Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 16 பிப்ரவரி, 2022

அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம் 14 - அர்ச் களாட் தெலா கொலம்பியர் (Claude La Colombière) Part - II

 சேசுவின் திரு இருதய பக்தியைப் பரப்பிய அர்ச் களாட் தெலா கொலம்பியரின் ஜீவிய சரிதை



அர்ச்.க்ளாட் தெலா கொலம்பியார், சேசு சபையின் ஒழுங்குகளை கவனமாகவும் நுட்ப மாகவும் கடைபிடித்து வந்தார். இறுதியில் அவர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திருநாளும் வந்தது. 1669-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி குருப் பட்டம் பெற்றார். மறுநாள் தன் முதல் திவ்ய பலி பூசையை நிறைவேற்றினார். ஆண்டவருடைய திருச்சரீரத்தையும், திருஇரத்தத்தையும் ஏந்தும் ஒரு குருவானவரின் கரங்கள் எவ்வளவு பாக்கியம் பெற்றவை, என்பதை நன்கு உணர்ந்திருந்த அர்ச்சிஷ்டவர், ஆத்தும் இரட்சணியத்திற்காக, தன்னை முழுதும் ஒப்புக் கொடுத்தார். அருகிலிருந்த மருத்துவமனையில், தன் அலுவலைத் தொடங்கினார். வியாதியஸ்தர் கள், தேவசிநேகத்தில் வாழ்வதற்கு, அவர்களுக்கு உதவி செய்தார். அங்கே ஆத்தும் குருவாயி ருந்தவர், கொலம்பியரின் அர்ச்சிஷ்ட ஜீவியத்தைக் கண்டு, பல மாணவர்களை, அவர் பொறுப்பில் ஒப்படைத்தார்.

மேலும் அமைச்சரின் பிள்ளைகளுக்கு, பாடம் கற்பிக்கும் பொறுப்பும் அவரிடம் ஒப் படைக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் அமைச்சர் செய்யும் சீர்திருத்தங்களை, புகழ்ந்து கவி யாகப் பாடுவது வழக்கம். ஆனால் அமைச்சர் புது வரிகள் விதிப்பது, தங்களுக்குப் பிடிக்க வில்லை என்று காட்டுவதற்காக, சிலர், விகடகவியாக வார்த்தைகள் புனைந்து பாடினர். அதில் ஒன்று, நம் அர்ச்சிஷ்டவர் எழுதியது. அது அமைச்சரின் கைக்குக் கிடைத்தது. அதைப்

படித்து முடித்ததும் வெகுண்டெழுந்து, பழைய நட்பினை மறந்து, கொலம்பியரை, பாரீஸ் நகரைவிட்டு வெளியேறும்படி விரட்டினார். இந்த அவமானத்தை, ஆண்டவர் தனக்குத் தந்த சிலுவையாக ஏற்றுக் கொண்டார். 1670-ஆம் வருடம், மேலதிகாரிகளால் லயன்ஸ் நகருக்கு அனுப்பப் பட்டார். அங்கு அர்ச்.தமத் திரித்துவக் கல்லூரியில் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்து வந்தார். இச்சமயத்தில் தான், மினவுதல் சபையைச் சேர்ந்த அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்கு, ஆண்டவர் தம் திரு இருதயத்தைக் காட்ட சித்தமானார். 1673-ம் ஆண்டு டிசம்பர், 27-ம் தேதி, சற்று ஓய்வு கிடைத்தபோது, அவள் திவ்ய நற்கருணைக்கு முன் பாக, ஜெபித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஆண்டவர் அவளுக்கு தம் இருதயத்தைத் காண்பித்து," என் தெய்வீக இருதயம், மனிதர்கள் மேல், தான் கொண்டுள்ள நேசத்தாலும், விசேஷமாக உன் பேரில் கொண்டுள்ள நேசத்தாலும் எவ்வளவு அதிகமாக பற்றி எரிகிற தென்றால், தனது பற்றியெரியும் நேசத்தின் சுவாலைகளை தனக்குள் இனியும் அடக்கிக் கொள்ள முடியாமல், அது, உன் வழியாக அவற்றை வெளியே பரப்பவும், மனுக்குலத்துக்கு தன்னை வெளிப்படுத்தவும் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இது, நான் உனக்குத் தந் துள்ளவையும், அழிவின் பாதாளத்திலிருந்து, அவர்களைக் காப்பாற்ற அவசியமான அர்ச்சிப் பினுடையவும், இரட்சிப்பினுடையவும் வரப்பிரசாதங்களை தன்னுள் கொண்டுள்ளது மாகிய விலையேறப்பெற்ற பொக்கிஷங்களைக் கொண்டு, அவர்களை வளப்படுத்தும்படியாக வே.சகலமும் என்னால் செய்யப்படும்படியாக, இம்மாபெரும் திட்டத்தை நிறைவேற்றுவ தற்காக, நான் உன்னைத் தெரிந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

ஒவ்வொரு மாதத்தின் தலைவெள்ளிக்கிழமையிலும், ஆண்டவருடையதிரு இருதயம், ஒரு மகா பிரகாசமுள்ள சூரியனாக, மர்கரீத் மரியம்மாளுக்குக் காண்பிக்கப்பட்டது. அதன் பற்றியெரிகிற ஒளிக்கதிர்கள் செங்குத்தாக, அவள் இருதயத்தின் மேல் விழுந்தன. ஆண்டவர் தமது நேச இருதயத்தின் இரகசியங்களை, அவளுக்கு வெளிப்படுத்தினார்:" என் திருப்பாடுக ளின் போது, நான் பட்ட எல்லா துன்பங்களையும் விட, அதிகமாக இதை உணர்கிறேன். என் நேசத்திற்கு கொஞ்சமாகிலும், அவர்கள் பிரதிநேசம் காட்டுவார்களேயானால், அவர்க ளுக்காக நான் செய்ததெல்லாம், எனக்கு சொற்பமாகத் தோன்றும். கூடுமானால், மனுக்கு லத்திற்காக, இன்னும் அதிகமாக பாடுபட நான் ஆசிக்கிறேன். ஆனால் அவர்கள் செய்வ தெல்லாம், என்னை மறுதலித்தலும், குளிர்ந்ததனத்தோடு என்னிடம் நடந்து கொள்வதும் தான். அவர்களுடைய நன்றி கெட்டத்தனத்திற்கு பரிகாரம் செய்வதன் வழியாக, நீயாவது எனக்கு ஆறுதல் செய்”. மேலும், ஆண்டவர், இதோ! இது, உன்னில் குறைவுபடுகிற எல்லா வற்றையும் நிறைவாக்கும்” என்று கூறினார்.

அப்போது, அவருடைய திவ்ய திரு இருதயம் திறக்கப்பட்டது. மர்கரீத்மரியம்மாளை சுட்டெரித்து விடுவது போல, அதிலிருந்து ஒரு தீச் சுவாலைவெளிப்பட்டது. "நானே உன் என் பலமாக இருப்பேன். எதற்கும் அஞ்சாதே! என் குரலைக் கேட்பதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிரு! என் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உன்னிடம் அவசியமாயிருக்கும் மனப்பாங்கைக் கொண்டிருக்கும்படி, நான் கேட்கிறவை களை ஆழ்ந்து கவனி! திவ்ய நன்மை உட்கொள்வதற்குக் கீழ்ப்படிதல் உன்னை அனுமதிக்கும் போதெல்லாம், என்னை நீ பெற்றுக் கொள்வாய். அதற்காக நீ எத்தகைய பரித்தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும், எத்தகைய அவமானங்களை, நீ சந்தித்தாலும், அவற்றை, என் நேசத்தின் வாக்குத்தத்தங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் தலை வெள்ளிக் கிழமையிலும், நன்மை வாங்கு. வியாழனுக்கும் வெள்ளிக்கும் இடையிலுமுள்ள ஒவ்வொரு இரவிலும், ஒலிவத்தோப்பில், நான் அனுபவித்தசரீரப்பூர்வமான துயரத்தை, நீ என்னோடு பகிர்ந்து கொள்ளும்படி செய்வேன். கொடிய என் வியாகுலத்தினூடே, என் பிதாவுக்கு நான் ஒப்புக் கொடுத்த தாழ்ச்சியுள்ள ஜெபத்தை, என்னோடு சேர்ந்து ஜெபிக்கு மாறு, இரவு 11மணியிலிருந்து 12 மணிவரையிலும், 1 மணி நேரத்திற்கு, என் முன்பாக சாஷ் டாங்கமாகவிழுந்து கிடப்பாயாக. பாவிகளுக்காக மன்றாடி, தேவ கோபத்தை சாந்தப்படுத்து வதோடு, அப்போஸ்தலர்களால் கைவிடப்பட்ட நிலையில், நான் அனுபவித்த பெரும் கசப் பைக் குறைக்கும்படியாக இப்படிச் செய்வாய்” என்று கூறினார்.

இக்காட்சிகளையெல்லாம், மடத்துத் தாயாரும், குருக்களும் நம்பவில்லை. எனவே, அவள் மனமுடைந்து தைரியமிழந்து இருந்தாள். அப்போது ஆண்டவர், "மகளே, அஞ்சாதே, எனது சிறந்த ஊழியர்களில் ஒருவரை, உனக்கு வழிகாட்டியாக அனுப்புவேன், அவரிடம் என் தெய்வீக இருதயத்தின் சகல பொக்கிஷங்களையும், இரகசியங்களையும், நீ தெரியப் படுத்த வேண்டும்" என்று கூறி, அவளைத் தேற்றினார். 1675-ம் ஆண்டு அர்ச்.க்ளாட் தெலா கொலம்பியார், பார்-லே-மோனியாலிலுள்ள சேசு சபை மடத்திற்கு தலைவராகச் சென்றார். தபசுக் காலத்தில் மர்கரீத் மரியம்மாள் இருந்த மினவுதல் சபை மடத்திற்கு, தியானம் கொடுக்கச் சென்றார். அவர் பிரசங்கித்தபோது, " நான் உனக்கு அனுப்புவதாகக் கூறிய என் உண்மையுள்ள ஊழியர் இவரே" என்ற குரலொலி, அவளுடைய இருதயத்தில் கேட்டது. அவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்தபோது, இதுவரை, அவர், அவளை ஒருபோதும் நேரில் சந் தித்தோ, பேசியோ இராவிடினும், அவளுக்குள் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தவர் போல், அவளோடு பேசினார். ஒருநாள், அர்ச். கொலம்பியார், திவ்ய பலிபூசை நிறைவேற்றிய போது, அவருக்கும், அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்கும் தனிப்பட்ட வரப்பிரசாதங்களை ஆண்ட வர் அருளினார். சுவாலித்தெரிகிற தீச்சூளையாக, திவ்ய சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயம், அவர்கள் இருவருக்கும் காண்பிக்கப்பட்டது.



வேறு இரு இருதயங்கள், அத்திரு இருதயத்தோடு தங்களை ஒன்றித்து, அந்த பரிசுத்த இருதயத்தினுள் கிரகிக்கப்பட்டு விடும் நிலையில் இருப்பதை, மர்கரீத் கண்டாள். அப்போது ஆண்டவர், அவளிடம்:" இவ்வாறு தான், என் மாசற்ற சிநேகமானது, இந்த மூன்று இருதயங் களையும் நித்தியத்திற்கும் ஒன்றாக இணைக்கிறது” என்று கூறினார். இந்த ஐக்கியம் முழுவதும், தமது தெய்வீக இருதயத்தின் மகிமைக்காகவே என்று, அவள் புரிந்து கொள்ளும்படி செய் தார். அதன் பொக்கிஷங்களை, இந்நல்ல குரு வெளியே பரவச் செய்யுமாறும், அவற்றின் மதிப்பையும் பயனையும் மற்றவர்களுக்கு அறிவிக்குமாறும், அவற்றை அவருக்கு மர்கரீத் மரி யம்மாள் வெளிப்படுத்த வேண்டுமென்று ஆண்டவர் விரும்பினார். மேலும் அவர், “நான் செய்த நன்மைகளுக்குக் கைம்மாறாக, நான் பெறுவது நிந்தை அவமானமே.எனக்கு ஊழியம் புரிய, தங்களை கையளித்தவர்கள் கூட, என் நேசத்தைப் புறக்கணிக்கின்றனர். அது தான், எனக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றது.

ஆகையால், தேவநற்கருணைத் திருநாளுக்குப் பின் வரும் வெள்ளிக்கிழமையன்று, என் மகா பரிசுத்த திரு இருதயத்திற்கு ஏற்பட்ட நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக, திவ்ய நற்கருணை உட்கொள்ள வேண்டும். அன்று பகி ரங்கப் பரிகார முயற்சிகள் நடைபெற வேண்டும். இவ்வாறு என் தெய்வீக இருதயத்தை மகிமைப்படுத்துகிறவர்கள் மீதும், அவ்வாறு செய்வதற்கு மற்றவர்களைத் தூண்டுகிறவர்கள் மீதும், விசேஷ வரப்பிரசாதங்களைப் பொழிவேன்" என்று கூறினார். மர்கரீத் மரியம்மாள், மடத்துத்தாயாரிடம் அனுமதி பெற்று, அர்ச்க்ளாட் தெலா கொலம்பியரிடம் நடந்ததை யெல்லாம் கூறினாள். பின்பு ஜீன் மாதம் 21-ம் தேதி, திவ்ய நற்கருணைத்திருநாளுக்கு 8 நாட் களுக்குப் பின் வரும் வெள்ளிக் கிழமையை, இவ்விரு அர்ச்சிஷ்டவர்களும், முதன் முறை யாக, சேசுவின் திரு இருதயத்திற்கு ஏற்பட்ட சகல நிந்தைகளுக்கும் பரிகாரம் செய்து, அதைப் பரிகார நாளாக அனுசரித்தனர். நேச ஆண்டவரின் விருப்பத்தை நிறைவேற்று வதற்கு சகல வேதனைகளையும் தாராள மனதுடன் ஏற்பதாக உறுதிபூண்டனர். .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக