திவ்ய பலிபூசையைப் பழித்த பாவத்தினால் வந்த ஆக்கினை
ஆஸ்திரியா நாட்டில் கொனக்கோ என்ற ஊரில் சிறு பிள்ளைகள் ஆடுமாடு மேய்க்கிறபோது அவர்களுள் ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, “கோயிலில் குருக்கள் பூசையை நிறைவேற்றுவதுபோல இங்கு நாமும் பூசை செய்து விளையாடலாம். ஒரு பீடத்தை செய்து, ஒருவன் குருவைப்போல பூசை செய்ய, ஒருவன் பரிசாரகனைப் போலவும் மற்றவர் பூசை காண்பதுபோலவும் விளையாடலாம்” என்று கூறினான். அதற்கு எல்லாரும் சம்மதித்தனர். அங்கிருந்த ஒரு பெரிய கல்லைப் பீடம் போல வைத்து சுற்றிலும் அநேக பூக்களைக் கட்டினதுமல்லாமல் அந்தப் பீடத்தின்மேல் ஒரு அப்பத்தின் துண்டும் கொஞ்சம் திராட்சை இரசமும் வைத்தார்கள். பூசை செய்யக் குறிக்கப்பட்ட பையன் பூசை உடுப்புகளைப்போல சில சட்டைகளை தன் மேல் போட்டுக்கொண்டு பூசைசெய்யத் துவக்கினான். பூசை செய்தவன் கோவிலில் குருவானவர் திவ்ய பலிபூசை நேரத்தில் செய்கிற சடங்குகளையெல்லாம் செய்தான். இதைக் கண்ட மற்ற பிள்ளைகள் மகிழ்ந்தனர். பிறகு, நடுப்பூசையில் குருவானவர் கூறும் வசீகர வார்த்தைகளை அப்பத்துண்டின் மிதும் திராட்சை இரசத்தின் மிதும் அச்சிறுவன் கூறினான். பிறகு, மற்றவர்களுக்கு நன்மை கொடுக்கிறதைப்போல கொடுக்க அந்த அப்பத்தைத் துண்டு துண்டாய்ப் பிட்கத் துவக்கினான். அந்தச் சமயத்தில் வானத்திலிருந்து நெருப்பு வந்து அந்த பீடத்திலிருந்த அப்பத்துண்டு, இரசம் முதலானவற்றையெல்லாம் எரித்து சாம்பலாக்கினது. மேலும் பீடமாக இருந்த அந்த பெரிய கல்லும் பொடிப்பொடியாய் நொறுங்கியது. அங்கேயிருந்த சிறு பிள்ளைகள் அனைவரும் பயத்தினால் சோர்ந்து நினைவில்லாமல் கிழே விழுந்து மாலை வரை நினைவின்றி மயங்கிக் கிடந்தார்கள். பிறகு அவர்களுடைய பெற்றோர்கள் தேடியபோது அவர்கள் எல்லாரும் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள். பிள்ளைகளை பலமுறைத் தட்டிக் கூப்பிட்டாலும் அவர்கள் பேசாமல் எழமுடியாமல் கிடக்கிறதைக் கண்டு மிகுந்த பயமும் துக்கமும் அடைந்தார்கள். ஆனால் உயிர் இருக்கிற அடையாளம் கண்டு அவரவர் தங்கள் பிள்ளைகளை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அந்த இரவு முழுவதும் அவர்களுக்கு மருந்து கொடுத்தபோதிலும் அந்தப் பிள்ளைகளுக்குப் பேச்சு வரவில்லை.மறுநாள் அவர்கள் வாய் திறந்து பேசிய பிறகு நடந்த சேதிகளைச் சொன்னார்கள். அதைக் கேட்டவர்கள் எல்லாரும் அந்தப் பிள்ளைகள் இருந்த இடத்திற்குத் திரும்பப் போய்ப் பார்க்கிறபோது பிள்ளைகள் சொன்னபடியே வானத்திலிருந்து விழுந்த நெருப்புக் கட்டியால் பீடம் போலிருந்த அந்த பெரியக் கல் நொறுங்கியிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அந்நகர மேற்றிராணியார் இதை அறிந்ததும் அந்த இடத்தில் ஒரு தேவாலயமும் ஒரு சந்நியாசிகள் மடமும் கட்டினார். அந்தப் பிள்ளைகள் எல்லாரும் தங்களுக்கு புத்தி வந்தபிறகு, அந்த மடத்தில் சேர்ந்து உத்தம சந்நியாசிகளானார்கள்.கிறிஸ்துவர்களே! வேதகாரியங்களை விளையாட்டாக செய்வது கனமான பாவம் ஆகும். அதிலும் குறிப்பாக நமது திவ்ய வேதத்தின் பரிசுத்த இருதயமாக விளங்கும் திவ்யபலிபூசை சடங்குகளை விளையாட்டாகச் செய்வது சர்வேசுரனுக்குக் கோபத்தை மூட்டும் செயல் ஆகும். எனவே திவ்யபலி பூசை சடங்குகளை மிகுந்த பக்தி பற்றுதலுடன் கண்டு, நம் திவ்ய இரட்சகரிடமிருந்து அபரிமிதமான ஞானபலன்களை அடைவோம்.x x
திவ்ய பலிபூசையைப் பழித்த பாவத்தினால் வந்த ஆக்கினை
ஆஸ்திரியா நாட்டில் கொனக்கோ என்ற ஊரில் சிறு பிள்ளைகள் ஆடுமாடு மேய்க்கிறபோது அவர்களுள் ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, “கோயிலில் குருக்கள் பூசையை நிறைவேற்றுவதுபோல இங்கு நாமும் பூசை செய்து விளையாடலாம். ஒரு பீடத்தை செய்து, ஒருவன் குருவைப்போல பூசை செய்ய, ஒருவன் பரிசாரகனைப் போலவும் மற்றவர் பூசை காண்பதுபோலவும் விளையாடலாம்” என்று கூறினான். அதற்கு எல்லாரும் சம்மதித்தனர். அங்கிருந்த ஒரு பெரிய கல்லைப் பீடம் போல வைத்து சுற்றிலும் அநேக பூக்களைக் கட்டினதுமல்லாமல் அந்தப் பீடத்தின்மேல் ஒரு அப்பத்தின் துண்டும் கொஞ்சம் திராட்சை இரசமும் வைத்தார்கள்.
பூசை செய்யக் குறிக்கப்பட்ட பையன் பூசை உடுப்புகளைப்போல சில சட்டைகளை தன் மேல் போட்டுக்கொண்டு பூசைசெய்யத் துவக்கினான். பூசை செய்தவன் கோவிலில் குருவானவர் திவ்ய பலிபூசை நேரத்தில் செய்கிற சடங்குகளையெல்லாம் செய்தான். இதைக் கண்ட மற்ற பிள்ளைகள் மகிழ்ந்தனர். பிறகு, நடுப்பூசையில் குருவானவர் கூறும் வசீகர வார்த்தைகளை அப்பத்துண்டின் மிதும் திராட்சை இரசத்தின் மிதும் அச்சிறுவன் கூறினான். பிறகு, மற்றவர்களுக்கு நன்மை கொடுக்கிறதைப்போல கொடுக்க அந்த அப்பத்தைத் துண்டு துண்டாய்ப் பிட்கத் துவக்கினான். அந்தச் சமயத்தில் வானத்திலிருந்து நெருப்பு வந்து அந்த பீடத்திலிருந்த அப்பத்துண்டு, இரசம் முதலானவற்றையெல்லாம் எரித்து சாம்பலாக்கினது. மேலும் பீடமாக இருந்த அந்த பெரிய கல்லும் பொடிப்பொடியாய் நொறுங்கியது. அங்கேயிருந்த சிறு பிள்ளைகள் அனைவரும் பயத்தினால் சோர்ந்து நினைவில்லாமல் கிழே விழுந்து மாலை வரை நினைவின்றி மயங்கிக் கிடந்தார்கள்.
பிறகு அவர்களுடைய பெற்றோர்கள் தேடியபோது அவர்கள் எல்லாரும் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள். பிள்ளைகளை பலமுறைத் தட்டிக் கூப்பிட்டாலும் அவர்கள் பேசாமல் எழமுடியாமல் கிடக்கிறதைக் கண்டு மிகுந்த பயமும் துக்கமும் அடைந்தார்கள். ஆனால் உயிர் இருக்கிற அடையாளம் கண்டு அவரவர் தங்கள் பிள்ளைகளை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அந்த இரவு முழுவதும் அவர்களுக்கு மருந்து கொடுத்தபோதிலும் அந்தப் பிள்ளைகளுக்குப் பேச்சு வரவில்லை.
மறுநாள் அவர்கள் வாய் திறந்து பேசிய பிறகு நடந்த சேதிகளைச் சொன்னார்கள். அதைக் கேட்டவர்கள் எல்லாரும் அந்தப் பிள்ளைகள் இருந்த இடத்திற்குத் திரும்பப் போய்ப் பார்க்கிறபோது பிள்ளைகள் சொன்னபடியே வானத்திலிருந்து விழுந்த நெருப்புக் கட்டியால் பீடம் போலிருந்த அந்த பெரியக் கல் நொறுங்கியிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அந்நகர மேற்றிராணியார் இதை அறிந்ததும் அந்த இடத்தில் ஒரு தேவாலயமும் ஒரு சந்நியாசிகள் மடமும் கட்டினார். அந்தப் பிள்ளைகள் எல்லாரும் தங்களுக்கு புத்தி வந்தபிறகு, அந்த மடத்தில் சேர்ந்து உத்தம சந்நியாசிகளானார்கள்.
கிறிஸ்துவர்களே! வேதகாரியங்களை விளையாட்டாக செய்வது கனமான பாவம் ஆகும். அதிலும் குறிப்பாக நமது திவ்ய வேதத்தின் பரிசுத்த இருதயமாக விளங்கும் திவ்யபலிபூசை சடங்குகளை விளையாட்டாகச் செய்வது சர்வேசுரனுக்குக் கோபத்தை மூட்டும் செயல் ஆகும். எனவே திவ்யபலி பூசை சடங்குகளை மிகுந்த பக்தி பற்றுதலுடன் கண்டு, நம் திவ்ய இரட்சகரிடமிருந்து அபரிமிதமான ஞானபலன்களை அடைவோம்.
x
x
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக