Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

Si diligis me - பரிசுத்த பாப்புமார்களின் பெயரால் பொது

 பரிசுத்த பாப்புமார்களின் பெயரால் பொது 


Si diligis me

பிரவேசம்: 2 அரு. 21 : 15-17

சீமோன் இராயப்பா,நீ என்னைச் சிநேகிக்கிறாயோ? என் ஆட்டுக்குட்டிகளை மேய், என் ஆடுகளை மேய். (பா.கா.:)  அல்லேலுய்யா, அல்லேலுய்யா.) (சங். 29:1) ஆண்டவரே, தேவரீர் என்னைக் கைதூக்கி, என் பகைவர்கள் என்னை மேற் கொண்டு மகிழாதபடி செய்ததால், உம்மைத் துதிப்பேன்.- பிதாவுக்கும்.......

சபைச் செபம்

செபிப்போமாக: நித்திய ஆயனே, தேவரீருடைய மந்தையைக் கிருபையாய்க் கண்ணோக்கியருளும்; திருச்சபைக்கு அதி மேய்ப்பனாகத் தேவரீர் ஏற்படுத்திய (உம்முடைய வேத சாட்சியும்) பெரிய குருவுமாகிய முத்திப்பேறுபெற்ற இன்னா ருடைய மன்றாட்டை முன்னிட்டு அதை உமது இடைவிடாத பராமரிப்பினால் காப்பாற்றியருளும்.- தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......

இதே நாளில் மற்றொரு பரி. பாப்பானவரின் ஞாபகச் செபம் சொல்லவேண்டியிருந்தால் பின்வருமாறு:

செபிப்போமாக: சர்வேசுரா, அப்போஸ்தோலிக்கு கற்பாறையினுடைய உறுதியின்மீது அமைக்கப்பட்டிருக்கும் உமது திருச்சபையை நரக வாசல்களின் பயத்திலிருந்து விடுவிக்கிறீNர் (உம்முடைய வேதசாட்சியும்) பெரிய குருவுமாகிய ஜஇன்னாருடையஸ வேண்டுதலினால் அது உமது சத்தியத்திலே மான்றிசின்று, ஆபத்தின்றி என்றும் காப்பாற்றபட, திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......

நிருபம் (1 இரா. 5. 1-4. 10-11)

சகோதரரே, உங்களிலுள்ள மூப்பர்களுக்கு உடன் மூப்பனும், கிறீஸ்து நாதருடைய பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படப்போகிற மகிமைக் குப் பங்காளியுமாகிய நான் மூப்பர் களைக் கேட்டுக்கொள்ளுகிறதாவது: உங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட சர்வேசுரனுடைய மந்தையை மேய்த்து, கட்டாயமாயல்ல, கடவுளுக்கேற்க வலியமனதோடும், இழிவான ஆதாயத்தை நாடியல்ல, மனப்பிரீதியோடும்,  (கர்த்தருடைய) சுதந்தரவாளிகளின் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள்போலல்ல் நல்ல மனதோடும் மந்தைக்கு மாதிரிகளாகக் கண்காணித்து வாருங்கள்.  இவ்விதமாய் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளுவீர்கள். கிறீஸ்து சேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சக்காலம் துன்பப்படுகிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துவார். அவருக்கே அநவரதகாலமும் மகிமையும் இராச்சியபாரமும் உண்டாவதாக. ஆமென்.

படிக்கீதம்: (சங். 106. 32,31)

ஜனங்களுடைய சபையிலே அவரை ஏத்திப் புகழ்ந்து, மூப்பர்களுடைய ஆசனத்திலே அவரை துதித்துப் புகழ்வார்களாக. - ஆண்டவருடைய இரக்கத் தின் நிமித்தமும், அவர் மனுமக்களுக்கு செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரை துதித்து கொண்டாடுவார்களாக. 

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (மத். 16: 18) நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 39. 10-11)

மகாசபையிலே தேவரீருடைய நீதியைக் குறித்துப் பிரசங்கித்தேன். ஆண்டவரே, என் உதடுகளை மூடமாட்டேன் என்று நீர் அறிவீர். – நான் உமது நீதியை என் இருதயத்தில் மறைத்து வைக்கவில்லை. உமது சத்தியத்தையும் இரட்ச ணியத்தையுங் குறித்து பேசினேன். – மகாசபையில் உமது தயாளத்தையும் உண்மையையும் மறைத்தேனில்லை.

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா – (மத். 16. 18) நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்.. - (சங். 44. 17-18) தேவரீர் அவர்களை உலகமனைத்திற்கும் அல்லேலுய்யா தலைவர்களாக ஏற் படுத்துவீர். ஆண்டவரே, அவர்கள் உமது திருநாமத்தை நினைத்துக்கொண்டு இருப்பார்கள். அல்லேலுய்யா. 

சுவிஷேசம் (மத்;. 16: 13-19)

அக்காலத்தில் சேசுநாதர் பிலிப்புவின் சேசாரேயா என்னுந் திசைகளுக்கு வந்தபோது, தம்முடைய சீஷர்களை நோக்கி: மனுஷர்கள் மனுமகனை யாரென்று சொல்லுகிறார்களென்று கேட்டார். அவர்கள் மாறுத்தாரமாக: சிலர் ஸ்நாபக அருளப்பரென்றும், சிலரோ எலியாஸென்றும், வேறு சிலர் எரேமியாஸ் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவரென்றுஞ் சொல்லுகிறார்களென்றார்கள். சேசுநாதர் அவர்களைப் பார்த்து: நீங்களோ, என்னை யாரென்கிறீர்கள் என்று கேட்டார். சீமோன் இராயப்பர் மறுமொழியாக நீர் கிறீஸ்துவானவர், சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரன் என்றார். அப்போது சேசுநாதர் அவருக்கு மறு மொழியாக, யோனாவின் குமாரனான சீமோனே, நீ பாக்கியவான், ஏனெனில் மாம்சமும் இரத்தமுமல்ல, பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவானவர்தாமே இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்: நீ இராயாய் இருக்கிறாய்! இந்த இராயின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. மோட்சத்தின் திறவுகோல்களையும் உனக்குக் கொடுப்பேன்; பூலோகத்தில் நீ எதைக் கட்டுவாயோ, அது பரலோகத்திலுங் கட்டப்பட்டிருக்கும். நீ பூலோகத்தில் எதைக் கட்டவிழ்ப்பாயோ, அது பரலோகத்திலுங் கட்ட விழ்க்கப்பட்டிருக்கும் என்றார்..

ஒப்புக்கொடுத்தல் (சங். 88: 25)

இதோ! நம்முடைய வாக்கியங்களை உம் வாயில் ஊட்டினோம். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும், இதோ! உன்னைச் சனங்கள் மீதும், இராச்சியங்கள் மீதும் அதிகாரியாய் ஏற்படுத்தியிருக்கிறோம். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளை பார்த்து, உமது திருச்சபை விளங்கத் தயை செய்தருளும். அதனால் உமது திருச்சபைக்கு எங்கும் நல்ல பலன் கிடைக்கவும், ஞான மேய்ப்பர்கள் உமது பரிபாலனத்தால் உமது திருநாமத்திற்கு உகந்தவர்களாகும்படியும் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

வேறு அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு நாங்கள் மகிழ்வுடன் ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளைக் கனிவுடன் கையேற்றுக் கொண்டு, முத்திபேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலினால் உம்முடைய திருச்சபை விசுவாசத்தில் பழுதின்றி மகிழவும், அமைதியுள்ள சீவியத்தால் என்றும் களிகூரவும் திருவருள் புரிந்தருளும். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 16. 18)

நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, தேவரீருடைய திருச்சபையை பரிசுத்த போஷிப்பால் செழிக்கும்படி அதை இரக்கமாய் ஆண்டு நடத்தியருளும். அது தேவரீருடைய வல்லமையுள்ள பரிபாலணத்தால் நடத்தப்பட்டு சுயாதீனத்தில் ஓங்கி வளரவும், வேத அநுசாரத்தில் பழுதின்றி நிலைதிருக்கவும் தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு . . . 

வேறு செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, உம்முடைய திருச்சபையில் தேவரீர் அருளிச் செய்த வரப்பிரசாதத்தின் இஸ்பிரித்துவை பொழிந்தருளும். உம்முடைய (வேதசாட்சியும்) பெரிய குருவுமாகிய (இன்னாருடைய) மன்றாட்டினால் மேய்ப்பருக்கு மந்தையின் கீழ்படிதலும் அல்லது மந்தைக்கு மேய்ப்பரின் பரிவும் குறையாதபடி தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு . . .


---

For other Common mass for saints please click here



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக