Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Common of Saints missal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Common of Saints missal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

Si diligis me - பரிசுத்த பாப்புமார்களின் பெயரால் பொது

 பரிசுத்த பாப்புமார்களின் பெயரால் பொது 


Si diligis me

பிரவேசம்: 2 அரு. 21 : 15-17

சீமோன் இராயப்பா,நீ என்னைச் சிநேகிக்கிறாயோ? என் ஆட்டுக்குட்டிகளை மேய், என் ஆடுகளை மேய். (பா.கா.:)  அல்லேலுய்யா, அல்லேலுய்யா.) (சங். 29:1) ஆண்டவரே, தேவரீர் என்னைக் கைதூக்கி, என் பகைவர்கள் என்னை மேற் கொண்டு மகிழாதபடி செய்ததால், உம்மைத் துதிப்பேன்.- பிதாவுக்கும்.......

சபைச் செபம்

செபிப்போமாக: நித்திய ஆயனே, தேவரீருடைய மந்தையைக் கிருபையாய்க் கண்ணோக்கியருளும்; திருச்சபைக்கு அதி மேய்ப்பனாகத் தேவரீர் ஏற்படுத்திய (உம்முடைய வேத சாட்சியும்) பெரிய குருவுமாகிய முத்திப்பேறுபெற்ற இன்னா ருடைய மன்றாட்டை முன்னிட்டு அதை உமது இடைவிடாத பராமரிப்பினால் காப்பாற்றியருளும்.- தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......

இதே நாளில் மற்றொரு பரி. பாப்பானவரின் ஞாபகச் செபம் சொல்லவேண்டியிருந்தால் பின்வருமாறு:

செபிப்போமாக: சர்வேசுரா, அப்போஸ்தோலிக்கு கற்பாறையினுடைய உறுதியின்மீது அமைக்கப்பட்டிருக்கும் உமது திருச்சபையை நரக வாசல்களின் பயத்திலிருந்து விடுவிக்கிறீNர் (உம்முடைய வேதசாட்சியும்) பெரிய குருவுமாகிய ஜஇன்னாருடையஸ வேண்டுதலினால் அது உமது சத்தியத்திலே மான்றிசின்று, ஆபத்தின்றி என்றும் காப்பாற்றபட, திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......

நிருபம் (1 இரா. 5. 1-4. 10-11)

சகோதரரே, உங்களிலுள்ள மூப்பர்களுக்கு உடன் மூப்பனும், கிறீஸ்து நாதருடைய பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படப்போகிற மகிமைக் குப் பங்காளியுமாகிய நான் மூப்பர் களைக் கேட்டுக்கொள்ளுகிறதாவது: உங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட சர்வேசுரனுடைய மந்தையை மேய்த்து, கட்டாயமாயல்ல, கடவுளுக்கேற்க வலியமனதோடும், இழிவான ஆதாயத்தை நாடியல்ல, மனப்பிரீதியோடும்,  (கர்த்தருடைய) சுதந்தரவாளிகளின் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள்போலல்ல் நல்ல மனதோடும் மந்தைக்கு மாதிரிகளாகக் கண்காணித்து வாருங்கள்.  இவ்விதமாய் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளுவீர்கள். கிறீஸ்து சேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சக்காலம் துன்பப்படுகிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துவார். அவருக்கே அநவரதகாலமும் மகிமையும் இராச்சியபாரமும் உண்டாவதாக. ஆமென்.

படிக்கீதம்: (சங். 106. 32,31)

ஜனங்களுடைய சபையிலே அவரை ஏத்திப் புகழ்ந்து, மூப்பர்களுடைய ஆசனத்திலே அவரை துதித்துப் புகழ்வார்களாக. - ஆண்டவருடைய இரக்கத் தின் நிமித்தமும், அவர் மனுமக்களுக்கு செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரை துதித்து கொண்டாடுவார்களாக. 

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (மத். 16: 18) நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 39. 10-11)

மகாசபையிலே தேவரீருடைய நீதியைக் குறித்துப் பிரசங்கித்தேன். ஆண்டவரே, என் உதடுகளை மூடமாட்டேன் என்று நீர் அறிவீர். – நான் உமது நீதியை என் இருதயத்தில் மறைத்து வைக்கவில்லை. உமது சத்தியத்தையும் இரட்ச ணியத்தையுங் குறித்து பேசினேன். – மகாசபையில் உமது தயாளத்தையும் உண்மையையும் மறைத்தேனில்லை.

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா – (மத். 16. 18) நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்.. - (சங். 44. 17-18) தேவரீர் அவர்களை உலகமனைத்திற்கும் அல்லேலுய்யா தலைவர்களாக ஏற் படுத்துவீர். ஆண்டவரே, அவர்கள் உமது திருநாமத்தை நினைத்துக்கொண்டு இருப்பார்கள். அல்லேலுய்யா. 

சுவிஷேசம் (மத்;. 16: 13-19)

அக்காலத்தில் சேசுநாதர் பிலிப்புவின் சேசாரேயா என்னுந் திசைகளுக்கு வந்தபோது, தம்முடைய சீஷர்களை நோக்கி: மனுஷர்கள் மனுமகனை யாரென்று சொல்லுகிறார்களென்று கேட்டார். அவர்கள் மாறுத்தாரமாக: சிலர் ஸ்நாபக அருளப்பரென்றும், சிலரோ எலியாஸென்றும், வேறு சிலர் எரேமியாஸ் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவரென்றுஞ் சொல்லுகிறார்களென்றார்கள். சேசுநாதர் அவர்களைப் பார்த்து: நீங்களோ, என்னை யாரென்கிறீர்கள் என்று கேட்டார். சீமோன் இராயப்பர் மறுமொழியாக நீர் கிறீஸ்துவானவர், சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரன் என்றார். அப்போது சேசுநாதர் அவருக்கு மறு மொழியாக, யோனாவின் குமாரனான சீமோனே, நீ பாக்கியவான், ஏனெனில் மாம்சமும் இரத்தமுமல்ல, பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவானவர்தாமே இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்: நீ இராயாய் இருக்கிறாய்! இந்த இராயின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. மோட்சத்தின் திறவுகோல்களையும் உனக்குக் கொடுப்பேன்; பூலோகத்தில் நீ எதைக் கட்டுவாயோ, அது பரலோகத்திலுங் கட்டப்பட்டிருக்கும். நீ பூலோகத்தில் எதைக் கட்டவிழ்ப்பாயோ, அது பரலோகத்திலுங் கட்ட விழ்க்கப்பட்டிருக்கும் என்றார்..

ஒப்புக்கொடுத்தல் (சங். 88: 25)

இதோ! நம்முடைய வாக்கியங்களை உம் வாயில் ஊட்டினோம். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும், இதோ! உன்னைச் சனங்கள் மீதும், இராச்சியங்கள் மீதும் அதிகாரியாய் ஏற்படுத்தியிருக்கிறோம். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளை பார்த்து, உமது திருச்சபை விளங்கத் தயை செய்தருளும். அதனால் உமது திருச்சபைக்கு எங்கும் நல்ல பலன் கிடைக்கவும், ஞான மேய்ப்பர்கள் உமது பரிபாலனத்தால் உமது திருநாமத்திற்கு உகந்தவர்களாகும்படியும் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

வேறு அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு நாங்கள் மகிழ்வுடன் ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளைக் கனிவுடன் கையேற்றுக் கொண்டு, முத்திபேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலினால் உம்முடைய திருச்சபை விசுவாசத்தில் பழுதின்றி மகிழவும், அமைதியுள்ள சீவியத்தால் என்றும் களிகூரவும் திருவருள் புரிந்தருளும். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 16. 18)

நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, தேவரீருடைய திருச்சபையை பரிசுத்த போஷிப்பால் செழிக்கும்படி அதை இரக்கமாய் ஆண்டு நடத்தியருளும். அது தேவரீருடைய வல்லமையுள்ள பரிபாலணத்தால் நடத்தப்பட்டு சுயாதீனத்தில் ஓங்கி வளரவும், வேத அநுசாரத்தில் பழுதின்றி நிலைதிருக்கவும் தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு . . . 

வேறு செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, உம்முடைய திருச்சபையில் தேவரீர் அருளிச் செய்த வரப்பிரசாதத்தின் இஸ்பிரித்துவை பொழிந்தருளும். உம்முடைய (வேதசாட்சியும்) பெரிய குருவுமாகிய (இன்னாருடைய) மன்றாட்டினால் மேய்ப்பருக்கு மந்தையின் கீழ்படிதலும் அல்லது மந்தைக்கு மேய்ப்பரின் பரிவும் குறையாதபடி தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு . . .


---

For other Common mass for saints please click here



 


Sapientiam Sanctorum - மேற்றிராணியரல்லாத வேதசாட்சிகள் பலர் பெயரால் - பொது

 மேற்றிராணியரல்லாத வேதசாட்சிகள் பலர் பெயரால் - பொது
Sapientiam Sanctorum

பிரவேசம்: சங். 44: 15,14

பரிசுத்தவான்களுடைய ஞானத்தை மக்கள் வெளிப்படுத்துவார்கள். சங்கத்தார் அவர்களுடைய புகழ்ச்சியைக் கூறுவார்கள். அவர்களுடைய நாமங்கள் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும். (சங். 32. 1) நீதிமான்களே, ஆண்டவரிடத்தில் அகமகிழ்ச்சியுடன் அவரை கீர்த்தனஞ் செய்யுங்கள். அவரை புகழ்வது இருதய நேர்மையுள்ளவர்களுக்குரியது.. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளாகிய (இன்னார் இன்னாருடைய..) பரலோக பிறப்புநாளை கொண்டாட எங்களுக்கு கிருபை செய்தருளினீரே. நாங்களும் அவர்களுடைய கூட்டுறவைப் பெற்று, நித்திய பேரின்ப பாக்கியத்தில் களிகூர எங்களுக்கு திருவுளம் புரிந்தருளும். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்

ஞானாகமத்திலிருந்து வாசகம்  (ஞானா. 5. 16-20)

நீதிமான்கள் என்றென்றைக்கும் சீவிப்பார்கள். கர்த்தரிடத்தில் அவர்களுக்குச் சம்பாவனையுண்டு; அதி உன்னத கடவுள் அவர்களை என்றும் பாதுகாக்கிறார். ஆகையால் ஆச்சரியமான ராசாங்கத்தையும் மகிமையின் கிரீடத்தையும் கர்த்தர் கரங்களினின்றடைவார்கள். அவருடைய வலது கரம் அவர்களை காப்பாற்றியது அவரது பரிசுத்த புஜம் அவர்களை ஆதரித்தது. அவர் பற்றுதலானது ஆயுதமணிந்து கொள்ளும். அவர் சத்துராதிகளைப் பழி வாங்குவதற்குச் சிருஷ்டிகளுக்காக ஆயுதமணிவார். இருப்புக் கவசமாக நீதியையும் சிரசாயுதமாக தமது நேர்மையுள்ள தீர்மானத்தையும் தரித்துக் கொள்ளுவார். ஊடுருவப்படாத கேடயமாக நீதித்தனத்தால் தம்மை மூடிக்கொள்வார்.

படிக்கீதம்: (சங். 125. 5-6)

வேடர்களின் கண்ணிக்கு குருவி தப்பினதுபோல, நம்முடைய ஆத்துமம் தப்பிற்று. – கண்ணி தெறித்துப் போயிற்று. நாமோ விடுதலையானோம். பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த ஆண்டவருடைய நாமத்தினால் நமக்கு சகாயமுண்டாயிருக்கிறது.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 67. 4) நீதிமான் சர்வேசுரன் சமூகத்தில் விருந்து செய்து திருப்தி அடைந்து அகமகிழ்வார்கள். ஆனந்த அக்களிப்படை வார்கள். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 125. 5-6)

கண்ணீருடன் விதைக்கிறவன் சந்தோஷத்துடன் அறுப்பார்கள். அவர்கள் விதைகளை தெளிக்கையில் அழுதுகொண்டு போனார்கள். ஆனால், தாங்கள் அறுத்த அரிக்கட்டுகளை சுமந்துகொண்டு வருகையில் பெருமகிழ்ச்சியோடு வருவார்கள். 

சுவிஷேசம் (லூக். 6. 17-23)

அக்காலத்தில் சேசுநாதர் மலையினின்று இறங்கி, மைதானமான ஓரிடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷர் கூட்டமும், யூதேயா நாட்டின் எத்திசை யிலிருந்தும், ஜெருசலேம் நகரத்திலிருந் தும், தீர், சீதோன் நகரங்களின் கடற் கரைகளிலிருந்தும் வந்த ஏராளமான ஜனங்களும் இருந்தார்கள். இவர்கள் அவருடைய வாக்கைக் கேட்கவும், தங்கள் நோய்களினின்று சுகமாக்கப்படவும் வந்திருந்தார்கள். அசுத்த அரூபிகளால் உபாதிக்கப்பட்டவர்களும் சொஸ்த மானார்கள். அவரிடத்திலிருந்து ஒரு சக்தி புறப்பட்டு, எல்லோரையும் குணமாக் கினபடியினாலே, ஜனங்களெல்லோரும் அவரைத் தொடும்படி வழிதேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் தம்முடைய சீஷர்கள்மேல் தமது கண்களை ஏறெடுத்துப் பார்த்துத் திருவுளம்பற்றினதாவது: தரித்திரர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களு டையது.  இப்பொழுது பசியாயிருக்கிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சிரிப்பீர்கள். மனுமகனைப்பற்றி ஜனங்கள் உங்க ளைப் பகைத்து, உங்களை விலக்கித் தூஷணித்து உங்கள் பெயரை ஆகா தென்று தள்ளும்போது, நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே அகமகிழ்ந்து களி கூறுங்கள். ஏனெனில் இதோ, பரலோகத்திலே உங்கள் சம்பாவனை ஏராளமாயிருக்கின்றது.

ஒப்புக்கொடுத்தல் (சங். 149. 5-6)

பரிசுத்தவான்கள் மகிமையில் அக்களிப்பார்கள். தங்கள் மஞ்சங்களில் களிகூறுவார்கள். அவர்களுடைய வாயில் சர்வேசுரனுடைய துதிகள் விளங்கும்.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுடைய பக்தியின் காணிக்கையை தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவை தேவரீருடைய நீதிமான்களின் மகிமையின் பொருட்டு உமக்கு பிரியமுள்ளவனவாகவும், உம்முடைய இரக்கத்தினால் எங்கள் இரட்சணியத்துக்குரியனவாகவுங் கடவன – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 4)

உங்களை துன்புறுத்திகிறவர்களைப் பற்றி அஞ்சாதீர்கள் என்று என் சிநேகி தராகிய உங்களுக்கு சொல்லுகிறேன்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே தேவரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளாகிய (இன்னார் இன்னாருடைய..) வேண்டுதலினால் நாங்கள் வாயால் உட்கொண் டதைச் சுத்தமான இருதயத்தினால் கிரகிக்குமாறு எங்களுக்கு திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.. – தேவரீரோடு …

 


மேற்றிராணியரல்லாத வேதசாட்சிகள் பலர் பெயரால் - பொது - Salus autem

 மேற்றிராணியரல்லாத வேதசாட்சிகள் பலர் பெயரால் - பொது
Salus autem

பிரவேசம்: சங். 36: 39

நீதிமான்களுடைய இரட்சணியமோ ஆண்டவரிடமிருந்து வருகிறது. அவர் துன்ப காலத்தில் அவர்களை ஆதரிப்பவராயிருக்கிறார். (சங். 1) பொல்லாதவர்களை குறித்து எரிச்சற்படாதே, அக்கிரமஞ் செய்கிறவர்கள் பேரில் பொறாமை கொள்ளாதே. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளான (இன்னார் இன்னாருடைய..) வருடாந்திர திருநாளினால் எங்களை மகிழச் செய்கிறீரே: அவர்களுடைய பேறுபலன்களைக் குறித்து மகிழ்கின்ற நாங்கள் அவர் களுடைய முன்மாதிரிகைகளினால் பற்றியெரியவும் தயவாய்க் கிருபை செய்தருளும். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்

அப்போஸ்தலரான முத். சின்னப்பர் எபிரேயருக்கு எழதிய நிருபத்திலிருந்து வாசகம்  (எபி. 10. 32-38)

சகோதரரே,. நீங்கள் உங்கள் முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் தெளிவடைந்து உபத்திரவங்களின் பெரும் போராட்டத்தைச் சகித்தீர்களே. ஒரு பக்கத்தில் நிந்தைகளிலும் உபத்திரவங்களிலும் பார்க்கி றவர்களுக்கு வேடிக்கையானீர்கள். மற்றொரு பக்கத்தில் அப்படிப் பாடுபட்டவர் களுக்கு நீங்களும் கூட்டாளிகளானீர்கள். எப்படியெனில் விலங்கிடப்பட்டவர் களுக்கு நீங்கள் மனதிரங்கினதுமன்றி, அதிக உத்தமும் நிலைபெற்றதுமான ஐசுவரியம் உங்களுக்கு உண்டென்று அறிந்து சந்தோஷமாய் உங்கள் ஆஸ்திகளையும் கொள்ளையடிக்கவிட்டீர்கள். ஆதலால் மிகுந்த சம்பா வனைக்கு ஏதுவான உங்கள் நம்பிக்கையை இழந்து போகாதேயுங்கள். நீங்கள் தேவசித்தத்தை நிறைவேற்றி, வாக்குத்தத்தத்தைக் கைக்கொள்ளும்டியாகப் பொறுமை உங்களுக்கு அவசரமாயிருக்கின்றது. இன்னும் இருப்பது சொற்பக்காலம். வரவேண்டியவர் வருவார். தாமதம்பண்ணார். என் நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான்.

படிக்கீதம்: (சங். 91. 13-14)

நீதிமான்கள் அபயமிட்டார்கள். ஆண்டவர் அவர்களுக்கு செவிசாய்த்து,  அவர்களுக்கு நேரிட்ட எல்லாத் துன்பங்களினின்று மீட்டருளினார். - இருதயத்தில் வேதனைப் படுகிறவர்களுக்குத் துணையாக ஆண்டவர் இருக்கிறார். மனத்தாழ்ச்சியுள்ளவர்களை இரட்சிப்பார்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஆண்டவரே, வெண்தூய்மையணிந்த வேதசாட்சிகளின் சேனை உம்மை புகழ்கின்றது. அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 125. 5-6)

கண்ணீருடன் விதைக்கிறவன் சந்தோஷத்துடன் அறுப்பார்கள். அவர்கள் விதைகளை தெளிக்கையில் அழுதுகொண்டு போனார்கள். ஆனால், தாங்கள் அறுத்த அரிக்கட்டுகளை சுமந்துகொண்டு வருகையில் பெருமகிழ்ச்சியோடு வருவார்கள். 

சுவிஷேசம் (லூக். 12: 1-8)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரிசேயருடைய கள்ள ஞானமாகிய புளிக்காரத்தின் மட்டில் நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். ஆயினும், வெளியாக்கப்படாத மறைபொருளு மில்லை அறியப்படாத இரகசியமுமில்லை. ஏனென்றால் நீங்கள் இருளிலே சொன்னவைகள் வெளிச்சத்திலே சொல்லப்படும்; நீங்கள் அறைகளிலே காதுக்குள் பேசினது வீடுகளின் மேலே பிரசங்கிக்கப்படும். என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதற்குமேல் ஒன்றுஞ் செய்யத் திராணியற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சவேண்டாம். ஆனால் நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென்று உங்களுக்குக் காண்பிப்பேன்;  உயிரைப் பறித்த பின்பு நரகத்தில் தள்ள வல்லமையுள்ளவருக்கே அஞ்சுங்கள்;. ஆம், அவருக்கே அஞ்சுங்களென்று உங்களுக்குச் சொல்லு கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலங் குருவிகள் விற்கிறதல்லவோ? ஆயினும் அவைகளில் ஒன்றானாலும் சர்வேசுரனுடைய சமுகத்தில் மறக்கப் படுவதில்லை. உங்கள் தலை உரோமங்களெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன் ஆகையால் நீங்கள் அஞ்சவேண்டாம்;  அநேகம் அடைக்கலங் குருவிகளைவிட நீங்கள் அதிக விலையுள்ளவர்களாயிருக்கிறீர்கள். மீளவும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: மனிதர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுமகனும் சர்வேசுரனுடைய தூதர் முன்பாக அறிக்கை பண்ணுவார்.

ஒப்புக்கொடுத்தல் (ஞான. 3. 1-3)

நீதிமான்களுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய கரத்திலிருக்கின்றன. சாவின் பயம் அவர்களை அணுகாது. மதியீனருடைய கண்களுக்கு முன் அவர்கள் மரித்தவர்களாக தோன்றினார்கள். ஆனால் அவர்கள் சமாதானத்தில் இளைப்பாறுகிறார்கள். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளின்மேல் களிகூர்ந்து நோக்கியருளும். தேவரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளான (இன்னார் . . இன்னாருடைய . .) வேண்டுதலினால் எல்லா ஆபத்துக்களி னின்றும் எங்களைத் தற்காத்தருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 10. 27)

நான் உங்களுக்கு இருளில் சொல்லுகிறதை வெளிச்சத்தில் சொல்லுங்கள். நீங்கள் காதிலே இரகசியமாய்க் கேட்கிறதையும் வீட்டு கூரையிலிருந்து பிரசங்கியுங்கள்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே இந்த சற்பிரசாத உட்கொள்ளுதல் எங்களை பாவத்திலிருந்து பரிசுத்தமாக்கி தேவரீருடைய வேதசாட்சிகளான (இன்னார் இன்னாருடைய ..) வேண்டுதலினால் எங்களைப் பரலோக மருந்தில் பங்கு பற்றுவோராகவும் செய்யக்கடவது. – தேவரீரோடு …