Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
வெள்ளி, 24 மே, 2024
Catholic Saints Quotes in Tamil
Catholic Saints Quotes - St. Jermanus
வியாழன், 23 மே, 2024
சேசுவின் பாலத்துவத்தின் அர்ச்சியசிஷ்டவர் அர்ச்.சூசையப்பர்
சேசுவின் பாலத்துவத்தின் அர்ச்சியசிஷ்டவர் அர்ச்.சூசையப்பர்.
பரலோகப் பிதாவினால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்டவரும். நமது மனுஷீகத்தைப் பூண்டு கொண்டவருமான தேவசுதனை நம் கண்முன் ரூபிகரித்து ஆராதிப்போம். இவர் மனுஷாவதாரம் பண்ணினாரே, இப்பரம இரகசியத்துக்கும் அர்ச். சூசையப்பருக்கும் உள்ள சம்மந்தத்தைக் கண்டுபிடிக்க பிரயாசைப் படுவோம். இதற்கு இரண்டு காரியங்களை நாம் கண்டுணர வேண்டும். முதலாவது இப்பரம இரகசியம் நிறைவேறுவதற்கு அவர் செய்த உதவி என்ன? இரண்டாவது: அவ்வுதவியை அவர் எப்படிச் செய்தார்?
மனிதாவதாரம் நிறைவேற அர்ச். சூசையப்பர் செய்த உதவி :
மூன்று விதமாய் உதவினார். முதலாவது மனிதாரத்தின் பரம இரகசியத்தில் சூசையப்பருக்கு ஓர் பதவி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் சேசுவின் வளர்ப்புத் தந்தையாக மாத்திரம் இருந்தபடியால் அதில் அவர் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. மாமரி மாத்திரமே அதில் நேரடியாகச் சம்பந்தப் பட்டவர்கள். ஏனெனில் தேவதூதனிடம் அவர்கள் தாம் கடவுளின் தாயாவதற்கு சம்மதித்தபடியால், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவர் மாமரியின் உதரத்தைக் கொண்டு சேசுவின் பரிசுத்த மனுஷீகத்தை உருவாக்கினார்.
இந்த பரம இரகசியம் நிறைவேற ஓர் நிபந்தனை நிறைவேற வேண்டியிருந்தது. அதற்கு அர்ச். சூசையப்பரின் உதவி தேவையா யிருந்தது. அதெப்படியெனில், இரட்சகரின் உற்பவமும் பிறப்பும் கற்புள்ளதாகவும், மரியாயின் கன்னிமை பழுதுபடாததாகவும் காப்பாற்றப் படவும் வேண்டியிருந்தது. இதற்காகத்தான் சூசையப்பர் மரியாயின் கள்ளிமையின் காவலனானார். இந்த தமது பதவியை அவர் மிகுந்த உத்தம விதமாய் நிறைவேற்றினார். விவாகத்துக்கு முன்னரும், பின்பும் மாமரியின் கன்னிமையை நிலைநாட்டபட்ட அந்தஸ்தாக மதித்து அதனைக் காக்கும் காவலனாகத் துலங்கினார்.
பரிசுத்த மரியம்மாளை மணம் புரியும் போது, மனுஷாவதாரத்தின் பரம இரகசியம் நிறைவேறுவதற்கு இசைவான மனமும் குணமும் உடையவராய் இருந்தார். உண்மையாகவே அவருடைய கற்புள்ள விவாகம், இரட்சகர் இவ்வுலகிற்கு வருவதற்கு இறுதி ஆயத்தமாக இருந்தது. அர்ச் சூசையப்பரும் அதற்கு இசைவாகவே நடந்து கொண்டார். அவரது விரதத்துவம் மனுஷாவதாரத்துக்குத் தேவையான நிபந்தனையாக நித்திய காலமாய் சர்வேசுரனால் திட்டம் செய்யப்பட்டிருந்தது. அர்ச். சூசையப்பரின் கன்னிமை விவாகம் மாமரியாயின் கன்னிமைக்கும், அவர்களிடமிருந்து பிறக்கவேண்டிய திவ்விய சேசுவின் பரிசுத்தத்துக்கும் அவசியமான அனுசரனையாகக் குறிக்கப்பட்டிருந்தது. அர்ச்.அகுஸ்தீனார் கூறுவது போல், சூசையப்பர் தமது கன்னிமையினாலேயே சேசுவுக்குத் தந்தையானார்.
இரண்டாவது : இரட்சகரின் மனுஷீகத்தை பராமரிப்பதற்கடுத்த பதவி அர்ச்.சூசையப்பருக்கு தரப்பட்டிருந்தது. இரட்சகரைக் காக்கவும், வளர்க்கவும், போஷிக்கவும் வேண்டிய கடமை அது திவ்ய பாலனுக்கு அளவற்ற ஞானமும், வல்லபமும் திரவியங்களுடைய பிதா பரலோத்தில் இருந்தார். அப்பிதா தமது ஞானத்தையும், தமது திருக்குமாரன் மட்டில் தனக்குள்ள சிநேகத்தையும் காண்பிப்பதற்காக இவ்வுலகில் அவரைப் போஷித்து ஆதரிக்க தமக்குப் பதிலாய் தந்தையாக சூசையப்பரை நியமித்தார். அர்ச் சூசையப்பரும் தமது கைவேலையால் தம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட மானிட தேவனை பராமரித்து காப்பற்றினார். ஏரோதனிடமிருந்து பாலனின் உயிரைக் காப்பாற்றி பாதுகாத்தார். சேசுமீது அயராத அன்பு நேசம் கொண்டு நாசரேத்தூருக்கு திரும்ப அழைத்துச் சென்று கரிசனையோடும் மிகுந்த பிரயாசையோடும் வளர்த்து காத்தார். இவ்விதமாய் வளர்க்கப் பட்டதால் நமது இரட்சகர் அர்ச். சூசையப்பருக்குக் கடனாளியாகி விட்டார் என்றே கூறலாம்.
மூன்றாவது: சேசுவின் மனுஷாவதாரத்தின் பரம இரகசியத்தின் மூலமாய் மனுமக்களுக்கு சர்வேசுரன் பொழிந்தருளும் உன்னத வரங்கள் விஷயமாகவும் அர்ச். சூசையப்பர் வகிக்கும் பதவி : என்னவெனில், சேசுவின் ஞான சரீரமாகிய திருச்சபையின் மட்டில் உறுப்பினர்களாகிய நமது பேரில் அர்ச், சூசையப்பருக்கு விசேஷ கவலை உண்டு. சேசுவை மிகுந்த கவனத்தோடும், கவலையோடும் அன்போடும் பாதுகத்து வளர்த்ததில் உள்ளார்ந்த காரணம் உள்ளது. அது, நமது இரட்சண்யம் ஒன்றுதான். நமது இரட்சண்யத்துக்குத் தேவையான வரங்களுக்கெல்லாம் ஊற்றாக இருப்பது சேசுவின் மனிதாவதாரம் தான். இந்த சத்தியம் தேவ தூதருடைய வார்த்தை களில் நன்கு விளங்குகிறது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். நீர் அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர், ஏனெனில் அவரே தமது ஜனத்தை அவர்களுடைய பாவங்களினின்று இரட்சிப்பார்" (மத் 1:21). ஆகையால், இரட்சகர் நிமித்தம் சூசையப்பருக்கு நியமிக்கப்பட்டி ருந்த ஸ்தானாதிபதி பதவி முடியவில்லை. இன்னமும் நடந்து கொண்டேயிருக்கிறது. ஏனெனில் சேசுவின் ஞான சரீரமாகிய (திருச்சபையின் மக்கள்) நமக்கு இரட்சண்யத்துக்கு அவசியமான வரங்களெல்லாம் அவர்தான் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
எனவே, நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் பாலத்துவத்தை தியானித்து ஒவ்வொரு நாளும் மகிழ்ந்து கொண்டாடும் நாம் அதனோடு இணைந்து நமது இரட்சண்யத்துக்கு உதவிய, இன்றும் உதவிக் கொண்டிருக்கும் நமது நேச தந்தை அர்ச், சூசையப்பரை நன்றியோடு சங்கித்து நம்மை அவரது அடைக்கலத்தில் வைப்போமாக!
புதன், 22 மே, 2024
Catholic Saints Quotes in Tamil
செவ்வாய், 21 மே, 2024
அர்ச். பொபோலா பெலவேந்திரர் (St. Andrew Bobola) May 21
⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
🇻🇦மே 2️⃣1️⃣ம் தேதி
🌹வேதசாட்சியான அர்ச். பொபோலா பெலவேந்திரர் திருநாள்🌹
🌹இவர் போலந்து நாட்டின் பாரம்பரியமானதும் பிரசத்திபெற்றதுமான ஒரு குடும்பத்தில்,1590ம் வருடம் சான்டோமிர் என்ற பிரபுவின் அதிகாரத்திலுள்ள ஒரு இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் எப்போதும், சேசுசபைத் துறவியருக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களைப் பாராமரித்துக் காப்பாற்றி வந்தது; அவர்களுக்கு மிக தாராளமாக உதவி செய்து வந்தது; வருங்கால வேதசாட்சியான அர்ச்.பெலவேந்திரரிடம், சர்வேசுரன் இவருடைய குடும்பத்தையும், சேசுசபையினரையும் ஆசீர்வதித்தார்; இவர் சேசு சபையினருக்கும், தன் குடும்பத்தினருக்கும் மாபெரும் மகிமையைக் கொண்டு வருவார்! இவர் சேசு சபையில் 1611ம் வருடம் சேர்ந்தார்.
ஆடம்பரமாக சேசு சபையில் இவர் வார்த்தைப்பாடு கொடுத்தபிறகு, 1630ம் வருடம் , ஜுன் மாதம் 2ம் தேதி, போப்ருய்ஸ்க் என்ற நகரிலிருந்த சேசு சபை மடத்தற்கு அதிபரானார். அங்கு இவர் தனது சிறந்த ஞானப்பிரசங்கங்களாலும், கொள்ளை நோய் காலத்தில், தன்னிகரற்ற விதமாக இவர் தன்னையே அர்ப்பணித்து, ஆற்றிய பிறர்சிநேக அலுவல்களாலும் அநேக புதுமைகள் நிகழ்த்தினார்.
இவர் 1636ம் வருடம் தனது அதிபர் பதவியை இராஜினாமா செய்து விட்டு, இவர் ஏற்கனவே சுவிசேஷத்தை போதித்து வந்த லிதுவேனியா நாடெங்கிலும் நடந்து சென்று, வேதபோதகப் பிரசங்கங்கள் நிகழ்த்தத் தீர்மானித்தார்; அண்டை நாடுகளான லிதுவேனியா, போலந்து நாடுகள், அச்சமயம், ரஷ்யர்களாலும், கோஸ்ஸாக் மற்றும் தார்தாரிய இனத்தவர்களாலும் படையெடுக்கப்பட்டு சூறையாடப்பட்டன! இவர்களுடைய படையெடுப்பின் ஆக்கிரமிப்புகளால், இந்நாடுகளிலிருந்த மக்களும் சேசுசபைத் துறவியரும் மிகவும் துன்புற்றனர்; ஏனெனில், இந்த இனத்தினர், சேசு சபையினரை மிகவும் வெறுத்தனர்; ஏனெனில், இவர்கள் பிரிவினை திருச்சபையில் இருந்ததால், கத்தோலிக்க வேதத்தை வெறுத்தனர்; பெலவேந்திரர் சுவாமியார், அவதியுற்ற மக்களை உற்சாகப்படுத்தி, வேத விசுவாசத்தில் திடப்படுத்தினார்; மேலும், இந்நாடுகளுக்கு உள்ளே நுழைகிற வேத விசுவாசத்திற்கு எதிரான பதிதத் தப்பறைகளையும் பிரிவினரையும், எதிர்ப்பதிலும் அவற்றை விரட்டியடிப்பதிலும், இவர் இந்நாடுகளிலுள்ள மக்களுக்கு உதவி செய்தார்!
இவர் அயராமல், சத்திய வேதத்தைப் பற்றி நிகழ்த்திய வேதபோதகப் பிரசங்கங்கள், அநேக பிரிவினை திருச்சபையிலிருந்தவர்கள், சத்திய வேதத்தில் சேர்வதற்குக் காரணமாயின! இந்த வெற்றியைச் சகிக்கக் கூடாத பிரிவினைக் காரர்களின் தலைவர்கள், இவர் மேல் சீற்றமடைந்தனர்! கிரேக்க பிரிவினைத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள், இவர் வாழ்ந்த போலந்து மற்றும் அதைச் சுற்றியிருக்கும் போலேசியா பிராந்தியத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.
இப்பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு உயர்குடி கத்தோலிக்கர், பின்ஸ்க் என்ற நகரில் சேசு சபை குருக்கள் தங்குவதற்கு ஒரு வீட்டைக் கொடுத்தார்; இந்த வீட்டில் தான் அர்ச்.பெலவேந்திரர் சுவாமியாரும், தங்கியிருந்தார். இவர் ஆற்றிய அப்போஸ்தல அலுவல்களுக்கெல்லாம், பிரிவினைக்காரர்கள் எல்லா விதங்களிலும், தடங்கல்கள் கொடுத்து, இவர் எந்த அப்போஸ்தல அலுவலையும், கடமையையும், நிறைவேற்ற விடாமலிருப்பதற்கு மாபெரும் முயற்சி செய்தனர்! சில சமயங்களில், இவரையே சரீர ரீதியாக, தாக்கவும் முற்பட்டனர்!
1657ம் வருடம், மே மாதம் 16ம் தேதியன்று, கோஸ்ஸாக் இனத்தவர்கள் இரண்டுபேர், இவரைப் பிடித்து மிக மூர்க்கமாகவும் கடுமையாகவும் அடித்தனர். பின் குதிரை சேணத்தில் இவரைக் கட்டி, இழுத்துச் சென்றனர். ஜேனோவ் நகர் வரை, இவர் குதிரைச் சேணங்களில் கட்டப்பட்டபடி தரையிலே , இழுத்துச் செல்லப்பட்டார்; மிகக் கொடூரமான உபத்திரவத்தை அனுபவித்தார்! அந்நகரில், அவர் மிகக் கொடூரமாக நம்பமுடியாத உபத்திரவங்களால், சித்திரவதைச் செய்யப்பட்டார்; முதலில் நெருப்பினால் எரிக்கப்பட்ட இவர், உடல் திருகப்பட்டு, பாதி உடல் தோலுரிக்கப்பட்டார்; இறுதியில் கத்தியால் வெட்டப்பட்டு மரித்தார்; மகிமை மிக்க வேத சாட்சிய முடியை அடைந்தார்! கத்தோலிக்கர்கள், இவருடைய பரிசுத்த சரீரத்தை பின்ஸ்கிலுள்ள சேசு சபைக் கல்லூரியில் அடக்கம் செய்தனர்.
45 வருடங்களுக்குப் பிறகு, ஒரு புதுமையினால், காணாமல் போயிருந்த இவருடைய கல்லறையை, சேசுசபை குருக்களுக்கு வெளிப்படுத்த சர்வேசுரன் சித்தமானார்; இப்பிராந்தியத்தில் சேசு சபைக்குருக்கள், கடந்தகாலத்தில் நிகழ்ந்த போர்களால் ஏற்பட்ட தீமைகளால் தங்களுடைய வேதபோதக அலுவல்கள் அழிக்கப்பட்டதைக் கண்டார்கள்! அந்நகரின் சேசு சபைக் கல்லூரியின் அதிபர் சுவாமியாருக்கு, இவர் காட்சியளித்து, சேசுசபை மாணவர்களையும், தனது சக சேசு சபைத் துறவியரையும், பிரிவினைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு தான் ஆசிப்பதாகவும் கூறினார்; பின், தனது கல்லறை இருக்கிற இடத்தைக் காண்பித்தார். அதன்படி, இவருடைய கல்லறை , மறுபடியும்,கண்டெடுக்கப்பட்டது; கல்லறையினுள் இவருடைய பரிசுத்த சரீரம் திருகப்பட்ட நிலையிலேயே, அழியாத சரீரமாக புதுமையாகக் காணப்பட்டது! கல்லறையிலிருந்து பரலோக நறுமணம் வீசியது! இவருக்கு, 9ம் பத்திநாதர் பாப்பரசரால், 1853ம் வருடம் முத்திப்பேறு பட்டமளிக்கப்பட்டது; 11ம் பத்திநாதர் பாப்பரசர் இவருக்கு ஏப்ரல் மாதம் , 1938ம் வருடம் அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது!🌹✝
🌹அர்ச். பொபோலா பெலவேந்திரரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
✨
🇻🇦
May 2️⃣0️⃣
Feast 🌟
⭐Feast:🌹Saint Andrew Bobola, Martyr🌹
May 2️⃣1️⃣
🌹Today is the feast day of Saint Andrew Bobola.
Ora pro nobis.🌹
🌹Saint Andrew was born of an old and illustrious Polish family, in the Palatinate of Sandomir, 1590. His family had always protected the Jesuits and shown itself very liberal towards them. God blessed both the family and the Jesuits in this future martyr, who would bring both of them great glory. He entered that Order in 1611.
After making his solemn vows, 2 June, 1630, he was made superior at Bobruisk, where he wrought wonders by his preaching and distinguished himself by his devotion during an epidemic of the plague.
Fr Bobola in 1636 resigned his post as Superior to preach for twenty-one years along all the roads of Lithuania, which he was evangelizing. Poland and Lithuania, its neighbor, were being ravaged in those days by the Cossacks, Russians and Tartars, and the Jesuits suffered much from these invaders, who did not like them and their religion. The people were enduring great misery; Father Andrew sustained their courage and helped to combat the invading religious errors.
Fr. Bobola’s success in converting schismatics drew upon him the rage of those in high authority, and the adherents of the Greek Pope decided to centralize their forces in Polesia.
A Catholic nobleman of this province offered the Jesuits a house at Pinsk, and here Father Bobola was stationed. The schismatics vainly endeavoured in every manner to hinder him in the exercise of his apostolic duties, extending their persecutions to attacks upon his person. On 16 May, 1657, he was seized by two Cossacks and severely beaten. Then tying him to their saddles, they dragged him to Janów where he was subjected to incredible tortures. After having been burned, half strangled, and partly flayed alive, he was released from suffering by a sabre stroke. He was buried by the Catholics at the Jesuit College at Pinsk.
Forty-five years later, by a miracle, God revealed the whereabouts of his forgotten tomb to the Jesuit Fathers, who had seen the continuing evils of war ruin many of their works. His tombstone, then buried underground, was found after the Saint appeared twice in vision to the Rector of the College, saying he wished to protect his brethren and the students, and indicating to him the location of his grave. His mutilated body was incorrupt, and a fine fragrance came from the open tomb. Saint Andrew was beatified by Pope Pius IX in 1853, and canonized in April of 1938 by Pope Pius XI.🌹✝
✝
🔵
அர்ச். ஹாஸ்பிசியுஸ் (ST. HOSPITIUS) May 21
⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
🇻🇦மே 2️⃣1️⃣ம் தேதி
🌹ஸ்துதியரான அர்ச். ஹாஸ்பிசியுஸ் திருநாள்🌹
🌹இவர் 6ம் நூற்றாண்டில் எகிப்தில் ஏகாந்தத்தில் ஜீவித்து வந்த ஒரு துறவியாவார்; அங்கிருந்து, பிரான்சிலுள்ள காவ்ல் என்கிற பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றார். அங்கே வில்லஃபிராங்கா என்ற இடத்திலிருந்த ஒரு பாழடைந்த கோட்டையில் தங்கி தனிமையில் ஜெப தப தியான ஜீவியத்தில் மூழ்கியிருந்தார்! பிரான்சின் தென்கிழக்கில் உள்ள ஃபெர்ராட் முனை தீபகற்பத்திலிருக்கும் நிசே நகரத்திலிருந்து மூன்று கல் தொலைவில் இந்த கோட்டை இருந்தது! இடுப்பில் மிகக் கனமான இரும்பு சங்கிலியால் கட்டியிருந்தார்; ரொட்டியையும் , பேரீச்சைப் பழங்களையும் மட்டுமே உண்டு வந்தார்; மிகக் கடினமான தபசை அனுசரித்தார்; தபசு காலத்தில் தபசை இரட்டிப்பாக அதிகரித்தார்; எகிப்தில் வசித்த தபோதனர்கள் அனுசரித்த மிக மிகக் கடினமான தபசுநிறைந்த ஜீவியத்திற்கு இணையாக தனது தபசின் ஜீவியம் கடின ஒறுத்தல் பரித்தியாகங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில், இவர் எப்போதும் விழிப்புடனும் கவனத்துடனும் இருந்தார்! தபசு காலத்தில், எதையும் உண்ணாமல், காட்டுச்செடி வேர்களை மட்டுமே உண்டு வந்தார்; இவர் அனுசரித்த மாபெரும் புண்ணியங்களுக்கு சம்பாவனையாக, பரலோகம், இவருக்கு புதுமை செய்யும் வரத்தையும், தீர்க்கதரிசன வரத்தையும் அளித்து, இவரை மகிமைப்படுத்தியது!
சுற்றுபுறத்தில் ஜீவித்த மக்கள், அடிக்கடி இவரிடம் வந்து, அவர்களை ஞான ஜீவியத்தில் வழிநடத்தும்படி , கேட்டுக்கொண்டனர்; கிபி 575ம் வருடம், லொம்பார்டியர்கள் என்கிற காட்டுமிரான்டி இனத்தினர், காவ்ல் பகுதிக்குள் படையெடுத்து நுழைந்து, ஆக்கிரமிப்பார்கள், என்று இவர் அம்மக்களை முன்கூட்டியே அறிவித்து எச்சரித்தார்! லொம்பார்டியர்கள், அவ்வாறு படையெடுத்து வந்தபோது, அர்ச்.ஹாஸ்பிசியுஸ் தங்கியிருந்த கோட்டைக்குள் அப்படை வீரர்கள் வந்து , இவர் மிகக் கனமான சங்கிலிகளால் கட்டுண்டவராக தனிமையில் இருக்கிறதைக் கண்டு, இவர் மிகப்பெரிய ஒரு கொலைக் குற்றவாளி என்று கருதினர். அர்ச்.ஹாஸ்பிசியுசும், அவர்களிடம், தான் ஒரு மகா பயங்கரமான பாவி என்று ஒத்துக்கொண்டார். அதைக்கேட்டு பயந்த அந்த படைவீரர்களில் ஒருவன், அவரைக் கொல்வதற்காக ஒரு வாளை உயர்த்தினான்; ஆனால், அவரைக் கொல்வதற்காக வாளை உயர்த்திய அந்த வீரனுடைய கரமானது, பக்கவாதம் வந்து அசைவற்றுப்போனது! அதைக் கண்டு அவன்மேல் இரங்கியவராக, அர்ச்.ஹாஸ்பிசியுஸ், அவனுடைய அந்த கரத்தின் மீது சிலுவை அடையாளம் வரைந்து ஆசிர்வதித்தார்; உடனே, புதுமையாக, அவனுடைய கரம் குணமடைந்து, செயல்படத்துவக்கியது!
அந்த ஷண நேரத்திலே, அந்த படைவீரன் மனந்திரும்பினான்; எஞ்சிய தன் ஜீவிய காலமெல்லாம், துறவற மடத்தில் சேர்ந்து,சர்வேசுரனுக்கு ஊழியம் செய்தார்! மனந்திரும்பி துறவியாக மாறிய இவ்வீரரைப் பற்றி, அர்ச்.தூர்ஸ் நகர கிரகோரியார் தனிப்பட்ட விதத்தில் அன்னியோன்னியமாக அறிந்திருந்தார்! இத்துறவியின் மூலமாக அர்ச்.ஹாஸ்பிசியுஸ் பற்றி அறிந்தவற்றை, அர்ச்.கிரகோரியார் எழுதி வைத்ததாலேயே, நம்மால், அர்ச்.ஹாஸ்பிசியுஸ் அனுசரித்த மிகக் கடின தபசைப் பற்றியும், நிகழ்த்திய எண்ணற்ற புதுமைகள் பற்றியும் நம்மால் அறிந்து கொள்ளக் கூடுமாயிருக்கிறது!
அர்ச்.ஹாஸ்பிசியுஸ் தனது மரண நேரத்தைப் பற்றி முன்னறிவித்தார்; அதன்பிரகாரம், ஃபெர்ராட் முனையில், 581ம் வருடம் மே 21ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்த இவரை, இவருடைய நண்பரும் மேற்றிராணியாருமான வந். அவுஸ்டாடியுஸ் ஆண்டகை பூஜிதமாய் அடக்கம் செய்தார்; ஃபெர்ராட் முனை என்கிற இந்த இடம் , இவருக்கு தோத்திரமாக செயிண்ட் ஹாஸ்பிஸ் என்று இவருடைய பெயராலேயே அழைக்கப்படுகிறது. நிசே மேற்றிராசனத்தில், செயிண்ட் ரிபரட்டா கதீட்ரல் தேவாலயத்தில், அர்ச்.ஹாஸ்பிசியுஸ் வணங்கப்படுகிறார்! அங்கு இவருடைய பரிசுத்த எலும்பின் அருளிக்கம் பூஜிதமாக பொதுவணக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! இவருடைய மற்ற பரிசுத்த அருளிக்கங்கள் அப்பகுதியிலுள்ள மற்ற தேவாலயங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன!🌹✝
🌹அர்ச்.ஹாஸ்பிசியுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
✨
🇻🇦
May 2️⃣1️⃣
Feast 🌟
ST. HOSPITIUS
Hospitius was a isolated monk in his native Egypt towards the beginning of the 6th century.
He immigrated to Gaul (France) and retired to a dilapidated tower in Villafranca, one league from Nice situated on the peninsula of Cap Ferrat.
He girded himself with a heavy iron chain and lived on bread and dates only. During Lent he redoubled his austerities, and, in order to conform his life more closely to that of the anchorites of Egypt, ate nothing but roots. For his great virtues Heaven honored him with the gifts of prophecy and of miracles.
The people of the surrounding frequently came to ask for his guidance and he forewarned them on one occasion, about the year 575, of an impending invasion of Gaul by the barbarian tribe of the Lombards.
When the Lombards invaded Gaul, some soldiers came to the tower in which Hospitius was staying, finding Hospitius loaded with chains and living in isolation, thought he was some type of criminal; Hospitius agreed that he was a terrible sinner. Convinced he was a danger of some sort, one of the soldiers raised his sword to kill Hospitius, but the soldier‘s arm became paralyzed, and could move again only after Hospitius made the sign of the cross over it.
The soldier was converted on the spot, and spent the rest of his life in service to God by embracing the religious life, and was known personally to St. Gregory of Tours.
It was from him that St. Gregory, to whom we are indebted for the meagre details of the saint's life, learned of the austerities and numerous miracles of the recluse.
St Hospitius foretold his death and was buried by his friend, Austadius, Bishop of Cimiez.
Saint Hospitius died on 21 May, 581 at Cap Ferrat ( also called Cap Saint-Sospis or Cap Saint-Hospice), near Villefranche-sur-Mer, in the department of Alpes-Maritimes, France.
🍁🍁🍁🍁🍁🍁🍁
St. Hospitius is still venerated in the Diocese of Nice at the Cathedral of Saint Reparata. The Cathedral Church possesses a small bone of his hand; other relics are kept in the churches of Villefranche-sur-Mer, La Turbie, and San-Sospis.
✝
🔵
To Read more
To read more Saints Life - Click Here
To read more Tamil Catholic SOngs Lyrics - Click here
To download Catholic Songs - Click Here
Saints Quotes in Tamil - St. John Nepomuk
Saints Quotes in Tamil St. Pio
Saints Quotes in Tamil - St. Padre Pio
Catholic Quotes in Tamil - St. John Climaque
திங்கள், 20 மே, 2024
Tamil Catholic Quotes - St. Bernardine of Siena
நீ உன் எல்லா காரியங்களிலும், சர்வேசுரனுடைய இராஜ்யத்தையும், அவருடைய மகிமையையும் முதலில் தேடு! உத்தம சகோதர சிநேகத்தி்ல் நீடித்து நிலைத்திரு! மற்றவர்களுக்கு உபதேசிக்க நீ ஆசிக்கிறதை யெல்லாம், முதலில், நீ அனுசரி! –
"In all your actions see in the first place the Kingdom of God and His glory; persevere in brotherly charity, and practise first all that you desire to teach others"
📖 ✍🏻
+ St. Bernardine of Siena
அர்ச். சியன்னா பெர்நர்தீன் - St. Bernardine of Siena (May 20)
⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
மே 2️⃣0️⃣ம் தேதி
🌹நமதாண்டவரின் மகா பரிசுத்தத் திருநாமத்தின் மீதான பக்தியைப் பரப்பியவரும், வேதபாரகரும் ஸ்துதியருமான அர்ச். சியன்னா பெர்நர்தீன் திருநாள் 🌹
🌹பெர்னர்தீன், இத்தாலியிலுள்ள மாஸ்ஸா என்ற நகரில், ஆல்பிசெஸ்கி என்ற உயர்ந்த குடும்பத்தில் 1380ம் வருடம் பிறந்தார். இவர் ஆறு வயதில் தன் பெற்றோர்களை இழந்து அநாதையானார்; இவருடைய பக்தியுள்ள அத்தை இவரை ஒரு அர்ச்சிஷ்டவராக வளர்த்தார்.
1397ம் வருடம், சமூக மற்றும் திருச்சபை சட்டத்திற்கான பட்டப்படிப்பை முடித்த பிறகு, சாந்தா மரியா ஸ்கேலா தேவாலய வளாகத்தின் மருத்துவமனையுடன் இணைந்து இயங்கி வந்த மகா பரிசுத்த தேவமாதாவின் பக்திசபையில் இவர் உறுப்பினராகச் சேர்ந்தார். 3 வருடங்களுக்குப் பிறகு, சியன்னா நகரை கொள்ளை நோய் தாக்கியபோது, இவர் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் இரவு பகலாக ஈடுபட்டார்; 12 உதவியாளர்களுடன் இப்பிறர்சிநேக அலுவலில் ஈடுபட்டார். அடுத்த நான்கு மாதங்களும், அந்த மருத்துவமனையின் முழு நிர்வாகப் பொறுப்பையும் இவர் ஏற்றுக் கொண்டார்.
1403ம் வருடம் அர்ச்.பெர்னார்டின், அர்ச்.பிரான்சிஸ் அசிசியாரின் துறவற சபை விதிமுறைகளை கண்டிப்பாக அனுசரிக்கும் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்தார்; 1404ம் வருடம் குருப்பட்டம் பெற்றார்; அடுத்த வருடம், பிரசங்கியாராக ஏற்படுத்தப்பட்டார்.
1406ம் வருடம், அர்ச்.சாமிநாதரின் போதகக் குருக்களின் துறவற சபையின் வேதபோதக அப்போஸ்தலரும், மாபெரும் அர்ச்சிஷ்டவருமான அர்ச். வின்சென்ட் ஃபெர்ரர், இத்தாலியிலுள்ள பியட்மோன்ட் பிராந்தியத்தில் அலெஸ்ஸாண்டிரியா நகரில் பிரசங்கித்தபோது, ஞான பிரசங்கங்கள் நிகழ்த்தும்படியான தன் அலுவலைத் தொடரும்படியாக, மறுபடியும் பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்குச் செல்லப்போவதாகவும், தனது அங்கியின் மேற்போர்வை கூட்டத்தில் யார்மேல் இறங்குமோ, அவர் தனது வேதபோதக அலுவலை இத்தாலியில் தொடர்ந்து நிறைவேற்றுவார் என்றும் வலியுத்தியபடி, முன்னுரைத்தார்! அதன்படி, அர்ச்.பெர்நர்தீன் மீது அர்ச். வின்சென்டின் மேற்போர்வை வந்து இறங்கியதால், அவரையே அவ்வலுவலுக்காகத் தேர்ந்தெடுத்தார்; தொடர்ந்து, இத்தாலி மக்களுக்கு சுவிசேஷத்தைப் போதிப்பதற்கான அலுவலை, அர்ச். வின்சென்ட், அர்ச். பெர்நர்தீனிடம் ஒப்படைத்தார்.
30 வருடங்களுக்கும் மேலாக, அர்ச். பெர்னர்தீன், இத்தாலி நாடு முழுவதும் சுற்றித்திரிந்து பிரசங்கித்தார்; இக்காலத்தில் இவர் மாபெரும் பிரசங்கியார்களில் ஒருவராகத் திகழ்ந்தார்! இவர், எளிமையானதும், அன்னியோன்னியமானதும், கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் நிறைந்திருந்ததுமான மொழியினால், பிரசங்கம் செய்ததால், இவர் கூறிய தியானக்கருத்துக்களைக் கேட்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் திரளான மக்கள் கூட்டம், இவர் பிரசங்கித்த இடங்களுக்கெல்லாம் திரண்டு வந்து கூடியது! நகரங்களில் இவர் பிரசங்கித்தபோது வந்த திரளான கூட்ட மிகுதியின் காரணமாக சந்தையில் இவருக்காக பிரத்தியேக பிரசங்க மேடை அமைக்க வேண்டியதாயிற்று!
இவருடைய தியானப் பிரசங்கம் வழக்கமாக 3 அல்லது 4 மணி நேரம் வரை நீடிக்கும்! நமதாண்டவருடைய மகா பரிசுத்தத் திருநாமத்தின் மீதான பக்தியை இவர் இத்தாலி முழுவதும் பரப்பினார். 1414ம் வருடம், இவர் ஃபெர்ராரா நகரத்திற்கு அழைக்கப்பட்டபோது, கூடுதலாக வீண் ஆடம்பர ஜீவியத்திற்கு எதிராகவும், நல்லொழுக்கத்திற்கு எதிரான அடக்க வொடுக்கமில்லாமல் ஆடை அணிவதற்கு எதிராகவும் கண்டித்துப் பிரசங்கம் செய்தார்! பொலோஞாவில், சூதாட்டத்திற்கு எதிராக அறிவுரை கூறிப் பிரசங்கம் செய்தார்; இது, அங்கிருந்த சீட்டுக் கட்டு உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகளை அதிருப்தியடையச் செய்தது! 1425ம் வருடம் இவர், சியன்னா நகருக்கு வந்து, அடுத்து வந்த 50 நாட்கள், ஒவ்வொரு நாளும் பிரசங்கம் செய்து வந்தார்.
இவருடைய பிரசங்கங்கள் அடைந்த வெற்றி, குறிப்பிடத்தக்க வெற்றியாகும்: இவர் பிரசங்கிக்கும் சமயங்களில், “வீண் ஆடம்பரங்களின் நெருப்பு” என்று ஒரு இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும்; அந்த நெருப்புக்குள் பிரசங்கத்தைக் கேட்கிற மக்கள், ஆடம்பர முகக் கண்ணாடிகள், உயர்குதிங்கால்-காலணிகள், வாசனை திரவியங்கள், சவரிமுடிகள், சீட்டுக்கட்டுகள், தாயக்கட்டைகள், சதுரங்க விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை அந்த வீ்ண் ஆடம்பர நெருப்பின் குழிக்குள் போட்டு எரிப்பார்கள்! அர்ச். சியன்னா பெர்னர்தீன், தேவதூஷணத்திலிருந்தும், அசுத்தமான ஒழுங்கீன உரையாடல்களிலிருந்தும், ஆபத்தான விளையாட்டு களிலிருந்தும் விலிகியிருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரையையும், பிரசங்கத்தின்போது, வலியுறுத்திக் கூறுவார்.
40வருட காலம், இடைவிடாத அப்போஸ்தலத்துவ அலுவலுக்கான உழைப்பின் காரணமாக, அர்ச்.பெர்னர்தீன் மிகவும் களைப்புற்றவரானார்; பலவீனமடைந்தநிலையில், அக்விலா நகரில், இவர் காய்ச்சலினால், பீடிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் விழுந்தார். இங்கு, இவர் வெறுந்தரையில் படுத்த நிலையில், 1444ம் வருடம், மே மாதம் 20ம் தேதியன்று, ஆண்டவருடைய மோட்சாரோகணத்திருநாளுக்கு முந்தின நாளன்று, “பிதாவே நான் உமது மகா பரிசுத்தத் திருநாமத்தை மனிதர்களுக்கு வெளிப்படுத்தினேன்! நான் மறுபடியும் உம்மிடம் திரும்பி வருகிறேன்” என்று சக துறவியர், இலத்தீனில் பாடுகிறபோது, பாக்கியமாய் மரித்தார்!
அக்விலா நகர மாஜிஸ்திரேட்டுகள், இவருடைய பரிசுத்த சரீரத்தை, சியன்னா நகருக்குக் கொண்டு செல்வதற்கு மறுத்தனர்;
அந்நகர தேவாலயத்திலேயே, இதுவரை வரலாறு காணாத அளவு, மிகவும் ஆடம்பரமாக அர்ச். சியன்னா பெர்னர்தீனுடைய பரிசுத்த சரீரம் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய கல்லறையில், புதுமைகள் அபரிமிதமாக நாளுக்கு நாள் பெருகியது! ஒரு சமயம், இந்நகரில் இருவேறு பிரிவினர்களுக்கு இடையே பகை ஏற்பட்டு, சமாதானம் அடைகிற வரைக்கும், புதுமையாக அர்ச்சிஷ்டவருடைய கல்லறையிலிருந்து, இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது! ஆறு வருடங்களுக்குப் பின், 5ம் நிக்கோலாஸ் பாப்பரசர், இவருக்கு 1450ம் வருடம் மே 24ம் தேதியன்று, அர்ச்சிஷ்டப் பட்டம் அளித்தார்!
1472ம் வருடம், அர்ச்.சியன்னா பெர்னர்தீனுடைய பரிசுத்த சரீரம், ஆடம்பரமாக, அக்விலா நகரில், அவர் சேர்ந்திருந்த கண்டிப்பான விதிமுறை அனுசரித்த பிரான்சிஸ்கன் துறவியரின் புதிய தேவாலயத்திற்கு, இடமாற்றம் செய்யப்பட்டது அர்ச்.சியன்னா பெர்னர்தீனை அடக்கம் செய்து அதன் மேல் அவருக்குத் தோத்திரமாக ஒரு விலையுயர்ந்த ஷேத்திரத்திற்கான பீடத்தை ஸ்தாபிப்பதற்காகவே, பிரத்தியேகமாக பிரான்ஸ் நாட்டின் 11ம் லூயிஸ் அரசரால் இப்புதிய தேவாலயம் கட்டிமுடிக்கப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது!🌹✝
🌹நீ உன் எல்லா காரியங்களிலும், சர்வேசுரனுடைய இராஜ்யத்தையும், அவருடைய மகிமையையும் முதலில் தேடு! உத்தம சகோதர சிநேகத்தி்ல் நீடித்து நிலைத்திரு! மற்றவர்களுக்கு உபதேசிக்க நீ ஆசிக்கிறதையெல்லாம், முதலில், நீ அனுசரி! – ✍🏻 அர்ச்.சியன்னா பெர்னர்தீன்🌹
🌹அர்ச். சியன்னா பெர்னர்தீனே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
✨
🇻🇦
May 20
Feast 🌟
ST. BERNARDINE OF SIENA
Bernardine was born in 1380 in the noble Albizeschi family at Massa in Italy, but was left orphaned at the age of six, & hence was raised by a pious aunt.
In 1397, after a course of civil and canon law, he joined the Confraternity of Our Lady attached to the hospital of Santa Maria della Scala church. Three years later, when the plague struck the city of Siena, he ministered to the plague-stricken, and, assisted by 12 companions, took upon himself for four months entire charge of this hospital.
In 1403 Bernardine joined the Observant branch of the Franciscan Order, with a strict observance of St. Francis' Rule, & was ordained a priest in 1404 and was commissioned as a preacher the next year.
Around the year 1406 St. Vincent Ferrer, a Dominican friar and missionary, while preaching at Alessandria in the Piedmont region of Italy, allegedly foretold that his mantle should descend upon one who was then listening to him, and said that he would return to France and Spain, leaving to Bernardine the task of evangelizing the remaining people of Italy.
For more than 30 years, Bernardino preached all over Italy and is said to have been one of the greatest preachers of his time. His style was simple, familiar, abounding in imagery and creative language which drew large crowds to hear his reflections. In the towns, the crowds assembled to hear him were at times so great that it became necessary to erect a pulpit on the market-place.
The sermons often lasted three or four hours. He was invited to Ferrara in 1424, where he preached against the excess of luxury and immodest apparel. In Bologna, he spoke out against gambling, much to the dissatisfaction of the card manufacturers and sellers. Returning to Siena in April 1425, he preached there for 50 consecutive days.
His success was claimed to be remarkable. "Bonfires of the Vanities" were held at his sermon sites, where people threw mirrors, high-heeled shoes, perfumes, locks of false hair, cards, dice, chessmen, and other frivolities to be burned. Bernardine enjoined his listeners to abstain from blasphemy, indecent conversation, and games of hazard.
Worn out by his laborious apostolate of forty years the saint was taken down with fever and reached Aquila in a dying state. There lying on the bare ground he passed away on Ascension eve, 20th of May 1444, just as the Friars in choir were chanting the anthem: "Pater manifestavi nomen Tuum hominibus . . . ad Te venio".
(Father, I have manifested Thy Name to men; I come again to Thee)
The magistrates refused to allow Bernardine's body to be removed to Siena, and after a funeral of unprecedented splendour laid it in the church of the Conventuals.
Miracles multiplied after the saint's death. According to tradition, his grave continued to leak blood until two factions of the city achieved reconciliation. Bernardine was canonized by Pope Nicholas V, on 24 May, 1450.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
On 17 May, 1472, St. Bernardine's body was solemnly translated to the new church of the Observants at Aquila, especially erected to receive it, and enclosed in a costly shrine presented by King Louis XI of France.
⚜⚜⚜
"In all your actions see in the first place the Kingdom of God and His glory; persevere in brotherly charity, and practise first all that you desire to teach others"
📖 ✍🏻
+ St. Bernardine of Siena
To Read more
To read more Saints Life - Click Here
To read more Tamil Catholic SOngs Lyrics - Click here
To download Catholic Songs - Click Here
வெள்ளி, 17 மே, 2024
அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 36 - அர்ச். நெபுமுசேன் அருளப்பர் (St. John of Nepomuk May 16)
⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
🇻🇦மே 1️⃣6️⃣ம் தேதி
🌹பாவசங்கீர்த்தன இரகசியத்தைப் பாதுகாப்பதற்காக முதல் வேதசாட்சியாக மரித்த அர்ச். நெபுமுசேன் அருளப்பர் திருநாள்.🌹
🌹இவருடைய இயற்பெயர் ஜான் வெல்ஃப்லின்; 1345ம் வருடம் பொஹேமியா (இப்போது செக்கோஸ்லோவாகியா) நாட்டில், போமுக் என்ற சந்தை நகரத்தில், பிறந்தார். இந்நகரம் பின்னாளில் நெபோமுக் என்று மாற்றப்பட்டது.
இவர் பிராக் நகரிலுள்ள பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார்; 1383ம் வருடம் முதல் 1387ம் வருடம் வரை, பதுவா பல்கலைக்கழகத்தில் வேத சட்டத்திற்கான பட்டப்படிப்பைப் பயின்றார்.
1393ம் வருடம், பிராக் நகர அதிமேற்றிராணியாரால், அர்ச்.ஜைல்ஸ் கதீட்ரல் தேவாலயத்தில், பங்கு சுவாமியார்களின் அதிபர் சுவாமியாராக நியமிக்கப்பட்டார்.
பொஹேமியா நாட்டின் அரசியின் ஆன்ம குருவாக இவர் நியமிக்கப்பட்டார். ஒருநாள், அந்நாட்டின் அரசன், இவரிடம் , தன் மனைவியான அரசியார், பாவசங்கீர்த்தனத்தில் கூறிய பாவங்களை தன்னிடம்,வெளிப்படுத்தும்படி கட்டாயப்படுத்தினான்!
அதற்கு இவர் மறுத்து விட்டார். உடனே, இவரை அரசன் கொடூரமாக உபாதித்தான்.1393ம் வருடம் மே 16ம் தேதியன்று, ஆண்டவருடைய மோட்சாரோகணத் திருநாளுக்கு முந்தின திருவிழிப்பு நாளன்று, பொஹேமியா அரசனான 4ம் வென்செஸ்லாஸின் உத்தரவின்பேரில், இவர் கைகால்கள் கட்டப்பட்டவராக வில்டாவா ஆற்றின் மீது பிராக் நகரில் கட்டப்பட்டிருந்த சார்லஸ் பாலத்திலிருந்து, ஆற்றினுள் எறியப்பட்டார். பின்னர், இவருடைய உடல் தண்ணீர் மேல் மட்டத்தைத் தொட்டபோது, அந்த இடத்தின் மேல் புதுமையாக ஐந்து நட்சத்திரங்கள் தோன்றின! இந்த அற்புதத்தை பிராக் நகர் மக்கள் திரளான கூட்டமாக வந்து பார்த்தனர். இதைப் பற்றி, அரசி, அரசனிடம் தெரிவித்தாள்; இதைக் கேட்டுப் பேரச்சமடைந்த அரசன், தன் அறைக்குள் சென்று அடைபட்டவனாக பல நாட்கள் உள்ளேயே இருந்தான்.
300 வருடங்களுக்குப் பின், 1719ம் வருடம் , இவருடைய பரிசுத்த சரீரம் மோல்டாவு ஆற்றில் அழியாமலிருப்பதைக் கண்டறிந்தனர். இப்போது தான் அது ஆற்றில் எறியப்பட்டதுபோல் புதுப்பொலிவுடன் இருந்தது!
இவருடைய கல்லறை பல வருடங்களுக்குப் பின் திறக்கப்பட்டபோது, இவருடைய நாக்கு புதுமையாக அழியாமல் இருந்தது! அதனுடைய வீரத்துவம் வாய்ந்த வேதசாட்சிக்குரிய பரிசுத்த மவுனமே, இத்தகைய மாபெரும் மகிமையை, சர்வேசுரனிடமிருந்து பெற்றுக் கொடுத்திருந்தது.
அர்ச்.நெபுமுசேன் அருளப்பர், பொஹேமியா நாட்டின் அரசாங்கத்தினுடைய அர்ச்சிஷ்டவராகப் போற்றி ஸ்துதிக்கப்படுகிறார்! பாவசங்கீர்த்தனத்தின் இரகசியமான உடைபடா முத்திரையைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரை விட்ட முதல் வேதசாட்சியாக இவர் திகழ்கிறார்! புறணிப்பேச்சுகளுக்கு எதிரான புண்ணியங்களின் பாதுகாவலராகவும், இவர் இறந்த விதத்தின் மூலமாக, வெள்ள அபாயத்திலிருந்தும், தண்ணீரில் மூழ்கும் ஆபத்திலிருந்தும் பாதுகாக்கும் அர்ச்சிஷ்டவராகவும், இவர் விளங்குகின்றார்.
அர்ச்.நெபுமுசேன் அருளப்பர், “புதுமைகளால் மின்னுகிற நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய மகிமைமிக்க வேதசாட்சி” என்று வர்ணிக்கப்படுகிறார்.🌹✝
🌹அர்ச்.நெபுமுசேன் அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
🌹பாவசங்கீர்த்தனத்தின் உடைபடா முத்திரை🌹
🌹இந்த தேவதிரவிய அனுமானத்தின் முத்திரை உடைபடக்கூடாதது! மீற முடியாதது! திருச்சபைச் சட்டம் 983.1ன் படி, ஞான உபதேசம், பாவசங்கீர்த்தனத்தில், பாவியானவனை, எந்த விதத்திலும், பாவசங்கீர்த்தனத்தைக் கேட்ட ஆன்ம குருவானவர், வார்த்தையினாலோ, அல்லது வேறு எந்த விதத்திலோ, அல்லது எந்த காரணத்திற்காகவோ ( எண் 2490), காட்டிக் கொடுத்தால், அது அவருக்குப் பெரிய பாவாக்கிரமமாகும். ஆதலால், தன் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ, அல்லது, தனது நற்பெயரைக் காப்பாற்றுவதற்காகவோ, அல்லது தன் மீது அநியாயமாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, அது பொய்யானது என்று நிரூபிப்பதற்காகவோ,இன்னொருவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காகவோ, நீதிமன்ற வழக்கிற்கு உதவி செய்வதோ, பொது மக்களுக்கு எதிராக வரவிருக்கும் பேரழிவைத் தடுத்து நிறுத்தவோ என்று எந்த காரணத்திற்காகவும், ஒரு குரு, பாவசங்கீர்த்தன இரகசியத்தின் உடைபடா முத்திரையை, முறிக்கக் கூடாது! பாவசங்கீர்த்தனத்தில் கேட்டதை வெளியிடக் கூடாது!
ஒருவனுடைய பாவசங்கீர்த்தனத்தை, வெளிப்படுத்துவதற்குக் குருவானவர், மனித சமூக சட்டத்தினால், வலுவந்தம் செய்யக்கூடாதவராக இருக்கிறார்! அல்லது இவர் வேறு எந்த வார்த்தைப்பாடு எடுத்தாலும், உதாரணமாக, நீதிமன்றங்களில் இவர் சாட்சியாக சொல்லும்போது அங்கு, பரிசுத்த வேதாகமத்தின் மீது சத்தியம் செய்தால் கூட, அதுவும், இந்த பாவசங்கீர்த்தன இரகசியத்தைப் பாதுகாப்பதிலிருந்து . இவரை விடுவிக்கக் கூடாமலிருக்கிறது! பாவசங்கிர்த்தனத்தில் கூறியவற்றை அப்படியே திரும்பக் கூறுவதன் மூலமாகவோ, அல்லது சில மறைமுகமான அடையாளங்கள் மூலமாகவோ, ஆலோசனை மூலமாகவோ, அல்லது செய்கை மூலமாகவோ ஒரு குருவானவர், பாவசங்கீர்த்தனத்தை வெளிப்படுத்தக் கூடாதவராக இருக்கிறார்!
பாப்பரசரின் அலுவலகத்திலிருந்து ஒரு தவறா வரம்பெற்ற ஆணை (நவம்பர் 18, 1682ம் வருடம் வெளியிடப்பட்டது), “பாவசங்கீர்த்தனம் செய்தவரின் மனம் நோகச் செய்யும்படி, அல்லது அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்தும்படியாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துவதும், பாவசங்கீர்த்தனத்திலிருந்து பெற்ற அறிவைப் பயன்படுத்தி வெளிப்படுத்துவதும், ஒரு குருவானவருக்குக் கட்டாயமாக தடை செய்யப்பட்ட காரியங்களாகும்” என்று பிரகடனம் செய்கிறது.🌹✝
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
✨
🇻🇦
May 1️⃣6️⃣
Martyrdom 🌟🌹
ST. JOHN OF NEPOMUK
⚡
(The first martyr of the Confessional Seal)
Jan Velflín was born in AD 1345, in the small market town of Pomuk (later renamed Nepomuk) in Bohemia, now in the Czech Republic
He studied at the University of Prague, then furthered his studies in canon law at the University of Padua from 1383 to 1387.
In 1393, John was made the vicar-general of Saint Giles Cathedral by Jan of Jenštejn, Archbishop of Prague
St. John was confessor of the queen of Bohemia, and a day came when the King demanded from him to tell what the queen had said in the confessional!
St. John refused to divulge the secrets of the confessional to the King. Hence St. John was tortured and then with his hands and feet tied, on the vigil of Ascension, 16 May 1393, he was thrown into the river Vltava from Charles Bridge in Prague at the behest of Wenceslaus IV, King of Bohemia.
Later at the place where his body had hit the water, five stars appeared over the spot. The people of Prague came in great numbers to witness the marvel. The Empress pointed out the miracle to the King, who became terrified and closed himself in his room for several days.
In 1719, about 300 years later his body was found intact in the Moldau River, as if it had been thrown into it minutes before.
When his tomb was opened again many years later, his tongue was found incorrupt, which for its silence, gave such a great glory to God.
St. John of Nepomuk is the national saint of Bohemia and is considered the first martyr of the Confessional Seal, a patron against calumnies and, because of the manner of his death, a protector from floods and drowning
🎯
St. John of Nepomuk is described as "gloriosum Christi martyrem miraculisque coruscum"
("a glorious martyr of Christ and sparkling with miracles")
🍁🍁🍁🍁🍁🍁🍁
THE CONFESSIONAL SEAL❗
The sacramental seal is inviolable. Quoting Canon 983.1 of the Code of Canon Law, the Catechism states, "...It is a crime for a confessor in any way to betray a penitent by word or in any other manner or for any reason" (No. 2490). A priest, therefore, cannot break the seal to save his own life, to protect his good name, to refute a false accusation, to save the life of another, to aid the course of justice (like reporting a crime), or to avert a public calamity. He cannot be compelled by law to disclose a person's confession or be bound by any oath he takes, e.g. as a witness in a court trial. A priest cannot reveal the contents of a confession either directly, by repeating the substance of what has been said, or indirectly, by some sign, suggestion, or action. A Decree from the Holy Office (Nov. 18, 1682) mandated that confessors are forbidden, even where there would be no revelation direct or indirect, to make any use of the knowledge obtained in the confession that would "displease" the penitent or reveal his identity.
🔵
To Read more
To read more Saints Life - Click Here
To read more Tamil Catholic SOngs Lyrics - Click here
To download Catholic Songs - Click Here
Tamil Catholic Quotes - St. Paschal Baylon
சேசுநாதர் பரலோகத்தில் மகிமையாக இருப்பதைப் போலவே, திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்
அர்ச். பாஸ்கல் பயலோன்
Blinking Feature Using CSS
To Read more about St. Baylon
- Click Hereஅர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 35 - அர்ச். பாஸ்கால் பயிலோன் (St. Paschal Baylon - May 17)
⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
மே 1️⃣7️⃣ம் தேதி
🌹மகா பரிசுத்த தேவநற்கருணையின் சரீரமெடுத்த பக்திசுவாலகரும் ஸ்துதியருமான அர்ச். பாஸ்கால் பயிலோன் திருநாள்🌹
🌹பாஸ்கால், ஸ்பெயின் தேசத்திலுள்ள ஆரகன் நாட்டில் 1540ம் வருடம், மே 24ம் தேதி, பெந்தேகோஸ்தே திருநாளன்று, பிறந்தார். திவ்ய இஸ்பிரீத்து சாந்துவான சர்வேசுரனின் திருநாளை , ஸ்பெயின் நாட்டினர், திவ்ய இஸ்பிரீத்துவானவரின் பாஸ்கா என்று அழைப்பதால், இவருக்கு பாஸ்கால் என்று இவருடைய பெற்றோர்கள் பெயரிட்டனர். இவர் 22 வயது வரை ஆடு மாடு மேய்க்கும் தொழிலிருந்தார். ஆடு மேய்க்கும்போது, இவர் தன்னுடன் ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்று, வருவோர் போவோரிடம், ஏ பி சி டி எழுத்துக்களை தனக்குக் கற்பிக்கும்படிக் கேட்பார். தனக்கு புத்தகத்தை வாசிக்கக் கற்றுக் கொடுக்கும்படிக் கேட்பார். வயலில் வேலை பார்க்கும்போது, கத்தோலிக்க வேதப் புத்தகங்களையும், ஞான நூல்களையும் வாசிப்பார்.
இவர், அர்ச்.அல்காந்தரா இராயப்பரின் சீர்திருத்தப்பட்ட பிரான்சிஸ்கன் துறவற சபையில், ஒரு பொது நிலை சகோதரராகச் சேர்ந்தார். வாயில்காப்போனாக ஸ்பெயினிலிருந்த அநேக பிரான்சிஸ்கன் துறவற மடங்களில் இவர் பணிபுரிந்தார். இவர் அர்ச்சிஷ்டனத்தனத்தினுடைய உத்தமதனத்தில் எவ்வளவுக்கு அதிகமாக முன்னேறினார் என்றால், காட்சிதியானியாகவும், தேவசிநேகத்தில், குறிப்பாக மகா பரிசுத்த தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் திவ்ய சேசுகிறீஸ்து நாதர் மீது கொண்ட மாபெரும் சிநேகத்தினால், ஆழ்ந்த தியானியாகவும் ஜீவித்து வந்தார். அடிக்கடி பரலோகக் காட்சிகளால் பரவச நிலைமையினுள் மூழ்கி விடுவார். மகா பரிசுத்த தேவநற்கருணையின் முன்பாக இரவில் பல மணி நேரம் ஆழ்ந்த ஜெப தியானத்தில் மூழ்கியிருப்பார்.
1570ம் வருடம் பிரான்சிஸ்கன் துறவற சபையின் பொது தலைமை அதிபர், பாரீஸ் நகரத்திற்கு வர நேர்ந்தது. துறவற சபையின் ஒரு அவசியமான காரியத்திற்காக, இவரை அதிபரிடம் அனுப்பி வைத்தனர். பிரான்சிலிருந்த அநேக நகரங்கள் வழியாக இவர் பயணிக்க நேர்ந்தபோது, அந்நகரங்கள் எல்லாம் புராட்டஸ்டன்டு பதிதர்கள் கையிலிருந்தன! அவர்கள் படைக் கருவிகளுடன் இருந்தனர். இருப்பினும், மகா பரிசுத்த தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் நமதாண்டவரின் மெய்யான திவ்ய பிரசன்னத்திற்கு எதிரான புராட்டஸ்டன்டுகளின் தேவதூஷணமான கருத்துகளுக்கும் வாதங்களுக்கும் எதிராக அந்த புராட்டஸ்டன்டு பதிதர்களுடன், அர்ச்.பாஸ்கால் வாதாடினார்; மகா பரிசுத்த தேவநற்கருணையைப் பற்றிய கத்தோலிக்க வேதசத்தியங்களுடைய மேற்கோள்களுடன் இவர், மிகுந்த ஞானத்துடன், அப்பதிதர்களை, எதிர்வாதம் செய்ய விடாமல். திணறடித்தார்! தர்க்கவாதத்தில் முழு வெற்றியடைந்தார். இதைக் கண்டு சீற்றமடைந்து வெகுண்டெழுந்த பதிதக் கூட்டம், இவரைக் கற்களாலும் தடிகளாலும் அடித்தனர். அப்போது, அதனால். இவருக்கு ஒரு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. எஞ்சிய ஜீவிய காலம் முழுவதும் அந்த காயத்தினால் ஏற்பட்ட முடத்துடனேயே இவர் வாழ்ந்து வந்தார்.
அர்ச்.பாஸ்கால், 1592ம் வருடம் மே 17ம் தேதி பாக்கியமாய் மரித்தார்; வலேரிய நாட்டின் அரண்மனை சிற்றாலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை , விரைவிலேயே திருயாத்திரை ஸ்தலமாயிற்று! இவருக்கு முத்திப்பேறு பட்டம் 5ம் சின்னப்பர் பாப்பரசர் 1618ம் வருடம் அளித்தார்; 8ம் அலெக்சாண்டர் பாப்பரசர், 1690ம் வருடம் அக்டோபர் 16ம் தேதி அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.
13ம் சிங்கராயர் பாப்பரசர், அர்ச்.பாஸ்கால் பயிலோன், “மகா பரிசுத்த தேவநற்கருணையின் பக்திசுவாலகர்!” என்றும் மகா பரிசுத்த திவ்ய நற்கருணை மாநாடுகள் , இனி வரவிருக்கும் மகா பரிசுத்த தேவநற்கருணை பக்திசபைகளுக்கும் பாதுகாவலர்” என்றும் பிரகடனம் செய்தார். இவர், பிரான்சிஸ்கன் துறவ சபை உடுப்பை அணிந்தவராகவும், மகா பரிசுத்த தேவநற்கருணை கதிர் பாத்திரத்தை ஏந்தியவராகவும், ஓவியங்களில் சித்தரிக்கப்படுகிறார்! இது, இவர் மகா பரிசுத்த தேவநற்கருணையின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்திபற்றுதலை நமக்கு உணர்த்துகிறது.🌹✝
(ஸ்பெயினின் உள்நாட்டுப்போரின்போது(1936-39) கம்யூனிஸ்டுகள் இவருடைய கல்லறையையும் பரிசுத்த அருளிக்கங்களையும் தீக்கிரையாக்கினர்)
🌹மகா பரிசுத்த தேவநற்கருணையின் பக்திசுவாலகரும் ஸ்துதியருமான அர்ச்.பாஸ்கால் பயிலோனே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
Source:
✨
🇻🇦
May 1️⃣7️⃣
Feast 🌟
ST. PASCHAL BAYLON
⚡
(Seraph of the Most Holy Eucharist)
Paschal was born in the Kingdom of Aragon, Spain on the Feast of Pentecost, 24 May 1540. He was named Paschal by his parents because in Spain, Pentecost is called "Pasch of the Holy Ghost".
He worked as a shepherd till the age of 22. He would carry a book with him and beg passersby to teach him the alphabet and to read, and as he toiled in the fields he would read religious books.
He joined the Reformed Franciscan Order (Alcantarine Reform) as a lay brother and served as a doorkeeper at various Franciscan monasteries in Spain.
He was a mystic and contemplative, and he had frequent ecstatic visions. He would spend hours in the night before the altar in prayer.
The General of the Franciscan Order happening to be at Paris in 1570. Paschal was sent to him for some necessary business of his province. Many of the cities through which he was to pass in France, were in the hands of the Protestants, who were then in arms, Paschal triumphantly defended the Catholic doctrine of the Real Presence of our Lord in the Most Holy Eucharist against the blasphemous assertions of Protestants. For this he was beaten up by Protestants with sticks and stones, and received a wound on one shoulder of which he remained lame as long as he lived.
Paschal died on 17 May, in AD 1592. His tomb in the Royal Chapel in Villareal in the old province of Valencia, immediately became an object of pilgrimage.
Paschal was beatified by Pope Paul V in 1618, & was canonized by Pope Alexander VIII on 16 October 1690 AD.
🍁🍁🍁🍁🍁🍁🍁
Pope Leo XIII proclaimed St. Paschal Baylon, the "seraph of the Most Holy Eucharist", patron of Eucharistic congresses, and all contemporary and future Eucharistic associations.
⚡
Christian art usually depicts him wearing the Franciscan habit and bearing a monstrance, signifying his devotion to the Most Holy Eucharist.
⚡
During the Red Terror at the time of the Spanish Civil War (1936-1939), his grave was desecrated and his relics were burned by the Communists.