'Sanguis Martyrum Semen Christianorum'
(வேதசாட்சிகளின் இரத்தம் கிறீஸ்துவர்களை விளைவிக்கும் வித்து!)
கத்தோலிக்க விசுவாசத்திற்காக உயிர்நீத்தவர்களின் வரலாறு
(இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் பிரிவினையின் போது தங்களது சத்திய கத் விசுவாசத்தில் உறுதியாக இருந்து பதிகத்தை மறுத்து தங்களுடைய இன்னுயிரை நீத்தவர்களின் வரலாறு இங்கே வெளியிடப்படுகிறது.)
அது 1581 டிசம்பர் முதல்நாள் அன்று அதிகாலையிலிருந்தே மழை · ஒரே அடை மழை! விடாது பெய்யும் அந்த மழையையும் அலட்சியம் செய்து பெரும் கூட்டம் லண்டன் டைபர்ன் (Tyburn)சிறைச்சாலையின் முகப்பிலே நின்றுகொண்டிருந்தது. வழக்கமாக அங்கே மரண தண்டனை விதிக்கப்படும். மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நிறைவேற்றப்படும். தண்டனைக் காட்சியைக் காண மக்கள் வருவர். ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக மக்கள் பெருங்கூட்டமாகக் கூடியுள்ளனரே? என்ன காரணம், யார் தண்டனை பெறப் போகிறார்கள்? ஆம்! இன்று லண்டன் மாநகரின் புகழ்பெற்ற பேச்சாளரும் எழுத்தாளரும் சேசு சபை குருவுமான எட்மண்ட் காம்பியன் மரண தண்டனை பெறவிருக்கிறார்.
அங்கே கூடியிருந்த மக்கள் மனதில் “ஐயோ! இப்படி கொடூர தண்டனை பெறுவதற்கு அவர் செய்த குற்றம்தான் என்ன? அரசி ஏற்படுத்தியுள்ள புராட்டஸ்டான்ட் பதிதத்தை ஏற்கவில்லை பாப்பரசரை மறுத்து அரசியே திருச்சபையின் தலைவி என்பதை ஏற்க மறுத்தது இங்கிலாந்து நாட்டில் பாப்புவின் வேதமான கத்.திருச்சபையை அரசுக்கு விரோதமாக போதித்தது இவைகளே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள். இதற்காகத் தானே இங்கே தினமும் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது" என்றெல்லாம் எண்ண அலைகள் ஓடச் செய்வதறியாது திகைத்தனர். தங்களது பொக்கிஷமான கத். விசுவாசம் தங்கள் நாட்டில் அழிக்கப்பட்டு விட்டதே என்ற பரிதாப ஆதங்கம் உள்ளத்தில் எழுந்தாலும் கொடூர தண்டனையைக் குறித்து வாயடைத்தும் போனார்கள்.
இதற்குள் அங்கே ஆரவாரம் எழ, எட்மண்ட் காம்பியன் குரூரமாக இழுத்து வரப்பட்டார். ஒளி வீசிப் பிரகாசமாக ஜொலிக்கும் அவரது முகத்தில் எந்தவிதமான மரண பயமோ வேதனையோ நடுக்கமோ இல்லாததைக் கண்டு மக்கள் கூட்டம் திகைத்தது. அவர் மக்களை ஆசிர்வதிப்பதும், ஏதோ கூறி ஜெபிப்பதும் குழுமியிருந்த மக்கள் கூட்டத்திற்கு பரபரப்பை ஊட்டியது. அவர் தூக்குமரத்தின் அருகே நின்று பேசுகிறார். அதனை கேட்க மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். சப்தம் சரியாக கேட்கவில்லை. "...நான் சத்திய வேதத்திற்காக மரணமடைகிறேன். இங்கிலாந்து அரசிக்காக ஜெபிக்கிறேன்... என் நாடே - இங்கிலாந்து தேசமே... உன் செல்வமான கத்தோலிக்க விசுவாசத்தை பெற்றுக் கொள்..." என்ற அவரது கடைசி பிரசங்கக் குரல் சன்னமாக பலவீனமாக ஒலிக்கிறது
அங்கே கூட்டத்தை விலக்கியவாறு முண்டி அடித்துக்கொண்டு ஒரு இளைஞன் முன்னேறினான். ஐயோ! தமது மனங்கவர்ந்த "காம்பியன் சுவாமி" மரண தண்டனை அடையவிருக்கிறாரே. நாம் சற்று பிந்தி போய் விட்டோமே, அவரது முகத்தை கடைசியாக ஒரு தடவையாவது பார்க்கவேண்டும் என்ற அவனது மனம் பரபரக்க கூட்டத்தை முரட்டுத்தனமாக விலக்கி முன்னேறினான். எரிச்சலடைந்த மக்கள் விலகி வழிவிட "அப்பா! இப்போது முதல் வரிசையைப் பிடித்தாகிவிட்டது. ஐயோ! அங்கே காம்பியன் தூக்கிலிடப்பட்டு விட்டாரே. இதோ அவரது உடல் தூக்குக் கயிறிலிருந்து வெட்டப்பட்டு கீழே விழத்தாட்டப்படுகின்றனவே... ஐயகோ! ஆ! அவரது உடல் கொடுமையாக கை கால்கள் வெட்டப்படுகின்றனவே. ஆ! இதென்னக் கொடூரம்!" அந்த இளைஞனின் உள்ளம் திருதிருவென எரிந்தது. கழிவிரக்கத்தால் துவண்டது. "ஆ! ஏன் இந்த கொடுமை. விசுவாசத்திற்கு பிரமாணிக்கம் காத்ததல்லவா! அப்படியானால் விசுவாசம் எத்துணை மேலானது, உயர்ந்தது, உன்னதமானது. மரணத்தைவிட சிறந்தது... விசுவாசம்". அவனது மனம் விசுவாச உறுதியால் நிரம்பியது. அச்சமயம் "ஆவென்ற" அலறல் அழுகைக் குரல் மக்களிடமிருந்து பெருக்கெடுக்க சலசலப்பு தோன்றியது.
அப்போது சற்று தூரத்தில் உடல் வெட்டப்படும் வேதசாட்சியின் இரத்தத் துளிகள் பீறிட்டு பாய்ந்து நாலா திசையிலும் சிதறி பூமியை நனைத்தது. அதன் ஒரு துளி முன் வரிசையில் மனவேதனையோடும் அச்சத்தோடும் நின்றுகொண்டிருந்த அந்த இளைஞனின் முகத்தில் தெறித்து விழுந்தது. வேதசாட்சியின் புனிதமான இரத்தம் தம் மீது தெறித்ததைக் கண்ட அந்த 23 வயதே நிரம்பிய இளைஞன் பதட்டமடைந்தாலும் மிகுந்த பக்தியோடு தமது கைக்குட்டையால் அதனை மெல்ல துடைத்தான். பொக்கிஷமென அதனை பக்தியோடு தம்மிடம் வைத்துக்கொண்டான். அந்த கணத்திலேயே அவனது உள்ளம் உருகத் துவங்கியது. விசுவாச உறுதியடையத் துவங்கியது.... ஆம்! அவன் மாறினான். உலக வாழ்வில் திளைக்க விரும்பிய அவன் இன்று முழு மனமாற்றம் அடைந்தான். அவன் வாழ்வு தலைகீழாகிப் போனது. ஆம்! அவனும் இன்னும் 10 ஆண்டுகளில் தன்னையே சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து குருவாகி, அங்கே கொல்லப்பட்ட காம்பியன் சுவாமியைப் போலவே சுத். விசுவாசத்திற்காக இதே இடத்தில் இதே சித்திரவதையைப் பெற்று மரணமடையவிருக்கிறான். அந்த இளைஞன் யார்? அவன்தான் ஹென்றி வால்போல் ஆம். வேதசாட்சியான அர்ச். ஹென்றி வால்போல் சே.ச.
இளமைப் பருவம்
ஹென்றி வால்போல் லண்டனை அடுத்த நார் ஃபோல்க் (Norfolk) நகரைச் சேர்ந்த கிறீஸ்டோபர் வால்போல் என்பவரின் மகனாக 1558 அக்டோபர் திங்களில் பிறந்தார். தந்தை பெரிய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், ஹென்றியின் மாமன் ஜான் வால்போல் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தார். 1720-ல் இங்கிலாந்தின் முதல் பிரதம மந்திரியான சர் இராபர்ட் என்பவரின் கொள்ளுத் தாத்தாவான கால்பட் வால்போல் என்பவர் ஹென்றியின் நெருங்கிய உறவினர். புகழ்பெற்ற குடும்பத்தில் வந்த ஹென்றி பிறந்தபோது அரசி மேரி ஆட்சியில் இருந்தாள் எனவே சுத்தோலிக்கர்கள் பயமின்றி வாழ்ந்தனர். 8வது வயதில் நார்விச் இலக்கண பள்ளிக்கு அனுப்பப்பட்டார். கல்வியில் சிறந்து விளங்கிய ஹென்றி லத்தீன், கிரேக்கம், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். இயல்பாகவே பாடல்கள் எழுதுவதில் திறம் பெற்றிருந்தார்.
அவன் பள்ளியில் படிக்கும் காலத்தில் இங்கிலாந்தில் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான அலைகள் எழுத் துவங்கின. பாப்பரசருக்கெதிரான செயல்கள் மீண்டும் அரங்கேறத் துவங்கின. தனது 17வது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அர்ச். பீட்டர் சுல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்கலானார். அச்சமயத்தில் ஆட்சி பொறுப்பில் வந்த எலிசபெத் அரசி கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரான செயல்பாடுகளால் புராட்டஸ்டாண்ட் பதிதம் மீண்டும் தலைதூக்கியது. தங்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருப்பவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அரசியான எலிசபெத் தனது தந்தை 8-ம் ஹென்றியையே மிஞ்சும் அளவில் கலாபனையைத் தூண்டி விட்டாள். இங்கிலாந்தில் திருச்சபையின் தலைவர் அரசியே என்ற சட்டத்தை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு உறுதி மொழி வழங்கவேண்டும். அப்படி உறுதிமொழி வழங்கிய மாணவர்கள் மட்டுமே தங்கள் கல்லூரி பட்டப்படிப்பில் தகுதியானவர்களாக உயர்த்தப்பட்டார்கள். இதனை சற்றும் விரும்பாத ஹென்றி அப்படி தேவதுரோகமான சட்டத்தை ஏற்றுப் பட்டம் பெறுவதைவிட, பட்டமே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார். எனவே கல்லூரியி விருந்து வெளியேறி 1579-ல் தமது 21-வது வயதில் Grays Inn என்ற விடுதியில் பணியாளராக சேர்ந்தார். அந்த ஆண்டில் தான் காம்பியன் குருப்பட்டம் பெற்று, இங்கிலாந்தில் கத். விசுவாசத்தை மக்களிடையே போதிப்பதற்கு இரகசியமாக இங்கிலாந்தில் நுழைந்தார்.
Grays Inn என்ற அந்த விடுதி கத்தோலிக்க இளைஞர்கள் ஒன்று சேரும் இடமாகத் திகழ்ந்தது. அங்கே பணக்காரக் குடும்பத்து இளைஞர்கள் ஒரு இயக்கமாகச் சேர்ந்து Douai மற்றும் உரோமையிலுள்ள ஆங்கில கல்லூரியில் பயிலும் குருமாணவர்களுக்கு உதவி செய்து வந்தனர். அந்த வகையில் காம்பியன் சுவாமியின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் ஆங்கிலிக்கன் பதிதத்தை எதிர்த்து கத். விசுவாசத்தை பாதுகாக்க 10 காரணங்கள் என்ற தனது புகழ்பெற்ற நூலினை வெளியிட அச்சகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் அர்ச். காம்பியனைக் கண்டு அவரது ஆற்றல்மிக்க விசுவாசம் நிறைந்த பிரசங்கங் களையும், வீர உரைகளையும் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார் ஹென்றி வால்போல். அதனால் தமது விசுவாச வாழ்வில் உறுதியடைந்தவர் காம்பியன் சுவாமி பிடிபட்டு விசாரணைக் கைதியாக்கப்பட்ட செய்தியால் வேதனை அடைந்தார். பின்னர் 1581 டிசம்பர் முதல் நாள் அன்று அவரது மரணதண்டனை நிறைவேற்றப்படும் போது அவரை கடைசி தடவையாக பார்க்கச் சென்றார். அப்போதுதான் காம்பியன் சுவாமியின் இரத்தத் துளிகள் முன் வரிசையில் பதைபதைப்புடன் நின்றிருந்த ஹென்றியின் மீது தெளித்தது. அதுவே அவரது வாழ்வை மாற்றக் காரணமாயிற்று.
தேவ அழைத்தல்
தமது அன்புக்குரிய சங். காம்பியன் சுவாமியின் வேதசாட்சியத்தைப் பார்த்ததிலிருந்து ஹென்றியின் உள்ளம் மாறிப்போனது. அவரைப் போலவே தாமும் விசுவாசத்தைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் எழத் துவங்கியது.
காம்பியனின் வாழ்வு, அவரது மரணம் பற்றிய நினைவுகள் மனதில் எழ அவைகளை கவிதையாக எழுதினார். "மிகவும் புகழ்பெற்ற புண்ணியம் நிறைந்த குருவான எட்மண்ட் காம்பியனின் வாழ்வும் மரணமும் பற்றிய கல்லறை வாசகம்" என்ற தலைப்பில் 30 பத்தி களைக் கொண்ட கவிதைத் தொகுப்பாக அது உருவெடுத்தது. அதன் இரு பத்திகள் கீழேத் தரப்பட்டுள்ளன:
"....அவர் வார்த்தைப்பாட்டால் வந்தார் பாவத்தை வென்றிடவே: அவரது ஆயுதம் ஜெபமே, வார்த்தைகளோ காக்கும் கேடயமே; மோட்சமே அவரது ஆறுதல், ஆனமாக்களை வெல்வதே அவரது ஆவல்; பசாசே அவரது எதிரி, பாவ உலகமே அவரது படைக்களம்; மகிழ்ச்சியே அவரது வெற்றி, நித்திய இன்பமே அவரது கூலி; கிறீஸ்துவே அவரது தலைவர், முடிவில்லா காலமுமாகவே அவருக்கு வரப்பிரசாதங்களை அருளிய சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக; தமது வேதசாட்சிகளை வாழ்த்திய கிறீஸ்துவுக்கு நன்றி என்றுமே எஜமானரின் திருமுகதரிசனமே அவரது மகிழ்ச்சி; அவரை எதிரியாகப் பாவித்தவர்களுக்குச் சாபமே. இத்தகைய மனிதரை தோற்றுவித்த கிறீஸ்துவின் நாமமே, எந்நாளும் வாழ்த்தப்பட நமக்குக் கடனே...!"
அவரது இந்த கவிதை தொகுப்பை ஹென்றி வாலேன்கர் (Henry Vallenger) என்ற செல்வந்தர் வெளியிட முன்வரவே அது அச்சிட்டு கத்தோலிக்க மக்களிடையே விநியோகிக்கப்பட்டது. அதன் ஒரு நகல் அரசின் கைகளில் சிக்கவே வந்தது ஆபத்து. உடனே அனைத்து பிரதி களையும் கைப்பற்றி அழிக்க உத்தரவுப் பிறப்பிக்கப்பட, அச்சிட உதவிய ஹென்றி வாவேன்கர் பிடிபட்டார்.
கொடிய வாதனைகளிலும் எழுதியவரின் பெயரை வெளியிட மறுத்துவிட்ட (அர்ச். ஹென்றி வால்போல்) அவருக்கு 100 பவுண்ட் பணம் அபராதம் விதிக்கப்பட்டு அவரது இரு காது மடல்களும் வெட்டப்பட்டன! கவிதை பிரதிகளை வைத்திருந்ததற்காக பல கத்தோலிக்க இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே விடுதியில் பணியாற்றி வந்த ஹென்றி வால்போல் தமது சக தோழர்களிடையே காம்பியன் சுவாமியின் வீர வைராக்கிய மரணத்தைப்பற்றி எப்போதும் எடுத்துக்கூறவே, அவர்களில் அநேகர் கத். விசுவாசத்தில் உறுதிப்பெற்றனர். அதனாலேயே அரசாங்கத்தின் சந்தேகப் பார்வை ஹென்றியின் மீது விழத் துவங்கியது. கவிதை எழுதியது அவர்தான் என்ற சான்று அரசுக்கு எழவே, கைதா வதிலிருந்து தப்பிக்க விடுதியிலிருந்து வெளியேறி தமது சொந்த Norfolk வீட்டிற்குச் சென்றார். இதற்கிடையில் அரசின் தேடுதல் வேட்டைத் துவங்கவே, சிலநாட்கள் பதுங்கு குழியில் பதுங்கி வாழ்ந்து வந்த அவரது உள்ளத்தில் காம்பியன் சுவாமியைப் போல குருவாக வேண்டும், அவரைப் போலவே தமது நாட்டில் கத். விசுவாசத்தை மீண்டும் மலரச் செய்ய உழைக்கவேண்டும் என்ற எண்ணம் உறுதியடையத் துவங்கவே, இரவுபகலாக காடுகளில் மறைந்து நடந்தே New Castle என்ற இடத்திற்கு வந்துசேர்ந்து பிரான்ஸ் நாட்டுக் கப்பலில் பயனித்து Rheins நகருக்கு 1582 ஜூலை 7-ம் நாள் வந்து சேர்ந்தார்.
பின்னர் Douai நகர் வந்து அங்குள்ள ஆங்கில கல்லூரியில் சேர்ந்து குருத்துவக் கல்வியை பெறலானார். கர்தினால் ஆலன் ஆண்டகையின் ஆதரவைப் பெற்று Rheins நகரில் 8 மாதங்கள் வேதசாஸ்திரம் கற்ற அவர் 1584 பிப்ரவரி 2-ம் நாளன்று தமது 26-வது வயதில் சேசுசபையில் உட்பட்டார். அங்கே ஆயத்தநிலை தயாரிப்பில் இரு வருடங்கள் செலவிட்டபின், குருத்துவக் கல்வியில் தொடர்ந்து, தமது 30-வது வயதில் 1588 டிசம்பர் 17-ல் பாரீசில் குருப்பட்டம் பெற்றார். Brussels அனுப்பப்பட்ட அவர், வேதம் போதிக்கும் ஆவலால் அதற்கான பயிற்சியைப் பெற்று, சேசுசபை உயர் தலைவரின் அனுமதியோடு இங்கிலாந்துக்கு வேதம் போதிக்க அனுமதிக்கப்பட்டார். அதற்காக 1593, 4-ம்நாள் மாட்ரீட் நகர் வந்து காத்திருந்தார். அப்போது லண்டனில் பிளேக் நோய் பரவியிருந்ததால், சுப்பல் பயணம் நிறுத்தப்பட்டி ருந்தது. ஆனாலும் வேதபோதக ஆவலால் நிறைத்திருந்த ஹென்றி வால்போல் சுவாமி எப்படியாவது விரைவில் இங்கிலாந்துக்கு சென்றுவிட வேண்டும் என்று துடித்தார். குருக்கள் இங்கிலாந்திற்குள் வர தடை செய்யப்பட்டிருந்ததால் இரகசியமாகவே அங்கு செல்ல வேண்டும் என்பதால் "போர்கால கப்பல்கள் Vessels of War" என்றழைக்கப்பட்ட கப்பலில் பயணத்தைத் துவக்கினார். வேலை வாய்ப்பைத் தேடி இங்கிலாந்து செல்லும் இரு இளைஞர்களும் உடன் சென்றார்கள். அவர்களில் ஹென்றி சுவாமியின் சொந்த சகோதரனான தாமஸ் வால்போலும் ஒருவர்.
கைதுசெய்யப்படல்!
பயணத்தின் போது கடுமையான புயல் விசியநால் இங்கிலாந்தின் Norfolk பகுதியில் Bridlington என்ற ஊரில் கரைசேர்ந்தனர். அவர்களோடு மேலும் இரு கப்பல்களும் அங்கே சேர்த்து கரை ஒதுங்க, வந்தது. ஆபத்து! ஆம்! அந்தக் கப்பல்களில் ஒன்றில் அரசாங்க ஒற்றனும் இருந்தான், அவன் அவர்களுக்கு முன்பாகவே துறைமுகத்தினுள் இறங்கி யார்க் நகர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினான்.
நடந்ததை அறியாத மூன்று இளைஞர்களும் கரை இறங்கி இரவு வரை பதுங்கியிருந்து இரவு முழுவதும் நடந்தே பயணமாகி Kilham என்ற நகரை அணுகினார்கள். அதற்கு முன்பாக தங்களிடமிருந்த கடிதங்கள் ஆவனங்களை யெல்லாம் பத்திரமாக ஒரு பாறைக் கடியில் புதைத்து வைத்திருந்தனர். அவர்கள் கடுமையாகப் பெய்த மழையையும் பொருட்படுத்தாது ஒரு கிராமத்தினுள் நுழைந்தனர். பசியோடு விடுதியைத் தேடிய அவர்களைப் பற்றிய செய்தி கிராம அதிகாரிகளுக்குப் பரவ, அவர்கள் குருக்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தோடு காவலர்களால் கைது செய்யப்பட்டனர். வடக்குப் பகுதி கவுன்சிலின் காவலனான Earl of Huntingdon என்ற அதிகாரியின் முன்பாகக் கொண்டுவரப்பட்டனர். இங்கிலாந்தினுள் இரகசியமாக நுழையும் குருக்களைப் பிடிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவனான அவன் மிகக் கடுமையாக விசாரித்தான். விசாரணை யில் ஹென்றி தாம் ஒரு குரு. அதுவும் சேசுசபை குரு என்பதை ஏற்றுக் கொண்டார். ஏனெனில் அக்காலத்தில் சேசுசபை குருக்களே இங்கிலாந்தில் சுத்தோலிக்க விசுவாசத்தை மீண்டும் கொண்டுவர மிகவும் முனைந்திருந்தனர். அதனாலேயே பதித ஆட்சியாளர்கள் அக்குருக்களை வேட்டையாடி வந்தனர். தாம் எங்கு செல்கிறோம். யாரால் அனுப்பப்பட்டோம். யாரிடம் செல்கிறோம், உதவியவர்கள் யார். யார் என்ற விபரங்களையெல்லாம் வெளியிட மறுத்த சங். வால்போல் எத்தகைய கொடுமையையும் எதிர்கொள்ள ஆயத்த மானார். ஆனால் அவரோடு பயணித்து வந்த இரு இளைஞர்கள் பயந்துபோய் தாங்கள் ஒழித்து வைத்திருந்த ஆவணங்களைப் பற்றியும் வெளிப்படுத்திவிட அவர்கள் விடுவிக்கப்பட்டு வால்போல் சுவாமி கைது செய்யப்பட்டார்.
சேசுசபை குரு பிடிபட்டார் என்ற செய்தி எங்கும் பரவ, விசாரிப்பதற்காக குருக்களை வேட்டையாடவென்று ஏற்படுத்தப் பட்ட Topcliffe என்ற அதிகாரி லண்டனிலிருந்து அனுப்பப்பட்டான். அவன் விசாரித்தும் எந்தவிதமான பதிலையும் வால்போல் சுவாமி யிடமிருந்து பெறமுடியவில்லை. எனவே அவர் York சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே கிடைத்த அவகாசத்தில் சங். வால்போல் தாம் பிடிபட்டது. விசாரிக்கப்பட்டது போன்ற விபரங்களை கடிதங்களில் குறிப்பிட்டு, Yorkshire-ல் இருக்கும் சேசுசபை குருவான சங். ரிச்சர்ட் ஹால்ட்பை (Richard Holtby) என்பவருக்கு அனுப்பி வைத்தார். அதில்: "டாப்கிளிஃப் என்னை லண்டன் டவர் சிறைக்கோ, Bridewell சிறைக்கோ கொண்டுசென்று வதைத்து உண்மையைக் கறந்துவிடுவதாகப் பயமுறுத்தினான். நான் அவனிடம் நமதாண்டவர் என்னை எந்த கொடுமையிலும் வேதனையிலும் பயத்தாலும், அவரது தெய்விக மகத்துவத்திற்கு விரோதமாகவோ அல்லது எனது மனசாட்சிக்கு விரோதமாகவோ எதுவும் செய்ய அனுமதிக்கமாட்டார். அவருக்கு விரோதமாக என்னைப் பேசவிடமாட்டார் என்று ...." (Yepes Historia particular, 1599) πάτη குறிப்பிட்டார்.
எனது விசுவாசத்தின் காரணமென்ன. திருச்சபைக்கு விரோதமான புராட்டஸ்டாண்டாரின் கொள்கை பற்றிய எனது கருத்து என்ன, திவ்விய நற்கருணை. பாப்பரசர் பற்றிய எனது சுருத்து என்னவென்பதையெல்லாம் எழுதி தரும்படி கட்டளையிட்டுள்ளனர். எனவே இக்கடிதத்தை இப்போது சுருக்கமாக எழுதுகிறேன். பிறகு விரிவாக எழுதுகிறேன்" )Yepes. Hist partic, P. 685) is on. York சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவாமியிடமிருந்து எந்தவிதமான தகவல்களையும் பெறமுடியாததால் கோபமடைந்த விசாரணை அதிகாரி அவரை கடுமையாக வதைக்க லண்டன் டவர் சிறைச்சாலைக்கு மாற்றும்படி உத்தரவிட்டான். அங்கே வால்போல் சுவாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது!
எவ்வளவுதான் சித்திரவதை செய்தாலும் சங். ஹென்றி வால்போல் சுவாமியிடமிருந்து எந்தவிதமான தகவல்களையும் பெறமுடிய வில்லை. இதனால் 1594 பிப்ரவரி 24-ம் நாள் லண்டன் /வர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சால்ட் டவச் (Salt Tower) என்ற கட்டிடத்தில் முதல் தன அறையில் இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே போதிய உணவும். மூட துணியும் வழங்கப்படாது துன்புறுத்தப்பட்டார். ஆனாலும் எப்போதும் தேவ சித்தத்தையுடையவராகவே இருந்து அனைத்தையும் இங்கிலாந்து மனத்திரும்ப ஒப்புக்கொடுத்தார்.
தமது கட்டளை ஜெபத்திலுள்ள சங்கீதங்களை வாய்விட்டு பாடிக்கொண்டும், தமது மன ஓட்டங்களை அங்குள்ள மரச்சட்டங்கள். கதவுகளில், கையில் கிடைத்த கற்களால் கீறி, வரைந்து வெளிப்படுத்திக் கொண்டும் வந்தார். அவைகளில் தனது பெயரையும், சேசு சபையின் சின்னமான "IHS" என்ற ஆண்டவரின் திருநாகத்தையும், "பரியே" என்ற வார்த்தைகளையும், கிறீஸ்துவின் காயங்களோடான கைகள், பாதங்கள் ஊடுருவப்பட்ட கிறீஸ்துவின் இருதயம் போன்றவற்றை செதுக்கினார். அவை அவரது விசுவாசத்தின் வெளிப்பாடாகத் திகழ்ந்தன. அவற்றில் மனதிறைவு கொண்டர். (அவர் செதுக்கிய இந்த எழுத் துக்களையும். படங்களையும் இன்னமும் அங்கே. லண்டன் டவர் சிறையின் சால்ட் டவர் சிறைகூடத்தின் முதல் தளத்தில் அவர் தங்கிமரித்த அறையில் காணவாம்.) மே 3-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. வேதம் போதிக்க இங்கிலாந்திற்கு வந்த குருக்கள், அவர்கள் பெயர்கள் அவருக்கு உதவும் சுத்தோலிக்க மக்கள் யார்,யார் என்றெல்லாம் கேட்டு விசாரித்தனர். அனைத்திற்கும் பதில் தர மறுத்த சுவாமி மேலும் சித்திரவதைக்கு உள்ளானார். இடுப்பில் முரட்டுக் கயிற்றால் சுட்டி தலைகீழாகத் தொங்கவிடப்பட்டார்.
(அர்ச். ஹென்றி வால்போல் சிறைச் சுவரில் செதுக்கிய எழுத்துக்கள்)
ரங். வால்போல் சுவாமி அனுபவித்த கொடூர சித்திரவதைகளைப் பற்றி இங்கிலாந்தின் ரோ அதிபரான சங் ஹென்றி கார்நெட் சுவாமி 1595 அக்டோபர் 23-ல் எழுதிய கடிதத்தில்: “முத் வால்போல் சுவாமி லண்டன் சிறைச்சாலையில் கொடிய துன்புத்கையும் வறுமை யையும் அனுபவித்தார். படுக்க படுக்கையில்லாமல், உடுத்த உடை இல்லாமல் கடுங்குளிரில் விடப்பட்டார். அவர் மீது இரக்கப்பட்ட சிறை காவலாளிதான், சிறிது வைக்கோல்களைக் கொடுத்துப் படுத்துக் கொள்ள உதவினான். பொது விசாரணையின் போது தந்தையவர்கள், நான் 14 தடவைகள் கொடூரமாய் வாதிக்கப்பட்டதாகவும், 6 தடவைகள் தலைகீழாக கட்டித் தொங்கவிடப்பட்டதாகவும். கூரிய இரும்பு கொக்கிகளால் இரத்தம் வர தசை கிழிய விசாரிக்கக் கொண்டு செல்லப்பட்டார். சிறிதும் தூங்கவிடாது உபாதிக்கப்பட்டார். அங்கே நீதிபதிகளுக்காக பலநாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததால் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசி எலிசபெத்தை கொலை செய்ய முயன்றார் என்ற பழி சுமத்தப்பட்டது. இதனை கடுமையாக மறுத்த சங், வால்போல் சுவாமிக்கு மரண தண்டனை விதிக்க பிரபுக்கள் சபை முடிவெடுத்தது. 3 நீதிபதிகள் முன்பு விசாரிக்கப்படும் போது தன்னிலை விளக்கம் கொடுத்தார்
வெளியிலிருந்த சங், ஹென்றி வால்போலின் நண்பர்கள் அவரை எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும். அதற்கு அவரை இணங்கச் செய்யவேண்டும் என்று முனைந்தனர். தாம் காம்பியன் சுவாமியைப் போல வேதசாட்சி முடியைப் பெற ஆசித்த அவர், அவர்களது இந்த முயற்சிக்கு மறுப்பு தெரிவித்தார். அவர்களது நெருக்கிடை அதிகமாகவே சேசுசபை குருவான சங். ரிச்சர்ட் ஹாலட்பை சுவாமிக்கு தமது நிலையையும் நண்பர்களின் முயற்சிகளையும் கூறி தமக்கு ஆலோசனை கூறுமாறு கேட்டு அனுப்பினார். அதற்கு அவர், வால்போல் சுவாமி சிறையிலிருந்து தப்பிப்பதானது ஏற்கனவே York Castle சிறையில் அடைபட்டிருக்கும் கத்தோலிக்கர்களுக்கு பெரும் கேடாக அமையும் என்று எச்சரித்தார். இதையறிந்து தப்பிக்க வைக்கும் தமது நண்பர்களின் முயற்சிகளுக்கு இணங்க மறுத்து விட்டார்.
இதுபற்றி சங். ஹாலட்பை சுவாமிக்கு எழுதிய கடிதத்தில் "தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். தங்களது ஆலோசனை மகிழ்ச்சியைத் தருகிறது. அது நமது ஆண்டவரின் கரத்திலிருந்து வந்ததாக ஏற்றுக்கொள்ளுகிறேன். (தப்பிக்கும் திட்டம்) மற்றவர்களின் திருப்திக்காக மட்டுமே. ஆதலால் உங்களுக்கு வெளிப்படுத்தி ஆலோசனையைக் கேட்டேன். மற்றபடி எனது விருப்பம் அதுவல்ல... அர்ச். இராயப்பரை, தமது சம்மனசானவரை அனுப்பி சிறையிலிருந்து ஆண்டவர் விடுவித்தாரென்றால், அது எதற்காக? அவர் பரிசுத்த திருச்சபையின் பொதுத் தந்தையாகவும், மேய்ப்பனாகவும் விளங்குவதற்கும் அந்த நமது அப்போஸ்தலிக்க தலைமை இடத்தை உரோமையில் நிறுவுவதற்காகவுமே. ஆனால் எனக்கு அப்படியல்ல, எனக்கு நான் இருக்கும் சிறைகூடமே உரோமை. இதைவிட சிறப்பான முறையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய என்னால் முடியுமென்று எனக்குத் தெரியவில்லை... இங்கேயிருந்தே எனது விசுவாசத்தை அறிக்கையிட முடியும். என்னை தவறாது காத்துவருவதற்காக நமதாண்டவர் சேசு கிறீஸ்துவுக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்கு விசாரணை கவுன்சில் தலைவரால் ஐந்து தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எனது நோக்கமென்ன?
"எனது அன்புக்குரிய பிரபுக்களே, தான் மூன்று காரியங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டதாக அறிகிறேன்.
1-வது, நான் ரோமை பரிசுத்த ஸ்தானத்தின் (Holy see) அதிகாரத்தால் பட்டம் பெற்ற குருவானவர்.
2-வது. நான் சேசு சபையினன்.
3-வது, குருவானவரும். சேசு சபையினரான எனது அழைத்தளின் ஊழியமான ஆன்மாக்களை சர்வேசுரனுக்கு பெற்றுத் தருவதற்காக எனது நாட்டிற்கு வந்தது.
இந்த மூன்றில் எதுவும் தேசத் துரோகமான காரியங்கள் அல்ல குருக்கள் கிறீஸ்துவின் அழைத்தலின்படி உலகிற்கு போதித்து மக்களை மனந்திருப்ப அழைக்கபட்டவர்கள். இங்கிலாத்து தேசந்திற்கு முதன் முதலில் சுவிசேஷ ஒளியைக் கொண்டு வந்தவர்களும் குருக்கலே. ஆகையால் குழுக்கள் ஒரு துரோகியாக இருக்க முடியாது" என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி Ewenn என்பவர், “அப்படியானால் மத விஷயத்தில் அரசியின் சட்டத்திற்கு கீழ்படித்து, அரசியே திருச்சபையின் தலைவர், பாப்பு அல்ல என்பனத ஏற்றுக்கொள்கிறாயா?" என்று கேட்டார். அதற்கு சங். வால்போல் சுவாமி மறுமொழியாக, நாம் வெளிநாட்டில் சில காலம் தங்கியிருந்ததால் இங்கிலாந்தில் என்ன சட்டத்தைக் கொண்டு வத்துள்ளனர் யன்பதை அறியவில்லை. ஆகையால் அதற்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும் என்ற கேள்வி எழவில்லை என்று கூறியவர், ஆனால் எந்த ஒரு சட்டமும் சர்வேசுரனுடைய சட்டத்திற்கு ஏற்புடையதாக இல்லாதே போனால் அது உடன்பாடற்றதுதான். உலக அரசர்களுக்கு எப்போதும் கீழ்ப்படிவது, பரலோக பூலோக உன்னத அரசரான சர்வேசுரனுக்கு நாம் கீழ்ப்படியும் கடமையைவிட மேலான நல்ல சர்வேசுரனுக்கு கீழ்ப்படிவதே மேலானது" என்று பதிலளித்தார்.
பின்னர் தொடர்ந்து, "அரசிக்காக நான் ஆண்டவராகிய கடவுளிடம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறேன். அவரே அவளை தமது இஸ்பிரித்துசாத்துவால் ஆசீர்வதிப்பாராக... சர்வேசுரனே எனது சாட்சி இங்கே கூடியிருக்கும் எனது மரணத்தை விரும்பும் மேன்மை மிக்கவர்களின் முன்னிலையில் கூறுகிறேன். நான் உங்களது ஆண்ம இரட்சணியத்தையே விரும்புகிறேன். இதற்கு, நித்திய மகிழ்ச்சிக்கு ஒரே மார்க்கமாகத் திகழும் மெய்யான கத் விசுவாசத்தில் வாழ்வீர்களாக..." என்று கூறினார்.
நீதிபதிகளில் ஒருவரான சர். ஜான் சவிலா (Sir John Savila) என்பவன் வால்போல் சுவாமியை துரோகி என்று குற்றம் சாட்டி அதற்கு ஆதாரமாக ஸ்பெயின் நாட்டு அரசரோடும், சேசு சபை குருக்களான சங். பெர்சன்ஸ் (Persons) சுவாமி மற்றும் சங். ஹோல்ட் (Holtby) சுவாமியிடமும் அவர் சில காலம் தங்கியிருந்து நட்புறவு கொண்டிருந்ததையும் வெளிப்படுத்தினான். பின்னர் நீதிபதிகள் சங், வால்போல் சுவாமி மேன்மை மிக்க அரசியின் குடிமக்களை ஈட்டத்தால் நிறுவப்பட்ட மதத்திலிருந்து மனம் மாற்றுவதற்காகவும், குழப்புவதற்காகவும் ரோமை ஸ்தானத்தோடு அவர்களை ஒப்புர வாக்குவதற்காகவும் அவர் திரும்பி வந்துள்ளார் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்கள்.
அதற்கு பதில்மொழியாக சங், வால்போல் சுவாமி, “விசாரணை அதிகாரிகளான பிரபுக்களே! இதோ! நானே விரும்பி இவைகளை ஏற்று அறிக்கையிடுகிறேன்: ஆம்! நான் ஒரு குருவானவர் சேசு சபையின் உறுப்பினர். எனது தேசத்தை சுத்தோலிக்க சத்திய விசுவாசத்திற்கு மனந்திருப்பவும். பாவிகளை மனஸ்தாபத்திற்கு அழைக்கவும்தான் வந்தேன். ஆம்! இவைகளை நான் முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறேன். மறுக்கவில்லை. இவை எனது அழைகத்தலின் கடமை. எனது இந்த அழைத்தலுக்கு வேறுபட்டு எதுவும் இருப்பின் எனக்குச் சொல்லுங்கள். அதே சமயம் உங்கள் மனசாட்சியின்படியும் நீங்கள் ஒருநாள் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதையும் மறவாதீர்கள்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.
அவரது பதிலில் தொனித்த யதார்த்தத்தையும். உண்மையையும் உணர்ந்து உள்ளம் கலங்கினாலும், நீதிபதிகள் "இவன் குற்றவாவி தேசத்துரோகி" என்று தங்களது தீர்ப்பைக் கூறினார்கள். அதன் பின்னர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சங், வால்போஸ் சுவாமி, சங். ஹோல்ட்பி (Holtby) சுவாமி என்பவருக்கு கடைசியாக எழுதியக் கடிதத்தில் "... நாளை மறுநாள் நான் தூக்கிலிடப் படவுள்ளேன். நமது தந்தையர்கள், சகோதரர்களின் மேலான ஜெபங்களைக் கேட்கிறேன். உண்மையான கத்தோலிக்க இதயங்கள் அனைவரோடும் நான் மகிமையோடு இணைந்து, நமது சர்வேசுரனும் சிருஷ்டிகரும், மீட்பரும், அர்ச்சியசிஷ்டவர்களிடமும் ஜெபிக்கிறேன் என்பதை இஸ்பிரீத்துசாந்துவானவர் உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை... லண்டன் டவர் சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்த நாட்களைப் பற்றி உங்களிடம் எதுவும் கூறவில்லை. அதனை மோட் சத்தில் நாம் மீண்டும் சந்திக்கும்போது அறிந்து கொள்வீர்கள்" என்று குறிப்பிட்டார்.
1595 ஏப்ரல 7 ல் சங். ஹென்றி வால்போல் சுவாமி Douai குருவான ச. அலெக்ஸாண ராவ்லின்ஸ் சுவாமியுடன் York Castleலில் இருந்து இழுத்துவரப்பட்டார். ஒரே கயிற்றால் தலைவிலிருந்து கால் வரைக் கட்டப்பட்டதால் இருவரும் பேசிக்கொள்ளும் ஆறுதலைப் பெற்றனர். கைகிகள் இருவரும் Knavesmire என்ற கொலைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டனர். முதலில் ராவ்லின்ஸ் சுவாமி தூக்கிலிடப்பட்டு உடல் வெட்டப்பட்டு வேதசாட்சியமடைந்தார். அதனைக் கண்டாவது, மனம் மாறுவார் என்று நினைக்கப்பட்ட வால்போல் சுவாமி மிகுந்த துணிவோடும் உற்சாகத்தோடும் தூக்குமேடையில் ஏறினார். அருகி லிருந்த அதிகாரிகள் அரசியின் புராட்டஸ்டாண்ட் ஆங்கிலிக்கன் சபையை ஏற்றுக்கொண்டால் உயிர் பிழைக்கலாம் என்று ஆசை வார்த்தைக் கூறினார்கள். அப்போது "அரசியே திருச்சபையின் தலைவர்" என்பதை பற்றிய அவரது கருத்தைக் கேட்டனர். அதற்கு, “அவள் தானே உயர்ந்தவள் என்று கூறிக் கொள்கிறாள். ஆனால் நான் அதனை ஏற்கமாட்டேன். கடுமையாக மறுக்கிறேன்" என்று திடமாகக் கூறினார். அதனைக் கேட்ட அதிகாரிகள் "ஆஹா! இது தேசத் துரோகம்” என்று கூறினர்.
... ஆனால் சங். வால்போல் சுவாமி அமைதியாக தமது சாவுக்குக் காரணமானவர்களுக்காக ஜெபித்தார். பின்னர் சற்று உரத்தக் குரலில் "பரலோக மந்திரத்தை" ஜெபித்தார். பிறகு "அருள்நிறை" மந்திரத்தை தொடங்கி ஜெபித்துக் கொண்டிருக்கும் போதே அவர் நின்றிருந்த ஏணி அகற்றப் பட முட்டு சுருக்குக் கயிறு அவரது கழுத்தை இறுக்கியது. அவரது புனித உடல் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் விரைத்தவாறு தொங்கியது. இறக்கும்வரை அவர் உடல் தொங்கவிடப்பட்டு, பின்னர் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. அன்று 1595 ஏப்ரல் 7-ம் நாள். ஆம்! அவரது மனங்கவர்ந்த சங். எட்மண்ட் சுவாமியின் வேதசாட்சியத்தின் போது சிதறிய இரத்தத் துளிகள் தம்மீது பட்டு சரியாக 14 ஆண்டுகள் 97 நாட்களுக்குப் பிறகு வேதரா'சியமடைத்தார் ஹென்றி வால்போல்!
அர்ச். ஹென்றி வால்போலே. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!