மாசில்லாக் கன்னியே
1. மாசில்லாக் கன்னியே மாதாவே
உம்மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
2. மூதாதையர் செய்தீ முற்பவமுற்றாய்
ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் - வாழ்க வாழ்க
3. உம்மகன் தாமே உயிர்விடும் வேளை
என்னை உம்மைந்தனாய் ஈந்தனரன்றோ - வாழ்க வாழ்க
4. தாயே நீஆனதால் தாபரித்தென்மேல்
நேசம்வைத்தாள்வது நின்கடனாமே - வாழ்க வாழ்க
5. பிள்ளைகள் செய்பிழை பெற்றவள் தாங்கிக்
கொள்ளுவாளன்றி பின் கோபம் வையாளே - வாழ்க வாழ்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக