Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Tamil Saints Books லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Saints Books லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 29 - அர்ச். நசியான்சென் கிரகோரியார் (St. Gregory of Nyssa)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

மே 0️⃣9️⃣ம் தேதி


🌹வேத பாரகரும், ஸ்துதியரும், மேற்றிராணியாருமான அர்ச். நசியான்சென் கிரகோரியார் திருநாள்🌹


🌹இவர் கி.பி.325ம் வருடம் கப்பதோசியாவில்,   அர்ச்சிஷ்டவர்களின் குடும்பத்தில் பிறந்தார்; அர்ச். நோன்னா இவருடைய தாயார்! அர்ச்.செசாரியுஸ், இவருடைய சகோதரர்! அர்ச்.கொர்கோனியா, இவருடைய சகோதரி!  சிறு வயதில் கிரகோரியாரும்,அவருடைய சகோதரர் செசாரியுசும் அவர்களுடைய மாமா ஆம்ஃபிலோகியோஸிடம் கல்வி பயின்றனர். பின்னர், சொல் இலக்கணத்தையும், தத்துவ இயலையும் கற்றுக் கொள்வதற்காக நசியான்சுஸிற்கும், செசரையாவிற்கும், அலெக்சாண்டிரியாவிற்கும், ஏத்தன்ஸிற்கும் கிரகோரியார் சென்றார். 

ஏத்தென்ஸ் செல்லும் வழியில். கப்பல் ஒரு மூர்க்கமான புயலில் அகப்பட்டது. உடனே, கிரகோரியார், ஆண்டவரிடம் இப்புயலிலிருந்து காப்பாற்றப்பட்டால், தனது ஜீவியத்தை சர்வேசுரனுடைய ஊழியத்திற்காக அர்ப்பணிப்பதாக வாக்களித்து, வேண்டிக் கொண்டார். 

ஏத்தென்ஸில், இவர் தனது சக மாணவரான அர்ச்.பேசிலுடன் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார். அர்ச்.பேசில் செசரையாவைச் சேர்ந்தவர். இன்னொரு சக மாணவனாக ஜுலியன் இருந்தான்; இவன் பின்னாளில் உரோமைச் சக்கரவர்த்தியாகி, வேதவிரோதியானான்; கிறீஸ்துவர்களை உபாதித்துக் கொன்று போட்டான்.

361ம் வருடம்,  கிரகோரி நசியான்சுஸிற்கு திரும்பி வந்தார். விரைவிலேயே குருப்பட்டம் பெற்றார்;இச்சமயம், இவருடைய சக மாணவரான அர்ச்.பேசில், இவருடைய மேற்றிராணியாரானார். அர்ச்.பேசில் , அவருடைய விருப்பத்திற்கு எதிராக மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டிருந்தார்.

அதே சமயம்,ஜுலியன் உரோமைச் சக்கரவர்த்தியாக உயர்த்தப் பட்டிருந்தான்; பகிரங்கமாக கிறீஸ்துவ வேதத்திற்கு எதிரானவன் என்று அவன் தன்னையே பிரகடனம் செய்தான். கிறீஸ்துவ வேதவிசுவாசத்தை மறுதலித்த ஜுலியனுக்கு எதிராக  சிநேகத்தினாலும், பொறுமையாலும் சத்திய வேதமான கிறீஸ்துவ வேதமே, ஜுலியன் போன்ற ஒழுங்கற்ற ஆட்சியாளர்களை மேற்கொண்டு வெற்றிபெரும், என்று அர்ச்.கிரகோரியார், ஒரு கட்டுரையைத் தொகுத்து வெளியிட்டார்; 

அர்ச்.கிரகோரியார் விளக்கிய இவ்வேத இயலின் செயல் முறையானது, சர்வேசுரனுடன் பரம இரகசியவிதமாக ஒன்றிணைந்து ஐக்கியமாகிற ஞான ஜீவியத்தின் உயரிய நிலைமைக்கு இட்டுச் செல்கிற, (Theosis) தெய்வீகமாக்கும் நடைமுறை செயல்முறையினுடைய பகிரங்க வெளிப்பாடாகும்.

வேதவிரோதியான  ஜுலியன் மிகுந்த ஆக்ரோஷத்துடனும் வல்லமையுடனும் அர்ச்.கிரகோரியாரையும், மற்ற கிறீஸ்துவ தலைவர்களையும்  உபத்திரவப்படுத்தத் தீர்மானித்தான்; இருப்பினும், அடுத்த வருடமே, பெர்ஷியர்களுக்கு எதிரான போரில் ஜுலியன் மாண்டு அழிந்துபோனான்.

திருச்சபை, கொடுங்கோலன் ஜுலியனின் சாவிற்குப் பிறகு வளம் பெற்றது; அடுத்து வந்த சக்கரவர்த்தி ஜோவியன் நல்ல கிறீஸ்துவராகவும் கிறீஸ்துவர்களின் ஆதரவாளராகவும் இருந்தார். அடுத்த சில வருடங்கள், கிரகோரியார்,கப்பதோசிய பிராந்தியத்தை பிளவுபடுத்துவதாக அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆரிய பதிதத் தப்பறைக்கு எதிராகப் போராடுவதில்  ஈடுபட்டார். இந்த பதற்றமான சூழலில்,  இவர் தனது நண்பரான அர்ச்.மகா பேசிலுடன் சேர்ந்து கொண்டு, ஆரிய பதிததர்களை செசரையா தேவாலயத்தில் நிகழ்ந்த  வேத இயலிலும் சொல் இலக்கணத்திலும் வாதிட்டு  வென்றார். பகிரங்கமாக நடத்தப்பட்ட இவ்விவாதத்தை சக்கரவர்த்தி வாலென்ஸின் பிரதிநிதிகள் தலைமைதாங்கியிருந்தபோது, அர்ச்.பேசிலும், அர்ச்.கிரகோரியாரும் பதிதர்களை விவாதத்தில் வாதிட்டுத் தோற்கடித்து வெற்றிபெற்றனர். இதன் பின், இவ்விரு அர்ச்சிஷ்டவர்களுடைய எதிர்காலமும், திருச்சபையை நிர்வகிப்பதற்கான அலுவலில் அர்ப்பணிக்கப்பட வேண்டியதாயிருந்தது! இவர்களுடைய எதிர்காலத்தை நோக்கி திருச்சபையின் சீரான நிர்வாக அலுவல்கள் காத்திருந்தன!

380ம் வருடம் புதிய சக்கரவர்த்தியாக, தியோடோசியுஸ் வந்தபோது, கான்ஸ்டான்டிநோபிளின் ஆரிய பதிதத்தைச் சேர்ந்த மேற்றிராணியாரான டெமோஃபிலியுஸ் பதவி நீக்கம் பெற்றார்; அப்பதவியில் அர்ச்.கிரகோரியார்  மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டார்;  கான்ஸ்டான்டி நோபிள் மேற்றிராசனத்தை மிகச் சிறப்பாக ஆட்சி செய்தார்; பின்னர்,இளைப்பாறும்படியாக, நசியான்ஸிற்குச் சென்று ஏகாந்தத்தில் ஜெப தப பரிகார ஜீவியம் ஜீவித்தார்; இவர் தனது 64ம் வயதில் 389ம் வருடம் பாக்கியமாய் மரித்தார்.🌹✝

“எல்லா ஞானஸ்நானம் பெற்ற கிறீஸ்துவர்களிடத்திலும் இந்த மூன்று காரியங்களை சர்வேசுரன் கேட்கிறார்: இருதயத்தில் மிகச் சரியான விசுவாசம்; நாவில் எப்போதும் உண்மை; சரீரத்தில் அடக்கவொடுக்கம் ஆகிய மூன்றும்  ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்துவனிடமும் இருக்க வேண்டும்” அர்ச்.நசியான்சென் கிரகோரியார்.


🌹அர்ச். நசியான்சென் கிரகோரியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹