Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 15 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 32 - அர்ச். ஸோஃபியா, மற்றும் குமாரத்திகள் (St. Sophia and her Three daughters)

⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 

🇻🇦மே 1️⃣5️⃣ம் தேதி

🌹உரோமாபுரியைச் சேர்ந்த வேதசாட்சிகளான அர்ச். ஸோஃபியா, மற்றும் குமாரத்திகள் திருநாள்.🌹

🌹ஸோஃபியா இத்தாலியில் பிறந்தார்கள்.  இவர்களுக்கு விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் என்று முன்று குமாரத்திகள் இருந்தனர். அர்ச்.சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிரூபத்தில் 13ம் அதிகாரத்தில் வருகிற 13ம் வசனமாக வருகிற  விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்கிற புண்ணியங்களே இக்குமாரத்திகளுக்குப் பெயர்களாக வைக்கப்பட்டன!

ஸோஃபியா, மூன்று குமாரத்திகளுடன், வேத கலாபனை சமயத்தில், கத்தோலிக்க வேதத்தை அனுசரிப்பதற்காக, உரோமையில் கைது செய்யப் பட்டனர். உரோமை வீரர்கள், ஸோஃபியாவை அச்சுறுத்தி, கத்தோலிக்க வேத விசுவாசத்தை மறுதலிக்கச் செய்ய நிர்ப்பந் திக்கும்படியாக, அவர்களின்  குமாரத்திகளை, ஒவ்வொருவராகக் கொண்டு வந்து, சாகடிக்கும்படியான மிகக் கொடூரமாக சித்திரவதைச் செய்தனர். ஆனால், ஸோஃபியா, வேத விசுவாசத்தில், இன்னும் அதிக உறுதியாயிருந்து, தன் குமாரத்திகளை  வேதசாட்சிய மரணத்தைப் பெற்றுக் கொள்ள உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினார்கள். குமாரத்திகள் மூவரும் வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்!

அர்ச்.ஸோஃபியா, ஹேட்ரியன் உரோமையை ஆண்ட காலத்தில்,137ம் வருடம் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார்கள். அர்ச்.கொர்தானியுஸ் மற்றும் அர்ச்.எபிமாகுஸ் கல்லறையில் அர்ச்.ஸோஃபியா, அடக்கம் செய்யப் பட்டார்கள்.

அர்ச்.ஸோஃபியாவின் பரிசுத்த அருளிக்கங்கள் சிலவற்றை ரெமிஜியுஸ், 778ம் வருடம், எஸ்காவு என்ற இடத்திலுள்ள மடத்திற்குக் கொண்டு வந்தார். 2ம் செர்ஜியுஸ் பாப்பரசர், 845ம் வருடம் அர்ச்.ஸோஃபியாவின் பரிசுத்த அருளிக்கங்களை, மோந்தி என்ற இடத்திலுள்ள அர்ச்.மார்டின் தேவாலயத்தின்  பெரிய பீடத்திற்கு இடமாற்றம் செய்தார். 

பனிக்காலத்தில் ஏற்படுகிற பயங்கரமான குளிரிலிருந்து காப்பாற்ற அர்ச். ஸோஃபியாவிடம் வேண்டிக் கொள்வார்கள். ஜெர்மனியில் குளிர்பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்கு, உதவியாக அர்ச். ஸோஃபியாவிடம் வேண்டிக் கொள்வார்கள். “குளிர்ந்த ஸோஃபியா” என்று அழைப்பார்கள். பனிக்கட்டியின் அர்ச்சிஷ்டவர்களில் இவரும் ஒருவராகத் திகழ்கிறார்.

பல்கேரிய தலைநகர் ஸோஃபியா என்று அர்ச்.ஸோஃபியா  தேவாலயத்தின் பெயராலேயே,, பெயரிடப்பட்டிருக்கிறது; 343ம் வருடம், சார்டிகா சங்கம்  இந்நகரில் ஒரு தேவாலயத்தில் கூடியது.  பின்னர், இதே இடத்தில், 6வது நூற்றாண்டில்,  அர்ச்.ஸோஃபியா தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தலைநகரம், ஸ்ரெடெட்ஸ் என்று பல்கேரிய மொழியில் முதலில் பெயரிடப்பட்டிருந்தது; பின்னர், பிரபலமான அர்ச்.ஸோஃபியா தேவாலயத்தின் பெயர், 1376ம் வருடம் இந்நகருக்கு வைக்கப்பட்டது.🌹✝

🌹வேதசாட்சிகளான அர்ச்.ஸோஃபியா, விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகமே! எங்ளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


 ✨

May 1️⃣5️⃣


Martyrdom 🌟🌹

ST. SOPHIA OF ROME

Sophia was a young woman born in Italy. Sophia had three daughters: Faith, Hope and Charity, who were named after virtues mentioned by Saint Paul in 1 Corinthians 13 :13

Sophia and her three daughters were arrested during the persecution for practicing the Catholic Faith.

The Roman guards took Sophia's daughters one by one, from the oldest to the youngest and tortured them to death in an attempt to force their mother, Sophia, to renounce her faith in Christ. But instead Sophia became more firm in the Faith, and encouraged her daughters to suffer martyrdom.

Sophia was then put to death for the Catholic faith during the reign of pagan emperor Hadrian in 137 AD. She was buried in the cemetery of Gordianus and Epimachus.

Some of her relics were brought by Remigius of Strasbourg to the convent at Eschau in 778. Pope Sergius II transferred her relics around the year 845 to the high altar of the Church of San Martino ai Monti.

    🍁🍁🍁🍁🍁🍁🍁

St. Sophia is invoked against frosts that occurres late in the year; thus she is called kalte Sophie 'cold Sophia' in Germany by those who invoked her aid in planting arable crops. She is thus considered to be one of the "Ice Saints".

The Bulgarian capital city of Sofia is named after the Church of Saint Sophia. In 343 AD, the Council of Sardica was held in the city, in a church located where the current 6th century Church of Saint Sophia was later built. The city, known earlier as Sredets (Средец) in Bulgarian, was renamed Sofia in 1376 after the famous church.





🔵


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக