Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

August 8 - ST. CYRIACUS - அர்ச்‌. சிரியாக்கூஸ்

 ஆகஸ்டு 0️8ம்தேதி

தியாக்கோனும்‌, பேயோட்டுபவரும்‌, வேதசாட்சியுமான
அர்ச்‌. சிரியாக்கூஸ்திருநாள்


 

 அர்ச்‌. சிரியாக்கூஸ்‌, திருச்சபையின்‌ 14 உதவியாளர்களில்ஒருவராக போற்றப்பட்டு மகிமைப்படுத்தப்படுகிறார்‌. மேலும்‌, திருச்சபையின்மாபெரும்வேதசாட்சியான தியாக்கோன்களான அர்ச்‌. முடியப்பா்‌, அர்ச்‌. லாரன்ஸ்‌, சரகோசாவின்அர்ச்‌. வின்சென்ட்ஆகியோருடன்ஒருவராகக்திகழ்கிறார்‌. உரோமாபுரியின்பத்ரீசிய உயர்குடி மகனாகப்பிறந்தார்‌; கத்தோலிக்கரானார்‌; தன்ஆஸ்திகளையெல்லாம்‌, ஏழைகளுக்குக்கொடுத்தார்‌; முதலாம்மர்செல்லினுஸ்பாப்பரசர்‌, இவருக்கு தியாக்கோன்பட்ட மளித்தார்‌. பரிசுத்த தியாக்கோனான சிரியாக்கூஸ்‌, உரோமையின்கொடுங்கோல் சக்கரவர்த்தி தியோக்ளேஷியனின்மகளான ஆர்டிமிசியாவிடமிருந்து பசாசுகளை ஓட்டினார்‌; இவளும்‌, இவளுடைய தாயான அர்ச்‌. செரினாவும்‌, கிறீஸ்துவர்களாக மனந்திரும்பினார்‌; மேலும்‌, பெர்ஷிய அரசரான ஷாபுரின்மகளான ஜோபியாஸிடமிருந்து, பசாசுகளை ஓட்டி விரட்டினார்‌;

இப்புதுமையால்‌, அரசருடைய குடும்பமும்‌, பெர்ஷிய நாட்டின் ‌400 அஞ்ஞானிகளும்கிறீஸ்துவர்களாக மனந்திரும்பினர்‌. பெர்ஷியாவி லிருந்து, இவர்‌, உரோமைக்குத்திரும்பி வந்தபோது, உரோமையின்மாக்சிமின்என்ற அஞ்ஞானியும்கிறீஸ்துவர்களைக்கொடூரமாக உபத்திரவப்படுத்தியவனுமான சக்கரவர்த்தி மாக்ஸ்மின்‌, மாபெரும்குளியல்அறைகளுடனான ஒரு பிரம்மாண்டமான அழகிய அரண்மனையைக்கட்டிக்கொண்டிருந்தான்.‌ உரோமை விக்கிரகங் களை வழிபட மறுத்த பத்தாயிரத்திற்கு மேலான கத்தோலிக்கர்களை, குருக்களை, சிறைபிடித்து அடிமைகளாக்கி, இந்த கட்டிட வேலையில்‌, அமர்த்தினான்‌. இவர்களுக்கு சொற்ப உணவை அளித்தான்‌; கடின வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்‌!

ஆகவே, தியாக்கோன்சிரியாக்கூஸ்‌, தன்சக தோழர்கள்சிலருடன்சேர்ந்து, மற்ற விசுவாசிகளிடமிருந்து உணவையும்‌, மற்ற அத்தியா வசியப்பொருட்களையும்சேகரித்து, இரகசியமாக, அடிமைகளாயிருந்த கிறீஸ்துவர் களுக்குக்கொடுத்து வந்தார்‌. இதைப்பற்றிக்கேள்விப்பட்ட மாக்ஸ்மின்‌, இவரைக்கைதுசெய்து, கொடிய சித்ரவதைகள் செய்து உபத்திரவப்படுத்தினான்‌; இவருடைய சரீரத்தின்மீது, கொதிக்கிற கீல்ஊற்றப்பட்டது: இறுதியாக, வியா ஒஸ்டென்ஸ்என்ற இடத்தில்‌, 304ம்வருடம்‌, 8ம்தேதியன்று, இவரை தலையை வெட்டிக்கொன்றனர்‌;

இவருடன்இவருடைய சக தோழர்களான லார்ஜூஸ்‌, ஸ்மாராக்டுஸ்ஆகிய இருவரும்‌, இன்னும்மற்ற இருபது கத்தோலிக்கர் களும்வேதசாட்சிகளாகக்கொல்லப்பட்டனர்‌. அர்ச்‌.சிரியாக்கூஸின்பரிசுத்த சரீரம்‌, உரோமையிலுள்ள வியா லாட்டாவிலுள்ள மகா பரிசுத்த தேவமாதா தேவாலயத்தில்அடக்கம்செய்யப்பட்டது. இந்த தேவாலயத்தில்‌, இவருடைய சகாக்களின்பரிசுத்த சரீரங்களும்‌, இன்னும்அநேக வேதசாட்சிகளின்பரிசுத்த அருளிக்கங்களும்பூஜிதமாக அடக்கம்செய்யப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன! இவருடைய பரிசுத்த இரத்தம்அடைக்கப்பட்டிருக்கிற ஒரு அருளிக்கக்குப்பி, டோர்ரே லே நோச்செல்லேயிலுள்ள பரிசுத்த சந்நிதானத்தில்ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! மரணப்படுக்கையிலிருக்கிற போது, வருகிற சோதனைகள்நேரத்தில்அர்ச்‌. சிரியாக்கூஸிடம்‌, வேண்டிக் கொள்வது மிகுந்த பலனை அளிக்கக்கூடிய பக்தி முயற்சியாகும்‌. பசாசுகளின்பிடியிலிருந்து விடுதலை அடைவததற்கும்‌, அர்ச்‌.  சிரியாக்கூஸிடம்வேண்டிக்கொள்ளலாம்‌.

 தியாக்கோனும்‌, பேயோட்டுபவரும்‌, வேதசாட்சியுமான அர்ச்‌. சிரியாக்கூஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


புதன், 7 ஆகஸ்ட், 2024

Aug. 07 - St. Cajetan - அர்ச்‌. கயேத்தான்‌

 ஆகஸ்டு 0️7ம்தேதி 

ஸ்துதியரும்தியேட்டைன்துறவற சபையின்ஸ்தாபகருமான அர்ச்‌.கயேத்தான்திருநாள்

 

 இவர்இத்தாலியிலுள்ள விசென்ஸா என்ற உயர்குடியில்‌ 1480ம்வருடம்‌, அக்டோபர்‌ 1ம்தேதி பிறந்தார்‌. இவருடைய 2வது வயதில்‌, இவருடைய தந்தை இறந்தார்‌.இவர்‌, பதுவா பல்கலைக்கழகத்தில்சட்டக்கல்லூரியில்கல்வி பயின்றார்‌. 24வது வயதில்‌, சமூக சட்டத்துறையிலும்‌, வேத இயல்சட்டத்துறையிலும்முனைவர்பட்டம்பெற்றார்‌; 1506ம்வருடம்முதல்‌, 2ம்ஐூலியஸ்பாப்பரசரிடம்திருச்சபையின்அரசாங்க விவகார அதிகாரியாக, இவர்தன்அலுவலைத்துவக்கினார்‌; வெனிஸ்குடியரசை, பாப்பரசருடன்சமரசம்செய்து கொள்ளச்செய்து, பாப்பரசருடன்நல்லுறவு கொள்ளச்செய்தார்‌. 1513ம்வருடம்‌, 2ம்ஜூலியஸ்பாப்பரசர்இறந்தபிறகு, அர்ச்‌.கயேத்தான்‌, பாப்பரசருடைய அரண்மனையிலிருந்து விலகி வெளியேறினார்‌. இவர்‌ 1516ம்வருடம்குருப்பட்டம்பெற்றார்‌; அடுத்த வருடம்‌, இவருடைய தாயார்இறந்தபிறகு, விசென்ஸாவிற்கு இவர்மறுபடியும்வரவழைக்கப்பட்டார்‌; அங்கு, குணப்படுத்த முடியாத நோயில் பீடிக்கப்பட்டிருந்த வியாதியஸ்தா்களுக்காக, 1522ம்வருடம்‌, ஒரு மருத்துவமனையைக்கட்டினார்‌.

 இவ்விதமாக இவருடைய ஜீவிய காலம்முழுவதையும்நிரப்பியிருந்த உத்தமமான பிறர்சிநேக அலுவல்களின்அத்தாட்சியாக இம்மருத்துவமனை திகழ்கிறது! ஆனால்‌, ஆத்துமங்கள்மீது, இவர்கொண்டிருந்த ஆர்வமானது, அக்காலத்தில்பல்வேறு நிலைகளிலிருந்த குருக்களிடையே நிலவியதும்‌, அவர்களுடைய ஞான ஜீவியத்தின்நோயாக இருந்ததும்‌, அவர்களிடையே தொற்று நோயைப்போல்பரவியிருந்ததுமான அரசியல்ஒழுங்கீனங்களால்‌, மிக ஆழமமான தாக்கத்தையும்‌, உத்வேகத்தையும்கொண்டிருந்தது! முன்னொரு காலத்தில்‌,அர்ச்‌. அகுஸ்தீனார்செய்ததைப்போல, இவரும்‌, தீவிர முனைப்புடன்குருக்களிடையே நிலவிய சீர்கேட்டை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்காக, குருக்களை சீர்திருத்துவதற்காக, ஒரு துறவற குருக்கள்சபையை ஏற்படுத்தினார்‌; இக்குருக்களுடைய ஜீவியம்‌, துறவற மடத்தின்ஜீவியமும்‌, மக்களிடையே குருக்கள்ஆற்ற வேண்டிய ஆன்ம இரட்சணிய அலுவலின்ஜீவியமும்ஒன்றிணைந்த துறவற ஜீவியமாக இருந்தது! இத்துறவற சபை, தியேட்டைன்துறவற சபை என்று அழைக்கப்பட்டது. அர்ச்‌.கயேத்தான்‌, 1523ம்வருடம்‌, உரோமாபுரிக்குத்திரும்பி வந்தபோது, இத்துறவற சபையை ஸ்தாபித்தார்‌.

1524ம்வருடம்‌, 7ம்கிளமென்ட்பாப்பரசர்‌, இத்துறவற சபையை அங்கீகரித்து, அதற்கான அனுமதியை அளித்தார்‌. இத்துறவற சபையை ஸ்தாபிப்பதில்‌, அர்ச்‌. கயேத்தானுக்கு உறுதுணையாக இருந்து, உதவிய முதல்நான்கு சகதுறவிகளில்ஒருவர்‌, ஜான்பியத்ரோ கராஃபா, சியட்டியின்மேற்றிராணியாராயிருந்தார்‌. இந்த சியட்டி நகரம்‌, இலத்தீனில்தியேட்டே என்று அழைக்கப்படுகிறது; இம்மேற்றிராணி யார்‌, பின்னாளில்‌ 4ம்சின்னப்பர்பாப்பரசரானார்‌; இருப்பினும்‌, இவர்‌, தியேட்டே மேற்றிராணியாராக இருந்த போது, இத்துறவற சபையின்தலைமை அதிபராகத்தேர்ந்தெடுக்கப்பட்டதால்‌, இத்துறவற சபை, தியேட்டைன்துறவற சபை, என்று அழைக்கப்பட்டது. ஒரு சமயம்‌, உரோமையிலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவின்பெரிய பசிலிக்கா தேவாலயத்தில்‌, கிறீஸ்துமஸ்திருநாளன்று, மகா பரிசுத்த தேவமாதாவின்திருக்கரங்களிலிருந்து, தேவபாலனான திவ்ய குழந்தை சேசுவை, அர்ச்‌.கயேத்தான்நேரடியாக தன்கரங்களில்பெற்றுக்கொள்கிற மகா உன்னதமான பாக்கியம்‌, பெற்றார்‌. இத்துறவற சபை, மெதுவாக வளர்ந்தது.

1527ம்வருடம்‌, 5ம்சார்லஸ்உரோமையை ஆக்ரமித்து, அதை சூரையாடியபோது, அந்த அரசனுடைய வீரர்கள்‌, அர்ச்‌.கயேத்தானை சித்ரவதை செய்தனர்‌; இவருடைய தியேட்டைன்துறவியர்‌, உரோமையை ஆக்ரமித்த வீரர்களால்‌, அநேக அவசங்கைகளையும்‌, துன்ப உபத்திரவங்களையும்‌ , அனுபவித்தபிறகு, இத்துறவற சபையிலிருந்த 12 துறவியரும்‌, உரோ மையிலிருந்து தப்பி, வெனிஸ்நகருக்குச்சென்றனர்‌. அங்கு, கயேத்தான்‌, அர்ச்‌. ஜெரோம்எமிலியானியை சந்தித்தார்‌. இவருடைய துறவற குருக்கள்சபையை ஸ்தாபிப்பதில்‌, இதற்கு முன்பாக,இவருக்கு அர்ச்‌.கயேத்தான்‌, உதவியிருந்தார்‌. இங்கு ஏழைகளுக்கு உதவுவதற்காக, ஒரு வங்கியை அர்ச்‌.கயேத்தான்‌, நிறுவினார்‌. அச்சமயம்‌, அங்கே, ஏழைகள்‌, கடன்தருகிற பண முதலைகளால்‌, மாபெரும்விதமாக துன்புறுத்தப் பட்டிருந்தனர்‌. இவ்வங்கி, பின்னாளில்‌, நேப்பிள்ஸ்வங்கி என்று அழைக்கப்பட்டது. நேப்பிள்ஸிலும்‌, ஒரு துறவற மடத்தை ஸ்தாபித்து, லூத்தரன்பதித சபையை, அங்கிருந்து விரட்டினார்‌. அர்ச்‌. கயேத்தான்‌, 1547ம்வருடம்‌,ஆகஸ்டு 7ம்தேதியன்று, பாக்கியமாய்மரித்தார்‌. இவருடைய பரிசுத்த அருளிக்கங்கள்‌, நேப்பிள்ஸிலிருக்கும்அர்ச்‌.சின்னப்பா்பசிலிக்கா தேவாலயத்தில்‌, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. 1629ம்வருடம்‌, அக்டோபர்‌ 8ம்தேதியன்று, 8ம்உர்பன்பாப்பரசரால்இவருக்கு முத்திப்பேறு பட்டம்அளிக்கப்பட்டது. 1671ம்வருடம்‌,ஏப்ரல்‌ 12ம்தேதியன்று, 10ம்கிளமென்ட்பாப்பரசரால்‌, இவருக்கு, அர்ச்‌. லீமா ரோசம்மாள்‌, அர்ச்‌. லூயிஸ்பெல்டிரான்‌, அர்ச்‌.பிரான்சிஸ்போர்ஜியா, அர்ச்‌.பிலிப்பெனிசியார்ஆகியோருடன்சேர்த்து, அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது. அர்ச்‌.கயேத்தான்‌, அர்ஜென்டீனா நாட்டிற்கும்‌, வேலை தேடுகிறவர்களுக்கும்பாதுகாவலர்‌.

ஸ்துதியரான அர்ச்‌.கயேத்தானே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்‌!


செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

August 6 - Transfiguration of Our Lord - நமதாண்டவர்‌ மறுரூபமான திருநாள்

 

ஆகஸ்டு 06ம்தேதி

நமதாண்டவர்மறுரூபமான திருநாள்


 தமது பரிசுத்தப்பாடுகளுக்கு ஒரு வருடத்திற்கு முன்‌, நமதாண்டவர்‌,தம்பிரிய அப்போஸ்தலர்களான அர்ச்‌. இராயப்பர்‌, அர்ச்‌. யாகப்பா்‌, அர்ச்‌. அருளப்பருடன்கலிலேயாவிலுள்ள தாபோர்மலை உச்சிக்குச்சென்றார்‌. இந்த மலையின்உச்சி , திபேரியக்கடலிலிருந்து ஏறக்குறைய 2000 அடி உயரத்திலிருக்கிறது. இங்கு தான்‌, ஆண்டவர்தமது தேவமகிமையை வெளிப்படுத்தினார்‌: அவருடையமுகம்சூரிய னைப்போல்துலங்கினது; அவருடைய வஸ்திரங்கள்வெண்மை யாயின! (மத்‌ 17:2) வேத சட்டத்தையும்‌, தீர்க்கதரிசனங்களையும்குறிக்கும்விதமாக, மோயீசனும்‌, எலியாசும்‌, மறுரூபமான ஆண்டவரை ஆராதிக்கிறதாகக் காணப்பட்டார்கள்‌; “இவரே நமது பிரிய குமாரன்‌! இவரில்நாம்பூரண பிரியமாயிருக்கிறோம்!” என்று பகிரங்கமாக பிதாவாகிய சர்வேசுரன்தாமே,தமது ஏகக்குமாரனைப்பற்றி அறிவிக்கிற குரலொலி, மறுபடி‌, இச்சமயத்திலும்கேட்கப்படுகிறது. நமதாண்டவரின்பகிரங்க ஜீவியத்தின்உச்சக்கட்டமாகவும்‌, மோட்ச மகிமையின்முன்சுவையாகவும்திகழ்கிற நமதாண்டவரின்மகிமைமிகு மறுரூபத்திருநிகழ்வு, இப்பிரிய அப்போஸ்தலர்களின்இருதயங்களில்‌, ஆண்டவரின்பரிசுத்த உபாதனையினுடையபாடுகளின்நாளில்‌, தேவ விசுவாசத்தை உறுதிப்படுத்தும்விதமாக நிகழ்ந்தது!

பரம இரகசியமான இத்திருநிகழ்வு நிகழ்ந்த இடத்தில்‌, தாபோர்மலையில்‌,4ம்நூற்றாண்டில்ஒரு தேவாலயம்கட்டப்பட்டு, ஆகஸ்டு 6ம்தேதி அபிஷேகம்செய்யப்பட்டது. ஆண்டவருடைய மகிமைமிகு மறுரூபமான திருநிகழ்வுக்குத்தோத்திரமாக, மத்திய கிழக்கு நாடுளில்திருநாள்கொண்டாடும்வழக்கம்‌, இதே காலத்தில்‌, துவங்கியது. ஐரோப்பாவின்அநேக பகுதிகளில்‌ , இந்த திருநாள்கொண்டாடும்வழக்கம்‌, 8ம்நூற்றாண்டிலிருந்து துவங்கியது . 1456ம்வருடம்‌, ஜூலை 22ம்தேதியன்று, பெல்கிரேடிட்டில்  துலுக்கர்களுக்கு எதிராக நிகழ்ந்த ஒரு சிலுவைப்போரில்‌, மிகச்சிறிய கத்தோலிக்கர்களுடைய படை, ஒரு மாபெரும்துருக்கியப்படையை நசுக்கி, அதன் மீது வெற்றியடைந்தது! உரோமாபுரியை நோக்கி, அந்நகரத்தைக் கைப்பற்றும்படியாக அணிவகுத்துச்சென்ற 1,20,000 மகமதிய வீரர்களைக்கத்தோலிக்க இராணுவம்‌,கொன்று குவித்தது; பல்லாயிரக்கணக்கான துலுக்க வீரர்கள்‌,இப்போரில்படுகாய மடைந்தனர்‌; இப்போரில்கத்தோலிக்க இராணுவம்அடைந்த வெற்றியின்செய்தி, ஆகஸ்டு மாதம்‌ 6ம்தேதி , 3ம்காலிஸ்துஸ்பாப்பரசரை அடைந்தது. ஆண்டவருக்கு நன்றியறிதலாக, ஆண்டவருடைய மறுரூபமான திருநாளை, ஏற்படுத்தி,ஆகஸ்டு 6ம்தேதியன்று, அடுத்தவருடத்திலிருந்து, இத்திருநாளை அகில உலகம்முழுவதும்கொண்டாடும்படியாகக்கட்டளையிடடார்‌. மேலும்‌, இந்தபோரில்அடைந்த வெற்றிக்கு, மகா பரிசுத்த தேவ மாதாவிற்கும்நன்றியறிந்த ஸ்தோத்திரம்செலுத்தும்விதமாக, 3ம்காலிஸ்துஸ்பாப்பரசர்‌, இனிவரும்காலத்தில்‌, எல்லா தேவாலயங்களிலும்மத்தியம்‌ 12 மணிக்கு தேவமாதாவிற்குத்தோத்திரமகிமையாக, திரிகால ஜெபம்ஜெபிக்கும்படியாக, தேவாலய மணிகள்அடிக்கப்பட வேண்டும்என்று , உத்தரவிட்டார்‌. ஏனெனில்மத்தியம்‌ 12 மணிக்கு தான்‌, துலுக்கப்படை நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டது! எனவே, அடுத்த தடவை நீ மத்தியம்‌, தேவாலயங்களில்‌ 12 மணி திரிகால ஜெபத்திற்கான மணி சத்தத்தைக்கேட்கும்போது, திரிகால ஜெபத்தை பக்தி பற்றுதலுடன்ஜெபி! மேலும்‌, சத்துருக்களுக்கு எதிராக மகா பரிசுத்த தேவமாதா கொண்டிருக்கிற மகத்துவமிக்க இராணுவ வல்லமையைப்பற்றி நினைவு கூர்வாயாக!

! மகா பரிசுத்த மரியாயே! தேவரீர்போரணியிலிருக்கும்இராணுவத்தைப்போல்‌, மகா வல்லமையுள்ளவர்களாயிருக்கிறீர்‌!

திபேரிய ஏரி, கலிலேயக்கடல்‌, ஜெனசரேத்ஏரி, திபேரியக்கடல்ஆகிய பெயர்கள்எல்லாம்‌, இஸ்ரேலில்உள்ள ஒரே ஏரியைக்குறிக்கின்றன. இது மிகப்பெரிய நல்ல தண்ணீர்ஏரி; இதன்சுற்றளவு ஏறக்குறைய 53 கி.மீ. இதன்நீளம்‌, 23 கி.மீ ; அகலம்‌ 13 கி.மீ. கடல்மட்டத்திலிருந்து, 209 மீ கீமே தாழ்வாக இருக்கிறது! உப்புத்தண்ணீர்ஏரியான சாக்கடலுக்கு அடுத்தபடியாக, உலகத்திலேயே இரண்டாவது மிக தாழ்ந்த ஏரியாக, இந்த ஏரி இருக்கிறது. இந்த கலிலேயக்கடலிற்கு பூமிக்கு அடியிலிருக்கும்நல்ல தண்ணீர்ஊற்றுகளிலிருந்து தண்ணீர்வருகிறது; அத்துடன்‌, இதற்கு வருகிற தண்ணீருக்கு முதன்மையான முக்கிய ஆதாரமாயிருப்பது, யோர்தான்நதியாகும்‌. யோர்தான்நதி, பாலஸ்தீனத்தின்வடக்கிலிருந்து, தெற்குப்பகுதிக்கு, இக்கலிலேயக்கடல்வழியாகப்பாய்ந்து ஓடுகிறது.


August 4 - St. Dominic (அர்ச். சாமிநாதர்)

ஆகஸ்டு 4ம் தேதி

போதக துறவியர் சபையின் ஸ்தாபகரும், மகா பரிசுத்த ஜெபமாலையின் மூலம் ஆல்பிஜென்சிய பதிதத் தப்பறையிலிருந்து, உலகத்தைக் காப்பாற்றிய மகிமைமிகு பிதாப்பிதாவுமான அர்ச். சாமிநாதர் திருநாள்

 

 அர்ச்‌.தோமினிக்‌ என்கிற அர்ச்‌. சாமிநாதர்‌, கி.பி.1170ம்‌ வருடம்‌, ஸ்பெயின்‌ நாட்டில்‌ பிறந்தார்‌. கர்ப்பஸ்திரீகளான தாய்மார்களுக்குப்‌ பாதுகாவலரான அர்ச்‌. சீலோஸ்‌ தோமினிக்கின்‌ பெயரையே இவருக்கு வைத்தனர்‌.பலேன்சியா பல்கலைக்கழகத்தில்‌, கல்வி பயின்றார்‌; 24வது வயதில்‌,குருப்பட்டம்‌ பெற்றார்‌. 1199ம்‌ வருடம்‌, ஓஸ்மா நகர கதீட்ரல்‌ தேவாலய அதிபராக நியமிக்கப்பட்டார்‌. 1203ம்‌ வருடம்‌, ஓஸ்மா நகர மேற்றிராணியாருடன்‌ பிரான்சின்‌ தெற்குப்‌ பகுதிகளுக்குச்‌ சென்றபோது, அப்பகுதிகளில்‌, ஆல்பிஜென்சியப்‌ பதிதத்தப்பறை, பிரான்ஸ்‌ மக்களுடைய ஞான ஜீவியத்தில்‌ ஏற்படுத்திய மாபெரும்‌ ஆத்தும சேதத்தையும்‌, சீரழிவையும்‌, துயரமான சூழலையும்‌ கண்டு பெரிதும்‌ மனச்‌ சஞ்சலமடைந்தார்‌.

1208ம்‌ வருடம்‌, பிரான்‌சின்‌ தெற்குப்பகுதியை ஆக்ரமித்‌ திருந்த ஆல்பிஜென்சியரிடமிருந்து கத்தோலிக்க மக்களைப்‌ பாதுகாக்கும்படி அனுப்பப்பட்ட பாப்பரசரின்‌ தூதுவரான காஸ்டெல்னெனின்‌ பீட்டர்‌ என்பவர்‌, ஆல்பிஜென்சியரால்‌ கொல்லப்பட்டபோது, 3ம்‌ இன்னசென்ட்‌ பாப்பரசர்‌,ஆல்பி ஜென்சிய பதிதர்களுக்கு எதிரான ஒரு சிலுவைப்போரை, 4ம்‌ சைமன்‌ டி மோன்ஃபோர்ட்‌ என்ற பிரபுவின்‌ தலைமையில்‌ துவக்கி வைத்தார்‌; இப்போர்‌ அடுத்த ஏழு வருடகாலம்‌ நீடித்தது. இவருடைய படை வீரர்களுடன்‌ அர்ச்‌.சாமிநாதர்‌ கூட சென்று, அப்பகுதியிலிருந்த ஆல்பிஜென்சிய பதிதர்களுக்கு ஞானப்பிரசங்கங் கள்‌ நிகழ்த்தினார்‌. இச்சமயம்‌, அர்ச்‌.சாமிநாதர்‌ நிகழ்த்திய பிரசங்கங்களால்‌, அதிக நன்மை ஏற்படவில்லை!

1214ம்‌ வருடம்‌,சைமன்‌ பிரபு, காஸ்ஸெனேவுயில்‌ என்ற இடத்திலிருந்த ஒரு கோட்டையை அர்ச்‌. சாமிநாதருக்கு அளித்தார்‌. இங்கு, சத்திய கத்தோலிக்க வேத சத்தியங்களைப்‌ பாதுகாப்பதற்கும்‌, ஆல்பிஜென்சிய பதிதத் தப்பறையை அழிப்பதற்கும்‌, ஆல்பிஜென்சிய பதிதர்களை மனந்திருப்புவதற்குமாக, ஆறு துறவியருடன்‌, அர்ச்‌. சாமிநாதர்‌ போதக துறவியர்‌ சபையை ஸ்தாபித்தார்‌; அதே சமயம்‌, ஆல்பிஜென்சிய பதிதம்‌ வளர்ந்ததற்குக்‌ காரணம்‌, பாவம்‌ தான்‌! என்பதையும்‌, அவர்கள்‌ மனந்திரும்புவதற்குத்‌ தடையாயிருப்பதும் பாவம்‌ தான்!‌ என்பதையும்‌ உணர்ந்த அர்ச்‌. சாமிநாதர்‌, ஆல்பிஜென்ய பதிதத்தை, அழித்து ஒழிப்பதற்காகவும்‌, இப்பதிதர்கள்‌ மனந்திரும்புவதற்காகவும்‌, தூலோஸ்‌ நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு காட்டில்‌, மூன்று இரவும்‌ மூன்று பகலுமாக தொடர்ந்து, ஜெபத்திலும், தபசிலும்‌ ஈடுபட்டிருந்த போது, அர்ச்‌.சாமிநாகருக்கு,மகா பரிசுத்த தேவ மாதா காட்சியளித்து, இப்பதிதத்தை அழிப்பதற்காகவும்‌ ஆல்பிஜென்‌ சியப்‌ பதிதர்களையும்‌, பாவிகளையும்‌ மனந்திருப்புவதற்காகவும், மகா பரிசுத்த ஜெபமாலையை அளித்தார்கள்‌. மகா பரிசுத்த தேவமாதா, அப்போது, அர்ச்‌.சாமிநாதரிடம்‌, “இத்தகைய போராட்டத்தின்போது, புதிய ஏற்பாட்டின்‌ அஸ்திவாரக்கல்லாகத்‌ திகழ்கிற சம்மனசானவரின்‌ சங்கீதமாலை (அருள்நிறை மந்திரம்‌) தான்‌, எப்போதும்‌ முதன்மையான ஆயுதமாகக்‌ திகழ்கிறது! என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டுமென்று நான்‌ விரும்புகிறேன்‌.

ஆகவே, இந்த கடினப்பட்ட ஆத்துமங்களை அணுகுவதற்கும்‌, அவர்களை, சர்வேசுரனிடம்‌ மனந்திருப்பிக்‌ கொண்டு வருவதற்கும்‌, என்னுடைய சங்கீத (அருள்‌ நிறை மந்திர மாலை) மாலையை அவர்களுக்குப் பிரசங்கி!” என்று கூறினார்கள்‌. அதன்படியே, மகா பரிசுத்த ஜெபமாலையின்‌ மூலமாக, ஆல்பிஜென்சிய பதிதத்தை, பிரான்ஸ்‌ நாட்டில்‌ அழித்தொழித்தார்‌; 3ம்‌ ஹொனோரியுஸ்‌ பாப்பரசர்‌, போதகர்‌ துறவற சபையை (இப்போது அர்ச்‌.சாமிநாதர்‌ சபை என்று அழைக்கப்படுகிறது), 1217ம்‌ வருடம்‌ அங்கீகரித்து, அகில உலகத்திலும் போதிப்பதற்கான அதிகாரத்தை, போதகத்‌ துறவியருக்கு அளித்தார்‌. (பிற்காலத்தில்‌ வரவிருந்த பதிதத்‌ தப்பறைகளையும்‌, அர்ச்‌.சாமிநாதர்‌ சபையினர்‌, மகா பரிசுத்த ஜெபமாலையின்‌ உதவியினால்‌, உலகத்தில்‌ அழித்தொழிப்பதை, திருச்சபையின்‌ சரித்திரத்தில்‌ காணலாம்‌).அர்ச்‌. சாமிநாதா்‌, தனது ஜீவிய காலத்தின் இறுதி வருடங்களை,தனது துறவற சபையை, நிர்வகிப்பதிலும்‌, சீரமைப்பதிலும்‌,ஸ்திரப்படுத்துவதிலும்‌, புதிய உறுப்பினர்களை ஏற்‌றுக்கொண்டு, அவர்களுக்கான புதிய மடங்களை ஸ்தாபிப்பதிலும்‌, இத்தாலி,ஸ்பெயின்‌,பிரான்ஸ் நாடுகளெங்கும்‌, இதற்காக பயணிப்பதிலும்‌, ஈடுபட்டிருந்தார்‌. ஒரு இலட்சம்‌ பதிதர்களை, மனந்திருப்பி, சத்திய திருச்சபையில்‌ சேர்த்தார்‌. அர்ச்‌.சாமிநாதர்‌,தனது 51வது வயதில்‌, 1221ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 6ம்‌ தேதியன்று, இத்தாலி, பொலோஞா நகரில்‌, பாக்கியமாய்‌ மரித்தார்‌. 9ம்‌ கிரகோரி பாப்பரசரால்‌, 1234ம்‌ வருடம்‌, ஐூலை 13ம்‌ தேதியன்று, இவருக்கு,அர்ச்சிஷ்டப்பட்டம்‌ அளிக்‌கப்பட்டது.

 

ஆல்பிஜென்சியப்‌ பதிதம்‌ என்றால்‌ என்ன?

இத்தப்பறை, மத்திய நூற்றாண்டுகளில்‌, ஆல்பி என்ற ஒரு தெற்குப்‌ பிரான்சின்‌ நகரத்திலிருந்து தோன்றிய தப்பறையாகும்‌. இப்பதிதத்‌ தப்பறை, இரண்டு கடவுள்கள்‌ இருப்பதாகவும்‌, அதில்‌, நமதாண்டவரை நல்லகடவுள்‌ என்றும்‌, பழைய ஏற்பாட்டின்‌ கடவுளை கெட்ட கடவுளாகவும்‌, பசாசையே அந்த கெட்டகடவுளாகவும்‌ கூறி பிதற்றியது. இந்த தப்பறையை , மகா பரிசுத்த ஜெபமாலை அழித்து நிர்மூலமாக்கியது; அர்ச்‌.சாமிநாதர்‌ சபைத்துறவியர்‌ மூலமாகவே, மகா பரிசுத்த ஜெபமாலை மீதான பக்தி உலகம்‌ முழுவதும்‌ பரவியது. அர்ச்‌.சாமிநாதர்‌ துறவற சபைத்‌ துறவியருக்கும்‌, மால்டா தீவின்‌ அரசாங்கத்திற்கும்‌, மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது; அர்ச்‌.சாமிநாதர்‌ துறவற சபையைச்‌ சேர்ந்த துறவியும்‌, மாபெரும்‌ அர்ச்சிஷ்டவருமான அர்ச்‌. 5ம்‌ பத்திநாதா் பாப்பரசர்‌, மால்டா தீவிலுள்ள அர்ச்‌.அருளப்பரின்‌ வீரர்கள்‌ வலெட்டா என்ற நகரத்தைக்‌ கட்டுவதற்கு உதவினார்‌.

“தன்‌ ஆசாபாசங்களை ஆண்டு நடத்துகிற ஒரு மனிதன்‌, உலகத்தினுடைய அதிபதியாகத்‌ திகழ்கிறான்‌; ஒன்றில்‌ நாம்‌, நம்‌ ஆசாபாசங்களைக்‌ கட்டாயமாக ஆண்டு நடத்த வேண்டும்‌; அல்லது. அவை நம்‌மை ஆண்டு நடத்திவிடும்‌! ஆகவே, அடிக்கப்படுகிற ஒரு பட்டறைக்‌ கல்லாக இருப்பதைவிட, அடிக்கிற ஒரு சுத்தியலாக இருப்பதே மேல்‌!” 📚🏻 + அர்ச்‌.சாமிநாதர்‌.

 

காண்பவர்‌ இருதயங்களில்‌ தேவசிநேக நெருப்பைத்தூண்டுகிறவரும்‌, மகா பரிசுத்த ஜெபமாலை மூலமாக பதிதத்‌ தப்பறைகளை அழித்தவரும்‌, போதக துறவியர்‌ சபையின்‌ ஸ்தாபகரும்‌, சரீரமெடுத்த பக்தி சுவாலகரும்‌, மகிமை மிகுந்த பிதாப்பிதாவுமான அர்ச்‌.சாமிநாதரே! எங்களுக்காக வேண்டிக்‌ கொள்ளும்‌!  

Aug. 5 - Our Lady of Snows (பரிசுத்த பனிமய மாதாவின்‌ பசிலிக்கா பேராலயம்‌ (மகா பரிசுத்த தேவமாதாவின்‌ தலைமை பசிலிக்கா தேவாலயம்‌)அபிஷேகம்‌ செய்யப்பட்ட திருநாள்‌.)

 

ஆகஸ்டு 05ம்தேதி .

மகா பரிசுத்த பனிமய மாதாவின்பசிலிக்கா பேராலயம்‌ (மகா பரிசுத்த தேவமாதாவின்தலைமை பசிலிக்கா தேவாலயம்‌)அபிஷேகம்செய்யப்பட்ட திருநாள்‌.

 


இந்த பசிலிக்கா தேவாலயம்உலகிலேயே மிகப்பழமையானதும்மிக முக்கியமானதுமான தேவமாதாவிற்கு தோத்திரமாகக்கட்டப்பட்ட தேவாலயங்களில்‌, திருயாத்திரை ஷேத்திரங்களில்‌, ஒன்றாகக்திகழ்கிறது! மகா பரிசுத்த தேவமாதா தாமே கேட்டுக் கொண்டதன்பேரில்தான்‌, இந்த பசிலிக்கா தேவாலயம்கட்டப்பட்டது; இவ்வற்புத நிகழ்வு, “பனிமயமாதா!” என்கிற மகா பரிசுத்த தேவமாதாவின்மிகப்பழமையான பட்டத்தை , நாம்அறியும்படிச்செய்தது! பாரம்பரியத்தின்படி, உரோமையைச்சேர்ந்த ஒரு பத்ரீசியரான ஜியோவான்னியும்அவருடைய மனைவியும்‌, குழந்தை யில்லாமல்‌, தங்களுடைய உடைமைகளை நிர்வகிப்பதற்குத்தங்களுக்கு ஒரு வாரிசு வேண்டுமென்று, மகா பரிசுத்த தேவமாதா விடம்‌, பக்திபற்றுதலுடன்ஜெபித்து வேண்டிக்கொண்டிருந்தனர்‌. மகா பரிசுத்த தேவமாதா, 352ம்வருடம்‌, ஆகஸ்டு 4ம்தேதிக்கும்‌ 5ம்தேதிக்கும்இடையில் இரவின்போது, இத்தம்பதியருக்குக்காட்சியளித்து, தமக்குத்தோத்திரமாக உரோமையிலுள்ள எஸ்குயிலின்குன்றின்மீது, ஒரு தேவாலயத்தைக்கட்ட வேண்டும்என்றும்‌, அக்குன்றின்மேல்தேவாலயம்கட்ட வேண்டிய இடம்‌, மிகச்சரியாக, பனியினால்குறிக்கப்பட்டிருக்கும்‌, என்றும்கூறினார்கள்‌. அச்சமயம்‌, இத்தாலியில்கடுமையான கோடைகால உஷ்ணம்நிலவியது. அதே சமயம்‌, மகா பரிசுத்த தேவமாதா கூறியதுபோல்‌, புதுமையாக தேவாலயம்கட்டப்பட வேண்டிய இடத்தை, பனி மூடியிருந்தது. மகா பரிசுத்த தேவமாதா, பாப்பரசர்லிபேரியசுக்கும்அதே இரவில்தோன்றி இதைப்பற்றி அறிவித்திருந்ததால்‌, தேவாலயம்கட்டப்பட வேண்டிய இடம்‌, புதுமையாகப்பனிபடர்ந்து இருப்பதை, அவரும்வந்து பார்த்தார்‌.

352ம்வருடம்‌, ஆகஸ்டு, 5ம்தேதியன்று, காலையில்‌, ஜியோவான்னியும்‌, அவருடைய மனைவியும்எஸ்குயிலின்குன்றிற்கு விரைந்து சென்றனர்‌; அச்சமயம்‌, பாப்பரசர்லிபேரியுசும்தமது பரிவாரங்களுடன்ஆடம்பர பவனியாக, அந்த குன்றிற்கு வந்தார்‌. இப்புதுமையைக்காண்பதற்கு அங்கு திரளான மக்கள்கூடியிருந்தனர்‌; பளிச்சிடும்வெண்பனி புதுமையாக அக்குன்றின்மீது படர்ந்திருந்ததை அனைவரும்கண்டனர்‌; சூரிய ஒளி கடுமையாக இருந்தபோதிலும்‌, அந்த இடத்திலிருந்த பனி புதுமையாக உருகாமல்‌, படர்ந்திருக்கிறதைக்கண்டு எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்‌! தேவாலயத்திற்கான அளவு குறிக்கப்பட்டது; அதன்பின்பனி உருகியது; மகா பரிசுத்த தேவமாதா பசிலிக்கா தேவாலயம்‌, இரண்டு வருடங்களுக்குள்கட்டி முடிக்கப் பட்டது; பாப்பரசர்லிபேரியுசினால்‌, அபிஷேகம்செய்யப்பட்டது.

எஃபேசுஸ்நகரில்‌ 431ம்வருடம்நிகழ்ந்த திருச்சபையின்பொதுச்சங்கம்‌, மிகவும்பரிசுத்த கன்னிமரியம்மாளை, சர்வேசுர னுடைய மகா பரிசுத்த மாதா, என்று அதிகார பூர்வமாகப்பிரகடனம்செய்தபோது, 3ம்சிக்ஸ்துஸ்பாப்பரசர்‌(432- 440), இந்த பசிலிக்கா தேவாலயத்தை திரும்பக்கட்டி, அழகுப்படுத்தினார்‌; அர்ச்‌. 5ம் பத்திநாதர்பாப்பரசர்‌, 1568ம்வருடம்‌, திரிதெந்தீன்பொதுச்சங்கத்தின் போது, உறுப்பினர்கள்கோரிய விண்ணப்பத்தின்படி, இத்திருநாளை பொது உரோம திருவழிபாட்டின்காலண்டரில்சேர்த்தார்‌. 18ம்நூற்றாண்டின்போது, இப்பசிலிக்கா தேவாலயம்‌, முழுமையாக மறுபடியும்புதுப்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது! இந்த பசிலிக்கா தேவாலயத்தின்முகப்பின்தோற்றமும்‌, இதன்உள்தோற்றத்தின்அலங்காரங்கள்எல்லாமும்‌, இக்காலத்தைச்சேர்ந்த வேலைப்பாடு களாக இருக்கின்றன! இருப்பினும்‌, பண்டைக்காலத்தில்மேற்கொள்ளப் பட்ட வேலைப்பாடுகளும்‌, சலவைக்கற்தூண்களும்‌, அநேக 5ம்நூற்றாண்டின்மொசைக்கற்களும்‌, அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கின்றன! உரோமாபுரியிலேயே, அதிக உயரமான மத்திய நூற்றாண்டைச்சேர்ந்த 240 அடி உயர  கோபுர மணியையும்,‌ இந்த பசிலிக்கா தேவாலயம்கொண்டிருக்கிறது. 

மகா பரிசுத்த தேவமாதாவின்இந்த தலைமை பசிலிக்கா தேவாலயம்‌, உலகத்திலேயே மிக நேர்த்தியான கலை வேலைப்பாடு களையும்‌, கட்டிடக்கலையின்அதிசய நுட்பங்களையும்கொண்டிருக்கிறது! தேவாலய உட்கூரையில்காணப்படும்ஓவியம்‌, மத்திய நூற்றாண்டுகளின்மறுமலர்ச்சியின்காலத்தைச்சேர்ந்த ஜூலியானோ சங்கல்லோ என்பவரின்தலைசிறந்த கைவேலைப் பாடாகத்திகழ்கிறது! அச்சமயம்‌, அமெரிக்கக்கண்டத்தைக்கண்டுபிடித்த கிறிஸ்டோஃபர்‌, அமெரிக்காவிலிருந்து ஸ்பெயின்நாட்டிற்குக்கொண்டு வந்ததும்‌, ஸ்பெயின்நாட்டின்அரசரான ஃபெர்டினான்டினாலும்‌, அரசி இசபெல்லாவினாலும்‌, 6ம்அலெக்சாண்டர்பாப்பரசருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டதுமான தங்கத்தினாலான பூச்சு வேலைப்பாட்டுடன்‌, உள்தேவாலயத்தின்மேற்கூரையில்தீட்டப்பட்ட வண்ண ஓவியம்இன்னும்அழகுற மெருகேற்றப்பட்டது!

இப்பசிலிக்கா தேவாலயத்தில்இன்னும்இரண்டு முக்கியமாகக்குறிப்பிடத்தக்க கிறீஸ்துவ பொக்கிஷ திரவியங்கள்உள்ளன: முதலாவதாக, நமதாண்டவர்‌, திவ்ய பாலனாக கிறீஸ்துமஸ்அன்று பெத்லகேம்குகையில்பிறந்து, கிடத்தப்பட்டிருந்த அந்த மாட்டுக்கொட்டில்அல்லது முன்னிட்டியே, ஒரு அருளிக்கமாக, இத்தேவால யத்தில்ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற அருளிக்கங்களில்,‌ மகாக்குறிப்பிடத்தக்க அருளிக்கமாகத்திகழ்கிறது. ஏழாம்நூற்றாண்டின்போது, பாலஸ்தீனத்தை மகமதியர்கைப்பற்றியபோது, அகதிகளாக உரோமைக்கு வந்த கிறீஸ்துவர்கள்இந்த பரிசுத்த முன்னிட்டியை, ஒரு அருளிக்கமாகத்தங்களுடன்கொண்டு வந்தனர்‌. இப்பரிசுத்த முன்னிட்டியானது, ஒரு மகா பெரிய அருளிக்கமாக, இந்த பசிலிக்கா தேவாலய முதன்மைப்பெரிய பீடத்தின்அடியில்ஸ்தாபிக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது!

மாட்சிமிக்க இவ்வருளிக்கத்தை நோக்கியபடி, அதற்கு எதிரில்‌, 1854ம்வருடம்மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமை மிகுந்த அமலோற்பவத்தை ஒரு விசுவாசப்பிரகடனமாக அறிவித்த முத்‌.9ம்பத்தி நாதர்பாப்பரசரின்சலவைக் கற்சுரூபம்ஸ்தாபிக்கப்பட்டிருக் கிறது. உரோமை மக்களுடைய இரட்சணியம்என்று அழைக்கப்படுகிறதும்‌, உரோமை மக்களுடைய தன்னிகறற்ற தனிச்சிறந்த பக்தி முயற்சிக்குரியதுமான மகா பரிசுத்த தேவமாதாவின்வரைபடத்தினுடைய ஓவியம்தான்‌, அந்த இரண்டாவது மகா விலையுயர்ந்த பொக்கிஷ திரவியமாக விளங்குகிறது! இந்த ஒவியத்தை வரைந்தவர்அர்ச்‌. லூக்காஸ்என்று பாரம்பரியம்அறிவிக்கிறது. மகா பரிசுத்த தேவமாதாவின்இந்த அரிதான உன்னத ஓவியப்படத்தை, புண்ணிய பூமியிலிருந்து, மகா கான்ஸ்டன்டைன்சக்கரவர்த்தியின்தாயாரான அர்ச்ஹெலன்உரோமாபுரிக்குக்கொண்டு வந்தார்கள்‌.  அர்ச்‌. கிரகோரியார்பாப்பரசர்‌ (590-604) ஆண்ட காலத்தில்‌, உரோமை நகரத்தை ஒரு கொள்ளை நோய்தீண்டியபோது, உரோமை நகர மக்கள்‌,தங்களை மோட்சத்திலிருந்து பாதுகாக்கிறவர் களான மகா பரிசுத்த தேவமாதாவிடம்‌, ஜெபித்து வேண்டிக்கொள்ளும் படியாக, இவ்வற்புதப்படத்தை, பாப்பரசர்பக்தி பற்றுதலுடன்‌, உரோமை நகரின்தெருக்களில்‌, சுற்றுப்பிரகார பவனியாகக்கொண்டு சென்றார்‌.

இதன்பலனாக, புதுமையாக கொள்ளை நோய்‌, நின்று போனவுடன்‌, பாப்பரசர்‌, மகா பரிசுத்த தேவமாதாவிற்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம்செலுத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்த ஒரு மகா ஆடம்பரமான சடங்கின்போது, இந்த அற்புதப்படத்திலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவினுடைய திருத்தலையிலும்‌, தேவபாலனுடைய திருத்தலையிலும்‌, விலையுயர்ந்த மாணிக்கக்கற்களால்அலங்கரிக்கப்பட்ட தங்கத்தினாலான கிரீடங்களை சூட்டினார்‌. இந்த பசிலிக்கா தேவாலயத்தில்அர்ச்‌. 5ம்சிக்ஸ்துஸ்பாப்பரசரும்‌, அர்ச்‌. 5ம்பத்திநாதர்பாப்பரசரும்அடக்கம்செய்யப்பட்டிருக்கின்றனர்‌, என்பதும்குறிப்பிடத்தக்கவையாகும்‌.  திருச்சபையின்பரிசுத்தப்பாரம்பரிய சடங்குகளை நேசிப்பதற்கும்அவற்றிற்காகப்போராடுவதற்கும்‌, பாத்திமாவில்‌, மகா பரிசுத்த தேவமாதா, தீர்க்கதரிசனமாகக்கூறியதன்பிரகாரம்‌, துப்புரவு தண்டனைக்கால நாட்களில்‌, நிகழவிருக்கும்மகா வியக்க வைக்கும்புதுமைகளுக்கு நம்முடைய ஆத்துமங்களைத்திறப்பதற்கும்‌, மகா பரிசுக்த தேவமாதா நமக்கு உதவி செய்யும்படியாக, நாம்‌, மகா பரிசுத்த பனிமய மாதா என்கிற மகிமைமிகு பட்டத்தினால்‌, அவர்களை நோக்கிக்கூவி அழைத்து மன்றாடி ஜெபிப்போமாக!

! மகா பரிசுத்த பனிமய மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!