⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
🇻🇦மே 2️⃣1️⃣ம் தேதி
🌹வேதசாட்சியான அர்ச். பொபோலா பெலவேந்திரர் திருநாள்🌹
🌹இவர் போலந்து நாட்டின் பாரம்பரியமானதும் பிரசத்திபெற்றதுமான ஒரு குடும்பத்தில்,1590ம் வருடம் சான்டோமிர் என்ற பிரபுவின் அதிகாரத்திலுள்ள ஒரு இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் எப்போதும், சேசுசபைத் துறவியருக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களைப் பாராமரித்துக் காப்பாற்றி வந்தது; அவர்களுக்கு மிக தாராளமாக உதவி செய்து வந்தது; வருங்கால வேதசாட்சியான அர்ச்.பெலவேந்திரரிடம், சர்வேசுரன் இவருடைய குடும்பத்தையும், சேசுசபையினரையும் ஆசீர்வதித்தார்; இவர் சேசு சபையினருக்கும், தன் குடும்பத்தினருக்கும் மாபெரும் மகிமையைக் கொண்டு வருவார்! இவர் சேசு சபையில் 1611ம் வருடம் சேர்ந்தார்.
ஆடம்பரமாக சேசு சபையில் இவர் வார்த்தைப்பாடு கொடுத்தபிறகு, 1630ம் வருடம் , ஜுன் மாதம் 2ம் தேதி, போப்ருய்ஸ்க் என்ற நகரிலிருந்த சேசு சபை மடத்தற்கு அதிபரானார். அங்கு இவர் தனது சிறந்த ஞானப்பிரசங்கங்களாலும், கொள்ளை நோய் காலத்தில், தன்னிகரற்ற விதமாக இவர் தன்னையே அர்ப்பணித்து, ஆற்றிய பிறர்சிநேக அலுவல்களாலும் அநேக புதுமைகள் நிகழ்த்தினார்.
இவர் 1636ம் வருடம் தனது அதிபர் பதவியை இராஜினாமா செய்து விட்டு, இவர் ஏற்கனவே சுவிசேஷத்தை போதித்து வந்த லிதுவேனியா நாடெங்கிலும் நடந்து சென்று, வேதபோதகப் பிரசங்கங்கள் நிகழ்த்தத் தீர்மானித்தார்; அண்டை நாடுகளான லிதுவேனியா, போலந்து நாடுகள், அச்சமயம், ரஷ்யர்களாலும், கோஸ்ஸாக் மற்றும் தார்தாரிய இனத்தவர்களாலும் படையெடுக்கப்பட்டு சூறையாடப்பட்டன! இவர்களுடைய படையெடுப்பின் ஆக்கிரமிப்புகளால், இந்நாடுகளிலிருந்த மக்களும் சேசுசபைத் துறவியரும் மிகவும் துன்புற்றனர்; ஏனெனில், இந்த இனத்தினர், சேசு சபையினரை மிகவும் வெறுத்தனர்; ஏனெனில், இவர்கள் பிரிவினை திருச்சபையில் இருந்ததால், கத்தோலிக்க வேதத்தை வெறுத்தனர்; பெலவேந்திரர் சுவாமியார், அவதியுற்ற மக்களை உற்சாகப்படுத்தி, வேத விசுவாசத்தில் திடப்படுத்தினார்; மேலும், இந்நாடுகளுக்கு உள்ளே நுழைகிற வேத விசுவாசத்திற்கு எதிரான பதிதத் தப்பறைகளையும் பிரிவினரையும், எதிர்ப்பதிலும் அவற்றை விரட்டியடிப்பதிலும், இவர் இந்நாடுகளிலுள்ள மக்களுக்கு உதவி செய்தார்!
இவர் அயராமல், சத்திய வேதத்தைப் பற்றி நிகழ்த்திய வேதபோதகப் பிரசங்கங்கள், அநேக பிரிவினை திருச்சபையிலிருந்தவர்கள், சத்திய வேதத்தில் சேர்வதற்குக் காரணமாயின! இந்த வெற்றியைச் சகிக்கக் கூடாத பிரிவினைக் காரர்களின் தலைவர்கள், இவர் மேல் சீற்றமடைந்தனர்! கிரேக்க பிரிவினைத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள், இவர் வாழ்ந்த போலந்து மற்றும் அதைச் சுற்றியிருக்கும் போலேசியா பிராந்தியத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.
இப்பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு உயர்குடி கத்தோலிக்கர், பின்ஸ்க் என்ற நகரில் சேசு சபை குருக்கள் தங்குவதற்கு ஒரு வீட்டைக் கொடுத்தார்; இந்த வீட்டில் தான் அர்ச்.பெலவேந்திரர் சுவாமியாரும், தங்கியிருந்தார். இவர் ஆற்றிய அப்போஸ்தல அலுவல்களுக்கெல்லாம், பிரிவினைக்காரர்கள் எல்லா விதங்களிலும், தடங்கல்கள் கொடுத்து, இவர் எந்த அப்போஸ்தல அலுவலையும், கடமையையும், நிறைவேற்ற விடாமலிருப்பதற்கு மாபெரும் முயற்சி செய்தனர்! சில சமயங்களில், இவரையே சரீர ரீதியாக, தாக்கவும் முற்பட்டனர்!
1657ம் வருடம், மே மாதம் 16ம் தேதியன்று, கோஸ்ஸாக் இனத்தவர்கள் இரண்டுபேர், இவரைப் பிடித்து மிக மூர்க்கமாகவும் கடுமையாகவும் அடித்தனர். பின் குதிரை சேணத்தில் இவரைக் கட்டி, இழுத்துச் சென்றனர். ஜேனோவ் நகர் வரை, இவர் குதிரைச் சேணங்களில் கட்டப்பட்டபடி தரையிலே , இழுத்துச் செல்லப்பட்டார்; மிகக் கொடூரமான உபத்திரவத்தை அனுபவித்தார்! அந்நகரில், அவர் மிகக் கொடூரமாக நம்பமுடியாத உபத்திரவங்களால், சித்திரவதைச் செய்யப்பட்டார்; முதலில் நெருப்பினால் எரிக்கப்பட்ட இவர், உடல் திருகப்பட்டு, பாதி உடல் தோலுரிக்கப்பட்டார்; இறுதியில் கத்தியால் வெட்டப்பட்டு மரித்தார்; மகிமை மிக்க வேத சாட்சிய முடியை அடைந்தார்! கத்தோலிக்கர்கள், இவருடைய பரிசுத்த சரீரத்தை பின்ஸ்கிலுள்ள சேசு சபைக் கல்லூரியில் அடக்கம் செய்தனர்.
45 வருடங்களுக்குப் பிறகு, ஒரு புதுமையினால், காணாமல் போயிருந்த இவருடைய கல்லறையை, சேசுசபை குருக்களுக்கு வெளிப்படுத்த சர்வேசுரன் சித்தமானார்; இப்பிராந்தியத்தில் சேசு சபைக்குருக்கள், கடந்தகாலத்தில் நிகழ்ந்த போர்களால் ஏற்பட்ட தீமைகளால் தங்களுடைய வேதபோதக அலுவல்கள் அழிக்கப்பட்டதைக் கண்டார்கள்! அந்நகரின் சேசு சபைக் கல்லூரியின் அதிபர் சுவாமியாருக்கு, இவர் காட்சியளித்து, சேசுசபை மாணவர்களையும், தனது சக சேசு சபைத் துறவியரையும், பிரிவினைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு தான் ஆசிப்பதாகவும் கூறினார்; பின், தனது கல்லறை இருக்கிற இடத்தைக் காண்பித்தார். அதன்படி, இவருடைய கல்லறை , மறுபடியும்,கண்டெடுக்கப்பட்டது; கல்லறையினுள் இவருடைய பரிசுத்த சரீரம் திருகப்பட்ட நிலையிலேயே, அழியாத சரீரமாக புதுமையாகக் காணப்பட்டது! கல்லறையிலிருந்து பரலோக நறுமணம் வீசியது! இவருக்கு, 9ம் பத்திநாதர் பாப்பரசரால், 1853ம் வருடம் முத்திப்பேறு பட்டமளிக்கப்பட்டது; 11ம் பத்திநாதர் பாப்பரசர் இவருக்கு ஏப்ரல் மாதம் , 1938ம் வருடம் அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது!🌹✝
🌹அர்ச். பொபோலா பெலவேந்திரரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
✨
🇻🇦
May 2️⃣0️⃣
Feast 🌟
⭐Feast:🌹Saint Andrew Bobola, Martyr🌹
May 2️⃣1️⃣
🌹Today is the feast day of Saint Andrew Bobola.
Ora pro nobis.🌹
🌹Saint Andrew was born of an old and illustrious Polish family, in the Palatinate of Sandomir, 1590. His family had always protected the Jesuits and shown itself very liberal towards them. God blessed both the family and the Jesuits in this future martyr, who would bring both of them great glory. He entered that Order in 1611.
After making his solemn vows, 2 June, 1630, he was made superior at Bobruisk, where he wrought wonders by his preaching and distinguished himself by his devotion during an epidemic of the plague.
Fr Bobola in 1636 resigned his post as Superior to preach for twenty-one years along all the roads of Lithuania, which he was evangelizing. Poland and Lithuania, its neighbor, were being ravaged in those days by the Cossacks, Russians and Tartars, and the Jesuits suffered much from these invaders, who did not like them and their religion. The people were enduring great misery; Father Andrew sustained their courage and helped to combat the invading religious errors.
Fr. Bobola’s success in converting schismatics drew upon him the rage of those in high authority, and the adherents of the Greek Pope decided to centralize their forces in Polesia.
A Catholic nobleman of this province offered the Jesuits a house at Pinsk, and here Father Bobola was stationed. The schismatics vainly endeavoured in every manner to hinder him in the exercise of his apostolic duties, extending their persecutions to attacks upon his person. On 16 May, 1657, he was seized by two Cossacks and severely beaten. Then tying him to their saddles, they dragged him to Janów where he was subjected to incredible tortures. After having been burned, half strangled, and partly flayed alive, he was released from suffering by a sabre stroke. He was buried by the Catholics at the Jesuit College at Pinsk.
Forty-five years later, by a miracle, God revealed the whereabouts of his forgotten tomb to the Jesuit Fathers, who had seen the continuing evils of war ruin many of their works. His tombstone, then buried underground, was found after the Saint appeared twice in vision to the Rector of the College, saying he wished to protect his brethren and the students, and indicating to him the location of his grave. His mutilated body was incorrupt, and a fine fragrance came from the open tomb. Saint Andrew was beatified by Pope Pius IX in 1853, and canonized in April of 1938 by Pope Pius XI.🌹✝
✝
🔵
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக