார்.

ஆனால், தேவமாதாவின் பராமரிப்பினால், சாகாமல், புதுமையாகக் காப்பாற்றப்பட்டார். சரீர ஆரோக்கியத்தைத் திரும்ப பெற்றார். அதற்கு நன்றியறிதலாக, மிகுந்த ஆன்ம ஈடேற்ற ஆவலுடன் பங்குகளை சந்தித்து, தியானங்களையும் பிரசங்கங்களையும் நிகழ்த்தினார். 24 வருடங்களில் இத்தாலி முழுவதும், கோர்சிகா திவு (இங்கு ஒழுக்கமற்றமக்களே வாழ்ந்து வந்தனர்)  முழுவதிலுமுள்ள சகல பங்குகளையும் விசாரித்து, மக்களை ஞானஜீவியத்தில் ஸ்திரப்படுத்தினார். தம்முடைய பாவங்களுக்காகவும், தமது நாட்டிலுள்ள சகல கிறீஸ்துவ மக்களுடைய பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்வதற்காக, இரவு கண்விழித்து ஜெபித்தும், தன்னையே சாட்டையால் இரத்தம் வருமட்டும் அடித்துக்கொண்டும் தபசு செய்து, ஆண்டவருடைய இரக்கத்திற்காக மன்றாடி வந்தார். இத்தகைய கடுமையான தபசுடன் ஜீவித்து வந்ததால், இவருடைய ஞானதியானப் பிரசங்கங்கள் மிகுந்த ஞான பலனைக்கொடுத்தன.

 அவற்றைக் கேட்போர் இருதயங்களில், தேவவரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான உத்தமமான மனஸ்தாபத்தை ஏற்படுத்தின. ஞான அறிவுரைகள் அவர்களுடைய இருதயங்களில் பதிந்தன. இவ்வாறாக, திரளான பாவிகளை மனந்திருப்பினார். ஃப்ளோரன்ஸ் நகருக்கருகில் இருந்த இன்கோர்டோ என்ற இடத்தில், போதக துறவியர்கள் ஞான தியான பிரசங்கங்களை நன்கு தயாரிப்பதற்காகவும், உலகசந்தடிகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு வேண்டிய ஏகாந்தமான சூழ்நிலையை அளிப்பதற்காகவும், தபசு அனுசரிப்பதற்காகவும் ஏற்றபடியான ஒரு தியான இல்லத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமானார். ரோமாபுரியில் பல பக்த சபைகளை ஏற்படுத்தினார். அதில், சேசுவின் திரு இருதய சபை குறிப்பிடத்தக்கது. “திவ்ய சேசுவே, என் மேல் இரக்கமாயிரும்!” என்ற மனவல்லிய ஜெபத்தை அடிக்கடி ஜெபிக்கும்படி, சென்ற இடமெல்லாம், இவர் மக்களிடம் கற்பித்து வந்தார். 

அதே போல், இத்தாலியா நாடெங்கிலும், திவ்ய நற்கருணை மேல் பக்தியை பரப்பி வந்தார். தேவாலயங்களில், மகாபரிசுத்த தேவநற்கருணைக்கு இடைவிடாத ஆராதனையை மக்கள் செய்யும்படியான வழக்கத்தையும் சென்ற இடங்களிலெல்லாம் ஏற்படுத்தினார். ஆண்டவருடைய திவ்ய பாடுகளின்மேல் பக்தியையும், சிலுவைப்பாதை செய்யும் பக்திமிகுந்த பழக்கத்தையும் பரப்பினார். மேலும் தன்னுடைய ஜீவியத்தில் தேவமாதாவிடமிருந்து பெற்ற சகல நன்மைகளுக்கு நன்றியறிந்த தோத்திரமாக, தேவமாதாவின் அமலோற்பவத்தின் மேல் கொள்ள வேண்டிய பக்தியையும் பரப்பி வந்தார்.

பொலோஞாவில் போதக பிரசங்கங்களை முடித்துக்கொண்டு, ரோமாபுரியிலுள்ள அர்ச்.பொனவெந்தூரின் மடத்திற்கு திரும்பிய அர்ச். லியோனார்டு, 1751ம் ஆண்டு, நவம்பர் மாதம் 26ம் நாள் பாக்கியமாக மரித்தார். இவருடைய ஜீவியநாட்களிலேயே புதுமைகள் நிகழ்ந்திருந்தபோதிலும், இவர் இறந்தபிறகு, அனேக புதுமைகளால் இவரை மகிமைப்படுத்த சர்வேசுரன் சித்தமானார். உலகில் வாழ்ந்தபோதே, இவரை நன்கறிந்த ஆறாம் பத்திநாதர் பாப்பரசர், இவருக்கு, 1796ம்வருடம் முத்திப்பேறு பட்டமளித்தார். 9ம் பத்திநாதர் பாப்பரசர் 1867ம் ஆண்டு, ஜூன் 29ம் நாள், இவருக்கு அர்ச்சிஷ்ட பட்டமளித்தார். 11ம் பத்திநாதர் இவரை வேதபோதகதுறவியரின் பாதுகாவலராகப் பிரகடனப்படுத்தினார். 

இவருடைய திருநாள் நவம்பர் மாதம் 26ம் நாள். †

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 19


போதக துறவற சபையை துவங்குதல் 

அர்ச்.பிரான்சிஸ் அசிசியார், அர்ச். சாமிநாதரிடம், விரைவில் அவருடைய போதகக் குருக்களுக்கான சபையும் பாப்பரசரால் அங்கிகரிக்கப்படும் என்றும் அந்த சபைக்கு நன்மை எல்லாம் நிகழும் என்றும் கூறினார். அப்போது அர்ச். சாமிநாதர் இருதய துடிப்பு அதிகரிக்குமளவுக்கு சந்தோஷ மகிழ்வால் நிரம்பினார். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நான் 5 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு வந்து எனது சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காக வந்தேன். பிறகு 3 வருடங்களுக்கு முன்பாக இங்கு வந்தேன். எனவே உங்கள் சபைக்கான அனுமதி கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டால்அதைரியப்படாதீர்கள். உங்கள் நம்பிக்கையை நமது ஆண்டவரிடத்தில் வைத்துவிடுங்கள். அவர் உங்களைக் காப்பாற்றுவார்” என்றார். பிறகு இருவரும் அர்ச்.இராயப்பரின் பேராலயத்தை விட்டு வெளியேறினர். அர்ச்.பிரான்சிஸ் சாமிநாதரிடம், தனது சீடர்களுடன் இத்தாலி நாடெங்கும் திருச்சபைக்காக தனது சபை ஆற்றி வரும் ஞான அலுவலின் சாராம்சத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். அர்ச். சாமிநாதருடைய வேதபோதக அலுவலைப் போலவே அவர்களும், இத்தாலி நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஆண்டவருடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வருவதைப் பற்றிக் கூறினார். அவர்கள், அர்ச்.சாமிநாதரும் அவருடைய சீடர்களும் செய்து வந்ததுபோல கல்வியில் தேர்ச்சிபெற்றிருந்த பதிதர்களுடனும் அவர்களுடைய தலைவர்களுடனும் வேதத்தைப் பற்றிய தர்க்கத்தில் ஈடுபடாமலிருந்தபோதிலும், ஆண்டவருடைய சுவிசேஷத்தை போதிப்பதிலே முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். 

ஏனெனில் இத்தாலியில் அக்காலத்தில் அநேக உயர்குலக் குடும்பங்கள் உலக சுகபோகங்களிலும் ஆடம்பரமான ஜீவியத்திலும் மிதமிஞ்சிய அளவிற்கு ஈடுபட்டிருந்ததால், வேதவிசுவாசத்தை இழந்துவிடும் அபாயத்திலிருந்தனர். அவர்களுக்கு வேதத்தைப் போதிப்பதிலேயே பிரான்சிஸின் சபையினர் ஈடுபடலாயினர். அர்ச்.பிரான்சிஸ் மற்றும் அவருடைய சிடர்கள் அனைவரும் தங்களுக்கென்று யாதொரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் விட்டு விட்டு வந்தவர்கள். அவர்களுக்கென்று இந்த உலகில் ஒன்றும் இல்லை. அவர்கள் தங்களுடைய உடை மற்றும் அன்றாட உணவிற்கு கூட ஒவ்வொரு விடாகச் சென்று பிச்சையெடுப்பார்கள். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நமது நேச ஆண்டவருக்காக இவ்வுலகில் நாம் ஏழையாக ஜீவிப்பது எவ்வளவு உன்னதமான ஜீவியம்! அதற்கு ஈடு இணை வேறொன்றும் இல்லை! ஒரு மனிதனுக்கு உடைமைகள் இருப்பின் அவற்றைப் பாதுகாப்பதற்காக பெட்டகங்களையும் ஆயுதங்களையும் அவன் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு அவன் உடைமைகளையும், ஆயுதங்களையும் வைத்திருக்கும்போது அவற்றால் அவன் தனது உறவினருடனும் அயலாருடனும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனிமித்தமே அவனுடைய தேவசிநேகமும் பிறர்சிநேகமும் கூட காயப்பட்டு பாதிக்கும் நிலைமைக்குள்ளாகக் கூடும். சகோ.தோமினிக்! இதை ஒத்துக் கொள்கிறிர்களா?” என்று கூறினார். 

இதுவரை மிகுந்த வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்த அர்ச்.சாமிநாதர், அர்ச்.பிரான்சிஸின் இந்தக் கருத்துக்கு தானும் முழு மனதுடன் உடன்படுவதாக தெரிவித்தார். பல வாரங்கள் ரோமில் இவ்வாறாக இருவரும் ஒன்றாக தங்கியிருந்தபோது அர்ச்.பிரான்சிஸ் கூறிய அநேக காரியங்களையும் அர்ச்.சாமிநாதர் மிகுந்த உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். அட்ட தரித்திரத்தை தனது சுபாவத்திலேயே அணிந்து கொண்டவராக, தனது சகோதரி “ஏழ்மை”யை நேசித்து ஜீவித்த அர்ச்.பிரான்சிஸ் அசிசியாரின் உன்னதமான தேவசிநேக ஜீவியத்தையும் அதை விளக்கிக் கூறிய அவருடைய வார்த்தைகளையும் முழு மனதுடனும் உற்சாகத்துடனும் ஏற்று பாராட்டிய பிறகு அவரிடமிருந்து அர்ச்.சாமிநாதர் விடைபெற்றுக் கொண்டார்.

ஒரு நாள் பாப்பரசர் 3ம் இன்னசன்ட், அர்ச்.சாமிநாதரை வத்திக்கானுக்கு வரவழைத்து, “நேற்று இரவு ஒரு காட்சி கண்டேன். அர்ச்.அருளப்பருடைய லாத்தரன் பேராலயம் இடிந்து விழுவதற்கான மிக ஆழமும் அகலமுமான வெடிப்புகள் அதன் சுவற்களில் தோன்றி அதன் கூரை பிளந்து போகும் அபாயத்தில் இருக்கும் போது நீர் அங்கு தோன்றினிர்.. ” என்று கூறினார்.

 அதற்கு “நானா! அங்கு தோன்றினேன், பரிசுத்த தந்தையே!” என்று பாப்பரசரிடம் சாமிநாதர் வினவினார். 

பாப்பரசர், “ ஆம். நிர் தான் அங்கு தோன்றி, இராட்சதனைப் போல மாபெரும் உருவமாக வளர்ந்து, உமது தோள்களினால், விழ இருந்த பேராலயத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டீர். அம்மாபெரும் பிரம்மாண்டமான கதிட்ரல் பேராலயத்தை நீர் ஒரு துளி கஷ்டமுமின்றி உமது கரங்களை நீட்டி தாங்கினீர். நீர் அதைத் தொட்டவுடனே அந்த பேராலயக் கட்டிடத்தின் ஓட்டை, விரிசல் இடிபாடுகள் அனைத்தும் மறைந்து போகவே மீண்டும் புதுப்பொலிவுடன் கம்பீரமாக நின்றது” என்று பதிலளித்தார். பாப்பரசர் தன்னைப் பற்றி இவ்வாறு கூறியதை அர்ச்.சாமிநாதர் மிகுந்த திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அவரால் ஒன்றும் பேச இயலவில்லை. மேலும், பாப்பரசர் அவரிடம், “என் பிரிய மகனே கேளுங்கள்! சில வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது நமது சிறிய நண்பர், சகோதரர் பிரான்சிஸ் என் முன்பாக தோன்றினார். அப்பொழுது அவர் அசிசியிலிருந்து இங்கு வந்து ரோமாபுரியில் தங்கியிருந்தார். அவர் தன்னுடைய பிச்சையெடுக்கும் துறவிகளுடைய சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காகக் காத்திருந்தார். முதன் முதலில் அவரைக் கண்டவுடன் அவருடைய கருத்துக்கள் பின்பற்றமுடியாதபடிக்கு மிகவும் கடினமானவையாகத் தோன்றியதால், அவருடைய சபைக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டேன். ஆனால் அதற்குப் பிறகு நேற்று இரவு நான் கண்ட காட்சியைப் போலவே ஒரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது பிரான்சிஸ் மிகச் சரியானவற்றையே கூறியிருக்கிறார் என்று உணர்ந்தேன். அதாவது தரித்திர ஜீவியத்தைப் பற்றி மக்களிடம் போதித்து, நம் ஆண்டவர் சேசுகிறிஸ்துநாதர்மேல் நமக்குள்ள சிநேகத்தை முன்னிட்டு ஏழ்மையை நாம் அணிந்துகொள்வோமேயாகில், ஆடம்பரமும் தப்பறையுமான இவ்வுலகத்தின் ஜீவிய முறைகள் மறைந்து அழிந்து போகும். அதன்பிறகு இத்தாலியா நாடெங்கும், இவ்வுலகம் முழுவதும் புதியதொரு ஞானஜீவியத்திற்கான சுதந்திரம் மலரும்” என்றார். 

மேலும் பாப்பரசர் தாம் எளிய சகோதரர் பிரான்சிஸின் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் கடந்த சில வருடங்களாக அவரும் அவருடைய சிடர்களும் ஆன்ம இரட்சணிய அலுவலில் அரும்பாடு பட்டு உழைத்ததன் பயனாக எண்ணற்ற ஆத்துமங்களை இரட்சணிய பாதைக்கு அழைத்து வந்துள்ளனர் என்றும் சாமிநாதரிடம் கூறினார். பாப்பரசர் 3ம் இன்னசன்ட் மிகுந்த மகிழ்ச்சி அக்களிப்புடன், சர்வேசுரன் ஆத்துமங்களைக் காப்பாற்றுவதற்கான விசேஷ அலுவலுக்காக சாமிநாதரையும் தேர்ந்தெடுத்து உயர்த்தியிருக்கிறார் என்பதை அறிவித்தார். ஆதலால் பாப்பரசர் இந்தப் புதிய பிரசங்கிக்கும் மற்றும் போதிக்கும் துறவற சபையானது உடனே துவங்க வேண்டும் என்று ஆசித்தார்.

எனவே போதக துறவியரின் சபையை துவக்கும்படி பாப்பரசர் அர்ச். சாமிநாதரிடம், “உடனே பிரான்சுக்கு செல்லுங்கள். அங்கு உங்களுடைய  சீடர்களை ஒன்று கூட்டி உங்களுடைய சபை விதிமுறைகளை ஏற்படுத்துங்கள். அதன்பிறகு உங்களுடைய சபைவிதிமுறைகளை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். பாப்பரசரிடம் ஆசீர் பெற்றுக் கொண்ட சாமிநாதர், சில நாட்களுக்குப் பிறகு தூலோஸ் மேற்றிராணியார், வந்.ஃபல்குவஸ் ஆண்டகையுடன் மகிழ்ச்சி நிறைந்த இருதயத்துடன் பிரான்சு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அப்போது மேற்றிராணியார் அவரிடம் சபைவிதி முறைகளை அவருடைய ச சீடர்கள் ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படலாம் என்றும் வேதபோதக அலுவலை பல இடங்களுக்கும் சென்று நிறைவேற்றுவதற்கு 6 சீடர்கள் மட்டும் பற்றாமல் போய்விடும் என்றும் அதற்கு அநேக தேவ அழைத்தல்கள் தேவைப்படும் என்றும் கூறினார்.

அதற்கு சாமிநாதர் அவரிடம், “இப்போது நமது பாப்பரசர் நம் பக்கம் இருக்கிறார் என்ற நினைவே எனக்கு மிகுந்த பலமாகவும், எனக்குத் தேவையான எல்லாமாகவும் இருக்கிறது. ஓ ஆண்டவரே! நாம் ரோமாபுரிக்கு வந்தது குறித்து பெரிதும் மகிழ்கிறேன்” என்றார். தூலோஸ் வந்து சேர்ந்ததும் மேற்றிராணியார், சாமிநாதரின் சீடர்கள் எண்ணிக்கை 6லிருந்து 16 ஆக உயர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அதிசயப்பட்டு, அச்சபையின் பிற்கால வளர்ச்சியை முன்கூட்டியே உணர்ந்து பேருவகை கொண்டார். புரோயிலில் சில  சீடர்களும் தூலோஸில் சில மாதங்களுக்கு முன்பாக பீட்ர் சேலா என்பவர் அன்பளிப்பாக கொடுத்த ஒரு இல்லத்தில் சில சீடர்களுமாக சாமிநாதரின் சீடர்கள் இரண்டு இல்லங்களில் ஜீவித்து வந்தனர். வந்.ஃபல்குவஸ் ஆண்டவர், “என்னால் நம்பவே முடியவில்லையே 16 சீடர்கள் அதற்குள்ளாகவா!” என்றார். அதற்கு சாமிநாதர், “ஆம். ஆண்டவரே! ஆனால் இது ஆரம்பம் தான் என்பதை நாம் நினைக்க வேண்டும். சர்வேசுரனுடைய அனுக்கிரகத்தால், ஏராளமான தயாளமுள்ள பரந்த இருதயத்துடைய நல்ல மனிதர்கள் நம்முடன் சேர இருக்கிறார்கள்” என்று கூறினார். (தொடரும்)

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 20

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 19

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 18

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4



சனி, 8 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் - 18:

 

இரு பெரும் அர்ச்சிஷ்டவர்களின் சந்திப்பு


அர்ச்.சாமிநாதரைச் சுற்றி வந்த அக்கிரமிகளான பதிதர்கள், தங்களிடம் அன்று, அர்ச்சிஷ்டவர் கூறிய வாதங்களை நினைவு கூர்ந்தனர். அதாவது மிக மெதுவாக தன்னை சித்திரவதைச் செய்து கொல்வதையே அவர் மாபெரும் பாக்கியமாகக் கருதியதையும், அவ்வாறு கொடூரமாகத் தன்னைக் கொல்லப் போவதற்காக முன்கூட்டியே அவர், அவர்களுடைய அத்தகைய கனிவுமிக்க செயலுக்காக நன்றி தெரிவித்ததையும் ஞாபகப் படுத்திக் கொண்டனர். அத்தகைய கொடூரமான வேதசாட்சிய மரணத்தினால் தான் மிகுந்த பேறு பலன்களை அடையப் போவதாகக் கூறியதையும் நினைவு கூர்ந்தனர். அந்த இருண்ட இரவு நேரத்தில், அந்தப் பதிதர்கள் இத்தகைய நினைவுகளால் மிகவும் குழப்பமும் சோர்வுமடைந்திருந்தனர்.

நாம் அவரைக் கொல்லவா? வேண்டாமா? இங்கு அதிக நேரம் நாம் இருக்க முடியாது, என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். பிறகு அவர்கள் தங்களுக்குள் கூச்சல் குழப்பத்துடன் உரத்த குரலில் பேசிக் கொண்டனர். வேண்டாம்! இவர் தன் உயிரை மிகவும் துச்சமாக மதிக்கிறார். அப்படிப்பட்டவரை கொலை செய்வதை விட வேறு ஒரு குருவைக் கண்டு பிடித்து அவரைக் கொலை செய்வதில் நம் விளையாட்டை விளையாடலாம் என்று பேசி முடிவெடுத்தனர். அடுத்த நாள் அதிகாலையில் சாமிநாதர் எழுந்து ஜெபத்தில் ஈடுபட்டார். தன் ஜெபத்தை முடித்துக்கொண்டு கார்க்கசோன் நகரத்தை சுற்றிவரத் துவக்கினார். தன் இனிய குரலினால் தேவமாதாவின் பாடல்களை பாடிக் கொண்டே அந்நகரத்தை வலம் வந்தார்.அவர் ஆங்காங்கே ஞான பிரசங்கங்களையும் போதிக்கலானர். பதிதர்கள் முதலில் அவருடைய போதனையை அலட்சியப்படுத்திய போதிலும், சிறிது நேரத்திலேயே வினோதபிரியத்தை அடக்கக்கூடாதவர்களாய் அர்ச்சிஷ்டவருடைய சத்திய வேத போதனைகளைக் கேட்கலாயினர்.  பிறகு அவர்கள் தங்களுக்குள், இந்தக் குருவானவர் வார்த்தைகளைக் கொண்டு ஏதோ ஒரு வழிவகையை அறிந்திருக்கிறார். இதுவரை இவ்வளவு நேர்த்தியாக யாராவது பேசுவதை நாம் கேட்டதில்லையே! என்று கூறினர்.

பதிதத்தை அழிப்பதற்காக துவங்கிய போர் நாளடைவில் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் காரணமாக, மிகவும் தீவிரமடைந்த இந்தப் போர் 7 வருடங்களாக நீடித்துக் கொண்டிருந்தது. அர்ச்.சாமிநாதர், எதிர்பார்த்தை விட அதிக காலமாக இந்தப் போர்க்களத்தில் தான் இருந்தது போதும் என்று நினைத்தார். “என் மகனே! நீங்கள் உங்கள் பாகத்திற்கு மிக அதிகமாகவே இந்தப் போருக்காக உழைத்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் ரோமாபுரிக்கு ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். என்னுடன் வருகிறீர்களா?” என்று வந்.ஃபல்குவஸ் ஆண்டகை சாமிநாதரிடம் வினவினார். அதற்கு அர்ச்.சாமிநாதர், “ஆண்டவரே! நான் உம்முடன் ரோமாபுரிக்கு வருவதற்கு மிகவும் விரும்புகிறேன்” என்றார். 600 மைல் தொலைவிலிருந்த ரோம் நகரத்திற்கு அதே வருடம் ஆகஸ்ட் மாதம் கால்நடையாகவே இருவரும் திருயாத்திரை சென்றனர். செப்டம்பர் மாதத் துவக்கத்தில் ரோம் நகரத்தை அடைந்தனர். அம்மாதத்தில் தான் ரோம் நகரில் சரித்திரப்புகழ்வாய்ந்த 4வது லாத்தரன் சங்கத்தின் கூட்டம் நடைபெற இருந்தது. அந்த சங்கத்தில் கலந்து கொள்ள சாமிநாதர் மிகுந்த ஆவலுடன் இருந்த போதிலும், அதற்கு முன்பாக பரிசுத்த தந்தை பாப்பரசரிடம் இதுவரை திருச்சபையில் இல்லாத ஒருதுறவற சபையை ஆரம்பிக்கவிருக்கும் தனது திட்டத்தை வெளியிட மிகவும் ஆவலுடனிருந்தார். 

“அது போதகர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவுமான ஒரு துறவற சபை. பரிசுத்த தந்தையே! அது இக்காலத்திற்கு மிகவும் இன்றியமையாத தேவையாக இருக்கிறது” என்று பாப்பரசரிடம் கூறினார். 

அர்ச்சிஷ்டவர் கூறுவதை 3ம் இன்னசன்ட் பாப்பரசர் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்வுடனும் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். பல ஆண்டுகளாக அந்தப் பரிசுத்த பாப்பரசர் இத்தகைய ஒரு சபையை தோற்றுவிப்பதற்கு ஆவல் கொண்டிருந்தார். அது விரைவில் தோன்றும் என்றும் நம்பிக் காத்திருந்தார். ஆனால் அதை நிறுவுவதற்கான தகுந்த கல்வியறிவு மிக்கவரும், ஆசிரியரும், வேதபோதகருமான, ஒரு அர்ச்சிஷ்டவருக்காக காத்துக் கொண்டிருந்தார். அத்தருணம் இப்போது வந்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியுற்றார். மேலும் அவர், “மகனே! உமது திட்டத்தைப் பற்றிக் கூறுங்கள். அது மிகுந்த நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறதே!” என்று சாமிநாதரிடம் வினவினார். உடனே அர்ச்.சாமிநாதர் பாப்பரசரிடம் கடந்த 11 ஆண்டுகளாக பிரான்சின் தெற்கு பகுதியில் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்காக மேற்கொண்ட செயல்முறைகளை எல்லாம் தெளிவாக எடுத்துரைத்தார். முதலாவதாக தங்களுடைய வேத போதகங்களுக்கும் ஞான பிரசங்கங்களுக்கும் வேண்டிய தேவ ஆசிர்வாதத்தை அடையும்படிக்கு ஒரு அடைபட்ட கன்னியர் மடத்தை ஏற்படுத்தியதைப் பற்றி தெரிவித்தார். இரண்டாவதாக நுரற்றுக் கணக்கான பதிதர்களை மனந்திருப்பியதை எடுத்துரைத்தார்.

மூன்றாவதாக தற்பொழுது தானும், தன்னுடன் வேதபோதக அலுவலில் இருக்கும் குருக்கள் மற்றும் துறவியர் அனைவரும் தூலோஸ் நகர மேற்றிராணியாரான வந்.ஃபல்குவஸ் ஆண்டகையின் “முதன்மை உதவியாளர்கள்” என்றும் அதாவது “தூலோஸ் மேற்றிராசன போதகர்கள்” என்றும் அழைக்கப்படுவதையும் தெரிவித்தார். மேலும் அவர்கள் இன்னும் அதிகமாக ஐரோப்பிய நாடுகளின் அனைத்து நகரங்களிலும் ஞான பிரசங்கங்களைப் பிரசங்கிப்பது மற்றும் சத்திய வேதத்தைக் கற்பிப்பது போன்ற வேதபோதக அலுவலில் ஈடுபட்டு உழைக்கவே ஆசிப்பதையும் பாப்பரசரிடம் அறிவித்தார். “பரிசுத்த தந்தையே நாங்கள் அனைவரும் சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு துறவற சபைக்குட்பட்டு அதன் பிரமாணிக்கமுள்ள துறவிகளாக ஜீவித்துக்கொண்டே இவ்வேதபோதக அலுவல்களை ஆற்றவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்.

“ஆனால் அதற்கு தேவையான உங்களுடைய ஜீவாதாரத்தை எவ்வாறு அடைந்து கொள்வீர்கள்?” என்று பாப்பரசர் வினவினார். அதற்கு சாமிநாதர், “பரிசுத்த தந்தையே! நாங்கள் பிச்சையெடுத்து ஜீவிப்போம்” என்ற பதில் கூறினார். ஒரு நிமிடம் பாப்பரசர் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். பிறகு ஆழ்ந்த கருத்துடன் கூடிய புன்னகை செய்தார். பிறகு சாமிநாதரிடம், “மகனே! நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மிகவும் அருமையான செய்தியை இப்போது உங்களிடமிருந்து கேட்டிருக்கிறேன். லாத்தரன் சங்கம் கூடும்போது அதன் உறுப்பினர்களிடம் உங்களுடைய இத்திட்டத்தைப் பற்றித் தெரிவியுங்கள்” என்றார்.

“அப்படியே ஆகட்டும் பரிசுத்த தந்தையே!” என்று அர்ச்.சாமிநாதர் பதலிளித்தார்.

“அதுவரைக்கும், இதில் நீங்கள் இன்னும் அதிக ஞானத்தெளிவை அடையும்படிக்கும் உங்களுடைய இந்த அற்புதமான அலுவலை பசாசு ஒருபோதும் தகர்த்துவிடாதபடிக்கு திவ்ய இஸ்பிரீத்துசாந்துவானவரிடம் தொடர்ந்து ஜெபித்து வாருங்கள்” என்று பாப்பரசர் அறிவுறுத்தினார். பாப்பரசரின் அறிவுரையின்படி உடனே சாமிநாதர், இதுவரை இல்லாத அளவிற்கு மிகுந்த திவிரத்துடன் ஜெபிப்பதில் ஈடுபட்டார். அர்ச்.இராயப்பர் பேராலயத்தில் நடைபெற்ற தியானமே அவருடைய ஜீவியத்தின் மிகவும் முக்கியமான தியானமாகும். அங்கு ஒரு இரவு முழுவதும் முழங்காலில் இருந்து ஜெபிப்பதில் ஈடுபட்டார். அப்போது அவர் கண்ட மகிமைமிகுந்த ஒரு பரலோகக் காட்சியால் அவர் விசுவாசத்தில் ஸ்திரப்படுத்தப்பட்டார். அந்தக் காட்சியில் நம் ஆண்டவர் தமது திவ்ய கரங்களில் மூன்று அம்புகளை வைத்திருப்பதைக் கண்டார். அந்த அம்புகளைக் கொண்டு நம் ஆண்டவர் உலகத்தின் பாவாக்கிரமங்களுக்காக அதை உடனே தண்டிப்பதற்காக தயாராக இருப்பதையும் சாமிநாதர் உணர்ந்தார். அப்பொழுது திடீரென்று அங்கு நம் மோட்ச ஆண்டவளான அர்ச்.தேவமாதா தோன்றி தமது திவ்யகுமாரனான சேசுநாதர்சுவாமியின் முன்பாக சாஷ்டாங்கமாக தெண்டனிட்டு விழுந்து பணிந்து ஆண்டவரை ஆராதித்தார்கள். பின்பு, துறவியரான இருமனிதர்களை, அவர் முன்பாக நிறுத்தி அவருக்கு அவர்களை அறிமுகப்படுத்தினார்கள். 

முதலாவதாக இருந்தவர் ஒரு முரட்டு சாம்பல்நிறத்திலான அங்கியை அணிந்திருந்தார். இடுப்பில் ஒரு கயிற்றையும் அணிந்திருந்தார். இரண்டாவது துறவி, வெள்ளைக் கம்பளியிலான அங்கியையும் அதன்மேல் கறுப்பு முக்காட்டையும் அணிந்தவராக காட்சியளித்தார். அங்கியின் மேல் அவர் சர்ப்ளிஸ் (Surplice) அணிந்திருந்தார். இவ்விருவரும் ஏராளமான பாவிகளை மனந்திருப்புவர் என்றும் அதனால் தேவகோபத்தை அமர்த்துவர் என்றும் கூறினார்கள். மேலும் உலகத்தைத் தண்டிக்க தயாராக இருந்த நம் ஆண்டவரிடம், தேவமாதா இவர்கள் இருவரையும் காண்பித்து இவர்கள் இருவரை முன்னிட்டு உலகத்தைத் தண்டியாமல் மன்னித்து உலகத்தின்பேரில் இரக்கமாயிரும் என்று மன்றாடினார்கள்.

அந்தக் காட்சியை அர்ச்.சாமிநாதர் மிகவும் உன்னிப்பாக கவனித்துப் பார்த்தார். அவ்விரு துறவியரில், தான் ஒரு துறவி என்று அவருடைய இருதயத்தில் உணர்ந்தார். ஆனால் மற்றொரு சாம்பல் நிற அங்கியணிந்த மிகுந்த ஆனந்த அக்களிப்புடன் புன்னகை புரிந்துகொண்டிருந்த 30-35 வயதுக்குள் தோற்றமளித்த துறவி, யாராக இருக்கக்கூடும் என்று வியந்து கொண்டிருந்தார். சிறிது சிறிதாக அப்பரலோகக் காட்சி மறைந்தது. ஆனால் அவருடைய இருதயத்தில் மற்றொரு துறவியைப்பற்றி எழுந்த வினாவிற்கு அடுத்த நாள் தான் அவருக்கு விடை கிடைத்தது. அடுத்தநாள் அவர் அர்ச்.இராயப்பர் பேராலயத்தில் காட்சியில் கண்ட அந்த சாம்பல் நிற அங்கியணிந்த துறவியை நேருக்கு நேராக சந்திக்க நேரிட்டது. உடனே சாமிநாதர் எழுந்திருந்து அவரிடம் சென்று “தாங்கள் யார்?” என்று வினவினார்.

சாமிநாதரைப் பார்த்த உடனே, அந்தத் துறவி தன் இரு கரங்களை விரித்தவராக மகிழ்ச்சி மிகுந்த புன்னகையுடன் “சகோ. தோமினிக்! உங்களை வரவேற்கிறேன். நான் சகோ.பிரான்சிஸ்” என்றார். மிகுந்த ஆனந்த உவகையுடன் இருவரும் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொண்டனர். ஆம். அந்த சாம்பல் நிற அங்கியணிந்த துறவி வேறு யாருமல்ல. அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் தான் அவர்!!

(தொடரும்)


அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 19

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 18

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4



சேசுவின் திருநாமம் - Holy Name of Jesus

சேசுவின்  திருநாமம் - Holy Name of Jesus (in Tamil)



A . சுவாமி பிறந்த எட்டாம் நாள் அவருக்கு என்ன பெயரிட்டார்கள்?

சேசு என்கிற பெயரிட்டார்கள்.


1. பிறந்த கர்த்தருக்கு எந்தச் சமயத்தில் சேசு என்கிற இடப்பட்டது?

சர்வேசுரன் அபிரகாமுக்கு இட்ட கட்டளை (ஆதி. 17:12) யூதர்கள் தங்கள் குழந்தை பிறந்த 8-ம் நாளில் விருத்தசேதன சடங்கு செய்து பிள்ளைக்கு இட வேண்டிய பெரு இடுவார்கள். ஆகையினாலே "பின்பு பிள்ளைக்கு விருத்தசே செய்வதற்கு எட்டு நாளானபோது, அவர் தாயின் உதரத்தில்  உற்பவிக்குமுன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே என்ற நாமம் அவருக்கு இடப்பட்டது" (லூக். 2:21).


2. எந்த நாளிலே விருத்தசேதனத் திருநாள் கொண்டபடுகிறது?

ஜனவரி மாதம் முதல் தேதியில்தான்.


3. பிறந்த கர்த்தருக்கு இந்தப் பெயர் கொடுக்கப்படும் சொன்னது யார்?

சம்மனசு கன்னிமரியம்மாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன போதும்.(லூக். 1:31) அர்ச். சூசையப்பருக்குத் தரிசனயான போதும் (மத். 1:21) திவ்விய குழந்தைக்கு அந்தப் பெயரை  கொடுக்க வேண்டுமென்று அறிவித்தார்.


4. அப்படியானால் இந்தப் பெயர் யாரால் கொடுக்கப்பட்டது?

இது சர்வேசுரனால் கொடுக்கப்பட்டது. ஏனெனில்  சம்மனசு பிதாவாகிய சர்வேசுரனுடைய கட்டளைப்படி இந்த பெயரைக் கொடுக்கும்படி அவர்களுக்குத் தெரிவித்தார். 


B.  சேசு என்கிற பெயருக்கு அர்த்தமென்ன?

நம்மை இரட்சிக்கிறவர்.


1. சேசு என்கிற பெயருக்கு இரட்சிக்கிறவர் என்று அர்த்தம் என் நமக்கு எப்படித் தெரியும்?

தேவதூதன் அர்ச். சூசையப்பருக்குத் தரிசனையான  போது சொன்னதாவது: "நீர் அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்; ஏனெனில் அவரே தமது ஜனத்தை அவர்களுடை பாவங்களினின்று மீட்டு இரட்சிப்பார்" என்றார் (மத். 1:21),


2. மனிதனாய்ப் பிறந்த தேவ ஆளாகிய சுதனை மாத்திரம் சேசு  எனலாமா? அல்லது பிதாவையும், இஸ்பிரீத்துசாந்துவையும் சேசு எனலாமா?

மனிதனாகப் பிறந்த சுதனை மாத்திரம்தான் சேசு என்று அழைக்க வேண்டும். 


3. இரட்சகர் என்னும் பெயர் சுதனாகிய சர்வேசுரனுக்குப் பொருந்துமா?

தேவ குமாரன் நம்மை இரட்சிக்க மனுஷாவதாரம் எடுத்ததினாலும், அவராலன்றி யாதொருவரும் இரட்சணியம் அடையக் கூடாததாலும், இரட்சகர் என்னும் பெயர் அவருக்குப் பொருத்தும். 


4. சேசு என்கிற பெயர் மிகவும் உன்னதமானதோ?

ஆம்; ஏனெனில்: 


  •  சர்வேசுரன் இந்தப்பெயரைக் கொடுத்தார். 
  •  "சேசு என்கிற நாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் மோட்சவாசிகளும், பூவாசிகளும், நரகவாசிகளும், சகலரும் முழங்காற்படியிடுவார்களாக" என்றும் (பிலிப். 2:10) வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது.


5.சேசு என்கிற பெயர் வல்லமையுள்ளதோ?

  1.  “நாம் இரட்சணியம் அடைவதற்கு அவருடைய நாமமல்லாது வேறே நாமம் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டதே இல்லை” என்றார் அர்ச். இராயப்பர் (அப். நட 4:12).
  2. அர்ச். இராயப்பர் பிறவிச் சப்பாணியாகிய ஒருவனைக் குணமாக்கினபோது சேசுநாதருடைய நாமத்தினாலேதான் அவ்வற்புதத்தைச் செய்தாரென்று வேதாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம். (அப். நட 3:2-6).


6. அப்படியென்றால், நாம் சேசு என்கிற பெயரைப் பக்தி வணக்கத்துடன் உச்சரிக்க வேண்டுமா? 

நமக்குச் சோதனைகள், கஸ்தி, கஷ்டம் உண்டாகும் போதும், விசேஷமாக மரண நேரத்திலும் அந்தப் பரம பெயரைப் பக்தி விசுவாசத்தோடு உச்சரிக்க வேண்டும்.


C  கிறீஸ்து என்கிறதற்கு அர்த்தம் என்ன?

அபிஷேகம் பெற்றவர்.


1. அபிஷேகம் என்றால் என்ன?

தேவ ஊழியத்துக்காக திரு எண்ணெயைக் கொண்டு பட்டம் கொடுக்கிறது என்று அர்த்தமாகும். இப்படியே சர்வேசுரன் இட்ட கட்டளைப்படி பூர்வகாலத்தில் தீர்க்கதரிசிகள் (3 அரச, 19:16), குருக்கள் (யாத். 30:30), அரசர்கள் (1 அரசு. 9:16, 16:3), திரு எண்ணெயினால் அபிஷேகம் பெற்று தேவ ஊழியத்துக்காக நியமிக்கப்பட்டார்கள்.


2. பூர்வகாலத்தில் தீர்க்கதரிசிகள், குருக்கள், அரசர்கள் திரு எண்ணெயினால் அபிஷேகம் பண்ணப்பட்டதுபோலவே சேசுநாதரும் அபிஷேகம் பெற்றாரென்று நினைக்கலாமோ?

சேசுநாதர் அவர்களைப் போல் அபிஷேகம் பெறவில்லை. ஆனால் அவர் மனுஷனாகிய மட்டும் மகா உன்னத தீர்க்க தரிசியும், பரம குருவும், இராஜாதி இராஜாவுமாயிருப்பதினால் அவரை அபிஷேகம் செய்யப்பட்டவர் அல்லது கிறீஸ்துநாதர் என்று அழைக்கிறது நியாயமே.


3. தீர்க்கதரிசி என்றால் யார்?

சர்வேசுரனுடைய பேரால் பிரசங்கித்து, தேவ சித்தத் தையும், இயற்கை நியாயங்களைக் கொண்டு முன்னறிய முடியாத சம்பவங்களையும், இனிமேல் வர இருப்பதாக முன்னதாகவே சர்வேசுரனிடமிருந்து அறிந்து அவைகளைத் திட்டமாய் அறிவிக்கிறவர்களே தீர்க்கதரிசிகளாம்.


4. சேசுநாதர் மெய்யான தீர்க்கதரிசியா?

 (1) "சேசுநாதர் சுவாமி கிரியையினாலும், வாக்கினாலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தாரி" என்றும் (லூக். 24:19), "இவர் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசி" என்றும் (மத். 21:11) சேசுநாதரைப் பற்றி சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறது.

(2) அவர் சர்வேசுரனுடைய பரம இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தி, நடக்க இருக்கும் அநேக நிகழ்ச்சிகளை முன்னதாகவே அறிவித்தபடியால் மெய்யாகவே அவர் மகா பெரிய தீர்க்கதரிசிதான். உதாரணமாக: அர்ச். திரித்துவத்தின் பரம இரகசியம்.


5. எவ்விதம் சேசுநாதர் குருவாயிருக்கிறார்?

சேசுநாதர் சிலுவையில் பலியாகத் தம்மை ஒப்புக் கொடுத்ததுமன்றி, அந்தப் பலியைத் திவ்விய பூசையிலே புதுப்பித்து வருகிறதினாலேயும் தமது பிதாவிடம் நமக்காக மன்றாடி நமது மத்தியஸ்தராயிருக்கிறபடியினாலேயும், அவர் மெய்யான குருவாயிருக்கிறார் (எபி.4:14).


6. அவர் இராஜாவாயிருக்கிறார் என்று சொல்லுவானேன்? 

(1) "பரலோகத்திலும் பூலோகத்திலும் எனக்குச் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று சேசுநாதர் சொல்லியிருக்கிறார் (மத்.28:18),

(2) பிலாத்தென்பவன் அவரை நோக்கி: "நீ இராசாவோ?' எனசேசுநாதர் மறுமொழியாக: "நான் இராஜா என்று நீரே சொல்லுகிறீர்" என்று திருவுளம்பற்றினார் (அரு.18:37).

(3) அவர் சுதனாகிய சர்வேசுரனாக பரலோகத்தையும் பூலோகத்தையும் உண்டாக்கி, அவைகளுக்குச் சர்வ கர்த்தராயிருப்பதினாலே, அவர் பரம இராஜாவாயிருக்கிறார்.


7. அப்படியானால் கிறீஸ்து என்னும் பெயர் சேசுநாதருக்குப் பொருந்துமா? 

சேசுநாதர் சுவாமி மனுஷனாகியமட்டும் தீர்க்கதரிசியாயும், குருவாயும், இராஜாவாயும் சர்வேசுரனால் நியமிக்கப்பட்ட படியால் கிறீஸ்து என்னும் பெயர் இவருக்குச் செல்லும்.


8. இன்னும் வேறு எவ்விதம் சேசுநாதர் அழைக்கப்படுகிறார்?

தேவ வார்த்தையானவர் என்று அழைக்கப்படுகிறார். (அரு. 1:1, அரு. காட்சி. 19:13).


9. ஏன் அவர் அப்படி அழைக்கப்பட்டிருக்கிறார்?

நாம் நமது புத்தியின் முயற்சியினால் நினைக்கும் நினைவை மனதின் வார்த்தையென்று தத்துவ சாஸ்திரம் அழைக் கிறது. பிதாவாகிய சர்வேசுரன் தம்மை நித்தியமாய் அறிகிறதி னாலே தமக்குச் சரியொத்த சாயலாகிய சுதனை அநாதியாய்ப் பிறப் பிக்கிறார். அதாவது தேவசுதன் பிதாவினிடமிருந்து அவரது ஞானத்தின் முயற்சியால் புறப்படுகிறார். ஆதலால் தேவசுதன் பிதா வினுடைய மனதின் வார்த்தை, அல்லது பிதாவின் புத்தியிலிருந்து புறப்படும் தேவ வார்த்தை எனப்படுகிறார்.

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 16



பதித பெண்கள் மனம் திரும்புதல் 2

வந்.டீகோ ஆண்டகை, அர்ச்.சாமிநாதர், புரோயிலில் மனந்திரும்பிய பதிதப் பெண்கள் மடத்தில் தங்களுடைய வேதபோதக அலுவலுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள் என்றுக் கூறக் கேட்டதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். பிறகு, அவர் சாமிநாதரிடம், “அது நல்ல யோசனை! ஏனெனில் நமது வேதபோதக அலுவல் போன்ற எந்த ஒரு ஆன்ம இரட்சணிய அலுவலும் அதற்கு ஆதரவாக மறைவில் ஜெபமும் நற்செயல்களும் இல்லாமல் போனால் மிக சொற்பமாகவே பலனளிப்பவையாகத் திகழும்” என்று கூறினார். 

அந்த மனந்திரும்பிய பெண்கள் ஒன்பது பேரும், ஒரு கன்னியரின் துறவற சபையில் உட்படுவதையே பெரிதும் ஆசித்தனர். அதன் பிரகாரம் அர்ச்.சாமிநாதரின் ஏற்பாட்டின்படி, தூலோஸ் நகர மேற்றிராணியாரரான வந்.ஃபோல்குவஸ் ஆண்டகையின் அனுமதியின் பேரில் புரோயிலிலுள்ள அர்ச்.கன்னிமாமரியின் தேவாலயத்தையும் அதனை ஒட்டியிருந்த நிலங்களையும்அப்பெண்களை பராமரிக்கும்பொருட்டு அவர்களுடைய பொறுப்பில் விடப்பட்டது. அதே வருடம் நவம்பர் மாதம் 22ம் நாளன்று, அதாவது அர்ச்.சாமிநாதர், அதிசய வெண் பூகோள உருண்டைக் காட்சியைக் கணடு சரியாக 4 மாதங்கள் கழித்து, அதே புரோயிலில் தேவமாதாவின் சிற்றாலயத்தினருகில் ஒரு கன்னியர் மடம் உருவானது. அதே வருடம் டிசம்பர் 27ம் தேதியன்று அந்த 9 பெண்களும் அம்மடத்திற்கு வந்து தங்களுடைய துறவற ஜீவியத்தைத் துவங்கினர். 

அத்துறவற சபைக்கான விதிமுறைகளை அர்ச்.சாமிநாதர் தயாரித்தார். அதன் விதிமுறைகள் ஜெபத்திற்கும் தபசிற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் அமைக்கப்பெற்றிருந்தன. புரோயிலிலும் அதன் சுற்றுப் புற கிராமங்களிலும் வந்.டீகோ ஆண்டகையும் அர்ச்.சாமிநாதரும் உதவியாளர்களும் வேதசத்தியங்களைக் கற்பிக்கும் வேதபோதக அலுவலில் ஈடுபட்டிருக்கும்போது, அவர்களுக்குத் தேவையான தேவவரப்ரசாதங்களை, புரோயிலில் கன்னியர்கள் தங்கள் இடைவிடா ஜெபங்களின் மன்றாட்டினால், அடைந்துகொடுப்பர். 

ஒவ்வொரு நாளும் பலதடவை அக்கன்னியர்கள், போதகக் குருக்களைப் போலவே, திருச்சபையின் அதிகாரபூர்வமான ஜெபமான கட்டளை ஜெபத்தை ஜெபிப்பதற்காக ஒன்று கூடுவர். இந்தக் கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டு எங்கும் செல்லாமல் அடைபட்ட மடத்தின் துறவற ஜீவித்தையே அனுசரித்தனர்.

சிறு ஓய்வு நேர இடைவேளைகளைத் தவிர எப்பொழுதும் அவர்கள் மவுனத்தையே கண்டிப்பான ஒழுங்காக அனுசரித்தனர். உயரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களான அவர்கள் உயர்கல்வி படித்திருந்தவர் களாயினும், ஒன்பது கன்னியரும் ஏழைகளின் அன்றாட அலுவல்களான நுரல் நுரற்பது, சமையல் செய்வது, விட்டை சுத்தம் செய்தல், துணிகளை துவைப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்தனர்.

வாரத்தில் பல நாட்கள் ஒருசந்தி இருந்தனர். பரித்தியாக ஜீவியத்தின் பலவித தபசு முயற்சிகளையும் அவர்கள் அனுசரித்து சர்வேசுரனுக்கு அவற்றை தங்களுடைய இருதய பூர்வமான நன்றியறிந்த காணிக்கைகளாக ஒப்புக் கொடுத்து வந்தனர். 

“இந்த புதுவிதமான ஜீவியம் உங்களுக்குக் கடினமாக இருக்கிறதா? என்னிடம் கூறுங்கள்” என்று அர்ச்.சாமிநாதர் அப்பெண்களிடம் கேட்டார். 

“ஓ சுவாமி! மோட்சத்திற்கு ஆத்துமங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் எந்த ஒரு ஒறுத்தலும் பரித்தியாகமும் ஒருபோதும் கடினமானதாக இருக்காது” என்று ஜென்சியானா பதிலளித்தாள். அவளுடைய கண்கள் ஆண்டவருடைய சமாதானத்தால் நிரம்பி ஒளிர்ந்தன. அவளுடைய சக சபைக்கன்னியரான கர்தோலானா, கிளாரட்டா, பெரங்காரியா, ரேமுண்டா, அடிலாய்ட், ஜோர்டானா, வில்ஹெல்மினா, ரிச்சர்டி என்ற மற்ற 8 கன்னியரும் அவளுடைய இக்கூற்றை தங்களுடைய முழு இருதயத்துடன் ஆமோதித்தனர்.துறவற ஜீவியத்தை கடுமையாக எதிர்த்த அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டுப் பிரிந்து புரோயிலில் இந்தக் கன்னியர் மடத்தில் அவர்கள் சுபாவத்திற்கு மேலான மனசமாதானத்திலும் இருதய மகிழச்சியிலும் நிலைத்திருந்தனர். சங்.சாமிநாதர் சுவாமியார் அவர்களுக்கு துறவற ஆடையாக அளித்த வெண் கம்பளியிலான உடுப்பையும் லினனிலான முக்காட்டையும் மிகவும் மகிழ்ச்சியுடன் அப்பெண்கள் உடுத்திக் கொண்டார்கள். 

பிரான்சு நாடு முழுவதுமுள்ள ஆல்பிஜென்சிய பதிதரை மனந்திருப்பும் இந்த விசேஷமான ஞானபோதக அலுவலில் அர்ச். சாமிநாதருடன் அவர்களும் அரிய பங்கு வகிக்கின்றனர் என்பதை நன்கு உணர்ந்தார்கள்.

“நாங்கள் இந்த உன்னதமான ஆத்தும இரட்சணிய அலுவலில் உங்களுக்கு உதவுகின்றோம் அல்லவா சுவாமி! இந்த எங்களுடைய புதிய துறவற ஜீவியத்தினால் எங்களுடைய பாவங்களுக்கும், பிறருடைய பாவங்களுக்கும் பரிகாரம் செய்கிறோம் இல்லையா சுவாமி?” என்று அவர்கள் சாமிநாதரிடம் வினவினார்கள். 

அதற்கு அர்ச்.சாமிநாதர்,“நீங்கள் இறந்த பிறகு தான், இந்த துறவற ஜிவியத்தின் பரித்தியாகங்கள் எவ்வளவு விலையுயர்ந்தவை என்பதை கண்டுபிடிப்பிர்கள்” என்று பதில் கூறினார். இவ்வாறு புரோயில் கன்னியர் மடத்தின் துறவற ஜீவியம் துறவற ஒழுங்கிலும் ஜெபத்திலும் தியானத்திலும் சீராக நடைபெற்று வந்தது. பிறகு வந்.டீகோ ஆண்டகை 2 வருடங்களாக தனது நேரடியான கண்காணிப்பின்றி விடப்பட்டிருந்த தன்னுடைய ஞானமந்தையைக் கவனிக்கும்படி தன்னுடைய ஓஸ்மா மேற்றிராசனத்திற்கு திரும்பி செல்வதாக அறிவித்தார். இதைக் கேட்டதும் வந்.ஆண்டகையினால் அநேக ஞான நன்மைகளைப் பெற்றிருந்த அர்ச்.சாமிநாதரும், அவருடைய கன்னியர்களும் பெரும் வருத்தத்திற்கு ஆளாயினர்.

அர்ச்.சாமிநாதரும் மற்ற போதகக் குருக்களும் ஆற்றிய ஞான போதக அலுவலினால் அநேக ஞான நன்மைகள் ஏற்படலாயின. ஃபோஷோவிலிருந்து இரண்டு பெண்கள் புரோயிலில் இருக்கும் கன்னியர் மடத்தில் நவசந்நியாசிகளாக சேர்ந்தனர். 8 சிறுவர்கள் உத்தமமான கத்தோலிக்கு ஞான உபதேசம் கற்பிக்கும்படியாக அவர்களுடைய பெற்றோர்களால் கன்னியர் மடத்திற்குக் கொண்டு வந்து விடப்பட்டனர்.

தூலோஸின் மேற்றிராணியாரின் பண உதவியினாலும் நன்கொடைகள் மற்றும் நிலங்களினாலும், புரோயிலில் தேவமாதாவின் தேவாலயத்தை ஒட்டி ஒரு பெரிய புது கட்டிடம் உருவானது. சர்வேசுரனுடைய திருவுளமானால், அதுவே அர்ச்.சாமிநாதரின் கன்னியரினுடையவும் போதகக் குருக்களுடையவும் நிரந்தரமான தலைமையகமாக செயல்படும். “இவையெல்லாம் நாம் தேவமாதாவிடம் கொண்டிருக்கும் பக்தியினால் நமக்குக் கிடைத்த வெகுமதி என்று நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். நமது மகா பரிசுத்த தேவமாதா மிகவும் விரும்பும் ஜெபமான பரிசுத்த ஜெபமாலையின் வல்லமையையும் அதன் நன்மைபயக்கும் உன்னதமான ஞானபலன்களையும்உலகம் உணர்ந்துகொள்ளுமானால்!” என்று அர்ச்.சாமிநாதர் வியந்து சிந்தனையில் ஆழ்ந்தார். அவருடைய உதவியாளர்களான போதக குருக்களும் கன்னியரும் அவர் கூறிய இக்கருத்திற்கு முழு இருதயத்துடன் உடன்பட்டனர். 

“ஒரு அருள்நிறை மந்திரத்திற்கு சில மணித்துளிகளே செலவாகும். ஒரு முழு ஜெபமாலை சொல்வதற்கும் நீண்ட நேரம் ஆகாது. ஓரு நாள் உலகம் இந்த உன்னதமான ஜெபத்தின் மாபெரும் வல்லமையை அறிந்து கொள்ளும்” என்று அவர்கள் கூறினர். ஆனால் இந்த சிறிய வேதபோதகக்குழவினரின் துறவற ஜீவியம் நிண்ட காலம் யாதொரு பிரச்னையுமின்றி அமைதியாக நிடிக்கவில்லை. 1208ம் வருடத்தில் ஒரு நாள் அதிர்ச்சி தரும் ஒரு செய்தி புரோயில் மடத்திற்குக் கிடைத்தது. ஆல்பிஜென்சிய பதிதர்களிடையே சத்திய வேதத்தை முதலில் போதித்தவரில் ஒருவரான, சங்.பிட்டர் சுவாமியார், பதிதர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியே அது. ஏனெனில் அவர், ரேமண்ட் என்ற பிரபுவை சந்தித்து அவன் பரப்பிவந்த பதித தப்பறைகளை விட்டுவிடும்படி அவனைக் கண்டிக்கவும் அவ்வாறு அவன் ஆல்பிஜென்சிய பதித தப்பறையை விட்டு விடாவிட்டால் அவனைக் கண்டிக்கவும் அவனை திருச்சபைக்கு புறம்பாக்குவதற்குமாக ரோமாபுரியின் தூதுவராக சென்றிருந்தார். அதைச் சகியாத அந்த கொடுங்கோலனான ரேமண்ட் அந்தப் பரிசுத்த குருவானவரைக் கொலை செய்தான். மேலும், ரோமாபுரிக்குப் பிரமாணிக்கமாக சத்திய வேதத்தைப் போதிக்கும் மற்ற குருக்களுக்கும் அதே கதிதான் ஏற்படும் என்று அவன் மிரட்டினான். உடனே தெற்கு பிரான்சு பகுதியிலிருந்து வேதபோதக குருக்கள் வெளியேறவேண்டும் என்ற எச்சரிப்பும் பதிதர்களின் தலைமையகத்திலிருந்து, அர்ச்.சாமிநாதரின் சபைக் குருக்களுக்கு வந்தது. 

இதைக் கேள்விப்பட்டதும், வந்.ஃபல்குவஸ்ஆண்டகை அர்ச்.சாமிநாதரிடம், “ஒரு பரிசுத்த குருவானவரை வெட்டிக் கொலை செய்வது ஒரு சாதாரண வன்முறைச் செயலல்ல. ஒரு நாட்டின் தூதுவரைக் கொலை செய்வது என்பது மாபெரும் அக்கிரமம் என்பதை அனைவரும் அறிவர். அதுவும் பாப்பரசரின் தூதுவரை கொலை செய்த இந்த அக்கிரமசெயல் எவ்வளவு ஒரு பெரிய பாதகச் செயலாக இருக்கிறது!” என்றார். மிளிர்ந்த கண்களுடன், அர்ச்.சாமிநாதர் “ரேமண்ட் பிரான்சு நாட்டிலுள்ள கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்லாமல் கிறிஸ்துவ உலகம் முழுவதற்கும் ஒரு சவால் விட்டிருக்கிறான். ஓ ஆண்டவரே, நமது பரிசுத்த பாப்பரசர், இனிமேலும் பொறுமையாக இருக்கக் கூடாது. உடனே அவர், இதற்கு ஒரு சக்திமிகுந்த பதிலடிகொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

ஏற்கனவே நீண்ட காலம் ரேமண்டுக்கு, அவன் தன் தப்பறையை விட்டு விடுவதற்கான போதிய அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் தன்தீமையைக் குறித்து மனம் வருந்தவில்லை. மாறாக திருச்சபைக்கு எதிராக அநேக வன்முறைகளை தொடர்ந்து செய்து வந்தான். அவன் திமையை விடுவதாக  இல்லை. எளிய மக்களிடமும் மாசற்ற துறவியரிடமும், அவன் இரக்கம் காட்டும்படி, அவனிடம், பரிசுத்தகுருக்களும் மேற்றிராணிமார்களும், வேண்டிக் கொண்டார்கள்.

ஆனால் அவன் தன் சேனையைக் கொண்டு அநேக ஏழை மக்களையும் துறவியரையும் உபாதித்தான். துறவற மடங்களையும் தேவாலயங்களையும் நாசமாக்கினான். ஆல்பிஜென்சிய பதிதப் பெண்ணின்மகனான ரேமண்ட் சிறுவயதுமுதலே மூர்க்கனாகவும் அகங்காரம் நிறைந்தவனாகவும் உருவெடுத்தான். திருச்சபையின் எந்த ஒரு அதிகாரத்தையும், சர்வேசுரனுடைய அதிகாரத்தையும் கூட ஏற்க மறுத்தான். இப்பொழுது ஒரு மாபெரும் சவாலை அவன் பாப்பரசர் 3ம் இன்னசென்ட் பாப்பரசருக்கு எதிராக விட்டிருக்கிறான். (தொடரும்)


அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 18

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4





திங்கள், 3 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் - 17

 பதிதர்களின் நடுவில் சாமிநாதர்


அர்ச்.சாமிநாதரிடம், சங்.பிட்டர் சுவாமியார் வேதசாட்சியாக கொலையுண்டநேரத்தில் அவர் கூறியசெய்தியை அவருடைய சீடர்கள் கூறினர். சங்.பீட்டர் சுவாமியார் ரோன் நதிக்கரையில் தனது சககுருவானவருடன் நின்று கொண்டிருக்கும்போது, அவரை சிறை பிடிக்கும்படியாக வந்த ரேமண்ட் சிற்றரசனின் அரண்மனை காவலர் இருவரில் ஒருவன் அவரை ஈட்டியால் குத்தினான். உடனே இந்த உன்னதமான வேதசாட்சிய மரணத்திற்காக வெகுகாலம் ஆவலுடன் காத்திருந்த சங்.பீட்டர் சுவாமியார், தன்னைக் குத்தினவனை நோக்கி, “நண்பா! சர்வேசுரன் உன்னை மன்னிப்பாராக! நான் ஏற்கனவே உன்னை மன்னித்து விட்டேன்” என்று கூறினார். 

பிறகு தன் சக குருவானவரை நோக்கி, “இதனால் அiதரியப்படாதீர்கள். மிகுந்த கவனத்துடனும் அச்சமின்றியும் நமது திருச்சபைக்காக ஊழியம் செய்யுங்கள். நமது கத்தோலிக்கு விசுவாசத்திற்காக அஞ்சாமல் வேதத்தைப் போதியுங்கள்” என்றார். அவருடைய வேதசாட்சிய மரணத்தின் பலனாக ரேமண்டிற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஐரோப்பிய கிறிஸ்துவர்கள் பிரான்சில் மட்டுமல்லாமல், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்தும் ஒன்றாக திரண்டனர். திருச்சபைக்காக போராடுவதற்காகவும், திருச்சபையின் வேத சத்தியத்தை பிரான்சு நாட்டில் நிலைநாட்டும்படியாகவும் அவர்கள் படைபலம் கொண்டு ரேமண்டின் பதிதத்தை ஒடுக்குவதற்காக முற்பட்டனர். இங்கிலாந்து நாட்டின் உயர்குடிமகனான சைமன் டி மோன்ஃபோர்ட் என்பவர் கத்தோலிக்க படைக்கு தலைமை தாங்கினார். வீரமிக்க அவருடைய பெயரைக் கேட்டாலே எதிரிகள் அஞ்சினர். அர்ச்.சாமிநாதரின் சிடர்களில் ஒருவரான சகோ.பெர்ட்ரான்ட் என்பவர்,  “ சுவாமி! நமது படை பலத்தைக் கண்ட பதிதர்களில் சிலர் ஏற்கனவே நம்மிடம் சமாதானம் செய்து கொள்வதற்காக மன்றாடி வருகின்றனர். சில நாட்கள் மட்டுமே போர் நடந்து முடிந்தால் நலமாயிருக்குமே! அதற்குள்ளாக ரேமண்ட் மனம் திருந்தினால் நன்றாக இருக்குமே!” என்று கூறினார்.

சைமன் டி மோன்ஃபோர்டின் தலைமையில் கூடிய படை வீரர்களில் பெரும்பாலானோர் சாதாரண விவசாயிகளாக இருந்தனர். இது பதிதத்திற்கு எதிரான போர், அதாவது, பிரான்சு நாட்டில், பரிசுத்த வேத விசுவாசத்தைக் காப்பாற்றுவதற்கான பரிசுத்த போர் என்பதனாலேயே அவர்கள் இந்தப் போரில் ஈடுபட்டிருந்தனர். இப்போரில் ஒரு சில நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் ஈடுபட்டாலே அதற்கான ஞானபலன்கள் திருச்சபையால் வாக்களிக்கப்பட்டிருந்ததால், அந்தக் குடியானவர்கள், அந்த ஞானப்பலன்களை முன்னிட்டே இந்தப்போரில் ஈடுபட்டனர். எனவே படைவீரர்கள் அல்லாத இந்த பாமரவிவசாயிகளைக் கொண்டு போர் புரிவது சைமன் டி மோன்ஃபோர்ட்டிற்கு மிகக் கடினமானதொன்றாக விளங்கியது. மேலும் சில வாரங்களிலேயே படையில் இருந்த ஏராளமான விவசாயிகள், தங்களுக்குத் தேவையான ஞானப்பலன்களைப் பெற்றுக் கொண்டவர்களாக தங்கள் இல்லங்களுக்குத் திரும்பலாயினர். அதனால் படையில் நாளடைவில் வெகு சொற்ப பேரே எஞ்சினர். அப்பொழுது அர்ச்.சாமிநாதர், “ இந்தப் போர் நீண்ட காலம் நிடிக்கும்போலிருக்கிறதே! ஓ மிகவும் பரிசுத்த கன்னிமாமரியே! நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?” என்று தேவமாதாவிடம் வேண்டிக் கொண்டார். 

இதற்கிடையே அர்ச்.சாமிநாதருக்கும் சைமன் டி மோன்ஃபோர்ட்டிற்கும் இடையில் ஆழ்ந்த நட்பு ஏற்படலாயிற்று. விரைவிலேயே இருவரும் சேர்ந்து பல மணி நேரங்கள் ஒன்றாக செயல்படலாயினர். ஏனெனில் சைமன் டி மோன்ஃபோர்ட்டின் படையினரிடையே வேத கடமைகளையும் ஒழுங்குகளையும் நிலைப்படுத்தும்படிக்கு படையினருக்கான குருவானவராகவும், சிறைபிடிக்கப்பட்ட ஆல்பிஜென்சிய பதிதர்களின் நகரங்களில் சத்திய வேதத்தைப் போதிக்கும்படியாகவும் அங்கிருக்கும் தேவாலயங்களில் பாரம்பரிய கத்தோலிக்க வழிபாட்டு முறைமைகளை மிண்டும் ஏற்படுத்தி அப்பதிதர்களுக்கு ஞானஉபதேசத்தைப் போதிக்கும்படியாகவும், அர்ச்.சாமிநாதர் கத்தோலிக்குப் படையினருடன் கூட செல்ல வேண்டியிருந்தது. ஆங்கிலேய படை தளபதியான சைமன் டி மோன்ஃபோர்ட் அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி! எங்களைவிட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்று ஒருபோதும் நினைக்காதிர்கள். நிங்கள் எங்களுக்கு மிகவும் தேவையாயிருக்கிறீர்கள்” என்று கூறினார். சாமிநாதரும் பிரான்சு நாட்டில் பல வருடங்கள் தங்கியிருந்தார். பதிதர்களிடையே வெகு கடுமையான நிதிபதியாக இருக்கிறார் என்று ஆரம்பத்தில் அர்ச். சாமிநாதரைப் பற்றி நிலவிய தப்பறையான கருத்து, கருணையுடனும் அன்புடனும் பதிதர்களை அவர் கையாண்ட முறைகளினால் அவருடைய இரக்க சுபாவம் உலகிற்கு வெளிப்படலாயிற்று. ஆயினும் பதிதர்களிடையே அவருடைய அடைந்து வந்த வெற்றிகளாலும் அநேக பதிதர்கள் அவரால் மனந்திரும்பியதாலும் அவர்மேல் சில தியவர்கள் கொடிய பகைகொண்டவர்களாக அவரைக் கொல்லுவதற்கான வழி தேடினர். இதை அறிந்த அர்ச்.சாமிநாதர், உன்னதமான கத்தோலிக்க வேத விசுவாசத்திற்காக தன் உயிரை விடுவது என்பது நேரே மோட்சத்திற்குக் கொண்டு செல்லும் வேதசாட்சிய மரணமாகும். நானும் வேதசாட்சியாவதற்கு ஒரு நல்ல வழியைக் கண்டு பிடித்துள்ளேன். பதிதர்களின் ஊரான கார்க்கசோன் நகரத்திற்கு நான் தனியாக சென்று அந்த உயரிய வேதசாட்சிய முடியைப்பெறுவேன்” என்றார்.

கார்க்கசோன் என்னும் சிறிய நகரமானது ஆல்பிஜென்சிய பதித்தின் உறைவிடங்களில் மிக முக்கிய நகரமாக விளங்கியது. அங்கு வாழ்ந்த கத்தோலிக்கர்கள் பதிதர்களால் மிகவும் கொடூரமாக உபாதிக்கப்பட்டனர். ஆனால் அர்ச்.சாமிநாதர், மிகுந்த இளகிய இருதயத்துடனும் கனிவுடனும் பரலோக இராக்கினியின் மகிமையைக் குறித்து திவ்ய இரட்சகரின் தாயாரே! ஏன்னும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடலைப் பாடிக் கொண்டு அந்நகரத்தின் வாயில்களுக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் முதலில் பதிதர்கள் திடுக்குற்றனர். பிறகு, அவர்மேல் கோபமுற்றவர்களாக, “இவர் ஏன் இங்கு வந்தார். கத்தோலிக்க படையிலல்லவா இவர் இருக்கிறார். ஏன் பாடிக்கொண்டு வருகிறார். அவருக்காக இங்கு என்ன காத்துக்கொண்டிருக்கிறது என்று அவர் உணரவில்லையா?” என்று கத்தினர். 

அதற்கு அவரே பதிலளித்தார். போர் கத்தோலிக்கர்களுக்கு சாதகமாகவே இருப்பதால், கொஞ்ச காலத்திற்கு படையிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக வேறு ஒரு குருவானவர் படைவீரர்களைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவர் மகிழ்ச்சியுடன் இருப்பதால், தேவமாதாவின் பாடலைப் பாடுகிறார். அது அவருடைய மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கின்றது. மேலும் அவர் அவர்களை நோக்கி, “நண்பர்களே! நான் விரைவில் மோட்சம் செல்ல விருக்கிறேன் என்று அறிவது எவ்வளவு நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.

அவரைக் கொல்ல முயற்சிக்கும் தங்களைப் பார்த்து கொஞ்சம் கூட பயமும் இல்லாதவராக, தங்களை நண்பர்கள் என்று அழைக்கும் இந்த கறுப்பு வௌ;ளை அங்கியை அணிந்த போதகர், எப்படிப்பட்டவராக இருக்கிறார்! என்று சிறிது நேரத்திற்கு அந்த பதிதர்கள் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு, “இரவு வரும். அப்போது நாம் கத்தியையும் வாளையும் அவரிடம் காட்டும்போது அவர் வேறொரு வித்தியாசமான பாடலைப் பாடுவதைப் பாருங்கள்” என்று அவலட்சணமுகத்தையுடைய ஒரு இளைஞன் கூறினான். அதற்கு

இன்னொருவன், “அப்படியே அவரை சுட்டெரித்து விடுவோம். தனது உடல் வறுக்கப்படும்போது, அவர் நம்மைப் பார்த்து இரக்கத்தை மன்றாடுவார். அப்போது அவரைப் பார்ப்பது நன்றாகயிருக்கும்” என்றான். வேறொருவன் “

அது சரிதான். ஆனால், இப்போது அவரை வைத்து நாம் ஒரு விளையாட்டை விளையாடலாம். அவருடைய கண்களைப் பிடுங்குவோம். அவருடைய விரல்களை வெட்டுவோம். ஆனால் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மெதுவாக செய்வோம்” என்றான். 

முதலில், இரகசியமான குரல்களில் ஒலித்த இவ்வெச்சரிக்கைகள், பிறகு உரத்த சப்தமாக மாறின. இவற்றைக் கேட்ட அர்ச்.சாமிநாதர் யாதொரு அச்சமுமின்றி முன்னைவிட இன்னம் அதிக மகிழ்வுடன், சிரித்துக் கொண்டே, அந்நகரத்துத் தெருக்களில் தேவமாதாவின் பாடல்களை தனது இனிமையான குரலில் பாடிக் கொண்டே நடந்து சென்றார். வுழியில், தன்னை ஆச்சரியத்துடன் வீடுகளின் கதவுகளுக்கிடையே ஒளிந்து நின்று உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியரை ஆசீர்வதித்துக் கொண்டே சென்றார். சில இடங்களில் தன்னை உபாதிக்கத் தேடிய பதிதர்களிடையே ஞான பிரசங்கங்களையும் போதிக்கலானார். பிறகு இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, அன்று இரவில் அந்தக் கிராமத்தின் பசும்புல் தரையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தன் இரவு ஜெபத்தைச் சொன்னார். பிறகு அங்கேயே படுத்து ஓய்வெடுத்தார். இதைக் கண்ட பதிதர்கள் தங்கள் கண்களையே நம்பமுடியாதவர்களாக, கத்திகளுடனும் ஆயுதங்களுடனும் அவரைக் கொலை செய்யும் எண்ணத்துடன், அமைதியாக தரையில் உறங்கிக் கொண்டிருந்த அர்ச்.சாமிநாதரையே சுற்றி சுற்றி வந்தனர். (தொடரும்)


அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 15

பதித பெண்கள் மனம் திரும்புதல் 



அந்த மிருகத்தைக் கண்டு அங்கிருந்த பதிதப் பெண்கள் அனைவருடைய இருதயங்களும் பயத்தால் ஆட்கொள்ளப்பட்டன. அது எத்தகைய கொடுரமான மிருகமாக இருக்குமோ? அது எங்கிருந்து வருகிறது? அது என்ன செய்யப் போகிறது? என்றெல்லாம் அவர்கள் அஞ்சினர். 

“சுவாமி! அது என்னைத் தொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கிளாரட்டா அலறினாள்.

“ஐயோ! வேண்டாம், வேண்டாம்!” என்று ஜென்சியானா கூச்சலிட்டாள். எல்லா பெண்களும் சேர்ந்து அச்சத்தால் கத்தினார்கள். 

அர்ச்.சாமிநாதர் அப்பெண்களை நோக்கி நெருங்கி வந்துகொண்டிருந்த மிருகத்தின் மேல் தமது கண்களைப் பதித்தார். உடனே அவருடைய முகம் கடுமையாக மாறியது. அவர் தம் கரங்களை உயர்த்திக் கொண்டு அம்மிருகத்தைப் பார்த்து மிரட்டும் குரலில், “ஏக சர்வேசுரனின் பரிசுத்த திருநாமத்தினால் உனக்குக் கட்டளையிடுகிறேன். இங்கிருந்து அகன்று, தொலைந்து போ, சாத்தானே!” என்று அதற்குக் கட்டளையிட்டார். 

தன் கண்களில் திச்சுவாலைகளுடன் திகழ்ந்த அந்த மிருகம் உடனே தான் வந்த பாதையில் நின்றது. அதன் பிறகு, ஒரு நொடிப் பொழுதில், உக்கிரமமான வேகத்துடன் அப்பெண்களின் தலைகளின் மேல் தாவி ஓடி சுவற்றின் அருகில் இருந்த தேவாலயத்தின் மணியடிக்கும் கயிற்றைப் பற்றிக் கொண்டு தேவாலயத்தின் கூரைஉச்சியை அடைந்து மறைந்தது. துர்நாற்றமுள்ள ஒரு புகைமண்டலத்தை ஏற்படுத்தி அதற்குள் மறைந்து போனது. உடனே அப்பெண்கள் மத்தியில் ஒரு அசாதாரணமான மௌனம் ஏற்பட்டது. பிறகு
அப்பெண்கள் அனைவரும் தங்களுடைய உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாய் கதறி அழுதனர். 
“ஓ சுவாமி! நீங்கள் தான் எங்களுடைய உயிரைப் காப்பாற்றினீர்கள்! அப்போது தான் அது எங்கள் மேல் பாய்வதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. சரியாக அதே நேரத்தில் நீங்கள் அதை அதட்டி, துரத்தி விட்டீர்கள். சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், அது எங்களுடைய கண்களைப் பறித்திருக்கும்” என்று அவர்கள் அர்ச்.சாமிநாதரிடம் கூறினர். அவரும் அவர்களைத் தேற்றும் வகையில் அவர்கள் இருந்த இடத்திற்கு
அருகே வந்தார். 
“பயப்படாதீர்கள்! என் மக்களே! சபிக்கப்பட்ட மிருகம் இப்போது இங்கு இல்லை” என்று அவர், அவர்களிடம் கூறினார். 
உடனே ஜென்சியானா, “ அது என்ன, சுவாமி?” என்று தேவாலயத்தின் கூரை உச்சியை சுட்டிக் காண்பித்து நடுங்கிக் கொண்டே கேட்டாள். 
அதற்கு சாமிநாதர், “அது பசாசு. இது அதனுடைய அசுத்த உருவங்களில்
ஒன்றாகும்” என்றார். பின்னர், அர்ச்.சாமிநாதர் அவர்களிடம் மறுபடியும் சர்வேசுரனைப் பற்றியும், அவருடைய ஏகப் பரிசுத்த கத்தோலிக்குத் திருச்சபையைப் பற்றியும், மனித சரிரத்தைக் கிழித்துக் கொல்லும் அப்பயங்கரமான மிருகத்தைப் போல, திருச்சபையைக் கிழிப்பதற்காக தோன்றிய ஆல்பிஜென்சியப் பதிதத் தப்பறையின் நாசகரமான திமையைப் பற்றியும் அவர்களுக்கு பிரசங்கிக்கலானார். அவர் அவ்வாறு போதிக்கும் போது, அப்பெண்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கவனித்துக்
கேட்டனர். 
பிறகு அவர்கள் அவரிடம், “சுவாமி! இனிமேல் நிங்கள் போதிக்கும் அனைத்தையும் நாங்கள் விசுவசிக்கிறோம். நாங்கள் கெட்டவர்களாக இருந்தோம். மிகப் பயங்கரமான தியவர்களாக இருந்திருக்கிறோம். நாங்கள் செய்த பாவத்தைப் பரிகரிப்பதற்கு, நாங்கள் இனி என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினர். 
ஒரே நொடிப் பொழுதில் 9 பெண்கள் மனந்திரும்பியதைக் கண்டு அர்ச். சாமிநாதருடைய இருதயம் சர்வேசுரனையும் தேவமாதாவையும் ஆனந்த அக்களிப்புடன், புகழ்ந்து பாடியது. அமைதியாக அவர் அப்பெண்களைப் பார்த்து, “நிங்கள் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். ஆல்பிஜென்சியப் பதிதத் தப்பறைகளை எல்லா மக்களின் முன்னிலையில் வெளிப்படையாக
மறுதலித்து விட்டுவிட வேண்டும்” என்றார். 
உடனே ஜென்சியானா, “சுவாமி! அதன்பிறகு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றாள். அதற்கு புன்னகையுடன் அர்ச்.சாமிநாதர், “உன்னுடைய
இக்கேள்விக்கு பரலோக பூலோக இராக்கினியானயான தேவமாதா தான் பதிலளிக்க வேண்டும். உங்களுடைய ஜீவியத்திற்கான சர்வேசுரனுடைய திருவுளத்தை அறியும்படிக்கு நாம் அவர்களிடம் மன்றாடுவோம்” என்று கூறினார்.
இதன்பிறகு, அர்ச்.சாமிநாதர் பல வாரங்கள் தொடர்ந்து ஜெபத்திலும் தியானத்திலும் நிலைத்திருந்தார். அப்பொழுது அவருடைய இருதயத்தில் உதித்த திட்டமே, பரலோகத்திலிருந்து அவருக்குக் கிடைத்த பதிலாக மனப்பூர்வமாக திர்மானித்தார். அப்பெண்கள் மனந்திரும்பிய
அந்நிலைமையில் தங்களுடைய இல்லங்களில் பல இன்னல்களுக்கு ஆளாகக் கூடும். எனவே அவர்கள் வசிப்பதற்கு மாற்று இடம் ஒன்றை ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும். வந்.டீகோ ஆண்டகையிடம், அர்ச். சாமிநாதர், “ஆண்டவரே! இப்பெண்கள் புரோயிலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றே நமது மோட்ச ஆண்டவள் விரும்புகிறார்கள் என்பதை நான்
நிச்சயமாக அறிவேன்” என்றார்.
“ஒரு மடத்திலா?”
“ஆம். ஆண்டவரே! அங்கிருக்கும் தேவமாதாவின் சிற்றாலயத்தை ஒட்டியே அது கட்டியமைக்கப்பட வேண்டும். நாம் இங்கு பதிதத்திற்கு எதிராக ஆற்ற
வேண்டிய வேதபோதக அலுவலுக்காக, அம்மடத்தில் தங்கியிருந்து, அவர்கள் ஜெபம் செய்ய வேண்டும். மற்ற மனந்திரும்பும் பெண்களையும் நாம் அங்கு அனுப்பலாம். அவர்களையும் மற்ற சிறு பிள்ளைகளையும் பதிதமார்க்கத்தின் அபாயத்திலிருந்து அங்கு பாதுகாக்கலாம்” என்றார்.