⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
மே 2️⃣0️⃣ம் தேதி
🌹நமதாண்டவரின் மகா பரிசுத்தத் திருநாமத்தின் மீதான பக்தியைப் பரப்பியவரும், வேதபாரகரும் ஸ்துதியருமான அர்ச். சியன்னா பெர்நர்தீன் திருநாள் 🌹
🌹பெர்னர்தீன், இத்தாலியிலுள்ள மாஸ்ஸா என்ற நகரில், ஆல்பிசெஸ்கி என்ற உயர்ந்த குடும்பத்தில் 1380ம் வருடம் பிறந்தார். இவர் ஆறு வயதில் தன் பெற்றோர்களை இழந்து அநாதையானார்; இவருடைய பக்தியுள்ள அத்தை இவரை ஒரு அர்ச்சிஷ்டவராக வளர்த்தார்.
1397ம் வருடம், சமூக மற்றும் திருச்சபை சட்டத்திற்கான பட்டப்படிப்பை முடித்த பிறகு, சாந்தா மரியா ஸ்கேலா தேவாலய வளாகத்தின் மருத்துவமனையுடன் இணைந்து இயங்கி வந்த மகா பரிசுத்த தேவமாதாவின் பக்திசபையில் இவர் உறுப்பினராகச் சேர்ந்தார். 3 வருடங்களுக்குப் பிறகு, சியன்னா நகரை கொள்ளை நோய் தாக்கியபோது, இவர் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் இரவு பகலாக ஈடுபட்டார்; 12 உதவியாளர்களுடன் இப்பிறர்சிநேக அலுவலில் ஈடுபட்டார். அடுத்த நான்கு மாதங்களும், அந்த மருத்துவமனையின் முழு நிர்வாகப் பொறுப்பையும் இவர் ஏற்றுக் கொண்டார்.
1403ம் வருடம் அர்ச்.பெர்னார்டின், அர்ச்.பிரான்சிஸ் அசிசியாரின் துறவற சபை விதிமுறைகளை கண்டிப்பாக அனுசரிக்கும் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்தார்; 1404ம் வருடம் குருப்பட்டம் பெற்றார்; அடுத்த வருடம், பிரசங்கியாராக ஏற்படுத்தப்பட்டார்.
1406ம் வருடம், அர்ச்.சாமிநாதரின் போதகக் குருக்களின் துறவற சபையின் வேதபோதக அப்போஸ்தலரும், மாபெரும் அர்ச்சிஷ்டவருமான அர்ச். வின்சென்ட் ஃபெர்ரர், இத்தாலியிலுள்ள பியட்மோன்ட் பிராந்தியத்தில் அலெஸ்ஸாண்டிரியா நகரில் பிரசங்கித்தபோது, ஞான பிரசங்கங்கள் நிகழ்த்தும்படியான தன் அலுவலைத் தொடரும்படியாக, மறுபடியும் பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்குச் செல்லப்போவதாகவும், தனது அங்கியின் மேற்போர்வை கூட்டத்தில் யார்மேல் இறங்குமோ, அவர் தனது வேதபோதக அலுவலை இத்தாலியில் தொடர்ந்து நிறைவேற்றுவார் என்றும் வலியுத்தியபடி, முன்னுரைத்தார்! அதன்படி, அர்ச்.பெர்நர்தீன் மீது அர்ச். வின்சென்டின் மேற்போர்வை வந்து இறங்கியதால், அவரையே அவ்வலுவலுக்காகத் தேர்ந்தெடுத்தார்; தொடர்ந்து, இத்தாலி மக்களுக்கு சுவிசேஷத்தைப் போதிப்பதற்கான அலுவலை, அர்ச். வின்சென்ட், அர்ச். பெர்நர்தீனிடம் ஒப்படைத்தார்.
30 வருடங்களுக்கும் மேலாக, அர்ச். பெர்னர்தீன், இத்தாலி நாடு முழுவதும் சுற்றித்திரிந்து பிரசங்கித்தார்; இக்காலத்தில் இவர் மாபெரும் பிரசங்கியார்களில் ஒருவராகத் திகழ்ந்தார்! இவர், எளிமையானதும், அன்னியோன்னியமானதும், கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் நிறைந்திருந்ததுமான மொழியினால், பிரசங்கம் செய்ததால், இவர் கூறிய தியானக்கருத்துக்களைக் கேட்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் திரளான மக்கள் கூட்டம், இவர் பிரசங்கித்த இடங்களுக்கெல்லாம் திரண்டு வந்து கூடியது! நகரங்களில் இவர் பிரசங்கித்தபோது வந்த திரளான கூட்ட மிகுதியின் காரணமாக சந்தையில் இவருக்காக பிரத்தியேக பிரசங்க மேடை அமைக்க வேண்டியதாயிற்று!
இவருடைய தியானப் பிரசங்கம் வழக்கமாக 3 அல்லது 4 மணி நேரம் வரை நீடிக்கும்! நமதாண்டவருடைய மகா பரிசுத்தத் திருநாமத்தின் மீதான பக்தியை இவர் இத்தாலி முழுவதும் பரப்பினார். 1414ம் வருடம், இவர் ஃபெர்ராரா நகரத்திற்கு அழைக்கப்பட்டபோது, கூடுதலாக வீண் ஆடம்பர ஜீவியத்திற்கு எதிராகவும், நல்லொழுக்கத்திற்கு எதிரான அடக்க வொடுக்கமில்லாமல் ஆடை அணிவதற்கு எதிராகவும் கண்டித்துப் பிரசங்கம் செய்தார்! பொலோஞாவில், சூதாட்டத்திற்கு எதிராக அறிவுரை கூறிப் பிரசங்கம் செய்தார்; இது, அங்கிருந்த சீட்டுக் கட்டு உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகளை அதிருப்தியடையச் செய்தது! 1425ம் வருடம் இவர், சியன்னா நகருக்கு வந்து, அடுத்து வந்த 50 நாட்கள், ஒவ்வொரு நாளும் பிரசங்கம் செய்து வந்தார்.
இவருடைய பிரசங்கங்கள் அடைந்த வெற்றி, குறிப்பிடத்தக்க வெற்றியாகும்: இவர் பிரசங்கிக்கும் சமயங்களில், “வீண் ஆடம்பரங்களின் நெருப்பு” என்று ஒரு இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும்; அந்த நெருப்புக்குள் பிரசங்கத்தைக் கேட்கிற மக்கள், ஆடம்பர முகக் கண்ணாடிகள், உயர்குதிங்கால்-காலணிகள், வாசனை திரவியங்கள், சவரிமுடிகள், சீட்டுக்கட்டுகள், தாயக்கட்டைகள், சதுரங்க விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை அந்த வீ்ண் ஆடம்பர நெருப்பின் குழிக்குள் போட்டு எரிப்பார்கள்! அர்ச். சியன்னா பெர்னர்தீன், தேவதூஷணத்திலிருந்தும், அசுத்தமான ஒழுங்கீன உரையாடல்களிலிருந்தும், ஆபத்தான விளையாட்டு களிலிருந்தும் விலிகியிருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரையையும், பிரசங்கத்தின்போது, வலியுறுத்திக் கூறுவார்.
40வருட காலம், இடைவிடாத அப்போஸ்தலத்துவ அலுவலுக்கான உழைப்பின் காரணமாக, அர்ச்.பெர்னர்தீன் மிகவும் களைப்புற்றவரானார்; பலவீனமடைந்தநிலையில், அக்விலா நகரில், இவர் காய்ச்சலினால், பீடிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் விழுந்தார். இங்கு, இவர் வெறுந்தரையில் படுத்த நிலையில், 1444ம் வருடம், மே மாதம் 20ம் தேதியன்று, ஆண்டவருடைய மோட்சாரோகணத்திருநாளுக்கு முந்தின நாளன்று, “பிதாவே நான் உமது மகா பரிசுத்தத் திருநாமத்தை மனிதர்களுக்கு வெளிப்படுத்தினேன்! நான் மறுபடியும் உம்மிடம் திரும்பி வருகிறேன்” என்று சக துறவியர், இலத்தீனில் பாடுகிறபோது, பாக்கியமாய் மரித்தார்!
அக்விலா நகர மாஜிஸ்திரேட்டுகள், இவருடைய பரிசுத்த சரீரத்தை, சியன்னா நகருக்குக் கொண்டு செல்வதற்கு மறுத்தனர்;
அந்நகர தேவாலயத்திலேயே, இதுவரை வரலாறு காணாத அளவு, மிகவும் ஆடம்பரமாக அர்ச். சியன்னா பெர்னர்தீனுடைய பரிசுத்த சரீரம் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய கல்லறையில், புதுமைகள் அபரிமிதமாக நாளுக்கு நாள் பெருகியது! ஒரு சமயம், இந்நகரில் இருவேறு பிரிவினர்களுக்கு இடையே பகை ஏற்பட்டு, சமாதானம் அடைகிற வரைக்கும், புதுமையாக அர்ச்சிஷ்டவருடைய கல்லறையிலிருந்து, இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது! ஆறு வருடங்களுக்குப் பின், 5ம் நிக்கோலாஸ் பாப்பரசர், இவருக்கு 1450ம் வருடம் மே 24ம் தேதியன்று, அர்ச்சிஷ்டப் பட்டம் அளித்தார்!
1472ம் வருடம், அர்ச்.சியன்னா பெர்னர்தீனுடைய பரிசுத்த சரீரம், ஆடம்பரமாக, அக்விலா நகரில், அவர் சேர்ந்திருந்த கண்டிப்பான விதிமுறை அனுசரித்த பிரான்சிஸ்கன் துறவியரின் புதிய தேவாலயத்திற்கு, இடமாற்றம் செய்யப்பட்டது அர்ச்.சியன்னா பெர்னர்தீனை அடக்கம் செய்து அதன் மேல் அவருக்குத் தோத்திரமாக ஒரு விலையுயர்ந்த ஷேத்திரத்திற்கான பீடத்தை ஸ்தாபிப்பதற்காகவே, பிரத்தியேகமாக பிரான்ஸ் நாட்டின் 11ம் லூயிஸ் அரசரால் இப்புதிய தேவாலயம் கட்டிமுடிக்கப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது!🌹✝
🌹நீ உன் எல்லா காரியங்களிலும், சர்வேசுரனுடைய இராஜ்யத்தையும், அவருடைய மகிமையையும் முதலில் தேடு! உத்தம சகோதர சிநேகத்தி்ல் நீடித்து நிலைத்திரு! மற்றவர்களுக்கு உபதேசிக்க நீ ஆசிக்கிறதையெல்லாம், முதலில், நீ அனுசரி! – ✍🏻 அர்ச்.சியன்னா பெர்னர்தீன்🌹
🌹அர்ச். சியன்னா பெர்னர்தீனே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
✨
🇻🇦
May 20
Feast 🌟
ST. BERNARDINE OF SIENA
Bernardine was born in 1380 in the noble Albizeschi family at Massa in Italy, but was left orphaned at the age of six, & hence was raised by a pious aunt.
In 1397, after a course of civil and canon law, he joined the Confraternity of Our Lady attached to the hospital of Santa Maria della Scala church. Three years later, when the plague struck the city of Siena, he ministered to the plague-stricken, and, assisted by 12 companions, took upon himself for four months entire charge of this hospital.
In 1403 Bernardine joined the Observant branch of the Franciscan Order, with a strict observance of St. Francis' Rule, & was ordained a priest in 1404 and was commissioned as a preacher the next year.
Around the year 1406 St. Vincent Ferrer, a Dominican friar and missionary, while preaching at Alessandria in the Piedmont region of Italy, allegedly foretold that his mantle should descend upon one who was then listening to him, and said that he would return to France and Spain, leaving to Bernardine the task of evangelizing the remaining people of Italy.
For more than 30 years, Bernardino preached all over Italy and is said to have been one of the greatest preachers of his time. His style was simple, familiar, abounding in imagery and creative language which drew large crowds to hear his reflections. In the towns, the crowds assembled to hear him were at times so great that it became necessary to erect a pulpit on the market-place.
The sermons often lasted three or four hours. He was invited to Ferrara in 1424, where he preached against the excess of luxury and immodest apparel. In Bologna, he spoke out against gambling, much to the dissatisfaction of the card manufacturers and sellers. Returning to Siena in April 1425, he preached there for 50 consecutive days.
His success was claimed to be remarkable. "Bonfires of the Vanities" were held at his sermon sites, where people threw mirrors, high-heeled shoes, perfumes, locks of false hair, cards, dice, chessmen, and other frivolities to be burned. Bernardine enjoined his listeners to abstain from blasphemy, indecent conversation, and games of hazard.
Worn out by his laborious apostolate of forty years the saint was taken down with fever and reached Aquila in a dying state. There lying on the bare ground he passed away on Ascension eve, 20th of May 1444, just as the Friars in choir were chanting the anthem: "Pater manifestavi nomen Tuum hominibus . . . ad Te venio".
(Father, I have manifested Thy Name to men; I come again to Thee)
The magistrates refused to allow Bernardine's body to be removed to Siena, and after a funeral of unprecedented splendour laid it in the church of the Conventuals.
Miracles multiplied after the saint's death. According to tradition, his grave continued to leak blood until two factions of the city achieved reconciliation. Bernardine was canonized by Pope Nicholas V, on 24 May, 1450.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
On 17 May, 1472, St. Bernardine's body was solemnly translated to the new church of the Observants at Aquila, especially erected to receive it, and enclosed in a costly shrine presented by King Louis XI of France.
⚜⚜⚜
"In all your actions see in the first place the Kingdom of God and His glory; persevere in brotherly charity, and practise first all that you desire to teach others"
📖 ✍🏻
+ St. Bernardine of Siena
To Read more
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக