Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 29 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின்ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 12:

 மகா பரிசுத்த ஜெபமாலையின் உதயம்




ஆல்பிஜென்சிய பதிதத்தை அழித்து ஒழிப்பதற்கான உன்னதமான திட்டங்களை தீட்டி உத்தமமான கத்தோலிக்க வேத சத்தியங்களை மக்களுக்கு போதிப்பதிலும் பாப்பரசரின் தூதுக்குழுவினரை வழிநடத்துவதில் தன்னிகரற்ற தலைவராக திகழ்ந்த வந்.டீகோ ஆண்டகையின் பிரிவு அர்ச். சாமிநாதரை மிகவும் பாதித்தது. உத்தமமான வேதபோதக அலுவலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பிரான்சில் கத்தோலிக்க மக்களிடையே இருந்த ஒழுங்கீனமான பிரிவினைகளையும் வந்.டீகா ஆண்டகை சிர்படுத்தி, சைமன் டி மோன்ஃபோர்ட் என்ற ஒரு உத்தம கத்தோலிக்க பிரபுவின் தலைமையின் கீழ் வேத விசுவாசத்தை பிரமாணிக்கமுடன் கடைபிடிக்கும் ஒரு ஸ்திரமான கத்தோலிக்க சமுதாயத்தை ஏற்படுத்தியிருந்தார். புரோயிலில் அர்ச். சாமிநாதர் கன்னியர்களுக்கான மடத்தை ஏற்படுத்தியதற்கான முக்கிய காரணம் அங்கு பரலோக இராக்கினியான அர்ச்.கன்னிமாமரி நிகழ்த்திய ஒரு புதுமையான நிகழ்வேயாம். அந்நிகழ்வை இப்பொழுது காணலாம்: வந்.டீகோ ஆண்டகை ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதற்கு முன்பாக தன்னுடைய வேதபோதக குழுவினருக்கு தலைவராக பொறுப்பேற்று நடத்தும்படி அர்ச். சாமிநாதருக்கு பணித்தார். அர்ச்.சாமிநாதர் மிக தயக்கத்துடன் தலைமை பொறுப்பேற்றார். 

அக்குழுவின் வேதபோதக அலுவல்களை வழிநடத்தினார். சிறிது காலம் சென்றது. அநேக ஜெபங்கள், ஒறுத்தல்கள், தவக்கிரியைகள் அக்குழுவினரால் மோட்சத்தை நோக்கி ஆல்பிஜென்சிய பதிதர்களின் மனந்திரும்புதலுக்காக
ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தது. அப்பதித மதத்தினர் இலகுவான ஜீவியத்தை நடத்தி வந்தனர். யாதொரு வேதகற்பனையோ அல்லது ஒழுங்கோ அனுசரிக்க தேவையில்லாததால் அப்பதித மதம் மக்களை வெகுவாக கவர்ந்தது. அப்பதிதர்கள், தாங்கள், மிகவும் நவநாகரிக மக்கள் என்ற தோற்றத்தினால் மக்களை தங்களுடைய தப்பறையில் எளிதாக சிக்கவைத்தனர். இதையெல்லம் கண்ட அர்ச்.சாமிநாதரின் இருதயம் துக்கத்தால் கனத்தது. அர்ச்.சாமிநாதர், “பரிதாபத்துக்குரிய இம்மக்களை நிச்சயமாக பசாசு தன்னுடைய தீயபிடியில் வைத்துள்ளது. ஓ மிகவும் நேசமான தேவதாயாரே! இந்த திய பதிதர்களையெல்லாம் மனந்திருப்புவதற்கு எங்களுக்கு உதவியருளுங்கள்!” என்று சர்வேசுரனுடைய மாதாவிடம் மன்றாடினார். 

அப்பொழுது உடனே அசாதாரணமான ஒன்று நிகழ்ந்தது. “ஆல்பிஜென்சிய பதிதர்கள் எல்லாரும் மனந்திரும்புவர். அவர்களை தேவமாதாவே மனந்திருப்புவார்கள்” என்ற ஒரு உறுதியான நம்பிக்கை அவருடைய இருதயத்தில் உதித்தது. அதற்கு அவருடைய வேதபோதகக்குழுவினர் செய்ய வேண்டிய அவசியமான காரியம் என்னவென்றால் “அவர்கள் அனைவரும் மிகவும் பரிசுத்த தேவமாதாவிடம்
உத்தமமான பக்திபற்றுதல் கொண்டு விளங்க வேண்டும். தேவமாதாவுக்கு தோத்திரமாக செய்யப்படும் ஜெபங்களை, விசேஷமாக அருள்நிறை மந்திரத்தை சொல்வதில் பிரமாணிக்கமாக இருக்க வேண்டும்” என்றும் அர்ச்.சாமிநாதர் கண்டுணர்ந்தார்.அர்ச்.சாமிநாதர் தன் குழுவினரிடம், “நாம் இதுவரை சொல்லியது போலல்லாமல் மிகுந்த பக்தி உருக்கத்துடன் அருள்நிறை மந்திரத்தை சொல்லத் துவக்குவோம்” என்று கூறினார். 

அப்பொழுது தேவமாதா அர்ச். சாமிநாதரிடம் புதுவிதமாக அருள்நிறை மந்திரங்களை சொல்வதற்கான ஒரு வழிமுறையைக் கற்பித்தார்கள். ஆல்பிஜென்சிய பதிதர்களை மனந்திருப்புவதற்கான அந்த ஜெபமுறையானது தேவமாதாவுக்குத் தோத்திரமாக 150 அருள்நிறை மந்திரங்களையும் அவை பத்துக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பத்து அருள்நிறை மந்திரங்களுக்கு முன் ஒரு பரலோக மந்திரமும் ஆண்டவருடைய திவ்ய இரட்சணியத்தின் தேவ இரகசியங்களையும் தியானித்துக் கொண்டே ஜெபிக்கப்படும் ஜெபமாக விளங்கியது. ஜெபமாலை என்று இனி எல்லாராலும் அழைக்கப்பட இருக்கும்
இந்த ஜெபமானது பழைய ஏற்பாட்டின் 150 சங்கிதங்களின் நினைவாகவே 150 அருள்நிறை மந்திரங்களை கொண்டிருக்கிறது. ஆனால் அப்பழைய ஏற்பாட்டின் ஜெபத்தை விட இந்த ஜெபம் எவ்வளவு இனிமையானது! எவ்வளவு
எளிமையானது! எவ்வளவு மகத்தானது! எவ்வளவு சுருக்கமானது! ஒரு மனிதன் தன் அலுவலுக்குப்போகும்போதும் வரும்போதும் கூட ஒரு ஜெபமாலையை நடந்துகொண்டே சொல்லி விடலாம்.

கல்வியறிவு அற்றவர்களும் படிக்கத் தெரியாதவர்களும் கூட ஜெபமாலையை மிக எளிதாக சொல்லிவிடலாம். உடனே வந். டீகோ ஆண்டகையிடம் அர்ச்.சாமிநாதர், “ஆண்டவரே! இந்தப் பதிதர்களோடு நாம் நடத்தும் இப்போரில் அருள்நிறை மந்திரங்கள், மற்றும் ஜெபமாலையினுடைய மகத்துவ மிக்க வல்லமையினால் நாம் வெற்றியடைவோம்!” என்று கூறினார். “நீங்கள் சரியாகச் சொன்னிர்கள்! நமது மோட்ச இராக்கினி இந்த திமையான பதிதத்தை நாம் அழித்து வெற்றியடைவதற்காக நமக்கு நிச்சயம் உதவிபுரிவார்கள்!” என்று வந்.டீகோ ஆண்டகை பதிலளித்தார். (தொடரும)



செவ்வாய், 28 டிசம்பர், 2021

History of the St. Pius X Society

 Part 1



Delivered by Fr. Daniel Themann 
(Rector of Holy Cross Seminary)


அர்ச்.சாமிநாதரின்ஜீவிய சரித்திரம்:அத்தியாயம் - 11

வந்.டீகோ ஆண்டகையின் பிரிவு



இந்த சிறு கன்னியர்குழுவினருடன் மேலும் இரு உயர்குடி கத்தோலிக்கக் குடும்பஙகளிலிருந்து இருவர் சேர்ந்தனர். அவர்களில் ஒருவர் ஃபோஷோவின் கில்லமெட் என்ற பெண்மணியாவார். இவள் சிறிது காலம் கழித்து இக்கன்னியர் சபையில் சேர்ந்தபோதிலும் இவளுடைய அரிய நற்புண்ணிய ஜிவியத்தை முன்னிட்டும் கன்னியர்களை ஆண்டு நடத்தக்கூடிய திறமைகளை இவள் பெற்றிருந்ததாலும் இவளே 1225ம் ஆண்டு வரைக்கும் இம்மடத்தின் தாயாராக அர்ச்.சாமிநாதரால் நியமிக்கப்பட்டார். 1206ம் வருடம் டிசம்பர் மாதம் 27ம் நாளன்று புரொயிலில் புதிதாக கட்டப்பட்ட மடத்தில் கன்னியர் குடியேறினர். அக்கன்னியருக்கான துறவற உடை, வெள்ளை அங்கியும் பழுப்பு கலந்த மஞ்சள் நிற வெளி முக்காடும் உடையதாக விளங்கியது. அவர்கள் தினமும் சிறுபிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதுடன் நூல் நூற்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.அர்ச்.சாமிநாதரே அக்கன்னியர் மடத்தின் தலைமை அதிபராக பொறுப்பேற்றிருந்தார். கன்னியருடைய மடத்தின் அடைப்பிற்கு வெளியே ஒரு வீட்டில் வசித்து வந்தார். அர்ச்.சாமிநாதர் தமது வேதபோதக அலுவல்களுக்கிடையே கன்னியர்களுடைய ஞான ஜீவியத்திற்கான தேவைகளையும் பராமரித்து வந்தார். 

பிற்காலத்தில் இந்தக் கன்னியர் மடம் உலகெங்குமிருந்த அர்ச். சாமிநாதருடைய கன்னியர் சபை மடங்கள் அனைத்திற்கும் தாய் மடமாக விளங்கியது. மற்ற எல்லா கன்னியர் மடங்களுக்கும் மேல்வரிச்சட்டமாக திகழ்ந்தது. அர்ச்சிஷ்டதனத்தில் சிறந்து விளங்கிய பல கன்னியர்கள் இங்கு வாழ்ந்தனர். போர்போன் அரண்மனையைச் சேர்ந்த பல அரசகுடும்பத்தின்
பெண்கள் இம்மடத்தின் தலைமை தாயாராக பொறுப்பேற்றிருந்தனர்.

புரொயிலில் அர்ச்.சாமிநாதர் கன்னியர்களுக்கான மடத்தை ஸ்தாபித்ததைக்
கண்டபிறகே வந்.டீகோ ஆண்டகை ஸ்பெயின் நாட்டில் தமது ஓஸ்மா மேற்றிராசனத்திற்கு திரும்பிச் சென்றார். அவர் அம்மேற்றிராசனத்தைவிட்டு இந்த பிரெஞ்சு பிராந்தியத்திற்கு வந்து 2 வருட காலமாயிருந்தது.அவருடைய வேதபோதகக் குழுவினர் தூலோஸ் நகரையடுத்தப் பகுதிகளில் தங்கள் வேதபோதக அலுவலில் அட்ட தரித்திர கோலத்தில் மிக வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தனர். வந்.டீகோ ஆண்டகையின் இந்தக் கடைசி அப்போஸ்தலர்கள்  இப்பகுதியில் அநேக வெற்றி வாகைகளைச் சூடினர். மோன்ட்ரியல் நகரில் மட்டும் சுமார் 500 ஆல்பிஜென்சிய பதிதர்கள் தங்களுடைய தப்பறைகளைத் துறந்து மனந்திரும்பி சத்திய வேதத்தில் உட்பட்டனர். 

அதே சமயம் பேமியர்ஸ் என்ற இடத்தில் கத்தோலிக்கர்களுடைய உயர் அதிகாரிகளுக்கும் பாப்பரசரின் தூதுக்குழுவினருக்கும் இடையே ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது கத்தோலிக்க அதிகாரிகள் வெளிப்படுத்திய அதிசயத்தக்க விரத்தையும் மகத்துவத்தையும் கண்ட பல முக்கிய ஆல்பிஜென்சிய தலைவர்கள் தங்களுடைய தப்பறைகளை மிகுந்த பிரமாணிக்கத்துடன் துறந்துவிட்டு, கத்தோலிக்க வேதவிசுவாசத்திற்கு தங்களை முற்றும் கையளித்தார்கள். வந்.டீகோ இந்தக் கூட்டத்திற்கு பிறகு, தனது சொந்த ஓஸ்மா மேற்றிராசனத்தை நோக்கி பயணமானார். ஏறக்குறைய 3 வருடங்களுக்குப் பிறகே அவர் தமது சொந்த மேற்றிராசனத்திற்கு திரும்பினார். ஆனால் அவர் ஆசித்தபடி மறுபடியும் அர்ச்.சாமிநாதரை அவரால் சந்திக்க முடியாமல் போயிற்று. ஏனெனில் அதற்குள் அவர் இறக்க நேரிட்டது. ஆனால் முத்.ஜோர்டான் குறிப்பிடுவது போல தவச்சபையின் ஸ்தாபகரான அர்ச்.சாமிநாதர் தமது அப்போஸ்தல ஜீவியத்தின் ஆரம்பகாலத்தில் மிகவும் முக்கியமான அர்ச்சிஷ்டவரான வந்.டீகோ ஆண்டகையுடன் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சத்திய வேத விசுவாச சத்தியத்தை ஆல்பிஜென்சிய பதிதர்களிடையே போதிக்கும்படியாக நித்திய ஜீவியத்திற்கு முன்குறிக்கப்பட்டவரான வந்.டீகோ ஆண்டகை மெய்யாகவே பரலோகத்தால் அனுப்பப்பட்டிருந்தார் என்று அப்பதிதர்களே ஒப்புக்கொள்ளும் வண்ணம் வந்.டீகோ மேற்றிராணியார் உன்னதமான அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்தார். (தொடரும்)





திங்கள், 27 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்:அத்தியாயம் -10

 அர்ச்.சாமிநாதர் ஏற்படுத்திய கன்னியர் சபை



ஃபோஷோவில் நிகழ்ந்த அதிசயத்திற்கு பிறகு, அதைக்குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர் இப்புதுமையினால் ஒரு சில பதிதர்களே மனந்திரும்பினர். மற்ற அனேக பதிதர்கள் தங்கள் தப்பறையை விட்டு விட மனதில்லாதிருந்தனர் என்று குறிப்பிடுகின்றார். அதற்கு காரணம் அவர்கள் செய்த மாபெரும் பாவங்களேயாகும். நமது திவ்ய ஆண்டவர் இவ்வுலகில் செய்த அரும்பெரும் புதுமைகளைக் கண்டும் மனந்திரும்பாத யூதர்களைப்போலவும் மோயீசனும் திர்க்கதரிசிகளும் செய்த அற்புதங்களைக் கண்டும் சர்வேசுரனுக்குக் கிழ்ப்படியாத ஜனங்களைப்போலவும் எல்லா காலங்களிலும் ஒவ்வொரு பதிதம் தோன்றும்போதும் மக்கள் மிண்டும் சர்வேசுரனை நேசியாமல் தங்களுடைய கேட்டிலேயே நிலைத்திருக்கிறார்கள் என்பதையே நாம் இங்கு காண்கிறோம். கார்கசோன் என்ற மேற்றிராசனத்தைச் சேர்ந்த மோன்ட்ரியல் என்ற நகரத்தில் இதேபோன்ற புதுமை அர்ச்.சாமிநாதரால் நிகழ்த்தப்பட்டது. 

அங்கு நகரத்தினருடைய கூட்டத்தில் பதிதர்களுடன் பகிரங்கமாகவே தர்க்கத்தில் ஈடுபட்ட அர்ச்.சாமிநாதர், தான் தர்க்கத்திற்காக பயன்படுத்திய வேதாகமத்தின் மேற்கோள்களை ஒரு தாளில் எழுதினார். அந்தத் தாளில் எழுதியவேதசத்தியங்களைப் பரிட்சிப்பதற்காக அதை அருகிலுள்ள நெருப்பில் போடப்போவதாகக் கூறினார். அதற்கு பதிதர்களும் இணங்கினர். அர்ச்.சாமிநாதர் உடனே அந்தத் தாளை நெருப்பில் போட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு, அந்தத் தாளை நெருப்பிலிருந்து வெளியே எடுத்தபோது அந்தத் தாள் கருகிச் சாம்பலாகாமல் புதுமையாக அப்படியே இருப்பதை அனைவரும் கண்டு அதிசயித்தனர். பிறகு பலமுறை அந்தத் தாளை அந்த நெருப்பிலே போட்டும் அது கருகிப்போகாததைக் கண்டு அர்ச்.சாமிநாதரின்
போதகமே சத்திய போதகம் என்று அனைவரும் விசுவசித்தனர். அதைக் கண்ட பதிதர்கள் தங்களுடைய வாக்குறுதியின் பிரகாரம் தங்கள் பதிதமார்க்கத்தை விட்டுவிடுவதற்கு மனமில்லாதவகளாக இருந்தனர்.

சத்திய கத்தோலிக்க வேத விசுவாசத்தை ஏற்பதற்கும் உடன்படாமல் போனார்கள்.  இந்தப் புதுமையை தங்களுக்குள் இரகசியமாக வைத்துக்கொண்டனர். ஏனெனில் இதைக் கேள்விப்படும் நாட்டின் மற்ற பகுதியின் கத்தோலிக்கர் அனைவரும் இதை தங்களுடைய மாபெரும் வெற்றியாகக் கொண்டாடுவர் என்பதை தடுப்பதற்காக அவ்வாறு அப்புதுமையை தங்களுக்குள் வைத்துக் கொண்டனர். ஆனால் இதை நேரில் கண்ட பதிதத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதன் மனந்திரும்பி நல்ல கத்தோலிக்குக் கிறிஸ்துவனானான். இவனுடைய நேரடி வாக்குமூலத்தையே
ஆல்பிஜென்சியரின் சரித்திரம் என்ற நுரலில் பீட்டர் தெ வோக்ஸ் செர்னே என்பவர் சேர்த்திருக்கிறார்.

இவ்வாறு நமது வேதபோதக குழவினர் சென்ற இடமெல்லாம் பதிதர்களுக்கு படுதோல்வி ஏற்பட்டது. பல பதிதர்கள் சத்திய வேதத்தில் சேர்ந்தனர். பதிதர்களின் எண்ணிக்கை நாளடைவில் வெகுவாய் குறையலாயிற்று. ஆனால் திவிரவாத பதிதர்கள் தங்களுடைய பதித தப்பறைகளை நிலைநாட்டுவதற்காக மோசடியான காரியங்களில் ஈடுபடலாயினர். சில கத்தோலிக்கு உயர்குடிமக்கள் அக்காலத்தின் அரசியல் குழப்பங்களின் காரணமாக வறியநிலைமைக்கு ஆளாயினர். அவர்கள் தங்களுடைய குழந்தைகளை பதிதர்களுடைய பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பும் சூழ்நிலை
உருவானது. அதைத் தக்கபடி பயன்படுத்திய ஆல்பிஜென்சிய பதிதர்கள் அக்குழந்தைகளின் வேதவிசுவாசத்தை அழிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த அபாய சூழலை நன்கு உணர்ந்த அர்ச்.சாமிநாதர் உடனே தங்களுடைய வேதவிசுவாசத்தை இழந்து நித்திய நரக ஆக்கினையை நோக்கியிருந்த அந்தக் குழந்தைகளை சத்திய வேதத்தில் பயிற்றுவிக்கும்படியான பள்ளிக் கூடங்களை ஏற்படுத்தும் வழிமுறைகளை மிகுந்த தீர்மானமாக திட்டமிடலானார். அதற்கென ஒரு அடைபட்ட கன்னியர் மடத்தை ஏற்படுத்த
தீர்மானித்தார். அதற்கென்று பதிதர்களால் பாதிக்கப்பட்ட மேற்றிராசனங்களிலிருந்து நல்ல பக்தியுள்ள கத்தோலிக்கு பெண்களை வரவழைத்தார். அவர்களுக்கு உன்னதமான வேதசத்தியங்களை திருச்சபையின் பராமரிப்பினால் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்தார். புரோயில் நகரத்தில் கன்னியருக்கான முதல் மடத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

இந்நகரம் தான் அர்ச்.சாமிநாதர் சபையின் ஆக்கபூவமான அநேக ஞானகாரியங்களுக்கும் சாதனைகளுக்கும் பேர்போன நகரமாக விளங்குகிறது. இந்தக் கன்னியர் மடமே உலகிலுள்ள சகல அர்ச். சாமிநதர் சபைக் கன்னியர் மடங்களுக்கும் தாய் மடமாக விளங்குகிறது. புரோயில் என்னும் அழகிய கிராமம் பிரன்னிஸ் மலையடிவாரத்தில் மோன்ட்ரீயல் நகருக்கருகில் இருக்கிறது. அங்கு ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்ற தேவமாதாவுக்கு தோத்திரமாக ஒரு பேராலயம் இருந்தது.

தூலோஸ் நகரத்தின் மேற்றிராணியாரான வந்.ஃபல்க் ஆண்டகையின் பேராதரவுடன் அர்ச்.சாமிநாதர் கன்னியருக்கான மடத்தை அங்கு
ஸ்தாபித்தார். அக்கால சூழ்நிலைக்கு மிக அத்தியாவசியமானதொன்றாக இந்த மடம் விளங்கியதை அனைவரும் கண்டுணர்ந்தனர். இச்சபையின் வளர்ச்சிக்காக பலரும் தங்களாலான உதவிகளைச் செய்ய முன்வந்தனர். நார்போன் அதிமேற்றிராணியார், வந்.பெரெஞ்சர் ஆண்டகை உடனே இந்த கன்னியர் சபைக்காக தன்னிடமிருந்த ஏராளமான நிலங்களையும் மற்றும் மாதந்தோறும் வருமானம் தரக்கூடிய பல சொத்துக்களையும் அளித்தார். கத்தோலிக்கு உயர்குடிமக்கள், அரண்மனை உயர் அதிகாரிகள், சைமன் டி மோன்ஃபோர்ட் என்பவருடைய தலைமையில் தாராள மனதுடன் நன்கொடை அளித்து பல நன்மைவிளைவிக்கும் திட்டங்களையும் ஏற்படுத்தி தந்தனர். அத்திட்டங்களினால் அவர்களே அநேக நன்மைகளால் பயனடைந்தனர். 

இச்சபையில் முதலில் 9 கன்னியர் சேர்ந்தனர். அனைவரும் அர்ச். சாமிநாதரின் போதனைகள் மற்றும் புதுமைகளால் ஆல்பிஜென்சிய பதிதத்திலிருந்து
மனந்திரும்பியவர்கள்.

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 11

சனி, 25 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் - 9

அர்ச்.சாமிநாதர் பதிதர்களிடம் செய்த புதுமை

தூலோஸ் நகர மேற்றிராணியார் கூறியபடி புதிய உதவியாளர்கள் தங்களுடைய வேதபோதக அலுவலுக்கு வந்ததும் அவர்களையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டு, இச்சிறு வேதபோதகக் குழுவினர் அனைவரும் மிதியடிகளைக்கூட அணிந்து கொள்ளாமல் அட்ட தரித்திர கோலத்தில் அண்டை நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் சென்று ஞான உபதேசத்தைக் கற்பித்தும் வேதவிசுவாச சத்தியங்களைப் பிரசங்கித்தும் வந்தனர். அதன்பிறகு மோன்ட்பெல்லியரில் ஒரு மாநாட்டைக் கூட்டினர். அதில் பதிதர்களும் கலந்து கொண்டு வேதசத்தியங்களைப் பற்றிய தர்க்கங்களில் ஈடுபட்டனர். நமது வேதபோதகர்கள் தங்களின் நுட்பமான வேத ஞானத்தைக் கொண்டு பதிதர்களை விவாதத்தில் தோறகச் செய்தனர். அதன்பிறகு தூலோஸ் நகரத்தை நோக்கி அனைவரும் பயணத்தை மேற்கொண்டனர். திவ்ய இஸ்பிரித்துவானவரால் வழிநடத்தப்பட்டவர்களாக ஆங்காங்கே வழியில் தென்பட்ட மக்களை வேத விசுவாசத்தில் ஸ்திரப்படுத்தியும் பதிதர்களிடம் தர்க்கம் செய்து அவர்களுக்கு வேத ஞானத் தெளிவை ஏற்படுத்தியும் சென்றனர். 


இவ்வாறு வேதபோதக அலுவலில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் அனைவரும் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு சர்வேசுரனுடைய தேவபராமரிப்பையே நம்பியிருந்தனர். அவர்கள் இவ்வாறு தபசு போலத்தில் ஆற்றிய வேதபோதக அலுவல் உடனே ஞான பலன்களையும் நன்மைகளையும் விளைவிக்க துவக்கியது.

பால்ட்வின், தியர்ரி என்ற இரு முக்கிய ஆல்பிஜென்சிய பதிதர்கள் வாழ்ந்துவந்த கார்மெய்ன் என்ற நகரத்தை அடைந்தனர். இந்நகரம் தூலோஸ் நகரத்தினருகில் இருந்தது. அந்நகர மக்கள் நமது வேதபோதகர்களை மிக அன்புடனும் சங்கை மரியாதையடனும் வரவேற்று உபசரித்தனர். ஏராளமான பதிதர்கள் மனந்திரும்பினர். ஆனால் மனந்திரும்பாத பதிதர்களை அந்நகரிலிருந்து அகற்றுவதற்கு அந்நகர தலைவர்கள் தடை செய்தனர். பிறகு அந்நகர மக்கள் இந்த ஞான போதகர்களை நகர எல்லை மட்டும் வந்து அன்புடன் வழியனுப்பினர். இவ்வாறே பெசியர் மற்றும் கார்க்கசோன் என்ற நகரங்களிலும் நமது போதகர்களுக்கு நிகழ்ந்தது. இவ்வாறு பிரான்சின் தெற்குப் பிரதேசத்தில் வசித்த அநேக கத்தோலிக்கர்களை வேதவிசுவாசத்தில் உறுதிப்படுத்தியும் ஏராளமான பதிதர்களை மனந்திருப்பி சத்திய திருச்சபையில் சேர்த்தும் வந்தனர். ஏராளமான மாநாடுகளின் மூலம் வேதபோதகர்கள் இப்பிரதேசத்தின் பதிதர்கள் அநேகரை திருச்சபையில் சேர்த்தனர்.இதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் சகோ. தோமினிக் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சாமிநாதர். அவருடைய வேதஞானமும் பதிதர்களிடம் விவாதம் செய்வதில் தேர்ச்சியும் அவர் கொண்டிருந்த அசாதாரண பேச்சுத் திறமையும் பதிதர்களின் வாயை அடைத்துப் போட்டன.

இதனாலேயே அர்ச்.சாமிநாதர் பதிதர்களின் சம்மட்டியாக விளங்கினார். அதனால் தான் அப்பதிதர்கள் இவரை தங்களுடைய மாபெரும் எதிரி என்று எண்ணி இவரைக் கொல்வதற்கு வழிதேடினர். ஆனால் அர்ச்.சாமிநாதர் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இரவு நேரங்களில் தன்னை இரகசியமாக சந்தித்து தனது ஞான ஆலோசனையைக் கேட்க வந்த மனந்திரும்பிய பதிதர்களை ஞான ஜீவியத்தில் திடப்படுத்துவதிலும் அவர்களுக்காக இரவு முழுவதும்ஜெபிபப்பதிலும் ஜெபதபபரித்தியாக ஜீவியத்திலும் ஈடுபட்டிருந்தார். பதிதர்களுடன் தர்க்கிப்பதில் அவர் மிகுந்த ஞானத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அதைவிட அவர் கடைப்பிடித்த இந்த தவஜீவியமே அதிக மேன்மையாக விளங்கியது. 

ஒருதடவை ஃபோஷோ என்ற இடத்தில் அர்ச்.சாமிநாதருக்கும் ஆல்பிஜென்சிய பதிதர்களுக்கும் அந்நகர மக்களின் முண்ணிலையில் பகிரங்கமாக வேதத்தைப்பற்றிய தர்க்கம் நடைபெற்றது. இதை அர்ச்.சாமிநாதரின் சபை சரித்திர ஆசிரியர் முத்.ஜோர்டான் சகோதரர் பின் வருமாறு விவரிக்கின்றார்:“மாபெரும் நெருப்பு அந்நகரத்தின் ஒரு சதுக்கத்தில் மூட்டப்பட்டிருந்தது. நமது சத்திய வேதத்தின் உன்னத விசுவாசக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் அர்ச்.சாமிநாதரால் எழுதப்பட்டிருந்தன. மற்றொரு புத்தகத்தில் ஆல்பிஜென்சிய பதிதர்களின் தப்பறையான கோட்பாடுகள் எழுதப்பட்டிருந்தன. இரு புத்தகங்களையும் அந்த நெருப்பில் போட்டார்கள். பதிதர்களின் புத்தகமோ உடனே நெருப்பினால் கருகி சாம்பலானது. சர்வேசுரனின் பரிசுத்த மனிதரான அர்ச்.சாமிநாதர் எழுதிய புத்தகமோ யாதொரு சேதமும் ஆகாமல் கருகிச் சாம்பலாகாமல் போனது மட்டுமல்லாமல் எல்லோர் முன்னிலையிலும் திச்சுவாலையினால் அருகிலிருந்த ஒரு மரத்தூணிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டு, மூன்று முறையும் இவ்வாறே சர்வேசுரனுடைய உத்தம வேத விசுவாசத்தின் புத்தகம் புதுமையாக, நெருப்பினால் யாதொரு சேதமும் அடையாமல் அதே தூணின்மேல் திச்சுவாலையினால் கொண்டு செல்லப்பட்டது.

இப்புத்தகத்தை எழுதியவரின் மெய்யான விசுவாசமும் பரிசுத்ததனமும் இதில் வெளிப்பட்டது” இப்புதுமை அர்ச்.சாமிநாதர் வாழ்ந்த காலத்திலேயே ஒருவரால் எழுதப்பட்டது. வந்.கான்ஸ்டன்டைன் மெடிசி என்ற ஓர்வியட்டோ நகர மேற்றிராணியார் கட்டளை ஜெபத்தில் இந்நிகழ்வைப்பற்றி பிற்சேர்க்கையில் சேர்த்தார். 1254ம் ஆண்டு பிரான்சு நாட்டின் அரசர் சார்லஸ் லெ பெல் என்பவர் இப்புதுமை நிகழ்ந்த விட்டை வாங்கி அதை அர்ச். சாமிநாதருக்கு தோத்திரமாக ஒரு தேவாலயமாகக் கட்டினார். அப்புதுமையில் அர்ச்.சாமிநாதரின் புத்தகம் நெருப்பு சுவாலையால் தாங்கி ஒரு மரத்தூணின் மேல் செல்லப்பட்டன. அந்த மரத்தூணும் அவருடைய சரித்திரத்தை காஸ்டிக்லியோ என்பவர் எழுதும் வரை பாதுகாக்கப்பட்டு வந்தது. †

(தொடரும்)


அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 10

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7


வெள்ளி, 24 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 8

சிஸ்டர்ஷியன் சபையினருடன் உரையாடுதல்

வந். டீகோ ஆண்டகை சிஸ்டர்ஷியன் சபையின் மடாதிபதியான சங். ஆர்னால்ட் சுவாமியாரிடம் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி விவரிக்கலானார். அப்பதிதம் பரவியுள்ள ஊர்களுக்கு பிரசங்கிக்க செல்லும்போது சுவிசேஷத்தின் தரித்திரத்தைப் பின்பற்றும் விதத்தில் எளிய தரித்திர அங்கியை அணிந்து செல்ல வேண்டும் என்றும் மிதியடிகள் இல்லாமல் வெறும் காலுடன் நடந்து செல்ல வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். மேலும் வேதபோதக அலுவலில் ஈடுபட்டிருக்கும்போது துறவிகள், வசதியான சத்திரங்களில் தங்காமல் எளிய விவசாயிகளுடைய இல்லங்களிலேயே அவர்களுடன் எளிய உணவை உட்கொண்டு அங்கேயே தங்குமாறு அறிவுறுத்தினார். 

அதற்கு அம்மடாதிபதி, “அது கண்ணியமாக இருக்காதே!” என்றார். வந்.டீகோ ஆண்டகை , “நமக்கு நமது கண்ணியம் முக்கியமா? அல்லது ஆத்துமங்கள் முக்கியமா?” என்றார்.

மடாதிபதியோ, “ உங்களுக்கு புரியவில்லை. இங்கு பிரான்சில், நாங்கள் நமது 3ம் இன்னசென்ட பாப்பரசரின் பிரதிநிதிகள். அப்படியிருக்க நாங்கள் எவ்வாறு தரித்திர பிச்சைக்கார கோலத்தில் செல்வது?” என்றார். 

இதைக் கேளாதவர் போல வந்.டீகோ ஆண்டகை, “ நாங்கள் இன்னொரு ஆலோசனையும் வைத்திருக்கிறோம்” என்று கூறிக் கொண்டே அர்ச்.சாமிநாதர் பக்கம் திரும்பி, “மகனே! அது என்ன என்று இவர்களுக்குக் கூறுகிறீர்களா?” என்றார். இதைக் கேட்டதும் புன்னகையுடன் அர்ச்.சாமிநாதர், “மடாதிபதி சுவாமியவர்களே! நமக்கு பெண் உதவியாளவர்களும் தேவைப்படுகின்றனர்!” என்றார். “பெண் உதவியாளர்களா?

அது முடியாத காரியம். பிரசங்கிப்பது என்பது ஆண்களின், அதுவும் குறிப்பாக குருக்களின் அலுவலாகும்” என்றார். அதற்கு, அர்ச்.சாமிநாதர், “ஓ சுவாமியவர்களே! எவ்வளவு பெண் உதவியாளர்களை அனுப்பமுடியுமோ அவ்வளவு பேரை இப்பொழுதே அனுப்பும்படி நாம் சர்வேசுரனை மன்றாட வேண்டும்” என்றார்.

அர்ச்.சாமிநாதர் இவ்வாறு கூறியதற்கான காரணத்தை அம்மடாதிபதி விரைவிலேயே புரிந்து கொண்டார். அப்பகுதியில் பதிதர்கள் பல பள்ளிக் கூடங்களைக் கட்டியிருந்தனர். அவற்றில் பெரும்பாலானவற்றைப் பெண்களே நிர்வகித்து வந்தனர். அங்கு கல்வி பயின்று வந்த சிறுவர் சிறுமியருக்கு தேவதிரவிய அனுமானங்கள் மிது வெறுப்பை ஏற்படுத்தியும் விசுவாசபிரமாணத்தின் எல்லா விசுவாச சத்தியங்களையும் பாப்பரசரையும் வெறுத்து பகைக்கும்படி போதித்தும் வந்தனர், ஆல்பிஜென்சிய பதிதர்கள். 

இதனிமித்தமே, அப்பகுதி மக்கள் சர்வேசுரனைப்பற்றியும் திருச்சபையைப் பற்றியும் அறியும் பொருட்டு, கத்தோலிக்க ஞான உபதேசத்தைக் கற்பிக்கும்படியான பள்ளிக்கூடங்களை அங்கு நிறுவ வேண்டும் என்று வந்.டீகோ ஆண்டகையுடன் அர்ச்.சாமிநாதர் திட்டமிடலானார்.

இத்திட்டத்தைப்பற்றி அறியவந்த மடாதிபதி, “ஆம். அது நமது அலுவலை மிகவும் எளிதாக்கும்” என்றார். சங்.ருடால்ஃப் சுவாமியார், “ஆம். மனந்திரும்பிய பெண்கள் தங்குவதற்கு இத்தகைய கல்வி நிலையங்கள் பாதுகாப்பான இடங்களாக விளங்கும். ஏனெனில் அவ்வாறு மனந்திரும்பும் பதிதர்கள் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களாலேயே துன்பப்பட நேரிடும் என்று நான் கேள்விபட்டேன்” என்றார். இதைக் கேட்ட சங்.பீட்டர் சுவாமியார், “எனக்கும் இதுபற்றிய சந்தேகம் இருந்தது. மனந்திரும்பியவர்கள் எவ்வாறு பதிதர்களை விட்டு வெளியேற துணிவார்கள்? ஆனால் இத்தகைய பாதுகாப்பிடங்கள் இருக்குமானால் அவர்களை அங்கு தங்க வைக்கலாம்” என்று கூறினார்.

இதன்பிறகு, சுவிசேஷத்தின் தரித்திரத்தைப்பின்பற்றியவர்களாக, வந்.டீகோ ஆண்டகை, அர்ச்.சாமிநாதர் மற்றும் சில வேதபோதகர்களுடன் தெற்கு பிரான்சின் பல பகுதிகளுக்குச் சென்று ஞான உபதேசத்தைக் கற்பித்தும் ஞான பிரசங்கங்களை நிகழ்த்தியும் வந்தார். ஆல்பிஜென்சிய பதிதத்தை அழித்தொழிப்பதில் வந்.டீகோ ஆண்டகையின் தலைமையில் ஈடுபட்டிருந்த நமது வேதபோதகர்களுக்கு பேராதரவு தந்து கொண்டிருந்த, தூலோஸ் நகர மேற்றிராணியார் வந்.ஃபோல்க்வெஸ் ஆண்டகை இவர்களிடம் ஒருநாள், “வருத்தப்படாதிர்கள். உங்களுடைய முயற்சிகளில் சர்வேசுரன் மகிழ்ந்திருக்கிறார். விரைவிலேயே எல்லாவிற்றிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்! உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது” என்றார்.

இந்த மேற்றிராணியார் அர்ச்.சாமிநாதருக்கு ஃபாஷோ என்ற இடத்தில் ஒரு சிற்றாலயத்தை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். இந்த சிற்றாலயத்தில் தான் இச்சிறு வேதபோதகக் குழுவினர் ஓய்வு நேரங்களில் ஜெபித்தும் அதன் வளாகத்தில் தங்கி ஓய்வெடுத்தும் பதிதத்தை அழிப்பதற்கான திட்டங்களைத் திட்டியும் வந்தனர். அந்த மேற்றிராணியார் தங்களுக்கு என்ன நல்ல செய்தி சொல்லப்போகின்றார் என்று இவர்கள் எல்லாரும் அவரை ஆவலுடன் உற்று நோக்கினர்.

தூலோஸ் நகர மேற்றிராணியார் அவர்களிடம், “எனது மேற்றிராசனத்தைச் சேர்ந்த நன்கு கற்றிறிந்தவர்களும் பரிசுத்தருமான அநேக குருக்கள் அப்பதிதத்தை அழித்தொழிப்பதில் உங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர் என்பதே அந்த நல்ல செய்தி” என்றார். 


அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7


வியாழன், 23 டிசம்பர், 2021

சிலுவை அடையாளம்


அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்.

எங்கள் சர்வேசுரா! பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரித்து சாந்துவுடையவும் நாமத்தினாலே. ஆமென்.



1. “அர்ச்சியசிஷ்ட” என்ற வார்த்தைக்கு அர்த்தமென்ன?

வணக்கத்துக்குரிய என்று அர்த்தமாகும்

2. “சிலுவை” என்பது எது?

நம்மை இரட்சிக்கிறதற்காக சேசுநாதர்சுவாமி அறையுண்ட மரமாம்.

3. சேசுநாதருடைய சிலுவையை அர்ச்.சிலுவை என்று சொல்வானேன்?

சேசுநாதர் சிலுவையிலே அறையுண்டு அதில் மரணமானபடியால் அதை அர்ச்சியசிஷ்ட சிலுவை என்கிறோம்.

4. அடையாளம் என்றால் என்ன?

குறிப்பு

5. சத்துரு என்றால் யார்?

ஒருவனுடைய பகையாளி அல்லது விரோதியே அவனுடைய சத்துரு.

6. இவ்விடத்தில் சத்துரு என்னும் பதத்தால் குறிப்பிடப்பட்டவர்கள் யார்?

உலகம், பசாசு, சரீரம் ஆகிய இம்மூன்றுமே மனிதனின் பகையாளிகளாகும்.

7. எங்களை இரட்சித்தருளும் என்பதற்கு அர்த்தம் என்ன?

எங்களை மீட்டுக் காப்பாற்றியருளும் என்று அர்த்தமாம்.

8. “சர்வேசுரன்” என்றால் யார்?

சர்வத்துக்கும் கர்த்தாவான ஆண்டவரே சர்வேசுரன்.

9. “பிதா” என்னும் பதத்துக்கு அர்த்தம் என்ன?

தகப்பன்

10. “சுதன்” என்பதற்கு அர்த்தம் என்ன?

குமாரன், மகன் என்று அர்த்தமாம்.

11. “இஸ்பிரீத்து சாந்து” என்னும் வார்த்தைக்கு அர்த்தமென்ன?

இலத்தின் மொழியில் இஸ்பிரீத்து சாந்து என்கிற பதத்துக்கு பரிசுத்த ஆவி என்று அர்த்தமாகும்.

12. “நாமத்தினாலே” என்றால் என்ன?

பெயரால் மன்றாடுகிறோம் என்று அர்த்தமாகும்.

13. “ஆமென்” என்பதற்கு அர்த்தமென்ன?

யூத மொழியிலே அப்படியே ஆகக்கடவது என்று அர்த்தம


14.சிலுவை அடையாளத்தை வரைவதெப்படி?

இடது கைகளின் விரல்களை ஒன்றாகச் சேர்த்து மார்பின் மேல் வைத்துக் கொண்டு, வலது கையின் பெருவிரலால் நெற்றியிலும், வாயிலும், மார்பிலும் சிலுவை வரைந்து கொண்டு, கடைசியிலே எலலா  விரல்களையும் நீட்டி ஒன்று சேர்த்து நெற்றியையும், நடு மார்பையும், இடது தோளையும், வலது தோளையும் தொட்டு உடலின் மேல் பெரிய சிலுவை போட்டுக் கொள்ள வேண்டும்.

வலது கை பெருவிரலால் நெற்றியில் சிலுவை அடையாளத்தை வரைந்துகொள்ளும்போது:

“அர்ச்.சிலுவை அடையாளத்தினாலே” என்றும், வாயில்: “எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்” என்றும், மார்பில்: “எங்கள் சர்வேசுரா” என்றும் சொல்லியபின், மற்ற விரல்களை நிட்டி ஒன்று சேர்த்து நெற்றியைத் தொட்டு: “பிதாவுடையவும்” என்றும், மார்பின் அடிபாகத்தைத் தொட்டு: “சுதனுடையவும்” என்றும், இடது தோளைத் தொட்டு: “இஸ்பிரித்து” என்றும், வலது தோளைத் தொட்டு: “சாந்துடையவும்” என்றும் சொல்லி, பிறகு இரண்டு கைகளையும் மார்பின் முன் குவித்து “நாமத்தினாலே,ஆமென்.” என்றும் முடிக்க வேண்டும்.

15.நெற்றியில் ஏன் சிலுவை போட்டுக் கொள்கிறோம்?

(1) வேதத்தைக் குறித்து மனிதருக்கு முன்பாக வெட்கப்படுகிறதில்லையென்று காட்டும்படிக்கும்,

(2) ஆங்காரம்,கோபம், மோகம் முதலியவைகளைப்பற்றிய கெட்ட நினைவுகள் நம் புத்தியில் உண்டாகாமல், சர்வேசுரனைப் பற்றிய நல்ல எண்ணங்கள் நமது புத்தியில் ஏற்படும்படிக்கும் நெற்றியில் சிலுவை வரைந்து கொள்கிறோம்.

16. வாயில் சிலுவை வரைந்துகொள்வானேன்?

(1) வேதத்திற்கு தைரியத்தோடு சாட்சியம் சொல்வேன் என்று காட்டவும்,

(2) வாயில் பொய், புரட்டு, கோள்குண்டணி, துர்ப்பாஷை முதலிய பாவங்களைக் கட்டிக் கொள்ளாமல், ஜெபத்தாலும் யோக்கியமான வார்த்தைகளாலும் சர்வேசுரனைத் தோத்தரிக்கும்படிக்கான ஆசீர்வாதம் நமக்கு உண்டாகும்படிக்கும் வாயில் சிலுவை வரைந்துகொள்கிறோம்

17. மார்பில் ஏன் சிலுவை போட்டுக் கொள்கிறோம்?

(1) மன உறுதியோடு வேதத்தை அனுசரிப்போம் என்று காட்டவும்,

(2) நமது இருதயத்தில் கெட்ட ஆசை, பகை, வைராக்கியம் முதலிய பாவங்கள் உண்டாகாமல், சர்வேசுரனுடைய சிநேகம் நமக்குள் அதிகரிக்கும்படியாகவும் மார்பில் சிலுவை வரைந்துகொள்கிறோம்.

18.கடைசியாய் உடலின் மேல் போடும் பெரிய சிலுவை எதற்கு?

சர்வேசுரனே நமக்குக் கொடுத்த சரீரத்தால் நாம் அவருக்கு விரோதமாய் பாவத்தைக் கட்டிக்கொள்ளாமல், அவருடைய கட்டளைப்படி நடப்பதற்கான சகாயம் நமக்கு உண்டாகும்படி நமது சரீரத்தின் மேல் சிலுவை போட்டுக் கொள்கிறோம்.

19. சிலுவை வரையும்போது நம் எதை ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்?

முன் சொன்னபடி பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்துவாகிய தமதிரித்துவத்தையும், சுதனாகிய சர்வேசுரனுடைய மனித அவதாரத்தையும், மனித இரட்சணியத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

20. தமதிரித்துவப் பரம இரகசியத்தை நாம் ஞாபகப்படுத்துவதெப்படி?

பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்து சாந்துவுடையவும் நாமத்தினாலே என்று சொல்லும்போது தேவசுபாவத்திலே ஒருவராயிருக்கிற சர்வேசுரன் ஆள் வகையிலே மூவராயிருக்கிறாரென்று ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

21. சிலுவையடையாளத்தால் சுதனாகிய சர்வேசுரனுடைய மனித அவதாரத்தையும் மனித இரட்சணியத்தையும் எப்படி ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்?

சிலுவை வரையும்போது சுதனாகிய சர்வேசுரன் சேசுகிறிஸ்துநாதர் மனுஷ அவதாரமெடுத்து நமக்காகச் சிலுவையில் அறையுண்டு மரித்தாரென்று ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

22. சிலுவை வரைந்து கொள்ளும் வழக்கம் எப்போது ஆரம்பமானது?

இவ்வழக்கம் அப்போஸ்தலர்கள் காலத்தில் ஆரம்பமானது. சுவிசேஷகரான அர்ச்.அருளப்பர் சாகிறதற்கு முன் தமது பேரில் சிலுவை வரைந்து கொண்டாரென்று நிசேபோருஸ் என்பவர் எழுதியிருக்கிறார். அப்போஸ்தலரான அர்ச்.சின்னப்பரும் சிலுவை அடையாளத்தால் குருடருக்குப் பார்வை கொடுத்தாரென்று இல்துயின் என்பவர் எழுதிவைத்திருக்கிறார்.

23. பூர்வ கிறீஸ்துவர்கள் சிலுவை போட்டுக் கொண்டார்களோ?

கி.பி. 211ம் வருஷத்தில் இருந்த பேர்பெற்ற சஸ்திரியான தெர்த்துல்லியன் என்பவர்  எழுதிவைத்திருக்கிறதாவது:;நாங்கள் வெளியே போகும் போதும், உள்ளே பிரவேசிக்கும்போதும், யாதொரு காரியத்தைத் தொடங்கும்போதும், எவ்விடத்திலும், எப்பேர்பட்ட சமயத்திலும், நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளுகிறோம்.;

24. இப்போது தேவாராதனை நேரத்திலும் மற்ற சமயங்களிலும் திருச்சபை சிலுவை அடையாளம் போடும் ஆசாரத்தை அனுசரித்து வருகிறதா?

அனுசரித்து வருகிறது. பூசை நேரத்தில் குருவானவர், 50 விசை சிலுவை போடுகிறார். யுரதொன்றை மந்திரிக்கும்போதும் அதன்மேல் சிலுவை அடையாளம் போடுகிறார். தேவத்திரவிய அனுமானங்களை நிறைவேற்றும் போதும் பலதடவை சிலுவை போடுகிறார். உதாரணமாக: ஞானஸ்நானம் கொடுக்கும்போது 14 விசை, அவஸ்தைப்பூசுதலிலே 17 விசை. இன்னும் மற்றுமுள்ள திருச்சபையின் எல்லாப்பரிசுத்த சடங்குகளிலும் குருவானவர் சிலுவை அடையாளத்தை உபயோகித்து வருகிறார்.

25. நமதுபேரில் சிலுவையை அடிக்கடி வரைந்துகொள்வது நல்லதா?

சிலுவை அடிக்கடி பக்தியுடன் நம்மேல் வரைந்துகொள்வது மகா பிரயோசனமான சுகிர்த வழக்கம். ஏனெனில், சிலுவையை வரைவதால் ஆத்துமத்துக்கும் சாPரத்துக்கும் அநேக நன்மைகள் உண்டாகும்.

26. சிலுவை வரைவதால் ஆத்துமத்துக்கு உண்டாகும் நன்மைகள் எவை?

பக்தியோடு சிலுவை வரைந்துகொள்ளுதல் நம் உள்விசுவாசத்தின் வெளி அடையாளம் ஆனதால், நமது விசுவாசத்தைத் தூண்டவும், முகத் தாட்சணியத்தை வெல்லவும், பசாசையும் அதின் தந்திர சோதனைகளையும் துரத்தவும், பாவ சமயங்களை அகற்றவும், சர்வேசுரனிடமிருந்து மற்ற வரப்பிரசாதங்களை அடையவும்  சக்தியுள்ளதாயிருக்கிறது.


சரித்திரம்


அர்ச்.பெரிய அந்தோணியார் மலையில் ஒதுங்கித் தவம் புரிந்துவந்த காலத்தில், பசாசானது பலரூபங்கொண்டு அவரை பயமுறுத்தி உபாதைப்படுத்தி, அவலட்சணமான தந்திர சோதனைகளை அவருக்கு வருவித்தபோதும், அவர் சிலுவை அடையாளத்தால் அவைகளைத் துரத்துவார். “பசாசானது ஜெபத்துக்கும், சசுகிறிஸ்துநாதருக்கும் பயப்படுகிறது0 சிலுவை அடையாளத்தால் மிரண்டோடும்”; என்று இந்த மகாத்துமா, தமது சீஷருக்குச் சொல்லி வருவார்.

27. சிலுவை அடையாளத்தால் சாPரத்துக்கு உண்டாகும் நன்மை என்ன?

விசுவாசத்தோடும் பக்தியோடும் சிலுவை வரைவதால் வியாதிகள் குணப்பட்டன0 பலமுறை சரிர ஆபத்துக்கள் நிக்கப்பட்டன. அர்ச். லவுரெஞ்சியார் ஒரு குருடன்மேல் சிலுவை அடையாளத்தை வரைந்த மாத்திரத்தில் அந்த மனிதனுக்குப் பார்வை உண்டானது. 

அர்ச்.ஆசீர்வாதப்பர் ஒரு மலைக் கெபியில் ஒதுங்கி கடின தபசு செய்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் ஒரு சந்நியாச மடத்தை சந்திக்கப் போனார். அம்மடத்து சிரேஷ்டர் இறந்துபோயிருந்தபடியால் அம்மடத்தார் அவரை சிரேஷ்டராகத் தெரிந்து கொண்டனர். தங்கள் மடத்தின் ஒழுங்குபடி சரியாய் நடக்க இவர்களுக்கு இவர் இடைவிடாமல் புத்தி சொல்லிக் கொண்டு வந்ததைப்பற்றி, அம்மடத்தார் சிலர் சலிப்படைந்து, அவரைக் கொல்ல தீர்மானித்து, அவருடைய பானபாத்திரத்தில் நஞ்சு கலந்து அவருக்குக் கொடுத்தனர். ஆசீர்வாதப்பர் புசித்தாலும் பானம் பண்ணினாலும் சிலுவைப் போட்டுக் கொள்ள, வழக்கப்பட்டிருந்தபடியே, அன்றும் சிலுவை போட்டுக் கொள்ள, நஞ்சிட்ட பாத்திரம் உடைந்து கீழே விழுந்தது. இவ்வற்புதத்தைக் கண்ட அத்துஷ்டர் ஆசீர்வாதப்பருடைய பாதத்தில் விழுந்து தங்களுடைய பாதகத்தை அவருக்குத் தெரியப்படுத்தி பொறுத்தல் கேட்டனர்.

28. சிலுவை வரைவதற்கு திருச்சபை ஏதாவது பலன் அளித்திருக்கிறதா?

அர்ச்.சிலுவை அடையாளத்தை நமது பேரில் பக்தி வணக்கத்துடன் வரைந்துகொள்ளும்போதெல்லாம் ஐம்பதுநாட்பலனும், தீர்த்தத்தோடு வரைந்து சொன்னால் நுரறு நாட்பலனும் நாம் அடைந்து கொள்ளலாம்.

29. சிலுவையானது எப்போதாகிலும் புதுமையாகக் காணப்பட்டதுண்டோ?

சுமார் கி.பி. 303ம் வருஷத்தில் கொன்ஸ்தாந்தின் என்னும் பேரரசன் தன் எதிரிகளுக்கு விரோதமாய் ரோமையில் சண்டை செய்ய போனபோது, ஒரு மத்தியான வேளையில் ஆகாயத்தில் பிரகாசமான ஒரு சிலுவையும், அதின் மத்தியில், “இதனால் நீ வெற்றியடைவாய்” என்னும் வாக்கியமும் எழுதப்பட்ட மேரையாய்க் காணப்பட்டது. அன்று இரவு நித்திரையில் அரசருக்கு நமது திவ்ய கர்த்தர் சிலுவை அடையாளத்துடன் காணப்பட்டு, ஒரு சிலுவைக் கொடியை செய்விக்கவும், மறுநாள் சண்டைக்குப் போகும்போது அதைப் படைக்குமுன் கொண்டு போகவும் கற்பித்தார். விழித்தபின் அரசர் தன் தரிசனையில் கண்டபடி ஒரு சிலுவைக் கொடியைச் செய்வித்துப் போர் பொருதியபோது அதிசயமான ஜெயம் கொண்டார்.

இப்பேர்பட்ட ஜெயம் கிறிஸ்துவர்களுடைய தேவனால் உண்டானதென்று நிச்சயித்து, கிறிஸ்துவர்களுக்கு விரோதமாய் வரையப்பட்ட வேதகலக சட்டத்தை இரத்து செய்து, பேய்க் கோவில்களைத் தகர்த்துச் சத்திய வேத தேவாலயங்களைக் கட்ட கற்பித்ததுடன் சிலகாலத்துக்குப் பின் அரசர் சத்தியவேதத்தில் சேர்ந்தார். † 


30. இனிமேலும் ஆகாயத்தில் சிலுவை காணப்படுமா?

உலக முடிவில் சேசுநாதர்சுவாமி மனிதரை நடுத்தீர்க்க வரும்போது, அவருடைய அடையாளமாகிய திருச்சிலுவை மேகத்தில் காணப்படும் என்று அவரே சொல்லியிருக்கிறார் (மத்:24:30).

31. சிலுவை அடையாளத்தை எந்தச் சமயத்தில் வரையவேண்டும்?

நல்ல கிறிஸ்துவன் நித்திரைக்கு முன்னும் பின்னும், சாப்பிடும் முன்னும் பின்னும், பிரதான வேலை ஆரம்பிக்கும்போதும், ஆபத்து, சோதனை முதலிய சமயங்களிலும் சிலுவை வரையவேண்டும்.

32. இன்னும் வேறு எந்த சமயங்களில் சிலுவை வரையவேண்டும்?

கோவில் மணிச் சத்தம் கேட்கும்போதும், கோவிலிலே பிரவேசிக்கும் போதும், ஜெபத்துக்கு முன்னும் பின்னும், சர ஆபத்து நேரிடும்போதும் சிலுவை போட்டுக் கொள்ள வேண்டும்.

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 2 St. Ambrose Life History in Tamil

 அர்ச். அம்புரோஸ்

(கி.பி.340-398):
திருநாள் டிசம்பர் 7ம் தேதி

அர்ச்.அம்புரோஸ் உரோமாபுரியில் உத்தமமான உயா;ந்த கோத்திரத்துத் தாய் தகப்பனிடத்திலே கி.பி.340ம் வருடம் பிறந்தார்.இவர் பிறந்தபோது அவருடைய வார்த்தைகள் தேனைப் போல மதுரமாயிருக்குமென்பதற்கு அடையாளமாக குழந்தையின் வாயில் தேனீக்கள் கூட்டமாக வந்து மொய்த்தது. இதனாலேயே இவர் அமிர்தநாதர் என்று அழைக்கப்படுகின்றார். அவருடைய தகப்பனார் கல்லிய தேசத்து கவர்னராயிருந்தார்.

சிறுவயது முதல் அவருடைய தாய் அவரை நல்லொழுக்கத்தில் நடத்தி வந்தாள். கன்னியாஸ்திரியாயிருந்த அவருடைய அக்காள் பரிசுத்த கற்பின் மேல் அவருக்கு மிகுந்த பற்றுதலை ஏற்படுத்தினாள். அவர் மிகுந்தபுத்திக் கூர்மையுள்ளவராயிருந்ததினாலே, வேத சாஸ்திரங்களை நன்றாய் படித்து பேச்சுச் சிறப்பிலும்,விவேகத்திலும்சிறந்து விளங்கினார். ஆதலால் சிலகாலம் நிதிபதியாக விளங்கினார். உரோமாபுரி அரசன் அர்ச்.அமிர்தநாதரை அநேகம் நாடுகளின்மேல் கவா;னராக நியமித்து அவரை அங்கேப் போகச் சொன்னான். அவர் போகிறபோது, அரசன் அவரைப் பார்த்து “நீர் அந்த நாடுகளை நடுவனாக நடத்தாமல், மேற்றிராணியாரைப்போல் விசாரியும்” என்று சொல்லி யனுப்பினான். அவர் மிலான் பட்டணத்துக்குப்போய் தகப்பனைப் போலே அந்த ஜனங்களை தயவாய் விசாரித்து நடத்தினதாலே, பிரஜைகள் அவர் பேரிலே மிகுந்த பட்சம் வைத்தார்கள். இந்த சமயத்திலே 374ம் ஆண்டில் பதிதனாயிருந்த மிலான் நகர மேற்றிராணியார் இறந்தபிறகு, அந்தப் பட்டணத்திலே அநேகர் கத்தோலிக்கரும் சிலர் பதிதரு மாயிருந்ததினாலே, கோவிலிலே வேறே மேற்றிராணியாரைத் தெரிந்து கொள்வதிலே தங்களுக்குள்ளே தர்க்கம் பண்ணினர். கலகம் பண்ணத் துவங்கினார்கள். அதனால் அதிகாரியாயிருந்த அமிர்தநாதர் கோவிலுக்குப் போய் அவர்களுக்கு சமாதான நியாயங்களைச் சொல்லிக் காட்டினார். 

அப்பொழுது ஒரு சிறு குழந்தை சத்தமாய் “அம்புரோஸ் தான், நமது மேற்றிராணியார்!” என்று கத்தியது.கோவிலிலேயிருந்தவா;கள் அதைக்கேட்டு, சந்தோஷத்தோடு ஒருமனப்பட்டு அவரை மேற்றிராணியாராகத் தெரிந்து கொண்டார்கள். அர்ச்.அமிர்தநார் அந்தப் பொறுப்பு தனக்கு வராதபடிக்கு அழுதார்0 மன்றாடினார் ஓடியும் போனார். ஆனால் ஒன்றும் பயனில்லாமல் போனது. ஏனென்றால் அந்தப் பட்டணத்தார் அவரைத்தேடிப் பிடித்து அரண்மனைக்குக் கூட்டி வந்து காவல் வைத்ததுமல்லாமல், அமிர்தநாதர் எங்கள் மேற்றிராணியாராயிருக்க வேண்டுமென்று அரசனிடம் மன்றாடும்படி ஆளனுப்பினார்கள். அதற்கு அரசன் சம்மதித்ததினாலே, அமிர்தநாதரும் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. அவர் ஞானஸ்நானத்தினால் அடையும் தேவஇஷ்டபிரசாத அந்தஸ்தை இழக்க பயந்து அதுவரைக்கும் ஞானஸ்நானம் பெறாதிருந்தார். ஆதலால் ஞானஸ்நானம் பெற்று குருப்பட்டம் வாங்கின பிறகு, அவர் தமது 34வது வயதில் மேற்றிராணியார் பட்டம் பெற்றார். பதவிக்கு வந்தவுடனேயே தனக்குண்டான சொத்துக்களை யெல்லாம் கோவிலுக்கும் பிச்சைக்காரருக்கும் கொடுத்தார். எத்தனை அலுவல்களிருந்தாலும் தினசரி திவ்யபலி; பூசையையும், ஞாயிறு பிரசங்கத்தையும் செய்யத்தவற மாட்டார். அவருடைய பிரசங்கத்தினாலே மனந்திரும்பினவர்களுக்குக் கணக்கில்லை. அவா; மகா பரிசுத்தகன்னிமாமரியின் பேரிலேயும், கன்னிமையின் பேரிலேயும் சொன்ன தோத்திரங்களைக் கேட்டு அநேகம் பெண்கள் கன்னியாஸ்திரிகளாய்ப்போனார்கள். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களெல்லாம் ஒருசந்தியாயிருந்து தபசு பண்ணுவார். தியானத்திலே வெகு நேரம் செலவழிப்பார்.

தேவநற்கருணை பேரிலும் தேவமாதா பேரிலும் அவர் வைத்திருச்த விசேஷ பக்தியினாலே வெகு தோத்திரங்களை சொன்னதும் தவிர, அவருண்டாக்கின அநேகம் புத்தகங்கள் வழியாக திருச்சபைக்கு வெகு ஞானநன்மை உண்டாக்கினார். அர்ச்.அமிர்தநாதர் வருங்காரியங்களை முன்னறிவித்தது மல்லாமல அநேகம் புதுமைகளையும் செய்தார். ஆரியப்பதிதரை ஒடுக்குவதில் திருச்சபைக்கு அவா; செய்த நன்மைகள் வாக்குக்கடங்காது. அர்ச்.அகுஸ்தினார்,பதிதத்திலும் ஆசாபாசங்களிலேயும் அகப்பட்டிருந்தபோது அர்ச்.அம்புரோஸ் அவருக்கு புத்தி சொல்லி அவருடைய மனதை சத்திய வேதத்துக்குத் திருப்பி ஞானஸ்நானமும் கொடுத்தார்.

அர்ச்.அகுஸ்தினார் வழியாக திருச்சபைக்குக் கிடைத்த ஞான ஆதாயத்துக்கு அர்ச்.அம்புரோஸே காரணமாயிருந்தார். வேதாக மத்தையும் திருச்சபையின் எழுத்தாளர்களின் நுரல்களையும் படித்து ஆராயத் தொடங்கினார். சிம்பிளியானுஸ் என்னும் குரு இதில் இவருக்கு துணையாக இருந்தார். 381ல் மிலானில் ஒரு சங்கத்தைகூட்டிஅப்பொலினாரிஸ் என்பவருடைய தவறான போதனையைக் கண்டித்தார். ஜஸ்டினா என்ற பேரரசி பதிதர்களுக்கு கோவில் ஒன்றை கொடுத்தததை இவர் அச்சமின்றி தடுத்து நிறுத்தினார். தெயோதோஸ் அரசன் ஒருபட்டணத்திலே நடந்த கலாபனைக்கு தண்டனையாக குற்றமில்லாத ஜனங்களை உயிரச்சேதம் பண்ணினான். அதையறிந்த அர்ச்.அம்புரோஸ் அந்த அக்கிரமத்தைக் கண்டித்து அரசனுக்கு சிட்டெழுதியனுப்பினார்.

அரசன்அப்பொழுது மிலான் நகரத்திலே இருந்தான். சீட்டு வழியாக அவன் தன் அக்கிரமத்தைக் கண்டுபிடித்து பயந்திருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை அர்ச்.அம்புரோஸ் இருந்த கோவிலுக்குவந்தான். கோவிலுக்குள் நுழைகிற சமயத்திலே அர்ச்சியசிஷ்டவர் அவனை உள்ளே வரவேண்டாமென்று தடுத்தார். அரசனிடத்திலே அவர் தாழ்ச்சியோடு பேசினாலும், அவன் பண்ணின நிஷ்டூரத்தை சரியாகச் சொல்லிக் காட்டினார்.

அதற்கு அரசன், “நான் செய்த நிஷ்டூரத்தைக் கண்டுபிடிக்கிறேன், அதை சர்வேசுரன் பொறுப்பாரென்று தாவீது ராஜாவைப் போல் நம்பியிருக்கிறேன்” என்றான். அதற்கு அர்ச்.அம்புரோஸ் அவனைப் பார்த்து, “நிர் பாவம் செய்வதிலே தாவீது ராஜாவைப் பின் சென்றது போலே தபசு செய்வதிலேயும் அவரைப் பின் செல்லும்” என்று சொன்னார். நல்லதென்று சம்மதித்த அரசன் 8 மாதம் கோவிலுக்குப் புறம்பாயிருந்து அரச மகிமையை விட்டு அழுகையோடே தவஞ் செய்தான். அபராதம் திர்ந்த பிறகு கோவிலுக்கு மறுபடி வந்தான். அர்ச்.அம்புரோஸ் மரணபரியந்தம் எண்ணிறந்த புண்ணியங்களையும் பெரும் செயல்களையும் அற்புதங்களையும் செய்தார்.

கடைசியிலே வியாதியினாலே அவர் அவஸ்தையாயிருக்கும்போது சுற்றியிருந்தவர்கள், “தேவாPர் இன்னும்அதிக நாள் பூலோகத்திலேயிருக்க சர்வேசுரனை வேண்டிக்கொள்ளும”; என்றார்கள். அதற்கு அவர், “நாம் உயிரோடிருக்கிறதற்கு வெட்கப்படவும் சாகிறதற்கு பயப்படவும்ில்லை” என்றார். பிற்பாடு திவ்யநற்கருணையை பக்தியோடு வாங்கி தனக்குதரிசனையானதிவ்ய சேசுநாதர் சுவாமியின் திருக்கரத்திலே தனது ஆத்துமத்தை ஒப்புக் கொடுத்து அமிர்தநாதரான அர்ச்.அம்புரோஸ் திவ்ய கர்த்தர் பிறந்த 398ம்வருடம் தபசுகாலத்தின் இறுதிசனிக்கிழமையன்று பாக்கியமாய் மரித்தார். †

அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம் 1 - அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார் St. Alponshus Ligori

 அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம்


மகா பரிசுத்த திவ்ய இரட்சகர்சபையை உண்டாக்கின அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார்


(கி.பி.1696-1787) திருநாள் ஆகஸ்ட் 2ம் தேதி



இத்தாலி நாட்டிலுள்ள நேப்பிள்ஸ் நகரத்தில் அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார் பூர்வீக உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 1696ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் நாள் பிறந்தார். அவருடைய தாய் பக்தியில் அவரை வளர்த்தாள். இளமையிலேயே அர்ச்சிஷ்டதனத்தின் அடையாளக் குறிப்புகள் அவரிடத்தில் காணப்பட்டன. அவர் குழந்தையாயிருக்கும்போது, மகாத்துமாவான ஒரு அர்ச்சிஷ்டவர் அவரை ஆசீர்வதித்துவிட்டு, இவர் 91வயது வரை ஜிவிப்பாரென்றும் மேற்றிராணியாராகி திருச்சபைக்கு மிகப்பெரிய மகிமையாக விளங்குவாரென்றும் திர்க்கதரிசனம் உரைத்தார். சிறுவயதுமுதல் லிகோரியார் தேவஇஷ்டபிரசாதத்தின் ஏவுதலை அனுசரித்து அத்தியந்த பக்தியும் சம்மனசுக்குரிய பரிசுத்ததனமும் தேவமாதாவின் பேரில் மிகுந்த பக்தியும் கொண்டு திகழ்ந்தார். அவர் தன் புண்ணிய நன்மாதிரிகையினால் உத்தம கிறிஸ்துவ ஜீவியத்துக்கு உட்படும்படி தன் நண்பர்களைத் தூண்டுவார். இளைஞரானபோது பக்தியுள்ள சபைகளில் உட்பட்டு நோயாளிகளை மடங்களில் சந்தித்து அவர்களுக்கு ஊழியம் செய்வார்.

தேவாலயங்களில் நடக்கும் திவ்ய பலிபூசை, பிரார்த்தனை முதலிய தேவாராதனை சடங்குகளில் தவறாமல் பங்கேற்பார். வாரந்தோறும் திவ்ய நன்மை உட்கொண்டு அனுதினமும் தேவநற்கருணை சந்திப்பார். பக்திகிருத்தியங்களுடன்கூட கல்விகற்பதிலும் கவனத்துடன் ஈடுபடுவார். மேன்மைமிக்க புத்திகூர்மையும் அபாரமான ஞாபகசக்தியும் கொண்டிருந்ததனால், லிகோரியார், தனது 16வது வயதிலேயே இருவேறு உயர்கல்வி பட்டங்களைப் பெற்றார். பிறகு, தந்தையின் விருப்பப்படி சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரானார். அவருக்கு திருமணம் செய்ய அவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்ததை அறிந்தவுடன் தன் மூத்தமகனுக்குரிய உரிமையையும், தனது வக்கீல் தொழிலையும் துறந்துவிட்டு தேவமாதாவின் தேவாலயத்தை நோக்கிச் சென்றார். அங்கு தேவமாதாவி;ன் பீடத்தில் தன் உயர்குடிமகனுக்குரிய போர்வாளை தொங்கவிட்டார். தேவமாதாவிடம் குருத்துவத்திற்கான தேவஊழியத்திற்காக தன்னையே ஒப்புக்கொடுத்தார். இதனால் தமது குடும்பத்தினரிடமிருந்து வந்த பல இடையூறுகளை லிகோரியார் மிக திடமனதுடன் வெற்றி கொண்டு இறுதியில் குருப்பட்டம் பெற்றார்.

பிறகு, மற்ற சில குருக்களுடன் சேர்ந்து நாட்டுபுறத்திலுள்ள கிராமங்கள் முதலிய சிற்றூர்களிலுள்ள மக்களுக்கு ஞானபிரசங்கங்களை போதித்து ஆங்காங்கே ஆன்ம இரட்சணிய அலுவலை செய்துகொண்டுவந்தார். அதனால் விளைந்த மிகுதியான ஞானநன்மைகளைக் கண்ட லிகோரியார் “மகா பரிசுத்த திவ்ய இரட்சகர் சபை” என்ற குருக்களின் சந்நியாச சபையை ஏற்படுத்தினார். அச்சபை குருக்கள் திவ்ய இரட்சகரின் மேலான புண்ணியங்களை அனுசரித்துக் கொண்டு திவ்ய இரட்சகர் பாவனையாக நாட்டுபுறத்தில் சஞ்சரிக்கும் தரித்திர மக்களுக்கு ஞானபிரசங்கங்கள் நிகழ்த்தவும், ஆத்துமநன்மை விசாரிக்கவும் நியமிக்கப்பட்டனர். துவக்கத்தில் சபையில் சிலர் மட்டுமே இருந்தபோதிலும், அவர்கள் அனைவருக்கும் உத்தம புண்ணிய மாதிரிகையானதால் அவர்களுடைய சபை விரைவிலேயே வளர்ந்து விருத்தியடைந்தது. தன் ஞானபிரசங்கங்களினால் அம்மக்களுக்கு ஏராளமான ஞான நன்மைகள் விளையும்படி லிகோரியார் அயராமல் உழைத்தார். ஆன்மஈடேற்றத்திற்காக ஞான நன்மைகள் பயக்கக்கூடிய ஏராளமான பக்திநறைந்த புத்தகங்களை எழுதினார். 

சகல பதிதங்களிலிருந்தும் அஞ்ஞானத்திலிருந்தும் குறிப்பாக அப்போது தோன்றியிருந்த ஜான்சனிச தப்பறையினின்றும் மக்களைப் பாதுகாக்கும் படியும் அவர்களை உத்தம கத்தோலிக்க புண்ணிய ஜிவியத்திற்கு திருப்புவதற்காகவும் எண்ணற்ற அரிய நுரல்களை எழுதினார்0 ஞானபிரசங்க போதனைகளை செய்தார். மனுக்குலத்தின்மீதான ஆண்டவருடைய அளவற்ற சிநேகத்தை மறைத்து, அவரை நடுத்தீர்ப்பவராக மட்டுமே மக்களிடம் போதித்துவந்த ஜான்சனிச பதிதத்தை அழிப்பதற்காக சேசுவின் திவ்ய திரு இருதயத்தின் மிதான பக்தியை எங்கும் பரப்பினார்.

 “சேசுவின் திவ்ய திரு இருதயம்”, “மகா பரிசுத்த தேவ நற்கருணை” என்ற நுரல்களை எழுதினார். உத்தம கிறிஸ்துவ ஜீவியத்திற்கு எண்ணற்ற பாவிகளை மனந்திருப்பினார். தேவமாதாவின் மிது தான் கொண்டிருந்த பக்திபற்றுதலை வெளிப்படுத்தும்படியும், மக்களிடம் மாதா பக்தியை தூண்டி வளர்ப்பதற்காகவும் “அர்ச்.கன்னிமாமரியின் மகிமைகள்” என்ற உன்னதமான அரிய நுரலை எழுதினார். மேலும், “சேசுகிறிஸ்துநாதரின் பத்தினி”, “சேசுவின் பாடுகளும் மரணமும்” “சேசுவின் மனித அவதாரமும், பிறப்பும்,பாலத்துவமும்” “”நன்மரண ஆயத்தம்” போன்ற எண்ணற்ற உயரிய நுரல்கள் அவரால் எழுதப்பட்டன. தேவமாதாவைக்குறித்து மிக உருக்கமாக பக்தி நேசத்துடன் பிரசங்கங்கள் வைப்பார். தேவமாதாவிடம் அவர் கொண்டிருந்த உச்சிதமான பக்திபற்றுதலினால் லிகோரியார் அதிசயமான தேவவரங்களைப் பெற்றிருந்தார். ஒரு நாள் லிகோரியார் பிரசங்கம் செய்தபோது தேவமாதாவின் சுரூபம் முழுதும் பிரகாசித்தது. அதினி;ன்று புறப்பட்ட சில ஒளிக்கதிர்கள் லிகோரியாரின் முகத்திலேயும் பட்டன. மற்றொருநாள் அவர் பரவசமாகி அநேக அடி உயரத்திற்கு ஆகாயத்தில் நிற்கக் காணப்பட்டார். லிகோரியார் நம் ஆண்டவரின் திவ்ய பாடுகளின் மேல் பக்திகொண்டு தினமும் அவற்றை தியானிப்பார். 

தினமும் சிலுவைப்பாதையை பக்திபற்றுதலுடன் தியானித்து செய்வார். திவ்யநற்கருணை பேழைமுன்பாக ஜெபம் செய்யும்போதும், திவ்யபலிபூசை நிறைவேற்றும்போதும் தேவசிநேக அக்கினி மயமான அவருடைய ஆத்துமம் பக்திசுவாலகருக்குரிய ஞான சுவாலையால் உருகுகிறதுபோல காட்சியளிக்கும். அதிசயமான நடுக்கமுற்றுப் பரவசமாவார். எப்போதும் அதிசயமான சம்மனசுக்குரிய பரிசுத்ததனத்துடன் நடந்து பாவமின்றி இருப்பினும், கடின தபசு செய்வார். ஒருசந்தியாலும், இருப்புச்சங்கிலியாலும் மயிர் ஒட்டியானத்தினாலும் மற்ற தவமுயற்சிகளாலும் தன் சாPரத்தை ஒறுத்தார். இரத்தம் வரும்வரை அதை அடித்துக் கொள்வார். இத்தனைப் புண்ணியங்களால் தமக்குப் பிரியமான தம்முடைய ஊழியனுக்கு, ஆண்டவர், திர்க்கதரிசன வரமும், அற்புதங்களை செய்யும் வரமும், மனிதருடைய இருதய இரகசியங்களை கண்டுபிடிக்கும் வரமும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கிற வரமும் தந்தருளினார். தாழ்ச்சியினால் நிண்டகாலத்திற்கு மேற்றிராணியார் பதவியை விலக்கி வந்தார். இறுதியில் 13ம் சாந்தப்பர் பாப்பரசரின் ஆணைக்குக் கிழ்படிந்து நேப்பிள்ஸ் நகருக்கருகில் இருந்த அர்ச்.கொத்தர் ஆகத்தம்மாள் என்ற நகரத்தின் மேற்றிராணியாரானார்.

தொடர்ந்து மனதரித்திரமும், மட்டசனமும், சாPர ஒறுத்தலும், தன் மட்டில் கண்டிப்பும் அனுசரித்தார். மற்றவரிடம் மிகுந்த தயாளமும் இரக்கமும், விசேஷமாய் ஏழைகள் மட்டில் தர்ம உதாரத்தையும் அனுசரித்தார். ஒருதடவை நேப்பிள்ஸ் நகரமெங்கும் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் உடைமைகளை எல்லாம் விற்று அங்கிருநு;த எல்லா ஏழைகளுக்கும் பங்கிட்டளித்தார். 19 ஆண்டுகளாக மேற்றிராணியாராக அயராமால் உழைத்து தன் மேற்றிராசனத்தையும் பல துறவற சபை மடங்களையும் குருமடங்களையும் சிர்திருத்தினார். லிகோரியார் இவ்வாறு ஒரு நிமிடத்தை முதலாய் வீணாக்காமல எல்லோருக்கும் எங்கும் எப்போதும் அயராமல் நன்மை செய்து வந்தார். தனது குருக்கள்சபையைப் போன்றதொரு சன்னியாச சபையை கன்னியாஸ்திரிகளுக்கும் ஏற்படுத்தினார். தன் ஓய்வு நேரத்தில் லிகோரியார் வேதசாஸ்திர நுரல்களையும் அநேக பக்திக்குரிய நுரல்களையும் எழுதினார். வயதுமூப்பின் காரணமாவும் தனக்கிருந்த நோயின் காரணத்தினாலேயும் தன் மேற்றிராசனத்தை விட்டு விட்டு தன் சபையினருடன் தங்குவதற்கு பாப்பானவரிடம் அனுமதி கோரினார்.

கடைசியில் 6ம் பத்திநாதர் பாப்பரசருடைய அனுமதியின்பேரில் நொசெரா என்ற ஊரில் தமது சபை மடத்தில் வந்து சேர்ந்தார். அங்கு புத்தி தெளிவுடனும் திடத்துடனும் ஞானதியான பிரசங்கங்கள் செய்தார். குருத்துவத்துக்கரிய திருப்பணிகள் செய்துவந்தார். லிகோரியார் வயதுமுதிர்ந்த காலத்தில் ஒரு நாள் அவருடைய மடத்தின் அருகில் இருந்த வெசுவியஸ் எரிமலை திடீரென்று நெருப்பைக் கக்க துவங்கியது. இதைக்கண்ட மற்ற சந்நியாசிகள் அவரிடம் கூறியதும், அவர் உடனே வானளாவி நெருப்புடன் வந்த கரும்புகையைப் பார்த்தார். உடனே, அஞ்சி, “சேசுவே” என்று மூன்று முறை கூறினார். பிறகு, அந்த எரிமலையை நோக்கி மிகப்பெரிய சிலுவை அடையாளம் வரைந்தார். என்ன அதிசயம். உடனே அந்த மலை நெருப்பைக் கக்குவதை நிறுத்திற்று. இறுதியில் நோயினால் ஏற்பட்ட தளர்வினாலும் 91 வயது ஆனதாலும் வெகுவாய் சோர்ந்து 1787ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாளன்று பாக்கியமான மரணமடைந்து பேரின்ப மோட்ச இராஜ்யத்திலே சேர்ந்தார்.

பாப்பரசர் 16ம் கிரகோரியார் இவருக்கு 1839ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதியில் அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

TAMIL CATHOLIC Audio BOOKS

 TAMIL CATHOLIC Audio BOOKS


அர்ச். தேவமாதாவின் வணக்க மாதம் 

 
 =====================================
 அன்பின் அரசர்  
 
King_of_Love என்ற ஆங்கில நுலின் தமிழாக்கம்.
 
சங்கைக்குரிய மத்தேயோ க்ராலி சுவாமியவர்களின் 
பிரசங்கங்களின் தொகுப்பு.
 
 
  பாகம் 3   

          3.10

          3.9

          3.8

          3.7

          3.6 

          3.5

          3.4

          3.3 

          3.2 

          3.1 

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 7:

 அர்ச்.பெர்னார்டின் சபையினரை சந்தித்தல்

ரோமாபுரியில் சிலவாரங்கள் தங்கியபிறகு, 1205ம் ஆண்டு மார்ச்சு மாதம், வந்.டீகோ ஆண்டகையும் அர்ச்.சாமிநாதரும் பிரான்சு நாட்டிற்கு சென்றனர். அங்கு அர்ச்.பெர்னார்ட் ஏற்படுத்திய சிஸ்டர்ஷியன் துறவற மடமான சிட்யோக்ஸ் மடத்திற்கு சென்றனர். அங்கு தபசுகாலத்தின் பெரிய வார திருச்சடங்குகளில் பங்கேற்றனர். அத்துறவற சபையினரின் ஒழுங்குகள் மற்றும் பரிசுத்த துறவற ஜீவியமானது வந்.டீகோ ஆண்டகையை மிகவும் ஈர்த்தது. அவர் அச்சபையில் தானும் உட்பட மிகவும் ஆசித்தார். அத்துறவறசபை ஒழுங்குகளை நன்கு அறிந்துகொள்ளும் பொருட்டும் அச்சபையை தனது மேற்றிராசனத்தில் நிறுவுவதற்காகவும் ஓஸ்மா மேற்றிராசனத்திற்கு தன்னுடன் அச்சபைத் துறவிகள் சிலரையும் அழைத்துச் செல்லத் திட்டமிட்டார்.

அதன்பிறகு, அங்கிருந்து மோன்ட்பெல்லியர் நகருக்கு அத்துறவியர் சிலருடன் இருவரும் சென்றனர். அங்கிருந்த அச்சபைமடத்தில் தான், பாப்பரசரால் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவரும் சபையின் அதிபருமான சங்.ஆர்னால்ட் சுவாமியாரும் மற்றும் மற்ற இரு உறுப்பினர்களான சங்.ருடால்ஃப் சங்.பீட்டர் என்ற இரு துறவியரும் இருந்தனர். அந்த மடாதிபதியான சங்.ஆர்னால்ட் சுவாமியார் வந்.டீகோ ஆண்டகையிடம், “பரிசுத்த தந்தை பாப்பரசர் மட்டும் இம்மக்களை மனந்திருப்பும் அலுவலை எங்களுக்குக் கட்டளையிட்டிராவிட்டால், நாங்கள் உடனே சிட்யோக்ஸ் மடத்திற்கு திரும்பி சென்றிருப்போம். இதுபோன்ற இருதயத்தைக் கசக்கிப் பிழியும் அலுவலை இதுவரை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று கூறினார். வந்.டீகோ ஆண்டகையும் அர்ச்.சாமிநாதரும் அத்துறவியர் ஆல்பிஜென்சிய பதிதத்தை ஒழிக்கும் அலுவலில் உற்சாகமிழந்ததற்கான காரணத்தை உணர்ந்தனர். 50 வருடங்களுக்கு முன்பு தான் அச்சபையின் நிறுவனரும் அத்துறவற சபைக்கு மாபெரும் ஒளியாகவும் திகழ்ந்த அர்ச்.பெர்னார்ட் இதுபோன்றகாரணத்தினாலே மனமுடைந்து போனதை அவருடைய சரித்திரத்தில் பார்க்கிறோம். 

காலம் இன்னும் மாறவில்லை. அப்போது கிறீஸ்துவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து மோன்பெல்லியர் நகரில் ஒரு கூட்டத்தை நடத்தினர். அதில் பாப்பரசரால் ஏற்படுத்தப்பட்டதுறவியருடைய தூதுக்குழுவினர், ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் அவற்றின் தோல்விக்கான காரணங்களைப்பற்றியும் தர்க்கித்தனர். அச்சமயம் அந்நகருக்கு புதிதாக வந்திருக்கும் வந்.டீகோ ஆண்டகை மற்றும் அர்ச்.சாமிநாதரைப் பற்றிக் கேள்விபட்ட கூட்டத்தினர், அவர்கள் இதற்கு முன்பு ஒரு சமயம் அங்கு வந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகளையும் அறிந்திருந்ததால் (அத்தியாயம் 4iபார்க்கவும்) அவர்களையும் தங்களுடைய கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தனர். 

அதனை ஏற்று இருவரும் கூட்டத்திற்கு வந்தனர். இதுவரை ஆல்பிஜென்சிய பதிதர்கள் ஏற்படுத்திய நாசகரமான சீரழிவுகள், அப்பதிதத்தை அழிப்பதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள், ஏமாற்றங்கள் தோல்விகள் பற்றியெல்லாம் மிக விரிவாக இவ்விருவருக்கும் எடுத்துரைக்கப்பட்டன. உத்தம கத்தோலிக்கு வேத விசுவாசம் தனிப்பட்ட மனிதரின் துர்மாதிரிகையையோ அல்லது நன்மாதிரிகையையோ மட்டும் சார்ந்திருக்கவில்லை. மாறாக திருச்சபையால் வெளிப்படுத்தப்பட்ட தவறா வரம்பெற்ற சர்வேசுரனுடைய உன்னத வார்த்தையை மட்டும் தான் சார்ந்திருக்கின்றது. வந்.டீகோ ஆண்டகை பதிதர்களை முறியடிக்க முற்பட்ட துறவியரின் ஜீவியமுறையைப்பற்றியும் பதிதர்களின் ஜீவிய முறையைப் பற்றியும் விசேஷமாக விசாரிக்கலானார். 

அவர் உடனே கூட்டத்தினரிடம், “கத்தோலிக்கு வேதபோதகத்தில் ஈடுபட்டிருந்த துறவியா;, சுவிசேஷத்தில் கூறப்பட்ட தரித்திரத்தை அணிந்து கொள்ளாததால், ஆன்ம இரட்சணிய அலுவலுக்கு அதுவே மாபெரும் தடையாக இருந்தது” என்று கூறினார். முத்.ஜோர்டன் சகோதரர் இதைப்பற்றி தன் அர்ச்.சாமிநாதசபை வரலாற்றின் குறிப்பேட்டில், “ வந்.டீகோ ஆண்டகை அக்கூட்டத்தினரிடம், “பதிதர்கள் தங்களுடைய கவர்ச்சியான போதகங்களையும், வெளியரங்கத்தில் மாபெரும் பரிசுத்தமான தோற்றத்தையும் கொண்டு எளிய மனிதரையும் வசிகரித்தனர். ஆனால் நமது கத்தோலிக்க வேதபோதக துறவியர் மாபெரும் பரிசாரகக் கூட்டத்தினருடனும் பல குதிரைவிரர்கள் புடைசுழ்ந்துநிற்கஆடம்பரமான ஆடைகளுடன் அங்கு போதித்து வந்துள்ளனர். எனவே சகோதரரே! இவ்வாறு நிங்கள் செயல்படுவது நன்றல்ல. அப்பதிதர்கள் எளிய ஆத்துமங்களை தரித்திரமும் தபசும் நிறைந்த வெளித்தோற்றத்துடன் தங்கள் பக்கம் இழுக்கின்றனர். அதற்கு மாறான ஆடம்பரமான தோற்றத்தில் இருக்கும் நிங்கள் அவர்களுக்கு எந்த ஞான உபதேசத்தையும் பயனளிக்கும் விதத்தில் போதிக்கமுடியாது. அவர்கள் அதனால் இடறல்பட்டு அழிந்து போவார்கள்.  ஆனால், உங்களால் அவர்களுடைய இருதயங்களைத் தொட முடியாது” என்று கூறினார்” என்று குறிப்பிடுகின்றார். 

வந்.டீகோ ஆண்டகையின் இவ்வார்த்தைகள் அக்கூட்டத்தினரை ஓரளவிற்கு தேற்றின. ஆனால் அத்தகைய கடினமான ஆலோசனைகளைப் பின்பற்ற யாருக்கும் துணிவு வரவில்லை. அக்கூட்டத்தினர், உடனே அத்தகைய தவக்கோலத்துடன் தங்களை வழிநடத்துபவர் யாரும் இல்லையே என்று உணர்ந்தனர்.“மிக அருமை ஆண்டவரே! நாங்கள் என்ன செய்ய விரும்புகிறிர்கள்?” என்று ஆண்டகையிடம் கேட்டனர். ஆண்டவரின் இஸ்பிரீத்துவானவர்  தன் மேல் இறங்கியவராக, வந்.ஆண்டகை “இப்பொழுது நான் செய்வதைச் செய்யுங்கள்” என்றார். பிறகு, தன் பரிசாரகர் அனைவரையும் ஓஸ்மா மேற்றிராசனத்திற்கு அனுப்பிவிட்டார்.

அர்ச்.சாமிநாதரும்,சில திருச்சபை அதிகாரிகளும் மட்டுமே அவருடன் இருந்தனர். வேதசத்தியங்களைக் கொண்டு பதிதர்களிடம் வாதிக்கும்படியாக வேத புத்தகங்களையும், கட்டளை ஜெபம், தேவசங்கீத பாடல்களை ஜெபிப்பதற்கு தேவையான ஜெபபுத்தகங்களை மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்டனர். அக்கூட்டத்தினர் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்கான தங்களுடைய  நன்மாதிரிகையுள்ள தலைவராக, வந்.டீகோ ஆண்டகையையே, ஒருமுகமாக பாப்பரசருடைய அனுமதியுடன் தேர்ந்தெடுத்தனர். † (தொடரும்)


அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6


செவ்வாய், 21 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

 

பாப்பரசர் 3ம் இன்னசென்ட்டை சந்திக்கின்றார்



1204ம் ஆண்டில் அர்ச்.சாமிநாதருடன் ரோமாபுரியை வந்தடைந்த வந்.டீகோ ஆண்டகை, கிழக்கத்திய நாடான ஹங்கேரி மற்றும் அதைச் சுற்றியிருந்த கிறிஸ்துவ நாடுகளை அடிக்கடி கொள்ளையடித்து சீரழித்து வந்த டார்டார் கூமன் இனத்தவரை மனந்திருப்புவதற்காக அங்கு சென்று வேதபோதக அலுவலை மேற் கொள்வதற்காகவும் அவ்வுன்னத அப்போஸ்தலிக்க அலுவலில் வேதசாட்சிய முடிபெறுவதற்கான தன் ஆன்ம இரட்சணிய ஆவலின் பொருட்டு தன்னை ஓஸ்மா நகர மேற்றிராணித்துவ அந்தஸ்திலிருந்து விடுவிக்கும் படியாக பாப்பரசர் 3ம் இன்னசென்ட்டிடம் (Pope Innocent III)அனுமதி கோரினார். ஆனால் பாப்பரசர் இவ்விண்ணப்பத்தை நிராகரித்தார். பாப்பரசர் தான் பதவியேற்றதிலிருந்து கடந்த 6 வருடங்களாக திருச்சபைக்கு பெரும் திங்கு விளைவித்து வந்த ஆல்பிஜென்சிய பதிதத்தை பிரான்சின் தெற்கு பகுதியிலிருந்து ஒழித்து அகற்றுவதற்காக பாப்பரசருடைய குழு (Commision) ஒன்றை ஏற்படுத்தினார். அர்ச்.பெர்னார்ட் ஏற்படுத்தியிருந்த சிஸ்டர்ஷியன் சபையின் அதிபரான சங்.ஆர்னால்ட் சுவாமியாரும் சங்.ருடால்ஃப், சங்.பீட்டர் என்ற அச்சபையின் இருகுருக்களும் மற்றும் அச்சபையைச் சேர்ந்த சில மடத்து அதிபர்களும் அக்குழுவில் இருந்தனர். அவர்கள் பிரான்சு நாட்டின் தெற்கு பகுதிக்குச் சென்று அங்கு நுற்றுக்கணக்கான ஞானபிரசங்கங்களை இதுவரை நிகழ்த்தியுள்ளனர். 

ஆனால், அதனால் அவர்கள் வெகு சொற்ப பலனையே கண்டனர். இப்பதிதத்தை ஒடுக்குவது அவர்களுக்கு மிகக்கடினமாக இருந்தது. ஏனெனில் அப்பகுதியின்பங்குகுருக்களும் மேற்றிராணிமார்களும் மிதமிஞ்சிய உலகப்பற்றுமிக்கவர்களாக ஆடம்பரமாக ஜீவித்தனர். தங்கள் பொறுப்பிலுள்ள விசுவாசிகளின் ஞானஜீவியத்தைப்பற்றி யாதொரு கவலையுமின்றி இருந்தனர். தூலூஸ் நகரத்தின் சிற்றரசன் ரேமண்ட் தன் செல்வாக்கைக் கொண்டு ஆல்பிஜென்சிய பதிதத்தின் வல்லமைவாய்ந்த பாதுகாவலனாக திகழ்ந்தான். பாப்பரசர் 3ம் இன்னசென்ட இந்த சு+ழலைப் பற்றி, “இப்பகுதியில் ஞானமேய்ப்பர்களான பங்கு குருக்கள் சம்பளத்திற்கு மட்டும் பணிபுரியும் கூலிக்காரர்களாக செயல்பட்டனர். 

அவர்கள் தங்களுடைய மந்தைகளுக்கு ஞானஉணவு அளிக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கள் வயிற்றை நிரப்புவதிலேயே கருத்தாயிருந்தனர். ஓநாய்கள் உள்ளே புகுந்தன. சர்வேசுரனுடைய இல்லத்தின் எதிரிகளை எதிர்த்து நிற்கும் தடைச்சுவராக இந்த ஞான மேய்ப்பர்கள் செயல்படாமல் அவர்களை உள்ளே நுழைய விட்டுவிட்டனர்” என்று குறிப்பிடுகின்றார். திருச்சபையின் ஞான மேய்ப்பர்களின் இத்தகைய துர்மாதிரிகையான ஜீவியமே ஆல்பிஜென்சிய பதிதத்தை எளிதாக பரப்புவதற்கான ஏற்புடைய சாதனமாக இருந்ததாக அப்பதிததர்கள் பாப்பரசரின் குழுவினரான அத்துறவியரிடம் வெளிப்படுத்தினர். “அவர்களுடைய கனிகளைக் கொண்டே அவர்களை அறிந்துகொள்ளுங்கள்” என்ற ஆண்டவருடைய திவ்ய வார்த்தைகளையே மேற்கோளாகக் கூறி ஞானமேய்ப்பர்களின் பொறுப்பற்ற உலகப்பற்றுள்ள ஜீவியத்தை அவர்கள் சுட்டிக்காட்டலாயினர். 

இதைக்குறித்து பெரிதும் கவலையும் துயரமும் அடைந்தவராக, பாப்பரசர் வந்.டீகோ ஆண்டகையை நோக்கி, “என் மகனே! உமது அலுவல் மேற்கில் உள்ளது. (வந்.டீகோ ஆண்டகை பாப்பரசரிடம் விண்ணப்பித்த டார்டார் இனத்தவரை மனந்திருப்பும் வேதபோதக அலுவல் கிழக்கில் இருந்தது). உடனே அங்கு திரும்பிச் செல்லுங்கள். பல்லாயிரக்கணக்கான மக்களின் இரட்சணியம் ஆபத்தில் உள்ளது” என்றார். மேலும் பாப்பரசர்;, “சில வருடங்களுக்கு முன்பு பிரான்சின் தெற்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்காக சிஸ்டர்ஷியன் துறவியர் சென்றனர். அங்கு அவர்கள் ஆற்றிவரும் ஞானபிரசங்கங்கள் மற்றும் வேதபோதக அலுவல்கள் அவர்களுக்கு இதுவரை சொற்ப வெற்றியை மட்டுமே பெற்றுத்தந்துள்ளன. இதனால் அத்துறவியர் மிகவும் உற்சாகமிழந்துள்ளனர். நீங்கள் தான் அவர்களுக்கு உதவ முயலவேண்டும்” என்றார்.

பரிசுத்த கீழ்படிதல் சர்வேசுரனுக்கு மிகஉகந்த பலியாகும் என்று நன்கறிந்த வந்.டீகோ ஆண்டகை உடனே பாப்பரசரிடம், “பரிசுத்த தந்தையே! நல்லது. அத்துறவிகளுக்கு உதவ முற்படுவேன்!” என்றார். பிறகு பாப்பரசர் தன் கவலையிலிருந்து மிண்டவராக, அருகிலிருந்த அர்ச்.சாமிநாதரிடம், “ என் மகனே! நிங்களும் இவருடன் சேர்ந்து அத்துறவிகளுக்கு உதவிடுங்கள்” என்றார். “ஆமாம். பரிசுத்த தந்தையே! தாங்கள் அதை விரும்புவீர்களானால், நானும் அவர்களுக்கு உதவிடுவேன்” என்றார் அர்ச்.சாமிநாதர்.

(தொடரும்) †



அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 5







Please Join our Telegram Channel

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 5

 -ப்ளாஞ்ச் அரசியை சந்திக்கிறார்


முதன் முதலாக ஒரு ஆல்பிஜென்சிய பதிதனை மனந்திருப்புவதில் அடைந்த வெற்றியைக் குறித்து அர்ச்.சாமிநாதரின் இருதயம் விவரிக்கமுடியாத நன்றியினாலும் உறுதியான திர்மானத்தினாலும் நிறைந்திருந்தது. நம் சத்திய வேத விசுவாசத்தை பிரசங்கிப்பதையே வேதபோதக அலுவலாகக் கொண்ட ஒரு சந்நியாச சபையை நிறுவுவதற்கான திர்மானம் அவரிடம் ஏற்பட்டது. வந்.டீகோ ஆண்டகையும் அர்ச்.சாமிநாதரும் காஸ்டிலின் அரசனுடைய தூதுவர்களாக பிரான்சு நாட்டின் அரசனையும் காணச்சென்றனர். அப்போது 8ம் லூயிஸ் அரசன் அந்நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய மனைவி ப்ளாஞ்ச் அம்மாள் ஒரு பக்திமிகுந்த நல்ல கத்தோலிக்க பெண்மணி. ப்ளாஞ்ச் அரசிக்குக் குழந்தை இல்லாததால் மிக துயரத்தில் இருந்தாள்.

அதைக்கண்ட அர்ச்.சாமிநாதர் அவள் மேல் இரங்கி, அவளிடம் ஜெபமாலையைப் பற்றிக் கூறினார். அவ்வுன்னத ஜெபமாலையை தினமும் செய்து வரும்படி அவளுக்கு அறிவுரை கூறினார். அர்ச்சிஷ்டவருடைய புத்திமதியை, ப்ளாஞ்ச் அரசி உடனே முழுமனதுடன் கடைபிடித்து தினமும் ஜெபமாலையை பக்தியுடன் ஜெபித்து வந்தாள். ஜெபமாலை பக்தியை தன் நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் பரப்பினாள். குழந்தை வரத்திற்காக ஜெபமாலையில் தனக்காக வேண்டிக் கொள்ளுமாறு தன் நாட்டு பிரஜைகளிடம் விண்ணப்பித்தாள். அவர்களும் தன்னுடன் சேர்ந்து ஜெபமாலை செய்யும்படி ஏற்பாடு செய்தாள். பிரான்சு நாட்டு அரசனும், அரசியும், அந்நாட்டு மக்கள் அனைவரும் இவ்வாறு சேர்ந்து ஜெபமாலை ஜெபித்ததின் விளைவாக அந்த அரசதம்பதியருக்குப் பிறந்தவர்தான் மாபெரும் அர்ச்சிஷ்டவரான அர்ச்.லூயிஸ் அரசர். இவர் 9ம் லூயிஸ் அரசராக பிரான்சை ஆண்டார். 1215ம் ஆண்டு பிறந்தார். ப்ளாஞ்ச் அம்மாள் தன் குழந்தைக்கு உத்தம கத்தோலிக்க வேதத்தின் ஞானஉபதேசத்தைக் கற்பித்து வந்தாள்0 தன் மகன் லூயிஸ் ஒரு பட்சமுள்ள, பக்தியுள்ள அரசனாக நீதியுடன் பிரான்சை ஆளவேண்டுமென்று ஆசித்தாள். 

அவள் தன் மகனிடம், “மகனே! பாவமே உலகத்தில் மாபெரும் திமை என்பதை ஒருபோதும் மறவாதே! நான் உன்னை நேசிப்பது போல எந்தத் தாயும் தன் மகனை நேசித்ததில்லை. என்றாலும் நீ ஒரு சாவான பாவம் செய்து நம் நேச ஆண்டவரை மனநோகச் செய்வதை விட நீ சாவதைப் பார்க்க ஆசிப்பேன்” என்று அடிக்கடி கூறுவாள். இவர் தனது 12ம் வயதிலேயே, தன் தந்தையான 8ம் லூயிஸ் இறந்ததால், பிரான்சின் அரசரானார். அதாவது 1227ம் ஆண்டு முதல் 1270ம் ஆண்டு வரை உத்தமமான விதத்தில் மெய்யான கத்தோலிக்க அரசராக பிரான்சை ஆண்டு வந்தார். தினமும் காலையில் திவ்யபலிபூசையை பக்தியுடன் கண்டு தன் நாட்டிற்காக ஒப்புக் கொடுப்பார். அதன் பிறகே, தன் அரச அலுவல்களைக் கவனிப்பார். விசுவாச பிரமாணத்தில் “வார்த்தையானவர் மாமிசமானார்”என்று கூறும்போதும் ஆண்டவரின் திவ்ய பாடுகளில் “ஆண்டவர் மரித்தார்” என்ற சுவிசேஷம் வாசிக்கப்படும்போதும் முழந்தாளிடும் வழக்கத்தை துவக்கியவர் இவரே.

இவர் தன் பிறந்த நாளைக் கொண்டாட மாட்டார். தான் ஞானஸ்நானம் பெற்ற நாளையே ஆடம்பரமாகக் கொண்டாடுவார். தினமும் 100 ஏழைகளுக்கு உணவைஅளிப்பார். திமைகளையும் பாவத்தையும் அகற்றி பிரான்சு நாட்டை நல்லொழுக்கமுள்ள கத்தோலிக்க நாடாக மாற்றுவதில் அரும்பாடு பட்டார்.தேவதூஷணமாக பேசுபவர்களுக்கும் தியவார்த்தைகளைப் பேசுபவர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனைகளை விதிக்கும் சட்டத்தை ஏற்படுத்தினார். இவ்வாறு இவருடைய காலம் கத்தோலிக்க நாடான பிரான்சின் பொற்காலம் என்று அழைக்கப் படுகின்றது.

இவ்விருபெரும் அர்ச்சிஷ்டவர்களையும் இணைத்த இந்நிகழ்வை எப்போதும் நினைத்து மகிழும் அர்ச்.சாமிநாதர் சபையினர் அர்ச்.லூயிஸ் அரசரை “மகா பரிசுத்த ஜெபமாலையின் குழந்தை” என்று அழைக்கின்றனர். அடுத்த கோடைகாலத்தில் காஸ்டிலின் இளவரசனுடன் டென்மார்க்நாட்டின் இளவரசியின் திருமணமானது நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் டென்மார்க் நாட்டின் இளவரசி திடீரென்று இறந்து போகவே வந். டீகோ ஆண்டகை அரசனுடைய தூதுக்குழுவிலிருந்து விடுபட்டவராக அப்போதைய மூன்றாம் இன்னசன்ட் பாப்பரசரை சந்திப்பதற்காக அர்ச்.சாமிநாதருடன் ரோமாபுரிக்கு சென்றார். † (தொடரும


அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4