Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 30 மே, 2024

Catholic Saints Quotes in Tamil


எங்கே பிறர்சிநேகமும், ஞானமும் இருக்கிறதோ, அங்கே அச்சமும், அறியாமையும் இருப்பதில்லை. 

அர்ச் பிரான்சிஸ் அசிசியார்

புதன், 29 மே, 2024

தேவசகாயம் பிள்ளை (Devasahayam Pillai)

 வேதசாட்சி - புனிதப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பொது நிலையினர் புனித. தேவசகாயம் பிள்ளை!



அது 1752-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15 அல்லது 16-ம் நாளாக இருக்கும். வியாபாரத் துக்காக மங்கம்மாள் சாலையில் சென்று கொண்டிருந்த வணிகர்களின் வண்டி மாடுகள், ஆரல்வாய்மொழி காற்றாடி மலையை நெருங்கியபோது மிரண்டன. தொடர்ந்து செல்ல மறுத்து சாலை ஓரத்தின் புதர்களுக்கருகே நின்றுவிட்டன. திகிலடைந்த வியாபாரிகள் என்ன, ஏதென்று அறிய கீழே இறங்கி சோதிக்க, அங்கே சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் உடலைக் கண்டனர். கழுத்தில் சிலுவைக் கயிறு தொங்கியதால் அவர் கிறீஸ்தவர் என்றும், மாடுகள் அந்த இடத்துக்கு வண்டியை இழுத்துச் சென்றதால், அவர் ஒரு புண்ணியவானாக இருக்க வேண்டும் என்றும் எண்ணி உடலைக் கவனமாக வண்டியில் ஏற்றியதும், மிரண்ட மாடுகள் அமைதியாகி தொடர்ந்து சென்றன. அவர் கொல்லப்பட்டு இரண்டு நாளாவது ஆகியிருக்க வேண்டும். ஆனால் எந்த விதமான துர்நாற்றமோ அழுகலோ இல்லாததைக் கண்ட வியாபாரிகள் அதிசயித்துப் போனார்கள். நேரே கோட்டாறு ஆலயத்திற்கு சென்று பங்குத் தந்தை பன்ஸீகா சுவாமியிடம் ஒப்படைத்தனர். அவர் உடலை கோவிலினுள் நல்லடக்கம் செய்தார். அந்தக் கல்லறை கோட்டாறு, அர்ச். சவேரியார் ஆலயத்தினுள் உள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபர் தேவசகாயம் பிள்ளை!  ஆம், அன்று காற்றாடி மலையில் சுட்டுக் கொல்லப்பட்ட தேவசகாயம் பிள்ளை இன்று (02.12.2012 ஞாயிறு) அகில திருச்சபையயங்கும் வேதசாட்சி முத்திப்பேறு  பெற்ற தேவசகாயம் பிள்ளை என்று பிரகடனப் படுத்தப்பட்டு, போற்றப்படுகிறார்!

நீதிமான் நீலகண்ட பிள்ளை.

சேரநாட்டின் திருவாங்கூர் திருவிதாங்கோடு தலைநகரான பத்மநாபபுரத்திற்கு அருகில் (இன்று கன்னியாகுமரி மாவட்டம்) உள்ள நட்டாலம் என்ற ஊரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் பூசாரி வாசுதேவன் நம்பூதிரிக்கும், தேவகியம்மாளுக்கும் 1712-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் நாளன்று நீலகண்டன் பிறந்தார்.  கல்வி யிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்கியவர் அந்நாட்டு அரசன் மார்த்தாண்ட வர்மனின் இராணுவத்தில் சேர்ந்து, பல்வேறு பதவி உயர்வு களைப் பெற்று அரசனின் நம்பிக்கைக்குரிய அதி காரியாக உயர்ந்தார். தேவபக்தி கொண்ட அவர் பார்கவி அம்மாளைத் திருமணம் செய்தார்.

அக்காலத்தில் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் சேர நாட்டின் பகுதிகளைக் கைப்பற்றுவதில் போட்டியிட்டனர். அரசன் மார்த்தாண் டன் ஆங்கிலேயரைச் சார்ந்து டச்சுக்காரர்களோடு 1741-ல் நடந்து குளச்சல் துறைமுகத் தாக்குதலில் வென்று, அவர்களின் தளபதி எஸ் தாக்கியுஸ் பெனடிக்ட் டிலனாய்  உள்ளிட்ட 23 பேரைச் சிறைப் பிடித்தான். டிலனாயின் திறமைகளைக் கண்ட அரசன் அவருக்கு விடுதலை வழங்கி, தமது படையினருக்கு ஐரோப்பிய போர்ப் பயிற்சிகளை வழங்கும்படி அமர்த்திக் கொண்டான். அச்சமயத்தில் உதயகிரி கோட்டையைக் கட்டும் பணியை மேற்பார்வையிடும் நீலகண்ட பிள்ளையும், டிலனாயும் நண்பர் களாயினர்.  நற்குணம் கொண்ட பிள்ளைக்கு டிலனாய் மெய்யங் கடவுள் சேசு கிறீஸ்து வையும் அவரது வேதத்தையும் அறிமுகம் செய்து போதித்தார். தேவ அருளால் விசுவாச ஒளி பெற்றுக் கொண்ட நீலகண்டப் பிள்ளை மனம் மாறினார்.


தேவசகாயமான நீலகண்டன்!

பத்மநாபபுரத்திலிருந்து 33 கி.மீ. தொலைவில் இருக்கும் வடக்கன்குளத் திற்குக் கால்நடையாகப் பயணம் செய்த நீலகண்டன் அதன் பங்குத் தந்தை சங். புத்தாரி சுவாமியால் 1745 மே 14-ம் நாளன்று "லாசர்" என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்.  லாசர் என்ற சொல்லுக்கு "கடவுளின் உதவி"  என்று பொருள்.  அதனைத் தமிழ் மொழியில் தேவசகாயம் என்று மாற்றி தம்மை அழைத்துக் கொண்டார். கிறீஸ்தவ சத்தியங்களில் உறுதியடைந்த தேவசகாயம் பிள்ளை கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தார். விரைவில் அவரது மனைவியும் "திரேசா‡ஞானப்பூ" என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற எதிர்ப்புகள் கடுமையாயின. அரசனிடம் அவதூறுகள் கூறப்பட, அரசனும் தேவசகாயம் பிள்ளையை வரவழைத்து விசாரித்து, "கிறீஸ்தவ மதத்தை விட்டுவிடும்படி"  கட்டளையிட்டான். ஆனால் அதனை நயமாகவும், உறுதியாகவும் மறுத்து விட்ட தேவசகாயம் பிள்ளையைச் சிறையில் அடைத்தான். மனம் மாறும் வரை சித்திரவதை செய்ய உத்தரவிட்டான். 3 ஆண்டுகள் இந்தக் கலாபனையைப் பொறுமையோடு அனுபவித்த தேவசகாயம் பிள்ளை விசுவாச உறுதியைக் காண்பித்தார்.


வேதசாட்சியான தேவசகாயம்!

பல்வேறு சிற்றூர்கள் வழியாக கல்லிலும், முள்ளிலும், குளிரிலும், வெயிலிலும் கைவிலங்கோடு இழுத்து வரப்பட்ட தேவசகாயம் பிள்ளை ஆரல்வாய்மொழிக்கு அருகேயுள்ள காற்றாடி மலைக் காட்டில் சுட்டுக் கொல்லப்படும்படியான தீர்ப்பைப் பெற்றார்.  இதன்படி 1752 ஜனவரி, 14-ஆம் நாளன்று வேதசாட்சியமடைந்தார்.  மரிக்கும்போது, "சேசுவே, மரியாயே!"  என்று உச்சரித்து தம் உயிரைக் கையளித்தார்.  கொலைஞர்கள் அவருடைய உடலை முட்புதர் களில் எறிந்துவிட்டுச் சென்றனர்.


முத். தேவசகாயம் பிள்ளையே, நமது தாய்நாடாம் இந்தியா அஞ்ஞான இருள் நீங்கி, சத்திய ஒளி பெற வேண்டிக் கொள்ளும்!


(ஆதாரம்: "இலக்கியங்கள் போற்றும் தியாகச் செம்மல் தேவசகாயம் பிள்ளை.")

மாமரியின் மீதான பக்தி, சேசுவைச் சென்றடையும் வழி! (Devotion to Our Lady)

 மாமரியின் மீதான பக்தி, சேசுவைச் சென்றடையும் வழி!



சேசுவே இரட்சகர்! சேசுவே ஆண்டவர் ! சேசுவே சர்வேசுரன்! சகல சிருஷ்டிகளும் அவருக்காக, அவர் மூலமாகவே உண்டாக்கப் பட்டுள்ளன. ''அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாக்கப்பட்ட தொழிய உண்டாக்கப்பட்டவைகளில் எதுவும் அவராலேயன்றி உண்டாக்கப்பட வில்லை " (அரு.1:3).

அவரே நம் இரட்சகர்! ''நாம் பாவங்களுக்கு மரித்தவர்களாய் நீதிக்கு ஜீவிக்கும்படி, அவர் தாமே சிலுவை மரத்தின் மேல் தமது சரீரத்தில் நமது பாவங்களைச் சுமந்தார். அவருடைய காயங்களினால் நாம் குணமாக்கப்பட்டோம்!" (1இரா.2:24). நாம் இரட்சணியம் அடைய வேண்டியதற்கு வானத்தின் கீழ் (அவருடைய நாமமல்லாது) வேறே நாமம் மனுஷருக்குக் கொடுக்கப்படவில்லை (அப். நட. 4:12).

சேசுவே ஆண்டவர்! ஏனெனில் "இவரே காணப்படாதவராகிய சர்வேசுரனுடைய சாயலும், சகல சிருஷ்டிகளுக்கும் முந்தின பேறுமானவர். அதெப்படியென்றால், பரலோகத்திலும் பூலோகத் திலும் காணப்பட்டவைகளும், காணப்படாதவைகளுமான சகலமும் இவருக்குள் சிருஷ்டிக்கப்பட்டன.... இவரே எல்லோருக்கும் முந்தின வராயிருக்கிறார். இவருக்குள்ளே சகலமும் நிலைபெறுகின்றது" (கொலோ.1:15-17).

சேசுவே சர்வேசுரன்! அவரே தேவ வார்த்தையானவர். ''அந்த வார்த்தை சர்வேசுரனிடத்திலிருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனாகவும் இருந்தார்" (அரு.1:1). "சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரனும்." (மத்.16:16), பாவங்களை மன்னிக்கிறவரும், வரப்பிரசாதங்களின் கருவூலமும், சிநேகத்தின் ஊற்றும், " மறைவாயிருக்கிறவைகளை வெளிப்படுத்துகிறவரும்" (மத் 13:35), "மனிதனைத் தீர்வையிடும் அதிகாரத்தைப் பிதாவிடமிருந்து பெற்றிருக்கிறவரும்” (அரு. 5:27), "ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே இருக்கிறவரும்" (அரு. 8:58) அவரே. அவரே நம் இறுதிக்கதி!

எனவே, கிறீஸ்துநாதரைத் தன் இரட்சகராகவும், ஆண்டவராகவும், உன்னத சர்வேசுரனாகவும் ஏற்றுக்கொள்ளாதவன் எவனும் நித்தியத் திற்கும் இழக்கப்படும் ஆபத்திலிருக்கிறான்.

ஆனால் கத்தோலிக்கரிடையேயும் கூட அறியாமையில் மூழ்கியிருக் கிற அநேகர் கிறீஸ்து நாதரை விட்டுவிட்டு, தேவமாதா மீதும், அர்ச்சியசிஷ்டவர்கள் மீதும் உண்மையான அன்பில்லாமல், ஒரு முறையற்ற வெளியரங்க பக்தியை மட்டும் கொண்டிருக்கிறார்கள். திருநாட்களின் வெளிக் கொண்டாட்டங்கள், வரி வசூல், ஆடை அணிகலன்கள், குடிவெறி, உல்லாசம், சப்பரம், கும்பிடு சரணம் போன்ற வெளிக்காரியங்களில் மட்டுமே மூழ்கிக் கிடக்கிறார்கள். தேவமாதா மீதும், அர்ச்சியசிஷ்டவர்கள் மீதும் நாம் கொள்ளும் பக்தி (திவ்ய பலிபூசை, தேவ நற்கருணை, பாவசங்கீர்த்தனத்தின் வழியாக) நமதாண்டவராகிய சேசுவோடு நம்மை இணைக்காவிட்டால், நம் பக்தி உண்மையான கிறீஸ்தவ பக்தியல்ல. கிறீஸ்துநாதரை அறிந்து, நேசித்து, சேவிக்க எல்லா முயற்சியையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவமாதாவோ கிறீஸ்துநாதரை நாம் சென்றடையும் வழியாக இருக்கிறார்கள். மாதா பக்தி நம்மைக் கிறீஸ்துநாதரிடம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை எனில், இந்த மகா உன்னத சிருஷ்டியான திவ்ய கன்னிகை உலகிற்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் ஒருபோதும் நிறைவேற முடியாது. சேசுநாதர் மாமரியாகிய மரத்தில் கனிந் திருக்கிற கனியாயிருக்கிறார். இக்கனியைப் பெற்றுக் கொள்ளும் ஏக்கத்துடனேயே நாம் மாதாவை அணுகிச் செல்ல வேண்டும். ஆகையால் மாதா பக்தியைப் பயன்படுத்தி, சேசுவைச் சென்றடைய நமக்கு உதவுமாறு மாதாவிடம் மன்றாடுவோமாக!

ஞாயிறு, 26 மே, 2024

மகா பரிசுத்த தமதிரித்துவ திருநாள்

⭐இன்றைய திருநாள்⭐
 
🇻🇦மே 2️⃣6️⃣ம் தேதி


✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
✨ மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரனின் திருநாள்     ✨
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

🌹இன்று நம் தாய் திருச்சபை மகா பரிசுத்த தமதிரித்துவ திருநாளை வெகு ஆடம்பரமாகக்  கொண்டாடுகிறது. இந்த திருநாள், மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் பேரில், கிறீஸ்துவர்கள் கொண்டிருக்கிற  மகா பெரிய அடிப்படை விசுவாச சத்தியங்களுக்கு தோத்திர மகிமையாக, திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரின் திருநாள் அனுசரிக்கப்படுகிற ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரன்- மூன்று தேவ ஆட்களாக ஒரே சுபாவத்துடன் விளங்குகின்றார்! பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து என்கிற மூன்று தேவ ஆட்களாக, மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரன் விளங்குகின்றார்; மூவரும் தேவ ஆட்களாகவும், சமமான தேவ இலட்சணங்களுடையவர்களாகவும், அதே சமயம், ஒரே சர்வேசுரனாகவும் இருக்கின்றனர்; அவர்களுடைய தேவ சுபாவத்தில் வித்தியாசமோ, பாகுபாடோ கிடையாது! இம் மூன்று தேவ ஆட்களும் பிரிக்கப்படக் கூடாதவர்களாக இருக்கின்றனர்! மகா பரிசுத்த தமதிரித்துவம் என்பது, மகா பெரிய பரம இரகசியமாகத் திகழ்கிறது! இம்மகா உன்னத வேத சத்தியத்தை, ஒரு மாபெரும் பரம இரகசியமாக, திருச்சபை நமக்குப் போதிக்கிறது! ஆனால்,  அதே சமயம், பரம இரகசியமான மகா பரிசுத்த தமதிரித்துவம் என்கிற நம் சத்திய வேதத்தின் முதல் வேத சத்தியமானது, நம் மனித அறிவிற்கு எட்டாத மிக உயரத்திலுள்ள ஒரு நிஜமாகத் திகழ்கிறது! என்பதையும் நமக்கு திருச்சபைக் கற்பிக்கின்றது. 

🛑 
மகா பரிசுத்த தம திரித்துவம் என்கிற பரம இரகசியமான வேத சத்தியத்தை நம்மால் முழுமையாக ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது! மகா பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றி சில நிமிட நேரங்களைக் கடந்து நீண்ட நேரமாக  பேசுவாயாகில்,  நீ ஏதாவது ஒரு பதிதத் தப்பறையினுள் விழ நேரிடும்! ஏனெனில், அப்போது, நீ சர்வேசுரனை மிக ஆழமாக ஆராய முற்படுவாய்! என்று பொதுவான ஞானம் உனக்குக் கற்பிக்கும்!
🛑
பழைய ஏற்பாட்டில், விவரிக்க முடியாத, நித்திய காலத்திற்குமான உன்னத உறவுகளுடன் திகழ்கிற மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரனின் மூன்று தேவ ஆட்களைப் பற்றி வாசிக்கிறோம். இந்த வேத சத்தியத்தைப் பற்றிப் பேசுகிற  பழைய ஏற்பாட்டின் பகுதிகள், யூதர்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் போனது, என்பது தான், ஒரே வித்தியாசமான காரியமாக இருக்கிறது!
ஆதியாகமத்தில், “நம்முடைய சாயலாகவும், பாவனையாகவும், மனிதனைப் படைப்போமாக!” (ஆதி 1:26) என்று  சர்வேசுரன் தம்மைப் பற்றி பன்மையில் பேசுகிறதை, நாம் காணலாம். பரிசுத்த வேதாகமத்தின் இவ்வாக்கியத்தை யூதர்கள் தலை வணங்கி  ஏற்று, விசுவசிப்பார்கள்! ஆனால், இப்பரிசுத்த வேதாகமப் பகுதியை, அவர்கள் புரிந்து கொள்கிறதில்லை! இதற்கு மாறாக, கத்தோலிக்கர்கள், சர்வேசுரனுடைய முழுமையான வெளிப்படுத்துதலினால் அறிவூட்டப்பட்டவர்களாக, சிங்கார தோட்டமான ஈடன் தோட்டத்தில், ஆதாமை சிருஷ்டிக்கிற அலுவலில், பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து என்கிற மூன்று தேவ ஆட்களும் சேர்ந்து செயல்படுகிறதை, இவ்வேதாகமப் பதத்தினுடைய குறிப்பில், தெளிவாகக் காண்கின்றனர்!

பழைய ஏற்பாட்டில், இசையாஸ் தீர்க்கதரிசி, சர்வேசுரனுடைய பத்திராசனத்தைச் சுற்றிலும், பக்திசுவாலகர்களான சம்மனசுகள் நின்றபடி, “சேனைகளின் தேவனான ஆண்டவர்,பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!” என்று பாடுகிறதைக் கேட்டதாக இசையாஸ் ஆகமத்தில், வாசிக்கிறோம்; ஆனால், ஏன் “பரிசுத்தர்!” (இசை 6:3) என்று மும்முறை சர்வேசுரனை சம்மனசுகள் ஸ்துதித்து ஆராதிக்கின்றனர்? என்பதற்கான காரணத்தை, மனிதர்களுக்கு யார் விளக்கிக் கூறுவார்?

காலம் நிறைவுறும் வரை உலகம் காத்திருக்க வேண்டியிருந்தது!  அதன் பின், சர்வேசுரன், தமது ஏக குமாரனை உலகத்திற்கு அனுப்புவார்; சர்வேசுரனுடைய இம்மகா இரக்கமுள்ள நோக்கத்திற்கான இரட்சணிய அலுவல் நிறைவேற்றப்பட்டது! வார்த்தையானவர் மாம்சமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார். அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவின் ஏக சுதனுக்குரிய மகிமைக்கு நிகராயிருந்தது. (அரு 1:14). அவருடைய மகிமையைக் காண்பதன் மூலமாக, அதாவது, பிதாவாகிய சர்வேசுரனுடைய ஏக குமாரனுடைய மகிமையைக் காண்கிறதன் மூலம்,சர்வேசுரனில், பிதாவும், சுதனும் இருக்கின்றனர், என்பதை கண்டறிந்து கொள்கிறோம்.

பிதாவினால் உலகத்திற்கு அனுப்பப்பட்ட சுதன், தம்முடன் இனி வரும் நித்திய காலத்திற்குமாக இணைத்துக்கொண்ட மனித சுபாவத்துடன், பரலோகத்திற்கு ஆரோகணமானார்! மேலும், இதோ! பிதாவும், சுதனும், அவர்கள் இருவரிடமிருந்தும் புறப்படுகிறவரான திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரை உலகத்திற்கு அனுப்புகின்றனர்; இது, ஒரு புதிய கொடையாக இருக்கிறது! இவ்வுன்னத தேவகொடையான திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவர் தாமே, ஆண்டவராகிய சர்வேசுரன், மூன்று தேவ ஆட்களாயிருக்கிறார், என்கிற வேத சத்தியத்தை  மனிதனுக்குக் கற்பித்தார்!
பெந்தேகோஸ்தே திருநாளன்று, திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரின் தேவ வரப்பிரசாதத்தை, அப்போஸ்தலர்கள் பெற்றுக்கொண்டு, சகல தேசங்களுக்கும் சென்று போதிக்கவும், சகல ஜனங்களுக்கும் மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுனுடைய பரிசுத்த நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கவும் துவக்கினர்!
திருச்சபை , சர்வேசுரனுக்கு செலுத்துகிற தேவாராதனைக்கான  தனது திருவழிபாட்டின் ஒவ்வொரு ஸ்தோத்திர ஸ்துதி புகழ்ச்சியிலும், அதன் மையப்பொருளாக மகா பரிசுத்த தமதிரித்துவத்தையேக் கொண்டிருக்கிறது! கால நேரமும், நித்தியமும்,  மகா பரிசுத்த தமதிரித்துவத்திற்கே சொந்தமாயிருக்கிறது!  ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு  மணி நேரமும் மகா பரிசுத்த தமதிரித்துவத்திற்குச் சொந்தமாயிருக்கிறது! நம் இரட்சணியத்தினுடைய பரம இரகசியங்களுடைய ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்ட சகல திருநாட்களும், மகா பரிசுத்த தமதிரித்துவத்தையே, அவற்றின் மையமாகக் கொண்டிருக்கின்றன! மகா பரிசுத்த தேவமாதாவினுடையவும், அர்ச்சிஷ்டவர்களுடையவும், திருநாட்கள் எல்லாம், ஒரே வஸ்துவாகவும், மூன்று தேவ ஆட்களாகவும் விளங்கும் மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரனிடம் நம்மை வழிநடத்திச் செல்லக்கூடிய வழிமுறைகளாக மட்டுமே திகழ்கின்றன!
ஆகையால் தான், ஒரே சர்வேசுரன் மூன்று தேவ ஆட்களாக இருக்கிறார், என்கிற பரம இரகசியத்திற்கு தோத்திர மகிமையாக, கொண்டாடப்படவேண்டிய ஆடம்பர திருநாள், பெந்தேகோஸ்தே திருநாளுக்குப் பின் உடனடியாகக் கொண்டாடப்படுவது, நீதியான ஏற்புடைய காரியமாக இருக்கிறது!  இவ்விரு உன்னதமான திருநாட்களும், அவற்றிற்குள்  இடையே பரம இரகசிய தொடர்பைக் கொண்டிருக்கின்றன! இருப்பினும், அடுத்து அடுத்து வந்த பல யுகங்களுடைய  பல நூற்றாண்டுகள் வரை, மகா பரிசுத்த தமதிரித்துவத்தினுடைய இம்மகா ஆடம்பரமான திருநாள், திருச்சபையின் திருவழிபாட்டின் கால அட்டவணைக்குள் சேர்க்கப்படாமலிருந்தது!
எட்டாம் நூற்றாண்டில், கற்றறிந்த வேதசாஸ்திரியான ஆல்குயின் என்கிற ஒரு துறவி, மகா பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய பரம இரகசியத்திற்கு தோத்திரமாக திவ்ய பலிபூசை ஜெபங்களை இயற்றினார்! வடக்கு ஜெர்மனியின் அப்போஸ்தலரான அர்ச்.போனிஃபேஸ் தான், இவரை இந்த திவ்ய பலிபூசை ஜெபங்களை இயற்றுவதற்கு தூண்டியவர். மகா பரிசுத்த தமதிரித்துவத்திற்குத் தோத்திரமாக இயற்றப்பட்ட இந்த திவ்யபலிபூசை, பின்னர், 1022ம் வருடம், செலிஜென்ஸ்டாட் என்ற இடத்தில் நிகழ்த்தப்பட்ட திருச்சபை சங்கத்தில், அகில ஜெர்மனியாலும் அங்கீகரிக்கப்பட்டது!
கிபி 920ம் வருடம், பெல்ஜியத்திலுள்ள லீஜ் என்கிற நகரின் மேற்றிராணியாரான வந். ஸ்டீஃபன் ஆண்டகை, தனது மேற்றிராசனததில், மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் திருநாளை வெகு ஆடம்பரமாக ஸ்தாபித்தார்; மேலும், இம்மாபெரும் பரம இரகசியத்திற்குத் தோத்திர மகிமையாக அதற்கான முழு கட்டளை ஜெபத்தையும் இயற்றினார்!இம்மேற்றிராணியாருக்கு அடுத்து வந்த மேற்றிராணியாரான வந்.ரெகுயர் ஆண்டகையும் தொடர்ந்து இம்மாபெரும் திருநாளை கொண்டாடி வந்தார்; பின், சிறிது சிறிதாக பெல்ஜியம் நாடு முழுவதும், இந்த திருநாளை அநுசரிக்கலாயிற்று!
அர்ச்.ஆசீர்வாதப்பர் துறவற சபை ரெயிச்சனாவ்வின் முதல்  மடாதிபதியான பெர்னோ சுவாமியிடமிருந்து, இத்திருநாளுக்குரிய ஆவணங்களைப் பெற்று, இந்த திருநாளை பரப்புவதற்கான சகல காரியங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது! குளூனியிலும், இதே நூற்றாண்டின் துவக்கத்தில்,இம்மாபெரும் திருநாள் ஸ்தாபிக்கப்பட்டது! என்பதை, இப்பிரசித்தபெற்ற துறவற மடத்தின் குறிப்பேட்டிலிருந்து அறிந்து கொள்கிறோம். இக்குறிப்பேட்டில், கிபி 1091ம் வருடம் எழுதப்பட்ட ஒரு குறிப்பில், மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் திருநாளைப் பற்றியும், இந்த திருநாள் வெகு காலத்திற்கு முன்பாக ஸ்தாபிக்கப்பட்ட திருநாள் என்றும், எழுதப்பட்டிருந்தது!
இவை எல்லாவற்றிலிருந்தும், பரிசுத்த பாப்பரசரின் தலைமை ஸ்தானமே, இம்மகா பரிசுத்த திருநாளை அகில உலகமெங்கும் அனுசரிப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். திவ்ய இஸ்பிரீத்து சாந்துவான சர்வேசுரனால்  தனது சகல காரியங்களிலும் வழிநடத்தப்படுகிறதைப்போல், பரிசுத்த தாய் திருச்சபையானது, மகா பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரனுக்கு மிக ஆடம்பரமாக ஸ்துதி புகழ்ச்சி ஸ்தோத்திர ஆராதனைகளை செலுத்துவதற்கான  ஒரு விசேஷ நாளை ஒரு வருடத்தில் ஏற்படுத்துவதிலும், அதே திவ்ய இஸ்பிரீத்து சாந்துவான சர்வேசுரனால், வழிநடத்தப்பட்டது!  கிபி 1334ம் வருடம், 22ம் அருளப்பர் பாப்பரசர், இம்மகா ஆடம்பரமான திருநாளுக்கான அலுவலை நிறைவேற்றி, இத் திருநாளை அகில உலகமும் அனுசரிக்க வேண்டும் என்கிற பாப்பரசரின் ஒரு ஆணை மடலைப் பிரகடனம் செய்தார்.🌹✝️
பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துவுடையவும் நாமத்தினாலே! ஆமென் ( சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு ஜெபி்த்தால் -100 நாள் பலன்; தீர்த்தம் தொட்டு வரைந்தால் 300 நாள் பலன்)
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹

✝️
🔵

வெள்ளி, 24 மே, 2024

அர்ச். ஜெம்மா கால்கானி St. Gemma

அர்ச். ஜெம்மா கால்கானி (1878 - 1903)
"சேசு எந்த வழியை எனக்குச் சித்தம் செய்கிறாரோ, அதில் நான் மகிழ்ச்சி அடைவேன்.  எனது வாழ்வைப் பரித்தியாகம் செய்ய விரும்புகிறார் என்றால், உடனே அதனை அவருக்குக் கொடுப்பேன்.  வேறு எதையாவது விரும்புகிறாரோ, அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.  எனக்கு ஒன்று மட்டுமே போதும்: அது எனது கணக்கற்ற பாவங்களுக்காகவும், கூடுமானால் அகில உலகினுடைய பாவங்களுக்கும் கூட பரிகாரம் செய்ய, நான் சேசுவினுடைய பலிப் பொருளாகவே விரும்புகிறேன்..." - அர்ச். ஜெம்மா கால்கானி.

இளவயதிலேயே தேவ ஐக்கியம்!

அர்ச். ஜெம்மா கால்கானி 1878 மார்ச் 12-ம் நாளன்று இத்தாலியில், லூக்கா நகருக்கு அருகேயுள்ள கமிலியானோ என்ற கிராமத்தில் பிறந்தாள். தந்தை என்ரிக்கோ கால்கானி ஒரு மருந்து வியாபாரி. தாய் அவ்ரேலியா.  பிறந்த எட்டுப் பிள்ளைகளில் ஜெம்மா முதல் பெண் குழந்தையாகப் பிறந்தாள்.  அவளது ஞானஸ்நானத்தின்போது, "இரத்தினம்" என்று பொருள் கொள்ளும் ஜெம்மா என்ற பெயர் சூட்டப்பட்டாள்.

குடும்பம் லூக்கா நகருக்கு இடம் பெயர்ந்தது.  அவளது தாய் சிறு வயதிலேயே ஜெம்மாவுக்கு தேவ விசுவாசத்தையும், சிநேகத் தையும் ஊட்டி வளர்த்தாள். லூக்கா தேவாலயத் தில் பழங்காலத்தைய புதுமையான பாடுபட்ட சிலுவை வணங்கப்பட்டு வந்தது. குழந்தை ஜெம் மாவை அவளது தாய் அடிக்கடி அச்சுரூபத்திற்கு முன்பாக முழந்தாளிட்டு ஜெபிக்கும்படி அழைத்துச் செல்வாள். நமதாண்டவரின் பாடுகளை உருக்கமாக அவளுக்கு எடுத்துக் கூறி, "பார்த்தாயா, ஜெம்மா!  நம் ஆண்டவர் உன் மீது கொண்டுள்ள அன்பை! பார் ஜெம்மா!  நம் சேசு ஆண்டவர் நமக்காக உயிர் விட்டதை" என்று பச்சாத்தாபம் காட்டி, குழந்தையின் பிஞ்சு உள் ளத்தில் சேசுவின் மீதான அன்பை ஊட்டினாள். இதனால் சிறு வயதிலேயே தனிமையில் ஜெபிப் பதில் ஜெம்மா ஆர்வம் கொண்டாள்.

1887 ஜூன் 17-ம் நாள் ஜெம்மா புது நன்மை பெற்றாள். அதுபற்றி பின்னாளில் குறிப்பிடும்போது "... சேசு எனது ஆன்மாவின் ஆழத்தில் தம்மையே பதித்தார்.  அந்தக் கணத்திலேயே உலகத்தைப் போலல்லாமல் மோட்சம் எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்தது என்பதை உணர்ந்தேன்.  என் கடவுளோடு என்றென்றும் ஐக்கியம் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆவலால் ஆட்கொள்ளப்பட்டேன்" என்று எழுதுகிறாள்.

சிலுவையில் அறையுண்டிருக்கும் சேசுவுக்காக மட்டுமே வாழ்வதாக அவள் உறுதி செய்து கொண்டாள்.

பலியாகும் ஆன்மாவாகத் தேர்வு

1899-ம் ஆண்டின் பரிசுத்த வாரம் ஜெம்மாவைப் பொறுத்தவரை மிகவும் மறக்க முடியாததாக அமைந்தது.  ஆம்! மிகப் பெரிய வரப்பிரசாதம் தனக்குச் சர்வேசுரனால் அருளப் படவிருப்பதை உணர்ந்துகொண்ட ஜெம்மா, அதற்காகத் தன்னையே தயாரித்து வந்தாள்.  ஆண்டவருடைய திருப்பாடுகளின்மீது தனி பக்தியைக் காட்ட விரும்பி, வியாழனன்று திருமணி ஆராதனை செய்ய ஆன்ம குருவிடம் உத்தரவு பெற்றாள். இதுபற்றி அவள், "அது பெரிய வியாழக்கிழமை. திடீரென்று என் பாவங்களுக்காக என்னிடம் உள்ளரங்கமான துயரம் எழுந்தது. இதுமாதிரி இதுவரை வந்ததில்லை.  என் வேதனையில் நான் மரித்து விடுவது போலத் தோன்றியது.  எனது அறிவு, என் பாவங்கள் கடவுளை எந்த அளவுக்கு வேதனைப்படுத்து கின்றன என்பதை ஆழ்ந்த விதமாய்ப் புரிந்து கொண்டது!... அப்போது நமதாண்டவர் உடல் முழுவதும் இரத்தம் தோய்ந்த நிலையில் நிற்கக் கண்டேன்.  அவர், "பார் மகளே, இந்தக் காயங்களெல்லாம் உன்னுடைய பாவங்களால்தான் உண்டாயின.  ஆனால் நீ பட்ட துயரத்தால் - வேதனையால் இந்தக் காயங்கள் எல்லாம் மறைந்து விட்டன என்பதை நினைத்து ஆறுதல் அடைவாயாக. இனி பாவம் செய்யாதே.  நான் உன் மீது அன்பு செலுத்துவது போல நீயும் என் மீது அன்பு செலுத்துவாயாக" என்று திரும்பத் திரும்பக் கூறினார்" என்று குறிப்பிடுகிறாள். இங்கு ஜெம்மாவை பலியாகும் ஆன்மாவாக சேசு கண்டுகொள்கிறார்.  எப்படியெனில் "என் காயங்களுக்கெல்லாம் உன் பாவங்களே காரணம்" என்ற ஆண்டவரின் வார்த்தைகள், அவரை அதிகமாக நேசிக்கும்படி ஜெம்மாவைத் தூண்டின. அவருக்கு ஆறுதல் தரவும், துன்புறவும் அவள் ஆர்வம் கொண்டாள். அதிகமாக தவ முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் கிளர்ந்தெழ, கிணற்றுப் பக்கத்தில் கிடந்த முரட்டுத் தாம்புக் கயிற்றை எடுத்து தன் உடலைச் சுற்றிக் கட்டிக் கொண்டு, அது ஏற்படுத்திய வேதனையை சேசுவின் அன்புக்காக ஒப்புக் கொடுத்தாள். இருப்பினும், தான் கன்னியர் மடம் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் அவள் மனதில் எழ, அந்தத் துன்பத்தையும் ஒப்புக்கொடுத்தாள்.  அப்போது சேசு அவளை நோக்கி, "அஞ்சாதே! நான் உனக்காகக் கல்வாரியில் காத்திருப்பேன்" என்று கூறினார்.

ஐந்து காய வரம்!

பரிசுத்த வாரம் கடந்து ஜூன் மாதம் சேசுவின் திரு இருதயத் திருநாள். முந்தின நாள் நமதாண்டவர் "கல்வாரியில் காத்திருப்பேன்" என்று கூறியபடி, தமது பாடுகளில் பங்கடைய தமது சின்ன மகள் ஜெம்மாவுக்கு பாக்கியம் அளித்தார்.

அர்ச். ஸித்தாவின் சகோதரி நடத்தி வந்த பள்ளியில் ஜெம்மா சேர்க்கப்பட்டாள். படிப்பில் சிறந்த அவள் எப்போதும் அமைதியாக, அடக்கமாக காணப்படுவாள்.  புன்னகை தவழும் அவளை கன்னியர்களும், ஆசிரியர்களும் பெரிதும் விரும்பினார்.

ஒரு முறை சபைத் தலைவி, ஜெம்மா இருந்த வகுப்பறையில் கடைசி தேவத் திரவிய அனுமானத்தைப் பெற மறுக்கும், சாகக் கிடந்த ஒரு மனிதர் மனந்திரும்ப ஜெபிக்குமாறு கேட்டாள்.  உடனே அனைவரும் அந்தக் கருத்துக்காக ஜெபித்தனர். ஜெபம் முடிந்து எழுந்த ஜெம்மா உடனே ஆசிரியையிடம் சென்று, அவள் காதுகளில், "அந்த வேண்டுதல் கிடைத்து விட்டது" என்று கூறினாள்!  அன்று மாலையே அவர் மனந்திரும்பிய தகவல் கிடைத்தது.

ஏழையான ஜெம்மா!

புத்திசாலி மாணவியாக ஜெம்மா திகழ்ந்தாலும், உடல் சுகவீனமடைந்ததால் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது.  தனது வாழ்நாளில் அவள் பலவிதமான சுகவீனத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தாள்.  இதற்கிடையில் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்தாததால் ஜெம்மாவின் தந்தை நொடித்துப் போனார்.  குடும்பம் வறுமையில் விழ, 1897-ல் அவர் மரணமடைந்தார்.  வீட்டில் வறுமை.  19 வயதே நிரம்பிய ஜெம்மா, தனது சகோதர சகோதரிகளைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டிய நிலை வந்தது.  தனது வறுமையை மிகவும் இயல்பாக ஏற்றுக் கொண்ட ஜெம்மா, தன்னை "ஏழைப் பெண்" என்றே அழைத்துக் கொள்வாள்.  நெருங்கிய உறவினர்கள் உதவினர். திருமண ஏற்பாட்டை மறுத்து, தன்னை முழுவதும் நமதாண்டவருக்கு அர்ப்பணித்து, அமைதியில், மறைந்த வாழ்வு வாழ ஜெம்மா விரும்பினாள்.  இதற்கிடையில் இனந்தெரியாத நோயால் பீடிக்கப்பட்டு, உடல் செயலிழந்து போனாள். தனது நோயினால் ஏற்பட்ட துன்பத்தை ஆண்டவரின் அன்புக்காக ஏற்றுக் கொண்ட ஜெம்மா பாடுகளின் சபைத் துறவி, அர்ச். வியாகுல மாதாவின் காபிரியேலின் பரிந்துரையால் அற்புதமாகக் குணமடைந்தாள்.  பாடுகளின் சபையில் கன்னியராக உட்பட ஆசித்த ஜெம்மாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. தினமும் ஆலயத்திற்குச் சென்று, வீட்டில் வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் ஜெபத் தியானத்தில் ஈடுபடுவாள்.  ஆன்ம குருவின் அனுமதியோடு தன்னை முழுவதும் சேசுவுக்கு அர்ப்பணித்து, கற்பு என்ற வார்த்தைப்பாடு கொடுத்தாள்.

இதற்கிடையில் அவளது குடும்பத்தில் நிலவி வந்த சூழ்நிலை ஜெம்மாவின் ஞான வாழ்வுக்கு உகந்ததாக இல்லாததை உணர்ந்த ஆன்ம குரு, பக்தியுள்ள ஜியான்னீனி என்ற பெண்மணியின் இல்லத்தில் வாழ அனுமதித்தார்.  அவளும் ஜெம்மாவை தனது மகளாகத் தத்தெடுத்துக் கொண்டாள். அங்கே வீட்டு வேலைகளில் உதவி செய்த ஜெம்மா, தனிமையில் ஜெபத் தியானங்களில் ஈடுபட முடிந்தது. அங்கே அந்த வீட்டில் இருந்த போதுதான், அநேக அசாதாரணமான வரங்களையும், பரவச நிலைகளையும் ஜெம்மா பெற்றுக் கொண்டாள்.

பலி நிறைவேறியது!

எப்படியாவது கன்னியர் மடத்தில் சேர வேண்டும், குறிப்பாக திருப்பாடுகளின் சபையில் உட்பட வேண்டும் என்ற ஜெம்மாவின் ஆவல் கடைசி வரையிலும் நிறைவேறாமல் போய்விட்டது.  அவளது வாழ்வின் கடைசி மூன்று வருடங்கள் அவளது பலியாகும் ஆன்ம வாழ்வின் உச்சக்கட்டம் போன்றது எனலாம்.  இதுபற்றி அவள் எழுதுகையில், "...பத்து நாட்களுக்கு முன் திவ்விய நற்கருணை உட் கொண்டு ஆண்டவரின் மிக நெருங்கிய ஐக்கியத்தில் இருந்த போது, அவர் "மகளே, என் மீது உனக்கு உண்மையாகவே அன்பு உண்டா!  அதிக அன்பு உண்டா!!" என்று கேட்டார்.  என் இதயத் துடிப்பே அந்தக் கேள்விக்குப் பதிலாக அமைந்தது.  பின்னர் சேசு உலகம் எவ்வளவு பாவத்தால் நிறைந்துள்ளது, எப்பக்கமும் நன்றிகெட்டதனமே!  பாவம் செய்பவர்கள் பிடிவாதமாகத் தங்கள் பாவ வாழ்க்கையிலேயே அமிழ்ந்து கிடக்கின்றனர்!... என் குருக்களைப் பற்றி என்ன சொல்வேன்?... நான் படைத்த மனிதர்களிடமிருந்து நான் பெறுவதல்லாம் நன்றியின்மையே!" என்று உலகின் அக்கிரமங்களைச் சொல்லிக் கொண்டே போனார்... "எனக்கு ஆறுதல் தரக்கூடிய ஆன்மாக்களைத் தேடுகிறேன்.  என் தந்தையின் கோபத்தைத் தணிக்க தங்களையே பலியாக்கும் ஆன்மாக்கள் தேவைப்படுகிறார்கள். இந்த விஷயத்தைப் பற்றி - எனது விருப்பத்தைப் பற்றி பாப்பானவரிடம் கூறுமாறு உன் ஆன்ம குருவுக்கு உடனே கடிதம் எழுது.  கொடியதொரு தண்டனை உலகின் மேல் விழப் போகிறது என்று எழுதச் சொல்.  பலி ஆன்மாக்கள் தேவை என்றும் சொல்..." என்றார் சேசு" என்று குறிப்பிடுகிறாள்.  இதன் மூலம் பலியாகும் ஆன்மாக்கள் தேவைப் படுகிறார்கள் என்ற உண்மை அவருக்கு வெளிப் படுத்தப்பட்டது.

ஜெம்மாவின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன.  

அவளைப் பீடித்திருந்த நோயினால் ஏற்பட்ட வேதனைகள், சாத்தானின் தொல்லைகள், பிறரால் கிடைத்த ஏளனப் பேச்சுகள், கடின உபவாசங்கள் முதலியவைகள் அவளைப் பாதித்தாலும், நற்சுகம் உள்ளவளாகவே காணப் பட்டாள்.

அன்று நடந்தவற்றை எழுதுகையில் ஜெம்மா, "உலகின் பாவங்களுக்காக மிகுந்த வருத்தமடைந்தேன்.  அதே நேரத்தில் கடவு ளுக்கு விரோதமாகச் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தும் நினைவில் வர, அது மீட்பரை எந்த அளவுக்கு துன்ப வேதனைக்குட்படுத்தியது என்பதை உணர்ந்தேன்.  அவற்றை வெறுத் ததோடு, பரிகாரமாக எந்த வேதனையையும் தாங்கிக் கொள்ளத் தூண்டப்பட்டேன்.

இந்த உணர்வுகளுக்குப் பின் நான் பரவசமானேன்.  தேவ அன்னையையும், எனது காவல் தூதரையும் கண்டேன். தேவதாய் தனது மேலாடையை விரித்து, அதனுள் என்னை அணைத்துக் கொண்டார்கள். அந்த நொடியில் சேசு தம் காயங்களோடு காட்சியளித்தார்.  இப் போது அக்காயங்கள் இரத்தம் சிந்துபவையாக அல்லாமல் நெருப்புச் சுவாலையை வீசுவதாகக் கண்டேன். எதிர்பாராத விதமாய் அந்தச் சுவாலைகள் என் கைகளையும், பாதங்களையும், நெஞ்சையும் தொட்டன.  உயிரே போவது போல் இருந்தது.  மரணம் அடைந்தது போல தரையில் சாய்ந்திருப்பேன்.  ஆனால் அன்புள்ள மோட்ச அன்னை என்னைத் தாங்கிக் கொண் டார்கள். இவையயல்லாம் நிகழ்ந்த போது, நான் தேவதாயின் போர்வையின் அரவணைப் பில் இருந்தேன்.  இந்த நிலை சில மணி நேரம் நீடித்தது.  என் வானக அன்னை என் நெற்றியில் முத்தமிட்டார்கள்.  அதன்பின் எல்லாம் மறைந்தது. தரையில் நான் முழங்காலிட்டவளாக இருந்தேன்.  வலி ஏற்பட்ட பகுதிகளிலிருந்து இரத்தம் வழிந்தோடுவதைப் பார்த்தேன்.  அவற்றை இயன்ற வரை துணியால் முடி மறைத்தபின், என் காவல் தூதரின் துணையோடு படுக்கைக்குச் சென்றேன்... மறுநாள் திரு இருதயத் திருநாள், வெள்ளிக்கிழமை பிற் பகல் 3 மணி வரை இந்த வலி நீடித்தது" என்று குறிப்பிடுகிறாள்.

ஜெம்மாவின் இந்தக் காயங்கள் ஒவ்வொரு வியாழனன்றும் வழக்கமான திருமணி ஆராதனையின்போது வெளிப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணி வரை அப்படியே இருக்கும்.  ஞாயிறு வருவதற்குள் காயங்கள் மறைந்து அவை இருந்த இடத்தில் சிறு தழும்புகள் மட்டுமே காணப்படும்.

அவளது வாழ்வின் இறுதிப் பகுதியில் ஜெம்மாவின் ஆன்ம குருவின் ஆலோசனைப்படி காயங்கள் வெளிப்படையாகக் காணப்படாமலிருக்க அவள் ஆண்டவரிடம் மன்றாடிப் பெற்றுக் கொண்டாள்.  ஆனால் காயங்களால் ஏற்படும் வலியும், வேதனைகளும் அவளது மரணம் வரையில் நீடித்து அவளை அலைக்கழித்தன.  இரவெல்லாம் தூக்கமின்றி துன்புறம் நேரத்தில் மனத்தாலும் அன்பாலும் தான் கல்வாரியில் இருப்பதாக நினைத்து ஜெபிப்பாள்.  ஒரு முறை அவள் படும் வேதனையைக் கண்ட சிலர் பரிதாப்பட்டு, "பாவம், என்ன செய்வாள், அவளால் தாங்க முடியவில்லை" என்று கூறினர்.  உடனே ஜெம்மா, "இல்லை, இல்லை, இன்னும் சிறிது தாங்க முடியும்.  ஆண்டவரின் மீதுள்ள அன்பின் பொருட்டு நிச்சயமாக முடியும்" என்றாள்.

வேறொரு சமயம், ஜெம்மாவைப் பார்க்க வந்த ஒருவர் அவளிடம், "ஜெம்மா, உடனே இறந்து ஆண்டவரிடம் போவது, அல்லது அவரது மகிமைக்காக இங்கேயே இருந்து இன்னும் வேதனைப்படுவது ஆகியவை உன் கையிலிருந்தால், நீ எதைத் தேர்ந்து கொள்வாய்?" என்று கேட்டார். அதற்கு அவள் உடனே, "அவருடைய மகிமைக்காக வேதனைப்படுவதே மேல்" என்று பதிலளித்தாள்.

1903-ம் ஆண்டு பரிசுத்த வாரம் ஜெம்மாவிற்கு துன்ப நாட்களாகவே அமைந்தது. பெரிய சனிக்கிழமை பிற்பகலில் சுவரில் இருந்த மாதா சுரூபத்தை ஏறெடுத்துப் பார்த்து, "அம்மா" என்று ஆசையோடு அழைத்து, "என் ஆன்மாவை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என்னிடம் இரக்கம் காட்டுமாறு மகனிடம் சொல்லும்" என்று வேண்டியவள், "சேசுவே, என் ஆன்மாவை உம் கையில் ஒப்படைக்கிறேன்" என்று கூறினாள். அவையே அவளது கடைசி வார்த்தைகள்.  முகத்தில் ஒரு தெய்விகப் புன்சிரிப்பு தவழ, பாக்கியமாக மரணமடைந்தாள்.  அப்போது பிற்பகல் ஒரு மணி, அன்று 1903, ஏப்ரல் 11-ம் தேதி.

Catholic Saints Quotes in Tamil

கடவுளையும் உலகத்தையும் ஒரே சமயத்தில் பிரியப்படுத்த உன்னால் முடியாது.உலகை நேசிப்பவர் தங்கள் சிந்தனைகளிலும், தங்கள் ஆசைகளிலும், தங்கள் செயல்பாடுகளிலும் ஒருவருக் கொருவர் முற்றிலும் கடவுளுக்கு எதிரானவர்கள். 

அர்ச். ஜான் மரிய வியான்னி

Catholic Saints Quotes - St. Jermanus

"மூச்சு விடுவது ஒரு உடல் சாகவில்லை என்பதற்கு நிச்சயமான அடையாளமாக இருக்கிறதோ, அதேபோல் அன்னை மாமரியை அடிக்கடி நினைப்பதும், அன்புடன் மன்றாடுவதும் ஒரு ஆன்மா பாவத்தால் சாகவில்லை என்பதற்கு உறுதியான அடையாளமாக இருக்கிறது" 

-அர்ச். ஜெர்மானுஸ்.

வியாழன், 23 மே, 2024

சேசுவின் பாலத்துவத்தின் அர்ச்சியசிஷ்டவர் அர்ச்.சூசையப்பர்

 சேசுவின் பாலத்துவத்தின் அர்ச்சியசிஷ்டவர் அர்ச்.சூசையப்பர்.

 பரலோகப் பிதாவினால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்டவரும். நமது மனுஷீகத்தைப் பூண்டு கொண்டவருமான தேவசுதனை நம் கண்முன் ரூபிகரித்து ஆராதிப்போம். இவர் மனுஷாவதாரம் பண்ணினாரே, இப்பரம இரகசியத்துக்கும் அர்ச். சூசையப்பருக்கும் உள்ள சம்மந்தத்தைக் கண்டுபிடிக்க பிரயாசைப் படுவோம். இதற்கு இரண்டு காரியங்களை நாம் கண்டுணர வேண்டும். முதலாவது இப்பரம இரகசியம் நிறைவேறுவதற்கு அவர் செய்த உதவி என்ன? இரண்டாவது: அவ்வுதவியை அவர் எப்படிச் செய்தார்? 



 மனிதாவதாரம் நிறைவேற அர்ச். சூசையப்பர் செய்த உதவி : 

 மூன்று விதமாய் உதவினார். முதலாவது மனிதாரத்தின் பரம இரகசியத்தில் சூசையப்பருக்கு ஓர் பதவி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் சேசுவின் வளர்ப்புத் தந்தையாக மாத்திரம் இருந்தபடியால் அதில் அவர் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. மாமரி மாத்திரமே அதில் நேரடியாகச் சம்பந்தப் பட்டவர்கள். ஏனெனில் தேவதூதனிடம் அவர்கள் தாம் கடவுளின் தாயாவதற்கு சம்மதித்தபடியால், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவர் மாமரியின் உதரத்தைக் கொண்டு சேசுவின் பரிசுத்த மனுஷீகத்தை உருவாக்கினார். 

 இந்த பரம இரகசியம் நிறைவேற ஓர் நிபந்தனை நிறைவேற வேண்டியிருந்தது. அதற்கு அர்ச். சூசையப்பரின் உதவி தேவையா யிருந்தது. அதெப்படியெனில், இரட்சகரின் உற்பவமும் பிறப்பும் கற்புள்ளதாகவும், மரியாயின் கன்னிமை பழுதுபடாததாகவும் காப்பாற்றப் படவும் வேண்டியிருந்தது. இதற்காகத்தான் சூசையப்பர் மரியாயின் கள்ளிமையின் காவலனானார். இந்த தமது பதவியை அவர் மிகுந்த உத்தம விதமாய் நிறைவேற்றினார். விவாகத்துக்கு முன்னரும், பின்பும் மாமரியின் கன்னிமையை நிலைநாட்டபட்ட அந்தஸ்தாக மதித்து அதனைக் காக்கும் காவலனாகத் துலங்கினார். 

 பரிசுத்த மரியம்மாளை மணம் புரியும் போது, மனுஷாவதாரத்தின் பரம இரகசியம் நிறைவேறுவதற்கு இசைவான மனமும் குணமும் உடையவராய் இருந்தார். உண்மையாகவே அவருடைய கற்புள்ள விவாகம், இரட்சகர் இவ்வுலகிற்கு வருவதற்கு இறுதி ஆயத்தமாக இருந்தது. அர்ச் சூசையப்பரும் அதற்கு இசைவாகவே நடந்து கொண்டார். அவரது விரதத்துவம் மனுஷாவதாரத்துக்குத் தேவையான நிபந்தனையாக நித்திய காலமாய் சர்வேசுரனால் திட்டம் செய்யப்பட்டிருந்தது. அர்ச். சூசையப்பரின் கன்னிமை விவாகம் மாமரியாயின் கன்னிமைக்கும், அவர்களிடமிருந்து பிறக்கவேண்டிய திவ்விய சேசுவின் பரிசுத்தத்துக்கும் அவசியமான அனுசரனையாகக் குறிக்கப்பட்டிருந்தது. அர்ச்.அகுஸ்தீனார் கூறுவது போல், சூசையப்பர் தமது கன்னிமையினாலேயே சேசுவுக்குத் தந்தையானார். 

 இரண்டாவது : இரட்சகரின் மனுஷீகத்தை பராமரிப்பதற்கடுத்த பதவி அர்ச்.சூசையப்பருக்கு தரப்பட்டிருந்தது. இரட்சகரைக் காக்கவும், வளர்க்கவும், போஷிக்கவும் வேண்டிய கடமை அது திவ்ய பாலனுக்கு அளவற்ற ஞானமும், வல்லபமும் திரவியங்களுடைய பிதா பரலோத்தில் இருந்தார். அப்பிதா தமது ஞானத்தையும், தமது திருக்குமாரன் மட்டில் தனக்குள்ள சிநேகத்தையும் காண்பிப்பதற்காக இவ்வுலகில் அவரைப் போஷித்து ஆதரிக்க தமக்குப் பதிலாய் தந்தையாக சூசையப்பரை நியமித்தார். அர்ச் சூசையப்பரும் தமது கைவேலையால் தம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட மானிட தேவனை பராமரித்து காப்பற்றினார். ஏரோதனிடமிருந்து பாலனின் உயிரைக் காப்பாற்றி பாதுகாத்தார். சேசுமீது அயராத அன்பு நேசம் கொண்டு நாசரேத்தூருக்கு திரும்ப அழைத்துச் சென்று கரிசனையோடும் மிகுந்த பிரயாசையோடும் வளர்த்து காத்தார். இவ்விதமாய் வளர்க்கப் பட்டதால் நமது இரட்சகர் அர்ச். சூசையப்பருக்குக் கடனாளியாகி விட்டார் என்றே கூறலாம்.

மூன்றாவது: சேசுவின் மனுஷாவதாரத்தின் பரம இரகசியத்தின் மூலமாய் மனுமக்களுக்கு சர்வேசுரன் பொழிந்தருளும் உன்னத வரங்கள் விஷயமாகவும் அர்ச். சூசையப்பர் வகிக்கும் பதவி : என்னவெனில், சேசுவின் ஞான சரீரமாகிய திருச்சபையின் மட்டில் உறுப்பினர்களாகிய நமது பேரில் அர்ச், சூசையப்பருக்கு விசேஷ கவலை உண்டு. சேசுவை மிகுந்த கவனத்தோடும், கவலையோடும் அன்போடும் பாதுகத்து வளர்த்ததில் உள்ளார்ந்த காரணம் உள்ளது. அது, நமது இரட்சண்யம் ஒன்றுதான். நமது இரட்சண்யத்துக்குத் தேவையான வரங்களுக்கெல்லாம் ஊற்றாக இருப்பது சேசுவின் மனிதாவதாரம் தான். இந்த சத்தியம் தேவ தூதருடைய வார்த்தை களில் நன்கு விளங்குகிறது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். நீர் அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர், ஏனெனில் அவரே தமது ஜனத்தை அவர்களுடைய பாவங்களினின்று இரட்சிப்பார்" (மத் 1:21). ஆகையால், இரட்சகர் நிமித்தம் சூசையப்பருக்கு நியமிக்கப்பட்டி ருந்த ஸ்தானாதிபதி பதவி முடியவில்லை. இன்னமும் நடந்து கொண்டேயிருக்கிறது. ஏனெனில் சேசுவின் ஞான சரீரமாகிய (திருச்சபையின் மக்கள்) நமக்கு இரட்சண்யத்துக்கு அவசியமான வரங்களெல்லாம் அவர்தான் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

எனவே, நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் பாலத்துவத்தை தியானித்து ஒவ்வொரு நாளும் மகிழ்ந்து கொண்டாடும் நாம் அதனோடு இணைந்து நமது இரட்சண்யத்துக்கு உதவிய, இன்றும் உதவிக் கொண்டிருக்கும் நமது நேச தந்தை அர்ச், சூசையப்பரை நன்றியோடு சங்கித்து நம்மை அவரது அடைக்கலத்தில் வைப்போமாக!

புதன், 22 மே, 2024

Catholic Saints Quotes in Tamil

"அருளிலும், நல்லொழுக்கத்திலும் மிகுந்த செல்வந்தர்களான மிகப்பெரிய புனிதர்கள், தேவமாதாவிடம் பிரார்த்தனை செய்வதில் விடாமுயற்சியுடன் இருப்பார்கள், மேலும் தேவமாதாவை பின்பற்றுவதில் சரியான மாதிரியாகவும், அவர்களுக்கு உதவுவதில் சக்திவாய்ந்த உதவியாளராகவும் இருப்பார்கள்." 

-அர்ச். லூயிஸ் மான்ட்ஃபோர்ட்




செவ்வாய், 21 மே, 2024

அர்ச். பொபோலா பெலவேந்திரர் (St. Andrew Bobola) May 21

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

🇻🇦மே  2️⃣1️⃣ம் தேதி

🌹வேதசாட்சியான அர்ச். பொபோலா பெலவேந்திரர் திருநாள்🌹



🌹இவர் போலந்து நாட்டின் பாரம்பரியமானதும் பிரசத்திபெற்றதுமான ஒரு குடும்பத்தில்,1590ம் வருடம் சான்டோமிர் என்ற பிரபுவின் அதிகாரத்திலுள்ள ஒரு இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் எப்போதும், சேசுசபைத் துறவியருக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களைப் பாராமரித்துக் காப்பாற்றி வந்தது; அவர்களுக்கு மிக தாராளமாக உதவி செய்து வந்தது;  வருங்கால வேதசாட்சியான அர்ச்.பெலவேந்திரரிடம், சர்வேசுரன் இவருடைய குடும்பத்தையும், சேசுசபையினரையும் ஆசீர்வதித்தார்; இவர் சேசு சபையினருக்கும், தன் குடும்பத்தினருக்கும் மாபெரும் மகிமையைக் கொண்டு வருவார்! இவர் சேசு சபையில்  1611ம் வருடம் சேர்ந்தார்.

ஆடம்பரமாக சேசு சபையில் இவர் வார்த்தைப்பாடு கொடுத்தபிறகு, 1630ம் வருடம் , ஜுன் மாதம் 2ம் தேதி, போப்ருய்ஸ்க் என்ற நகரிலிருந்த சேசு சபை மடத்தற்கு அதிபரானார். அங்கு இவர் தனது சிறந்த ஞானப்பிரசங்கங்களாலும், கொள்ளை நோய் காலத்தில், தன்னிகரற்ற விதமாக இவர் தன்னையே அர்ப்பணித்து, ஆற்றிய  பிறர்சிநேக அலுவல்களாலும் அநேக புதுமைகள் நிகழ்த்தினார்.

இவர் 1636ம் வருடம் தனது அதிபர் பதவியை இராஜினாமா செய்து விட்டு, இவர் ஏற்கனவே சுவிசேஷத்தை போதித்து வந்த லிதுவேனியா நாடெங்கிலும் நடந்து சென்று, வேதபோதகப் பிரசங்கங்கள் நிகழ்த்தத் தீர்மானித்தார்; அண்டை நாடுகளான லிதுவேனியா, போலந்து நாடுகள், அச்சமயம்,  ரஷ்யர்களாலும், கோஸ்ஸாக் மற்றும் தார்தாரிய  இனத்தவர்களாலும் படையெடுக்கப்பட்டு  சூறையாடப்பட்டன!  இவர்களுடைய படையெடுப்பின் ஆக்கிரமிப்புகளால், இந்நாடுகளிலிருந்த மக்களும் சேசுசபைத் துறவியரும்  மிகவும் துன்புற்றனர்;  ஏனெனில், இந்த இனத்தினர், சேசு சபையினரை மிகவும் வெறுத்தனர்; ஏனெனில், இவர்கள் பிரிவினை திருச்சபையில் இருந்ததால், கத்தோலிக்க வேதத்தை வெறுத்தனர்;  பெலவேந்திரர் சுவாமியார், அவதியுற்ற மக்களை உற்சாகப்படுத்தி, வேத விசுவாசத்தில் திடப்படுத்தினார்; மேலும், இந்நாடுகளுக்கு உள்ளே நுழைகிற வேத விசுவாசத்திற்கு எதிரான பதிதத் தப்பறைகளையும் பிரிவினரையும், எதிர்ப்பதிலும் அவற்றை விரட்டியடிப்பதிலும், இவர் இந்நாடுகளிலுள்ள மக்களுக்கு  உதவி செய்தார்! 

இவர் அயராமல், சத்திய வேதத்தைப் பற்றி நிகழ்த்திய வேதபோதகப் பிரசங்கங்கள், அநேக பிரிவினை திருச்சபையிலிருந்தவர்கள்,  சத்திய வேதத்தில் சேர்வதற்குக் காரணமாயின! இந்த வெற்றியைச் சகிக்கக் கூடாத பிரிவினைக் காரர்களின் தலைவர்கள்,  இவர் மேல் சீற்றமடைந்தனர்! கிரேக்க பிரிவினைத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள், இவர் வாழ்ந்த போலந்து மற்றும் அதைச் சுற்றியிருக்கும் போலேசியா பிராந்தியத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.

இப்பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு உயர்குடி கத்தோலிக்கர்,  பின்ஸ்க் என்ற நகரில் சேசு சபை குருக்கள் தங்குவதற்கு ஒரு வீட்டைக் கொடுத்தார்;  இந்த வீட்டில் தான் அர்ச்.பெலவேந்திரர் சுவாமியாரும், தங்கியிருந்தார்.   இவர் ஆற்றிய அப்போஸ்தல அலுவல்களுக்கெல்லாம், பிரிவினைக்காரர்கள் எல்லா விதங்களிலும், தடங்கல்கள் கொடுத்து, இவர் எந்த அப்போஸ்தல அலுவலையும், கடமையையும், நிறைவேற்ற விடாமலிருப்பதற்கு மாபெரும் முயற்சி செய்தனர்! சில சமயங்களில், இவரையே சரீர ரீதியாக, தாக்கவும் முற்பட்டனர்! 

1657ம் வருடம்,  மே மாதம் 16ம் தேதியன்று, கோஸ்ஸாக் இனத்தவர்கள் இரண்டுபேர்,  இவரைப் பிடித்து மிக மூர்க்கமாகவும் கடுமையாகவும் அடித்தனர். பின் குதிரை சேணத்தில் இவரைக் கட்டி, இழுத்துச் சென்றனர். ஜேனோவ் நகர் வரை, இவர் குதிரைச் சேணங்களில் கட்டப்பட்டபடி தரையிலே ,  இழுத்துச்     செல்லப்பட்டார்; மிகக் கொடூரமான உபத்திரவத்தை அனுபவித்தார்! அந்நகரில், அவர் மிகக் கொடூரமாக நம்பமுடியாத உபத்திரவங்களால், சித்திரவதைச் செய்யப்பட்டார்; முதலில் நெருப்பினால் எரிக்கப்பட்ட இவர், உடல் திருகப்பட்டு, பாதி உடல் தோலுரிக்கப்பட்டார்; இறுதியில் கத்தியால் வெட்டப்பட்டு மரித்தார்; மகிமை மிக்க வேத சாட்சிய முடியை அடைந்தார்! கத்தோலிக்கர்கள், இவருடைய பரிசுத்த சரீரத்தை பின்ஸ்கிலுள்ள சேசு சபைக் கல்லூரியில் அடக்கம் செய்தனர்.

45 வருடங்களுக்குப் பிறகு,  ஒரு புதுமையினால், காணாமல் போயிருந்த இவருடைய கல்லறையை, சேசுசபை குருக்களுக்கு வெளிப்படுத்த சர்வேசுரன் சித்தமானார்;  இப்பிராந்தியத்தில் சேசு சபைக்குருக்கள், கடந்தகாலத்தில் நிகழ்ந்த போர்களால் ஏற்பட்ட தீமைகளால் தங்களுடைய வேதபோதக அலுவல்கள்  அழிக்கப்பட்டதைக் கண்டார்கள்!  அந்நகரின் சேசு சபைக் கல்லூரியின் அதிபர் சுவாமியாருக்கு, இவர் காட்சியளித்து,  சேசுசபை மாணவர்களையும், தனது சக சேசு சபைத் துறவியரையும், பிரிவினைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு தான் ஆசிப்பதாகவும் கூறினார்; பின், தனது கல்லறை இருக்கிற இடத்தைக் காண்பித்தார். அதன்படி, இவருடைய கல்லறை , மறுபடியும்,கண்டெடுக்கப்பட்டது;  கல்லறையினுள் இவருடைய பரிசுத்த சரீரம் திருகப்பட்ட நிலையிலேயே,  அழியாத சரீரமாக புதுமையாகக் காணப்பட்டது! கல்லறையிலிருந்து பரலோக நறுமணம்  வீசியது! இவருக்கு, 9ம் பத்திநாதர் பாப்பரசரால், 1853ம் வருடம் முத்திப்பேறு பட்டமளிக்கப்பட்டது; 11ம் பத்திநாதர் பாப்பரசர் இவருக்கு ஏப்ரல் மாதம் , 1938ம் வருடம்  அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது!🌹✝

🌹அர்ச். பொபோலா பெலவேந்திரரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


🇻🇦

May 2️⃣0️⃣


Feast 🌟

⭐Feast:🌹Saint Andrew Bobola, Martyr🌹

May 2️⃣1️⃣


🌹Today is the feast day of Saint Andrew Bobola.  

Ora pro nobis.🌹

🌹Saint Andrew was born of an old and illustrious Polish family, in the Palatinate of Sandomir, 1590. His family had always protected the Jesuits and shown itself very liberal towards them. God blessed both the family and the Jesuits in this future martyr, who would bring both of them great glory. He entered that Order in 1611.

After making his solemn vows, 2 June, 1630, he was made superior at Bobruisk, where he wrought wonders by his preaching and distinguished himself by his devotion during an epidemic of the plague.

Fr Bobola in 1636 resigned his post as Superior to preach for twenty-one years along all the roads of Lithuania, which he was evangelizing. Poland and Lithuania, its neighbor, were being ravaged in those days by the Cossacks, Russians and Tartars, and the Jesuits suffered much from these invaders, who did not like them and their religion. The people were enduring great misery; Father Andrew sustained their courage and helped to combat the invading religious errors.

Fr. Bobola’s success in converting schismatics drew upon him the rage of those in high authority, and the adherents of the Greek Pope decided to centralize their forces in Polesia.

A Catholic nobleman of this province offered the Jesuits a house at Pinsk, and here Father Bobola was stationed. The schismatics vainly endeavoured in every manner to hinder him in the exercise of his apostolic duties, extending their persecutions to attacks upon his person. On 16 May, 1657, he was seized by two Cossacks and severely beaten. Then tying him to their saddles, they dragged him to Janów where he was subjected to incredible tortures. After having been burned, half strangled, and partly flayed alive, he was released from suffering by a sabre stroke. He was buried by the Catholics at the Jesuit College at Pinsk.

Forty-five years later, by a miracle, God revealed the whereabouts of his forgotten tomb to the Jesuit Fathers, who had seen the continuing evils of war ruin many of their works. His tombstone, then buried underground, was found after the Saint appeared twice in vision to the Rector of the College, saying he wished to protect his brethren and the students, and indicating to him the location of his grave. His mutilated body was incorrupt, and a fine fragrance came from the open tomb. Saint Andrew was beatified by Pope Pius IX in 1853, and canonized in April of 1938 by Pope Pius XI.🌹✝


🔵



அர்ச். ஹாஸ்பிசியுஸ் (ST. HOSPITIUS) May 21

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 

🇻🇦மே  2️⃣1️⃣ம் தேதி

🌹ஸ்துதியரான அர்ச். ஹாஸ்பிசியுஸ் திருநாள்🌹





🌹இவர் 6ம் நூற்றாண்டில் எகிப்தில் ஏகாந்தத்தில் ஜீவித்து வந்த ஒரு துறவியாவார்; அங்கிருந்து, பிரான்சிலுள்ள காவ்ல் என்கிற பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றார். அங்கே வில்லஃபிராங்கா என்ற இடத்திலிருந்த ஒரு பாழடைந்த கோட்டையில் தங்கி தனிமையில் ஜெப தப தியான ஜீவியத்தில் மூழ்கியிருந்தார்!  பிரான்சின் தென்கிழக்கில் உள்ள ஃபெர்ராட் முனை தீபகற்பத்திலிருக்கும் நிசே நகரத்திலிருந்து மூன்று கல் தொலைவில் இந்த கோட்டை இருந்தது! இடுப்பில் மிகக் கனமான இரும்பு சங்கிலியால் கட்டியிருந்தார்; ரொட்டியையும் , பேரீச்சைப் பழங்களையும் மட்டுமே உண்டு வந்தார்; மிகக் கடினமான தபசை அனுசரித்தார்; தபசு காலத்தில் தபசை இரட்டிப்பாக அதிகரித்தார்; எகிப்தில் வசித்த தபோதனர்கள் அனுசரித்த மிக மிகக் கடினமான தபசுநிறைந்த ஜீவியத்திற்கு இணையாக தனது தபசின் ஜீவியம் கடின ஒறுத்தல் பரித்தியாகங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில், இவர் எப்போதும் விழிப்புடனும் கவனத்துடனும் இருந்தார்! தபசு காலத்தில், எதையும் உண்ணாமல், காட்டுச்செடி வேர்களை மட்டுமே உண்டு வந்தார்;  இவர் அனுசரித்த மாபெரும் புண்ணியங்களுக்கு சம்பாவனையாக, பரலோகம், இவருக்கு புதுமை செய்யும் வரத்தையும், தீர்க்கதரிசன வரத்தையும் அளித்து, இவரை மகிமைப்படுத்தியது!  

சுற்றுபுறத்தில் ஜீவித்த மக்கள், அடிக்கடி இவரிடம்  வந்து, அவர்களை ஞான ஜீவியத்தில் வழிநடத்தும்படி , கேட்டுக்கொண்டனர்;  கிபி 575ம் வருடம், லொம்பார்டியர்கள் என்கிற காட்டுமிரான்டி இனத்தினர், காவ்ல் பகுதிக்குள் படையெடுத்து நுழைந்து, ஆக்கிரமிப்பார்கள், என்று இவர் அம்மக்களை முன்கூட்டியே அறிவித்து எச்சரித்தார்! லொம்பார்டியர்கள், அவ்வாறு படையெடுத்து வந்தபோது, அர்ச்.ஹாஸ்பிசியுஸ் தங்கியிருந்த கோட்டைக்குள் அப்படை வீரர்கள் வந்து , இவர் மிகக் கனமான சங்கிலிகளால் கட்டுண்டவராக தனிமையில் இருக்கிறதைக் கண்டு, இவர் மிகப்பெரிய ஒரு கொலைக் குற்றவாளி என்று கருதினர். அர்ச்.ஹாஸ்பிசியுசும், அவர்களிடம், தான் ஒரு மகா பயங்கரமான பாவி என்று ஒத்துக்கொண்டார். அதைக்கேட்டு பயந்த அந்த படைவீரர்களில் ஒருவன், அவரைக் கொல்வதற்காக ஒரு வாளை உயர்த்தினான்;  ஆனால், அவரைக் கொல்வதற்காக வாளை உயர்த்திய  அந்த வீரனுடைய கரமானது, பக்கவாதம் வந்து அசைவற்றுப்போனது!  அதைக் கண்டு அவன்மேல் இரங்கியவராக, அர்ச்.ஹாஸ்பிசியுஸ், அவனுடைய அந்த கரத்தின் மீது சிலுவை அடையாளம் வரைந்து ஆசிர்வதித்தார்; உடனே, புதுமையாக, அவனுடைய கரம் குணமடைந்து, செயல்படத்துவக்கியது! 

அந்த ஷண நேரத்திலே, அந்த படைவீரன் மனந்திரும்பினான்; எஞ்சிய தன் ஜீவிய காலமெல்லாம், துறவற மடத்தில் சேர்ந்து,சர்வேசுரனுக்கு ஊழியம் செய்தார்! மனந்திரும்பி துறவியாக மாறிய இவ்வீரரைப் பற்றி, அர்ச்.தூர்ஸ் நகர கிரகோரியார் தனிப்பட்ட விதத்தில் அன்னியோன்னியமாக அறிந்திருந்தார்! இத்துறவியின் மூலமாக அர்ச்.ஹாஸ்பிசியுஸ் பற்றி அறிந்தவற்றை, அர்ச்.கிரகோரியார் எழுதி வைத்ததாலேயே, நம்மால், அர்ச்.ஹாஸ்பிசியுஸ் அனுசரித்த மிகக் கடின தபசைப் பற்றியும், நிகழ்த்திய எண்ணற்ற புதுமைகள் பற்றியும் நம்மால் அறிந்து கொள்ளக் கூடுமாயிருக்கிறது! 

அர்ச்.ஹாஸ்பிசியுஸ் தனது மரண நேரத்தைப் பற்றி முன்னறிவித்தார்; அதன்பிரகாரம், ஃபெர்ராட் முனையில், 581ம் வருடம் மே 21ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்த இவரை, இவருடைய நண்பரும் மேற்றிராணியாருமான வந். அவுஸ்டாடியுஸ் ஆண்டகை பூஜிதமாய் அடக்கம் செய்தார்; ஃபெர்ராட் முனை என்கிற இந்த இடம் , இவருக்கு தோத்திரமாக செயிண்ட் ஹாஸ்பிஸ் என்று இவருடைய பெயராலேயே அழைக்கப்படுகிறது. நிசே மேற்றிராசனத்தில்,  செயிண்ட் ரிபரட்டா கதீட்ரல் தேவாலயத்தில், அர்ச்.ஹாஸ்பிசியுஸ் வணங்கப்படுகிறார்!  அங்கு இவருடைய பரிசுத்த எலும்பின் அருளிக்கம் பூஜிதமாக பொதுவணக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! இவருடைய மற்ற பரிசுத்த அருளிக்கங்கள் அப்பகுதியிலுள்ள மற்ற தேவாலயங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன!🌹✝

🌹அர்ச்.ஹாஸ்பிசியுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


🇻🇦

May 2️⃣1️⃣


Feast 🌟

ST. HOSPITIUS


Hospitius was a isolated monk in his native Egypt towards the beginning of the 6th century.

He immigrated to Gaul (France)  and retired to a dilapidated tower in Villafranca, one league from Nice situated on the peninsula of Cap Ferrat.

He girded himself with a heavy iron chain and lived on bread and dates only. During Lent he redoubled his austerities, and, in order to conform his life more closely to that of the anchorites of Egypt, ate nothing but roots. For his great virtues Heaven honored him with the gifts of prophecy and of miracles.

The people of the surrounding frequently came to ask for his guidance and he forewarned them on one occasion, about the year 575, of an impending invasion of Gaul by the barbarian tribe of the Lombards.

When the Lombards invaded Gaul, some soldiers came to the tower in which Hospitius was staying, finding Hospitius loaded with chains and living in isolation, thought he was some type of criminal; Hospitius agreed that he was a terrible sinner. Convinced he was a danger of some sort, one of the soldiers raised his sword to kill Hospitius, but the soldier‘s arm became paralyzed, and could move again only after Hospitius made the sign of the cross over it.

The soldier was converted on the spot, and spent the rest of his life in service to God by embracing the religious life, and was known personally to St. Gregory of Tours.

It was from him that St. Gregory, to whom we are indebted for the meagre details of the saint's life, learned of the austerities and numerous miracles of the recluse.

St Hospitius foretold his death and was buried by his friend, Austadius, Bishop of Cimiez.

Saint Hospitius died on 21 May, 581 at Cap Ferrat ( also called Cap Saint-Sospis or Cap Saint-Hospice), near Villefranche-sur-Mer, in the department of Alpes-Maritimes, France.

    🍁🍁🍁🍁🍁🍁🍁


St. Hospitius is still venerated in the Diocese of Nice at the Cathedral of Saint Reparata. The Cathedral Church possesses a small bone of his hand; other relics are kept in the churches of Villefranche-sur-Mer, La Turbie, and San-Sospis.




🔵






To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here




Saints Quotes in Tamil - St. John Nepomuk


அர்ச்.நெபுமுசேன் அருளப்பர் -  “புதுமைகளால் மின்னுகிற நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய மகிமைமிக்க வேதசாட்சி"

Saints Quotes in Tamil St. Pio

"அடிக்கடி ஜெபமாலை 5 ஜெபியுங்கள் அதற்கு நீங்கள் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைவுதான் ஆனால் அதன் வழியாக மிக ஏராளமான நன்மைகளை பெற்றுக் கொள்கிறீர்கள்"

 அர்ச் பாத்ரே பியோ

Saints Quotes in Tamil - St. Padre Pio

"சிலுவையின் அடியில் ஒருவன் அன்பு செய்யக் கற்றுக்கொள்கிறான்."

அர்ச். பாத்ரே பியோ

Catholic Quotes in Tamil - St. John Climaque

-"ஒரு மனிதன் கர்த்தரைக் கண்டுபிடித்துவிட்டால், அவன் ஜெபிக்கும்போது வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அவருக்காக உச்சரிக்க முடியாத பெருமூச்சுகளுடன் பரிந்து பேசுவார்."

திங்கள், 20 மே, 2024

Tamil Catholic Quotes - St. Bernardine of Siena

 நீ உன் எல்லா காரியங்களிலும், சர்வேசுரனுடைய இராஜ்யத்தையும், அவருடைய மகிமையையும் முதலில் தேடு!  உத்தம சகோதர சிநேகத்தி்ல் நீடித்து நிலைத்திரு! மற்றவர்களுக்கு உபதேசிக்க நீ ஆசிக்கிறதை யெல்லாம், முதலில், நீ அனுசரி! –  

✍🏻 அர்ச்.சியன்னா பெர்னர்தீன்


"In all your actions see in the first place the Kingdom of God and His glory; persevere in brotherly charity, and practise first all that you desire to teach others"

📖 ✍🏻

+ St. Bernardine of Siena


அர்ச். சியன்னா பெர்நர்தீன் - St. Bernardine of Siena (May 20)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 2️⃣0️⃣ம் தேதி


🌹நமதாண்டவரின் மகா பரிசுத்தத் திருநாமத்தின் மீதான பக்தியைப் பரப்பியவரும், வேதபாரகரும் ஸ்துதியருமான அர்ச். சியன்னா பெர்நர்தீன் திருநாள் 🌹



🌹பெர்னர்தீன், இத்தாலியிலுள்ள மாஸ்ஸா என்ற நகரில், ஆல்பிசெஸ்கி என்ற உயர்ந்த குடும்பத்தில் 1380ம் வருடம் பிறந்தார். இவர் ஆறு வயதில் தன் பெற்றோர்களை இழந்து அநாதையானார்; இவருடைய பக்தியுள்ள அத்தை இவரை ஒரு அர்ச்சிஷ்டவராக வளர்த்தார்.

1397ம் வருடம், சமூக மற்றும் திருச்சபை சட்டத்திற்கான பட்டப்படிப்பை முடித்த பிறகு,  சாந்தா மரியா ஸ்கேலா தேவாலய வளாகத்தின் மருத்துவமனையுடன் இணைந்து இயங்கி வந்த மகா பரிசுத்த தேவமாதாவின் பக்திசபையில் இவர் உறுப்பினராகச் சேர்ந்தார். 3 வருடங்களுக்குப் பிறகு, சியன்னா நகரை கொள்ளை நோய் தாக்கியபோது, இவர்  கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் இரவு பகலாக ஈடுபட்டார்; 12 உதவியாளர்களுடன் இப்பிறர்சிநேக அலுவலில் ஈடுபட்டார். அடுத்த நான்கு மாதங்களும், அந்த மருத்துவமனையின் முழு நிர்வாகப் பொறுப்பையும் இவர் ஏற்றுக் கொண்டார்.

    1403ம் வருடம் அர்ச்.பெர்னார்டின், அர்ச்.பிரான்சிஸ் அசிசியாரின் துறவற சபை விதிமுறைகளை கண்டிப்பாக அனுசரிக்கும் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்தார்;  1404ம் வருடம் குருப்பட்டம் பெற்றார்; அடுத்த வருடம், பிரசங்கியாராக ஏற்படுத்தப்பட்டார்.

 1406ம் வருடம், அர்ச்.சாமிநாதரின் போதகக் குருக்களின் துறவற சபையின் வேதபோதக அப்போஸ்தலரும், மாபெரும் அர்ச்சிஷ்டவருமான அர்ச். வின்சென்ட் ஃபெர்ரர், இத்தாலியிலுள்ள பியட்மோன்ட் பிராந்தியத்தில்  அலெஸ்ஸாண்டிரியா நகரில் பிரசங்கித்தபோது,  ஞான பிரசங்கங்கள் நிகழ்த்தும்படியான தன் அலுவலைத் தொடரும்படியாக, மறுபடியும் பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்குச் செல்லப்போவதாகவும், தனது அங்கியின் மேற்போர்வை கூட்டத்தில் யார்மேல் இறங்குமோ, அவர் தனது வேதபோதக அலுவலை இத்தாலியில் தொடர்ந்து நிறைவேற்றுவார் என்றும் வலியுத்தியபடி, முன்னுரைத்தார்! அதன்படி, அர்ச்.பெர்நர்தீன் மீது அர்ச். வின்சென்டின் மேற்போர்வை வந்து இறங்கியதால், அவரையே அவ்வலுவலுக்காகத் தேர்ந்தெடுத்தார்; தொடர்ந்து, இத்தாலி மக்களுக்கு சுவிசேஷத்தைப் போதிப்பதற்கான அலுவலை, அர்ச். வின்சென்ட், அர்ச். பெர்நர்தீனிடம்  ஒப்படைத்தார். 

30 வருடங்களுக்கும் மேலாக, அர்ச். பெர்னர்தீன், இத்தாலி நாடு முழுவதும் சுற்றித்திரிந்து பிரசங்கித்தார்; இக்காலத்தில் இவர் மாபெரும் பிரசங்கியார்களில் ஒருவராகத் திகழ்ந்தார்! இவர், எளிமையானதும், அன்னியோன்னியமானதும், கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் நிறைந்திருந்ததுமான மொழியினால், பிரசங்கம் செய்ததால், இவர் கூறிய தியானக்கருத்துக்களைக் கேட்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் திரளான மக்கள் கூட்டம், இவர் பிரசங்கித்த இடங்களுக்கெல்லாம் திரண்டு வந்து கூடியது! நகரங்களில் இவர் பிரசங்கித்தபோது வந்த திரளான கூட்ட மிகுதியின் காரணமாக  சந்தையில் இவருக்காக பிரத்தியேக பிரசங்க மேடை அமைக்க வேண்டியதாயிற்று!

  இவருடைய தியானப் பிரசங்கம் வழக்கமாக 3 அல்லது 4 மணி நேரம் வரை நீடிக்கும்!  நமதாண்டவருடைய மகா பரிசுத்தத் திருநாமத்தின் மீதான பக்தியை இவர் இத்தாலி முழுவதும் பரப்பினார். 1414ம் வருடம், இவர் ஃபெர்ராரா நகரத்திற்கு அழைக்கப்பட்டபோது, கூடுதலாக வீண் ஆடம்பர ஜீவியத்திற்கு எதிராகவும், நல்லொழுக்கத்திற்கு எதிரான அடக்க வொடுக்கமில்லாமல் ஆடை அணிவதற்கு எதிராகவும் கண்டித்துப் பிரசங்கம் செய்தார்! பொலோஞாவில், சூதாட்டத்திற்கு எதிராக அறிவுரை கூறிப் பிரசங்கம் செய்தார்; இது, அங்கிருந்த சீட்டுக் கட்டு உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகளை அதிருப்தியடையச் செய்தது! 1425ம் வருடம் இவர், சியன்னா நகருக்கு வந்து, அடுத்து வந்த  50 நாட்கள், ஒவ்வொரு நாளும் பிரசங்கம் செய்து  வந்தார்.

இவருடைய பிரசங்கங்கள் அடைந்த வெற்றி, குறிப்பிடத்தக்க வெற்றியாகும்: இவர் பிரசங்கிக்கும் சமயங்களில், “வீண் ஆடம்பரங்களின் நெருப்பு” என்று ஒரு இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும்; அந்த நெருப்புக்குள்  பிரசங்கத்தைக் கேட்கிற மக்கள், ஆடம்பர முகக் கண்ணாடிகள், உயர்குதிங்கால்-காலணிகள், வாசனை திரவியங்கள், சவரிமுடிகள், சீட்டுக்கட்டுகள், தாயக்கட்டைகள், சதுரங்க விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை அந்த வீ்ண் ஆடம்பர நெருப்பின் குழிக்குள் போட்டு எரிப்பார்கள்! அர்ச். சியன்னா பெர்னர்தீன்,  தேவதூஷணத்திலிருந்தும், அசுத்தமான ஒழுங்கீன உரையாடல்களிலிருந்தும், ஆபத்தான விளையாட்டு களிலிருந்தும் விலிகியிருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரையையும், பிரசங்கத்தின்போது, வலியுறுத்திக் கூறுவார்.

     40வருட காலம், இடைவிடாத அப்போஸ்தலத்துவ அலுவலுக்கான உழைப்பின் காரணமாக, அர்ச்.பெர்னர்தீன் மிகவும் களைப்புற்றவரானார்; பலவீனமடைந்தநிலையில், அக்விலா நகரில், இவர் காய்ச்சலினால், பீடிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் விழுந்தார்.  இங்கு, இவர்  வெறுந்தரையில் படுத்த நிலையில், 1444ம் வருடம், மே மாதம் 20ம் தேதியன்று, ஆண்டவருடைய மோட்சாரோகணத்திருநாளுக்கு முந்தின நாளன்று, “பிதாவே நான் உமது மகா பரிசுத்தத் திருநாமத்தை  மனிதர்களுக்கு வெளிப்படுத்தினேன்!  நான் மறுபடியும் உம்மிடம் திரும்பி வருகிறேன்” என்று சக துறவியர், இலத்தீனில் பாடுகிறபோது, பாக்கியமாய் மரித்தார்!

 அக்விலா நகர மாஜிஸ்திரேட்டுகள், இவருடைய பரிசுத்த சரீரத்தை, சியன்னா நகருக்குக் கொண்டு செல்வதற்கு மறுத்தனர்;

அந்நகர தேவாலயத்திலேயே, இதுவரை வரலாறு காணாத அளவு,  மிகவும் ஆடம்பரமாக அர்ச். சியன்னா பெர்னர்தீனுடைய பரிசுத்த சரீரம் அடக்கம் செய்யப்பட்டது.  இவருடைய கல்லறையில், புதுமைகள் அபரிமிதமாக நாளுக்கு நாள் பெருகியது! ஒரு சமயம், இந்நகரில் இருவேறு பிரிவினர்களுக்கு இடையே பகை ஏற்பட்டு, சமாதானம் அடைகிற வரைக்கும், புதுமையாக அர்ச்சிஷ்டவருடைய கல்லறையிலிருந்து, இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது! ஆறு வருடங்களுக்குப் பின்,  5ம் நிக்கோலாஸ் பாப்பரசர், இவருக்கு 1450ம் வருடம்  மே 24ம் தேதியன்று, அர்ச்சிஷ்டப் பட்டம் அளித்தார்!

1472ம் வருடம், அர்ச்.சியன்னா பெர்னர்தீனுடைய பரிசுத்த சரீரம், ஆடம்பரமாக, அக்விலா நகரில், அவர் சேர்ந்திருந்த கண்டிப்பான விதிமுறை அனுசரித்த பிரான்சிஸ்கன் துறவியரின் புதிய தேவாலயத்திற்கு, இடமாற்றம் செய்யப்பட்டது  அர்ச்.சியன்னா பெர்னர்தீனை அடக்கம் செய்து அதன்  மேல் அவருக்குத் தோத்திரமாக ஒரு  விலையுயர்ந்த ஷேத்திரத்திற்கான பீடத்தை ஸ்தாபிப்பதற்காகவே, பிரத்தியேகமாக பிரான்ஸ் நாட்டின் 11ம் லூயிஸ் அரசரால்  இப்புதிய தேவாலயம் கட்டிமுடிக்கப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது!🌹✝

🌹நீ உன் எல்லா காரியங்களிலும், சர்வேசுரனுடைய இராஜ்யத்தையும், அவருடைய மகிமையையும் முதலில் தேடு!  உத்தம சகோதர சிநேகத்தி்ல் நீடித்து நிலைத்திரு! மற்றவர்களுக்கு உபதேசிக்க நீ ஆசிக்கிறதையெல்லாம், முதலில், நீ அனுசரி! –  ✍🏻 அர்ச்.சியன்னா பெர்னர்தீன்🌹


🌹அர்ச்.  சியன்னா பெர்னர்தீனே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



🇻🇦

May 20


Feast 🌟

ST. BERNARDINE OF SIENA 


Bernardine was born in 1380 in the noble Albizeschi family at Massa in Italy, but was left orphaned at the age of six, & hence was raised by a pious aunt.

In 1397, after a course of civil and canon law, he joined the Confraternity of Our Lady attached to the hospital of Santa Maria della Scala church. Three years later, when the plague struck the city of Siena, he ministered to the plague-stricken, and, assisted by 12 companions, took upon himself for four months entire charge of this hospital.

In 1403 Bernardine joined the Observant branch of the Franciscan Order, with a strict observance of St. Francis' Rule, & was ordained a priest in 1404 and was commissioned as a preacher the next year.

Around the year 1406 St. Vincent Ferrer, a Dominican friar and missionary, while preaching at Alessandria in the Piedmont region of Italy, allegedly foretold that his mantle should descend upon one who was then listening to him, and said that he would return to France and Spain, leaving to Bernardine the task of evangelizing the remaining people of Italy.

For more than 30 years, Bernardino preached all over Italy and is said to have been one of the greatest preachers of his time. His style was simple, familiar, abounding in imagery and creative language which drew large crowds to hear his reflections. In the towns, the crowds assembled to hear him were at times so great that it became necessary to erect a pulpit on the market-place.

The sermons often lasted three or four hours. He was invited to Ferrara in 1424, where he preached against the excess of luxury and immodest apparel. In Bologna, he spoke out against gambling, much to the dissatisfaction of the card manufacturers and sellers. Returning to Siena in April 1425, he preached there for 50 consecutive days.

His success was claimed to be remarkable. "Bonfires of the Vanities" were held at his sermon sites, where people threw mirrors, high-heeled shoes, perfumes, locks of false hair, cards, dice, chessmen, and other frivolities to be burned. Bernardine enjoined his listeners to abstain from blasphemy, indecent conversation, and games of hazard.

Worn out by his laborious apostolate of forty years the saint was taken down with fever and reached Aquila in a dying state. There lying on the bare ground he passed away on Ascension eve, 20th of May 1444, just as the Friars in choir were chanting the anthem: "Pater manifestavi nomen Tuum hominibus . . . ad Te venio".

(Father, I have manifested Thy Name to men; I come again to Thee)

The magistrates refused to allow Bernardine's body to be removed to Siena, and after a funeral of unprecedented splendour laid it in the church of the Conventuals.

Miracles multiplied after the saint's death. According to tradition, his grave continued to leak blood until two factions of the city achieved reconciliation. Bernardine was canonized by Pope Nicholas V, on 24 May, 1450.



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

On 17 May, 1472, St. Bernardine's body was solemnly translated to the new church of the Observants at Aquila, especially erected to receive it, and enclosed in a costly shrine presented by King Louis XI of France.


                     ⚜⚜⚜

"In all your actions see in the first place the Kingdom of God and His glory; persevere in brotherly charity, and practise first all that you desire to teach others"

📖 ✍🏻

+ St. Bernardine of Siena







To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here


வெள்ளி, 17 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 36 - அர்ச். நெபுமுசேன் அருளப்பர் (St. John of Nepomuk May 16)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐ 

 

🇻🇦மே 1️⃣6️⃣ம் தேதி

🌹பாவசங்கீர்த்தன இரகசியத்தைப் பாதுகாப்பதற்காக முதல் வேதசாட்சியாக மரித்த அர்ச். நெபுமுசேன் அருளப்பர் திருநாள்.🌹

🌹இவருடைய இயற்பெயர் ஜான் வெல்ஃப்லின்; 1345ம் வருடம்  பொஹேமியா  (இப்போது செக்கோஸ்லோவாகியா) நாட்டில்,  போமுக் என்ற சந்தை நகரத்தில், பிறந்தார். இந்நகரம் பின்னாளில் நெபோமுக் என்று மாற்றப்பட்டது.

இவர் பிராக் நகரிலுள்ள பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார்; 1383ம் வருடம் முதல் 1387ம் வருடம் வரை, பதுவா பல்கலைக்கழகத்தில் வேத சட்டத்திற்கான பட்டப்படிப்பைப் பயின்றார்.

1393ம் வருடம், பிராக் நகர அதிமேற்றிராணியாரால், அர்ச்.ஜைல்ஸ் கதீட்ரல் தேவாலயத்தில், பங்கு சுவாமியார்களின் அதிபர் சுவாமியாராக நியமிக்கப்பட்டார். 

பொஹேமியா நாட்டின் அரசியின் ஆன்ம குருவாக இவர் நியமிக்கப்பட்டார். ஒருநாள்,  அந்நாட்டின் அரசன், இவரிடம் , தன் மனைவியான அரசியார், பாவசங்கீர்த்தனத்தில் கூறிய பாவங்களை தன்னிடம்,வெளிப்படுத்தும்படி கட்டாயப்படுத்தினான்!

அதற்கு இவர் மறுத்து விட்டார். உடனே, இவரை அரசன் கொடூரமாக உபாதித்தான்.1393ம் வருடம் மே 16ம் தேதியன்று, ஆண்டவருடைய மோட்சாரோகணத் திருநாளுக்கு முந்தின திருவிழிப்பு நாளன்று, பொஹேமியா அரசனான 4ம் வென்செஸ்லாஸின் உத்தரவின்பேரில், இவர் கைகால்கள் கட்டப்பட்டவராக வில்டாவா ஆற்றின் மீது  பிராக் நகரில் கட்டப்பட்டிருந்த சார்லஸ் பாலத்திலிருந்து, ஆற்றினுள் எறியப்பட்டார்.  பின்னர், இவருடைய உடல்  தண்ணீர் மேல் மட்டத்தைத் தொட்டபோது, அந்த இடத்தின் மேல் புதுமையாக ஐந்து நட்சத்திரங்கள் தோன்றின! இந்த அற்புதத்தை பிராக் நகர் மக்கள் திரளான கூட்டமாக வந்து பார்த்தனர். இதைப் பற்றி, அரசி, அரசனிடம் தெரிவித்தாள்;  இதைக் கேட்டுப் பேரச்சமடைந்த அரசன்,  தன் அறைக்குள் சென்று அடைபட்டவனாக பல நாட்கள் உள்ளேயே இருந்தான்.

300 வருடங்களுக்குப் பின், 1719ம் வருடம் , இவருடைய பரிசுத்த சரீரம் மோல்டாவு ஆற்றில் அழியாமலிருப்பதைக் கண்டறிந்தனர். இப்போது தான் அது ஆற்றில் எறியப்பட்டதுபோல் புதுப்பொலிவுடன் இருந்தது! 

இவருடைய கல்லறை பல வருடங்களுக்குப் பின் திறக்கப்பட்டபோது, இவருடைய நாக்கு புதுமையாக அழியாமல் இருந்தது!  அதனுடைய வீரத்துவம் வாய்ந்த வேதசாட்சிக்குரிய பரிசுத்த மவுனமே, இத்தகைய மாபெரும் மகிமையை, சர்வேசுரனிடமிருந்து பெற்றுக் கொடுத்திருந்தது.

  அர்ச்.நெபுமுசேன் அருளப்பர், பொஹேமியா நாட்டின் அரசாங்கத்தினுடைய அர்ச்சிஷ்டவராகப் போற்றி ஸ்துதிக்கப்படுகிறார்! பாவசங்கீர்த்தனத்தின் இரகசியமான உடைபடா முத்திரையைக் காப்பாற்றுவதற்காக  தன் உயிரை விட்ட முதல் வேதசாட்சியாக இவர் திகழ்கிறார்! புறணிப்பேச்சுகளுக்கு எதிரான புண்ணியங்களின் பாதுகாவலராகவும், இவர் இறந்த விதத்தின் மூலமாக, வெள்ள அபாயத்திலிருந்தும், தண்ணீரில் மூழ்கும் ஆபத்திலிருந்தும் பாதுகாக்கும் அர்ச்சிஷ்டவராகவும், இவர்  விளங்குகின்றார்.

அர்ச்.நெபுமுசேன் அருளப்பர், “புதுமைகளால் மின்னுகிற நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய மகிமைமிக்க வேதசாட்சி” என்று வர்ணிக்கப்படுகிறார்.🌹✝


🌹அர்ச்.நெபுமுசேன் அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


🌹பாவசங்கீர்த்தனத்தின் உடைபடா முத்திரை🌹

🌹இந்த தேவதிரவிய அனுமானத்தின் முத்திரை உடைபடக்கூடாதது! மீற முடியாதது!  திருச்சபைச் சட்டம் 983.1ன் படி, ஞான உபதேசம், பாவசங்கீர்த்தனத்தில், பாவியானவனை, எந்த விதத்திலும், பாவசங்கீர்த்தனத்தைக் கேட்ட ஆன்ம குருவானவர், வார்த்தையினாலோ, அல்லது வேறு எந்த விதத்திலோ, அல்லது எந்த காரணத்திற்காகவோ ( எண் 2490), காட்டிக் கொடுத்தால், அது அவருக்குப் பெரிய பாவாக்கிரமமாகும்.  ஆதலால், தன் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ, அல்லது, தனது நற்பெயரைக் காப்பாற்றுவதற்காகவோ, அல்லது தன் மீது அநியாயமாக சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டை, அது பொய்யானது  என்று  நிரூபிப்பதற்காகவோ,இன்னொருவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காகவோ, நீதிமன்ற வழக்கிற்கு உதவி செய்வதோ, பொது மக்களுக்கு எதிராக வரவிருக்கும் பேரழிவைத் தடுத்து நிறுத்தவோ என்று எந்த காரணத்திற்காகவும், ஒரு குரு, பாவசங்கீர்த்தன இரகசியத்தின் உடைபடா முத்திரையை, முறிக்கக் கூடாது! பாவசங்கீர்த்தனத்தில் கேட்டதை வெளியிடக் கூடாது!

ஒருவனுடைய பாவசங்கீர்த்தனத்தை, வெளிப்படுத்துவதற்குக் குருவானவர்,  மனித சமூக சட்டத்தினால்,  வலுவந்தம் செய்யக்கூடாதவராக இருக்கிறார்!  அல்லது இவர் வேறு எந்த வார்த்தைப்பாடு எடுத்தாலும், உதாரணமாக,  நீதிமன்றங்களில் இவர் சாட்சியாக சொல்லும்போது அங்கு, பரிசுத்த வேதாகமத்தின் மீது சத்தியம் செய்தால் கூட, அதுவும்,  இந்த  பாவசங்கீர்த்தன இரகசியத்தைப் பாதுகாப்பதிலிருந்து . இவரை விடுவிக்கக் கூடாமலிருக்கிறது! பாவசங்கிர்த்தனத்தில் கூறியவற்றை அப்படியே திரும்பக் கூறுவதன் மூலமாகவோ, அல்லது சில மறைமுகமான அடையாளங்கள் மூலமாகவோ, ஆலோசனை மூலமாகவோ, அல்லது செய்கை மூலமாகவோ ஒரு குருவானவர், பாவசங்கீர்த்தனத்தை வெளிப்படுத்தக் கூடாதவராக இருக்கிறார்! 

பாப்பரசரின் அலுவலகத்திலிருந்து ஒரு தவறா வரம்பெற்ற ஆணை (நவம்பர் 18, 1682ம் வருடம் வெளியிடப்பட்டது), “பாவசங்கீர்த்தனம் செய்தவரின் மனம் நோகச் செய்யும்படி, அல்லது அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்தும்படியாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துவதும்,  பாவசங்கீர்த்தனத்திலிருந்து பெற்ற அறிவைப் பயன்படுத்தி  வெளிப்படுத்துவதும், ஒரு குருவானவருக்குக் கட்டாயமாக தடை செய்யப்பட்ட காரியங்களாகும்” என்று பிரகடனம் செய்கிறது.🌹✝


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



🇻🇦

May 1️⃣6️⃣


Martyrdom 🌟🌹

ST. JOHN OF NEPOMUK

(The first martyr of the Confessional Seal)




Jan Velflín was born in AD 1345, in the small market town of Pomuk (later renamed Nepomuk) in Bohemia, now in the Czech Republic


He studied at the University of Prague, then furthered his studies in canon law at the University of Padua from 1383 to 1387.

In 1393, John was made the vicar-general of Saint Giles Cathedral by Jan of Jenštejn, Archbishop of Prague

St. John was confessor of the queen of Bohemia, and a day came when the King demanded from him to tell what the queen had said in the confessional!

St. John refused to divulge the secrets of the confessional to the King. Hence St. John was tortured and then with his hands and feet tied, on the vigil of Ascension, 16 May 1393, he was thrown into the river Vltava from Charles Bridge in Prague at the behest of Wenceslaus IV, King of Bohemia.

Later at the place where his body had hit the water, five stars appeared over the spot. The people of Prague came in great numbers to witness the marvel. The Empress pointed out the miracle to the King, who became terrified and closed himself in his room for several days.

In 1719, about 300 years later his body was found intact in the Moldau River, as if it had been thrown into it minutes before. 

When his tomb was opened again many years later, his tongue was found incorrupt, which for its silence, gave such a great glory to God.

St. John of Nepomuk  is the national saint of Bohemia and is considered the first martyr of the Confessional Seal, a patron against calumnies and, because of the manner of his death, a protector from floods and drowning

🎯

St. John of Nepomuk is described as "gloriosum Christi martyrem miraculisque coruscum"

("a glorious martyr of Christ and sparkling with miracles")



    🍁🍁🍁🍁🍁🍁🍁


THE CONFESSIONAL SEAL❗


The sacramental seal is inviolable. Quoting Canon 983.1 of the Code of Canon Law, the Catechism states, "...It is a crime for a confessor in any way to betray a penitent by word or in any other manner or for any reason" (No. 2490). A priest, therefore, cannot break the seal to save his own life, to protect his good name, to refute a false accusation, to save the life of another, to aid the course of justice (like reporting a crime), or to avert a public calamity. He cannot be compelled by law to disclose a person's confession or be bound by any oath he takes, e.g. as a witness in a court trial. A priest cannot reveal the contents of a confession either directly, by repeating the substance of what has been said, or indirectly, by some sign, suggestion, or action. A Decree from the Holy Office (Nov. 18, 1682) mandated that confessors are forbidden, even where there would be no revelation direct or indirect, to make any use of the knowledge obtained in the confession that would "displease" the penitent or reveal his identity.




🔵




To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

Tamil Catholic Quotes - St. Paschal Baylon

 சேசுநாதர் பரலோகத்தில்  மகிமையாக இருப்பதைப் போலவே, திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்

அர்ச். பாஸ்கல் பயலோன்





Blinking Feature Using CSS - Click Here



அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 35 - அர்ச். பாஸ்கால் பயிலோன் (St. Paschal Baylon - May 17)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐ 

 மே 1️⃣7️⃣ம் தேதி


🌹மகா பரிசுத்த தேவநற்கருணையின்  சரீரமெடுத்த பக்திசுவாலகரும் ஸ்துதியருமான அர்ச். பாஸ்கால் பயிலோன் திருநாள்🌹



🌹பாஸ்கால், ஸ்பெயின் தேசத்திலுள்ள ஆரகன் நாட்டில் 1540ம் வருடம், மே 24ம் தேதி, பெந்தேகோஸ்தே திருநாளன்று, பிறந்தார்.  திவ்ய இஸ்பிரீத்து சாந்துவான சர்வேசுரனின் திருநாளை , ஸ்பெயின் நாட்டினர், திவ்ய இஸ்பிரீத்துவானவரின் பாஸ்கா என்று அழைப்பதால், இவருக்கு பாஸ்கால் என்று இவருடைய பெற்றோர்கள் பெயரிட்டனர். இவர் 22 வயது வரை ஆடு மாடு மேய்க்கும் தொழிலிருந்தார். ஆடு மேய்க்கும்போது, இவர் தன்னுடன் ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்று, வருவோர் போவோரிடம், ஏ பி சி டி எழுத்துக்களை தனக்குக் கற்பிக்கும்படிக் கேட்பார். தனக்கு புத்தகத்தை வாசிக்கக் கற்றுக் கொடுக்கும்படிக் கேட்பார். வயலில் வேலை பார்க்கும்போது, கத்தோலிக்க வேதப் புத்தகங்களையும், ஞான நூல்களையும் வாசிப்பார்.

இவர், அர்ச்.அல்காந்தரா இராயப்பரின் சீர்திருத்தப்பட்ட பிரான்சிஸ்கன் துறவற சபையில், ஒரு  பொது நிலை சகோதரராகச் சேர்ந்தார். வாயில்காப்போனாக ஸ்பெயினிலிருந்த அநேக பிரான்சிஸ்கன் துறவற மடங்களில் இவர் பணிபுரிந்தார். இவர் அர்ச்சிஷ்டனத்தனத்தினுடைய உத்தமதனத்தில் எவ்வளவுக்கு அதிகமாக முன்னேறினார் என்றால், காட்சிதியானியாகவும், தேவசிநேகத்தில், குறிப்பாக மகா பரிசுத்த தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் திவ்ய சேசுகிறீஸ்து நாதர் மீது கொண்ட மாபெரும் சிநேகத்தினால், ஆழ்ந்த தியானியாகவும் ஜீவித்து வந்தார். அடிக்கடி பரலோகக் காட்சிகளால் பரவச நிலைமையினுள் மூழ்கி விடுவார். மகா பரிசுத்த தேவநற்கருணையின் முன்பாக இரவில் பல மணி நேரம் ஆழ்ந்த ஜெப தியானத்தில் மூழ்கியிருப்பார். 

1570ம் வருடம் பிரான்சிஸ்கன் துறவற சபையின் பொது தலைமை அதிபர், பாரீஸ் நகரத்திற்கு வர நேர்ந்தது. துறவற சபையின் ஒரு அவசியமான  காரியத்திற்காக, இவரை அதிபரிடம் அனுப்பி வைத்தனர்.  பிரான்சிலிருந்த அநேக நகரங்கள் வழியாக இவர் பயணிக்க நேர்ந்தபோது,  அந்நகரங்கள் எல்லாம் புராட்டஸ்டன்டு பதிதர்கள் கையிலிருந்தன!  அவர்கள் படைக் கருவிகளுடன் இருந்தனர். இருப்பினும்,  மகா பரிசுத்த தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் நமதாண்டவரின் மெய்யான திவ்ய பிரசன்னத்திற்கு எதிரான புராட்டஸ்டன்டுகளின் தேவதூஷணமான கருத்துகளுக்கும் வாதங்களுக்கும் எதிராக அந்த புராட்டஸ்டன்டு பதிதர்களுடன், அர்ச்.பாஸ்கால் வாதாடினார்; மகா பரிசுத்த தேவநற்கருணையைப் பற்றிய கத்தோலிக்க வேதசத்தியங்களுடைய மேற்கோள்களுடன் இவர், மிகுந்த ஞானத்துடன், அப்பதிதர்களை, எதிர்வாதம் செய்ய விடாமல். திணறடித்தார்! தர்க்கவாதத்தில் முழு வெற்றியடைந்தார். இதைக் கண்டு சீற்றமடைந்து வெகுண்டெழுந்த பதிதக் கூட்டம், இவரைக் கற்களாலும் தடிகளாலும் அடித்தனர். அப்போது, அதனால். இவருக்கு ஒரு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.  எஞ்சிய ஜீவிய காலம் முழுவதும் அந்த காயத்தினால் ஏற்பட்ட முடத்துடனேயே இவர் வாழ்ந்து வந்தார்.

அர்ச்.பாஸ்கால், 1592ம் வருடம் மே 17ம் தேதி பாக்கியமாய் மரித்தார்; வலேரிய நாட்டின்  அரண்மனை சிற்றாலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை , விரைவிலேயே திருயாத்திரை ஸ்தலமாயிற்று! இவருக்கு முத்திப்பேறு பட்டம் 5ம் சின்னப்பர் பாப்பரசர் 1618ம் வருடம் அளித்தார்; 8ம் அலெக்சாண்டர் பாப்பரசர், 1690ம் வருடம் அக்டோபர் 16ம் தேதி அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

13ம் சிங்கராயர் பாப்பரசர், அர்ச்.பாஸ்கால் பயிலோன், “மகா பரிசுத்த தேவநற்கருணையின் பக்திசுவாலகர்!” என்றும் மகா பரிசுத்த திவ்ய நற்கருணை மாநாடுகள் , இனி வரவிருக்கும் மகா பரிசுத்த தேவநற்கருணை பக்திசபைகளுக்கும் பாதுகாவலர்” என்றும்  பிரகடனம் செய்தார். இவர்,  பிரான்சிஸ்கன் துறவ சபை உடுப்பை அணிந்தவராகவும், மகா பரிசுத்த தேவநற்கருணை கதிர் பாத்திரத்தை ஏந்தியவராகவும், ஓவியங்களில் சித்தரிக்கப்படுகிறார்! இது,  இவர் மகா பரிசுத்த தேவநற்கருணையின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்திபற்றுதலை நமக்கு உணர்த்துகிறது.🌹✝

(ஸ்பெயினின் உள்நாட்டுப்போரின்போது(1936-39) கம்யூனிஸ்டுகள் இவருடைய கல்லறையையும் பரிசுத்த அருளிக்கங்களையும் தீக்கிரையாக்கினர்)


🌹மகா பரிசுத்த தேவநற்கருணையின் பக்திசுவாலகரும் ஸ்துதியருமான அர்ச்.பாஸ்கால் பயிலோனே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

 


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



Source:


🇻🇦

May 1️⃣7️⃣


Feast 🌟

ST. PASCHAL BAYLON

(Seraph of the Most Holy Eucharist)


Paschal was born in the Kingdom of Aragon, Spain on the Feast of Pentecost, 24 May 1540. He was named Paschal by his parents because in Spain, Pentecost is called "Pasch of the Holy Ghost".

He worked as a shepherd till the age of 22. He would carry a book with him and beg passersby to teach him the alphabet and to read, and as he toiled in the fields he would read religious books.

He joined the Reformed Franciscan Order (Alcantarine Reform) as a lay brother and served as a doorkeeper at various Franciscan monasteries in Spain.

He was a mystic and contemplative, and he had frequent ecstatic visions. He would spend hours in the night before the altar in prayer.

The General of the Franciscan Order happening to be at Paris in 1570. Paschal was sent to him for some necessary business of his province. Many of the cities through which he was to pass in France, were in the hands of the Protestants, who were then in arms, Paschal triumphantly defended the Catholic doctrine of the Real Presence of our Lord in the Most Holy Eucharist against the blasphemous assertions of Protestants. For this he was beaten up by Protestants with sticks and stones, and received a wound on one shoulder of which he remained lame as long as he lived.

Paschal died on 17 May, in AD 1592. His tomb in the Royal Chapel in Villareal in the old province of Valencia, immediately became an object of pilgrimage.

Paschal was beatified by Pope Paul V in 1618, & was canonized by Pope Alexander VIII on 16 October 1690 AD.


     🍁🍁🍁🍁🍁🍁🍁


Pope Leo XIII proclaimed St. Paschal Baylon, the "seraph of the Most Holy Eucharist", patron of Eucharistic congresses, and all contemporary and future Eucharistic associations.

Christian art usually depicts him wearing the Franciscan habit and bearing a monstrance, signifying his devotion to the  Most Holy Eucharist.

During the Red Terror at the time of the Spanish Civil War (1936-1939), his grave was desecrated and his relics were burned by the Communists.



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here