⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
🇻🇦மே 2️⃣1️⃣ம் தேதி
🌹ஸ்துதியரான அர்ச். ஹாஸ்பிசியுஸ் திருநாள்🌹
🌹இவர் 6ம் நூற்றாண்டில் எகிப்தில் ஏகாந்தத்தில் ஜீவித்து வந்த ஒரு துறவியாவார்; அங்கிருந்து, பிரான்சிலுள்ள காவ்ல் என்கிற பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றார். அங்கே வில்லஃபிராங்கா என்ற இடத்திலிருந்த ஒரு பாழடைந்த கோட்டையில் தங்கி தனிமையில் ஜெப தப தியான ஜீவியத்தில் மூழ்கியிருந்தார்! பிரான்சின் தென்கிழக்கில் உள்ள ஃபெர்ராட் முனை தீபகற்பத்திலிருக்கும் நிசே நகரத்திலிருந்து மூன்று கல் தொலைவில் இந்த கோட்டை இருந்தது! இடுப்பில் மிகக் கனமான இரும்பு சங்கிலியால் கட்டியிருந்தார்; ரொட்டியையும் , பேரீச்சைப் பழங்களையும் மட்டுமே உண்டு வந்தார்; மிகக் கடினமான தபசை அனுசரித்தார்; தபசு காலத்தில் தபசை இரட்டிப்பாக அதிகரித்தார்; எகிப்தில் வசித்த தபோதனர்கள் அனுசரித்த மிக மிகக் கடினமான தபசுநிறைந்த ஜீவியத்திற்கு இணையாக தனது தபசின் ஜீவியம் கடின ஒறுத்தல் பரித்தியாகங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில், இவர் எப்போதும் விழிப்புடனும் கவனத்துடனும் இருந்தார்! தபசு காலத்தில், எதையும் உண்ணாமல், காட்டுச்செடி வேர்களை மட்டுமே உண்டு வந்தார்; இவர் அனுசரித்த மாபெரும் புண்ணியங்களுக்கு சம்பாவனையாக, பரலோகம், இவருக்கு புதுமை செய்யும் வரத்தையும், தீர்க்கதரிசன வரத்தையும் அளித்து, இவரை மகிமைப்படுத்தியது!
சுற்றுபுறத்தில் ஜீவித்த மக்கள், அடிக்கடி இவரிடம் வந்து, அவர்களை ஞான ஜீவியத்தில் வழிநடத்தும்படி , கேட்டுக்கொண்டனர்; கிபி 575ம் வருடம், லொம்பார்டியர்கள் என்கிற காட்டுமிரான்டி இனத்தினர், காவ்ல் பகுதிக்குள் படையெடுத்து நுழைந்து, ஆக்கிரமிப்பார்கள், என்று இவர் அம்மக்களை முன்கூட்டியே அறிவித்து எச்சரித்தார்! லொம்பார்டியர்கள், அவ்வாறு படையெடுத்து வந்தபோது, அர்ச்.ஹாஸ்பிசியுஸ் தங்கியிருந்த கோட்டைக்குள் அப்படை வீரர்கள் வந்து , இவர் மிகக் கனமான சங்கிலிகளால் கட்டுண்டவராக தனிமையில் இருக்கிறதைக் கண்டு, இவர் மிகப்பெரிய ஒரு கொலைக் குற்றவாளி என்று கருதினர். அர்ச்.ஹாஸ்பிசியுசும், அவர்களிடம், தான் ஒரு மகா பயங்கரமான பாவி என்று ஒத்துக்கொண்டார். அதைக்கேட்டு பயந்த அந்த படைவீரர்களில் ஒருவன், அவரைக் கொல்வதற்காக ஒரு வாளை உயர்த்தினான்; ஆனால், அவரைக் கொல்வதற்காக வாளை உயர்த்திய அந்த வீரனுடைய கரமானது, பக்கவாதம் வந்து அசைவற்றுப்போனது! அதைக் கண்டு அவன்மேல் இரங்கியவராக, அர்ச்.ஹாஸ்பிசியுஸ், அவனுடைய அந்த கரத்தின் மீது சிலுவை அடையாளம் வரைந்து ஆசிர்வதித்தார்; உடனே, புதுமையாக, அவனுடைய கரம் குணமடைந்து, செயல்படத்துவக்கியது!
அந்த ஷண நேரத்திலே, அந்த படைவீரன் மனந்திரும்பினான்; எஞ்சிய தன் ஜீவிய காலமெல்லாம், துறவற மடத்தில் சேர்ந்து,சர்வேசுரனுக்கு ஊழியம் செய்தார்! மனந்திரும்பி துறவியாக மாறிய இவ்வீரரைப் பற்றி, அர்ச்.தூர்ஸ் நகர கிரகோரியார் தனிப்பட்ட விதத்தில் அன்னியோன்னியமாக அறிந்திருந்தார்! இத்துறவியின் மூலமாக அர்ச்.ஹாஸ்பிசியுஸ் பற்றி அறிந்தவற்றை, அர்ச்.கிரகோரியார் எழுதி வைத்ததாலேயே, நம்மால், அர்ச்.ஹாஸ்பிசியுஸ் அனுசரித்த மிகக் கடின தபசைப் பற்றியும், நிகழ்த்திய எண்ணற்ற புதுமைகள் பற்றியும் நம்மால் அறிந்து கொள்ளக் கூடுமாயிருக்கிறது!
அர்ச்.ஹாஸ்பிசியுஸ் தனது மரண நேரத்தைப் பற்றி முன்னறிவித்தார்; அதன்பிரகாரம், ஃபெர்ராட் முனையில், 581ம் வருடம் மே 21ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்த இவரை, இவருடைய நண்பரும் மேற்றிராணியாருமான வந். அவுஸ்டாடியுஸ் ஆண்டகை பூஜிதமாய் அடக்கம் செய்தார்; ஃபெர்ராட் முனை என்கிற இந்த இடம் , இவருக்கு தோத்திரமாக செயிண்ட் ஹாஸ்பிஸ் என்று இவருடைய பெயராலேயே அழைக்கப்படுகிறது. நிசே மேற்றிராசனத்தில், செயிண்ட் ரிபரட்டா கதீட்ரல் தேவாலயத்தில், அர்ச்.ஹாஸ்பிசியுஸ் வணங்கப்படுகிறார்! அங்கு இவருடைய பரிசுத்த எலும்பின் அருளிக்கம் பூஜிதமாக பொதுவணக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! இவருடைய மற்ற பரிசுத்த அருளிக்கங்கள் அப்பகுதியிலுள்ள மற்ற தேவாலயங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன!🌹✝
🌹அர்ச்.ஹாஸ்பிசியுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
✨
🇻🇦
May 2️⃣1️⃣
Feast 🌟
ST. HOSPITIUS
Hospitius was a isolated monk in his native Egypt towards the beginning of the 6th century.
He immigrated to Gaul (France) and retired to a dilapidated tower in Villafranca, one league from Nice situated on the peninsula of Cap Ferrat.
He girded himself with a heavy iron chain and lived on bread and dates only. During Lent he redoubled his austerities, and, in order to conform his life more closely to that of the anchorites of Egypt, ate nothing but roots. For his great virtues Heaven honored him with the gifts of prophecy and of miracles.
The people of the surrounding frequently came to ask for his guidance and he forewarned them on one occasion, about the year 575, of an impending invasion of Gaul by the barbarian tribe of the Lombards.
When the Lombards invaded Gaul, some soldiers came to the tower in which Hospitius was staying, finding Hospitius loaded with chains and living in isolation, thought he was some type of criminal; Hospitius agreed that he was a terrible sinner. Convinced he was a danger of some sort, one of the soldiers raised his sword to kill Hospitius, but the soldier‘s arm became paralyzed, and could move again only after Hospitius made the sign of the cross over it.
The soldier was converted on the spot, and spent the rest of his life in service to God by embracing the religious life, and was known personally to St. Gregory of Tours.
It was from him that St. Gregory, to whom we are indebted for the meagre details of the saint's life, learned of the austerities and numerous miracles of the recluse.
St Hospitius foretold his death and was buried by his friend, Austadius, Bishop of Cimiez.
Saint Hospitius died on 21 May, 581 at Cap Ferrat ( also called Cap Saint-Sospis or Cap Saint-Hospice), near Villefranche-sur-Mer, in the department of Alpes-Maritimes, France.
🍁🍁🍁🍁🍁🍁🍁
St. Hospitius is still venerated in the Diocese of Nice at the Cathedral of Saint Reparata. The Cathedral Church possesses a small bone of his hand; other relics are kept in the churches of Villefranche-sur-Mer, La Turbie, and San-Sospis.
✝
🔵
To Read more
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக