⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
🇻🇦மே 1️⃣6️⃣ம் தேதி
✨May 1️⃣6️⃣
🌹ஸ்துதியரும் கார்மேல் துறவற சபை அதிபருமான அர்ச். சைமன் ஸ்டாக் திருநாள்🌹
🌹சைமன், இங்கிலாந்திலுள்ள ஆய்ல்ஸ்ஃபோர்டு என்ற இடத்தில், கென்ட் பிரபுவின் உயர்குடும்பத்தில், எல்லாராலும் அறியப்பட்டு, மிக உயர்வாக மதிக்கப்பட்ட உத்தம கிறீஸ்துவக் குடும்பத்தில் பிறந்தார். குழந்தையாயிருந்தபோதே, மகா பரிசுத்த தேவமாதாவால், தமது சொந்த மகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் பேசத்துவக்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே, இவருடைய பெற்றோர்களும், குடும்பத்தின் மற்றவர்களும், அதிதூதரான அர்ச்.கபிரியேல் சம்மனசானவர் கூறிய மங்கள வார்த்தை ஜெபத்தை, இவர் ஜெபிக்கக் கேட்ட சமயத்தில், மகா பரிசுத்த தேவமாதா, இக்குழந்தையைத் தமது சொந்த மகனாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்; இவர் வாசிக்கக் கற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே, மகா பரிசுத்த தேவமாதாவின் சிறிய மந்திரமாலை ஜெபத்தை மனப்பாடம் செய்து, தினமும் பாராமல் ஜெபித்து வந்தார். சைமனுக்கு ஆறு வயதானபோது, இவர் தனது அறையில் முழங்காலிலிருந்தபடி, பரிசுத்த வேதாகமத்தைப் படித்து வந்தார்; 12 வயதானபோது, சைமன், வீட்டை விட்டு வெளியேறி, ஒரு தபோதனராக, ஒரு பெரிய ஓக் மரத்தினுடைய பொந்திற்குள் ஏகாந்த்ததில் ஜீவித்து வந்தார். இதன் காரணத்தினாலே, இவருடைய பெயருடன் ஸ்டாக் என்ற பெயரும் சேர்ந்தது.
ஸ்டாக் என்கிற வார்த்தைக்கு, “பெரிய மரக்கம்பம்” என்று அர்த்தம். இங்கு வசித்தபோது தான், இவர், மகா பரிசுத்த தேவமாதாவின் உதவியால், பசாசின் மீது வெற்றிகொண்டார், என்று, பின்னாளில், தனது சக துறவற சகோதரர்களிடம் கூறினார். இங்கு தபோதனராக ஜீவித்த காலத்தில், சைமன், தண்ணீரை மட்டுமே அருந்தி, சில மூலிகைகளையும், காட்டுச்செடி வேர்களையும், காட்டில் வளரும் ஆப்பிள் பழங்களையும், உண்டு வந்தார். இவ்விதமாக எட்டு வருட காலம், ஏகாந்தத்தில் தபோதனராக ஜீவித்தபிறகு, மற்ற துறவியருடன் சேர்ந்து ஒரு துறவற மடத்தில் ஜீவிக்க அழைக்கப்படுவதை உணர்ந்தவராக, கார்மேல் துறவற சபையில் சேர்ந்தார். இவர் தனது உயர் வேத இயல் கல்வியை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கற்று முடித்தார்; பின், 1215ம் வருடம், கார்மேல் துறவற சபையின் உபதலைவராக நியமிக்கப்பட்டார்; அர்ச்.சைமன், கார்மேல் துறவற சபை ஐரோப்பா முழுவதும் பரவுவதற்காக அயராமல் உழைத்து வந்தார். அநேக இடங்களில், குறிப்பாக பல்கலைக்கழக நகரங்களான ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், பாரீஸ், பொலோஞா ஆகிய நகரங்களில், புதிய கார்மேல் துறவற சபை மடங்களை ஸ்தாபித்தார். இத்துறவற சபையின் ஜீவிய முறையை, தபோதனர்களுடைய ஜீவிய முறையிலிருந்து, யாசக துறவியர்களுடைய (அர்ச்.பிரான்சிஸ் அசிசியாருடைய சிறிய சகோதரர்களுடைய துறவற சபை மற்றும் அர்ச்.சாமிநாதருடைய போதகக் குருக்களின் துறவற சபை, யாசக துறவற சபை என்று அழைக்கப்படுகின்றன! அட்ட தரித்திரத்தை அனுசரித்து, பிறரிடம் யாசித்து உணவு உடை ஆகியவற்றை பெற்று ஜீவித்து வந்ததால், இவர்கள் யாசக துறவற சபையினர் என்று அழைக்கப்படுகின்றனர்!) ஜீவிய முறைக்கு மாற்றியமைக்கும் விதமாக, கார்மேல் துறவற சபையின் விதிமுறைகளை சீர்திருத்தி அமைத்ததில், இவர் பெரும்பங்கை வகித்தார்; மகா பரிசுத்த தேவமாதாவிடம் இவர் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்ததைப் பற்றியும், அநேக ஞான கொடைகளையும், தீர்க்கதரிசன வரத்தையும் இவர் பெற்றிருந்ததைப் பற்றியும் யாவரும் அறிவர்; இவருக்கு 82 வயதானபோது, கார்மேல் துறவற சபையின் பொது தலைமை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்;அதன் பின் ஏறக்குறைய 20 வருட காலம்,தனது உன்னதமான பரிசுத்தத்தனத்தினாலும், வருங்காலத்தைக் கண்டறியக்கூடிய நுட்பமான அறிவுத்திறனாலும், விமரிசையாலும், தொடர்ந்து கார்மேல் துறவற சபையை, திறம்படி நிர்வாகம் செய்து வந்தார்;
அர்ச்.சைமன், இச்சபையின் பொது தலைமை அதிபராக இருந்தபோது, மகா பரிசுத்த தேவமாதாவின் காட்சியைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றார்; அர்ச்.சைமன், இங்கிலாந்திலுள்ள ஆய்ல்ஸ்ஃபோர்டுவில் முழங்காலிலிருந்து, ஜெபித்துக் கொண்டிருந்தபோது, மகா பிரகாசமுள்ள ஒளிரும் ஒளியினால் திரளான சம்மனசுகளின் சேனைகள் சூழப்பட்டபடி, மகா பரிசுத்த கார்மேல் மாதா, இவருக்குக் காட்சியளித்தார்கள்! அர்ச்.சைமனிடம், பழுப்பு நிற கார்மேல் மாதா உத்தரியத்தை, அளித்து, மகா பரிசுத்த தேவமாதா, அதற்கான ஈடு இணையற்ற தயாள பெருந்தன்மையினுடைய வாக்குறுதியையும், அவருக்கும், அவருடைய ஞான பிள்ளைகளுக்கும், மகா பரிசுத்த தேவமாதாவிற்கு அர்ப்பணிக்கவும், அதன் விசேஷமான அடையாளமான இம்மகா பரிசுத்த உத்தரியத்தை அணிந்துகொண்டு ஜீவிப்பதற்கு ஆசிக்கிற எல்லோருக்கும், வாக்களித்தார்கள். கார்மேல் உத்தரியத்தை அர்ச்.சைமனுக்கு அளித்தபோது, மகா பரிசுத்த தேவமாதா, அவரிடம், பின்வருமாறு கூறினார்கள்: “ என் பிரிய மகனே! உன் துறவற சபையினுடைய இந்த உத்தரியத்தைப் பெற்றுக்கொள்! இந்த உத்தரியம், என் ஆதரவின் விசேஷ அடையாளம்! இதை உனக்காகவும், கார்மேல் மலையின் மக்களான உன் துறவற சபையின் பிள்ளைகளுக்காக நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன்! இந்த உத்தரியத்தை அணிந்தபடி இறக்கிற எவனும், நித்திய நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவான்! இந்த உத்தரியம், நித்திய இரட்சணியத்தினுடைய அடையாளச் சின்னமாகவும், ஆபத்து சமயத்தில் பாதுகாப்புக் கவசமாகவும், விசேஷ சமாதானத்தினுடையவும், பாதுகாப்பினுடையவும் உறுதிப் பிணையாகவும் இருக்கிறது!”
உத்தரியம் என்கிற வார்த்தைக்கான “ஸ்காபுலா” என்கிற இலத்தீன் மூலச் சொல்லின் அர்த்தம்- தோள்பட்டையாகும். அதாவது இருதோள்களிலும் மாட்டி முன்னும் பின்னுமாக அணிந்துகொள்ளக்கூடிய முழு நீள உத்தரிய உடுப்பாக இந்த கார்மேல் உத்தரியம், அர்ச்.சைமனுக்கு, மகா பரிசுத்த தேவமாதாவால் அருளப்பட்டது! இவ்விதமாகவே, துறவற குருக்களும்,கன்னியாஸ்திரிகளும், தோளில் துவக்கி , கீழே தரை வரை நீண்டிருக்கும் முழு நீள உடுப்பாகவே, உத்தரியத்தை அணிந்திருந்தனர்! பொது விசுவாசிகள், இரு சிறு உத்தரியத் துண்டுகள் முன்பக்கமும் பின்பக்கமுமாக இணைக்கப்பட்ட ஒரு உத்தரிய நாடாவை அவர்களுடைய கழுத்தைச் சுற்றி அணிந்து கொள்கின்றனர்; ஒரு சுரூபக் கயிற்றை அணிவதுபோல் அணிந்து கொள்கின்றனர்! உத்தரிய சபையில் முறையாக ஒரு கத்தோலிக்க குருவால் சேர்க்கப்பட்ட பிறகே, உத்தரியத்தை எல்லோரும் அணிந்துகொள்ளலாம். கவனத்துடனும், பக்தியுடனும், ஒவ்வொருவரும் கார்மேல் உத்தரியத்தை அணிந்துகொள்கிறபோது மட்டுமே, மகா பரிசுத்த தேவமாதா அளித்திருக்கும் வாக்குறுதியின் ஞான பலன்களை அடைந்துகொள்ளலாம்.
அர்ச்.சைமன் ஸ்டாக் 1265ம் வருடம், தனது 100வது வயதில் பாக்கியமாய் மரித்தார். போர்தோ என்ற இடத்திலுள்ள கதீட்ரல் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்! அச்சமயம், அவர் அந்த மடத்தை பார்வையிடச் சென்றிருந்தார்; அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த அருளிக்கங்களான எலும்புகள், இன்று வரை இதே கதீட்ரலில் பாதுகாக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன! இப்பரிசுத்த அருளிக்கங்களில் ஒரு பகுதி, 186ம் வருடம், இங்கிலாந்திலுள்ள கெனிங்ஸ்டன் கார்மேல் தேவாலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு,பூஜிதமாக வணங்கப்படுகின்றன! அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த மண்டை ஓட்டின் ஒரு பகுதி, இங்கிலாந்திலுள்ள ஆய்ல்ஸ்ஃபோர்டுவில் 1950ம் வருடம், சிறு பீடத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டது; 1564ம் வருடம் முதல் கார்மேல் துறவியர் அர்ச்.சைமன் ஸ்டாக்கின் திருநாளை மே 16ம் தேதி அனுசரித்து வருகின்றனர்!🌹✝
🌹அர்ச்.சைமன் ஸ்டாக்கே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
✝
🔵
Source:
✨
🇻🇦May 1️⃣6️⃣
🌹Feast of St.Simon Stock-Confessor, Reformer and Superior General of Carmelite order🌹
🌹Simon was born in Aylesford, England, to one of the most well-known and respected Christian families in the County of Kent. While still an infant, he was chosen by the Blessed Mother for her own, with his parents and others hearing him recite the Angelic Salutation of the Archangel Gabriel, long before he had learned to speak. Prodigious as a child, he learned and memorised the Little Office of the Blessed Virgin before he was able to read, reciting it on a daily basis. He was observed to read the Holy Scripture, kneeling in his room, by the age of six.
At the age of twelve, Simon left home, living as a hermit in the hollowed trunk of a large oak tree, earning him the name Simon “Stock.” There he triumphed over the demon, as he would later tell his religious, only by the assistance of the Most Holy Virgin. While living as a hermit, he drank only water and ate only herbs, roots and wild apples. Eventually, after eight years of solitude, Simon felt called back to communion with others and joined the Carmelite Order. He finished his studies at Oxford and later (in 1215) was appointed Vicar General of the Order
Saint Simon worked tirelessly to spread the Carmelite Order throughout Europe, founding many communities in university towns such as Cambridge, Oxford, Paris and Bologna. He was responsible for the revision of the Rules of the Order, leading the community from lives as hermits to those of mendicant friars. Known for his deep devotion to Our Blessed mother, as well as for the spiritual gifts of miracles and prophecy, Simon was elected as the sixth Superior General of the Carmelites at age 82. He continued to govern the order for twenty years, demonstrating holiness, vision and prudence.
During his tenure as Superior General, Simon was graced with a visitation from the Blessed Mother, to whom he was so devoted. Radiantly surrounded by a multitude of Angels, Our Lady of Mount Carmel appeared to him as he knelt in prayer at Aylesford, England. Presenting to him the Carmelite Brown Scapular, she made Her Promise of unparalleled generosity to him, his spiritual children and to all those who wished to consecrate themselves to her by this special sign: Her words were:
“Receive, my beloved son, this scapular of your Order. It is the special sign of my favour, which I have obtained for you and for your children of Mount Carmel. He who dies clothed with this habit shall be preserved from eternal fire. It is the badge of salvation, a shield in time of danger and a pledge of special peace and protection.”
The scapular (from the Latin, scapular, meaning “shoulder blade”) consists of two pieces of cloth, one worn on the chest and the other on the back, which were connected by straps or strings passing over the shoulders. In certain Orders, monks and nuns wear scapulars that reach from the shoulders almost to the ground as outer garments. Lay persons usually wear scapulars underneath their clothing, consisting of two pieces of material only a few inches square. Although the scapular may be worn by any Catholic, even an infant, proper investiture must be done by a priest. Subsequently, the scapular must be worn in the proper manner, the individual forfeiting its holy benefits if neglectful or careless.
Saint Simon Stock died on 16 May 1265, at the age of 100 and was buried in the cathedral of Bordeaux, where he was visiting at the time of his death. The Saint’s bones are still preserved in a cathedral in Bordeaux; a tibia was brought to England in the 1860s for the Carmelite church in Kensington, a part of the skull was enshrined at Aylesford in 1950. St Simon has been venerated by the Carmelites since at least 1564 and celebrate his feast on 16th of May .
✝
🔵