Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
சனி, 22 பிப்ரவரி, 2025
சப்தரிகை ஞாயிற்றுக்கிழமைக்கான பிரசங்கம்: இரட்சணியத்தினுடைய முக்கியத்துவத்தின் பேரில்- அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்
February 21 - வேதசாட்சியான அர்ச். பீட்டர் மாவிமேனுஸ் - மேற்றிராணியாருமான அர்ச்.செவரியானுஸ்
பிப்ரவரி21 - வேதசாட்சியான அர்ச். பீட்டர் மாவிமேனுஸ் திருநாள்
இவர் டமாஸ்கஸ் நகரிலுள்ள ஒரு துறவற மடத்தில்
சந்நியாசியாக ஜீவித்து வந்தார். ஒரு சமயம், இவர் வியாதியாய் இருந்தபோது, இவரைச் சந்திக்க
வந்த அராபிய மகமதியர்கள், இவரிடம், இஸ்லாம்
மதத்திற்கு மாறும்படி கூறினர்; உடனே, இவர்,
அவர்களிடம்,
”கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளாத எவனும்,
உங்களுடைய கள்ள தீர்க்கதரிசியான முகமது நபியைப் போல் நித்திய
தண்டனையை அடைந்து நரகத்திற்குப் போவான்!” என்று
அறிவித்தார். இதைக் கேட்டு ஆத்திர மடைந்த மூர்க்கர்களான அந்த மகமதியர்கள்,
அர்ச்.பீட்டர் மாவிமேனுஸை அங்கேயே கொன்று போட்டனர்; கி.பி.743ம் வருடம், அர்ச்.பீட்டர் மாவிமேனுஸ்,
வேதசாட்சிய முடியைப் பெற்றுக்கொண்டார்.
கள்ள தீர்க்கதரிசியான முகம்மது நபி தோற்றுவித்த மிகப்
பெரிய பதிதத் தப்பறையான மதமாகிய இஸ்லாமிய மதத்தைப் பற்றியும், நபியைப் பற்றியும் அர்ச்சிஷ்டவர்கள்
அநேகக் காரியங்களைக் கூறியிருக்கின்றனர்; அவற்றிலிருந்து
ஒரு சிலவற்றைப் பார்ப்போம்:
9ம் நூற்றாண்டில், ஸ்பெயின் நாட்டை மகமதியர்கள் ஆக்கிரமித்திருந்த போது, அநேகக் கத்தோலிக்கத் துறவிகளும் கன்னியர்களும், விசுவாசிகளும்
வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்; அப்போது வேதசாட்சிகளாகக்
கொல்லப்பட்டவர்களில் ஒரு சில குறிப்பிட்ட வேதசாட்சிகள் (அர்ச்.ஹபேனிதுஸ்,
அர்ச்.ஜெரேமியா, அர்ச்.பீட்டர், அர்ச். சபினியான், அர்ச்.வாலாபோன்சுஸ், அர்ச் விஸ்ட்ரெமுன்டுஸ்) பின்வருமாறு கூறியுள்ளனர்: “திவ்ய சேசுகிறீஸ்துநாதா் சுவாமி! தான், மெய்யான
சர்வேசுரன்! என்று நாங்கள் ஏற்று விசுவசிக்கிறோம். ஆனால், உங்கள் கள்ள தீர்க்கதரிசியான முகமது நபி அந்திக்கிறீஸ்துவினுடையவும்,
அவசங்கையான கள்ள மதத்தினுடைய போதகக்தினு டையவும், முன்னோடியாயிருக்கிறான்!”.
வேதபாரகரும், கத்தோலிக்க துறவியுமான அர்ச்.தமாசின் அருளப்பர், இஸ்லாம்
என்ற பதித மதத்தைப் பற்றிப் பின்வருமாறு எழுதியுள்ளார்: “இஸ்லாமியருடைய
மூட நம்பிக்கைகள், இன்று வரை மக்களை தப்பறையில்
வைத்திருக்கின்றன. அக்காலத் திலிருந்து, இன்றுவரை, அந்திக் கிறீஸ்துவின் முன்னோடியான முகமது நபி, அம்மக்களின்
நடுவில் தோன்றி இருக்கிறான். இந்த மனிதன், பழைய ஏற்பாடு,
புதிய ஏற்பாடு, ஆகிய வேதாகமங்களைப் பற்றி
தெளிவில்லாத அறிவுடன் மேலோட்டமாகப் படித்ததாலும், ஆரிய
பதிதத்தைச் சார்ந்த ஒரு துறவியுடன் உரையாடி, அத்துறவியின்
வழிநடத்துதலினால் பாதிக்கப்பட்டதாலும், இவன், ஒரு சொந்த பதித மதத்தை உருவாக்கினான். அது தான் இஸ்லாமிய மதம்.
பின்னர், இவன்
ஒரு பக்திமானைப்போல் தோற்றமளித்து, மக்களுடைய நல்லெண்ணத்
திற்குள் தன்னையே பெரிய ஆளாக நம்ப வைத்தான்; பின்,
பரலோகத்திலிருந்து தனக்கு ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டதாகக்
கூறினான்; அதில் கேலிக்குரிய காரியங்களை எழுதியிருந்தான்;
கத்தோலிக்க வேதத்தினுடைய சில காரியங்களை ஆங்காங்கே எழுதி
மழுப்பியிருந்தான்; இப்புத்தகத்தை, வணக்கத்திற்குரிய
புத்தகமாக மக்களுக்குக் கொடுத்தான்.
வேதசாட்சியான அர்ச்.பீட்டர் மாவிமேனுஸே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
—
பிப்ரவரி21 - வேதசாட்சியும் ஸ்கிதோபோலிஸ் மேற்றிராணியாருமான அர்ச்.செவரியானுஸ்
மார்சியன் மற்றும் அர்ச்.புல்கேரியா கிழக்கு உரோமை
சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட காலத்தில், சால்செடன்
பொதுச்சங்கம் கூட்டப்பட்டது; இச்சங்கம் கிழக்கத்திய
நாடுகளில் தோன்றியிருந்த யுடிசியன் பதிதத் தப்பறையைக் கண்டனம் செய்து கண்டித்தது!
நமதாண்டவருக்கு தேவ சுபாவம் மனித சுபாவம் என்கிற இரு சுபாவங்களும் இருப்பதை,
இப்பதிதத் தப்பறையினர், ஏற்றுக்கொள்ளவில்லை!
மாறாக, ஆண்டவருக்கு ஒரே ஒரு சுபாவம் தான் உண்டு என்று
தப்பறையாக போதித்து வந்த இந்த பதிதர்கள், நாளடைவில், ஆண்டவருக்கு தேவத்துவமும் இல்லை, என்று போதிக்கவும்
துணிந்தனர்! பாலஸ்தீனிய துறவற மடங்களின் மடாதிபதிகளில் மாபெரும் அதிகாரத்தையுடைய
மடாதிபதியான அர்ச். யுதிமியுஸ் மற்றும் அ்நநாட்டிலிருந்த அநேக துறவியர்களும்,
இப்பதிதத் தப்பறையைக் கண்டித்துக் கண்டனம் செய்தனர்!
இப்பதிதத்திற்கு எதிராக இப்பொதுச் சங்கம் இயற்றிய தீர்மானங்களை அங்கீகரித்து
ஏற்றுக்கொண்டனர்!
ஆனால், யுடிசியன் பதிதத் தப்பறையைத் தழுவியிருந்த
தியோடோசியுஸ் என்கிற அறிவிலியும், கொடுங்கோண்மை
குணமுடையவனுமான ஒரு துறவி, அநீதியான முறையில் , ஜெருசலேம் மேற்றிராசனத்தின் அரண்மனையை அபகரித்து, அதன்
மேற்றிராணியாரை, வலுவந்தமாக வெளியேற்றினான். இந்த பதிதன்,
இறந்துபோயிருந்த சின்ன தியோடோசியுஸ் என்ற சக்கரவர்த்தியின்
மனைவியும், சக்கரவர்த்தினியுமான யுடோக்சியாவின் ஆதரவிலும்,
பாதுகாப்பிலும், இவ்விதம் கொடூரமாக நடந்து கொண்டிருந்தான்!
அச்சமயம், யுடோக்சியாவும் ஜெருசலேமில் தங்கியிருந்தாள். இப்பதிதன், மற்ற அநேக
சகத் துறவியரையும் தன் தப்பறையான பதிதத்திற்குள் சேர்ந்து கொள்ளும்படிச்
செய்தான்! இப்பதிதத்தில் சேராத மற்ற
எல்லாரையும், இவன் கொடூரமாகக் கொன்று போட ஏற்பாடு செய்தான்;
ஜெருசலேம் நகரமே இரத்த வெள்ளத்தினால் நிரம்பியது! பெரிய படைவிரர்களுடைய சேனையைக் கொண்டு, அந்நாடு முழுவதும் தன்னுடைய பதிதத் தப்பறையை வலுவந்தமாக பரப்புவதற்காக,
அதை எதிர்த்த எல்லா மக்களையும் கொன்று போட்டு, பேரழிவைக் கொண்டு வந்தான். இருப்பினும்,
அநேகக் கிறீஸ்துவர்கள், சத்திய வேத
விசுவாசத்திற்காக, இவனையும், இவனுடைய
கொடூர உபத்திரவங்களையும், துணிவுடன் எதிர்த்து நின்றனர்! இவர்களில், ஸ்கிதோபோலிஸ்
மேற்றிராணியாரான அர்ச். செவெரியன், மிக அதிக உத்தம மேரையுடனும், உறுதியுடனும், சத்திய வேத விசுவாசத்தில்
நிலைத்திருந்தார்; அதற்கான மகிமையான வேதசாட்சிய கிரீடத்தைப்
பெற்றுக்கொண்டார்; படை வீரர்கள் இவரைப் பிடித்து, நகரத்திற்கு
வெளியே இழுத்துச் சென்று, அங்கே இவரைக் கொன்று போட்டனர்!
வேதசாட்சியும் ஸ்கிதோபோலிஸ் மேற்றிராணியாருமான
அர்ச்.செவரியானுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
February 20 - St. Eleutherius of Tournai
பிப்ரவரி 20ம் தேதி
வேதசாட்சியான அர்ச்.எலியுதெரியுஸ்
இவர் முதல் சில்டெரிக் அரசனுடைய காலத்தில் டூர்னை என்கிற இடத்தில் பிறந்தார். கிறீஸ்துவர்கள் உபத்திரவப்படுத்தப்பட்டதால், இவருடைய குடும்பத்தினர்,பிலான்டினியம் என்ற கிராமத்திற்கு ஓடினர். ஆனால், பிரான்ஸ் நாட்டின் குளோவிஸ் அரசன் கிறீஸ்துவராக மாறி யதும்,இவருடைய குடும்பத்தினர், இவர்களுடைய கிராமத்தில் ஒரு தேவாலயத்தைக் கட்டினர்.
ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில், வடக்கு பிரான்ஸ் பகுதியில் திருச்சபையின் அதிகாரிகளை, அர்ச்.ரெமிஜியுஸ் ஏற்படுத்திய பிறகு, டூர்னையின் மேற்றிராணியாராக, எலியுதெரியுஸ் அபிஷேகம் செய் யப்பட்டார். பாப்பரசர், ஆரியப் பதிதத்திலிருந்து திருச்சபையைப் பாதுகாப்பதைப் பற்றி, இவரிடம் ஆலோசனை நடத்தினார்.
ஆரியப் பதிதர்களுடன், இவர் மிகுந்த ஞானத்துடன் வேத சத்தியங்கள் பற்றி தர்க்கம் செய்து வாதாடினார்; இவரை அவர்கள் வாதத்தினால் ஜெயிக்கக் கூடவில்லை, என்பதால், அப்பதிதர்கள், இவர் மேல் வெகுவாகக் கோபமடைந்தனர். இவர் ஒருநாள் தேவாலயத்திற்குச் செல்கிற வழியில், ஆரியப் பதிதர்களுடைய கூட்டத்தினால், அடிக்கப்பட்டார்; அதனால் ஏற்பட்ட காயங்களால், திரளான இரத்தம் சிந்தி, கி.பி.532ம் வருடம் வேதசாட்சியாக மரித்தார்.
இவர் மரிக்கும்போது, தன் மேய்ப்பின் கீழ் இருந்த ஞான மந்தை யை அர்ச்.மெதார்துவிடம் ஒப்படைத்தார்.
அர்ச்.எலியுதெரியுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
St. Eleutherius of Tournai – Defender of the Faith
Feast Day: February 20
St. Eleutherius was a native of Tournai, born during the reign of Childeric I. Due to Christian persecution, his family fled to Blandinium. After King Clovis of France converted to Christianity, they built a church there.
He was consecrated bishop of Tournai following the church's reorganization by St. Remigius in the late 5th century. A strong defender against Arianism, he was consulted by the Pope on safeguarding his people. His arguments angered the Arians, and he was fatally attacked while on his way to church in 532 A.D.
On his deathbed, St. Eleutherius entrusted his flock to St. Medardus.
✝ St. Eleutherius, pray for us!
Tag: #SaintEleutherius #MartyrOfFaith #DefenderOfTruth #CatholicSaints
வியாழன், 20 பிப்ரவரி, 2025
Saints Quotes in Tamil
February 16 - ST. ONESIMUS
பிப்ரவரி 16ம் தேதி
வேத சாட்சியான அர்ச்சி ஒனேசிமுஸ்
இவர் பிறப்பினால் ஃபிர்ஜியனாகவும், பிலமோன் என்பவரின் அடிமையாகவும் இருந்தார். அர்ச். பிலமோன் என்பவர் ஏற்கனவே அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரால் கிறிஸ்துவராக மனந்திருப்பப்பட்டிருந்தார்.
ஒனேசிமுஸ், தன் எஜமானாகிய பிலோமனிடமிருந்து திருடிவிட்டு ஓடிப்போனார்; பின் எதிர்பாராத விதமாக உரோமையில் சிறைப்பட்டிருந்த அர்ச். சின்னப்பரை இவர் சந்திக்க நேர்ந்தது. அர்ச். சின்னப்பர் இவரை மனந்திருப்பி, ஞானஸ்நானம் கொடுத்தார். பின், இவரை, இவருடைய எஜமானரான அர்ச். பிலமோனிடம் அனுப்பி வைத்தார். அச்சமயம், அர்ச். சின்னப்பர் ஒரு அழகிய கடிதத்தை பிலமோனுக்கு எழுதி இவரிடம் கொடுத்து அனுப்பினார்.
அது, சுவிசேஷத்தில் நமக்கு பிலமோனுக்கு எழுதிய நிரூபமாகக் கிடைத்திருக்கிறது! அந்த கடிதத்தில், பிலமோனிடம், அவருடைய அடிமையான ஒனேசிமுஸை மன்னிக்கும்படியும், மன்னித்து, அவருடைய உதவியாளராக சேர்த்துக்கொள்ளும்படியும், அர்ச். சின்னப்பர் கேட்டுக் கொள்வதை வாசிக்கிறோம்.
அர்ச். சின்னப்பரின் அறிவுரையின்பேரில், பிலமோன் ஒனேசிமுஸை மன்னித்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து முழு சுதந்திரத்தை அளித்தார். அதன் பின், தன் ஞானதந்தையான அர்ச். சின்னப்பர் ஏற்கனவே கேட்டுக்கொண்டதன்பேரில், ஒனேசிமுஸ் திரும்பி அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரிடமே வந்து சேர்ந்தார். அவருக்கு பிரமாணிக்கத்துடன் ஊழியம் செய்து வந்தார்.
அர்ச். சின்னப்பர் கொலோசியருக்கு எழுதிய நிரூபத்தை, தீகிக்கு என்பவரிடம் கொடுத்தனுப்பியபோது, அவருடன் ஒனேசிமுஸையும் சேர்த்து அனுப்பி வைத்தார் (கொலொ 4:7-9). பின்னர், ஒனேசிமுஸ் உரோமாபுரி ஆளுநனால் மிகக் கொடிய உபத்திரவங்களால் சித்ரவதை செய்யப்பட்டார். திருமணம் செய்யாமல் பரிசுத்த ஜீவியம் ஜீவிக்கும் கத்தோலிக்கக் குருத்துவத்தைப் பற்றி இவர் பிரசங்கித்தபோது, அதைக் கேட்டுக் கோபமடைந்த உரோமை ஆளுநன், இவரை சிறையிலடைத்து, 18 நாட்கள் தொடர்ந்து உபாதித்தான். இவருடைய கால்களையும், கைகளையும் குண்டாந்தடியால் அடித்து முறித்தனர்; பின் கல்லால் எறியப்பட்டு கி.பி. 95ம் வருடம் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
சர்வேசுரனை சிநேகிக்கிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக உதவுகிறதென்று அறிந்திருக்கிறோம்; அவர்கள், தேவ தீர்மானத்தின்படி, அர்ச்சிஷ்டவர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்களாமே! (அர்ச். சின்னப்பர் உரோமையருக்கு எழுதிய நிரூபம் 8:28).
அர்ச் ஒனேசிமுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அர்ச் அமலோற்பவ மாமரியே! வாழ்க!
February 16
Martyrdom
ST. ONESIMUS
Onesimus was a Phrygian by birth and a slave to Philemon, a person of influence who had been converted to the faith by St. Paul.
Onesimus robbed his master Philemon and then fled away, accidentally coming into contact with St. Paul, who was then a prisoner for the faith in Rome.
The Apostle Paul converted Onesimus and baptized him. St. Paul then sent him back to his master Philemon with the beautiful letter, which we know as the Epistle to Philemon.
In this letter, St. Paul requested Philemon to pardon his slave Onesimus so that he might become one of his own assistants.
Philemon pardoned him and set him at liberty. Onesimus then returned to his spiritual father, as St. Paul had requested, and thereafter faithfully served the Apostle.
St. Paul later made Onesimus, along with Tychicus, the bearer of his Epistle to the Colossians (Col. 4:7-9).
St. Onesimus was later cruelly tortured in Rome for eighteen days by the governor of that city, who was angered by his preaching on the merit of celibacy. His legs and thighs were broken with bludgeons, and he was then stoned to death in the year 95 AD.
"We know that to them that love God, all things work together unto good, to such as, according to his purpose, are called to be saints."
— St. Paul (Romans 8:28)
- #Christianity
- #Faith
- #Bible
- #Saints
- #Catholic
- #ChristianHistory
- #Martyrdom
- #EarlyChurch
- #EpistleToPhilemon
- #ApostolicFathers
- #NewTestament
- #BiblicalFigures
- #PaulineEpistles
- #BookOfColossians
- #Romans828
- #Forgiveness
- #Redemption
- #ChristianVirtues
- #FaithJourney
- #SpiritualGrowth
புதன், 19 பிப்ரவரி, 2025
Catholic Tidbit- 4 The Fastest Canonization in History
Catholic Tidbit: The Fastest Canonization in History
The record for the fastest canonization in the Catholic Church belongs to St. Peter of Verona (St. Peter Martyr).
He was a 13th-century Dominican friar and preacher who was assassinated for his faith in 1252. Miracles were reported almost immediately after his death, and less than a year later, on March 9, 1253, Pope Innocent IV officially canonized him—just 11 months after his martyrdom!
While St. Anthony of Padua’s canonization (in 1232) was also very fast, St. Peter of Verona holds the record by just a few weeks. His feast day is celebrated on April 29.
St. Peter of Verona, pray for us!
#Catholic_Tidbit #The_Fastest_Canonization_in_History
Catholic Tidbit - 3 St. Peter Canisius
Catholic Tidbit - 2 St. Anthony
Catholic Tidbit: St. Anthony of Padua’s Record-Breaking Canonization
St. Anthony of Padua, one of the most beloved saints in the Catholic Church, holds the record for the fastest canonization in history!
After his death on June 13, 1231, reports of miracles at his tomb spread rapidly. Just 11 months later, on May 30, 1232, Pope Gregory IX officially declared him a saint—an incredibly fast process, considering canonizations often take decades or even centuries.
This quick canonization was a testament to his holiness, preaching, and the countless miracles attributed to his intercession. Today, he is widely venerated as the Patron Saint of Lost Things and continues to be one of the most invoked saints in Catholic tradition.
St. Anthony of Padua, pray for us!
#Catholic #Tidbit: #St.Anthony
Catholic Tidbit: The Meaning of "Amen"
Catholic Tidbit: The Meaning of "Amen"
The word "Amen" is one of the most frequently used words in Catholic prayers, hymns, and the Mass. But what does it actually mean?
"Amen" comes from Hebrew and means "so be it" or "truly". When we say "Amen" at the end of a prayer, we are affirming our belief in what has been said and expressing trust in God.
Interestingly, Jesus often used "Amen, Amen, I say to you" in the Gospels to emphasize the truth of His teachings (e.g., John 6:47). In the Mass, our final "Amen"—especially at the Doxology ("Through Him, with Him, and in Him…")—is known as the "Great Amen", signifying our full assent to the Eucharistic Prayer.
So next time you say "Amen," remember: it's more than just an ending—it's a powerful declaration of faith!
#catholictamil #catholictidbit #tidbit
Feb. 19 அர்ச். கொன்ராட்
செவ்வாய், 18 பிப்ரவரி, 2025
Feb. 18 - Saint Bernadette of Lourdes
பிப்ரவரி 18ம் தேதி
அர்ச்.பெர்னதெத்தம்மாள் திருநாள்
இவளுடைய ஞானஸ்நானப் பெயர், மேரி பெர்னார்டு சுபீரூஸ். அர்ச். பெர்னதெத் சுபீரூஸ், 1844ம் வருடம், ஜனவரி 7ம் தேதி, பிரான்சிலுள்ள தெற்குப் பகுதியின் பிரனீஸ் மலைக் தொடரிலிருக்கும் லூர்து நகரில் பிறந்தாள். பிரான்சிஸ் சுபீரோ என்பவர், இவளுடைய தந்தை, லூயிஸ் காஸ்டிராட் , இவளுடைய தாய். இருவரும் பக்தியுள்ள நல்ல கத்தோலிக்கர்கள்; வேத கடமைகளை பிரமாணிக்கத்துடன் நிறைவேற்றி வந்தனர்; அதே சமயம் வறுமையில் உழன்ற ஏழைக்குடி யானவர்கள். பெர்னதெத், இவர்களுடைய மூத்த மகள்; இவர்களுக்கு 11 பிள்ளைகள் பிறந்தனர். பிரான்சிஸ், ஒரு அரவை ஆலையை நிர்வகித்து வந்திருந்தார்; நஷ்டமடைந்ததால், அந்த அரலை ஆலையை மூடும்படியாயிற்று: அதன் காரணமாக, பிரான்சிஸ் சுபீரோவின் குடும்பம் வறிய நிலையை அடைந்தது; 1858ம் வருடம், பெர்னதெத்திற்குக் காலரா நோய் வந்தது. மிகவும் பலவீனமடைந்தாள். பின் அதைத் தொடர்ந்து, ஆஸ்த்துமா வந்தது; இவளுடைய ஜீவியகாலம் முழுவதும் இந்நோய் இவளை உபாதித்துக்கொண்டிருந்தது.அடுத்து அடுத்துத் தொடர்ச்சியாக அநேக வியாதிகளால், இறுதியாக, காலில் ஏற்பட்ட ஒரு புண்ணினால் இறக்கும்வரை, மிகுந்த துன்ப உபத்திரவத்திற்கு ஆளானாள்.
1858ம் வருடம், பிப்ரவரி 11ம் தேதியன்று, இவளுக்கு 14 வய தானபோது, அருகிலிருந்த மசபியேல் என்ற பாறையின் அடிப்பகுதியில் அமையப்பெற்றிருந்த ஒரு குகையில், மகா பரிசுத்த தேவமாதாவின் காட்சிகள் பெறும் பாக்கியம் பெற்றாள். 1858ம் வருடம், பிப்ரவரி 11ம் தேதியன்று, முதல் காட்சியைப் பெற்றாள்; அன்றிலிருந்து, அவ்வருடம் ஜுலை 16ம் தேதி வரை, மகா பரிசுத்த தேவமாதாவின் காட்சிகளை, தொடர்ச்சியாக 18 முறை இவள் பெற்றாள்.
மகா பரிசுத்த தேவமாதா தாமே, தமது பிரசன்னத்தினால், புது மையான ஒரு நீரூற்றை மசபியேல் குகையினருகில் ஏற்படுத்தும்படி யாக மண்ணைத் தோண்டி, அதிலிருக்கும் நீரைப் பருகும்படி பெர்ன தெத்தம்மாளுக்குக் கட்டளையிட்டார்கள்; முதலில் சேறு நிறைந்ததாக இருந்தபோதே, அதை பெர்னதெத் , தேவமாதாவிற்குக் கீழ்ப்படிந்து பருகினாள்; பின்னர், அதுவே பொங்கி வழிந்தோடும் மாபெரும் நீரூற்றாகவும், புதுமையாக வியாதிகளைக் குணப்படுத்தும் நீரூற் றாகவும் மாறியது. வெடிவிபத்தில் தன் கண்ணை இழந்த ஒருவன், இத்தண்ணீரில் கழுவினான்; புதுமையாகக் கண்பார்வை அடைந்தான்: இறக்கவிருந்த ஒரு குழந்தை இப்புதுமைத் தண்ணீரினுள் அமிழ்த்தி எடுக்கப்பட்டவுடன் புதுமையாக உயிர்பெற்று, நடக்கத் துவக்கியது. இது போன்ற எண்ணற்ற புதுமைகள் நிகழலாயின.
1858ம் வருடம் மார்ச் 25ம் தேதியன்று,மங்களவார்க்தைத் திரு நாளன்று, மகா பரிசுத்த தேவமாதா அளித்த காட்சியின்போது, பெர்னதைத்தம்மாளிடம், “நாமே அமலோற்பவம்!” என்று கூறித் தம்மை வெளிப்படுத்தினார்கள். மேலும், லூர்து நகரில் தமக்குத் தோத்திரமாக ஒரு தேவாலயத்தைக் கட்டும்படி கூறினார்கள்; பெர்னதெத்தம்மாள், தான் கண்ட இப்பரலோகக் காட்சிகள் எல்லாம் உண்மையானவை என்று திடமாக எல்லோரிடமும் கூறினாள்; பெற்றோர்களிடமும், நகர அதிகாரிகளிடமும், பங்கு சுவாமியாரிடமும், திருச்சபை அதிகாரிகளிடமும், இக்காட்சிகள் பற்றிய விசாரணையின்போது, மிக ஸ்திரமாகத் தான் கூறுபவை அனைத்தும் உண்மையானவை! என்று உறுதியாக நின்றாள்; மகா பரிசுத்த தேவமாதா தன்னிடம் கூறிய செய்திகளை பிரமாணிக்கத்துடன் பங்கு சுவாமியாரிடமும், மற்றவர்களிடமும் அறிவித்தாள்.
1858ம் வருடம், ஜூலை 28ம் தேதியன்று, திருச்சபை மசபியேல் குகையை அதிகாரபூர்வமாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது; நகர அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள் விலகின! பக்தி முயற்சிகள் சுதந்திரமாக விசுவாசிகளால் அனுசரிக்கப்பட்டன. 1860ம் வருடம், நெவர்ஸ் நகரிலுள்ள பிறர்சிநேகக் கன்னியர் மடத்தில், பெர்னதெத் , தனது 16வது வயதில் தங்கி, பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பதற்கான ஏற்பாடு நடந்தது. பின்னர், அதே மடத்தில் 22 வயது வரை, பெர்ன தெத்தம்மாள் தங்கியிருந்தாள்.
1866ம் வருடம், தனது 22வது வயதில், நெவர்ஸிலுள்ள பிறர் சிநேகக் கன்னியர் மடத்தில் நவசந்நியாசியாக பெர்னதெத் சேர்க்கப் பட்டாள்.அங்கேயே, அவள் சிறு சிறு வேலைகள் செய்துகொண்டு, மறைந்த ஜீவியம் ஜீவித்தாள்; எஞ்சிய காலமெல்லாம்,ஆஸ்த்துமா நோயினாலும், காலில் ஏற்பட்டஒரு புண்ணினாலும், விவரிக்க முடி யாத வேதனையை அனுபவித்து வந்தாள். “லூர்து நகரில் அநேக வியாதியஸ்தர்கள் புதுமை நீரூற்றில் குணமடைவதுபோல், ஏன் நீங்களும் அங்கு சென்று, குணமடையக்கூடாது?” என்று கேட்டதற்கு, அர்ச்.பெர்னதெத்தம்மாள், “மகா பரிசுத்த தேவ மாதா , இவ்வுலகத்தில் எனக்கு, சந்தோஷத்தை வாக்களிக்க வில்லை! மறுவுலகத்தில் தான் எனக்கு சந்தோஷம் கிடைக்கும்! என்று வாக்களித்திருக்கிறார்கள்” என்று கூறுவாள். மகா பரிசுத்த தேவமாதா, தன்னிடம் கேட்டுக்கொண்டது போல, உபாதிக்கும் இத்துன்பவேதனைகளை, தபசாகவும், பரிகாரமாகவும் ஒப்புக்கொடுத்து வந்தாள். “சர்வேசுரன், என்னை ஒரு முக்கிய வேலைக்காகப் பயன்படுத்தினார்; இப்போது, இந்தத் துடைப்பத்திற்கான அலுவல் முடிந்து விட்டதால், இந்தக் துடைப்பமாகிய என்னை ஒரு மூலையில் வைத்திருக்கிறார்” என்று அர்ச்.பெர்னதெத் கூறுவாள்.
1879ம் வருடம், ஏப்ரல் 16ம் தேதியன்று பாக்கியமாய் மரித்தாள். 11ம் பத்திநாதர் பாப்பரசர், 1933ம் வருடம், டிசம்பர் 8ம் தேதியன்று இவளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டத்தை அளித்தார்.
நெவர்ஸ் பிறா்சிநேகக்கன்னியர் மடத்தின் தேவாலயத்தில், இவளின் பரிசுத்த அழியாத சரீரம் பீடத்தினடியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அர்ச். பெர்னதெத்தம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
Saint Bernadette of Lourdes
🌿 Marie-Bernarde Soubirous 🌿
📅 Born: January 7, 1844 – Lourdes, France
✝️ Died: April 16, 1879 – Nevers, France
🙏 Canonized: December 8, 1933
🎉 Feast Day: February 18
A Life of Faith and Devotion
Saint Bernadette Soubirous, a humble and frail young girl, was born into a poor yet deeply pious family in Lourdes, nestled in the Pyrenees mountains. Despite her fragile health, at the tender age of 14, she was blessed with eighteen apparitions of the Blessed Virgin Mary at the Grotto of Massabielle between February 11 and July 16, 1858.
During these miraculous encounters, the Most Holy Virgin entrusted her with a divine message, revealing herself with the words:
✨ “I am the Immaculate Conception.” ✨
Mary instructed Bernadette to share the message of prayer, penance, and healing, and to reveal the sacred waters of the now-famous Lourdes spring, a place where countless miracles and healings have since taken place. Among them, a worker who had lost an eye regained his sight, and a dying child was miraculously restored to health after being immersed in the waters.
The authorities tried to prevent the crowds from gathering at the Grotto, but faith could not be silenced. The devotion spread, and Lourdes became one of the world’s greatest pilgrimage sites.
A Life of Humility & Suffering
💠 Frail in health, Bernadette suffered from cholera, asthma, and other ailments throughout her life. Seeking refuge from public scrutiny, she entered the Sisters of Charity of Nevers in 1866, dedicating her life to prayer and service.
💠 Despite great pain and suffering, she bore everything with profound faith and love, offering her suffering as penance. She humbly referred to herself as “a broom that Our Lady has used and then put aside.”
💠 On April 16, 1879, at just 35 years old, Bernadette entered eternal rest, fulfilling the Blessed Virgin’s request for a life of penance, humility, and unwavering devotion.
Her Enduring Legacy
🌟 Canonized on December 8, 1933, by Pope Pius XI, St. Bernadette’s incorrupt body rests in the chapel of the St. Gildard Convent in Nevers, drawing pilgrims from around the world.
🌟 Lourdes remains a beacon of faith and healing, where millions seek spiritual and physical restoration through the intercession of Our Lady of Lourdes and St. Bernadette.
On this blessed Feast of St. Bernadette, may we be inspired by her unwavering faith, humility, and love for Our Blessed Mother. 🙏💙
🕊 St. Bernadette, pray for us! 🕊
🌿 Ave Maria! 🌿