Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ஞானம் நிறை கன்னிகையே - Tamil Catholic songs lyrics

 


ஞானம் நிறை கன்னிகையே 

நாதனைத் தாங்கிய ஆலயமே

 ஞானம் நிறைக் கன்னிகையே


அனுபல்லவி 


மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2 

பலி பீடமுமாய் அலங்கரித்தாரே-ஞானம் 


பாவ நிழலே அணுகா 

பாதுகாத்தார் உம்மையே பரமன் 

தாயுதரம் நீர் தரித்திடவே-2

தனதோர் அமல தலமெனக் கொண்டார்-ஞானம் 

 

வாழ்வோர் அனைவரின் தாயே

வானுலகை அடையும் வழியே 

மக்கள் இஸ்ராயேல் தாரகையே-2

வானோர் துதிக்கும் இறைவியே வாழி-ஞானம் 


வாக்குத் தத்த பெட்டகமே

வானகம் சேர்க்கும் வாசலே

மகிழ் ஒளி நல்கும் விடி வெள்ளியே-2 

மெய் மனம் நொந்தோர்க் காறுதலே-ஞானம்


கிருபை தயாபத்து மந்திரம் - Tamil Catholic Songs Lyrics



1. கிருபை தயாபத்தின் மாதாவாய் 

இருக்கின்ற இராக்கினியே வாழ்க


        பல்லவி 


வாழ்க வாழ்க மாதாவே

வாழ்க வாழ்க மாதாவே 


2. எமதுயிர் தஞ்சமும் நீராமே

எமது நல் மதுரமும் நீராமே - வாழ்க 


3. பரதேச ஏவையின் மக்கள் யாம்

பரிவாக உம்மை யழைக்கின்றோம் - வாழ்க 


4. இந்தக் கண்ணீ ர் கணவாய் நின்று

உம்மையே நோக்கி அழுகின்றோம் - வாழ்க 


5. ஆதலின் எமக்காக வேண்டுகின்ற

மாதயை மாமரி விழி பாரும் - வாழ்க 


6. பரதேச மிதையாம் கடந்த பின்னர்

திருக்கனி சேசுவின் முகங்காட்டும் - வாழ்க 


7. கிருபாகரியே தயா பரியே

மரியே மதுர மா கன்னிகையே - வாழ்க


ஸ்பீரித்து சாந்துவே வாரும் -Tamil Catholic Song Lyrics



ஸ்பீரித்து சாந்துவே வாரும் - 2 

அன்பான தேவனே

அடியோர் உள்ளத்தே இறங்கும் 



உமது ஞானம் இல்லாதாகில் 

தவறிப்போவோம் பாருமே

 எமதஞ்ஞானத்தை நீக்கவே 

எழுந்தருளும் மெய் ஜோதியே 

வாரும் ஞான ஜோதியே (2) 


நரக மோடுலகு சேர்ந்தே 

நம்மை ஐயோ கெடுக்குதே 

விரைவாய் வாரும் தேவனே 

நீர் வேதனையார் எம்மை மீட்கவே 

வாரும் எம்மை மீட்கவே (2) 


திருப்ரசாதம் தரவாரும் 

தீங்கில்லாமல் நாமிருப்போம் 

தேவனே நீர் காவல் செய்வோர்க்கு 

ஆனந்தமே தூயானந்தமே

வாரும் காவல் தாருமே (2)


வியாழன், 1 ஏப்ரல், 2021

மாதாவே சரணம் - Tamil Catholic Song lyrics


Our Lady of Snow, Tuticorin
பல்லவி


மாதாவே சரணம் - உந்தன் 

பாதாரம் புவிக்காதாரம் - கன்னி


அனுபல்லவி


 மா பாவம் எமை மேவாமல்-2 

காவீரே அருள் ஈவீரே - கன்னி-மாதாவே


சரணங்கள் 


மாசில் உம் மனமும் சேசுவின் உள்ளமும்

 மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் 

ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் 

பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் - மாதாவே 



நானிலத்தில் சமாதானமே நிலவ 

நாஸ்திக ரஷ்யா ஆஸ்திகம் அடைய 

உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம்

 உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம்   - மாதாவே





மாதாவே சரணம் - Tamil Catholic Songs Lyrics

பல்லவி


மாதாவே சரணம் - உந்தன் 

பாதாரம் புவிக்காதாரம் - கன்னி


அனுபல்லவி


 மா பாவம் எமை மேவாமல்-2 

காவீரே அருள் ஈவீரே - கன்னி-மாதாவே


சரணங்கள் 


மாசில் உம் மனமும் சேசுவின் உள்ளமும்

 மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் 

ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் 

பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் - மாதாவே 



நானிலத்தில் சமாதானமே நிலவ 

நாஸ்திக ரஷ்யா ஆஸ்திகம் அடைய 

உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம்

 உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம்   - மாதாவே





சூரியன் சாய - Tamil Catholic Songs Lyrics


1. சூரியன் சாய காரிருள் மெல்ல

சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை 

பாருல கெங்கும் நின்றெழுந் தோங்கும்.. 

பண்புயர் கீதம் வாழ்க மரியே


2. பட்சிகள் ஓசை மாய்ந்திட ஆடும்

பாலகர் நின்று வீடு திரும்ப 

அர்ச்சய கோபுரங் களிசைக்கும்

ஆனந்த கீதம் வாழ்க மரியே 


3. மாயவுலகிற் சிக்கியுழன்று

வாடியே உள்ளம் சோர்ந்திடும் வேளை 

தாயகங் காட்டி கண்ணீர் துடைத்து

 சஞ்சலந் தீர்க்கும் வாழ்க மரியே


 4. சுந்தர வாழ்க்கை தோற்ற மறைய

துன்ப அலைகள் கோஷித் தெழும்பும் 

அந்திய காலை எம்மரு குற்றும்

 ஆதரவீயும் வாழ்க மரியே








அன்னையே எங்கள் செல்வநாடு - Tamil Catholic Songs lyrics


பல்லவி 


அன்னையே எங்கள் செல்வதாடு 

அஞ்ஞானம் நீங்கி உன் நாடாகிய 

விண்ணவனாம் உன் சுதன் சேசுவையே 

வேண்டி மன்றாடிடாய் 

வேண்டி மன்றாடிடாய் - தாயே தாயே


சரணம் 


மானிட தேவன் இவ்வுலோகத்தில்

 வந்தித்தனை நாளாயிற்றே 

ஈனப் பிசாசை எங்கள் நல் நாடோ 

இன்னும் விடாமற் போயிற்றே 


தன்னை உருவாக்கிய தாதாவை 

சற்றும் தேடாமல் விட்டதே 

கண்ணில்லாத் தேவதைகள் தம்மையே 

எம் நாடு நம்பிக் கெட்டதே ‘


சூரியன் சந்திரன் முதலான 

சோதிகளைப் பணிந்ததே வீரர் 

அரசர்கள் தம்மையுமே வீழ்ந்து 

தொழத் துணிந்ததே


 கண்ணிலே கண்ட தெல்லாம் 

சேவித்து கர்த்தனையே மறந்ததே 

எண்ணியிந் நாட்டையே உன் 

நாடாக்கல் யாவற்றினுஞ் சிறந்ததே



அழகின் முழுமையே தாயே - Tamil Catholic Songs Lyrics


பல்லவி 


அழகின் முழுமையே தாயே 

அலகையின் தலை மிதித்தாயே 

உலகினில் ஒளி ஏற்றிடவே 

அமலனை எமக்களித்தாயே


சரணங்கள் 


1. இருளே சூழ்ந்திடும்போதே

உதய தாரகை போலே 

அருளே நிறைந்த மாமரியே 

அருள்வழி காட்டிடுவாயே


அன்பும் அறமும் செய்வோம் 

அன்னை உனைப் பின் செல்வோம் 

உன்னைத்துணையாய்க் கொள்வோம் 

என்றும் பாவத்தை வெல்வோம்




புதன், 31 மார்ச், 2021

Tamil Catholic Songs Lyrics in Tamil

 தேவ அன்னை பாடல்கள் 


இஸ்பிரித்து சாந்து பாடல்கள்  



திவ்விய பலிபூசை பாடல்கள் 
    




ஓ தூய கன்னித்தாயே ( O Thuya Kanni thaayae) - Tamil Catholic Songs Lyrics


 ஓ தூய கன்னித்தாயே 

உம்மை நான் நேசிப்பேன் 

ஊழியுள்ள காலமும் 

நான் உம்மை நேசிப்பேன்


சரணங்கள் 


மோட்சராக்கினி தன்னைப் 

பாக்களாற் போற்றுவோம் 

வாக்கோடு உள்ளம் சேர 

வந்தனம் சாற்றுவோம் 


அன்னையின் மாட்சி தன்னை 

எல்லோர்க்கும் காட்டுவோம் 

மென்மேலும் அவள் பேரில்

 மெய்யன்பை மூட்டுவோம்



. இனிய உன் நாமம் - Tamil CAtholic Songs Lyrics


இனிய உன் நாமம் 

ஓதிடல் தினமே 

அனைவரின் மகிழ்வாமே 


தாயினும் மேலாம் தாயுமே நீயே 

தமியோர் திரவியமே 

அன்பிதே அன்பிதே மாதா 

தன்னலமேயற்ற மாதா         - தாயினும் 


கலைமொழியால் உனைத் துதித்திடல் 

நாளும் கவலையும் நீக்குமம்மா

பல வகைப் பாகும் தெளிவுறு தேனும் 

தெவிட்டா உணவாமே                           - அன்பிதே


பஞ்சமும் நோயும் பசியும் தீர 

பார்த்திபன் சேசுவையே 

அஞ்சலி புரிவோம் அம்மா மரியே 

அனவரதமும் ஸ்துதிப்போமே        -  அன்பிதே 


பரிசுத்த தாயே பார் புகழ் மரியே

 பாவிகளாம் எம்மையே 

பார்த்தருள் வார்த்து பரகதி சேர்க்க 

பரன் துணை வேண்டிடுவாய்               -  அன்பிதே



கலங்கரைத் தீபமே



 கலங்கரைத் தீபமே கலங்களின் தாரகையே துலங்கிடும் மணியே கலங்குவோர்க் கதியே காத்திடுவாய் தாயே 

மாதர்களின் மாதிரியே  மாயிருளில் ஒளிர் தாரகையே  மாதரசியே மனவொளி தாராய்   மாசு அகலச் செய்வாய் 


தாயெனவே தாவி வந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்   பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி      கூவிடும் குரல் கேளாய்






to Buy Tamil Christian Books (Catholic) Click here











புதன், 17 மார்ச், 2021

St. Joseph Quotes in Tamil

 

St. Joseph Quotes

மாசில்லாக் கன்னியே -Tamil Catholic Songs

மாசில்லாக் கன்னியே மாதாவே உம்மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க வாழ்க மரியே

மூதாதை தாயார் செய் முற்பவமற்றாய் ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் - வாழ்க வாழ்க

உம்மகன் தாமே உயிர்விடும் வேளை என்னை உம்மைந்தனாய் ஈந்தனரன்றோ - வாழ்க வாழ்க

தாயே நீ ஆனதால் தாபரித்தென்மேல் நேசம்வைத்தாள்வது நின்கடனாமே - வாழ்க வாழ்க

பிள்ளைகள் செய்பிழை பெற்றவள் தாங்கிக் கொள்ளுவாளன்றி பின் கோபம் வையாளே - வாழ்க வாழ்க





செவ்வாய், 16 மார்ச், 2021

வான் லோக ராணி - Tamil Catholic Songs

வான்லோக ராணி வையக ராணி மண்மீதிலே புனித மாது நீ


1. விண்ணொளித் தாரகை தாயே நீ தண்ணொளிர் நேத்ரியே ஆரணி பாவமேதும் இல்லா சீலி பாவிகளின் செல்வராணி பாதுகாத்து ஆளுவாயே


2. வானவர் போற்றிடும் இராக்கினி மன்னவர் வாழ்ந்திடும் ராணி நீ பாவமேதும் இல்லா சீலி பாவிகளின் செல்வராணி பாதுகாத்து ஆளுவாயே


3. நீ ஜென்ம மாசில்லா மாதரசி செம்மைசேர் மங்கையர் ராணி நீ பாவமேதும் இல்லா சீலி பாவிகளின் செல்வராணி பாதுகாத்து ஆளுவாயே நீ