Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

July 27 – St. Pantaleon, அர்ச். பந்தலேயோன்

 

ஜூலை2️7ம்தேதி

வேதசாட்சியான அர்ச். பந்தலேயோன் திருநாள்.



இவர் வேதசாட்சியாக கிபி 305ம் ஆண்டில் மரித்தார். இவர், நிக்கோமேதியாவைச் சேர்ந்த யுஸ்டோர்ஜியுஸ் என்கிற  ஒரு அஞ்ஞான பணக்காரரின் மகன். இவர், இவருடைய கிறீஸ்துவ தாயாரான யூபுலாவிடமிருந்து ஞான உபதேசத்தைக் கற்றுக்கொண்டார். பின்னர், இவர் கிறீஸ்துவ வேதத்தை அனுசரிப்பதை விட்டு விட்டார்! மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரானார். சக்கரவர்த்தி மாக்ஸிமியானுசி னுடைய குடும்ப மருத்துவரானார்; சங். ஹெர்மோலாவுஸ் என்கிற குருவானவரால், இவர் மனந்திரும்பி, மறுபடியும் கிறீஸ்துவ வேதத்தில் சேர்ந்து, வேதக்கடமைகளை அனுசரிக்கலானார்!

இவருடைய தந்தை இறந்தபிறகு, அவருடைய திரளான சொத்துக்கள், இவருக்குக் கிடைத்தன! உரோமை சாம்ராஜ்ஜியத்தின்  கீழை நாடுகளின் சக்கரவர்த்தியான தியோக்ளேஷியனுடைய காலத்தில், கிறீஸ்துவர்களுக்கு எதிரான வேதகலாபனை ஏற்பட்ட சமயத்தில், இவர் பேரில் காய்மகாரம் கொண்ட சக அலுவலர்கள், சக்கரவர்த்தி மாக்ஸிமியானுசிடம் இவர் ஒரு கிறீஸ்துவர் என்று காட்டிக்கொடுத்தனர். மாக்ஸிமியானுஸ், இவரைக் காப்பாற்ற விரும்பி, கிறீஸ்துவ வேதத்தை மறுதலித்து விடும்படி கூறினான்.

ஆனால், பந்தலேயோன், பகிரங்கமாக சக்கரவர்த்தியிடம், தனது கிறீஸ்துவ வேத விசுவாசத்தை உச்சாரணம் செய்தார்! ஆண்டவர் தான் உண்மையான சர்வேசுரன் என்பதை நிரூபிப்பதற்காக, நடக்கக் கூடாமலிருந்த ஒரு பக்கவாத நோயாளியை புதுமையாக நடக்கச் செய்தார்! இவர் இந்த புதுமையைச் செய்தபோதிலும், இவர் கிறீஸ்துவ வேதத்தில் உறுதியாக நிலைத்திருந்ததைக் கண்ட சக்கரவர்த்தி, அந்த புதுமை ஒரு மாய வித்தை என்று கூறி, இவருக்கு மரண தண்டனை விதித்தான்.

                பந்தலேயோனின் சரீரம் முதலில் நெருப்புப் பந்தங்களால் சுட்டெரிக்கப்பட்டது!அச்சமயம், நமதாண்டவர், சங். ஹெர்மோலாவுஸ் சுவாமியாரின் உருவத்தில் தோன்றி, இவருடைய சரீரத்தில் ஏற்பட்டிருந்த தீக்காயங்களை குணப்படுத்தி, இவரை திடப்படுத் தினார்! தீப்பந்தங்கள் இதன்பின் அணைக்கப்பட்டன! பிறகு, காய்ச்சப்பட்ட ஈயம் இருந்த ஒரு கொப்பறையினுள் இவரைத் தூக்கிப் போட்டனர்! அச்சமயம், மறுபடியும், நமதாண்டவர், சங். ஹெர்மோலாவுஸ் சுவாமியாரின் உருவத்தில் இவருடன் கூட கொப்பறையினுள் இறங்கினார்! அடியில் மூட்டப்பட்டிருந்த நெருப்பு அவிந்துபோனது! உள்ளேயிருந்த காய்ச்சப்பட்டிருந்த ஈயம் குளிர்ந்து போனது! பின், இவரை, ஒரு பெரிய கல்லைக் கட்டி, கடலில் எறிந்தனர்! ஆனால், அந்த கல் கடலில் மூழ்காமல் மிதந்தது!  அதன்பின், காட்டு மிருகங்கள் மத்தியில் இவரை விட்டனர்.  எல்லா கொடிய மிருகங்களும், இவர்பேரில் மயங்கி, இவருடைய பாதத்தண்டையில் உட்கார்ந்து கொண்டன!  இவர் அந்த மிருகங்களை ஆசீர்வதித்தபிறகே, அவை, இவரை விட்டுச் சென்றன!               

ஒரு பெரிய சக்கரத்தில் இவர் கயிறுகளால் பிணைக்கப்பட்டுக் கட்டப்பட்டார். ஆனால், கயிறுகள் அறுந்துபோயின! சக்கரம் உடைந்துபோனது! இவரை இறுதியாக தலையை, ஒரு வாளால் வெட்டிக்கொல்ல முயற்சித்தபோது, அந்த வாள் வளைந்துபோனது! இதைக் கண்ட கொலைஞர்கள் மனந்திரும்பி கிறீஸ்துவர்களாயினர்!  தன்னைக் கொல்ல வந்த கொலைஞர்களை மன்னிக்கும்படி, இவர் பரலோகத்தை நோக்கி ஜெபித்தார்! சர்வேசுரனிடம் அதற்காகக் கெஞ்சி மன்றாடினார்! இதனாலேயே இவர்சகல இரக்கத்தையுடையவர்என்கிற அர்த்தமுள்ளபந்தேலேயோன்பெயரினால் அழைக்கப் படுகிறார்! பின்னர், தனக்கு மகா பாக்கியமான வேதசாட்சிய மரணம் கிடைக்கும்படியாக ஆண்டவரிடம் கெஞ்சி மன்றாடினார்! அதன் பின்னரே, இவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டார்! மகிமையான வேத சாட்சிய மரணத்தினுடைய கிரீடத்தைப் பெறும் பாக்கியத்தை அடைந்தார்! 

கீழை நாடுகளில், அர்ச். பந்தலேயோன், மகா பெரிய வேதசாட்சியாகவும், புதுமை செய்கிறவராகவும் வணங்கப்படுகிறார்! மத்திய நூற்றாண்டுகளில், மருத்துவர்களும் தாதியர்களும் இவரைப் பாதுகாவலராகக் கொண்டு இவர் மீது விசேஷ பக்தி பற்றுதல் கொண்டிருந்தனர்! மேலும்,திருச்சபையின் உதவியாளர்களான பதினான்கு வேதசாட்சிகளில் இவரும் ஒருவராயிருந்தார்! ஆதிக்காலத்திலிருந்தே, இவருடைய பரிசுத்த இரத்தம் அடங்கிய ஒரு சிறிய குப்பி, கான்ஸ்டான்டிநோபிளிலுள்ள ஒரு தேவாலயத்தில், ஒரு அருளிக்கப்பேழையாக பூஜிதமாகக் காப்பாற்றப்பட்டு, வணங்கப்பட்டு வந்தது!

அர்ச். பந்தலேயோன் திருநாள் அன்று, வருடந்தோறும், திடப்பொருளாக உறைந்து போயிருந்த இரத்தம், புதுமையாக, திரவ நிலையை அடைந்து, நுரையுடன் காணப்படும்! இவருடைய மற்ற பரிசுத்த அருளிக்கங்கள் பாரீஸிலுள்ள அர்ச். டென்னிஸ் தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன! இவருடைய பரிசுத்தத் தலை, லியோன்ஸ் நகரில் பூஜிதமாக வணங்கப்படுகிறது!

வேதசாட்சியான அர்ச். பந்தலேயோனே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!


 

July 28 - ST. NAZARIUS & ST. CELSUS, அர்ச்‌. நசாரியுஸ், அர்ச்‌. செல்சுஸ்

 ஜூலை 2️8தேதி

 வேதசாட்சிகளான அர்ச்‌. நசாரியுஸ், அர்ச்‌. செல்சுஸ்திருநாள்‌. 

              

அர்ச்‌. நசாரியுஸ்‌, பக்திப்பற்றுதலுள்ள  அர்ச்‌.  பெர்பெத்துவம்மா ளினுடைய மகன்உரோமையில்பிறந்தார்‌. இவருடைய தந்தை உரோமை இராணுவத்தின்அதிகாரியாக இருந்தார்‌. அவர்இன்னும்அஞ்ஞானியாக இருந்தார்‌. நசாரியுஸ்‌, 9வது வயதில்கத்தோலிக்க வேதத்தில்சேர்ந்தார்‌. இவருக்கு பின்னாளில்பாப்பரசரான அர்ச்‌. லீனுஸ்ஞானஸ்நானம்கொடுத்தார்‌. இவருடைய அஞ்ஞான தந்தை தன்மகன்நசாரியுஸ்அனுசரித்த உத்தம கத்தோலிக்கப்புண்ணியங்களால்பெரிதும்கவர்ந்திழுக்கப் பட்டார்‌: அதன்காரணமாக ஆண்டவருடைய சுவிசேஷத்தையும்சத்திய கத்தோலிக்க வேதத்தையும்பரப்பும்படி எங்கு வேண்டுமானாலும்செல்வதற்கு அனுமதித்து தன்மகனை அனுப்பி வைத்தார்‌.

நசாரியுஸ்உரோமாபுரிக்கு வெளியே அநேக நகரங்களுக்குச்சென்று கத்தோலிக்க வேதவிசுவாசத்தையும்சுவிசேஷத்தையும்பரப்பி வந்தார்‌. 10 வருடங்களுக்குப்பின்மிலான்நகரை அடைந்தார்‌. ஆனால்அந்நகர ஆளுநன்‌, இவரை சாட்டையால்அடித்து நகரை விட்டு விரட்டி விட்டான்‌. நசாரியுஸ்‌, இத்தாலியை விட்டு வெளியேறி, பிரான்ஸ்நாட்டிற்குச்சென்றார்‌. அங்கு ஒரு பக்தியுள்ள கிறீஸ்துவ பெண்மணி தன்மகனான செல்சுஸ்என்பவரை இவரிடம்கூட்டி வந்தார்கள்‌. தன்மகனுக்கு ஞானஸ்நானம்கொடுத்து ஞான உபதேசம்கற்பிக்கும்படி  கேட்டுக்கொண்டார்கள்‌.

இவரும்செல்சுஸூக்கு ஞானஸ்நானம்கொடுத்து ஞான உபதேசம்கற்பித்து அவரை தன்சீடனாக ஆக்கிக்கொண்டார்‌. அநேகர்அங்கு மனந்திரும்பினர்‌: இதைக்கண்ட அந்நகரின்ஆளுநன்நசாரியுஸையும்செல்சுஸையும்கைது செய்தான்‌. சித்ரவதை செய்து கொடுமைப்படுத் தினான். அந்த ஆளுநனின்மனைவி ஒரு கிறீஸ்துவளாயிருந்ததால்தன்கணவனிடம்போராடி மாசற்ற இருவருக்கும்விடுதலை வாங்கித்தந்தாள்‌. இனி கிறீஸ்துவ வேதத்தைப்பிரசங்கிக்கக்கூடாது என்கிற நிபந்தனையின்பேரில்இருவருக்கும்விடுதலை கிடைத்தது.

நசாரியுஸ்தன்சீடனுடன்பிரான்சை விட்டு வெளியேறி  ஆல்ப்ஸ்மலைப்பிரதேசத்திலுள்ள எல்லா கிராமங்களுக்கும், எம்ப்ருன்என்ற இடம்வரைச் சென்று  சத்திய கத்தோலிக்க வேதத்தைப்போதித்து வந்தார்‌. இங்கு ஒரு சிற்றாலயத்தைக்கட்டினார்‌. பின்னர்ஜெனிவா நகருக்கும்அதன்பின்டிரவெஸுக்கும்சென்றார்‌. டிரவெஸில்நசாரியுஸ்கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்‌. தன்குருவைப்பின்பற்றி வந்த செல்சுஸ்தன்குருவுடன்தன்னையும்சிறையில் அடைக்க வேண்டும்என்று கண்ணீர்மல்க ஆசித்தார்‌. அதன்படி அவரும்சிறையிலடைக்கப்பட்டார்‌.

சில நாட்களுக்குப்பின்ஆளுநன்இருவரையும்தன்முன்நிறுத்தும்படி கட்டளையிட்டான்‌. இருவரையும்கொடூரமாக சித்ரவதை செய்து உபத்திரவப்படுத்தினா்‌. இருவரும்மாஜிஸ்திரேட்முன்பாக நிறுத்தப்பட்ட போது பரலோக மகிமையின்மாபெரும்பிரகாசமுள்ள ஒளியினால்இரு அர்ச்சிஷ்டவர்களுடைய முகங்களும்ஒளிர்வதைக்கண்டு கூடியிருந்த மக்கள்எல்லோரும்ஆச்சரியமடைந்தனர்‌! அச்சமயம்அங்கு நிகழ்ந்த அதிசயங்களும்புதுமைகளும்அங்கிருந்த அஞ்ஞான அதிகாரிகளை அச்சமடையச்செய்தன!

உடனே இருவரையும்விடுவித்து. அப்பிரதேசத்திலிருந்து வெளியேறும்படி கூறினர்‌.  இருவரும்மிலான்நகருக்குத்திரும்பி வந்தனர்‌. ஆனால்விரைவிலேயே இங்கேயும்கைது செய்யப்பட்டனர்‌. உரோமையின்அஞ்ஞான விக்கிரகங்களை வழிபடவேண்டும்என்று இருவரையும்நிர்ப்பந்தித்தனர்‌. அதற்கு இருவரும்மறுத்ததால்சகல கொடிய உபதக்திரவங்களால்இருவரையும்சித்ரவதை செய்தனர் தேவ பராமரிப்பினால்அந்த கொடிய சித்ரவதைகளிலிருந்து இருவரும்புதுமையாகப்பாதுகாக்கப்பட்டனர்‌. இதைக்கண்ட ஆளுநன்இருவரையும்தலைவெட்டிக்கொல்லும்படி உத்தரவிட்டான்‌.

இதைக்கேட்டு இருவரும்சந்தோஷத்தினால்ஒருவர்ஒருவரை அரவணைத்துக்கொண்டனர்‌. வேதசாட்சிய மகிமையை தங்களுக்கு அளித்தமைக்காகவும்அதற்கான விசேஷ தேவ வரப்பிரசாதத்தை அளித்தமைக்காகவும்இருவரும்முழங்காலிலிருந்து மகிழ்வுடன்சர்வேசுரனுக்கு நன்றி செலுத்தினர்‌. இது கி.பி.56ம்வருடம்கொடுங்கோலனான நீரோ உரோமையை ஆண்ட காலத்தில்நிகழ்ந்தது!

 கிறீஸ்துவ உத்தமதனத்தின்பெருந்தன்மையையும்தயாள குணத்தையுமுடைய இவ்விரு அர்ச்சிஷ்டவர்களும்தங்களுடைய பரிசுத்த இரத்தத்தை திருச்சபையின்விலைமதியாத பொக்கிஷ திரவியசாலையில்சேர்த்தனர்‌. இருவருடைய பரிசுத்த சரீரங்களும்தனித்தனியாக உரோமை நகருக்கு வெளியே உள்ள ஒரு தோட்டத்தில்அடக்கம்செய்யப்பட்டன.  இந்த கல்லறைகளை, 395ம் வருடம்‌, அர்ச்‌. அம்புரோசியார்‌, கண்டெடுத்து, இருவருடைய பரிசுத்த சரீரங்களையும்‌, தான்அப்போஸ்தலர்களுக்குத்தோத்திரமாக புதிதாகக்கட்டியிருந்த தேவாலயத்தில்பூஜிதமாக அடக்கம்செய்தார்‌.

அச்சமயம்‌, பேய்பிடித்திருந்த ஒரு பெண்புதுமையாக குணமடைந்தாள்‌. இவ்விரு அர்ச்சிஷ்டவர்களின்பரிசுத்த அருளிக் கங்கள்சிலவற்றை நோலாவிலுள்ள அர்ச்‌.  பவுலினுசுக்கு, அர்ச்‌.  அம்புரோசியார்அனுப்பி வைத்தார்‌. அவற்றை  அர்ச்‌. பவுலினுஸ்நோலாவிலுள்ள தேவாலயத்தில்பூஜிதமாக ஸ்தாபித்தார்‌.  அர்ச்‌. நசாரியுஸ்கல்லறையில்அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த தலையும்பரிசுத்த சரீரமும்முழுமையாகப்பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஒரு கண்ணாடி குப்பியினுள்பூஜிதமாக அடைக்கப்பட்டிருக்கிற அர்ச்சிஷ்ட வருடைய பரிசுத்த இரத்தம்புதுமையாக அன்று தான்சிந்தப்பட்டதுபோல்‌,சிவப்பு நிறத்துடனும்நுரை பொங்கியபடியும்காணப்பட்டது!

வேதசாட்சிகளான  அர்ச்‌. நசாரியுஸே!  அர்ச்‌. செல்சுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்‌!



For more please Visit here - https://livesofsaint.blogspot.com/


 

July 29 - St. Martha, அர்ச்‌. மார்த்தம்மாள்

 

ஜூலை 29ம்தேதி

அர்ச்‌. மார்த்தம்மாள்திருநாள்

 

 அர்ச்‌.  மார்த்தம்மாள்‌, சகோதரியான அர்ச்‌.  மரிய மதலேனம்மா ளுடனும்‌, சகோதரரான அர்ச்‌. லாசருடனும்ஜெருசலேமுக்கு அருகிலுள்ள பெத்தானியா என்ற கிராமத்தில்வசித்ததாகவும்‌, நமதாண்டவர்இம்மூவரையும்சிநேகித்ததாகவும்‌, அர்ச்‌.  லூக்காஸ்மற்றும்அர்ச்‌. அருளப்பர்சுவிசேஷங்களில் ‌(அரு 11:5) வாசிக்கிறோம்‌. தன்சகோதரர்லாசர்இறந்தபோது, நமதாண்டவரிடம்அர்ச்‌. மார்த்தம்மாள்கொண்டிருந்த மாபெரும்விசுவாசத்தை சுவிசேஷத்தில்காண்கிறோம்‌. அச்சமயம்‌, பெத்தானியாவிற்கு ஆண்டவர்வருகிறார்என்று கேள்விப்பட்டதும்‌, ஆண்டவரிடம்விரைந்தோடிப்போய்‌, ஆண்டவரே! தேவரீர்இங்கே இருந்திருந்தால்‌, என்சகோதரன்இறந்திருக்க மாட்டான்‌, என்று கூறினாள்‌.

ஆண்டவர்அவளிடம்‌ , “லாசர்இறக்கவில்லை! அவன்எழுந்திருப்பான்‌; என்னிடத்தில்விசுவாசம்கொண்டிருப்பவன்,‌ இறப்பினும்உயிர்வாழ்வான்‌! இதை நீ விசுவசிக்கிறாயா?” என்று வினவினார்‌. அதற்கு, அவள்‌, “ஆம்‌! ஆண்டவரே! நீர்கிறீஸ்து என்றும்‌, உலகத்திற்கு இறங்கி வந்த சர்வேசுரனுடைய திவ்ய குமாரன்என்றும்நான்விசுவசிக்கிறேன்‌, என்று பதில்கூறினாள்‌. ஆண்டவருக்கு, மிகவும்பிரியமுள்ள இக்குடும்பத்தைப்பற்றி, மறுபடியும்சுவிசேஷத்தில்‌, நாம்எதையும்காண்கிறதில்லை! ஆனால்திருச்சபையின்பரிசுத்தப்பாரம்பரியம்‌, இக்குடும்பத்தினா்‌, இன்னும்சில சகக்கிறீஸ்துவர் களுடன்‌, கி.பி.47ம்வருடம்ஜெருசலேமில்கிறீஸ்துவர்களுக்கு எதிரான வேதகலாபனை துவங்கியபோது, யூதர்களால்எந்த துடுப்பும்‌, பாய்மர மும்இல்லாத ஒரு படகிலே ஏற்றப்பட்டு, மத்தியக்தரைக்கடலிலே  அனுப்பி வைக்கப்பட்டனர்‌, என்றும்‌, அது, புதுமையாக மத்தியத்தரைக்கடலைக்கடந்து, பிரான்சின்தெற்கு துறைமுக நகரமான மார்சேல்ஸை அடைந்தது என்றும்கூறுகின்றது. 

பிரான்சில்‌, அர்ச்‌. மார்த்தம்மாள்‌, பரிசுத்த ஸ்திரீகளுடன்சேர்ந்து  ஒரு குழுவாக, பக்த சபையை ஏற்படுத்தி, ஜீவித்து வந்தார்கள்‌; அர்ச்‌.  மார்த்தம்மாள்‌, மாபெரும்ஜெப தப பரிகார ஜீவியம்ஜீவித்து வந்தார்கள்‌; யாவரும்வியக்கத்தக்க ஆச்சரியத்திற்குரிய தபசினுடையவும்‌, பரி சுத்தத்தனத்தினுடையவும்ஜீவியம்ஜீவித்து, கி.பி.84ம்வருடம்‌, பாக்கியமாய்மரித்தார்கள்‌; டாராஸ்கோன்என்ற இடத்தில்பூஜிதமாக ஒரு கல்லறையில்அடக்கம்செய்யப்பட்டார்கள்‌. அருகில்மலைக்குகையில்தபோதனராக ஜெபத்திலும்தபசிலும்ஜீவித்த அர்ச்‌. மரிய மதலேனம்மாளின்கல்லறை, லா செயிண்ட்போம்என்ற இடத்தில்இருக்கிறது; அர்ச்‌. லாசருஸ்‌, மார்சேல்ஸ்நகரில்‌, கத்தோலிக்க திருச்சசபையை ஸ்தாபித்தவர்என்று வணங்கப்படுகிறார்‌.

இவர்கள்தான்‌, நமதாண்டவர்தீர்க்கதரிசனமாக முன்னறிவிப்பு செய்து எச்சரித்திருந்ததன்படி, விரைவில்அடுத்து வரவிருக்கும்ஜெருசலேமின்அழிவின்போது, யூதர்களாலும்‌, உரோமையர்களாலும்‌, அவசங்கை செய்யப்பட்டுவிடும்என்கிற அச்சத்தினால்‌, மகா பரிசுத்த அர்ச்‌. அன்னம்மாளின்பரிசுத்த அருளிக்கங்களை, இரகசியமாக பிரான்சிற்குக்கொண்டு வந்தனர்‌! ஸ்பெயின்நாடு, அர்ச்‌. மார்த்தம்மாளை, அந்நாட்டின்பாதுகாவலராக ஏற்று மகிமைப்படுத்திக்கொண்டாடி வருகிறது; ஸ்பெயின்நாட்டில்வில்லாயோயோசா என்ற நகரில்‌, அர்ச்‌. மார்த்தம்மாளுக்குத்தோத்திர மகிமையாக, வருடந் தோறும்‌, கிறீஸ்துவர்களுடையவும்‌, மூர்இனமக்களுடையவும்திருவிழாவாகக்கொண்டாடுகின்றனர்‌.

இந்த திருவிழா, 1538ம்வருடம்‌, ஸாலே ஆர்ராயேஸ்என்பவனுடைய தலைமையின்கீழ்படையெடுத்து வந்த மகமதியரி டமிருந்து அர்ச்‌. மார்த்தம்மாள்இந்நகரைப்புதுமையாகக்காப்பாற்றி யதன்ஞாபகார்த்தமாகவே, கொண்டாடப்படுகிறது; அச்சமயம்‌, இந்நகர மக்கள்‌, தங்கள்நகரத்தை,மகமதியரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்என்று, அர்ச்‌. மார்த்தம்மாளிடம்வேண்டிக்கொண்டனர்‌. அர்ச்‌. மார்த்தம்மாள்‌, திடீரென்று ஒரு வெள்ளத்தை ஏற்படுத்தி, அதன்முலம்இந்நகரை தாக்க வந்த மகமதியப்படையை அந்த வெள்ளத்தினுள்அமிழ்ந்து மூழ்கச்செய்து, இந்நகர மக்களைக்காப்பாற்றினார்கள்‌. தேவாலய மணிகளை, அர்ச்சித்து மந்திரிக்கும்திருச்சபையின்சடங்கின்போது,நமதாண்டவர்அர்ச்‌. மார்த்தம்மாளின்வீட்டிற்கு வருகிற சுவிசேஷ நிகழ்வு, வாசிக்கப்பட்டு நினைவு கூரப்படுகிறது! 

அர்ச்‌. மார்த்தம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


 

July 30 - Saints Abdon and Sennen, அர்ச்‌.அப்டன்‌ , அர்ச்‌.சென்னன்‌

 

ஜூலை 3️0ம்‌ தேதி

வேதசாட்சிகளான அர்ச்‌.அப்டன்‌ , அர்ச்‌.சென்னன்‌ திருநாள்‌.


 

    கிறீஸ்துவர்களை உபத்திரவப்படுத்திக்‌ கொன்றவனும்‌, கிறீஸ்துவர்களுக்கு விரோதியுமான தேசியுஸ்‌, உரோமை சக்கரவர்த்தியாக, ஆண்டபோது, பெர்ஷியா நாட்டின்‌ அரசனைப்‌ போரில்‌ தோற்கடித்தான்‌; அநேக நாடுகளை போரில்‌ வென்று, பல நாடுகளுக்கு அதிபதியானான்‌. பெர்ஷிய நாட்டின்‌ மேற்‌ றிராணியாரான அர்ச்‌. போலிகுரோம்‌ மற்றும்‌ அவருடைய உதவியாளர்களான குருக்கள்‌ ஐவருக்கும்‌, மரணதண்டனை விதித்து, சித்ரவதை செய்து கொன்று போட்டான்‌. பெர்ஷிய நாட்டின்‌ உயர்குடிமக்களும்‌ சகோதரர்களுமான அர்ச்‌. அப்டன்‌, அர்ச்‌. சென்னன்‌, இருவரும்‌, பெர்ஷிய அரசரால்‌ மிகவும்‌ மகிமைப்படுத்தப்பட்டவர்கள்‌; இவர்கள்‌ இரகசியமாக கிறீஸ்துவர்களாக ஜீவித்தனர்‌; சனி விக்கிரகத்தின்‌ கோவிலில்‌ இழிவான நிலையில்‌, வேதசாட்சியாகக்‌ கொன்று போடப்பட்டிருந்த அர்ச்‌. போலிகுரோம்‌ மேற்றிராணி யாருடைய பரிசுத்த சரீரத்தை இவ்விருவரும்‌ இரகசியமாக, இரவில்‌ எடுத்துச்‌ சென்று, மேரை மரியாதையுடன்‌ பூஜிதமாக ஒரு கல்லறையில்‌ அடக்கம்‌ செய்தனர்‌.

            இவ்விரு பெர்ஷிய நாட்டினுடைய அரசாங்க அதிகாரிகளும்‌, இப்போது, உரோமை சக்கரவர்த்தியின்‌ கொடுங்கோல்‌ ஆதிக்கத்தின்‌ கீழ்‌ வந்தனர்‌. கொடுங்‌கோலனான தேசியுஸ்‌, பெர்ஷிய நாட்டிலுள்ள கிறீஸ்துவர்களை, மிகக்‌ கொடூரமாக உபத்திரவப்படுத்துவதைக்‌ கண்டு, இவ்விரு அர்ச்சிஷ்டவர்களும்‌ மிகவும்‌ துயரமடைந்தனர்‌. ஆண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதர் மீது அவர்கள்‌ கொண்டிருக்கும்‌ சிநேகத்தையும்‌, விசுவாசத்தையும்‌ பகிரங்கமாக சக்கரவர்த்தியின்‌ முன்பாக அறிவிக்கவேண்டியது, அவர்களுடைய கடமை என்று நம்பினர்‌.

            தங்களுடைய புதிய அரசரைப்பற்றி பயப்படாமல்‌, இருவரும்‌, கத்தோலிக்க வேத விசுவாசத்தைப்‌ பரப்புவதற்கும்‌, அதில்‌ மக்களை ஸ்திரப்படுத்துவதற்கும்‌, குருக்களை உற்சாகப்படுத்துவதற்கும்‌, இறந்த வேதசாட்சிகளை அடக்‌கம்‌ செய்வதற்கும்‌ தேவையான சகல வழிமுறைகளையும்‌, தங்களாலான மட்டும்‌ கையாண்டனர்‌.  இவ்விரு சகோதரர்களும்‌, கிறீஸ்துவ வேதத்தைப்‌ போற்றிக்‌ காப்பாற்று வதற்காக தங்களையே அர்ப்பணித்திருந்ததைக்‌ கண்டறிந்த தேசியுஸ்‌, வெகுவாக சினந்து, அவர்கள்‌ மேல்‌ எரிச்சலடைந்தான்‌. தன்‌ நீதியாசனத்திற்கு முன்பாக இருவரையும்‌ அழைத்து வரக்கட்டளை யிட்டான்‌. அஞ்ஞான விக்கிரகங்‌களுக்கு பலி செலுத்த அவர்களை வற்புறுத்தினான்‌.

            “நாங்கள்‌, எங்கள்‌ ஆண்டவரான திவ்ய சேசுகிறீஸ்துநாதரை மட்டுமே ஆராதிப்போம்‌; ஆண்டவரைத்‌ தவிர, வேறு எதையும்‌ நாங்கள்‌ வழிபட மாட்டோம்!” என்று, இரு அர்ச்சிஷ்ட சகோதரர்களும்‌, உறுதியாக தீர்மானத்துடன்‌ பதிலளித்தனர்‌. இருவரையும்‌ சிறையிலடைத்தான்‌; தேசியுஸ்‌ தனது பிரதிநிதியான உரோமை வைஸ்ராய்‌ இறந்ததைப்‌ பற்றிக்‌ கேள்விப்பட்டதும்‌, உரோமாபுரிக்குத்‌ திரும்பிச்‌ சென்றான்‌; இவ்விரு கைதிகளையும்‌ கூட்டிச்‌ சென்றான்‌; தன்னுடைய பெர்ஷிய நாட்டின்‌ மீதான வெற்றியின்‌ மூலம்‌, தனக்குக்‌ கிடைத்த அருமையான கோப்பைகளாக இவ்விருவரையும்‌ உரோமைக்கு இழுத்துச்‌ சென்றான்‌.

            இருவரையும்‌ தனது ஆலோசனைச்‌ சங்கமான செனட்டின்‌ முன்பாக, தேசியுஸ்‌ நிறுத்தினான்‌. இங்கேயும்‌ எல்லா செனட்டர்கள்‌ முன்பாகவும்‌, அர்ச்‌. அப்டனும்‌, அர்ச்‌. சென்னனும்‌, நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்துநாதரின்‌ தெய்வீகத்தை பகிரங்கமாக அறிக்கை யிட்டனர்‌; விசுவாச உச்சாரணம்‌ செய்தனர்‌. “ஆண்டவரை மட்டுமே ஆராதிப்போம்‌; மற்ற எதையும்‌ வழிபடமாட்டோம்‌!” என்று உறுதியான குரலில்‌ கூறினார்‌. உரோமையரின்‌ அரை வட்ட கேளிக்கை மைதானத்தில்‌, அடுத்த நாள்‌ இருவரையும்‌ சாட்டையால்‌ அடித்தனர்‌. பின்‌, இரண்டு சிங்கங்களும்‌, நான்கு கரடிகளும்‌ இவர்களை விழுங்கும்‌ படியாக கூண்டிலிருந்து திறந்து விடப்பட்டன!

            ஆனால்‌, இந்த காட்டு மிருகங்கள்,‌ இரு அர்ச்சிஷ்டவர்களின்‌ பாதங்களில்‌ வந்து படுத்துக்‌ கொண்டன! இருவருடைய பாதுகாவலர் களைப் போல்‌ இம்மிருகங்கள்‌, இருவரையும்‌ பாதுகாத்தன! சிறிது நேரத்திற்கு யாராலேயும்‌, இரு அர்ச்சிஷ்டவர்களின்‌ அருகில்‌ செல்லக்‌ கூடாமல்‌ போனது! இறுதியில்‌, தேசியுஸ்‌, கிளாடியேட்டர்களை, மைதானத்திற்குள்‌ அனுப்பி, இரு அர்ச்சிஷ்டவர்களையும்‌ தலையை வெட்டிக்‌ கொல்லும்படிக்‌ கட்டளையிட்டான்‌.

            இரு அர்ச்சிஷ்டவர்களும்‌ தங்களின்‌ வேதசாட்சிய மரணத்தை, சர்வேசுரனுக்கு முழங்காலிலிருந்து ஒப்புக்‌ கொடுத்‌தனர்‌! அந்த ஒப்புக்கொடுத்தலை தயவுடன்‌ ஏற்ற சர்வேசுரன்‌, இருவரும்‌, கிளாடியேட்டர்களால்‌ தலைவெட்டப்பட்டுக்‌ கொல்லப்படுவதற்குத்‌ திருவுளம்‌ கொண்டார்‌; அதன்படி, தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்ட இரு அர்ச்சிஷ்டவர்களுடைய பரிசுத்த சரீரங்களும்‌, அடக்கம்‌ செய்யப்படாமல்‌ , அங்கேயே மூன்று நாட்கள்‌ கிடந்தன.

            பின்‌, இவ்விரு அர்ச்சிஷ்டவர்களுடைய ஜீவிய சரீரத்தை எழுதிய ஒரு உபதியாக்கோன்‌ , இருவருடைய பரிசுத்த சரீ ரங்களையும்,‌ தனது இடத்தில்‌ பூஜிதமாக ஒரு கல்லறையில்‌ அடக்கம்‌ செய்தார்‌. இவர்களுடைய மகிமையான வேதசாட்சிய மரணம்‌, 254ம்‌ வருடம்‌ நிகழ்ந்தது! மகா கான்ஸ்டன்டைன்‌ அரசருடைய ஆட்சி காலத்தில்‌, போர்டோவிற்குச்‌ செல்கிற பாதையிலுள்ள தைபர்‌ ஆற்றின்‌ அருகில்‌, போந்தியன்‌ , என்று அழைக்கப்படும்‌ அடக்கம்‌ செய்கிற பகுதியில்,‌ இரு அர்ச்சிஷ்டவர்களு டைய பரிசுத்த சரீரங்கள்‌ இடமாற்றம்‌ செய்யப்பட்டு, அடக்கம்‌ செய்யப்பட்டன! இரு அர்ச்சிஷ்டவர்களும்,‌ அவர்களுடைய அடக்கம்‌ செய்த இடத்தை, காட்சியளித்து அறிவித்ததன்பேரில்‌, இவ்விடமாற்றம்‌ செய்யப்பட்டது! இவ்விரு அர்ச்சிஷ்டவர்கள்‌ மீதான பக்தி முயற்சி, உரோமையில் 4ம்‌ நூற்றாண்‌ டிலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது!

வேதசாட்சிகளான அர்ச்‌. அப்டனே! அர்ச்‌. சென்னனே!  எங்களுக்காக வேண்டிக்‌ கொள்ளுங்கள்‌!