⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
🇻🇦மே 1️⃣3️⃣ம் தேதி
🌹வேதபாரகரும் கர்தினாலுமான அர்ச். இராபர்ட் பெல்லார்மின் திருநாள்🌹
Feast day 13
May (General Roman Calendar, 1932–1969)
Venerated in Catholic
Church
Title as Saint Confessor
and Doctor of the Church
Beatified 13
May 1923 Rome, Kingdom of Italy by Pius XI
Canonized 29 June
1930 Rome, Vatican City by Pius XI
🌹இவர் இத்தாலியின் டஸ்கனி யிலுள்ள மோந்தெபுல்சியானோவில் , 1542ம் வருடம் பிறந்தார்; இவருடைய தாயார், சினிசியா செர்வினி என்பவர், 2ம் மர்செல்லுஸ் பாப்பரசரின் சகோதரியாவார்.
இவர் சிறுவனாயிருந்தபோது, இத்தாலி யிலும், இலத்தீனிலும் அநேகக் கவிதை கள் எழுதினார்; இவர் எழுதிய பாடல் களில் ஒன்று, அர்ச். மரிய மதலேனம் மாள் பற்றிய பாடல், இது உரோமன் கட்டளை ஜெபப்புத்தகத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது.
இவர் சேசுசபை மடத்தில் 18வது வயதில் சேர்ந்தார்; 28வது வயதில், 1570ம் வருடம், குருப்பட்டம் பெற்றார்; புராட்டஸ்டன்டு பதிதர்களின் தாக்குதல் களுக்கு ஏற்ப திருச்சபையின் வேத சத்தியங்களின் விளக்க நூல்களை முறைப்படி தயாரித்து பரப்பினார்; மிக நெருக்கமாகச் சென்று, புராட்டஸ்டன்டு பதிதங்களைப் பற்றிய கணக்கெடுப்பு ஆய்வை நடத்தினார்; 1592ம் வருடம்,இவர், உரோமன் கல்லூரியின் அதிபரானார்; 1598ம் வருடம், மேற்றிராணிமார்களின் பரிசோதகரானார்; 1599ம் வருடம் கர்தினாலானார். உடனே, 8ம் கிளமென்ட் பாப்பரசர், இவரை தலைமை நீதி விசாரணையாளராக நியமித்தார்; ஜியோடானோ புரூனோ என்ற பதிதனை, அவன் கடைசி வரை பதிதத்தப்பறையிலேயே மூர்க்கனாய் நிலைத் திருந்ததால், நெருப்பில் எரிக்கும்படியான தீர்ப்பிற்கு இவர் ஒப்புதல் அளித்தார்;
1616ம் வருடம், 5ம் சின்னப்பரின் கட்டளைகளின்பேரில், அர்ச். ராபர்ட் பெல்லார்மின், கலிலேயோவை, கோபர்நிகன் தப்பறையைக் கைவிடும்படி கூறினார்; கலிலேயோவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
இராபர்ட் பெல்லார்மின் தனது முதிர்ந்த வயதில், மோந்தேபுல்சியானோ வில் மேற்றிராணியாராக நான்குவருட காலம் அலுவல்புரிந்தார்; அதன்பின், உரோமையிலுள்ள அர்ச்.பெலவேந்திரர் சேசு சபைக் கல்லூரியில் இளைப்பாறி ஓய்வெடுக்கும்படி தங்கியிருந்தார்; இங்கு, 1621ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதியன்று, 78வது வயதில், அர்ச்.இராபர்ட் பெல்லார்மின் பாக்கியமாய் மரித்தார்.🌹✝
🌹அர்ச்.இராபர்ட் பெல்லார்மினே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக